Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடந்த வாரம் 160 ரூபாவிலிருந்த சீனியின் விலை இவ்வாரம் 210 ரூபாவாக உயர்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை நிற உணவு பொருள்கள் சீனி  உப்பு  அஜினோமோட்டோ மூன்றையும் தவிர்த்தாலே காணும் சுகதேகியாகிவிடலாம் ஆனால் இந்த மேல்  நாடுகளில் மேல் உள்ள மூன்றும்  இல்லாமல் ஒரு உணவு பொருள் உங்கள் கைகளை வந்தடைவதில்லை இதுவரை மக்டொனல்ட் மட்டுமே அஜினோமோட்டோ பாவிப்பதில்லை என்கிறார்கள் எவ்வளவு தூரம் உண்மை என்பதை எடுத்து கொள்ள முடியாது .

  • Replies 56
  • Views 3.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எமது குடும்பத்தில் ஒரு வருடத்துக்குள்,  இருவர் இறப்பிற்கு இந்த சீனி தான் காரணம்..

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, valavan said:

சிரிப்பு தாங்கல, நீங்கள் சொன்னது 100%உண்மை . அதோட சீனி போடாமல் தேத்தண்ணி கொடுத்தால் இனிமே இங்கால் பக்கம் வராத என்று அவமானபடுத்துவதாகவும் அர்த்தம் என்று பேசி கொள்வார்கள் .

இது சிரிப்பல்ல வளவன் எனக்கு உண்மையிலேயே நடந்தது.

சீனி போடாவிட்டாலும் பரவாயில்லை அப்படி போடுறதென்றால் ஒரு அரைக் கரண்டி போடுங்கோ என்றேன்.

கொண்டாந்து தந்தாங்க பாருங்க சொண்டும் சொண்டும் ஒட்டுது.

என்னக்கா சீனி போட்தலுக்குள்ளே விட்டு கலக்கியிருக்கிறீங்கள் என

அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறியள் எப்படி சீனி போடாமல் தாறது?
இது தான் அவர்கள் ஆதங்கம்.

அடுத்த ஒரு பிரச்சனை பல வீடுகளில் சீனிப் போத்தல்களில் எறும்பு மொய்த்து போயிருக்கும்.

இது எமக்கு பழக்கமென்றாலும் பிள்ளைகள் இந்தா சத்தி எடுக்கிறன் என்று நிற்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சீனியும் நானும்.....
பசி போவதற்க்கு சீனி முக்கியமா  அரிசி முக்கியா என்ற கேள்வி எழும் பொழுது அரிசிதான் முக்கியம்   எனபதை நான் உணர்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ஈழப்பிரியன் said:

அடுத்த ஒரு பிரச்சனை பல வீடுகளில் சீனிப் போத்தல்களில் எறும்பு மொய்த்து போயிருக்கும்.

உண்மைதான் அனேக வீடுகளில் சீனிக்குள் கட்டெறும்பு கூட இருக்கும், கேட்டால் அது கண்பார்வைக்கு நல்லது எண்டு சிலர் கதை வேறு  விடுவினம்,

1 hour ago, யாயினி said:

எமது குடும்பத்தில் ஒரு வருடத்துக்குள்,  இருவர் இறப்பிற்கு இந்த சீனி தான் காரணம்..

அதிகளவில் சீனி எடுத்துக்கொள்வது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு யாயினி குடும்பமே சாட்சி, ஒரே வருடத்தில் இரு குடும்ப உறுப்பினர்களை இழப்பது என்பது எவ்வளவு பெரிய துயரம்.

நான் நினைக்கிறேன் புலம்பெயர் நாடுகளில் நூற்றுக்கு 40% மான எம்மவர்களுக்கு சுகர் பிரச்சனை இருக்கு.

21 minutes ago, putthan said:

சீனியும் நானும்.....
பசி போவதற்க்கு சீனி முக்கியமா  அரிசி முக்கியா என்ற கேள்வி எழும் பொழுது அரிசிதான் முக்கியம்   எனபதை நான் உணர்கின்றேன்

அரிசியிலும் வெள்ளை அரிசியில் சீனியளவிற்கு பாதிப்புண்டாம். சிவப்பு புழுங்கல் அரிசிதான் சிறந்ததென்று சுகரால் பாதிக்கப்பட்டவர்கள் சான்றிதழ் வழங்கிறார்களாம் புத்தன்😀 ,

நீரழிவுநோயின் ஆரம்ப கட்டதிலிருப்பவர்களுக்கு நெல்லிக்காய் ஒரு சிறந்த நிவாரணி என்று கூறுகிறார்கள்.தாயகம் மற்றும் இந்தியாவிலிருந்து நெல்லிக்காய்கள் இறக்குமதி செய்யப்படுவது பெரும்பாலும் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவே என்கிறார்கள். உண்மை பொய் அறியேன்.

  • கருத்துக்கள உறவுகள்

0-02-06-833770f693bf5aa854140b0c512628dda037ccb34795e7fe0daccaa3e95d52a5_569328dc1a3e554.jpg

ஏராளன்

  • கருத்துக்கள உறவுகள்

போய் அண்ட் கேர்ள்ஸ்,

உந்த சீனியை பற்றி நீங்கள் சொல்லுவது எல்லாம் உண்மை.

ஆனால் ஒரு ஆறுமாதம் சீனியை முற்றாக விட்டுட்டால் பிறகு வாயில் வைக்கவே ஒரு மாதிரி இருக்கும்.

நான் இப்ப சீனியை முற்றாக தவிர்த்து வெற்றிகரமான 17வது வருடம். 

எப்பவாச்சும் ஒரு கேக்கை வாயில் வைத்தால் அதி மதுரம் சாப்பிட்ட பீலிங்.

சீனி என்பது ஒரு சுவையூட்டிதான். அதை அந்தளவுக்கு நாம் பாவித்து, உடலை இயைவாக்கி வைத்துள்ளோம்.

முன்னம் சுவீட்னர் எடுப்பேன் இப்ப இப்ப அதுவும் வலு குறைவு.

ஊரில் மட்டும் அல்ல, இங்கேயும் கூட சீனி வேண்டாம் எண்டு சொன்னால் ஏதோ தீராதா நோயால் பீடிக்கப்பட்டு நாளைக்கு சாக போறவனை பார்ப்பது போல் ஒரு பார்வை பார்ப்பார்கள்🤣.

இதுக்கெல்லாம் கவலைபட்டால் ஏலுமே? 

ஊரில் சொல்லியும் கேளாமல் ஆரும் சீனி போட்டுத்தந்தால் அப்படியே வைத்து விட்டு வந்து விடுவேன். கோவிச்சால் கோவிக்கட்டுமென்.

இன்னொரு விசயம், சீனிக்கும் ஆண்மைக்கும் ஒரு லிங்கை வேறு கொடுத்து வைதுள்ளார்கள். அரைகுறை புரிதலால்.

இதனாலேயே சீனி வேண்டாம் எண்டு சொல்ல பயந்து போய் சேர்ந்த கோஸ்டிகள் கனக்க🤣.

சீனி கட்டுப்பாடு இல்லாமல் இருந்தால் இரத்த ஓட்ட பிரச்சினைகள், ஆண்மை குறைபாடுகள் வரலாம். அதை தடுக்கதான் சீனியை குறையுங்கோ எண்டுறது.

ஆனால் சீனியை குறைத்தாலே ஆள் அவுட் எண்டு எங்கட சனம் நினைக்கிறது. ஆகவே சீனியை போட்டு அடித்து, உண்மையிலேயே அவுட் ஆகிவிடுவினம்🤣.

யூகேயில் கிட்டதட்ட 2 மில்லியன் கண்டுபிடிக்க படாத டயபிடிஸ்காரர் உண்டாம். பெரும்பாலும் தென்னாசியர்தானாம்.

ஒரு தெரிஞ்ச பழசு. பழசென்ன, வெறும்64 வயசு. எப்ப “எத்தனை சுகர் டீக்கு” எண்டு கேட்டாலும், “நான் என்ன சலரோகியே, 3 முழு கரண்டி” என்பார் கெத்தா.

கோவிட் அள்ளி கொண்டு போட்டுது.

ஆஸ்பத்திரியில் இருக்கும் போதுதான் நாட்பட்ட டயபடிஸ் என்பதும் தெரிய வந்தது.

ஆனால் இன்னொரு பிள்ளை, என்ர வயசுதான், பிறந்த நாள் தொட்டு இன்சுலின் எடுக்கிறது, ஆனால் நல்ல கொண்டிரோல், “எப்ப பூஸ்டர் வக்சீன் வரும்” எண்டு காத்து நிக்கிது🤣.

இப்படி கண், கால் எண்டு கனக்க பிரச்ச்னையள் வரும். 

டயபிடிஸ், pre டயபிடிஸ், சும்மா ஆக்கள் எல்லாரும் சீனியை விடுவதே சிறப்பு.

இண்டைக்கு ஒன்றும் இல்லை, 5 வருடத்தில் ப்ரி டயபிடிஸ், 7 வருடத்தில் டயபிடிஸ் அவ்வளவுதான். ஆகவே இப்பவே சீனியை குறைக்க தொடங்கலாம்.

எங்கட மூளை, நியாபகம் இதர தொழில்களுக்கு சீனி அவசியமாம். இரத்தத்தில் எப்பவும் ஓரளவுக்கு கீழ சீனி குறையகூடாது. குறைஞ்சால் ஹைபோ ஆகி, கோமாவும் ஆகலாம்.

ஆகவே சீனி பதார்த்தங்களை, இனிப்புகளை தவிர்த்து, சாதாரண உணவில், பழங்களில் உள்ள சீனியை எடுத்தாலே போதும்.

சுகர் அற்ற வாழ்வே சுகம்.

பிகு.

உந்த 1st word problem எண்டு கேள்வி பட்டனியலே?

அதுதான் இந்த திரில நாங்கள் கதைச்சது.

எல்லாரும் ஊரிலயும், இங்கயும் நல்ல வசதியா தேவைப்பட்டளவு சீனி வாங்கி சாப்பிட்ட ஆக்கள்.

பல பாவப்பட்ட சனங்கள் எப்பவும் போல இப்பவும் ஒரு கேத்தல் டீக்கு இரெண்டு கரண்டி சீனிதான். அவர்கள் வீட்டுக்கு போனால் டீ இனிக்காது, ஆனால் உபசரிப்பு இனிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சீனியை விட மாப்பொருள் உணவுகளை தவிர்ப்பதே சிறந்தது. நீரிழிவுக்கு பரம்பரை அலகும் ஒரு காரணம் 
கடுமையாக வியர்வையுடன் வேலை செய்பவர்களுக்கு இந்த நோய்த்தாக்கம் குறைவு.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, valavan said:

உண்மைதான் அனேக வீடுகளில் சீனிக்குள் கட்டெறும்பு கூட இருக்கும், கேட்டால் அது கண்பார்வைக்கு நல்லது எண்டு சிலர் கதை வேறு  விடுவினம்,

அதிகளவில் சீனி எடுத்துக்கொள்வது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு யாயினி குடும்பமே சாட்சி, ஒரே வருடத்தில் இரு குடும்ப உறுப்பினர்களை இழப்பது என்பது எவ்வளவு பெரிய துயரம்.

நான் நினைக்கிறேன் புலம்பெயர் நாடுகளில் நூற்றுக்கு 40% மான எம்மவர்களுக்கு சுகர் பிரச்சனை இருக்கு.

அரிசியிலும் வெள்ளை அரிசியில் சீனியளவிற்கு பாதிப்புண்டாம். சிவப்பு புழுங்கல் அரிசிதான் சிறந்ததென்று சுகரால் பாதிக்கப்பட்டவர்கள் சான்றிதழ் வழங்கிறார்களாம் புத்தன்😀 ,

நீரழிவுநோயின் ஆரம்ப கட்டதிலிருப்பவர்களுக்கு நெல்லிக்காய் ஒரு சிறந்த நிவாரணி என்று கூறுகிறார்கள்.தாயகம் மற்றும் இந்தியாவிலிருந்து நெல்லிக்காய்கள் இறக்குமதி செய்யப்படுவது பெரும்பாலும் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவே என்கிறார்கள். உண்மை பொய் அறியேன்.

வர்த்தகர்கள் மற்றவர்களின் நலனிற்காக நெல்லிக்காய் இறக்குமதி செய்து அறா விலைக்கு விற்கும் போது அவர்கள் அக்கறை எங்கே போகிறது....சீனியும் அப்படித் தான்

  • கருத்துக்கள உறவுகள்
Just now, colomban said:

சீனியை விட மாப்பொருள் உணவுகளை தவிர்ப்பதே சிறந்தது. நீரிழிவுக்கு பரம்பரை அலகும் ஒரு காரணம் 
கடுமையாக வியர்வையுடன் வேலை செய்பவர்களுக்கு இந்த நோய்த்தாக்கம் குறைவு.

இல்லை. சீனியை முற்றாக தவிர்த்து. மாப்பொருள் உணவை அளவாக எடுக்கலாம். அதில் எமக்கு தேவையான சீனி கிடைக்கும்.

தேனீர், பண்டங்களில் போடப்படும் சீனி, எமது உடலின் தேவைக்கு மேற்பட்டதே.

அப்படி இல்லாவிடில், தேனீர், வெள்ளை சீனி வரமுன்னம் எம் முன்னோர் எல்லாம் செத்தல்லவா போயிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Paanch said:

எங்களுக்கு அம்மா வெறும் தேத்தண்ணி ஒருகையிலும், கொஞ்சச் சீனியை மறுகையிலும் அம்மா தருவா. நான் கண்ணை மூடு மட மட வென்று குடித்துவிட்டு கடைசியிலை இருக்கும் கொஞ்சத் தேத்தண்ணியிலை மற்றக்கையிலுள்ள சீனியைப்போட்டு இனிக்க இனிக்கக் குடித்து மகிழ்ந்தது நினைவுக்கு வருகிறது. 😌

மட்டக்கிளப்பை நினைக்கத்தான் எனக்குப் பெரும் கவலையாக இருக்கிறது. அங்குதான் சீனி போடுபவர்கள் அதிகம். போட்டு அடி உதை வாங்கியவர்களையும் கண்டுள்ளேன். தனிக்காட்டு ராசாவுக்கும் அனுபவம் இருக்கலாம். 😂🤣

வடக்கு மக்கள் எப்பவும் போர்க் கால சூழலில் வாழ்ந்து பழகியதால் எதையும் சமாளிக்க பழகி விட்டார்கள் ...இப்பவும் புதிதாய் விடு காட்டும் போது கூட குசினியில் விறகு அடுப்பு வைத்து சமைக்க என்று இடம் ஒதுக்குகிறார்கள்...பெரும்பாலும் அவர்கள் காஸ் அடுப்பை நம்பி இருக்கவில்லை ...ஆனால் மட்டு நகரில் இருப்பவர்கள் பெரும்பாலும் காஸ் அடுப்புத் தான் பாவிப்பார்கள் .....அவர்கள் தான் அங்கர் இல்லை ,சீனி விலை கூடி விட்டது என்று அதிகம்  அழுகிறார்கள் ...போக ,போக பழகி விடும் 

  • நான் தேனீர் ,கோப்பி சீனி இல்லாமல் குடிக்க பழகி விட்டேன் ...மா சாப்பாடும் அதிகளவு குறைத்து விட்டேன் ...ஆனால் சாப்பிட்டவுடன் எனக்கு கட்டாயம் கேக்கோ ,சொக்கிட்டோ வேண்டும் 😋
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Paanch said:

எங்களுக்கு அம்மா வெறும் தேத்தண்ணி ஒருகையிலும், கொஞ்சச் சீனியை மறுகையிலும் அம்மா தருவா. நான் கண்ணை மூடு மட மட வென்று குடித்துவிட்டு கடைசியிலை இருக்கும் கொஞ்சத் தேத்தண்ணியிலை மற்றக்கையிலுள்ள சீனியைப்போட்டு இனிக்க இனிக்கக் குடித்து மகிழ்ந்தது நினைவுக்கு வருகிறது. 😌

மட்டக்கிளப்பை நினைக்கத்தான் எனக்குப் பெரும் கவலையாக இருக்கிறது. அங்குதான் சீனி போடுபவர்கள் அதிகம். போட்டு அடி உதை வாங்கியவர்களையும் கண்டுள்ளேன். தனிக்காட்டு ராசாவுக்கும் அனுபவம் இருக்கலாம். 😂🤣

உண்மைதான் அண்ணை இங்க சீனி பாவனை அதிகம் தேநீர் கோப்பையில் , அல்லது டீ கோப்பையில் சீனி இல்லாவிட்டால் என்ன சீனி தட்டுப்பாடா , என்று கேட்பார்கள்  பொடியங்களுக்குள் என்ன டா டீ களனி தண்ணி போல இருக்கு என காலுக்கு கீழே ஊற்றிவிடுவார்கள் நான் கூட சீனிக்கு அடிமை ஆனால் உடலில் சீனி அளவு போதுமானதாக உள்ளது என வைத்தியர் 2 வருடங்களுக்கு முன்னர் சொன்ன நியாபகம்  அநேகமாக எனது விளையாட்டு என் உடலை கட்டமைக்கிறதோ தெரியவில்லை தற்போது விளையாடி கனகாலம் ஆகிறது அதனால் உடல் சற்று பெரிதானது போல எண்ணத்தோன்றுகிறது.

20 minutes ago, ரதி said:

நான் தேனீர் ,கோப்பி சீனி இல்லாமல் குடிக்க பழகி விட்டேன் ...மா சாப்பாடும் அதிகளவு குறைத்து விட்டேன் ...ஆனால் சாப்பிட்டவுடன் எனக்கு கட்டாயம் கேக்கோ ,சொக்கிட்டோ வேண்டும் 😋

இதுக்கு சீனியே போட்டு குடிக்கலாம்  ம்கும்

  • கருத்துக்கள உறவுகள்
தமிழர் நாங்கள்
அங்கர் இல்லை என்றால்
மல்லித் தண்ணீரையும் கோப்பியையும் பருகுவோம்
சீனி இல்லை என்றால்
குறைந்த விலையில் உள்ள இனிப்பை வைத்து தேநீரை குடித்துமகிழ்வோம்
பாண் இல்லை என்றால்
பழங்கஞ்சி கரைத்துச் சாப்பிடுவோம்
கோதுமை இல்லை என்றால்
பச்சை அரிசிமாவைப் பயண்படுத்திக்கொள்வோம்
பெற்றோல் டீசல் இல்லையென்றால்
மண்ணெண்னையைப் பயண்படுத்துவோம்
வெற்றிலை இல்லை என்றால்
துளசி இலையை சப்புவோம்
பாக்கு இல்லையென்றால்
குரும்பட்டியை கடிப்போம்
பீடி இல்லையென்றால்
கடதாசியைச் சுற்றிப் புகைப்போம்
மூவாயிரம் கொடுத்து
தேங்காய்வாங்கியவர்கள்
ஆயிரம் கொடுத்து விஸ்கேற் வாங்கியவர்கள்
ஆக மொத்தத்தில் எங்களுக்கு
இல்லை என்று சொல்லி முடிக்கத் தெரியாது
வாழ்வோம் வரலாறு பேசும்படி வாழ்வோம் .
வாழ்ந்தோம் வீழ்ந்தோம் என்றில்லாமல் வரலாற்றில் இடம்பிடித்து வீழ்ந்தோம் என்றாகட்டும்.
240122131_2877541549129412_7201976900848
 
239639384_2877541612462739_7656958793823
 
240549226_2877541575796076_2664391195240
 
237161139_2877541632462737_5991138732880
 
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, valavan said:
13 hours ago, சுவைப்பிரியன் said:

நான் இங்கை என்றது இலங்கையைத் தான்.

ஓ.. நான் நினைச்சேன் நீங்கள் வாழும் சுவிசை சொன்னீர்கள் என்று.

🤣

அவர் சுவிச்சலண்டில் இருந்து கொண்டு இங்கை என்று சொன்னால் நாங்கள் அப்படி தானே நினைப்போம்

7 hours ago, valavan said:

உப்பும் சீனியும் சேர்ந்து ஒருவரின் கதையை முடிச்சிருக்கு.

உப்பும் ஒரு மோசமானது. யுரியுப்பில் தமிழ் சமையல் செய்யும் முறைகள் காட்டும் போது பார்த்தால் உப்பை அள்ளி போடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

இல்லை. சீனியை முற்றாக தவிர்த்து. மாப்பொருள் உணவை அளவாக எடுக்கலாம். அதில் எமக்கு தேவையான சீனி கிடைக்கும்.

தேனீர், பண்டங்களில் போடப்படும் சீனி, எமது உடலின் தேவைக்கு மேற்பட்டதே.

அப்படி இல்லாவிடில், தேனீர், வெள்ளை சீனி வரமுன்னம் எம் முன்னோர் எல்லாம் செத்தல்லவா போயிருப்பார்கள்.

எனது மக்கள் ஒருவரும் சின்ன வயதில் இருந்தே சீனி பாதிப்பதில்லை.

நான் பிலேன் ரீக்கு சீனி சேர்த்தால் உங்களுக்கு தேயிலையின் ருசி தேவையில்லையா? சீனியை போட்டால் சீனியின் ருசி தானே தெரியும் என்பார்கள் ☹️

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

எனது மக்கள் ஒருவரும் சின்ன வயதில் இருந்தே சீனி பாதிப்பதில்லை.

நான் பிலேன் ரீக்கு சீனி சேர்த்தால் உங்களுக்கு தேயிலையின் ருசி தேவையில்லையா? சீனியை போட்டால் சீனியின் ருசி தானே தெரியும் என்பார்கள் ☹️

சரியான கேள்விதானே. இதை போலதான் நானும் முன்பு உறைப்பான இறைச்சி கறியைதான் விரும்புவேன். 

ஒரு வெள்ளைகாரர்தான் ஒருநாள் கூறினார், உனக்கு மிளகாயின் சுவைதான் ருசிக்கிறதே ஒழிய, இறைச்சியின் சுவை இரெண்டாம் பட்சம்தான் என்று.

இப்போ பேகர், கெபாப் இல் கூட சாஸ் சேர்ப்பது குறைவு. இறைச்சியும், மரக்றியும் சேரும் சுவைதானே முக்கியம்? சோசை பாணில் வைத்து சாப்பிட்டாலும் அதே சுவைதானே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 26/8/2021 at 22:06, கற்பகதரு said:

எல்லோரும் பனம்கற்காரம் சாப்பிடுங்கோ! 👏

விடுதலைப்புலிகள் பனைவளர்ப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். அது மட்டுமில்லாமல் பனை உற்பத்தி பொருட்களுக்கும் முதலிடம் கொடுத்தார்கள்.

அதன் பலனை இன்று அனுபவிக்க முடியவில்லை. பனை மரங்களை அழித்து நாகதாளி நல்லது என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

ஒரு வெள்ளைகாரர்தான் ஒருநாள் கூறினார், உனக்கு மிளகாயின் சுவைதான் ருசிக்கிறதே ஒழிய, இறைச்சியின் சுவை இரெண்டாம் பட்சம்தான் என்று.

சேம் பீலிங் 🤣

எனக்கும் வெள்ளைக்காரன் சொன்னால் தேவவாக்கு மாதிரி......😁

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, குமாரசாமி said:

சேம் பீலிங் 🤣

எனக்கும் வெள்ளைக்காரன் சொன்னால் தேவவாக்கு மாதிரி......😁

🤣 நான் சொல்பவரின் நிறத்தை, இனத்தை பார்த்து கருத்தை எடை போடுவது இல்லை. 

யாழ் களத்திலும் அதுவே, கு.சா அண்ணை என்றாலும், துல்பென் என்றாலும், கற்பகதரு என்றாலும், நெடுக்கே ஆனாலும் சொல்லும் கருத்து எனக்கு நியாயமாக தெரிந்தால் ஏற்றுகொள்வேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு, நண்பனும் எதிரி.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

பல வீடுகளில் சீனிப் போத்தல்களில் எறும்பு மொய்த்து போயிருக்கும்.

தேத்தண்ணி குடிச்ச கோப்பையிலேயே எறும்பு மொய்க்குது, இது பரவாயில்லை.

5 hours ago, விளங்க நினைப்பவன் said:

உப்பும் ஒரு மோசமானது. யுரியுப்பில் தமிழ் சமையல் செய்யும் முறைகள் காட்டும் போது பார்த்தால் உப்பை அள்ளி போடுவார்கள்.

உப்பு இல்லாவிட்டால் குப்பையிலதான் கொட்டவேணும் சமைச்சதை. உப்பு, பொருட்களிலேயே விலை குறைந்தபடியால் சிக்கனம் பாராமல் அள்ளி கொட்டுகிறார்கள்.

8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதுக்கு சீனியே போட்டு குடிக்கலாம்  ம்கும்

சிலருக்கு சாப்பிட்ட பின் பாக்கு வெற்றிலை வாயில் போட்டு மெல்லுவார்கள். இவை இருக்கிற நாட்டில குதப்பிபோட்டு துப்பவும் இடம் வேணுமே,  இது ஒரு மாறுதல். 

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 3 people and text that says 'இப்ப யாரும் சொந்தக்காரங்க நம்ம வீட்டுக்கு வந்தா .r.ஊர்க்குருவி நீங்க எப்டியும் வரும்போதே வீட்ல tea plantea குடிச்சிருப்பீங்க அப்டின்னு சொல்லணும்'

வீட்டிலை... சீனியும் இல்லை, "அங்கர்" பால் மாவும்  இல்லை...  

May be an image of 2 people and text that says 'வீட்டிலேயே சீனி தயாரிப்பது எப்படி Me mt Sujan_vj'

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

உப்பு இல்லாவிட்டால் குப்பையிலதான் கொட்டவேணும் சமைச்சதை. உப்பு, பொருட்களிலேயே விலை குறைந்தபடியால் சிக்கனம் பாராமல் அள்ளி கொட்டுகிறார்கள்.

🤣

உப்பு இல்லாவிட்டால் குப்பையில் கொட்டவேணும் என்ற பழமொழியை பின்பற்றி தான் இப்படி உப்பை அள்ளி கொட்டுகிறார்களோ என்று நானும் நினைத்ததுண்டு.

8 hours ago, goshan_che said:

நான் சொல்பவரின் நிறத்தை, இனத்தை பார்த்து கருத்தை எடை போடுவது இல்லை. 

யாழ் களத்திலும் அதுவே, கு.சா அண்ணை என்றாலும், துல்பென் என்றாலும், கற்பகதரு என்றாலும், நெடுக்கே ஆனாலும் சொல்லும் கருத்து எனக்கு நியாயமாக தெரிந்தால் ஏற்றுகொள்வேன்.

கு.சா அண்ணை  
துல்பென்
கற்பகதரு
நெடுக்காலபோவான்

இதில் யார் வெள்ளை இனத்தவர், வெள்ளைநிறம் கொண்டவர்?  யார் யார் சொக்கிலேட் நிநம்?
 
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விளங்க நினைப்பவன் said:

கு.சா அண்ணை  
துல்பென்
கற்பகதரு
நெடுக்காலபோவான்

இதில் யார் வெள்ளை இனத்தவர், வெள்ளைநிறம் கொண்டவர்?  யார் யார் சொக்கிலேட் நிநம்?
 
மற்றையவர்கள் பற்றி தெரியாது, ஆனால் கு.சா அண்ணை எம்ஜிஆர் மாரி தக தகப்பாராம்😎.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, goshan_che said:

மற்றையவர்கள் பற்றி தெரியாது, ஆனால் கு.சா அண்ணை எம்ஜிஆர் மாரி தக தகப்பாராம்😎.

ஆனால் குமாரசாமி அண்ணா பரீட்சை எழுதினால் ரிசல்ட் தெரியும் 😜

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.