Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திராவிட அடையாளமே தமிழரின் பெருமை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  • Replies 132
  • Views 10.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

திராவிடர் என்பவர் பிறப்பால் தமிழர்கள் இல்லை.

வட இந்தியாவிலிருந்து தென்னகம் நோக்கி வந்தவர்களைக் குறிப்பிடும் சொல்லே திராவிடர் என்பதாகும்!

அவர்கள் தமிழர்களிலிருந்து தம்மை வேறு பட்டவர்கள் என்று காட்டவே திராவிடர் என்ற வார்த்தையைப் பயன் படுத்தினர்.

சுப்பிரமணியம் என்பவர் தமிழர்.

சுப்பிரமணியன் என்பவர் திராவிடர்.

இருவரும் தமிழில் தான் பேசுவார்கள்.

1 hour ago, புங்கையூரன் said:

அப்படி என்றால் வட இந்தியாவில் இருந்து வந்த (ஆரியரை) எப்படி குறிப்பிடுவர்?

நான் இன்றுவரை அவர்கள் தான் பார்ப்பனர்கள் என்று நான் அறிந்து வைத்து இருந்தேன்.

1 hour ago, புங்கையூரன் said:

சுப்பிரமணியம் என்பவர் தமிழர்.

சுப்பிரமணியன் என்பவர் திராவிடர்.

பதஞ்சலியன், பரணிதரன், பரமேஸ்வரன், நந்தகுமாரன்,நந்தன் போன்ற பெயர்கள் தமிழ் பெயர்கள் இல்லையா? திராவிடப் பெயர்களா?

புங்கை, இவை உண்மையில் வடமொழிப் பெயர்கள். ஆனால் பெயர் இறுதியில் 'ன்' , 'ம்' போட்டு அதை தமிழர் என்றும் திராவிடர் என்றும் சாயம்  பூசுகின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, நிழலி said:

பதஞ்சலியன், பரணிதரன், பரமேஸ்வரன், நந்தகுமாரன்,நந்தன் போன்ற பெயர்கள் தமிழ் பெயர்கள் இல்லையா? திராவிடப் பெயர்களா?

புங்கை, இவை உண்மையில் வடமொழிப் பெயர்கள். ஆனால் பெயர் இறுதியில் 'ன்' , 'ம்' போட்டு அதை தமிழர் என்றும் திராவிடர் என்றும் சாயம்  பூசுகின்றீர்கள்.

நிழலி, ஆரியர்கள் தான் தங்களை அங்கு ஏற்கனவே வாழ்ந்தவர்களுடன் அடையாளப் படுத்துவதற்காகத் தங்களைத் திராவிடர்கள் என அழைத்துக் கொண்டதாக எங்கோ வாசித்த நினைவு. தமிழர்கள் தங்களைத் திராவிடர்கள் என அடையாளப் படுத்தியதில்லை என்றே நான் நினைக்கின்றேன். நாங்கள் என்ன  பெயர்களையும் வைத்துக் கொள்ளலாம். எனினும் சிலர் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உதாரணமாக சு.சாமி சம்பந்தன் ஐயாவை, திரு. சம்பந்தம் என்று தான் அழைப்பார்.

ஒரு மக்கள் கூட்டம் தம்மை எவ்வாறு அழைப்பது என்பதை அன்றைய அரசியலே தீர்மானிக்கிறது. ஒரு கால கட்டத்தில் திராவிட அரசியல் தேவையானதாக இருந்திருக்கலாம்.இப்போதும் அது தேவையா என்பதை மக்களே தீர்மானிப்பார். இதில் எது தமிழ் எது திராவிடம் என்பது அர்த்தம் அற்ற தேடல். மொழி மாறும் மக்கள் சமூகம் தொடர்ச்சியான குடிப்பரம்பலையும் கலப்பையும் கொண்டிருக்கும். இன்றைய அரசியல் தமிழ்த் தேசிய அரசியல் தான். ஈழ விடுதலைப் போரும் இனப்படுகொலையும் தமிழ் நாட்டு மக்களை தமிழ்த் தேசிய அரசியலை நோக்கி தள்ளி உள்ளது. யார் யார் தம்மை தமிழராக அடையாளப் படுத்துகிறார்களோ அவர்கள் எல்லோரும் தமிழர்களே.

சாதிய அடையாளம் ஒழிந்து எல்லோரும் தமிழரே என்னும் நிலை வர வேண்டும். 

தென் திசை வந்த ஆரியரே திராவிட பார்பனர் என அழைக்கப்பட்டனர். திராவிட என்ற சொல்லே வட மொழிச் சோல். பெரியார் தென் மாநிலங்களை இணைத்து தனி நாடு கேட்டார். அந்த கால கட்டத்திற்கு அது சரியான அடையாளம் ஆகும் . மொழி வாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பின்னர் தமிழ் என்னும் அடையாளமே அரசியல் தேவையாகிறது. அதன் அடிப்படையிலேயே மானில உரிமை சமத்துவம் எல்லாம் பேசப்படுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

நந்தன் போன்ற பெயர்கள் தமிழ் பெயர்கள் இல்லையா? திராவிடப் பெயர்களா?

ஏன்யா☹️

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புங்கையூரன் said:

திராவிடர் என்பவர் பிறப்பால் தமிழர்கள் இல்லை.

வட இந்தியாவிலிருந்து தென்னகம் நோக்கி வந்தவர்களைக் குறிப்பிடும் சொல்லே திராவிடர் என்பதாகும்!

அவர்கள் தமிழர்களிலிருந்து தம்மை வேறு பட்டவர்கள் என்று காட்டவே திராவிடர் என்ற வார்த்தையைப் பயன் படுத்தினர்.

சுப்பிரமணியம் என்பவர் தமிழர்.

சுப்பிரமணியன் என்பவர் திராவிடர்.

இருவரும் தமிழில் தான் பேசுவார்கள்.

இல்லை அண்ணா, 

நான் அறிந்தவரை, திராவிட என்பது விந்திய மலைக்கு கீழ் வாழ்ந்த (தமிழ், டமிழ) கூட்டத்தை குறிக்க அதுக்கு மேலே வாழ்ந்த கூட்டம் (ஆரியர், பார்ப்பனர்) கொடுத்த பெயர்தான்.

African-American போல, விந்திய மலைக்கு கீழே வாழவந்த பார்பனர்களுக்கு கொடுத்த பெயர்தான், திராவிட-பார்பனன்.

  • கருத்துக்கள உறவுகள்

anto paul (@AntonyPaulraj6) | Twitter

இன்றைய செய்திகள் 3500 வருட பழமையான மனிதக் குடியேற்றம் பற்றிக் கூறுகிறது. இவர்கள் ஆபிரிக்கா வில் இருந்து வந்த மூத்த குடிமக்கள் இவர்கள் ஏதாவது ஒரு ஆபிரிக்க மொழி பேசி இருக்கலாம். ஆகவே இவர்கள் தமிழர் என்று சொல்வதோ இல்லை திராவிடர் என்று சொல்வதோ அபத்தமானது. அவர்கள் தங்களை வேறு பெயரில் அழைத்திருக்கலாம். ஆகவே என்ன அடையாளம் என்பதை அன்றைய காலகட்டமே தீர்மானிக்கிறது. இன்றைக்கு தமிழர் என்னும் அரசியல் தான் தேவை ஆகி இருக்கிறது. 

மொழி வழி மானில உரிமைக்கோ ஈழ விடுதலைக்கோ ஏன் புலம் பெயர் தமிழர் நலனுக்கோ தமிழர் என்னும் அடையாள அரசியலே தேவையாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, narathar said:

முரண்பாடு எங்கே ஆரம்பிக்கிறது என்றால், இதுகாறும் இருந்து வந்த திராவிட-அடையாள அரசியலில் இருந்து தமிழ்-அடையாள அரசியலுக்கு மாறும் போது, அந்த அடையாள அரசியலை எப்படி வரையறுக்கிறோம், யாரை உள்வாங்குகிறோம், யாரை வெளி தள்ளுகிறோம், யாரை எதிரிகளாக முன்னிறுத்துகிறோம் என்பதில்தான்.

திராவிட அரசியலின் இயற்கையான தொடரியாக (natural successor) தமிழ் தேசிய அரசியலை முன்னிறுத்தி, திராவிட அரசியலை தமிழ் தேசிய அரசியலாம் பிரதியீடு செய்யும் போக்கை அதிகம் பெயர் எதிர்க்கப்போவதில்லை.

மாறாக, இதுவரை திராவிட அரசியலின் கீழ் ஒன்று பட்டவர்களை இரு கூறாக்கி, சாதிய அடிப்படையில் பிரித்து, எதிரெதிர் துருவங்களாக்கி, ஒரு சாராரை எதிரிகள் என்று கற்பிதம் கட்டுவதும்,

பார்ப்பனர்களை தமிழர்கள் என அங்கீகரிப்பதும்,

பெரியார் மீது அவதூறு பரப்புவதும், இருட்டிப்பு, புரட்டு செய்வதும்,

பெரியார் நீக்க அரசியல் செய்ய விழைவதும்,

இப்போ இருக்கின்ற சனாதன எதிர்ப்பு கொள்கையான திராவிடத்தை உடைத்து ஒரு வெற்றிடத்தை உருவாக்கி அதில் சனாதனைத்தை புகுத்தி விடும் உத்தியே அன்றி வேறில்லை.

இது சீமானால் மட்டும் அல்ல, மபோ பாண்டியன் போன்றோராலும் நடத்தப்படுகிறது.

நாம் தமிழரின் 10 வருட முயற்சிக்கு, திராவிட எதிர்ப்பு அரசியலுக்கு பலனாக, தமிழ் தேசியத்துக்கு ஒரு சட்டசபை ஆசனம் கூட இதுவரை இல்லை.

ஆனால் பிஜேபிக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

ஆரியம் என்றால் என்ன திராவிடம் என்றால் என்ன என்ற ஆயுவுகளெல்லாம் அரசியல் புரிபவர்களும் அரை வயிறுக்குமேல் நிரம்பியவர்களும்,எம்மைபோன்ற இணைய வாசிகளும் அப்பப்போ விவாதித்து கொள்வார்கள்., 

பிஸி என்று வந்துவிட்டால் அதெல்லாம் பின்னுக்கு தூக்கி போட்டுவிட்டு தங்களோட வேலையை முதலில்  பார்க்க போய்விடுவார்கள். திரும்பி வந்து மறுபடியும் ஆரம்பிப்பார்கள்.

திராவிடம் ஆரியம் தமிழ்தேசியம்  என்று மேடைகளில் முழங்கி பாமரனின்  நரம்பை சூடாக்கும்    கட்சிகள் தேர்தல் என்று வரும்போது தமிழ்தேசியத்தை வெறுக்கும் பார்ப்பனியர்களுடன் கூட்டு வைக்கின்றன, மதத்தை உயர்குலத்தை  முன்னிறுத்துபவர்களுடன் கை கோர்த்து நடக்கின்றன.

ஆரியம் திராவிடம் பற்றி அன்றாடங்காய்ச்சிகளான  அடுத்தநாள் பிழைப்புக்கு என்ன வழி என்று  சிந்திக்கும் பெரும் கூட்டம்  பெரும்பாலும் இதைபற்றி தெரிந்துக்கவும் நினைப்பதில்லை அப்படியென்றால் அது என்ன என்று தேடல் செய்யவும் முயற்சிப்பதில்லை.

அவர்கள் பிரச்சனை ஆரிய திராவிட பிரச்சனையைவிட பெரிய பிரச்சனை.

நாம் தமிழர் தேவையற்ற நிலைப்பாடுகளை எடுத்து பலரை இழந்துள்ளது. அரசியல் தெளிவின்மை காரண மாக இருக்கலாம். இவற்றில் இருந்து புதிய சக்திகள் வரலாம். நாம் தமிழரே சுய விமரிசனம் செய்து வளரலாம்.  பெரியார் மீதும் திராவிட இயக்கம் மீதும் வன்மம் பாராட்டாமல் இன்றைய அரசியல் தமிழ்த் தேசியமே என்று சொல்லப் செயற்கை பட்டிருந்தால் பலரை உள்வாங்கி இருக்கலாம்.

இன்றைய அரசியல் அதிகாரம் அடையாள அரசியலிலேயே பிறக்கிறது. மொழி வழி மாநிலம். இயற்கை யைப் பாதுகாத்து வளர்ச்சி. சமத்துவப் பொருளாதாரம் . சம உரிமை . மதச் சார்பின்மை . இவை எல்லாமுமாக தமிழ்த் தேசிய அரசியல் இருந்தது. சீமான் இவற்றைப் பின் பற்றினாலே விரைவாக வளரலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 9/9/2021 at 08:17, நந்தன் said:

ஏன்யா☹️

தல உடாத தல ! விட்டா ஒன்ன தெலுங்கன் ஆக்கிடுனுவாக தல...😎

கைப்புள்ள கதாபாத்திரத்தின் பின்னணி: சுந்தர்.சி - வடிவேலு பகிர்வு | winner  movie comedy - hindutamil.in

5 hours ago, goshan_che said:

முரண்பாடு எங்கே ஆரம்பிக்கிறது என்றால், இதுகாறும் இருந்து வந்த திராவிட-அடையாள அரசியலில் இருந்து தமிழ்-அடையாள அரசியலுக்கு மாறும் போது, அந்த அடையாள அரசியலை எப்படி வரையறுக்கிறோம், யாரை உள்வாங்குகிறோம், யாரை வெளி தள்ளுகிறோம், யாரை எதிரிகளாக முன்னிறுத்துகிறோம் என்பதில்தான்.

திராவிட அரசியலின் இயற்கையான தொடரியாக (natural successor) தமிழ் தேசிய அரசியலை முன்னிறுத்தி, திராவிட அரசியலை தமிழ் தேசிய அரசியலாம் பிரதியீடு செய்யும் போக்கை அதிகம் பெயர் எதிர்க்கப்போவதில்லை.

மாறாக, இதுவரை திராவிட அரசியலின் கீழ் ஒன்று பட்டவர்களை இரு கூறாக்கி, சாதிய அடிப்படையில் பிரித்து, எதிரெதிர் துருவங்களாக்கி, ஒரு சாராரை எதிரிகள் என்று கற்பிதம் கட்டுவதும்,

பார்ப்பனர்களை தமிழர்கள் என அங்கீகரிப்பதும்,

பெரியார் மீது அவதூறு பரப்புவதும், இருட்டிப்பு, புரட்டு செய்வதும்,

பெரியார் நீக்க அரசியல் செய்ய விழைவதும்,

இப்போ இருக்கின்ற சனாதன எதிர்ப்பு கொள்கையான திராவிடத்தை உடைத்து ஒரு வெற்றிடத்தை உருவாக்கி அதில் சனாதனைத்தை புகுத்தி விடும் உத்தியே அன்றி வேறில்லை.

இது சீமானால் மட்டும் அல்ல, மபோ பாண்டியன் போன்றோராலும் நடத்தப்படுகிறது.

நாம் தமிழரின் 10 வருட முயற்சிக்கு, திராவிட எதிர்ப்பு அரசியலுக்கு பலனாக, தமிழ் தேசியத்துக்கு ஒரு சட்டசபை ஆசனம் கூட இதுவரை இல்லை.

ஆனால் பிஜேபிக்கு?

இதனைவிடச் செழுமையாக யாராலும் விளக்க முடியாது... மிக்க நன்றி....

உங்கள் எதிரில் இருப்பவர்கள் வரலாற்றையும் தத்துவங்களையும் காய்தல் உவத்தல் அன்றி அலசி அறியாத, மின்னணு குறுஞ்செய்திகளில் வரலாற்றை படிப்பவர்கள் என நன்கு உணர்ந்துள்ளீர்கள்... நன்றிகள் பல...

தமிழ்த்தேசிய கோட்பாட்டின் ஆணிவேர், வேண்டிய போது தனிநாடாக பிரிந்து செல்ல கூடிய, தமிழர் தன்னாட்சி அரசு... ஒரு மாநில முதல்வர் (பே.மணியரசன் சொற்களில் "கண்காணி") பதவியும், அமைச்சர் அவையும் அல்ல... அதற்கு நிறைய திராவிட கட்சிகள் ஏற்கனவே உள்ளன.... தமிழர் தன்னாட்சியை இலக்காக கொண்ட, தமிழ்த்தேசிய, திராவிட இயக்கங்கள் நூறு ஆண்டுகளாக அந்த மண்ணிலே செயற்படுகின்றன... தமிழீழ விடுதலைப் போரில் தோழோடு, தோழ் நின்றவர்கள் அவர்கள் தான்... தமிழ்த்தேசிய கோட்பாட்டு மடைமாற்றத்தால், இன்று அவை மேலும் வலுவிழந்துள்ளன...

தமிழ்த்தேசியம் பலரும் சேர்ந்து செய்யும் கொண்டாட்டம் அல்ல.... தலைவர் பலமுறை குறிப்பிட்டது போன்று அது ஒரு இரத்தமும் வியர்வையும் சிந்திய தியாகங்கள் நிறைந்த போராட்டமே அன்றி ஆடம்பட அரசியல் அல்ல... ஆதிக்க சக்திகளிடமிருந்து விடுதலையை போராடித்தான் பெறமுடியும் என்பது உலக வரலாறு....

மானமும் அறிவும் மனிதர்கு அழகு....

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் எது?  திராவிடம் எது?தமிழர் யார்?  திராவிடர் யார்?தமிழ்நாடு எது? திராவிட நாடு எது?

திராவிட நாடு திராவிடருக்கே சாத்தியமா? தோழர கொளத்தூர் மணி அவர்களே! அன்றே திராவிட நாடு விடுதலைக்கு சமாதி கட்டச் சொன்னவர் “முத்தமிழ்க் காவலர்” கி.ஆ.பெ.விசுவநாதம். அவர் எழுப்பிய கேள்விக்கு திராவிடப்பிதாமகன் பெரியரால் பதில் சொல்ல முடிய வில்லை. பெரியாரால் முடியாதது. உங்களாலும் முடியாது! தமிழர்களை ஏமாற்றாதீர். அப்பாவித்தனமாக திராவிடநாடு கோரிக்கையை எழுப்புவர்களும் அதனை நம்புபவர்களும் கி.ஆ.பெ.வி. தந்த  30 பதில்களைப் படியுங்கள்! உண்மையை உரைத்திட முன் வாருங்கள்!
1. தமிழ் என்பது ஒரு நல்ல தமிழ்ச் சொல். திராவிடம் என்பது அழுத்தமான வடமொழிச் சொல்
2. திராவிடம் என்ற சொல்லே திரிந்து “தமிழ்” என்று ஆயிற்று என்பது தமிழ் பற்றாளர் சிலரது கூற்று. இது அவரவர் மொழிப்பற்றை காட்டுமேயன்றி உண்மையைக் காட்டாது-
3. பழைய சங்க காலத்திய தமிழ் நூல்கள் அனைத்திலும் “திராவிட” என்ற சொல் ஒன்று கூட இல்லை. 
4. சங்க காலத்திற்குப் பின்னும், 700 ஆண்டுகளுக்கு முன்னும் தோன்றிய இன்றும் இருக்கும் எந்த நூலிலும் திராவிடம் என்ற சொல் இல்லை.
5.  650 ஆண்டுகளுக்குப் பிற்பட்ட வரலாற்று காலத்தில் தான் வரலாறு எழுதிய ஆங்கிலேயரும், ஆங்கிலேயரைப் பின்பற்றி ஆரியரும் தமிழரை தமிழ் நாட்டை தமிழ்மொழியை மட்டுமல்லாமல் தமிழ் இனத்தையும், தமிழ் இனத்தின் மொழிகளையும் சேர்த்து “திராவிடம் ” எனக் குறிப்பிட்டு இருக்கின்றனர். 
6. தமிழருக்கும், தமிழ் இனத்தாருக்கும் திராவிடர் எனப் பெயரிட்டு வரலாறு எழுதிய ஆங்கிலேயருக்கு அறிவித்தவர்கள் அக்காலத்தில் நன்கு கற்றறிந்த ஆரியர்களே!
7. “தமிழ்” என்ற தமிழ்ச் சொல்லிற்கு தம்மிடத்தில்  “ழ்”  ஐ உடையது. (தம்+ழ்) என்பது பொருள். “திராவிடம்” என்ற வடசொல்லிற்கு குறுகிய விடம் என்றும் திராவிடர் என்ற சொல்லிற்கு குறுகியவர்-அல்லது குறுகிய புத்தியுள்ளவர் என்றும் பொருள்.( திராவி- அற்பம், குறுகல் )
8. தமிழ்நாடு என்பது தமிழ்நாட்டை மட்டுமே குறிக்கும் – திராவிட நாடு என்பது ஆந்திரா, மலையாளம், கன்னடம், துளுவ நாடுகளையும் சேர்த்துக் குறிக்கும். 
9. தமிழ்நாடு என்று ஒரு தனி நாடும்; தமிழ் மொழி என்று ஒரு தனி மொழியும் உண்டு. திராவிட நாடு என்று ஒரு தனி நாடும், திராவிட மொழி என்று ஒரு தனி மொழியும் இல்லை. 
10. தமிழ்நாடு , தமிழ் மொழி எனக் கூறலாம்- ஆனால் திராவிட நாடு, திராவிட மொழி எனக் கூற இயலாது. திராவிட நாடுகள், திராவிட மொழிகள் என்றே கூறியாக வேண்டும். 
11. தமிழ்நாட்டு எல்லை வரையறுத்துக் கூறப்பட்டிருக்கிற ஒன்று. திராவிட நாட்டின் எல்லை இதுவரை எவராலும் வரையறுத்து கூறப்படாத ஒன்று. ஒரு நாள் இந்திய மலை வரையில், மற்றொரு நாள் அசாம் வரையில், வேறொரு நாள் இந்தியா முழுவதுவமே “திராவிட நாடு” கூறப்பட்டதும் உண்டு..
12. தமிழ் என்றால் திராவிடம் தான், திராவிடம் என்றாலும் தமிழ் தான், தமிழர் என்றால் திராவிடர் தான், திராவிடர் என்றாலும்  தமிழர் தான், தமிழ்நாடு என்றால் திராவிடநாடு தான். திராவிட நாடு என்றாலும் தமிழ்நாடு தான் “அந்தக் கருத்தில்தான் அப்படிச் சொல்லப்பட்டு வருகிறது” என்பதில் புரட்டு இருக்குமே தவிர உண்மை இருக்காது. 
13. தமிழர் என்று எழுதி (திராவிடர் ) என்று கூட்டுக்குள் போடுவதும், தமிழ்நாடு என்று எழுதி (திராவிட நாடு ) என்று கூட்டுக்குள் போடுவதும், பிறகு திராவிடர் ( தமிழர்) என்று எழுதி கூட்டுக்குள் போடுவதும் , திராவிட நாடு ( தமிழ் நாடு) என்று எழுதி கூட்டுக்குள் போடுவதும் தவறான எழுத்தாகுமேயன்றி நேர்மையான எழுத்தாகாது.
14. தமிழ்நாட்டைத் தாய்நாடாகக் கொண்டு, தமிழ்மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு, தமிழ்ப் பண்பை தாய்ப்பண்பாகக் கொண்டு வாழ்பவர் அனைவரும் தமிழரே என்பது ஜாதி பேதமற்று உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆனால் திராவிடர் யார்? என்பது இன்னும் உறுதி செய்யப்படாமலே இருந்து வருகிறது. ஒரு நாள் மகாராஷ்டிரரும் திராவிடர் என்றும், மற்றொரு நாள் வங்காளிகளும் திராவிடர் என்றும், வேறொரு நாள் “ஆரியர் தவிர அனைவரும் திராவிடரே” என்றும் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. 
15. தமிழ்மொழி ஒன்று மட்டுமே தனித்து நிற்க எழுதப்பேச, இயங்க ஆற்றலுடையது. இத்தகைய ஆற்றல் தமிழ் ஒழிந்த திராவிட மொழிகளில் எதற்கும் இன்று இல்லை. 
16. திராவிட மொழிகள் பலவும், வடமொழியோடு சேரச் சேர பெருமையடைகின்றன! தமிழ்மொழி ஒன்று மட்டுமே வடமொழியிலிருந்து விலக, விலக பெருமையடைகிறது!
17. தமிழ்நாடு ஒன்று மட்டுமே பிரிந்து வாழும் தகுதியையும் சிறப்பையும் பிற அமைப்பையும் உடையது. திராவிட நாடுகளில் எதுவும் இத்தகைய நிலையில் இன்று இல்லை. 
18. தமிழ் மக்களுக்கு மட்டுமே வட நாட்டிலிருந்து பிரிந்து தனித்து வாழ வேண்டும் என்ற உணர்ச்சி இருந்து வருகிறது. இத்தகைய உணர்ச்சியில் சிறிதளவாவது பிற திராவிட மக்களிற் பலரிடத்திலும் காண முடியவில்லை.
19. “தமிழ்நாடு தமிழருக்கே” என்பது தமிழ்மக்களின் பிறப்புரிமையாக இருக்கும். “திராவிடநாடு திராவிடருக்கே” என்பதுவேண்டாதவர்களுக்கும், விரும்பாதவர்களுக்கும் சேர்ந்து கூப்பாடு போடுவதாக இருக்கும். 
20. திராவிட நாட்டினர்களிற் பலர் தமிழ் மக்களில் எவரையும் அறிவாளி என்று ஒப்பியதுமில்லை; ஒப்புவதுமில்லை. தமிழர்களில் எவரையும் தங்களின் தலைவனாக ஏற்றுக்கொண்டதுமில்லை. ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை. 
21. திராவிட மக்களிற் பலரும் தமிழர்களிடமிருந்து பிரிந்து வாழவே ஆசைப்படுகிறார்கள். குறை கூறுகிறார்கள். வைகிறார்கள். மனிதனை மனிதனாகக்கூட மதிப்பதில்லை. இக்கூற்றை மெய்ப்பிக்க திராவிடத்தின் தலைவர் என்று தன்னை சொல்லிக் கொள்ளுகிறவர் வீர உணர்ச்சியுள்ள தமிழ்நாட்டு இளைஞர்களே “அதுகள்; இதுகள்” என அஃறிணைப்படுத்தி வைதும் செல்லுமிடமெல்லாம் தமிழ்நாட்டுத் தலைவர்களை, அறிஞர்களை இழிவுபடுத்தி வைவதுமே போதுமான சான்றாக இருந்து வருகிறது. இதனைப் பார்க்கும்போது திராவிடம் என்பதே தமிழ்ப் பகைவர் பேச்சாக இருக்குமோ என்ற ஐயம் உண்டாகிறது. 
22. 10 ஆண்டுகளாக திராவிடப் பேச்சு, பிரச்சாரம், பத்திரிகை, கிளை அமைப்பு, பண வசூல், சுற்றுப் பிராயணம், கமிட்டி, தொண்டர்கள், உண்டியல்கள், ஆகிய 9-உம் தமிழ்நாட்டில் மட்டுமே நடைபெற்று வருவதால் அதை தமிழ்நாட்டுக் கழகம் எனச் சொன்னாலும் சொல்லலாமே ஒழிய திராவிட நாட்டுக் கழகம் எனச் சொல்லுவது உண்மைக்கு மாறானதாகும். 
23. தமிழ் நாட்டிற்குள்ளாக திராவிடம் பேசுவது, தமிழ் இளைஞர்களின் தமிழ்ப்பற்றை, தமிழ் நாட்டுப் பற்றை, வீர உணர்ச்சியை வேண்டுமென்றே வீணாக்கி, பாழ்படுத்துவதாக இருந்து வரும். 
24. காலம் செல்லச் செல்ல திராவிட நாடுகளுக்கும் சென்று, அங்கும் பிரச்சாரம் செய்து அவர்களுக்கும் உணர்ச்சி ஊட்டி விடலாம் என்று எவரேனும் கூறுவதானால், அவ்வாறு கூறுகிற அவர் தமது ஆற்றலைத் தவறாகக் கருதுகிறவர் என முடிவு கட்டி விட வேண்டும். 
25. திராவிடர் எவரும் விரும்பாத திராவிட நாட்டை, திராவிடர் எவரும் உறுப்பினரில்லாத திராவிடர் கழகத்தை, திராவிடர் எவரும் ஒப்புக் கொள்ளாத திராவிடத் தலைவர், அரசியல் கழகமல்லாத ஒரு கழகத்தைக் கொண்டு  “அடைந்தே தீருவேன் திராவிட நாடு”  என்றால் அது இல்லாத ஊருக்கு, போகாத பாதையை, தெரியாத மனிதனிடம், புரியாத விதமாகப் பேசிக் கொண்டிருப்பது போலவே இருக்கும்.
26. அப்படியே பிரிவதாக இருந்தாலும் திராவிடக் கூட்டாட்சியில் தமிழ் மொழி அரசியல் மொழியாக இருக்குமா? அதனை திராவிட நாட்டார்கள் அனைவரும் ஒப்புவரா? என்பதையும் ஒப்பிட்டுப் பார்ப்பது நலமாகும்.
27. அப்படியே ஒப்பினாலும் கூட்டாட்சியில் உறுப்பினராக இருக்கும் வடமொழிப்பற்றும், வடசார்பும் உள்ள ஆந்திரர், மலையாளி, கன்னடியர், துளுவர் ஆகிய நால்வருக்கும் எதிராக தமிழ் மொழிப்பற்றும் சார்பும் உள்ள ஒருவன் இருந்து தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் நலன்களை வளர்க்க முடியுமா? முடியாவிட்டாலும் பாதுகாக்கவாவது முடியுமா? என்பதும் எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்றாகும்- 
28. அவ்விதமே முடிந்தாலும் அந்தக் கூட்டாட்சிக்கு உறுப்பினனாக தமிழ் நாட்டின் தலைவனைத் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டாமா? தேர்ந்தெடுக்க தமிழ்நாடு முழுவதும் அடங்கிய ஓர் அமைப்பு வேண்டாமா? அத்தகைய அமைப்பு திராவிடத் தலைவருக்கு போட்டியாகவும், அமைப்பை அமைக்கத் தொண்டு செய்பவர்கள் பித்தலாட்டக்காரர்களாக, அயோக்கியர்களாகத் தோன்றவும் காரணம் என்ன? என்பவைகள் அரசியல் அறிஞர்களால் ஆராய வேண்டியவைகளாகும்.
29. தமிழ் வாழ்க என்று கூறி தமிழ்நாடு தமிழருக்கே என அலறி தமிழர் கழகத்தைத் தோற்றுவித்துத் தமிழர் மாநாடுகளைக் கூட்டி, தமிழ்க்கொடியை உயர்த்தி, இந்தி எதிர்ப்பை நடத்தி, பண முடிப்புகளைப் பெற்றுக் கொண்ட பிறகு, அவைகளை அடியோடு ஒழித்துவிட்ட திராவிடம் வளர்க எனக் கூறி, திராவிட நாடு திராவிடருக்கே என அலறி திராவிட கழகத்தைத் தோற்றுவித்து, திராவிட மாநாடுகளை நடத்தி, திராவிடக் கொடிகளை உயர்த்தி திராவிடர்க்கு போராட வேண்டிய அவசியமும், அவசரமும் என்ன? என்பதற்கு திராவிடம் இதுவரை பதிற்கூறவேயில்லை. தமிழ் வேறு, திராவிடம் வேறு என்பதற்கும், இரண்டும் ஒன்றல்ல என்பதற்கும் இதுவும் போதுமான சான்றாகும்.
30. தமிழ்ப் பெரியார் என்றும், தமிழ்த் தாத்தா என்றும், தமிழ்நாட்டுத் தலைவர் என்றும், தமிழ்நாட்டு தனிப்பெருந்தலைவர் என்றும், தமிழ் மக்கள் அனைவரும் இந்தி எதிர்ப்புக் காலத்தில் அழைத்தும், சொல்லியும் வரலாற்றில் எழுதியும் கூட அவர் தன்னை கன்னடியர் என்று நினைக்கிற நினைப்பும், முனைப்புமே இம்மாற்றத்திற்குத் காரணம் என்பதை அவர் இன்றுவரை மறுக்க முன்வராததால், அது உறுதி செய்யப்பட  வேண்டியதேயாகும். 
இதுகாறுங் கூறியவைகளைக் கண்டு
தமிழ் எது?  திராவிடம் எது?
தமிழர் யார்?  திராவிடர் யார்?
தமிழ்நாடு எது? திராவிட நாடு எது?
தமிழ் மக்களுக்கு வேண்டுவது எது? 
என்ற இவையும், இவை போன்ற பிறவும் ஒருவாறு விளங்கியிருக்கும் என எண்ணி உண்மையை விளக்க இவை போதும் என நம்பி இத்தோடு நிறுத்துகிறோம். 
நன்றி:”,தமிழர் நாடு” இதழ்,  1 மார்கழி 1980 (16.12.1949)
wp-1496589811998.jpg?w=680
பேரா.கோ.வீரமணி தொகுத்த “முத்தமிழ்க் காவலர்” கி.ஆ.பெ.விசுவநாதம் நூலிருந்து.

https://deventhiran.wordpress.com/2017/06/04/தமிழ்-எது-திராவிடம்-எதுத/

  • கருத்துக்கள உறவுகள்
On 8/9/2021 at 23:17, நந்தன் said:

ஏன்யா

ன் ஐ எடுத்துவிட்டால் சிங்களவன்.

தம்பிக்கு எது வசதி?

3 hours ago, nunavilan said:

3500 ஆண்டுகளுக்கு முன்பாக, கைபர் கணவாய் வழிவந்து, பூர்வ குடி நாகரீகங்களை அழித்தொழித்து, பின்னாளிலே கடவுளின் பேயரால், அவர்களை மாட்டு மந்தையாக மாற்றி, அவர்களின் உழைப்பை உறிஞ்சி, வலுவான சித்தாந்த கட்டமைப்புடன் (RSS) இயங்கிவரும், இன்றுவரை இந்தியாவை முழுமையாக ஆளும் அவர்களிறிற்கு எதிரான சித்தாந்தத்தை, பண்பாட்டை, மக்கள் திரளை "திராவிடம்" எனக் குறிப்பர்.... திராவிடம் என்ற சொல் பிடிக்கவில்லையா, அப்படியென்றால் வேறு சொல்லைக் கண்டுபிடியுங்கள் (eg. XYZ)....

நாம் தமிழ் மொழிவழி தேசிய இனத்தைச் (ethnic group) சேர்ந்தவர்கள்... நாம் XYZ (திராவிடம் - பிடிக்காத சொல்) மரபுவழி (race) இனத்தைச் சேர்ந்தவர்கள்... இதில் எந்தக் குழப்பமும் இல்லை... இல்லை நான் ஆரிய இனம் அல்லது ஆரிய அடிமை என்றால் அது உங்கள் தனிப்பட்ட விருப்பம்...

பி.கு: நீங்கள் இலங்கை சித்தாந்தங்களை, இந்தியாவிற்கு பொருத்திப் பார்த்தால், எந்த பயனும் இல... இலங்கை, இந்தியா - முற்றிலும் வேறான சித்தாந்த அடித்தளங்களை கொண்டவை...

Edited by பராபரன்
**** - தவிர்க்கவேண்டிய சொல்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

முரண்பாடு எங்கே ஆரம்பிக்கிறது என்றால், இதுகாறும் இருந்து வந்த திராவிட-அடையாள அரசியலில் இருந்து தமிழ்-அடையாள அரசியலுக்கு மாறும் போது, அந்த அடையாள அரசியலை எப்படி வரையறுக்கிறோம், யாரை உள்வாங்குகிறோம், யாரை வெளி தள்ளுகிறோம், யாரை எதிரிகளாக முன்னிறுத்துகிறோம் என்பதில்தான்.

திராவிட அரசியலின் இயற்கையான தொடரியாக (natural successor) தமிழ் தேசிய அரசியலை முன்னிறுத்தி, திராவிட அரசியலை தமிழ் தேசிய அரசியலாம் பிரதியீடு செய்யும் போக்கை அதிகம் பெயர் எதிர்க்கப்போவதில்லை.

மாறாக, இதுவரை திராவிட அரசியலின் கீழ் ஒன்று பட்டவர்களை இரு கூறாக்கி, சாதிய அடிப்படையில் பிரித்து, எதிரெதிர் துருவங்களாக்கி, ஒரு சாராரை எதிரிகள் என்று கற்பிதம் கட்டுவதும்,

பார்ப்பனர்களை தமிழர்கள் என அங்கீகரிப்பதும்,

பெரியார் மீது அவதூறு பரப்புவதும், இருட்டிப்பு, புரட்டு செய்வதும்,

பெரியார் நீக்க அரசியல் செய்ய விழைவதும்,

இப்போ இருக்கின்ற சனாதன எதிர்ப்பு கொள்கையான திராவிடத்தை உடைத்து ஒரு வெற்றிடத்தை உருவாக்கி அதில் சனாதனைத்தை புகுத்தி விடும் உத்தியே அன்றி வேறில்லை.

இது சீமானால் மட்டும் அல்ல, மபோ பாண்டியன் போன்றோராலும் நடத்தப்படுகிறது.

நாம் தமிழரின் 10 வருட முயற்சிக்கு, திராவிட எதிர்ப்பு அரசியலுக்கு பலனாக, தமிழ் தேசியத்துக்கு ஒரு சட்டசபை ஆசனம் கூட இதுவரை இல்லை.

ஆனால் பிஜேபிக்கு?

திராவிட அரசியல் ஒன்றுபடுத்தி இருந்தால் இன்று சாதியக் கொலைகளோ, ஆணவப்படுகொலைகளோ நடக்குமா?!

பிஜேபியை வளர்த்து விட்டது யார் என்று தெரியாமல் இருக்காதே?!
இப்போதும் அவர்களோடு திரைமறைவு சமரசங்களை செய்வது யார்? ராகவனை கைது செய்ய யார் தடை? ஜோதிமணி பா.உ வின் முறைப்பாட்டுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பராபரன் said:

திராவிடம் என்ற சொல் பிடிக்கவில்லையா, அப்படியென்றால் வேறு சொல்லைக் கண்டுபிடியுங்கள் (eg. XYZ)....

XYZ, அந்த வேறு சொல்தான் "தமிழர்"

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

திராவிட அரசியல் ஒன்றுபடுத்தி இருந்தால் இன்று சாதியக் கொலைகளோ, ஆணவப்படுகொலைகளோ நடக்குமா?!

பிஜேபியை வளர்த்து விட்டது யார் என்று தெரியாமல் இருக்காதே?!
இப்போதும் அவர்களோடு திரைமறைவு சமரசங்களை செய்வது யார்? ராகவனை கைது செய்ய யார் தடை? ஜோதிமணி பா.உ வின் முறைப்பாட்டுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

முன்பே எழுதி விட்டேன், 

சாதியை தமிழ்நாட்டில் அல்ல ஈழத்திலும் ஒழிக்க (eradicate) பண்ண முடியாது. ஆனால் சாதிய ஒடுக்குமுறையை முடிந்தளவு குறைக்கலாம் - அதில்தான் திராவிட இயக்கங்களின் ஏனைய மாநிலங்களை விட மேம்பட்ட இட ஒதுக்கீடு பிரதான பாகம் வகிக்கிறது.

அதேபோல் பிஜேபிக்கு முதலில் இடம் கொடுத்த தவறை செய்தது கருணாநிதி - ஆனால் இது ஒரு அரசியல்வாதியின், கட்சியின் தவறு. சுமந்திரன் விடும் பிழையை வைத்து தமிழ் தேசிய அரசியல் இனவாத கைக்கூலி என சொல்ல முடியாதுதானே?

விஜய லட்சுமி புகாரின் மீதும்தான் இன்னும் நடவடிக்கை இல்லை. இராகவன் விசயத்திலாவது அந்த பெண் வெளிவரவில்லை. இதெல்லாம் சம்பந்தபட்ட நபர்கள் ஸ்டாலினுடன் போடும் டீலை பொறுத்து இருக்கலாம். இதுகெல்லாம் சித்தாந்தந்தை குறை சொல்ல முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

திராவிட சித்தாந்தம் தவறு அல்ல.... மிக சிறப்பானது.

ஆனால் அது கருணாநிதி என்னும் பக்கா திருடர், தனது குடும்பத்தினை வளம் படுத்த பாவித்ததால், தொடர்ந்து அவரது குடும்பம் இன்னும் அதே நோக்கத்தில் தமிழகத்தில் பாவிப்பதால், தடுமாறுகிறது.

உதயநிதியை, இன்பநிதியை தூக்கிப்பிடிக்க திராவிடம், பயன்படுத்தப்படுவதால், வேறுவகையில் எதிர்க்கப்படுகின்றது.

அதுவே திராவிடத்தின் துயரம்.

அதுசரி... மருதர் ஒரு விடயம் சொல்லி இருந்தார். விசயலட்சுமி விடயமாக...... சட்டபூர்வ நிலைமை தெரிந்தும், தெரியாதது போல இங்கேஎழுதுகிறார்கள் என்று.

கர்நாடகத்தில் முகாம் போட்டு, அக்கா சிகிச்சைக்கு, பணம் தருமாறு வீடியோ போடும் அந்த அம்மணி, ஒரு பிளாக் மெயில் பார்ட்டி.

அவரது கூச்சல்கள் அரசியல் ரீதியான நோக்கம் மட்டுமே கொண்டது. கையில் பசை இல்லாதவர்  என்று கழட்டி விடப்பட்ட சீமானுக்கு பின்னர் சுருஜன் லோகேஷ் என்பவருடன் நிச்சயதார்த்தம் வரை போனதால், அவரது சீமான், மேலான கலியாணம் கட்டுவதாக சொல்லி ஏமாத்தினார் குற்ற சாட்டு கோட்டில் நிக்காது, போலீஸக்கும் போகமாட்டார்.... காரணம் அவருக்கே சிக்கல். போலீசுக்கு போகாமல், முறைப்பாடு செய்யாமல், ஸ்ராலின் எப்படி, என்ன நடவடிக்கை எடுக்க முடியும் ?

இது ஸ்டாலினுக்கும் தெரியும். மேலும் அந்த பெண்ணை அண்டினால், அண்டியவர்களை வீடியோ போட்டு பணம் கேட்டு அதகளம் பண்ணுவார் என்பதால், யாரும் நெருங்க மாட்டார்கள்.

ரஜனி அரசியலுக்கு வருவார் என்று, சீமானை திட்டுமாறு அவரை தூண்டி விட்டார் ராகவா லாரன்ஸ். பிறகு பார்த்தால், அண்ணா, நீங்க கொடுத்த ஒரு லட்சம் ரூபா செக், பணம் இல்லாம திரும்பிரிச்சு.... கஷ்ட்டமா இருக்குது.... பணத்தை அனுப்பி வைத்து செக்கை வாங்கிக்குங்க என்று வீடியோ போடுது...

கேள்விப்பட்டு அரண்டு போன ரஜனி.... இப்படி கேவலமான வேலை பார்த்து அரசியல் செய்ய வேண்டிய தேவை இல்லை என்று லாரண்சுக்கு டோஸ் விட்டாராம்....

பதறி அடித்து ஆளை அனுப்பி, காசை கொடுத்து, செக்கை வாங்கி... உன் சங்காதமே வேணாம் தாயி என்று ஓடியே விட்டார்....

ஆகவே, திமுக கூட்டம் அந்த அம்மணியை நம்பி நடவடிக்கை எடுக்கும் என்று நினைப்பது.... வேலில போற ஓணானை, வேட்டிக்குள் விட்ட கதை தான். 😁

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

சாதியை தமிழ்நாட்டில் அல்ல ஈழத்திலும் ஒழிக்க (eradicate) பண்ண முடியாது. ஆனால் சாதிய ஒடுக்குமுறையை முடிந்தளவு குறைக்கலாம் - அதில்தான் திராவிட இயக்கங்களின் ஏனைய மாநிலங்களை விட மேம்பட்ட இட ஒதுக்கீடு பிரதான பாகம் வகிக்கிறது.

சாதியை ஈழத்தில் ஒழிக்கலாம்.ஏனெனில் அது சாத்தியமாகும் என நிரூபிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அதை கனவிலும் நினைக்க கூடாது. ஏனென்றால்  அங்கு அரசியல் கட்சிகள் இல்லை மாறாக எல்லாமே சாதீய கட்சிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சாதியை ஈழத்தில் ஒழிக்கலாம்.ஏனெனில் அது சாத்தியமாகும் என நிரூபிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அதை கனவிலும் நினைக்க கூடாது. ஏனென்றால்  அங்கு அரசியல் கட்சிகள் இல்லை மாறாக எல்லாமே சாதீய கட்சிகள்.

அண்மைய ஸ்ராலின் பித்தலாட்டம்; திராவிட சிறுத்தை திருமாவளவன், தமிழர் தலைவர் வெற்றுவேல் சா..ச.... முத்துவேல் கருணாநிதி....  

கட்டுமரம் மக்களை சுத்தியகாலம் வேறு. இன்றைய நிலையில் அது வேலைக்காகாது என்று ஸ்ராலின் விரைவாக புரிவார்.

இன்னும் ஒரு விடயம்; வைகைபுயல் வடிவேலுவை மீண்டும் இறக்குவது, உதயநிதி .... அவருடன் படத்தில் நடிக்க வைத்து ஓடாத அவர் படங்களை ஓடப்பண்ணி, எம்ஜியார் ஸ்ரைலில முதல்வராக....

வடிவேலுவுக்காக, சில அரசியல் பயமுறுத்தல் செய்தே, ரெட் காட் நீக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் சங்கர் இழந்த பணம் குறித்து கேட்ட போது, வாயால வடைசுடும் வடிவேலு, அதெல்லாம் பொய்யுங்க, பத்து கோடி என்ன, நூறு கோடி நஸ்டம் என்று சொல்லலாம்.... பார்தீகளா என்கிறார்.... ஸ்ராலின் அய்யாவை பார்த நேரத்திலிருந்து, நம்ம லைப் பிரைட் ஆயிரிச்சு என்கிறார் வடிவேலர்....

இப்படி கட்டப்பஞ்சாயத்து ....செய்து கொண்டே, திராவிடம் பேசினால்... எப்படி ?

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.