Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில்.... திருகுவலையால், கணவனை... அடித்துக் கொன்ற மனைவி !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

அது திருகுவலை இல்லை துருவுபலகை.

தமிழை அரைகுறை செய்தியாளர் மற்றும் இணையத்தளங்களில் இருந்து ஆண்டவா நீதான் காப்பாற்ற வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் எங்கட பக்கத்தில் திருவலை பலகை என அழைப்போம். துருவுபலகை  மருவி திருவலை பலகை ஆகியிருக்க கூடும்.

  • Replies 58
  • Views 5.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஊரிலையும் இஞ்சையும் திருவலை எண்டுதான் சொல்லி பழக்கம்.....வாழ்க்கைப்பட்டு போன இடத்திலையும் திருவலைதான்...:cool:

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, zuma said:

யாழ்ப்பாணத்தில் எங்கட பக்கத்தில் திருவலை பலகை என அழைப்போம். துருவுபலகை  மருவி திருவலை பலகை ஆகியிருக்க கூடும்.

நாங்களும் திருவலை எண்டு சொல்றனாங்கள். ஆனால் செய்தி என்று எழுதுதும் போது மரூஉ சொற்கள் தவிர்க்கப்படல் வேண்டும். 

இப்பிடி சில சொற்கள் உண்டு: கருவப்பிலை, செந்துருக்கம், வாத்தி, பருத்துறை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்த செய்தியை வாசித்தபின்.. எங்கட ஊட்ல இது👆 ரெண்டும் இல்லை என்பதால் சந்தோசமாக இருந்தாலும்.. வீட்டுக்கு பின்னாடி தோட்டத்துல இது👇அதிகமாக இருப்பதால்… யோசனையாக இருக்கின்றது..🙆‍♂️

spacer.png

ஓணாண்டியாரே... இது, திருகுவலையை விட... மோசமான கல்லாக இருக்கே.
உருட்டி விட்டால்... "போஸ்ட் மாட்டத்துக்கு" கூட, பாடி  கிடைக்காதே.  🤣

15 hours ago, Nathamuni said:

அச்சுவேலி, மயிலங்காட்டுப்பக்கம், தலை வைச்சே படுக்கப்படாது....🤨

நாதம்ஸ்... அச்சுவேலி மயிலங்காட்டிலை, 
நல்ல ஒரு வாழைத் தோட்டம் செய்யக் கூடிய காணி 
மலிவாக வந்திருக்குது, வாங்குறீங்களா?   😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் கணவனை அடித்து கொலை செய்த மனைவி அளித்த வாக்குமூலம்

யாழ்ப்பாணம்- அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற படுகொலை தொடர்பாக யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.பீற்றர்போல், நேரடியாக சென்று விசாரணைகளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மேற்கொண்டார்.

நேற்று இரவு, மனைவியால் திருவலகை மூலம் அடித்துகொலை செய்யப்பட்டவரின் சடலத்தை நீதவான் பார்வையிட்டதுடன், விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலத்தை பிரேத ப‌ரிசோதனை‌க்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் துரைராசா செல்வக்குமார் (வயது-32) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தவராவார்.

இதேவேளை கணவன் தினமும் போதையில் வந்து தன்னுடன் தர்க்கப்பட்டு, தன்னை தாக்குவதாகவும் நேற்றைய தினமும் அவ்வாறு செய்தமையினால், ஆத்திரத்தில கையில் அகப்பட்ட திருகுவளையால் திருப்பி தாக்கியதில் அவர் உயிரிழந்துவிட்டார் என பொலிஸாரிடம் அவரது மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார்.

https://athavannews.com/2021/1240096

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

நெடுக்கர் சொன்ன சமூக நல ஆய்வுகள்,சமூக நல திட்டங்கள்,சமூக நல கல்விகள் என புலம்பெயர் நாடுகளில் பிள்ளைகளுக்கு ஒழுங்காக சொல்லி கொடுக்கின்றார்கள். பல்கலைகழக விரிவுரையாளர்கள் சமூக நலன் பற்றி ஆராய்ச்சி செய்கின்றார்கள்.பெறு பேறுகளை அரசுக்கு சமர்ப்பிக்கின்றார்கள். அதை அரசுகளும்  முடிந்தவரை செவிமடுத்து முன்னெடுத்து செல்கின்றது.

இங்கு ஜேர்மனியில் கோரோனா காலங்களில் பல்கலைகழக பேராசிரியர்கள் மற்றும் வைரஸ் சம்பந்தப்பட்ட  பல்கலைகழக ஆராய்சியாளர்களின் அறிக்கைகளை வைத்தே பல முடிவுகள் எடுக்கப்பட்டது.

நிற்க...

பல இடங்களில் உலக நடப்புகளை மட்டுமே இங்கு பகிர்கின்றோம். அதை சொல்ல முனையும் போது.......இல்லை நீ வா.....வந்து செய்து காட்டு என்ற மனப்பான்மையே பல இடங்களில் காணக்கூடியதாக உள்ளது.புத்தக படிப்பை விட அனுபவம் மேலானது.போலி வாழ்க்கையை விட சொந்த மண் வாழ்க்கை அமைதியானது.

தப்பியோடி .....தப்பியோடிய இடத்தில் சந்ததிகளை வளர்த்து விட்டோம். அந்த அனுபவத்தில் சொல்கின்றோம்.
சொந்த நாடு. சொந்த மண். சொந்த மொழி. சொர்க்கம்

இலங்கைக்கும் வெளிநாட்டின் ஆராய்ச்சிகளுக்கும் தூரம் அங்கு அரசு செவிமடுக்கும் இஞ்ச அரசு செவி மூடிவிட்டு வேலையை பார்க்கும்
அதுமட்டும் இல்லாமல் அறிவுரை சொன்னா யார் கேட்கிறாங்க?? அறிவுரை எல்லோராலும் சொல்ல முடியும் ஆனால் இங்க கடைபிடிக்க எவரும் இல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nedukkalapoovan said:

ஊரில என்ன நடக்குது.. மகன் தந்தையின் கண்ணை நோண்டி எடுக்கிறான்.. மனைவி கணவனை திருகுவலையால் அடிச்சு கொல்லுறாங்க.. கணவன் சந்தேகம் மனைவி தற்கொலை..  கள்ளன் என்று சொன்னதால்.. சிறுவன் தூக்கிட்டு தற்கொலை.. யாழ் மருத்துவக் கல்லூரி மாணவி.. படிப்புச் சுமையால் தற்கொலை..????!

புரியல்ல.. எமது சமூகம் எங்கு நோக்கிப் பயணிக்கிறது.. இந்தச் சமூகத்தை வழிநடத்த வேண்டிய சமூக ஆர்வலர்களும்.. கல்விச் சமூகமும் என்ன செய்துக்கிட்டு இருக்குது..??!

ஏன் யாழ் வவுனியா கிழக்குப் பல்கலைக்கழகங்கள்.. இந்த சமூக நோய்களைப் பற்றி ஆய்வதில்லை.. அறிவுரைகளை.. செயற்திட்டங்களை வரைவதோ வகுப்பதோ இல்லை...?!

கண்டி மாவட்டம், பொல்காஹவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெட்டிகும்புர பிரதேசத்தில் குடும்பத்தகராறு காரணமாக தனது கணவரை மனைவி கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் மெட்டிகும்புர - கெந்தேஹேன பிரதேச்தைச் சேர்ந்த 42 வயதுடை குடும்பஸ்தரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த நபர் குருநாகல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இந்த கொலையுடன் தொடர்புடைய உயிரிழந்த நபரின் மனைவியைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில் பொல்காஹவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://tamilwin.com/article/wife-killed-husband-1632126581

லங்காவில் மனைவிமார் கொலைவெறியில் திரிகினம் போல் உள்ளது .🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

லங்காவில் மனைவிமார் கொலைவெறியில் திரிகினம் போல் உள்ளது .🤣

இந்த செய்திகளை எல்லாம்… இங்குள்ள மனைவிமாரின் கண்களில் படாமல் பாதுகாப்பதே   எங்கள் உயிருக்கு உத்தரவாதம். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

லொக்டவுணால வாற பிரச்சணைகள்....

மனிசிக்காரி ஆய்கினை தாங்கேலாம, ரயில், பஸ் இல்லாத நிலையில் இத்தாலில ஒருத்தர் 400 மைல் நடந்தே தாய், தகப்பன் வீடு போனார்.

பிரித்தானியாவில் ஒருத்தர், காருக்குள் படுத்துக் கிடந்தாராம்....

இலங்கையில, காசும் இல்லை, சாப்பாடும் இல்லை. சும்மா இருந்தாலும் பரவாயில்லை...... அடுத்த பிள்ளைக்கு அலுவல் பார்க்க முயன்றாலும்......

......பிரச்சணை தானே....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கைப் பாத்தால் வெளியல படுக்கிறது தான் உசிதம் போல.🤤

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 19/9/2021 at 14:25, Nathamuni said:

அச்சுவேலி, மயிலங்காட்டுப்பக்கம், தலை வைச்சே படுக்கப்படாது....🤨

இஞ்சையொரு அச்சுவேலி குடும்பம் இருக்குது....வாறகிழமை மத்தியான சாப்பாட்டுக்கு வேறை கூப்பிட்டிருக்கினம்.
போகவோ விடவோ எண்டு யோசிக்கிறன்.இல்லாட்டி கைகாவலாய் வில்லுக்கத்தி கொண்டு போகலாமோ எண்டும் யோசிக்கிறன்.....😎

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

இஞ்சையொரு அச்சுவேலி குடும்பம் இருக்குது....வாறகிழமை மத்தியான சாப்பாட்டுக்கு வேறை கூப்பிட்டிருக்கினம்.
போகவோ விடவோ எண்டு யோசிக்கிறன்.இல்லாட்டி கைகாவலாய் வில்லுக்கத்தி கொண்டு போகலாமோ எண்டும் யோசிக்கிறன்.....😎

வைப்புசெப்புகளை எங்களுக்கு சொல்லிப் போட்டு போங்கோ.

வந்தால் சந்திப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

இஞ்சையொரு அச்சுவேலி குடும்பம் இருக்குது....வாறகிழமை மத்தியான சாப்பாட்டுக்கு வேறை கூப்பிட்டிருக்கினம்.
போகவோ விடவோ எண்டு யோசிக்கிறன்.இல்லாட்டி கைகாவலாய் வில்லுக்கத்தி கொண்டு போகலாமோ எண்டும் யோசிக்கிறன்.....😎

திருக்கை வாள் தான் திறம்...

போனமா, சாப்பிட்டமா.... அருமை, அருமை எணடு (பொய்யாவது) சொல்லிப்போட்டு ஓடிவந்திருங்கோ....ஒண்டும் தேவைப்படாது.

கூப்பிட்ட இடத்து.... அத்தாரைப் பத்தி, குறையள் வந்தால், சிரிப்பு மட்டும் தான்... வாய் திறவாதீங்கோ...

வீட்டிலையும் பிரச்சணையாப் போயிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இல்லாட்டி கைகாவலாய் வில்லுக்கத்தி கொண்டு போகலாமோ எண்டும் யோசிக்கிறன்.....😎

பொல்லுக்குடுத்து அடிவாங்கின மாதிரி ஆகப்போகுது!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இஞ்சையொரு அச்சுவேலி குடும்பம் இருக்குது....வாறகிழமை மத்தியான சாப்பாட்டுக்கு வேறை கூப்பிட்டிருக்கினம்.
போகவோ விடவோ எண்டு யோசிக்கிறன்.இல்லாட்டி கைகாவலாய் வில்லுக்கத்தி கொண்டு போகலாமோ எண்டும் யோசிக்கிறன்.....😎

கவனம் வில்லுகத்தி திருவலைக்குள் சிக்கி சின்னாபின்னமாயிடும்......அவங்கள் திருவலையால சிராய்ச்சால் ஒன்பது இழையோடு போயிடும்.....நீங்கள் கத்தியை கச்சிதமாய் பாவித்தால் ஒன்பது கம்பி எண்ணிக்கொண்டிருக்க வேண்டி வந்திடும்.......!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இஞ்சையொரு அச்சுவேலி குடும்பம் இருக்குது....வாறகிழமை மத்தியான சாப்பாட்டுக்கு வேறை கூப்பிட்டிருக்கினம்.
போகவோ விடவோ எண்டு யோசிக்கிறன்.இல்லாட்டி கைகாவலாய் வில்லுக்கத்தி கொண்டு போகலாமோ எண்டும் யோசிக்கிறன்.....😎

அண்ணை... எதுக்கும் நீங்கள் சனிக்கிழமை, நவக்கிரகத்துக்கு... 
எள்ளெண்ணெய் எரிச்சுப் போட்டு, சாப்பிட போங்கோ ஒண்டும் நடக்காது.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்

பூம்புகார் கொலை - சந்தேகநபர்கள் இருவரும் விளக்கமறியலில்!

அரியாலை பூம்புகார் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற குடும்பத்தலைவர் கொலையுடன் தொடர்புடைய உயிரிழந்தவரின் மனைவி மற்றும் மஉள்ளிட்ட இருவரையும் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. 

அச்சுவேலி தெற்கைச் சேர்ந்தவரும் பூம்புகாரில் வசித்து வருபவருமான துரைராசா செல்வக்குமார் (வயது-32) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார்.

அவர் தேங்காய் துருவல் கட்டையால் கடுமையாகத் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொல்லப்பட்டவரின் மனைவியான 28 வயதுடைய பெண் மற்றும் அவருடன் தொடர்பை வைத்திருந்த 28 வயதுடைய ஆண் ஒருவரும் யாழ்ப்பாணம் குற்றப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று(20) முற்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிவான் இருவரையும் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

தகாத உறவை பேணிய நபரை காப்பாற்ற கொல்லப்பட்டவரின் மனைவி மாறுபட்ட வாக்குமூலத்தை அளித்துள்ளார். 

கொல்லப்பட்டவரின் மனைவியுடன்  தொடர்புடையவரும் கொலையுடன் தொடர்புள்ளமை ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது.

அதனை முதலாவது சந்தேக நபரான கொல்லப்பட்டவரின் மனைவியும் தனது வாக்குமூலத்தில் ஏற்றுக்கொண்டிருந்தார். எனினும் பின்னர் தனக்கும் இரண்டாவது சந்தேக நபருக்கும் தொடர்புள்ளமை உண்மை, ஆனால் கொலையை தான் மட்டுமே செய்ததாகத் தெரிவித்தார்.

பின்னர் இரண்டாவது சந்தேக நபர் காலினால் தனது கணவனின் கழுத்தை பிடித்து வைத்திருந்த போது தான் தேங்காய் துருவல் கட்டையால் தாக்கியதாக ஒத்துக்கொண்டார்.

இதேவேளை, இரண்டாவது சந்தேக நபருக்கு 40இற்கு மேற்பட்ட கொள்ளை, திருட்டு மற்றும் வன்புணர்வு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டது

பூம்புகார் கொலை - சந்தேகநபர்கள் இருவரும் விளக்கமறியலில்! - Tamilnews1

  • கருத்துக்கள உறவுகள்

இதென்னடாப்பா பழி ஒரிடம் பாவம் ஓரிடம் எண்ட கதையா கிடக்கு🤣.

செத்த மனுசன் தான் அச்சுவேலி.

கொலை செய்த மனைவி மயிலங்காடு.

உந்த சுன்னாகம் கே கே எஸ் ரோட்டில மருதனாமடப்பக்கம் இருந்து போகேக்க, வலப்பக்கம் திரும்பி புத்தூர் ரோட்டில, நேர விட்டா, ஸ்டேசன் ரோட் வரும். அதையும் தாண்டி போன வாற ஊர்மனைதான் மயிலங்காடு. உதெங்க இருக்கு, அச்சுவேலி எங்க இருக்கு🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

பூம்புகார் கொலை - சந்தேகநபர்கள் இருவரும் விளக்கமறியலில்!

அரியாலை பூம்புகார் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற குடும்பத்தலைவர் கொலையுடன் தொடர்புடைய உயிரிழந்தவரின் மனைவி மற்றும் மஉள்ளிட்ட இருவரையும் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. 

அச்சுவேலி தெற்கைச் சேர்ந்தவரும் பூம்புகாரில் வசித்து வருபவருமான துரைராசா செல்வக்குமார் (வயது-32) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார்.

அவர் தேங்காய் துருவல் கட்டையால் கடுமையாகத் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொல்லப்பட்டவரின் மனைவியான 28 வயதுடைய பெண் மற்றும் அவருடன் தொடர்பை வைத்திருந்த 28 வயதுடைய ஆண் ஒருவரும் யாழ்ப்பாணம் குற்றப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று(20) முற்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிவான் இருவரையும் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

தகாத உறவை பேணிய நபரை காப்பாற்ற கொல்லப்பட்டவரின் மனைவி மாறுபட்ட வாக்குமூலத்தை அளித்துள்ளார். 

கொல்லப்பட்டவரின் மனைவியுடன்  தொடர்புடையவரும் கொலையுடன் தொடர்புள்ளமை ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது.

அதனை முதலாவது சந்தேக நபரான கொல்லப்பட்டவரின் மனைவியும் தனது வாக்குமூலத்தில் ஏற்றுக்கொண்டிருந்தார். எனினும் பின்னர் தனக்கும் இரண்டாவது சந்தேக நபருக்கும் தொடர்புள்ளமை உண்மை, ஆனால் கொலையை தான் மட்டுமே செய்ததாகத் தெரிவித்தார்.

பின்னர் இரண்டாவது சந்தேக நபர் காலினால் தனது கணவனின் கழுத்தை பிடித்து வைத்திருந்த போது தான் தேங்காய் துருவல் கட்டையால் தாக்கியதாக ஒத்துக்கொண்டார்.

இதேவேளை, இரண்டாவது சந்தேக நபருக்கு 40இற்கு மேற்பட்ட கொள்ளை, திருட்டு மற்றும் வன்புணர்வு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டது

பூம்புகார் கொலை - சந்தேகநபர்கள் இருவரும் விளக்கமறியலில்! - Tamilnews1

அதனை முதலாவது சந்தேக நபரான கொல்லப்பட்டவரின் மனைவியும் தனது வாக்குமூலத்தில் ஏற்றுக்கொண்டிருந்தார். எனினும் பின்னர் தனக்கும் இரண்டாவது சந்தேக நபருக்கும் தொடர்புள்ளமை உண்மை, ஆனால் கொலையை தான் மட்டுமே செய்ததாகத் தெரிவித்தார்.

பின்னர் இரண்டாவது சந்தேக நபர் காலினால் தனது கணவனின் கழுத்தை பிடித்து வைத்திருந்த போது தான் தேங்காய் துருவல் கட்டையால் தாக்கியதாக ஒத்துக்கொண்டார்.

but உங்க நேர்மை பிடிச்சிருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

புருசனை கொல்ற அளவுக்கு கள்ளக் காதல் சுதி ஏத்தியிருக்கு. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, புலவர் said:

அதனை முதலாவது சந்தேக நபரான கொல்லப்பட்டவரின் மனைவியும் தனது வாக்குமூலத்தில் ஏற்றுக்கொண்டிருந்தார். எனினும் பின்னர் தனக்கும் இரண்டாவது சந்தேக நபருக்கும் தொடர்புள்ளமை உண்மை, ஆனால் கொலையை தான் மட்டுமே செய்ததாகத் தெரிவித்தார்.

பின்னர் இரண்டாவது சந்தேக நபர் காலினால் தனது கணவனின் கழுத்தை பிடித்து வைத்திருந்த போது தான் தேங்காய் துருவல் கட்டையால் தாக்கியதாக ஒத்துக்கொண்டார்.

but உங்க நேர்மை பிடிச்சிருக்கு!

இது கொஞ்சம் பரவாயில்லை புலவர். 50 வருசத்துக்கு முந்தி ஒரு ஐயர் அம்மா கள்ளக்காதலுக்காக புருசன் ஐயர் பெருமானையே அரிவாளால் கழுத்தை அறுத்து கதையை முடிச்சார். கொலைக்கு உதவி செய்தவர் அவவின்ட நியூ டார்லிங்.....எல்லாம் காமம் செய்யும் வேலை. காதலுக்கு கண் இருக்கு. காமத்துக்கு கண் இல்லை.

அந்த சம்பவத்தின் பெயர் இலங்கையில் பிரசித்தி பெற்ற "கோகிலாம்பாள் கொலை வழக்கு".....  சம்பவம் நடந்த இடம் உருத்திரபுரம் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

ஓம். இவர்கள் உண்மையில் நெடுந்தீவு ஐயர் குடும்பம். 

நெடுந்தீவு கிளிநொச்சி தொடர்புகள் பலமானவைதானே.

நெடுந்தீவை சுற்றி பார்க்கும் போது இவர்கள் வீட்டையும் தவறாமல் காட்டுவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, goshan_che said:

ஓம். இவர்கள் உண்மையில் நெடுந்தீவு ஐயர் குடும்பம். 

நெடுந்தீவு கிளிநொச்சி தொடர்புகள் பலமானவைதானே.

நெடுந்தீவை சுற்றி பார்க்கும் போது இவர்கள் வீட்டையும் தவறாமல் காட்டுவார்கள்.

இப்ப என்ன நெடுந்தீவார் சரியில்லை எண்டுறியள்? 😎

இது சும்மா  பகிடிக்காக இன்றைய சமூக/ஊடக  மனப்பான்மையை வைத்து  கேட்கப்பட்டது 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

இப்ப என்ன நெடுந்தீவார் சரியில்லை எண்டுறியள்? 😎

இது சும்மா  பகிடிக்காக இன்றைய சமூக/ஊடக  மனப்பான்மையை வைத்து  கேட்கப்பட்டது 🤣

🤣 அச்சுவேலி முடிஞ்சு இண்டைக்கு நெடுந்தீவோ🤣.

ஆனால் ஒரு இணைய தளம் இவர்கள் காரைநகர் என எழுதியுள்ளது. ஆனால் எனக்கு நல்லா நினைவிருக்கு - இந்த கதையை நான் முதலில் கேட்டதே நெடுந்தீவில் வைத்துத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

🤣 அச்சுவேலி முடிஞ்சு இண்டைக்கு நெடுந்தீவோ🤣.

ஆனால் ஒரு இணைய தளம் இவர்கள் காரைநகர் என எழுதியுள்ளது. ஆனால் எனக்கு நல்லா நினைவிருக்கு - இந்த கதையை நான் முதலில் கேட்டதே நெடுந்தீவில் வைத்துத்தான்.

சாணிக் கும்பிக்குள்ள புதைச்சு வைச்ச கேஸ் தானே?

நெடுந்தீவு தான்…!

படுபாவி கோகிலாம்பாள் படுகொலையைச் செய்தாளே…!

எண்டு ஒரு பாட்டும் இருந்தது…!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.