Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தமிழர்களை... மீளவும் நாட்டுக்கு, அழைப்பதே இலக்கு – ஜனாதிபதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்களை மீளவும் நாட்டுக்கு அழைப்பதே இலக்கு – ஜனாதிபதி!

புலம்பெயர் தமிழர்களை... மீளவும் நாட்டுக்கு, அழைப்பதே இலக்கு – ஜனாதிபதி!

இணக்கப்பாடுகளுடன் எட்டப்படும் இருதரப்புத் தீர்மானங்களை, இரு நாடுகளினது மக்களுக்கு சரியான முறையில் தெளிவுபடுத்தப்பட வேண்டுமென்று, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

நன்மை, தீமைகளை எடுத்துரைத்து, பெரும்பான்மையான மக்களின் விருப்பத்துடன் செயலாற்றுவது அத்தியாவசியம் என்றும், ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் நேற்று(செவ்வாய்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

1971இல், இந்து சமுத்திரத்தை சமாதான வலயமாக மாற்ற வேண்டுமென்று, அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் முன்வைத்த யோசனையைச் செயற்படுத்துவதற்கான பலத்தை அதிகரித்துக்கொள்ள, இந்தியாவின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை உயர் மட்டத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டுமாயின், குறுகிய மற்றும் நீண்டகாலத் தேவைகளின் பொருட்டு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைத் துல்லியமாக அடையாளம் காணவேண்டுமென்பது, இரு தரப்பினதும் கருத்தாக அமைந்திருந்தது.

யாழ்ப்பாணக் கோட்டையை மீட்ட தனது அனுபவத்தை எடுத்துக்கூறிய ஜனாதிபதி, காணாமற்போனோர், யுத்தம் காரணமாக கணவரை இழந்தோர் உள்ளிட்ட யுத்தத்தின் பக்க விளைவுகள் பற்றி, தான் நல்ல புரிதல் கொண்டிருப்பதாக எடுத்துரைத்தார்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பலவீனங்களைப் போன்றே அதில் காணப்படும் பலம் தொடர்பிலும் கண்டறிந்துச் செயற்படுவதன் தேவை தொடர்பிலும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

இலங்கையிலிருந்து சென்ற தமிழ் மக்களை மீண்டும் நாட்டுக்குத் திருப்பியழைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தனது எதிர்பார்ப்பென்று தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களை வெற்றிகரமானதாக்கிக்கொள்ள, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரின் போது உரையாற்றி, புலம்பெயர் தமிழர்களுக்கும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களுக்கும் பகிரங்க அழைப்பு விடுத்ததாகவும், ஹர்ஷ் வர்தன் ஷரிங்லாவிடம் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்காகதத் தனது அரசாங்கம் கடந்த காலங்களில் முன்னெடுத்திருந்த நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்திய ஜனாதிபதி, யுத்த காலத்தின் போது பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்டிருந்த காணிகளில் 90 சதவீதத்துக்கும் மேலானவை, அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன என்றும், ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

அதேபோன்று, காணாமற்போனோரது குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனத் தெரிவித்த ஜனாதிபதி, யுத்தத்தால் ஏற்பட்ட ஏனைய பிரச்சினைகளுக்கும் உடன் தீர்வு வழங்குவதற்கான தேவை தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.

இரு நாடுகளினதும் புவியியல் இருப்பிடம் தொடர்பில் தெளிவான புரிந்துணர்வு இருப்பின், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய எந்தவொரு செயற்பாட்டுக்கும் இலங்கையைப் பயன்படுத்திக்கொள்ள இடமளிக்கப் போவதில்லை என்றும், ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

சீனாவுடனான தொடர்புகள் பற்றி மிகத் தெளிவாக எடுத்துரைத்த ஜனாதிபதி, அது தொடர்பில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாமென்று, இந்திய வெளிவிவகாரச் செயலாளரிடம் தெரிவித்தார்.

இலங்கையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அதனால், இந்திய முதலீட்டாளர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுப்பதாக, ஜனாதிபதி தெரிவித்தார்.

திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் தொடர்பான பிரச்சினையை, இரு நாடுகளுக்கும் பயனுள்ள வகையில் தீர்த்துக்கொள்ளும் பொறுப்பு, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும், ஜனாதிபதி குறிப்பிட்டார்.

https://athavannews.com/2021/1243181

  • Replies 51
  • Views 3k
  • Created
  • Last Reply
7 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையிலிருந்து சென்ற தமிழ் மக்களை மீண்டும் நாட்டுக்குத் திருப்பியழைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தனது எதிர்பார்ப்பென்று தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களை வெற்றிகரமானதாக்கிக்கொள்ள, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரின் போது உரையாற்றி, புலம்பெயர் தமிழர்களுக்கும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களுக்கும் பகிரங்க அழைப்பு விடுத்ததாகவும், ஹர்ஷ் வர்தன் ஷரிங்லாவிடம் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

இது எப்ப நடந்தது ?

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, இணையவன் said:

இது எப்ப நடந்தது ?

https://globaltamilnews.net/2021/166745

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, இணையவன் said:

இது எப்ப நடந்தது ?

கோத்தபாய சந்தித்தது இந்திய வெளிவிவகார செயலாளரை , அவர்கள் பேசிக்கொண்டது புலம் பெயர்ந்து இந்தியாவில் வாழும் ஈழ தமிழர்களைபற்றியதாக இருக்கலாம்.

வேறுநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களை மீள அழைப்பதுபற்றி பேசிக்கொள்ள இவர்கள் இருவருக்கும் எந்த உரிமையுமில்லை,

புலம்பெயர்ந்த தமிழர்களின் மனநிலையை பொறுத்தவரை இவர்கள் இவருக்கும் எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணக் கோட்டையை மீட்ட தனது அனுபவத்தை எடுத்துக்கூறிய ஜனாதிபதி,

இது எப்ப நடந்தது?

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

இது எப்ப நடந்தது?

அயிரத்து தொள்ளாயிரத்து ஒன்றுமில்லா காலத்தில்..

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனே துணியை காணோம், துண்டைக் காணோம் எண்டு இலங்கையை விட்டு  ஓடுகின்றான். அதுக்கிலே கோத்தபாய புலம்பெயர் தமிழர்களை,மீளவும் நாட்டுக்கு அழைக்க போகின்றாராம். யாருக்கையா காதில பூ சுத்துகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

கோட்டையில் இருந்து 1990 ஆண்டு படைகளை மண்டை தீவுக்கு கொண்டு போனதை சொல்றாரோ?

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

கோட்டையில் இருந்து 1990 ஆண்டு படைகளை மண்டை தீவுக்கு கொண்டு போனதை சொல்றாரோ?

இருக்கும்..

ஆனால் கூறுவது பொய் என்று தெரிந்தும் சிரிக்காமல் கூறுவார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

புலம்பெயர் தமிழர்களை மீளவும் நாட்டுக்கு அழைப்பதே இலக்கு – ஜனாதிபதி!

புலம்பெயர் தமிழர்களை... மீளவும் நாட்டுக்கு, அழைப்பதே இலக்கு – ஜனாதிபதி!

இணக்கப்பாடுகளுடன் எட்டப்படும் இருதரப்புத் தீர்மானங்களை, இரு நாடுகளினது மக்களுக்கு சரியான முறையில் தெளிவுபடுத்தப்பட வேண்டுமென்று, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

நன்மை, தீமைகளை எடுத்துரைத்து, பெரும்பான்மையான மக்களின் விருப்பத்துடன் செயலாற்றுவது அத்தியாவசியம் என்றும், ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் நேற்று(செவ்வாய்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

1971இல், இந்து சமுத்திரத்தை சமாதான வலயமாக மாற்ற வேண்டுமென்று, அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் முன்வைத்த யோசனையைச் செயற்படுத்துவதற்கான பலத்தை அதிகரித்துக்கொள்ள, இந்தியாவின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை உயர் மட்டத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டுமாயின், குறுகிய மற்றும் நீண்டகாலத் தேவைகளின் பொருட்டு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைத் துல்லியமாக அடையாளம் காணவேண்டுமென்பது, இரு தரப்பினதும் கருத்தாக அமைந்திருந்தது.

யாழ்ப்பாணக் கோட்டையை மீட்ட தனது அனுபவத்தை எடுத்துக்கூறிய ஜனாதிபதி, காணாமற்போனோர், யுத்தம் காரணமாக கணவரை இழந்தோர் உள்ளிட்ட யுத்தத்தின் பக்க விளைவுகள் பற்றி, தான் நல்ல புரிதல் கொண்டிருப்பதாக எடுத்துரைத்தார்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பலவீனங்களைப் போன்றே அதில் காணப்படும் பலம் தொடர்பிலும் கண்டறிந்துச் செயற்படுவதன் தேவை தொடர்பிலும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

இலங்கையிலிருந்து சென்ற தமிழ் மக்களை மீண்டும் நாட்டுக்குத் திருப்பியழைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தனது எதிர்பார்ப்பென்று தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களை வெற்றிகரமானதாக்கிக்கொள்ள, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரின் போது உரையாற்றி, புலம்பெயர் தமிழர்களுக்கும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களுக்கும் பகிரங்க அழைப்பு விடுத்ததாகவும், ஹர்ஷ் வர்தன் ஷரிங்லாவிடம் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்காகதத் தனது அரசாங்கம் கடந்த காலங்களில் முன்னெடுத்திருந்த நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்திய ஜனாதிபதி, யுத்த காலத்தின் போது பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்டிருந்த காணிகளில் 90 சதவீதத்துக்கும் மேலானவை, அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன என்றும், ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

அதேபோன்று, காணாமற்போனோரது குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனத் தெரிவித்த ஜனாதிபதி, யுத்தத்தால் ஏற்பட்ட ஏனைய பிரச்சினைகளுக்கும் உடன் தீர்வு வழங்குவதற்கான தேவை தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.

இரு நாடுகளினதும் புவியியல் இருப்பிடம் தொடர்பில் தெளிவான புரிந்துணர்வு இருப்பின், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய எந்தவொரு செயற்பாட்டுக்கும் இலங்கையைப் பயன்படுத்திக்கொள்ள இடமளிக்கப் போவதில்லை என்றும், ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

சீனாவுடனான தொடர்புகள் பற்றி மிகத் தெளிவாக எடுத்துரைத்த ஜனாதிபதி, அது தொடர்பில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாமென்று, இந்திய வெளிவிவகாரச் செயலாளரிடம் தெரிவித்தார்.

இலங்கையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அதனால், இந்திய முதலீட்டாளர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுப்பதாக, ஜனாதிபதி தெரிவித்தார்.

திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் தொடர்பான பிரச்சினையை, இரு நாடுகளுக்கும் பயனுள்ள வகையில் தீர்த்துக்கொள்ளும் பொறுப்பு, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும், ஜனாதிபதி குறிப்பிட்டார்.

https://athavannews.com/2021/1243181

இது நடக்கிற விடையமா.. அங்கு வாழும் மக்களின் கஸ்ரங்களை போக்கவே வழியைக் காணம்.இதில வெளி நாட்டு காரரை கூப்பிட்டு என்ன செயவதாக உத்தேசம்...🤔

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, zuma said:

சிங்களவனே துணியை காணோம், துண்டைக் காணோம் எண்டு இலங்கையை விட்டு  ஓடுகின்றான். அதுக்கிலே கோத்தபாய புலம்பெயர் தமிழர்களை,மீளவும் நாட்டுக்கு அழைக்க போகின்றாராம். யாருக்கையா காதில பூ சுத்துகின்றார்.

அவர் சும்மா ஒரு கதைக்கு சொன்னதை பெரிசாய் எடுக்கப்படாது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, யாயினி said:

இது நடக்கிற விடையமா.. அங்கு வாழும் மக்களின் கஸ்ரங்களை போக்கவே வழியைக் காணம்.இதில வெளி நாட்டு காரரை கூப்பிட்டு என்ன செயவதாக உத்தேசம்...🤔

ஜனாதிபதி அழைத்து செல்ல வேண்டிய தேவை இல்லை. ஆனால், வெளிநாடுகளில் வாழும் மக்கள் இலங்கைக்கு சென்றுகொண்டுதான் உள்ளார்கள். பிறந்து வளர்ந்த பூமியை விட்டு பிரிய எல்லோராலும் முடிவதில்லை. 

அண்மையில் மறைந்த இசை கலைஞர் வர்ண. ராமேஸ்வரன் கூட ஊரில் வாழ்க்கையை நிலை நிறுத்தவே முயற்சிகள் எடுத்தார் என தெரிகின்றது.

வெளிநாடுகளில் செட்டில் ஆகியவர்களில் சிலர் சொறி லங்கா என தூற்றிகொண்டு தான் கடைசிவரை வாழ்வார்கள். ஆனால், எல்லாரும் அப்படி இல்லையே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

முதலில் அங்கு உள்ள தமிழர்களுக்கு ஒரு தீர்வை கொடுங்க அதன்பின் எல்லாம் தானாகவே நடக்கும் .

தீர்வை கொடுக்க மாட்டார்களாம் அவசரகால தடை  சட்டத்தை எடுக்க மாட்டார்களாம் அங்கு ஏற்கனவே இருக்கும் தமிழர்கள் இரண்டாம்தர பிரஜைகள் போல் நடாத்தப்படுகின்றனர் இவ்வளவு தடங்கல் இருக்கும்போது யார் அங்கு போவார் ?

1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

வெளிநாடுகளில் செட்டில் ஆகியவர்களில் சிலர் சொறி லங்கா என தூற்றிகொண்டு தான் கடைசிவரை வாழ்வார்கள்.

உண்மைதான் செட்டில் ஆனவர்களுக்கு ஏன் பாதுகாப்பு இல்லாத தேசம் போய்  அந்தரப்படுவான்?

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த பலர் மீண்டும் தாயகம் திரும்பும் திட்டத்துடன் இருந்தார்கள். அதிலும் 2015 இன் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இன்னும் சிலர் இரட்டைக் குடியுரிமை  தொடக்கம் பல்வேறு ஆயத்தங்களை செய்திருந்தார்கள்.

ஆனால் 2019 இன் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து சிங்களவர் உட்பட பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற நிலை…

ஒரு நாட்டுக்குள் தீர்வு அது இது என்று பேய்க்காட்டல் காணி  விடுவிப்பு என்ற காரணம் களால் வந்ததுக்கு சிலோன் பக்கமே போகாத தமிழ் மக்களும் போக ரெடியாகி இருந்தனர் எல்லாம் நத்தார் குண்டுவெடிப்புடன் பணால் ஆகியிட்டுது .

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, யாயினி said:

இது நடக்கிற விடையமா.. அங்கு வாழும் மக்களின் கஸ்ரங்களை போக்கவே வழியைக் காணம்.இதில வெளி நாட்டு காரரை கூப்பிட்டு என்ன செயவதாக உத்தேசம்..

வேறென்னத்துக்கு ...ஒன்று கூப்பிட்டு வச்சு போட்டுத்தள்ள 
இல்லாட்டில் ஒரே நாடு ஒரே தேசம் என்று  கும்பலாக சேர்ந்து பிச்சையெடுக்க ...இதை விட்டு வேறன்ன செய்வார் ,வேறன்ன தெரியும் ...?  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, MEERA said:

புலம் பெயர்ந்த பலர் மீண்டும் தாயகம் திரும்பும் திட்டத்துடன் இருந்தார்கள். அதிலும் 2015 இன் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இன்னும் சிலர் இரட்டைக் குடியுரிமை  தொடக்கம் பல்வேறு ஆயத்தங்களை செய்திருந்தார்கள்.

ஆனால் 2019 இன் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து சிங்களவர் உட்பட பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற நிலை…

12 minutes ago, பெருமாள் said:

ஒரு நாட்டுக்குள் தீர்வு அது இது என்று பேய்க்காட்டல் காணி  விடுவிப்பு என்ற காரணம் களால் வந்ததுக்கு சிலோன் பக்கமே போகாத தமிழ் மக்களும் போக ரெடியாகி இருந்தனர் எல்லாம் நத்தார் குண்டுவெடிப்புடன் பணால் ஆகியிட்டுது .

 எனக்கு தெரிய புலம்பெயர் தமிழர் பலர் தமது ஊர்களுக்கு சென்று வீடுகள் எல்லாம் கட்டினார்கள்.
அவர்களின் பின்நாள் கனவுகள் எல்லாம் உறைய வைக்கப்பட்டுவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

அதில் முக்கியமான சிக்கல், வரி....

இரட்டைக்குடியுரிமை கொண்டவர்களாயின், இலங்கையில் செய்யப்பட்ட முதலீடுகள் , சமர்பிக்கப் பட்ட கணக்கு, செலுத்தப்பட்ட வரி, மறு பிரசாஉரிமை உள்ள நாட்டுடன் பகிரப்படுகிறது.

முதலிட காசு எப்படி வந்தது என்று இங்கே, கேள்வி கேட்டு, சிலருக்கு, வரி அலுவல கடதாசி வந்திருக்கிறது.

கொழும்பில் அடுக்கு மாடி விற்றோர், லாபவரிக்கான வரி கடதாசி, பிரித்தானியாவில், பெற்று உள்ளனர்.

இலங்கை வரி போக, மிஞ்சிய காசுக்கு கட்டவேணுமாம்.

பண்ணிப் பாருங்கோவன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் வெளிநாட்டில் வரி கட்டி இருந்தாலும் பிரித்தானியாவில் வசிப்பவராக இருந்தால் பிரித்தானியாவிற்குள் கொண்டுவரப்பட்ட வருமானத்திற்கு வரி செலுத்தப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

ஓம் வெளிநாட்டில் வரி கட்டி இருந்தாலும் பிரித்தானியாவில் வசிப்பவராக இருந்தால் பிரித்தானியாவிற்குள் கொண்டுவரப்பட்ட வருமானத்திற்கு வரி செலுத்தப்பட வேண்டும்.

அதில கண வித்தியாசம் இருக்கு.

நீஙகள் முதலிட்டு, அதை வித்துக் கொண்டு வந்தால், வரி.

உங்கள் முதுசத் சொத்துக்கு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, யாயினி said:

இது நடக்கிற விடையமா.. அங்கு வாழும் மக்களின் கஸ்ரங்களை போக்கவே வழியைக் காணம்.இதில வெளி நாட்டு காரரை கூப்பிட்டு என்ன செயவதாக உத்தேசம்...🤔

Screenshot-2021-10-07-20-10-38-818-org-m

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

அதில கண வித்தியாசம் இருக்கு.

நீஙகள் முதலிட்டு, அதை வித்துக் கொண்டு வந்தால், வரி.

உங்கள் முதுசத் சொத்துக்கு இல்லை.

வாடகை, வியாபார, தொழில் வருமானத்திற்கு வரி கட்டணுமே..

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி திருப்பி அழைப்பார்.. சொறீலங்காவுக்கு கொலிடேன்னு படை எடுக்கேக்க.. பாஸ்போட்ட எயாப்போட்டில் இராணுவத்தை வைச்சு பறிச்சு பிடிச்சு வைப்பாரே. செய்யக் கூடிய ஆள் தான்.

ஆகவே புலம்பெயர் டமிழ் மக்கள்.. ரெம்பக் கவனம்.. எனி கட்டுநாயக்கா தாண்டிறதில. 

  • கருத்துக்கள உறவுகள்
On 6/10/2021 at 18:55, பெருமாள் said:

முதலில் அங்கு உள்ள தமிழர்களுக்கு ஒரு தீர்வை கொடுங்க அதன்பின் எல்லாம் தானாகவே நடக்கும் .

தீர்வை கொடுக்க மாட்டார்களாம் அவசரகால தடை  சட்டத்தை எடுக்க மாட்டார்களாம் அங்கு ஏற்கனவே இருக்கும் தமிழர்கள் இரண்டாம்தர பிரஜைகள் போல் நடாத்தப்படுகின்றனர் இவ்வளவு தடங்கல் இருக்கும்போது யார் அங்கு போவார் ?

உண்மைதான் செட்டில் ஆனவர்களுக்கு ஏன் பாதுகாப்பு இல்லாத தேசம் போய்  அந்தரப்படுவான்?

பாஸ்போர்ட்டை பறிப்பார்கள், திரும்பி வர ஏலாது என்று பயப்படுபவர்கள் போகவேண்டாம். 

நீங்கள் பாதுகாப்பாக ஒரு இடத்தில் நின்று கட்டளை கொடுக்க அங்கு காரியம் நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?

நாட்டுக்காக போராடி உயிர்நீத்த அனைத்து மக்கள், போராளிகள் எச்சங்கள் அங்குதான் உள்ளன. வெளிநாடுகளில் இல்லை. 

நிர்வாகம் வேறாக அமையலாம். ஆனால், நிலம், நீர், புவியியல், வானம் அது மாறுபட போவது இல்லை. தாயக மண் யார் ஆண்டாலும் அது ஒன்றே. இன்று ஓர் ஆடை, நேற்று ஓர் ஆடை, நாளையும் மாறலாம். ஆடை வேறுபாடு உடலை வெறுக்க காரணம் ஆகலாமா?

5 hours ago, nedukkalapoovan said:

எப்படி திருப்பி அழைப்பார்.. சொறீலங்காவுக்கு கொலிடேன்னு படை எடுக்கேக்க.. பாஸ்போட்ட எயாப்போட்டில் இராணுவத்தை வைச்சு பறிச்சு பிடிச்சு வைப்பாரே. செய்யக் கூடிய ஆள் தான்.

ஆகவே புலம்பெயர் டமிழ் மக்கள்.. ரெம்பக் கவனம்.. எனி கட்டுநாயக்கா தாண்டிறதில. 

இப்படித்தான் முன்பு யாழ்ப்பாணத்தில் கதை சொன்னார்கள் கொழும்புக்கு போகவேண்டாம் ஆமி, பொலிஸ் பிடிச்சு உள்ளே போட்டால் வெளியே வரமுடியாது என்று. கொழும்பு என்றாலே வாழ்க்கை தொலைந்து விடும் எனும் கணக்கில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் கடைசியில் பார்த்தால் பிரச்சாரம் செய்தவர்களில் பலர், அவர்கள் பிள்ளைகள் வெளிநாடுகளில். 

Edited by நியாயத்தை கதைப்போம்

  • கருத்துக்கள உறவுகள்
On 6/10/2021 at 23:55, பெருமாள் said:

முதலில் அங்கு உள்ள தமிழர்களுக்கு ஒரு தீர்வை கொடுங்க அதன்பின் எல்லாம் தானாகவே நடக்கும் .

தீர்வை கொடுக்க மாட்டார்களாம் அவசரகால தடை  சட்டத்தை எடுக்க மாட்டார்களாம் அங்கு ஏற்கனவே இருக்கும் தமிழர்கள் இரண்டாம்தர பிரஜைகள் போல் நடாத்தப்படுகின்றனர் இவ்வளவு தடங்கல் இருக்கும்போது யார் அங்கு போவார் ?

இங்கு மேல் எழுதியதுக்கு எதிர்க்கருத்து எழுதுகிறேன்  என்று வேறு ஏதோ எழுதி தள்ளி இருக்கிறீர்கள் ஏன்  இப்படி ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.