Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

நாளை ஆள் வருவது உறுதி என்கிறார்கள் 🤣 விதி யாரை விட்டது .

நாளை… சுமந்திரன் வந்து இறங்கும், ஹீத்ரு விமான நிலையத்திலிருந்து திரும்ப விமானம் ஏறும் மட்டும்… சிறப்பான வரவேற்பு கொடுக்க வேணும். 🤣

ஆள் அதைப் பார்த்து… மூக்கில், விரல் வைக்க வேணும். 🤣

  • Replies 469
  • Views 32.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நன்னிச் சோழன் said:

1) இன்னும் ஐந்து வருடங்கள் போனால் அதுதான் உண்மை. //

நாங்கள் நிலத்தினை இழப்போம். ஆனால் மக்கட்டொகையினை அன்று. ஆகையால் உங்கள் வாதம் சரியன்று. இனம் அழிய கலத்தல் வேண்டும்(வேறுகளும் உண்டு). அதற்கு நெடுகாலம் எடுக்கும். ஒரு 25 ஆண்டுகளுக்கே இன்னும் மேல். 

2) எம்மிடம் என்ன இருக்கிறது? அப்படி  ஏதும் இருப்பின் அதை நிறுவ வேண்டியது நாமேதான்.

எம்மிடம் இனத்தொகை இருக்கிறது. 30 இலக்கத்திற்கு மேல் நாங்கள். எம்மைப் பார்த்து அவ்வாறு கூற இயலாது; கூடாது. 2002 இல் இருதேசிய இனங்கள் போரிட்டுள்ளது என்பதை ஏற்றுத்தானே பேச்சுவார்த்தையில் அமர்த்தினர்வர்கள்; அமர்ந்தவங்கள், மேற்குலகின் மேற்பார்வையில். அப்ப ஏற்றவங்கள், இப்ப எமது பக்கம்/ எமக்கான எந்தவொரு அரசும் இல்லையென்றவுடன் எலும்புத்துண்டுகளை வைத்து 'சிறுபான்மை இனக்குழு' என்ற மட்டத்திற்கு இறக்கிப்போட்டங்கள். 

குணா மாமாவின்ர நிகழ்படத்தை விடிய வெள்ளணை கேட்டதில்லை இருந்து சரியான மனக்கடினமாக போய்ற்றுது. அதையும் ஓமெண்டு ஏற்றுபோனாரே ***. சா.... என்ன கடின காலத்துக்கு எங்கட இனத்திலை இப்பிடி ஒருத்தர் எங்களுக்கு அரசியல்வாதியாக வந்தாரோ

3) ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.

உண்மை. ஆனால் நாங்கள் அரசற்ற இனம். ஆதலால் எதையும் சொல்லலாம். அதை ஆமோதித்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எலும்புத்துண்டுகள் கொடிபிடிக்கும்.

4) இப்போதுதான் உங்களுக்கு இது புரிந்தத..😔இப்போதாவது புரிந்ததே என்று மகிழ்ச்சியடையுங்கள்.

விளங்கவில்லை கபித்தன் அவர்களே.

1) இன்னும் 10 வருடங்களில் நாம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் ஆக்கப்படுவோம் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள். நன்று. 

எமக்கு போட்டியாக முசிலிம்கள் மக்கட் தொகையால் போட்டிக்கு வந்துவிட்டனர். இதனை மறந்துவிடாதீர்கள்.

2) குணாவின் கதையை மட்டுமே  கேட்டு முடிவுகளை எடுக்காதீர்கள். அவரது காணொளிகள் உண்மை நிலவரத்தினை மட்டுமே  காட்ட  வேண்டும்.  அவர் பக்கச் சார்பாக(எமது) நின்று பேசுகிறார். முடிவுகளை காணொளிகளைப் பார்க்கும் நாம்தான் எடுக்க வேண்டும். அப்படி இல்லையேல், அவரது ஆய்வுகள் 2009 வரைக்குமான எமது so-called ஆய்வாளர்களின் ஆய்வுகள் போல ஆகிவிடும்.

பேச்சுவார்த்தையில் சமதரப்பாக இருந்த நாம் இன்றைய மோசமான  நிலைக்கு இறங்கியதற்கு என்ன காரணம் என யோசியுங்கள். 

4) எமது  தற்போதைய நிலை என்பது பூச்சியத்திலிருந்து தொடங்கவேண்டி உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

ஐயே சிறித்தம்பி! சுமந்திரன்ரை கனடா சம்பவத்துக்கு பிறகு தமிழ்ச்சனத்துள்ளை ஒற்றுமை இல்லையாம்.....இதை ஆர் சொல்லீனம் எண்டு பாத்தால் 2009க்கு முந்தின மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் கண்டியளோ :cool:

குமாரசாமி அண்ணை.. மாற்றுக் கருத்து மாணிக்கங்களின்ரை கதையை, கணக்கில் எடுக்காதீர்கள். 

அதுகள்… அப்ப இருந்து, இப்ப வரை… பழஞ்சீலை கிழிஞ்ச மாதிரி.. எதையாவது உளறிக் கொண்டு இருக்கிறதே வேலையாய்  போச்சு. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

நாளை… சுமந்திரன் வந்து இறங்கும், ஹீத்ரு விமான நிலையத்திலிருந்து திரும்ப விமானம் ஏறும் மட்டும்… சிறப்பான வரவேற்பு கொடுக்க வேணும். 🤣

ஆள் அதைப் பார்த்து… மூக்கில், விரல் வைக்க வேணும். 🤣

இங்குள்ள அரசியல்வாதி மூக்கில் விரல்வைத்த சுமத்திரனின் படம் ஒண்டு கீழே 

Sri Lankan fishermen launch flotilla protesting Indian poaching

இந்தப்படத்தை பார்த்தபின் ஏன் தண்ணீரில்  பாதுகாப்பு ஜாக்கெட் உங்கள் அரசியல்வாதிகள் அணிவதில்லை என்ற அடிப்படை அறிவுகூட இல்லியா  என்று கேட்க தலைகுனிந்து நிக்க வேண்டி வந்தது இந்த அடிப்படை அறிவற்றவர்களிடம் எப்படி அவர்கள் நம்பிக்கை வைத்து கதைப்பார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

லண்டன் கூட்டத்தை… இரகசியமாக நடத்தப் பார்ப்பார்கள்… 😂

உசாரக இருங்கள் உறவுகளே.

சுமந்திரனுக்கு.. இந்த வருசம், மறக்க முடியாத வருசமாக இருக்க வேணும். 🤣

சிறியர்,

குடும்பமாக, புலிக்கொடியோடு போய் கத்த வேண்டியதுதானே.. 

வீரத்தின் அடையாளமான புலிக்கொடி,  இன்று தெருப்.......களின் கையில், தெருச் சண்டைக்கு....

🤦🏼‍♂️

25 minutes ago, பெருமாள் said:

இங்குள்ள அரசியல்வாதி மூக்கில் விரல்வைத்த சுமத்திரனின் படம் ஒண்டு கீழே 

Sri Lankan fishermen launch flotilla protesting Indian poaching

இந்தப்படத்தை பார்த்தபின் ஏன் தண்ணீரில்  பாதுகாப்பு ஜாக்கெட் உங்கள் அரசியல்வாதிகள் அணிவதில்லை என்ற அடிப்படை அறிவுகூட இல்லியா  என்று கேட்க தலைகுனிந்து நிக்க வேண்டி வந்தது இந்த அடிப்படை அறிவற்றவர்களிடம் எப்படி அவர்கள் நம்பிக்கை வைத்து கதைப்பார்கள்?

பெருமாள் ஊரில தான் தண்ணிக்க இறங்கேக்க ஜக்கெற்ரோட இறங்கினவர் எண்டு சொல்லுறார்.

நாங்களும்  நம்பீட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

சுமந்திரன் நல்லாட்சிக்கு முண்டு குடுத்ததாலை தமிழ்ச்சனத்துக்கு என்ன பிரயோசனம்?

மாவீரர் தின கொண்டாட்ட அனுமதிகளா?

தாங்கள் நல்லாட்சி காலப்பகுதியில் ஆழ் உறங்கு நிலையில் இருந்திர்களா?
 நல்லாட்சியில் தமிழ் மக்களுக்கு பாலும் தேனும் ஓடவில்லை, ஆனால் அவர்கள் நிம்மதி பெருமூச்சு விடடகாலப்பகுதி அது ஆகும்.நல்லாட்சி அரசின் காலத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்ததும், ஆக்கிரமிக்கப்பட்ட பல நிலங்கள் விடுவிக்கப்பட்டது யாவரும் அறிந்தே.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

பெருமாள் ஊரில தான் தண்ணிக்க இறங்கேக்க ஜக்கெற்ரோட இறங்கினவர் எண்டு சொல்லுறார்.

நாங்களும்  நம்பீட்டோம்.

பெருமாள் பள்ளிக்கூட பக்கம் போகாதது மக்களுக்கு முன்னோடியாக இருக்கவேண்டிய அரசியவாதிக்கு அதுவும் வெளிநாட்டு தூதுவர்களுடன் கதைப்பதுக்கு தகுதியான ஆள் என்று தன்னைத்தானே சொல்பவருக்கு  மூளை முழம்காலுக்குள் போனதோ ?

படத்தை சக நன்பருக்கு காட்டி உள்ளூர் அரசியல்வாதி சிரிக்கையில் குறுகிப்போனோம் .

அதான் திரும்ப திரும்ப சொல்றது சுமத்திரன் ஆதரவாளர் எனும் குண்டர் கூட்டத்தால் தான் இவ்வளவு தலைகுனிவும் தமிழருக்கு .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை.. மாற்றுக் கருத்து மாணிக்கங்களின்ரை கதையை, கணக்கில் எடுக்காதீர்கள். 

அதுகள்… அப்ப இருந்து, இப்ப வரை… பழஞ்சீலை கிழிஞ்ச மாதிரி.. எதையாவது உளறிக் கொண்டு இருக்கிறதே வேலையாய்  போச்சு. 🤣

சுமந்திரனுக்கு வாக்களிச்ச மக்கள் இருக்கும்  ஊரிலையே இவருக்கு போலிஸ் பாதுகாப்பு தேவையெண்டால் மிச்சத்தை கணக்குப்போட்டு பாருங்கோவன்...🤣

Bild

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்+
4 hours ago, Kapithan said:

.

1) இன்னும் 10 வருடங்களில் நாம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் ஆக்கப்படுவோம் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள். நன்று. 

இல்லையே... நான் அப்படி சொல்லவில்லையே. நான் சொல்லாதை ஒன்றை சொல்லியேற்றதாக சொல்கிறீர்களே? ஏன்?

நான் 25 ஆண்டுகளுமேல் இடத்தை இழப்போம் என்றே கூறினேன். ஆனால் நீங்கள்?

எமக்கு போட்டியாக முசிலிம்கள் மக்கட் தொகையால் போட்டிக்கு வந்துவிட்டனர். இதனை மறந்துவிடாதீர்கள்.

ஓமோம்...நாங்கள் போராலை மக்கட்டொகையை இழக்க (எங்கட இனத்தை அழிச்சதில்லை இவங்களும் பங்குண்டு), அவங்கள் போராலை நுளம்பு குட்டிபோட்ட மாதிரி பெருகிப்போனாங்கள். 

2) குணாவின் கதையை மட்டுமே  கேட்டு முடிவுகளை எடுக்காதீர்கள். அவரது காணொளிகள் உண்மை நிலவரத்தினை மட்டுமே  காட்ட  வேண்டும்.  அவர் பக்கச் சார்பாக(எமது) நின்று பேசுகிறார். முடிவுகளை காணொளிகளைப் பார்க்கும் நாம்தான் எடுக்க வேண்டும். அப்படி இல்லையேல், அவரது ஆய்வுகள் 2009 வரைக்குமான எமது so-called ஆய்வாளர்களின் ஆய்வுகள் போல ஆகிவிடும்.

ஆ... நான் அவரது அரசியல் கருத்துக்களை நம்புகிறேன். (அவர் செய்வதை 'ஆய்வுகள்' எனக் குறிப்பிடுவது பொருத்தமற்றது என நினைக்கிறேன் )  குணா அவர்களின் 'விடுதலைப்புலிகள்' இதழில் வெளிவந்த 2000 ஆம் ஆண்டு கட்டுரைகளை வாசித்த பின்னரே அவரை நம்பலாயினேன்.  அவர் மூலம்தான் பல விடையங்களை கற்றுக்கொண்டேன், அரசியலில் மட்டும். 

அதே நேரம் அவர் நேற்றுக்கூறிய 40,000 மாவீரர்கள் போன்ற சில உண்மைக்குப் புறம்பான விடையங்களை ஏற்பதில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

மேலும், நான் இந்த 'நடுநிலை நக்கிகள்' என்பவர்களது கருத்துக்களை கிஞ்சித்தும் நம்புவதில்லை; மதிப்பதில்லை!  

பேச்சுவார்த்தையில் சமதரப்பாக இருந்த நாம் இன்றைய மோசமான  நிலைக்கு இறங்கியதற்கு என்ன காரணம் என யோசியுங்கள். 

சுருங்கக்கூறின், அரசற்ற இனமாக்கப்பட்டதால் ஒழுங்கான நிகராளிகளை இழந்து சுமந்திரன் போன்ற சிங்கள வால்களால் மோசமான நிலைக்கு இறங்கியுள்ளோம்.

4) எமது  தற்போதைய நிலை என்பது பூச்சியத்திலிருந்து தொடங்கவேண்டி உள்ளது. 

உண்மை!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

1) பெருமாள் பள்ளிக்கூட பக்கம் போகாதது மக்களுக்கு முன்னோடியாக இருக்கவேண்டிய அரசியவாதிக்கு அதுவும் வெளிநாட்டு தூதுவர்களுடன் கதைப்பதுக்கு தகுதியான ஆள் என்று தன்னைத்தானே சொல்பவருக்கு  மூளை முழம்காலுக்குள் போனதோ ?

2) படத்தை சக நன்பருக்கு காட்டி உள்ளூர் அரசியல்வாதி சிரிக்கையில் குறுகிப்போனோம் .

3) அதான் திரும்ப திரும்ப சொல்றது சுமத்திரன் ஆதரவாளர் எனும் குண்டர் கூட்டத்தால் தான் இவ்வளவு தலைகுனிவும் தமிழருக்கு .

1) பெருமாள் ஊரில தண்ணியில இறங்கேக்க ஜக்கேற்றோடதானே இறங்கினவர..🤣

2) அரசியல்வாதியின்ர சிரிப்ப பார்க்கும்போது அந்த அரசியல்வாதியின் தகுதியும் அவர்ர நண்பர் பெருமாளையும் வடிவா விளங்கிக் கொள்ளலாம்..😂

3) நாகரீகம் தெரிந்தவர்களுக்கு குண்டர் என்று பெயர் என்பது இப்போதுதான் எனக்குத் தெரியும். எதுக்கும் நான் ஒருக்கா பள்ளிக்கூடப்பக்கம் ஒதுங்குவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனின் உரை இங்கே உள்ளது. ஆகா மொத்தத்தில் நிகழ்ச்சியின் கேள்வி பதில் நெருங்கும் போது  தான் இந்த குழப்பங்கள் உருவாகி உள்ளது. அங்கே நிகழ்ச்சியை எதிர்த்தவர்கள் நடந்து கொண்டவிதம் குறித்து எனக்கும் கேள்விகள், கருத்துகள் இருக்கின்றது.
ஆனாலும், இதை  ஒன்றும் ஜனநாயக விரோத செயலாக பார்க்கமுடியாது. அதே நேரம் மார்தட்டி பாராட்டவும் முடியாது.

வெறுமனே எதிர்ப்பை  மட்டுமே பார்க்கும் எமக்கு இந்த நிகழ்வுகளின் புற, அக சூழ்நிலைகள் காய்நகர்த்தல்கள் பற்றிய தெளிவும் இல்லை.  
புலம்பெயர் தமிழர்களோ அல்லது தாயக தமிழர்களோ கூர்ந்து உங்கள் செயல்களை கண்காணிக்கிறார்கள், பொறுப்புகூறல்கள் உங்களுக்கு அவசியமானதாகிவிட்டது என்ற விடயங்கள் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி உள்ளதாகவே நான் பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பெருமாள் said:

எப்படி எனக்கில்லை என்று என்னையும்  கூட்டு சேர்க்கிறீர்கள் ?

படிப்பறிவற்ற நானே இம்முறை சுமத்திரன்  லைவ் சோ காட்டுவார் பாருங்கள் என்று சொன்னேன் அவரின் அமெரிக்க அழைப்பு திரியில் ஆனால்  நான் அப்படி  அந்த புத்தகம் படித்தேன் இந்த புத்தகம் படித்தேன்  என்று திரிக்கு திரிக்கு அலப்பறை பண்ணும் உங்களுக்கு விளங்கவில்லையே ? 

உங்களுக்கு சந்தோஷம் என்று தெரிந்தது மகிழ்ச்சி: "ஏலூமானால் பிரிட்டனுக்கு வரச்சொல்லுங்கள் , கேள்வி கேட்கிறோம்" என்று  மறைமுகமாக றௌடிகளை ஏவி விடுவதும் உங்கள் போன்ற ஆட்களின் கருத்துகள் தான்.

பி.கு: எதையாவது நல்ல விடயத்தை வாசித்தால் பகிர்வது என் போன்றவர்களின் பழக்கம், வாசிப்பு luxury ஆகத் தெரியும் உங்கள் போன்ற முற்றுமறிந்தவர்களுக்கு அது அலப்பறை போலத் தான் தெரியும்! பொறுத்தருள்க காலமுனியே! 😂

18 hours ago, zuma said:

சுமந்திரன் ஜெர்மனி வந்தால், கட்டாயம் நீங்கள் மாத்திரம் இல்லை, உங்கள் பிள்ளைகளையும் புலிக்கொடி ஏந்திய வண்ணம் அழைத்து சென்று, சுமந்திரனுக்கு எதிராக கோஷம் எழுப்ப வேண்டும், ஜெர்மனி காவல்துறை படம் எடுத்தால் வடிவாக pose கொடுங்கள், அவர்களுடைய ஆவணப்படுத்தலுக்கு இலகுவாக இருக்கும்.🤪

அப்படி நடக்காது😎! "விசைப்பலகை வீரக்குட்டிகளின்"  பிள்ளைகள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருந்து படித்து லோயர், எஞ்சினியர், டொக்ரர் தான்! ஊரான் பிள்ளைகள் தான் கொம்பு சீவி, மாலை போட்டு அனுப்பி வைக்கலாம்! 

இது போல றௌடிகள் அவுசிலும், பிரான்சிலும் நடந்து கொண்ட போதே இதைச் சொன்னேன்: வெள்ளை வேட்டி கசங்காமல் ஊரான் பிள்ளைகளைப் பலி கொடுத்து விட்டு பின்னர் வந்து தடவி வேறு கொடுப்பார்கள் இங்கே எழுதும் யாழ் கள உறுப்பினர்கள் சிலர்! 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

மூத்திரத்தை 10 வருடமாக அடக்கி வைத்திருந்து விட்டுத்தான் இப்போது முகத்தில் அடித்து விட்டிருக்கின்றார்கள்.

+ஆத்திரத்தை அடக்குவதற்கும் ஒரு எல்லை உண்டு. நீங்களே இங்கு யாழ்களத்தில் ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாமல் வெடித்து சிதறியிருக்கின்றீர்கள்.

ஓம். அப்படி வெடித்துச் சிதறித் தான் போல சில இடங்களில் இருந்தே துரத்தியிருக்கிறார்கள்!😂

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் இன்று வாட்ஸபில் வந்தது காலை.

இனி இது இரகசியம் அல்ல

கொழும்பிலிருந்து மூத்த சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் தொலைபேசி அழைப்பு எடுத்தார். கனடாவில் என்ன நடந்தது என்று கேட்டார். கூட்டத்தில் குழப்பம் என்றேன். அவர் கூறிய விளக்கம்,

"யதார்த்தவாதிவெகுசன விரோதி' என்பதை உணர்த்தியது.

"கனடா கூட்டத்தில் சுமந்திரனுக்கு எதிராக ஒரு கும்பல் கூச்சல் போட்டு கூட்டத்தையே குழப்பிய விடயம், தென்னிலங்கை சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவுகின்றது. எல்லா இடங்களிலும் பேசுபொருளாக அடிபடுகின்றது. அது மட்டுமல்ல, சிங்களவர்களுக்கு அதனால் பெரும் கொண்டாட்டம். மகிழ்ச்சி'' - என்றும் அவர் கூறினார்.

"வைரலாகும் அந்த வீடியோவில் தமிழில் என்ன கூச்சலிடுகின்றார்கள் என்று தெரியுமா'' என்று கேட்டேன்.

"தெரியவில்லை. ஆனால் ஓரிரு சொற்கள் புரிகின்றன, "துரோகி' என்ற சொல்லின் அர்த்தம் விளங்குகின்றது.''  என வழமைபோல ஆங்கிலத்தில் பதில் தந்தார்.

"ஏன் சிங்கள மக்களுக்குக் கொண்டாட்டம்?''  என்று கேட்டேன்.

"தமிழர்களுக்காக, சிங்கள மக்களுக்குக் கோபம் வரத் தக்க விதத்தில், உரிமைபற்றிப் பேசுகின்றவர் இவர்தானே... இவரின் சட்டத் திறமையை வைத்துத்தானே தமிழர் தரப்பு எங்களுக்கு நீதிமன்றங்கள் ஊடாகத் தண்ணி காட்டுகின்றது. அவரை அவரது மக்களே துரத்துவது என்றால் சிங்கள மக்களுக்குச் சந்தோசம் தானே? அதுவும் ராஜபக்ச சகோதரர்களின் ஆதரவாளர்களுக்கு - குறிப்பாக மொட்டுக் கட்சிக்கு பொயிண்ட்தானே...! என்று பல நியாயப் பாடுகளை அவர் எனக்கு எடுத்துரைத்தார்.

நான் அவருடன் விவாதிக்கப் போகவில்லை. ஆனால் ஒரே ஒரு கேள்வி கேட்டேன். "அந்தக் கூட்டத்துக்குப் புலிக் கொடி ஆயத்தத்துடன் வந்து திட்டியவர்கள் சுமந்திரனை என்ன சொல்லி அழைத்தார்கள் என்பது தெரியுமா?'' - என்று நான் கேட்டேன்.

"அடிக்கடி துரோகி என்றார்கள். இடையிடையே "கோட்டாவின் கையாள்' என்றும் திட்டினார்கள்.''  என்றேன் நான்.

"அப்படியும் பேசினார்களா? அது உண்மை என்றால் ஏன் அவரைத் திட்டியதற்கு கோட்டாவின் ஆள்கள் மகிழ்ச்சி கொண்டாட வேண்டும்.?' என்று அவரே விளங்காதவராக - புரியாதவராக - என்னைக் கேட்டார்.

நான் ""யதார்த்தவாதி வெகுசன விரோதி' என்ற தமிழ்ப் பதத்தின் கருத்தை எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் அவருக்குப் புரிய வைத்தேன்.

சுமந்திரனின் கூட்டத்தில் கூச்சலிட்டுக்குழப்பம் விளைவித்தவர்களிடம் கேட்பதற்கு என்னிடம் இரண்டு கேள்விகள்
உள்ளன.அவையும் கூட அங்கு - கூட்டத்தைக் குழப்பிய போது - அவர்கள் எழுப்பிய கேள்வியை ஒட்டி எழுந்த சந்தேகங்கள்தான்.

ஒன்று - "எங்களுக்கு உங்கள் தீர்வு வேண்டாம் தமிழீழம்தான் வேண்டும்.''  என்றீர்களே! நிச்சயம் அந்தத் தனிநாட்டை சுமந்திரன் பெற்றுத் தரமாட்டார். பெற்றுத் தருவேன் என்று வாய்ச்சவடால் அடிக்கவும் மாட்டார். சரி, நீங்கள் கூறியபடி "துரோகி சுமந்திரனை ' எங்கள் அரசியலிருந்து துரத்தியடிப்போம். அதற்குப் பிறகு நீங்கள் கூறும் தனிநாட்டுத் தீர்வை யார் பெற்றுத் தருவது? நீங்கள் கனடாவிலும், பிற இடங்களிலும் புலிக்கொடி பிடித்துப் போராட்டம் நடத்த, இங்கு நாடு பிளவுபட்டு தன்பாட்டில் தனிநாடு வந்து விடுமா?''

அடுத்த ஒரு கேள்வி. இதைக் கேட்பதற்கு எனக்கு உரிமை உண்டு. எந்த அச்சுறுத்தல் வந்தும் மண்னை விட்டு ஓடாத எம்தேச மக்களில் நானும் ஒருவன். (அதற்கும் கூட அங்கிருந்தபடி நாமம் சூட்ட தகுதியான சூரர்கள் நீங்கள். இங்கு ராஜபக்சக்களின் கொடூரத்தை எழுத்தில் துணிச்சலுடன் வெளிக் கொணரும் எங்களை உங்கள் பசப்பு வாயால் "கோட்டாவின் ஆள்' என்று நாமம் சூட்ட நீங்கள் தயங்க மாட்டீர்கள். அதற்கு நேரமும் செல்லாது. ஆனால் அவை பற்றி அலட்டிக் கொள்ளும் நிலையில் நாங்களும் இல்லை, இனி கேள்விக்கு வருகிறேன்.

கூட்டமைப்பை பார்த்து - அல்லது சுமந்திரனைப் பார்த்து - அங்கிருந்த சிலர் திரும்பத் திரும்ப ஒரு கேள்வியை எழுப்பினர்.

"இந்தப் பன்னிரண்டு வருடங்களாக என்ன பிடுங்கினீர்கள்?'' - என்பதுதான் அந்தக் கேள்வி.

அந்தக் கேள்வியை எழுப்பியவர்கள் ஏதோ 2009 மே வரை தலைவருக்குப் பக்கத்தில் நின்று போராட்டத்தை ஒப்பேற்றிமுடித்துவிட்டு, அதற்குப் பிறகு, பொறுப்பை சுமந்திரன் ஆதியோரிடம் விட்டுவிட்டு வந்தவர்கள் மாதிரிக் கேள்வி எழுப்பினர்.

சரி, அப்படியே இருக்கட்டும்.

தனிப் பிஸ்டலுடன் தொடங்கிய விடுதலைப் போராட்டத்தை முப்படை கொண்டு - தனியான தாயக தேசத்தை ஒரு நாடு போல வைத்திருந்த - ஒரு கட்டமைப்பை முப்பது ஆண்டுகளில் கட்டி எழுப்பி, கடைசியாக நாங்கள் சாதித்தது என்ன?'' - என்ற கேள்வி சுமந்திரன் பக்கத்திலிருந்து வந்திருக்குமானால், அந்தப் போராட்டத்துடன் நின்ற நான் உட்பட நாங்களும், இன்று கனடாவில் பதுங்கிக் கொண்டிருக்கும் அந்த நண்பர்களான நீங்களும் என்ன பதில் கூறுவது?

போராட்டத்தின் முடிவில், தோற்றுப் போன சமூகமாக - பெளத்த, சிங்களப் பேரினவாதத்தினால் எப்படியும் பந்தாடப்படக் கூடிய - மிக ஈனமான நிலையில் கைவிடப்பட்டவர்களாகவே நாம் இருந்தோம். இந்தப் பத்து வருடங்களுக்குள் கணிசமான சுயத்தைத் தொலைத்த நாம், இருப்பதையும் தொலைத்து விடும் பேராபத்தில் சிக்குப்பட்டிருக்கையில், அங்கி ருந்து கொண்டு நீங்கள் "மகாதத்துவம்' பேசுவதில் அர்த்தமில்லை.

சுமந்திரனை விடுங்கள், தொலைந்து போகட்டும். உங்கள் கருத்தில் ரணில் அதிகாரத்தில் இருந்தால் அவர் "ரணிலின் கையாள்'; மஹிந்தர் அதிகாரத்தில் இருந்தால் "மஹிந்தரின் கையாள்'; கோட்டாபய அதிகாரத்தில் இருந்தால் "கோட்டாவின் கையாள்.' அப்படி அங்கிருந்து தத்துவம் பேசி, இந்தக் குழப்பத்தில் கனடாவில் பிழைத்துக் கொள்ளாமல் இங்கு வாருங்கள். "துரோகி சுமந்திரனை' ஒழித்துக் கட்டிவிட்டு, நானும், நாமும், நீங்களும் சேர்ந்து, சுமந்திரன் எச்சரித்தமை போல அழிந்து வரும் தாயகத்தைக் காப்போம். அதற்கு நீங்கள் தயாரா?

எங்களோடு இங்கு நீங்கள் இருந்து கொண்டு, இந்தத் துரோகிப் பட்டத்தை சுமந்திரனுக்கு நீங்கள் தொடுத்திருந்தால் அதில் நியாயமுண்டு. கனடாவில் பதுங்கிக் கொண்டு, "கனடாப் பக்கம் வராதே!' என்று சுமந்திரனை மட்டும் அல்ல, கருணா, பிள்ளையானைக் கூட கலைப்பதற்கு உங்களுக்குத் தார்மீகத் தகுதி இல்லை.இங்கு தாயக மண் பறிபோய்க் கொண்டிருக்கின்றது. உங்களின் அந்தக் கூட்டத்தில் சுமந்திரன் சுட்டிக்காட்டியமை போல, இந்தப் போக்கு இப்படியே தொடர்ந்தால் தமிழர் தாயகமும் இங்கு மிஞ்சாது, தமிழனும் மிஞ்சான் என்பதுதான் நிலைமை.

நீங்கள் நேற்றுப் பெருஞ்சாதனை செய்தமை போல "கோட்டாவின் கையாள்' சுமந்திரனை இங்கிருந்தும் "துரோகி' என்று பட்டம் சூட்டி எல்லோரும் சேர்ந்து கலைத்து விடுவோம். உங்கள் ஒவ்வொருவருக்கும் இங்கே (களத்தில்) வாழ ஆபத்து இருப்பது போலத்தான் எங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது. ஆனாலும் நாங்கள் வாழுகிறோம்.

இப்போது "கோட்டாபயவின் கையாள்' துரோகி சுமந்திரனைத் கலைக்க வேண்டும். நீங்கள் குறிப்பிட்டமை போல தமிழீழம் பெறவேண்டும். ஆகவே வாருங்கள். துரோகியான சுமந்திரனைத் துரத்தியமையால் அந்தப் பொறுப்பு - தமிழர் தாயகத்தை காப்பாற்றும் பொறுப்பு - எங்களையும் உங்களையும்தான் சேர்ந்தது.

சுமந்திரனைத் துரோகிப் பட்டம் சூட்டிக் கலைப்பதற்கு உங்களுக்கு இருந்த வீராவேசம் போதாதா தமிழர் தாயகத்தை இங்கு காப்பதற்கு? ஆகவே வாருங்கள். பார்த்திருக்கிறோம். வருவீர்களா? ஒரே ஒரு பிரச்சினை. இங்கு வேலை இல்லாவிட்டால் "சோசல்' என்ற பெயரில் கொடுப்பனவு தரமாட்டார்கள். அது பழகிவிட்ட உங்களுக்கு ஒரு பிரச்சினை இருக்கும். அவ்வளவுதான்.

இங்கிருந்தும் துரோகி சுமந்திரனைத் துரத்தியடிப்போம். கோட்டாவின் ஆளான அவர் கொழும்பில் போய்ப் பதுங்கட்டும். எப்போது வருகின்றீர்கள்? விளக்குமாற்றுடன் காத்திருக்கிறோம். உங்களை வரவேற்க அல்ல. நீங்கள் இங்கு வந்து சேர்ந் ததும், உங்களுடன் சேர்ந்து சுமந்திரனைத் துரத்தியடிப்பதற்கு - "கோட்டாவின் ஆளான' அவர் கொழும்பில் போய் ஓடிப் பதுங்குவதற்கு....!

- மின்னல் (காலைக்கதிர் 22-11-2021)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

) பெருமாள் ஊரில தண்ணியில இறங்கேக்க ஜக்கேற்றோடதானே இறங்கினவர..🤣

Sri Lankan fishermen launch flotilla protesting Indian poaching

இந்த போராட்டம் நடைபெற போட்  வகைகளே உபயோகப்டுத்தப்பட்டுள்ளன அதில் கவனமாக பாருங்கள் சாந்தி ஸ்ரீஸ் கந்தராஜா புடவை மற்றவையல் வேட்டியுடன் எந்த பாதுகாப்பு தடுப்பும் இன்றி ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் முதலில் சேலை கட்டியபடி எந்தப்பிடிமானமும் இன்றி உள்ள அம்மணி தப்பும் சாத்தியம் 20வீதத்துக்கும் குறைவானது சாதாரண நீர் வழிகளில் சம்பவம் நடைபெற்ற பகுதி முல்லையில் இருந்து பருத்தித்துறை கடல்பகுதி எவ்வளவு ஆபத்தான பகுதி என்று  அங்குள்ளவர்களுக்கு  தெரியும் இந்த கேட்டில் வேட்டியுடன் உள்ளவர்கள் நிலை என்ன அட்லீஸ்ட் சைனா காரனின் மலிவான life vest தன்னும் கிடைக்கவில்லையா ஒருத்தர் மட்டும் படத்தில் அணிந்துள்ளார் .

கபித்தான் உங்க நாட்டில் இப்படியொரு போராட்டம் நடந்தால் life vest டன் safety railingsபோன்ற பாதுகாப்பு சமாசாரம்கள் இல்லாமல் போராட்டம் நடைபெற இங்குள்ள காவல்துறை அனுமதி அளிக்குமா ?

  • கருத்துக்கள உறவுகள்

 வாட்சப்பில் வரும் எல்லா செய்தி, படங்கள், கருத்துகளையும் யாழில் பதிந்தால் சர்வர் தாங்காது.
பழைய பட சர்வர் சுந்தரம் ரீல்ஸ் போல இங்கே நம்ம "சர்வர் அந்துறும்" 

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, பெருமாள் said:

Sri Lankan fishermen launch flotilla protesting Indian poaching

இந்த போராட்டம் நடைபெற போட்  வகைகளே உபயோகப்டுத்தப்பட்டுள்ளன அதில் கவனமாக பாருங்கள் சாந்தி ஸ்ரீஸ் கந்தராஜா புடவை மற்றவையல் வேட்டியுடன் எந்த பாதுகாப்பு தடுப்பும் இன்றி ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் முதலில் சேலை கட்டியபடி எந்தப்பிடிமானமும் இன்றி உள்ள அம்மணி தப்பும் சாத்தியம் 20வீதத்துக்கும் குறைவானது சாதாரண நீர் வழிகளில் சம்பவம் நடைபெற்ற பகுதி முல்லையில் இருந்து பருத்தித்துறை கடல்பகுதி எவ்வளவு ஆபத்தான பகுதி என்று  அங்குள்ளவர்களுக்கு  தெரியும் இந்த கேட்டில் வேட்டியுடன் உள்ளவர்கள் நிலை என்ன அட்லீஸ்ட் சைனா காரனின் மலிவான life vest தன்னும் கிடைக்கவில்லையா ஒருத்தர் மட்டும் படத்தில் அணிந்துள்ளார் .

கபித்தான் உங்க நாட்டில் இப்படியொரு போராட்டம் நடந்தால் life vest டன் safety railingsபோன்ற பாதுகாப்பு சமாசாரம்கள் இல்லாமல் போராட்டம் நடைபெற இங்குள்ள காவல்துறை அனுமதி அளிக்குமா ?

இலங்கையை நீங்கள் மேற்குலகுடன் ஒப்பிடுவது சகிக்க முடியவில்லை.

நடைமுறையில் சாத்தியமானதை பேசுங்கள். 

சுமந்திரனுக்கு எதிரான கும்பல் We want Tamil Eelam என்று கூக்குரல் இட்டதுபோல இருக்கிறது உங்கள் வாதம். 

கட்டியிருந்த வேட்டி ஒருவப்பட்டு கச்சையாகி ஆகி, பின்னர் அதுவும் கோவணமாகி, பின்பக்கமும் கழன்று முன்பக்கத்தை மட்டும் மறைக்கும் முக்கால் நிர்வாண நிலையில் நாம் நிற்கிறோம். அதனை மறந்துவிடாதீர்கள்.

நேற்றைய சந்திப்பு ஒன்றில் சாணக்கியன் கூறியது " .............. , இறுதியில் நாம் சிங்களவருடன்தான் (இலங்கையில்) வாழவேண்டும்""

இதுதான் யதார்த்தம். 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kapithan said:

நான் எதோ விளக்கம் கொடுக்க நீங்கள் ஏதோ சொல்வது நல்லாய்த்தான் உள்ளது அமைதியாகுவது நல்லது .

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்திலிருந்து புலம் நோக்கி வரும் அரசியல்வாதிகளின் ஒன்று கூடல்களை  முடிந்தால் புறக்கணியுங்கள்.

இல்லையென்றால் கேள்விகளால் மட்டும் துழைத்தெடுங்கள், அதைவிடுத்து ஒரு ஒன்றுகூடல் நடுவே காவல்துறை வரும் அளவிற்கு சர்ச்சைகளை உருவாக்கினால், அது எம் பக்கம் உள்ள நியாயங்கள் அடிபட்டு போகவே வழி வகுக்கும்.

 எங்கட ஊர் பொலிஸ் போலவா? ஒரு தடவை காவல்துறை வந்துபோனால் அந்த சம்பவத்தின் பதிவுகள் காலம் முழுவதும்  அந்தநாட்டு அரசுகள் பதிவிலிருக்கும், பின்னர் சுமந்திரன் மிக சிறந்த ஜனநாயகவாதியாகவும், அவர் பண்ணிய தவறுகளை தட்டிகேட்ட நீங்கள் குற்றவாளிகளாகவும் முன்னிலைபடுத்தபடுவீர்கள்.

ஒவ்வொரு தேர்தலின்போதும் தாயகத்தில் உள்ள தமிழர்கள் இவர்கள் சார்ந்த கூட்டங்களை தம் வாக்குபலத்தால் ஒட்டு மொத்தமாக தோற்கடித்தால் மட்டுமே வெளிநாட்டு அரசுகள் இவர்கள் வெற்று வேட்டுக்கள் என்று ஏற்றுக்கொள்ளும், 

மற்றும்படி அங்குள்ள மக்கள் குழப்ப நிலையில் இவர்கள் சார்ந்த கூட்டங்களை தேர்தல்களில் தேர்வு செய்ய இங்குள்ள புல பிரஜாவுரிமை பெற்ற  தமிழர்கள் இந்த அரசியல்வாதிகளுக்கெதிராய் முழக்கங்கள் செய்தால் எந்த வகையில் இதெல்லாம் புல தமிழர்கள் வாழும் அந்தநாட்டு அரசுகளால் பார்க்கபடும்? 

மற்றும்படி ஜனநாயக ரீதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை இங்குள்ள கிரிமினல்கள் எதிர்க்கிறார்கள் என்றே அவர்களால் பார்க்கப்படும்.

அவர்களுக்கு தெரியுமா இவர்களின் தில்லாலங்கடி? அவர்களுக்கு தேவைப்படுவதெல்லாம் ஆதாரங்கள் மட்டுமே, அசம்பாவிதங்கள் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

தமிழ்தேசிய வாதிகள் எண்டாலே படிப்பறிவில்லாத மொக்குகூட்டம் எண்டமாதிரி ஆக்கிபோட்டாங்கள்… இதால எங்கள மாதிரி தமிழ்தேசியவாதிகளுக்கும் அரையாலை சீலைகழண்டு விழுந்தமாரி வெக்கக்கேடா இருக்கு.. புலிகல் இருக்கேக்க நெஞ்சநிமித்தி சொன்னமாரி வெளியால சொல்லேலாமல் கிடக்கு நானும் தமிழ்தேசியவாதி எண்டு.. எல்லாத்துக்கும் காரணம் இப்பாடியானவிடயங்களை புலிகளின் பெயரில் முன்னின்று நடத்தும் காசடிச்ச கள்ளனுவள்தான்..மக்கள் பாவம் புலி என்ற ஒற்றை சொல்லை சொல்லி அவர்கள் இருந்த காலத்தில் இருந்த அமைப்புகளை இப்ப கையகப்படுத்தி வைத்திருக்கும் எந்தகள்ளன் கூப்பிட்டாலும் பழையநினைவில நம்பிபோய் மோட்டு வேலையள் பாத்து ஒட்டுமொத்த தமிழ்தேசியத்தையும் அசிங்கப்படுத்தி நாசமாக்குதுகள்.. 🙁

  • கருத்துக்கள உறவுகள்

எமது தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்கிய சக்திகளில் அமெரிக்காவும் ஹிந்தியாவும் முதன்மையானவை.  இன்று தங்களின் நலனை சீனாவிடம் இருந்து தக்க வைத்துக்கொள்ள தமிழர்களை அணைப்பது போலவும் சிங்களவர்களை நெருங்கிக் கொள்வதாகவும் காட்டிக் கொள்கின்றனர்.

எமது தேசிய தலைமை... இத்தனை ஆயிரம் போராளிகளின் தியாகங்கள் மக்களின் தியாகங்கள் வீண் போகக் கூடாது.. அதற்கு ஒன்றே தான் பலம்.. அது ஒற்றுமை. அந்த ஒற்றுமைக்கான கருவியாக தமிழ் தேசிய இருப்பை தக்க வைத்து.. பல துண்டுகளாகப் பிரிந்து கிடந்த தமிழ் கட்சிகளை உலகம் பேசிக்கொள்ளும் சனநாயகப் பசப்புக்குப் பதில் அளிக்கும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கிக் கொண்டது.

அது அரசியல் பரப்பில் ஒரு தாக்கத்தை தமிழர்களின் உரிமை தொடர்பில் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையும் இருந்தது.

ஆனால்.. 2009 மே இறுதிப் போரிலும் சரி அதற்குப் பின்னும் சரி.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு சென்ற பாதை தேசிய தலைமை எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறானதாக மாறியது.

சிங்கள அரசின இனப்படுகொலை வெற்றி விழாவில் சம்பந்தன் சுமந்திரன் கும்பல் குந்தி இருந்து கொட்டாவி விட்டது. அதுக்கும் மேல்.. ஒரு இனப்படுகொலையாளியான சரத் பொன்சேகாவிற்கு எம் உறவுகளின் இரத்தம் உறைய முதலே வாக்குக் கேட்டார்கள்.

இன்று எம்மை 1987 இல் இருந்து தொடர்ந்து பழிவாங்கி வரும் ஹிந்தியாவுக்கு முண்டு கொடுக்கிறார்கள். எமது விடுதலைப் போராட்டத்தை ஆரம்பம் முதல் பயங்கரவாதமாக உச்சரித்து அதனை ஒடுக்க மனித குலமே அஞ்சத்தக்க வழிமுறைகளை பயிற்சி மூலமும் ஆயுத விநியோகங்கள் மூலமும் அளித்த அமெரிக்காவிடம் போய் தமிழர்களுக்கு என்ன தீர்வை தரச் சொல்லி இவர்கள் கேட்டார்கள்..??!

ஹிந்தியா.. புலிகள் இருந்த போது ஒரு கதை இப்போ.. இன்னொரு கதை.. இலங்கை -ஹிந்திய ஒப்பந்தத்திற்குள் தான் சமரசம்.. என்றாகி நிற்கிறது. தமிழ் மக்களோ ஹிந்திய - இலங்கை ஒப்பந்தம் தமக்குரிய தீர்வை வழங்காது என்பதில் திடமாக இருக்கிறார்கள். 13 வது திருத்தம் போதுமானதல்ல.

இனப்படுகொலை.. இன அழிப்பு.. சுயநிர்ணய உரிமை.. தமிழர் தாயகம்.. இது எதனையும்.. தமிழர்கள் சார்ந்து கொள்கை அளவில் கூட ஏற்க முடியாத ஹிந்தியா.. அமெரிக்கா எப்படி தமிழர்கள் விரும்பும் அரசியல் உரிமையை பெற்றுக் கொடுப்பார்கள்.

சுமந்திரன் கும்பல்.. தமிழ் மக்களின் ஒற்றுமைக் குரலாக.. தமிழ் தேசிய குரலாக ஒலிக்கவில்லை. மாறாக தமிழரசுக் கட்சி என்ற தனி நபர் சிலரின் கும்பலாகவே ஒலித்தனர். 

சுமந்திரன் சொறீலங்காவில் இருக்கும் போதும்.. ஒன்றுபட்ட நாட்டுக்குள்.. சிங்கள மக்களோடு வாழக் கிடைத்த பாக்கியத்துக்குள் தீர்வு தேடும் நபர்.  அவர் கனடாவில் போய் பேசி இருக்கும் விடயம்.. சிங்கள மக்களிடம் தமிழ் மக்களின் தீர்வை பெறனுமாம். 

உலகில் எங்கு பாதிப்பை உண்டு பண்ணுறவன்.. பாதிக்கப்படுபவனுக்கு தீர்வு வழங்கிறான்..??!

ஆக சுமந்திரனின் சுயநல சுத்துமாத்திற்கு கும்பிடு போடும் கும்பல்களை எதிர்ப்பது கனடா போன்ற சனநாயக நாட்டில் சாத்தியம். கனடா பொலிஸாரே அதை தடுத்து நிறுத்தவில்லை. ஆனால்.. எம்மவர்கள் சுமந்திரனின் சுத்துமாத்தை வெளிப்படுத்தியற்கு கண்டனமாம். இது எவ்வளவு மோசமான மக்களை ஏமாற்றும் ஒரு நிலைப்பாடு.

இணைத்தலைமை நாடுகளில் அங்கம் வகித்த அமெரிக்கா விடுதலைப் புலிகள் மூலம் தமிழ் மக்கள் நிதி பலம் பெறுவதைக் கூட விரும்பி இருக்கவில்லை. தனது தமிழர் விரோத நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. அது ஒரு பெரும்  இன அழிவுக்கு இட்டுச் சென்றது. அந்த இன அழிப்பைக் கூட பின் போர்க்குற்றம்.. என்ற நிலைக்கு தரமிறக்கி.. பின் இன நல்லிணக்கம்.. என்ற பசப்புக்குள் கட்டிப் போட்டு சாமர்த்தியமாக சிங்களவனின் தலையை தடவிக் கொண்டு சுமந்திரன் சம்பந்தன் போன்ற சுயநலச் சுத்துமாத்துக்களை முதுகில் தட்டியும் கொடுத்து வருகிறது.

அமெரிக்கா - ஹிந்தியா உண்மையாகவே சிங்கள அரசுகளால் இன அழிப்புக்கு உள்ளான.. தமிழ் மக்களின் அரசியல் உரிமையை இலங்கைத் தீவில் பெற்றுக் கொடுக்க நினைத்தால்.. எத்தனையோ மார்க்கங்கள் உள்ளன. சர்வதேச சட்டங்களுக்கூடாக. ஆனால்.. அது எதனையும் செய்யாமல்.. தமிழர்களின் சனநாயக பலமான.. தமிழ் தேசிய ஒற்றுமையை சிதைத்து தனிக் கட்சிகளாப் பிரித்துவிட்டு.. இப்போ.. தமிழரசுக் கட்சியுடன் தமிழர்களின் பிரச்சனையை மட்டுப்படுத்தி கொள்வது என்பது அமெரிக்கா - ஹிந்தியா மீண்டும் மீண்டும் தமிழ் மக்களை தமது சுயநலனுக்காக..ஏமாற்ற முற்படுவதையே காட்டுகிறது. இதற்கு சுமந்திரன் சம்பந்தன்.. எப்போதும் போல்.. அவர்களின் வழித்தோன்றல்கள் வழியில்.. முண்டு கொடுத்து சொந்த இனத்தைக் காட்டிக்கொடுத்து வருகின்றனர்.

இதனை கண்டிக்க.. உண்மையாக தமிழர்களின் அவல நிலை அறிந்த எல்லோருக்கும்.. உரிமை உண்டு. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுடைய மக்கள் தொடர்ச்சியாக தலை நிமிர்ந்து இன்றைக்கும் வாழக் கூடிய ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். அதைச் செய்யவேண்டிய பொறுப்பு எங்களிடத்தில் மக்கள் கொடுத்திருக்கிறார்கள். வேறு எவரிடத்திலும் அதைக் கொடுக்கவில்லை. தொடர்ச்சியாக எங்களுடைய கையிலே அந்த பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதை நாங்கள் செய்வோம்! எங்களுடைய மக்கள் அந்த பொறுப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பிடத்திலே ஒப்படைத்திருக்கும் வரைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதனைச் செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று பெயரளவில்..வெறும் 3 கட்சி அமைப்பாகவும்.. தமிழரசுக் கட்சியின் போர்வையாகவும் உள்ளதே அனறி  அது கொள்கை அளவில்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2009 க்கு முன் வரிந்து கொண்டிருந்த.. கொள்கைக்கு நம்பிக்கையாக நடக்கும் கட்சியாக இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிதைவுக்கு சுமந்திரன் தான் முக்கிய சூத்திரதாரி. கனடாவில் போய் சாணக்கியனும்.. சுமந்திரனும் முன்னிலைப்படுத்தியது.. தமிழரசுக் கட்சியையும்.. ஹிந்தியாவையும் தான் அதிகம்.  

கூடவே தமிழ் மக்களின் உரிமையை ஹிந்தியாவின் விருப்புக்குள் கட்டிப்போடும் அபந்தத்தை செய்து வருகின்றனர். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இதுவும் இன்று வாட்ஸபில் வந்தது காலை.

இனி இது இரகசியம் அல்ல

கொழும்பிலிருந்து மூத்த சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் தொலைபேசி அழைப்பு எடுத்தார். கனடாவில் என்ன நடந்தது என்று கேட்டார். கூட்டத்தில் குழப்பம் என்றேன். அவர் கூறிய விளக்கம்,

"யதார்த்தவாதிவெகுசன விரோதி' என்பதை உணர்த்தியது.

"கனடா கூட்டத்தில் சுமந்திரனுக்கு எதிராக ஒரு கும்பல் கூச்சல் போட்டு கூட்டத்தையே குழப்பிய விடயம், தென்னிலங்கை சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவுகின்றது. எல்லா இடங்களிலும் பேசுபொருளாக அடிபடுகின்றது. அது மட்டுமல்ல, சிங்களவர்களுக்கு அதனால் பெரும் கொண்டாட்டம். மகிழ்ச்சி'' - என்றும் அவர் கூறினார்.

"வைரலாகும் அந்த வீடியோவில் தமிழில் என்ன கூச்சலிடுகின்றார்கள் என்று தெரியுமா'' என்று கேட்டேன்.

"தெரியவில்லை. ஆனால் ஓரிரு சொற்கள் புரிகின்றன, "துரோகி' என்ற சொல்லின் அர்த்தம் விளங்குகின்றது.''  என வழமைபோல ஆங்கிலத்தில் பதில் தந்தார்.

"ஏன் சிங்கள மக்களுக்குக் கொண்டாட்டம்?''  என்று கேட்டேன்.

"தமிழர்களுக்காக, சிங்கள மக்களுக்குக் கோபம் வரத் தக்க விதத்தில், உரிமைபற்றிப் பேசுகின்றவர் இவர்தானே... இவரின் சட்டத் திறமையை வைத்துத்தானே தமிழர் தரப்பு எங்களுக்கு நீதிமன்றங்கள் ஊடாகத் தண்ணி காட்டுகின்றது. அவரை அவரது மக்களே துரத்துவது என்றால் சிங்கள மக்களுக்குச் சந்தோசம் தானே? அதுவும் ராஜபக்ச சகோதரர்களின் ஆதரவாளர்களுக்கு - குறிப்பாக மொட்டுக் கட்சிக்கு பொயிண்ட்தானே...! என்று பல நியாயப் பாடுகளை அவர் எனக்கு எடுத்துரைத்தார்.

நான் அவருடன் விவாதிக்கப் போகவில்லை. ஆனால் ஒரே ஒரு கேள்வி கேட்டேன். "அந்தக் கூட்டத்துக்குப் புலிக் கொடி ஆயத்தத்துடன் வந்து திட்டியவர்கள் சுமந்திரனை என்ன சொல்லி அழைத்தார்கள் என்பது தெரியுமா?'' - என்று நான் கேட்டேன்.

"அடிக்கடி துரோகி என்றார்கள். இடையிடையே "கோட்டாவின் கையாள்' என்றும் திட்டினார்கள்.''  என்றேன் நான்.

"அப்படியும் பேசினார்களா? அது உண்மை என்றால் ஏன் அவரைத் திட்டியதற்கு கோட்டாவின் ஆள்கள் மகிழ்ச்சி கொண்டாட வேண்டும்.?' என்று அவரே விளங்காதவராக - புரியாதவராக - என்னைக் கேட்டார்.

நான் ""யதார்த்தவாதி வெகுசன விரோதி' என்ற தமிழ்ப் பதத்தின் கருத்தை எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் அவருக்குப் புரிய வைத்தேன்.

சுமந்திரனின் கூட்டத்தில் கூச்சலிட்டுக்குழப்பம் விளைவித்தவர்களிடம் கேட்பதற்கு என்னிடம் இரண்டு கேள்விகள்
உள்ளன.அவையும் கூட அங்கு - கூட்டத்தைக் குழப்பிய போது - அவர்கள் எழுப்பிய கேள்வியை ஒட்டி எழுந்த சந்தேகங்கள்தான்.

ஒன்று - "எங்களுக்கு உங்கள் தீர்வு வேண்டாம் தமிழீழம்தான் வேண்டும்.''  என்றீர்களே! நிச்சயம் அந்தத் தனிநாட்டை சுமந்திரன் பெற்றுத் தரமாட்டார். பெற்றுத் தருவேன் என்று வாய்ச்சவடால் அடிக்கவும் மாட்டார். சரி, நீங்கள் கூறியபடி "துரோகி சுமந்திரனை ' எங்கள் அரசியலிருந்து துரத்தியடிப்போம். அதற்குப் பிறகு நீங்கள் கூறும் தனிநாட்டுத் தீர்வை யார் பெற்றுத் தருவது? நீங்கள் கனடாவிலும், பிற இடங்களிலும் புலிக்கொடி பிடித்துப் போராட்டம் நடத்த, இங்கு நாடு பிளவுபட்டு தன்பாட்டில் தனிநாடு வந்து விடுமா?''

அடுத்த ஒரு கேள்வி. இதைக் கேட்பதற்கு எனக்கு உரிமை உண்டு. எந்த அச்சுறுத்தல் வந்தும் மண்னை விட்டு ஓடாத எம்தேச மக்களில் நானும் ஒருவன். (அதற்கும் கூட அங்கிருந்தபடி நாமம் சூட்ட தகுதியான சூரர்கள் நீங்கள். இங்கு ராஜபக்சக்களின் கொடூரத்தை எழுத்தில் துணிச்சலுடன் வெளிக் கொணரும் எங்களை உங்கள் பசப்பு வாயால் "கோட்டாவின் ஆள்' என்று நாமம் சூட்ட நீங்கள் தயங்க மாட்டீர்கள். அதற்கு நேரமும் செல்லாது. ஆனால் அவை பற்றி அலட்டிக் கொள்ளும் நிலையில் நாங்களும் இல்லை, இனி கேள்விக்கு வருகிறேன்.

கூட்டமைப்பை பார்த்து - அல்லது சுமந்திரனைப் பார்த்து - அங்கிருந்த சிலர் திரும்பத் திரும்ப ஒரு கேள்வியை எழுப்பினர்.

"இந்தப் பன்னிரண்டு வருடங்களாக என்ன பிடுங்கினீர்கள்?'' - என்பதுதான் அந்தக் கேள்வி.

அந்தக் கேள்வியை எழுப்பியவர்கள் ஏதோ 2009 மே வரை தலைவருக்குப் பக்கத்தில் நின்று போராட்டத்தை ஒப்பேற்றிமுடித்துவிட்டு, அதற்குப் பிறகு, பொறுப்பை சுமந்திரன் ஆதியோரிடம் விட்டுவிட்டு வந்தவர்கள் மாதிரிக் கேள்வி எழுப்பினர்.

சரி, அப்படியே இருக்கட்டும்.

தனிப் பிஸ்டலுடன் தொடங்கிய விடுதலைப் போராட்டத்தை முப்படை கொண்டு - தனியான தாயக தேசத்தை ஒரு நாடு போல வைத்திருந்த - ஒரு கட்டமைப்பை முப்பது ஆண்டுகளில் கட்டி எழுப்பி, கடைசியாக நாங்கள் சாதித்தது என்ன?'' - என்ற கேள்வி சுமந்திரன் பக்கத்திலிருந்து வந்திருக்குமானால், அந்தப் போராட்டத்துடன் நின்ற நான் உட்பட நாங்களும், இன்று கனடாவில் பதுங்கிக் கொண்டிருக்கும் அந்த நண்பர்களான நீங்களும் என்ன பதில் கூறுவது?

போராட்டத்தின் முடிவில், தோற்றுப் போன சமூகமாக - பெளத்த, சிங்களப் பேரினவாதத்தினால் எப்படியும் பந்தாடப்படக் கூடிய - மிக ஈனமான நிலையில் கைவிடப்பட்டவர்களாகவே நாம் இருந்தோம். இந்தப் பத்து வருடங்களுக்குள் கணிசமான சுயத்தைத் தொலைத்த நாம், இருப்பதையும் தொலைத்து விடும் பேராபத்தில் சிக்குப்பட்டிருக்கையில், அங்கி ருந்து கொண்டு நீங்கள் "மகாதத்துவம்' பேசுவதில் அர்த்தமில்லை.

சுமந்திரனை விடுங்கள், தொலைந்து போகட்டும். உங்கள் கருத்தில் ரணில் அதிகாரத்தில் இருந்தால் அவர் "ரணிலின் கையாள்'; மஹிந்தர் அதிகாரத்தில் இருந்தால் "மஹிந்தரின் கையாள்'; கோட்டாபய அதிகாரத்தில் இருந்தால் "கோட்டாவின் கையாள்.' அப்படி அங்கிருந்து தத்துவம் பேசி, இந்தக் குழப்பத்தில் கனடாவில் பிழைத்துக் கொள்ளாமல் இங்கு வாருங்கள். "துரோகி சுமந்திரனை' ஒழித்துக் கட்டிவிட்டு, நானும், நாமும், நீங்களும் சேர்ந்து, சுமந்திரன் எச்சரித்தமை போல அழிந்து வரும் தாயகத்தைக் காப்போம். அதற்கு நீங்கள் தயாரா?

எங்களோடு இங்கு நீங்கள் இருந்து கொண்டு, இந்தத் துரோகிப் பட்டத்தை சுமந்திரனுக்கு நீங்கள் தொடுத்திருந்தால் அதில் நியாயமுண்டு. கனடாவில் பதுங்கிக் கொண்டு, "கனடாப் பக்கம் வராதே!' என்று சுமந்திரனை மட்டும் அல்ல, கருணா, பிள்ளையானைக் கூட கலைப்பதற்கு உங்களுக்குத் தார்மீகத் தகுதி இல்லை.இங்கு தாயக மண் பறிபோய்க் கொண்டிருக்கின்றது. உங்களின் அந்தக் கூட்டத்தில் சுமந்திரன் சுட்டிக்காட்டியமை போல, இந்தப் போக்கு இப்படியே தொடர்ந்தால் தமிழர் தாயகமும் இங்கு மிஞ்சாது, தமிழனும் மிஞ்சான் என்பதுதான் நிலைமை.

நீங்கள் நேற்றுப் பெருஞ்சாதனை செய்தமை போல "கோட்டாவின் கையாள்' சுமந்திரனை இங்கிருந்தும் "துரோகி' என்று பட்டம் சூட்டி எல்லோரும் சேர்ந்து கலைத்து விடுவோம். உங்கள் ஒவ்வொருவருக்கும் இங்கே (களத்தில்) வாழ ஆபத்து இருப்பது போலத்தான் எங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது. ஆனாலும் நாங்கள் வாழுகிறோம்.

இப்போது "கோட்டாபயவின் கையாள்' துரோகி சுமந்திரனைத் கலைக்க வேண்டும். நீங்கள் குறிப்பிட்டமை போல தமிழீழம் பெறவேண்டும். ஆகவே வாருங்கள். துரோகியான சுமந்திரனைத் துரத்தியமையால் அந்தப் பொறுப்பு - தமிழர் தாயகத்தை காப்பாற்றும் பொறுப்பு - எங்களையும் உங்களையும்தான் சேர்ந்தது.

சுமந்திரனைத் துரோகிப் பட்டம் சூட்டிக் கலைப்பதற்கு உங்களுக்கு இருந்த வீராவேசம் போதாதா தமிழர் தாயகத்தை இங்கு காப்பதற்கு? ஆகவே வாருங்கள். பார்த்திருக்கிறோம். வருவீர்களா? ஒரே ஒரு பிரச்சினை. இங்கு வேலை இல்லாவிட்டால் "சோசல்' என்ற பெயரில் கொடுப்பனவு தரமாட்டார்கள். அது பழகிவிட்ட உங்களுக்கு ஒரு பிரச்சினை இருக்கும். அவ்வளவுதான்.

இங்கிருந்தும் துரோகி சுமந்திரனைத் துரத்தியடிப்போம். கோட்டாவின் ஆளான அவர் கொழும்பில் போய்ப் பதுங்கட்டும். எப்போது வருகின்றீர்கள்? விளக்குமாற்றுடன் காத்திருக்கிறோம். உங்களை வரவேற்க அல்ல. நீங்கள் இங்கு வந்து சேர்ந் ததும், உங்களுடன் சேர்ந்து சுமந்திரனைத் துரத்தியடிப்பதற்கு - "கோட்டாவின் ஆளான' அவர் கொழும்பில் போய் ஓடிப் பதுங்குவதற்கு....!

- மின்னல் (காலைக்கதிர் 22-11-2021)

இந்த காமாலைக் கதிர் வித்தி தனக்கு  தேர்தலில் இடம் தரவில்லையென்று மாவையுடன் முரண்பட்டு சுமத்திரனுக்கு கால்நக்கி எப்படியாவது ஆரசியலில் ஒரு நல்ல இடத்திற்கு வரவேண்டும் என்ற சுய நலத்தில் சுமத்திரனுக்காக பத்திரிகை நடத்துபவர். சுமத்திரன் ஆவேசம். சம்பந்தன் காட்டம் என்று அவர்களுக்கு குஷியாக தலைப்புப் போடும் இவருக்கு கனடாவில் எதிர்ப்ரபுத் தெரிவித்தவர்களின் செயல் கூச்சலாகத் தெரிகிறது. தனது பிறந்தநாளுக்கு மகிந்த .ரணில் எல்லோரையும் அழைத்துக் கொண்டாடி விட்டு மகிந்த எதிர்ப்பாளனாம்.வித்தியின் கருத்துக்கள் சுமத்திரனுக்கு வைக்கும் ஐஸ் கட்டிகள்  அவ்வளவே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.