Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பால் தேநீர் தயாரிப்பதில் இருந்து விலகிக்கொள்கின்றோம் - சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின் சங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.ஆர்.எம்.வசீம்)

பால்மா விலை அதிகரிப்பு காரணமாக பால் தேநீர் ஒரு கோப்பை 80 ரூபாவுக்கு குறைவாக விற்பனை செய்யமுடியாது. அதனால் நுகர்வோருடன் முரண்படுவதை தவிர்த்துக்கொள்வதற்காக சிற்றுண்டிச்சாலைகளில் பால் தேநீர் தயாரிப்பதில்லை என தீர்மானித்திருக்கின்றோம் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

aavin milk price increase: டீ, காபி விலை தடாலடியாக உயர்கிறது- ஆவின் பால்  விலை அதிகரிப்பால் மக்கள் பாதிப்பு! - coffee, tea rate will increase due to  aavin milk price hike in tamil nadu ...

சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின் சங்கம் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்க பால்மா நிறுவனங்கள் தீர்மானித்திருக்கிறது. அதன் பிரகாரம் ஒருகிலோ கிராம் பால்மா 150 ரூபாவினாலும் 400 கிராம் பால்மா 60 ரூபாவினாலும் அதிகரிக்கப்படுகின்றது.

வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவகையில் ஒருகிலோ கிராம் பால்மா 1345 ரூபாவுக்கு விற்பனையாகின்றது. 

அதேபோல் 400 கிராம் பால்மா பெக்கெட் ஒன்று 540 ரூபாவுக்கு விற்னையாகின்றது. பால்மா நிறுவனங்கள் விலை அதிகரிக்க தீர்மானித்திருக்கின்றபோதும் அரசாங்கம் அது தொடர்பில் மெளனம் காத்துவருகின்றது.

அத்துடன் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பதற்கு அரசாங்கம் கையாளும் புதிய திட்டம்தான், ஆரம்பமாக குறித்த பொருளுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி மக்களை மக்களை அதற்காக வரிசையில் காக்க வைப்பதாகும்.

பின்னர் மக்களின் நிலைமையை அறிந்துகொண்டு விலையை அதிகரித்து குறித்த பொருளை சந்தைக்கு விநியோகிப்பதாகும். இதுதான் அரசாங்கத்தின் சௌபாக்கிய வேலைத்திட்டம்.

சாதாரண மக்கள் வீடடுகளுக்கு கொண்டுசெல்வது 400கிராம் பால்மா பெக்கெட்டுகளாகும். ஆனால் இன்று 400கிராம் பால்மா வாங்குவதற்கு 2அரை டொலர் தேவைப்படுகின்றது.

மேலும் தற்போது அதிகரிக்கப்பட்டிருக்கும் பால்மா விலையானது மக்களுக்கு தாங்கிக்கொள்ள முடியாத சுமையாகும். சிற்றுண்டிச்சாலைகளில் இதுவரை 60ரூபாவுக்கு விற்பனை செய்துவந்த பால் தேநீர் ஒரு கோப்பை தற்போது 80ரூபாவுக்கு குறைவாக விற்பனை செய்ய முடியாது.

ஏனெனில் கொவிட் சுகாதார சட்டத்துக்கமைய சிற்றுச்சாலைகளில் தற்போது தேநீர் பிளாஸ்டிக் கோப்பையிலே வழங்கப்படுகின்றது. அது ஒருமுறை பயன்படுத்திய பின்னர் எறியப்படும். ஆரம்பத்தில் அந்த கோப்பை ஒன்று 2,3ரூபாவுக்கே விற்பனையாகி வந்தது.

தற்போது 6,7 ரூபாவாகின்றது. இந்த செலவுடன் பார்க்கையில் 80ரூபாவுக்கு குறைய பால் தேநீர் விற்பனை செய்யமுடியாது.

அதனால் சிற்றுச்சாலைகளில் பால் தேநீர் தயாரிப்பதில் இருந்து விலகிக்கொள்ள நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம். யாருக்காவது பால் தேநீர் தேவை என்றிருந்தால், விலையை குறிப்பிட்டு பால் தேநீர் தயாரித்து வழங்குவதற்கு சிற்றுண்டிச்சாலைகளுக்கு முடியும்.

ஜனாதிபதி ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், அதாவது 2019 நவம்பர் மாதத்துக்கு முன்னர் ஒரு கோப்பை பால் தேநீர் 30, 40ரூபாவுக்கே விற்பனையாகி வந்தது.

தற்போது 80ரூபாவுக்கு விற்பனை செய்யவேண்டி ஏற்பட்டிருக்கின்றது. இதுதான் அரசாங்கத்தின் சௌபாக்கிய வேலைத்திட்டத்தின் நிலைமையாகும் என்றார்.

பால் தேநீர் தயாரிப்பதில் இருந்து விலகிக்கொள்கின்றோம் - சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின் சங்கம்  | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் ரீ - பன்னில் காலை பொழுதை ஓட்டலாம்

என்னப்பா தேத்தண்ணிக்கும் ஆப்பு வைச்சிட்டினம்..😢

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

இனி அந்த பூனைக்கு பால் வைக்க பசு வளர்த்த சாமியார் போல பசு வளர்த்து பால் குடிக்க வேண்டியது தான்.
 
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

இனி அந்த பூனைக்கு பால் வைக்க பசு வளர்த்த சாமியார் போல பசு வளர்த்து பால் குடிக்க வேண்டியது தான்.
 
அண்மையில் இந்த பால் மா விலை அதிகரிப்பு  பற்றாக்குறை ‌‌பற்றியும் அறிந்து கொண்ட விடையம்.. ஏன் அங்கர் மற்றும் மாக்களை தேடுறீங்கள் என்றும்  ஊரில் உள்ளவர்களிடம் கேட்ட போது இப்போ எல்லாம் பசுக்கள் மிகவும் குறைந்து வந்துட்டாம்.. காரணம் சுனாமியால்,கள்ளர்களால் எல்லாம் ஒளிந்து கொண்டு வந்துட்டாம்..அவற்றுக்கும் போதிய உணவு போட முடியாத நிலை என்று எல்லாம் சொன்னார்கள்.எவ்வளவு தூரம் உண்மை என்று புரியவில்லை.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

சீனிக்கும் தட்டுபாடு வந்தால்? 

தனியே தேயிலை தண்ணிதான் குடிக்கோணும்🙄.

# மாஹாத்தயாட்ட கஹட்ட எக்கக், சீனி நத்துவ🤣.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தது பாணும் பருப்புக் கறிக்கும் ஆப்படிக்கனும்.

எப்ப அடிமட்ட சிங்கள வாக்காளர்களின் வயிறு காயுதோ அப்ப தான் மகிந்த - கோத்தா கும்பலின் இனவாத அரசியல் சேடமிழுக்க ஆரம்பிக்கும். 

சிங்கள பெளத்த பேரினவாதத்தின் தத்துவங்களை பெரிய அடுக்குச் சிங்களவர்கள் வகுத்தாலும் உயிர்கொடுப்பது அடிமட்டச் சிங்களவர்களே. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சீனிக்கும் தட்டுபாடு வந்தால்? 

தனியே தேயிலை தண்ணிதான் குடிக்கோணும்🙄.

# மாஹாத்தயாட்ட கஹட்ட எக்கக், சீனி நத்துவ🤣.

தே வத்துரு எக்காக் , கருப்பட்டி பாகையாக் தெண்ட அய்யே...  😁

சர்க்கரை நோயாளிகளுக்கான கருப்பட்டி காபி தயார் செய்வது எப்படி? - ESamayal

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

பிளையின் ரீ 3சதம், பால் ரீ 5சதம் அது ஒரு காலம், அது எங்கள் காலம்.🤗

  • கருத்துக்கள உறவுகள்

https://youtu.be/twNRi47Mm0Q

BBC

Unfortunately no subtitles. 
Note - I found it distressing to watch pats of it…

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, யாயினி said:

ஏன் அங்கர் மற்றும் மாக்களை தேடுறீங்கள் என்றும்  ஊரில் உள்ளவர்களிடம் கேட்ட போது இப்போ எல்லாம் பசுக்கள் மிகவும் குறைந்து வந்துட்டாம்..

😂

எங்கள் ஆட்கள் சிலர் வெளிநாட்டிலும் இலங்கை பால் மா அங்கர் என்று நினைக்கிறேன் பாவிப்பதை கண்டுள்ளேன். ஏன் பாலாக பாவிப்பது இல்லை என்றதிற்கு இது மாதிரி சுவை வருமோ என்றார்கள். 

7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

என்னப்பா தேத்தண்ணிக்கும் ஆப்பு வைச்சிட்டினம்..😢

இந்தியா தேத்தண்ணி எப்படி என்று தெரியாது இலங்கையில் அவர்கள் பாலுக்குள்  கொஞ்சம்  தேத்தண்ணி விட்டு வல்லவன் சொன்ன மாதிரி சீனியை அள்ளி போட்டு கரைத்து குடிப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

பிளையின் ரீ 3சதம், பால் ரீ 5சதம் அது ஒரு காலம், அது எங்கள் காலம்.🤗

எங்கள் காலத்தில் அஞ்சு சதமும், பத்து சதமும்…!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Paanch said:

பிளையின் ரீ 3சதம், பால் ரீ 5சதம் அது ஒரு காலம், அது எங்கள் காலம்.🤗

21 minutes ago, புங்கையூரன் said:

எங்கள் காலத்தில் அஞ்சு சதமும், பத்து சதமும்…!

எங்கடை காலத்திலை தேத்தண்ணி ஐஞ்சு சதம் மூண்டு சதம் போனது எண்டு புலம்புறவையள் அப்ப ஒரு பிழா கள்ளு என்ன விலை போனது எண்டதையும் சொல்லி துலைக்கிறது....:cool:

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

எங்கடை காலத்திலை தேத்தண்ணி ஐஞ்சு சதம் மூண்டு சதம் போனது எண்டு புலம்புறவையள் அப்ப ஒரு பிழா கள்ளு என்ன விலை போனது எண்டதையும் சொல்லி துலைக்கிறது....:cool:

ஒரு பிழா  பனங் கள்ளு. 65 சதம், தென்னங்கள்ளு 55 சதம். ( ஆண்டு 1970’ கள்)

டிஸ்கி: பிளா ஃபிரீ.  வீட்டை கொண்டு வரலாம். 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, தமிழ் சிறி said:

ஒரு பிழா  பனங் கள்ளு. 65 சதம், தென்னங்கள்ளு 55 சதம். ( ஆண்டு 1970’ கள்)

டிஸ்கி: பிளா ஃபிரீ.  வீட்டை கொண்டு வரலாம். 😂

ஆதாரம்...இருக்கா? 😎
எங்கை எப்ப கள்ளடிச்சனீங்கள்?  😁

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

ஆதாரம்...இருக்கா? 😎
எங்கை எப்ப கள்ளடிச்சனீங்கள்?  😁

அந்த வயதில்…. இதுக்கு எல்லாம் ஆதாரங்களை அளித்து விட்டுத்தான்,

கள்ளுக் கொட்டிலுக்குள்ளேயே… கால் கைக்கிறது. 😁 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஆதாரம்...இருக்கா? 😎
எங்கை எப்ப கள்ளடிச்சனீங்கள்?  😁

கேட்டுத் தெரிஞ்சு என்ன செய்யலாம்? பெருமூச்சு விடலாம் ஆனா அந்தகாலத்துக்கு போய் கள்ளடிக்கேலாது சாமியார்! மனதை தேத்திக்கொள்ளுங்கோ. அது அந்தக்காலம், நிலாக்காலம். கொடுத்து வைச்சவங்கள் ஆனா அவர்களும் எங்களைப்போல தங்கள் முன்னைய காலத்தை கேட்டு ஏங்கியிருப்பார்களோ புலம்பியிருப்பார்களோ  என்னவோ?

1 hour ago, தமிழ் சிறி said:

டிஸ்கி: பிளா ஃபிரீ.  வீட்டை கொண்டு வரலாம். 😂

பிளாவை வீட்டை கொண்டுவந்து என்ன சொல்லி தொலைத்து  முழித்தீர்கள்? கூழ் குடிக்க கொண்டாந்தேன் என்றியளோ? ஆதாரம் இது ஒன்றே போதுமே!

  • கருத்துக்கள உறவுகள்

https://www.dailymirror.lk/breaking_news/Minimum-bus-fares-increased-to-Rs-17-Dilum/108-227917
 
குறைந்த பட்ச பஸ் கட்டணம் 14 இல் இருந்து 17 ரூபாய் ஆகியுள்ளது.

90 களின் இறுதியில் 1.50 என நியாபகம்.

2018 இல் 8 ரூபாய் கொடுத்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

எங்கடை காலத்திலை தேத்தண்ணி ஐஞ்சு சதம் மூண்டு சதம் போனது எண்டு புலம்புறவையள் அப்ப ஒரு பிழா கள்ளு என்ன விலை போனது எண்டதையும் சொல்லி துலைக்கிறது....:cool:

அந்த வயதில் கள்ளு விலை எல்லாம் எனக்குத் தெரியாது சாமியார், அப்பத்துக்குக் கள்ளுவாங்க அம்மாவே களிசானை இறுக்கக் கட்டி ஒரு பேணியும் தந்து அனுப்புவார், நாலு கொட்டிலுக்குப் போனால் மூன்று கொட்டில் கள்ளு என் வயிற்றில் தஞ்சம் பெறும். ஒரு கொட்டில் கள்ளுத்தான், அதிலும் அரைவாசிதான் அம்மா சுடும் அப்பத்தைச் சேரும்.😝

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விளங்க நினைப்பவன் said:

😂

இந்தியா தேத்தண்ணி எப்படி என்று தெரியாது இலங்கையில் அவர்கள் பாலுக்குள்  கொஞ்சம்  தேத்தண்ணி விட்டு வல்லவன் சொன்ன மாதிரி சீனியை அள்ளி போட்டு கரைத்து குடிப்பார்கள்

ம்ம் .. கலர பார்த்தால் அப்படி தெரியல தோழர் . தேத்தண்ணீருக்குள் கொஞ்சமா பாலை விடுற மாதிரி கிடக்கு ..

(யாழ் தேத்தண்ணீர் கடை)

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

(யாழ் தேத்தண்ணீர் கடை)

அந்த 120வது நிமிடத்தில் இருந்து கரண்டியால் விழுகிற அடி ஏன் தெரியுமா??சிறீலங்கன் சீனி லேசில கரையாது, செம அடி கொடுத்தால் உடனே கரையும்.🐯😜

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, யாயினி said:

அண்மையில் இந்த பால் மா விலை அதிகரிப்பு  பற்றாக்குறை ‌‌பற்றியும் அறிந்து கொண்ட விடையம்.. ஏன் அங்கர் மற்றும் மாக்களை தேடுறீங்கள் என்றும்  ஊரில் உள்ளவர்களிடம் கேட்ட போது இப்போ எல்லாம் பசுக்கள் மிகவும் குறைந்து வந்துட்டாம்.. காரணம் சுனாமியால்,கள்ளர்களால் எல்லாம் ஒளிந்து கொண்டு வந்துட்டாம்..அவற்றுக்கும் போதிய உணவு போட முடியாத நிலை என்று எல்லாம் சொன்னார்கள்.எவ்வளவு தூரம் உண்மை என்று புரியவில்லை.

பிரதானமாக அக்கறை அற்ற நிலை, கஸ்ரப்படாமல் காசை குடுத்து பால்மா வாங்கி குடிக்கும் மனநிலை.
பசு மாடு, கோழி எல்லாம் விலை கூடிக்கொண்டு போகுது.

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் தொடக்கமே.
போகப்போக இன்னும் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

எங்கடை காலத்திலை தேத்தண்ணி ஐஞ்சு சதம் மூண்டு சதம் போனது எண்டு புலம்புறவையள் அப்ப ஒரு பிழா கள்ளு என்ன விலை போனது எண்டதையும் சொல்லி துலைக்கிறது....:cool:

16 hours ago, தமிழ் சிறி said:

ஒரு பிழா  பனங் கள்ளு. 65 சதம், தென்னங்கள்ளு 55 சதம். ( ஆண்டு 1970’ கள்)

டிஸ்கி: பிளா ஃபிரீ.  வீட்டை கொண்டு வரலாம். 😂

நாடி.. நரம்பு… ரத்தமெல்லாம்.. கள்ளு வெறி ஊறினவங்கள்…😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

நாடி.. நரம்பு… ரத்தமெல்லாம்.. கள்ளு வெறி ஊறினவங்கள்…😂

வசிஸ்டர் வாயால் பிரம்மரிசி 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

பிரதானமாக அக்கறை அற்ற நிலை, கஸ்ரப்படாமல் காசை குடுத்து பால்மா வாங்கி குடிக்கும் மனநிலை.
பசு மாடு, கோழி எல்லாம் விலை கூடிக்கொண்டு போகுது.

விலை கூடுவது நல்லது, அதனை வளர்ப்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் மற்றவர்களையும் வளர்க்க தூண்டும்.

சிறீலங்காவில் பொதி செய்த(பதப்படுத்திய) பால் மிகவும் குறைவு அத்துடன் எல்லார் வீட்டிலும் குளிர்சாதனப் பெட்டி இல்லையே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.