Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அபாயா ஆடையால் திருகோணமலை இந்து கல்லூரியில் சர்ச்சை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அபாயா ஆடையால் திருகோணமலை இந்து கல்லூரியில் சர்ச்சை

 

image_7dca67b09f.jpg

 

 

பைஷல் இஸ்மாயில் - 

அபாயா அணிந்து வரவண்டாமென கூறியிருந்த போதிலும், ஆசிரியை ஒருவர் குறித்த ஆடையுடன் கல்லூரிக்கு சென்றதால் திருகோணமலை சண்முக இந்து கல்லூரியில் சர்ச்சை நிலை உருவாகியுள்ளது.

ஆசிரியையின் இந்த செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலை சண்முக இந்து கல்லூரிக்கு முன்பாக, மாணவிகள் இன்று (02) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2017ஆம் ஆண்டு இப்பாடசாலையில் அபாயா   பிரச்சினை பாரிய பிரச்சினையாக உருவெடுத்த நிலையில், அப்பாடசாலையில் ஏற்கெனவே கடமையாற்றி வந்த ஆசிரியை மீண்டும் பாடசாலைக்கு இன்று (02) சென்றுள்ளார்.

இந்நிலையில் ,குறித்த பாடசாலை அதிபர் காரியாலயத்தில் கடமை பொறுப்பேற்க சென்ற நிலையில், பாடசாலை நிர்வாகத்துக்கும் குறிப்பிட்ட பெண் ஆசிரியருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

  பாடசாலையின் அதிபர் தன்னை தாக்கியதாகவும்,  அபாயா அணிந்து வந்த ஆசிரியையும், அபாயா அணிந்து வந்திருந்த ஆசிரியை தாக்கியதாக அதிபரும்,   திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறுவதற்கென சென்றுள்ளனர்.

எனினும், இந்த விவகாரம் தொடர்பில் மாணவிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டம் தொடர்கின்றது. இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tamilmirror Online || அபாயா ஆடையால் திருகோணமலை இந்து கல்லூரியில் சர்ச்சை

  • Replies 69
  • Views 4.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை ஷண்முஹா ஹபாயா விவகாரம் : இன்று பாடசாலைக்குச் சென்ற ஆசிரியையை பாடசாலை வளாகத்தினுள் வைத்து கழுத்து நெரிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி.

 

AVvXsEi9d-TA9Vw-YxRMYFU4yjhRYObzBBbrbQJtl4f8DenlXjASToWLfrCSzQ2nPMlFkGgevGLtLLJ5uFSb1D7PnPiQe3qsEn7ZBV1sGquKM6lL_LMcyGxA9AKFhuqK-a-j79Z6XIn2nEUUfWL6tpqKrnDEk0Bm3-ggdZoSYUiMOJ-ng_RaC1tk8Cuv1xIT=s16000

திருகோணமலை ஷண்முஹா இந்து மகளிர் கல்லூரியில் இருந்து ஹபாயா அணிந்து சென்ற காரணமாக

வெளியேற்றப்பட்ட ஆசிரியை பாத்திமா பஹ்மிதா அவர்கள் நீதிமன்றத்தில் இருதரப்பிற்குமிடையில் ஏற்பட்ட புரிந்துணர்வின் காரணமாக இன்று மீண்டும் பாடசாலைக்கு கடமை ஏற்க சென்ற போது பாடசாலைக்குள் கூடியிருந்த வெளியாட்கள் சிலரால் மிரட்டப்பட்டது மாத்திரமல்லாமல் கூட்டத்தில் இருந்த ஒருவரால் ஆசிரியையின் கழுத்து நெரிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

2017ல் ஹபாயா அணிந்து கற்பிக்கச் சென்ற ஆசிரியைகளை ஹபாயா அணிந்து வந்ததன் காரணமாக பாடசாலையை விட்டு ஷண்முஹா கல்லூரி நிர்வாகம் வெளியேற்றியது. மனித உரிமை ஆணைக்குழுவில் ஆசிரியைகள் செய்த முறைப்பாட்டை விசாரித்த ஆணைக்குழு ஆசிரியைகளின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக முடிவு செய்ததோடு ஆசிரியைகளை மீள ஷண்முஹாவிற்கு உடனடியாக அனுமதிக்குமாறு பிரேரித்தது.

 

மனித உரிமை ஆணைக்குழுவின் பரிந்துரை வெளியாகி வருடங்களாகியும் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் அதனை நடைமுறைப்படுத்தக் கோரி பாதிக்கப்பட்ட ஆசிரியைகளில் ஒருவரான ஆசிரியை பஹ்மிதா ரமீஸ் அவர்கள் மேல் முறையீட்டு நீதி மன்றத்தில் ரிட் (Writ) மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.

 

சென்ற மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரச தரப்பு இணக்கப்பாட்டிற்கு வருவதாகக் கூறியதைத் தொடர்ந்து அதனை ஏற்றுக் கொண்ட மனுதாரரான ஆசிரியை பஹ்மிதா தான் மீண்டும் ஷண்முஹாவிற்கு அனுமதிக்கப்படவேண்டும் என்று கேட்டிருந்தார். அதனை ஏற்றுக் கொண்ட அரச தரப்பு இன்று (02.02.2022) ஆசிரியை பஹ்மிதாவை மீண்டும் ஷண்முஹாவிற்கு கடமையை ஏற்குமாறு அனுமதித்தது. அதற்கான கடிதத்தினை கல்வி அமைச்சு அனுப்பியிருந்தது.

 

அதன் பிரகாரம் இன்று ஷண்முகாவிற்கு கடமையேற்கச் சென்ற ஆசிரியை பாத்திமா பஹ்மிதாவை அதிபரின் காரியாயலயத்தில் கூடியிருந்த பலர் தடுத்ததோடு தகாத வார்த்தைகளால் திட்டினர். கூட்டத்தினுள் இருந்த ஒருவர் ஆசிரியை பஹ்மிதாவின் கழுத்தை நெரிக்க முயற்சி செய்துள்ளதுடன் அவரின் கையடக்கத் தொலைபேசியையும் பறிக்க முயன்றுள்ளனர்.

 

இதனைத் தொடர்ந்து காயமடைந்த ஆசிரியை பஹ்மிதா திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

அதே நேரம் பாடசாலையின் அதிபர் தன்னை ஆசிரியை பஹ்மிதா தாக்கியதாக பொய்கூறி  அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

குறிப்பிட்ட விவகாரம் சட்டமா அதிபரின் கவனத்திற்கும் நீதிமன்றத்தின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.

 

இலங்கையின் அரசியல் யாப்பு கலாச்சார உரிமையை ஒரு அடிப்படை உரிமையாக அங்கீகரிப்பதோடு ஆசிரியர் ஒழுக்கக் கோவை ஹபாயா அணிவதற்கு எந்த தடையும் இடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

தகவல் : எ.எல். ஆஸாத் 

சட்டத்தரணி 

https://www.madawalaenews.com/2022/02/s.html

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை பெண்கள் பாடசாலையில் தாக்குதலுக்குள்ளான அதிபரின் நிலை! - வெளிவரும் தகவல்

தாக்குதலுக்கு உள்ளனதாக கூறப்படும் திருகோணமலை ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பாடசாலையில் இன்றைய தினம் ஆசிரியை ஒருவர் அணிந்து வந்த ஆடை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை உருவாகியிருந்தது.

இந்த சம்பவத்தின் போது அதிபர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியையும் தான் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில், குறித்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கருத்து வெளியிடுகையில்,

“பெற்றோர்கள் நாங்கள் வெளியில் இருந்த போது, திடீரென அலுவலகத்தில் இருந்த வந்த குறித்த ஆசிரியை எங்களை புகைப்படம் எடுத்தார்.

எனினும் பாடசாலை வளாகத்தில் அனுமதியில்லாமல் புகைப்படம் மற்றும் காணொளி எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளதாக நாங்கள் அந்த ஆசிரியையிடம் தெரிவித்திருந்தோம். எனினும், குறித்த ஆசிரியை அதனையும் மீறி புகைப்படம் எடுத்தார்.

இதன்போது எங்களது புகைப்படங்களை அழிக்குமாறு நாங்கள் கோரிய போதிலும் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். வட்ஸ்அப் ஊடாக அனைவருக்கும் புகைப்படங்களை அனுப்பினார்.

இதனையடுத்து நாங்கள் கையடக்க தொலைபேசியை வாங்க முற்பட்ட போது அதிபர் மறித்தார். எனினும், அதிபரை குறித்த ஆசிரியை தள்ளிவிட்டார். இதன்போது இரத்த அழுத்தம் கூடிய நிலையில் மயக்கமுற்ற அதிபரை நாங்கள் வைத்தியசாலையில்” அனுமதித்தோம் என அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னணி.........

2017ம் ஆண்டும் இதே போன்றதொரு ஆர்பாட்டம் இடம்பெற்றது. ஆசிரியர்கள் சிலர் பாடசாலை காலச்சாரதிற்கு ஒவ்வாத வகையில் ஆடை அணிந்து வந்தமையால், பாடசாலை சமூகத்தினால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

குறித்த பாடசாலையின் பண்பாட்டுக்கும் பாடசாலையின் கலாச்சார மரபிற்கும் உரிய ஆடைகளை அணிந்து வருமாறு நிர்வாகத்தினரால் கோரபட்டு, இருந்த போதிலும் சில ஆசிரியர்கள் தொடர்ச்சியாக முரண்பாட்டை ஏற்படுத்தி வருகின்றனர்.

இருப்பினும் 5 ஆசிரியர்கள் அதனை கருத்தில் கொள்ளாது “ஹபாயா” அணிந்து வந்தனர்.

இதன் காரணமாகவே 2017 ஆண்டு ஆர்பாட்டம் இடம்பெற்றது. அதன் பின்னர் இரண்டு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைகள், தொடர்ச்சியான விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிந்த காலப்பகுதியில் 5 ஆசிரியர்களும் கல்வி திணைக்களத்தினால் வேறு பாடசாலைகளுக்கு பணிக்கு அமர்த்தபட்டனர்.

குறித்த காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்றுசூழ்நிலை காரணமாக விசாரணைகள் தாமதமாகிகொண்டிருந்தமையால் 5 ஆசிரியர்களில் 2 பேர் வேறு பாடசாலைகளுக்கு நிரந்தரமாக இடமாற்றம் பெற்று சென்றனர்.

இருப்பினும் மீதமுள்ள மூவரும் மீண்டும் இன்றைய தினம் (02.02 2022) பாடசாலை நிர்வாகம் ஏற்காத உடை (ஹபாயா) அணிந்து வந்தமையால் பதற்றநிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://tamilwin.com/article/the-position-of-the-principal-under-attack-1643808163

இதில் என்ன நடந்தது என்று சரியாக தெரியவில்லை. வெவ்வேறுபட்ட  செய்திகள் வருகின்றன. ஆனால் ஒன்று மட்டும் விளங்கவில்லை.
சிங்கள, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ பாடசாலைகளில் தமிழ்/இந்துப் பெண்கள் பொட்டு வைத்துக் கொண்டு, தமிழ் முறையில் சேலை கட்டிக் கொண்டு கற்பிப்பதற்கு சுதந்திரம் உள்ள நிலையில், முஸ்லிம் ஆசிரியைகள் தமிழ் / இந்து  பாடசாலையில் அபாயா அணிந்து கற்பிக்க செல்வதில் என்ன பிழை உள்ளது என்று? இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள உடலை முழுக்க மூடும் பர்தா ஆடை இல்லையே இந்த அபாயா ஆடை?.

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

பிரச்சினையானது மிகவும் தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அப்பாடசாலையில் கடமையாற்றிவந்த ஆசிரியைகள் அப்பாடசாலைக்கு நியமனம் பெற்று வந்த போது சாரி அணிந்து வந்துள்ளார்கள் அப்போது தலையை மறைத்து ஹிஜாப் அணிந்துள்ளனர் .சிறிது காலத்தின் பின்னர் அவர்களிள் சாரி அணிவதற்கு பதிலாக அபாயாஎனும் நீண்ட ஆடை அணிந்து பாடசாலைக்கு சமுகமளிதுள்ளார்கள். முஸ்லிம் பெண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆடை மாற்றமானது இஸ்லாமிய அறிவின் அதிகரிப்பினால் நடமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றமாகும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இதில் என்ன நடந்தது என்று சரியாக தெரியவில்லை. வெவ்வேறுபட்ட  செய்திகள் வருகின்றன. ஆனால் ஒன்று மட்டும் விளங்கவில்லை.
சிங்கள, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ பாடசாலைகளில் தமிழ்/இந்துப் பெண்கள் பொட்டு வைத்துக் கொண்டு, தமிழ் முறையில் சேலை கட்டிக் கொண்டு கற்பிப்பதற்கு சுதந்திரம் உள்ள நிலையில், முஸ்லிம் ஆசிரியைகள் தமிழ் / இந்து  பாடசாலையில் அபாயா அணிந்து கற்பிக்க செல்வதில் என்ன பிழை உள்ளது என்று? இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள உடலை முழுக்க மூடும் பர்தா ஆடை இல்லையே இந்த அபாயா ஆடை?.

இதே ஆடையுடன்…. அந்த முஸ்லிம் ஆசிரியை,
பௌத்த பாடசாலைக்குள் போய்… கல்வி கற்பிப்பாரா?
எல்லாருக்கும்…. தமிழன் என்றால், ஒரு ஏண்டாப்புதனம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இதில் என்ன நடந்தது என்று சரியாக தெரியவில்லை. வெவ்வேறுபட்ட  செய்திகள் வருகின்றன. ஆனால் ஒன்று மட்டும் விளங்கவில்லை.
சிங்கள, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ பாடசாலைகளில் தமிழ்/இந்துப் பெண்கள் பொட்டு வைத்துக் கொண்டு, தமிழ் முறையில் சேலை கட்டிக் கொண்டு கற்பிப்பதற்கு சுதந்திரம் உள்ள நிலையில், முஸ்லிம் ஆசிரியைகள் தமிழ் / இந்து  பாடசாலையில் அபாயா அணிந்து கற்பிக்க செல்வதில் என்ன பிழை உள்ளது என்று? இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள உடலை முழுக்க மூடும் பர்தா ஆடை இல்லையே இந்த அபாயா ஆடை?.

எதையும் மதமாக பார்ப்பதால்  வரும்  விபரீதம் இது (நான் இசுலாமிய பெண்பிள்ளைகளுடன்  கல்வி  கற்றுள்ளேன் எந்த பிடுங்குதல்களும் இருந்ததில்லை அது  தனி அழகு.)

19 minutes ago, தமிழ் சிறி said:

இதே ஆடையுடன்…. அந்த முஸ்லிம் ஆசிரியை,
பௌத்த பாடசாலைக்குள் போய்… கல்வி கற்பிப்பாரா?
எல்லாருக்கும்…. தமிழன் என்றால், ஒரு ஏண்டாப்புதனம்.

தமிழ் சிறி,

சிங்களப் பகுதிகளில் பெளத்த பாடசாலைகளில்  நிறைய முஸ்லிம் ஆசிரியைகள் இதே ஆடையுடன் கற்பிக்கின்றார்கள். அதே போன்று சிங்களப் பாடஉயர் தர வகுப்புகளில் ஆங்கில மொழி கற்பித்தலில் தமிழ் ஆசிரியைகள் பொட்டுடன் கற்பிக்கின்றனர். அவ்வளவு ஏன், கொழும்பு சாஹிரா போன்ற கல்லூரிகளில் கூட தமிழ் ஆசிரியைகள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் தமிழ் அடையாளங்களுடன் கற்பிக்கின்றனர். 

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, விசுகு said:

எதையும் மதமாக பார்ப்பதால்  வரும்  விபரீதம் இது (நான் இசுலாமிய பெண்பிள்ளைகளுடன்  கல்வி  கற்றுள்ளேன் எந்த பிடுங்குதல்களும் இருந்ததில்லை அது  தனி அழகு.)

உங்களுடன் படித்த ஒரு முசுலீம் பெண்ணை நீங்கள் விரும்பிக் கல்யாணம் செய்திருந்தால் இன்று நீங்கள் ஒரு முசுலீமாகத்தான் மாறி இருந்திருக்க முடியும். வேறு எந்த மதத்தில் உள்ள ஒருவரை மணந்திருந்தாலும் உங்கள் மதத்தை மாற்றாமல் அதன்வழி வாழ்வதற்கு இயலும். இது உலக முசுலீம்கள் வைத்திருக்கும் எழுதாத ஒருசட்டம். இந்தச் சட்டத்தைமீறி எவரும் வாழ முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Paanch said:

உங்களுடன் படித்த ஒரு முசுலீம் பெண்ணை நீங்கள் விரும்பிக் கல்யாணம் செய்திருந்தால் இன்று நீங்கள் ஒரு முசுலீமாகத்தான் மாறி இருந்திருக்க முடியும். வேறு எந்த மதத்தில் உள்ள ஒருவரை மணந்திருந்தாலும் உங்கள் மதத்தை மாற்றாமல் அதன்வழி வாழ்வதற்கு இயலும். இது உலக முசுலீம்கள் வைத்திருக்கும் எழுதாத ஒருசட்டம். இந்தச் சட்டத்தைமீறி எவரும் வாழ முடியாது. 

உண்மை தான்  அண்ணை

அந்த  மதத்தின் எழுதாத  சட்டம்  என்பதை  அறிவேன்

எனக்கும்  அதில்  உடன்பாடில்லை

அந்த நோக்கமும்  இருக்கவில்லை🤣

10 minutes ago, Paanch said:

உங்களுடன் படித்த ஒரு முசுலீம் பெண்ணை நீங்கள் விரும்பிக் கல்யாணம் செய்திருந்தால் இன்று நீங்கள் ஒரு முசுலீமாகத்தான் மாறி இருந்திருக்க முடியும். வேறு எந்த மதத்தில் உள்ள ஒருவரை மணந்திருந்தாலும் உங்கள் மதத்தை மாற்றாமல் அதன்வழி வாழ்வதற்கு இயலும். இது உலக முசுலீம்கள் வைத்திருக்கும் எழுதாத ஒருசட்டம். இந்தச் சட்டத்தைமீறி எவரும் வாழ முடியாது. 

இதற்கும் இந்தப் பாடசாலையின் அபாயா பிரச்சனைக்கும் என்ன தொடர்பு? நீங்கள் ஏதோ விதத்தில் இந்தப் பாடசாலையின் செயலை நியாயப்படுத்துகின்றீர்களோ எனும் சந்தேகம் தான் எழுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு தேவையில்லாத விடயமாக நான் பார்க்கின்றேன். இவ்வாறான போக்கு ஒரு போதும் தமிழ் முஸ்லிம் நல்லுறவுக்கு சாதகமாக இருக்கப்போவதில்லை. பெரும்பான்மையான சாதரண முஸ்லிம் மக்கள் மனங்கள் இன்னும் தமிழ் மக்களுடனேயே இருக்கின்றது என கருதுகின்றேன். இந்தச் சம்பவம் அரசியல்வாதிகளுக்கும் முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கும் மெல்ல நல்ல அவல் கிடைத்த மாதிரி இருக்கும்.

குறிப்பிட்ட ஆசிரியை மினி ஸ்கார்ட் அணிந்து வந்திருந்தால் இந்தப் போராட்டம் நியாயமானது. (இது வாலியின் கண்ணோட்டத்தில் அநியாயம் 👀

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

இதற்கும் இந்தப் பாடசாலையின் அபாயா பிரச்சனைக்கும் என்ன தொடர்பு? நீங்கள் ஏதோ விதத்தில் இந்தப் பாடசாலையின் செயலை நியாயப்படுத்துகின்றீர்களோ எனும் சந்தேகம் தான் எழுகிறது.

1 hour ago, விசுகு said:

எதையும் மதமாக பார்ப்பதால்  வரும்  விபரீதம் இது

இதற்காகத்தான் எழுதினேன். அபாயா பிரச்சனையில்லை. அதனை வீம்புக்காகப் பின்பு போட்டுவந்ததுதான் பிரச்சனையே. கல்லூரியில் நியமனம் பெறுவதற்கு வந்தபோது இதனை ஏன் போட்டு வரவில்லை.??

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Paanch said:

இதற்காகத்தான் எழுதினேன். அபாயா பிரச்சனையில்லை. அதனை வீம்புக்காகப் பின்பு போட்டுவந்ததுதான் பிரச்சனையே. கல்லூரியில் நியமனம் பெறுவதற்கு வந்தபோது இதனை ஏன் போட்டு வரவில்லை.??

நான் மதம்  என்று  சொன்னது (மத)வெறியை  அண்ணா (எந்த  மதத்தையும் குறிப்பிடவில்லை)

அந்த  ஆசிரியர் மதம்  சார்ந்து  அணிந்திருந்தாலும் தவறு தான் வெறி தான்

என்னைப்பொறுத்தவரை

சட்டம்  தடுக்காதவரை தனிமனித விருப்பங்களை அனுமதித்தலே நன்று

தேவை.

24 minutes ago, Paanch said:

இதற்காகத்தான் எழுதினேன். அபாயா பிரச்சனையில்லை. அதனை வீம்புக்காகப் பின்பு போட்டுவந்ததுதான் பிரச்சனையே. கல்லூரியில் நியமனம் பெறுவதற்கு வந்தபோது இதனை ஏன் போட்டு வரவில்லை.??

 

வேலையில் / அலுவலகத்தில் நியமனம் பெறும் போது இருந்த அதே உடை பழக்கம், அதே உணவுப் பழக்கம், அதே மதம், அதே துணை எல்லாம் அந்த அலுவலகத்தில் இருக்கும் வரைக்கும் கட்டிக்காக்க வேண்டும் என்ற நடைமுறையோ அல்லது சட்டமோ இலங்கையிலோ அல்லது நீங்கள் தற்போது வாழும் நாட்டிலோ உண்டா?

இதே போன்று ஒருவர் இளம் வயதில் திருநீறு பூசியோ அல்லது சிலுவையோ அணியாமல் இருந்து பின் கடவுள் மேல் நம்பிக்கை வந்து இவற்றை பூசியோ அணிந்து வந்தாலோ, அந்த உரிமையை மறுக்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

உங்களுடன் படித்த ஒரு முசுலீம் பெண்ணை நீங்கள் விரும்பிக் கல்யாணம் செய்திருந்தால் இன்று நீங்கள் ஒரு முசுலீமாகத்தான் மாறி இருந்திருக்க முடியும்.

அப்போ அப்படி சிக்கியிருந்தா விசுகு அண்ணா இப்போ இப்படி இருந்திருப்பார்னு சொல்றீங்களா?

Screenshot 3

 

 

43 minutes ago, வாலி said:

பெரும்பான்மையான சாதரண முஸ்லிம் மக்கள் மனங்கள் இன்னும் தமிழ் மக்களுடனேயே இருக்கின்றது என கருதுகின்றேன்.

அந்த காலமும் சரி இந்த காலமும் சரி எந்த காலத்திலும் சரி மனபூர்வமாக உள சுத்தியோடு தமிழர்களுடன் இஸ்லாமியர்கள் இணைந்து இருந்ததும் இல்லை இருக்க போவதுமில்லை.

 இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே அவர்கள் எந்த இனத்துடனும் வேறுபாடுகளை களைந்து வாழும் ஒரு இனமாக அவர்கள் இருந்ததில்லை, சாதாரண மனிதர்களை மனநோய்தான் வாட்டும், அவர்களை பிடித்திருப்பது மத நோய்.

இலங்கை இஸ்லாமியர்கள் எப்போதாவது தமிழர்களுடன் சேர்ந்து நிற்பார்களானால் அது சிங்களவர்களுக்கு தமது ஏதாவது ஒரு  பிரச்சனையை தீர்க்க தமிழர்களை பயன்படுத்தி அழுத்தம் கொடுக்க நினைக்கிறார்கள் என்று அர்த்தம்.

மற்றும்படி தம்மை தமிழர்கள் என்றோ தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் என்றோ யாரும் அழைப்பதை அடியோடு வெறுப்பவர்கள் அவர்கள். இன்றும்கூட வடகிழக்கு இணைந்த பகுதியை தமிழர் தாயகம் என்று அறிவித்தால் சிங்களவரை முந்திக்கொண்டு அதனை எதிர்ப்பவர்கள் முஸ்லீம்களே.

இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே அவர்கள் எந்த இனத்துடனும் வேறுபாடுகளை களைந்து வாழும் ஒரு இனமாக அவர்கள் இருந்ததில்லை, சாதாரண மனிதர்களை மனநோய்தான் வாட்டும், அவர்களை பிடித்திருப்பது மத நோய்.

மனநோயை மருத்துவத்தின் மூலம் குணபடுத்த வாய்ப்புகளுண்டு ஆனால் அவர்களுக்கு பிடித்திருக்கும் மத நோய் வேண்டி நிற்பது குருதியில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் , அது ஒரு கொடூரமான வியாதி.

அவர்கள் மனசு முழுக்க இப்போ பிடித்து ஆட்டுவது எங்கும் இஸ்லாம் எதிலும் இஸ்லாம் உலகம் முழுவதும் இஸ்லாம் ஆளவேண்டும் என்ற போதை, உலக பாதுகாப்பு சட்டங்களினாலும் உலக வல்லரசுகளினாலும் ஒருபகுதியினர் அடக்கி வாசிக்கின்றனர் இல்லையென்றால் கழுத்தில் கத்தியை வைத்து குரான் வாசகங்களை சொல்ல சொல்வார்கள் இல்லாவிட்டால் தலையையே துண்டித்து விடுவார்கள், நைஜீரியாவில் அது நேரடியாவே நடந்திருக்கிறது.

.

இந்த தலைப்பு விசயத்தில் அரசு சட்டத்தில் அனுமதி இல்லை என்ற நிலை இருந்தாலன்றி நிச்சயமாக ஒருவர் தமது கலாச்சார உடையை அணிந்து வருவது எந்த வகையிலும் குற்றமாகாது. முகத்தை மூடி வந்தாலோ அல்லது அவர்களது மத பிரச்சாரத்தை மாணவர்கள் மத்தியில் எடுத்தாலோ அன்றி அவருக்கெதிரான எதிர்ப்பு நியாயமற்றதொன்று.

ஆனால் மத இறுக்க கொள்கைகளை கடைபிடிக்கும் இஸ்லாமியநாடுகளில் பொட்டு பூ வைத்துக்கொண்டு புடவையில் ஒரு ஆசிரியை இஸ்லாமிய பள்ளிக்கு போனால் கண்டிப்பாக அவர் விரட்டியடிக்கபடலாம், உயிருக்குகூட உத்தரவாதமில்லாமல் போகலாம்.

இலங்கை பிரச்சனைக்கு எதுக்கு இஸ்லாமியநாடுகளுக்கு போகிறாய் என்றொரு வினா எழலாம், எமக்குத்தான் அதுவேறுநாடு இது வேறு நாடு இங்கு இப்படி அங்கு அப்படி, . அவர்களை பொறுத்தவரையில் எத்தனைவருடங்களாக அயலவராக இருந்து அவர்களுடன் உறவாடினாலும், இஸ்லாம் என்று வருகையில் உலகின் எந்த மூலையில் வாழும் முஸ்லீமுக்குத்தான் முதலிடம் கொடுப்பார்கள், அவர்களைத்தான் தமது உறவாய் நினைப்பார்கள் அதில் எந்த பாகுபாடும் காண்பிக்கமாட்டார்கள். அவர்கள் வழியிலும் ஒருவரி சிந்திப்பதில் தவறில்லையே?

உலகின்  முஸ்லீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் இல்லை, உலகின் அனைத்து முஸ்லீம்களும் அடிப்படை தீவிரவாதத்தை வெளிப்படையாக ஆதரிப்பவர்கள் இல்லை, ஆனால் உலகின் அனைத்து முஸ்லீம்களுமே இஸ்லாமிய மத அடிப்படை பயங்கரவாதம் கலாச்சாரத்தை முழு மனசோடு எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் இல்லை.

ஒருதுளி உதாரணமாய் பாகிஸ்தானில் எரித்து கொல்லப்பட்ட சிங்களவர்மேல்தான் தவறு, அவருக்கு நடந்தது சரி  என்று சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்தவர்களில் கணிசமானோர்  இலங்கையை சேர்ந்த இஸ்லாமியர்களே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

வேலையில் / அலுவலகத்தில் நியமனம் பெறும் போது இருந்த அதே உடை பழக்கம், அதே உணவுப் பழக்கம், அதே மதம், அதே துணை எல்லாம் அந்த அலுவலகத்தில் இருக்கும் வரைக்கும் கட்டிக்காக்க வேண்டும் என்ற நடைமுறையோ அல்லது சட்டமோ இலங்கையிலோ அல்லது நீங்கள் தற்போது வாழும் நாட்டிலோ உண்டா?

இதே போன்று ஒருவர் இளம் வயதில் திருநீறு பூசியோ அல்லது சிலுவையோ அணியாமல் இருந்து பின் கடவுள் மேல் நம்பிக்கை வந்து இவற்றை பூசியோ அணிந்து வந்தாலோ, அந்த உரிமையை மறுக்கலாமா?

நான் தற்போது வாழும் நாட்டில் உண்டு நிழலி அவர்களே.! வேலையில் நியமனம் பெறும்போது அணியச்சொல்லித் தந்த உடைபோன்ற உடைகளைத்தான், நான் அந்த வேலையில் இருக்கும்வரை அணிந்து கட்டிக் காக்க வேண்டும். அந்த உடையை அணியத் தவறி எனக்கு ஏதாவது நடந்தால்....! எனக்கான காப்புறுதியும் என்னைக் கணக்கில் எடுக்காது.!!😩

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் இரு தரப்பும் அரசியல் செய்கின்றனர் ....சில காலத்திற்கு முன் 2 அல்லது 3 ஆசியர்கள் அபாயா அணிந்து கொண்டு வந்தது என்று சொல்லி அவர்களுக்கு எதிராய் போராட்டம் நடந்தது ...இப்ப இவ மட்டும் திரும்பி வந்ததில் உள் நோக்கம் இருக்கலாம் ...அவர்கள் பாடசாலைக்கு என்று ஒரு டிரஸ் கோட் இருக்கலாம் ....அது பிடிக்கா விட்டால் வேறு இடம் மாற்றம் பெற்று போவது நல்லது ...வீம்புக்கு என்று திரும்பி வருவது அரசியல் உள் நோக்கம் கொண்டது 

19 minutes ago, Paanch said:

நான் தற்போது வாழும் நாட்டில் உண்டு நிழலி அவர்களே.! வேலையில் நியமனம் பெறும்போது அணியச்சொல்லித் தந்த உடைபோன்ற உடைகளைத்தான், நான் அந்த வேலையில் இருக்கும்வரை அணிந்து கட்டிக் காக்க வேண்டும். அந்த உடையை அணியத் தவறி எனக்கு ஏதாவது நடந்தால்....! எனக்கான காப்புறுதியும் என்னைக் கணக்கில் எடுக்காது.!!😩

உங்களின் பாதுகாப்பு தொடர்பான உடையாக அல்லது யூனிபோர்ம் ஆக இருக்கும் என நம்புகின்றேன். இவ்வாறான ஆடைகள் எந்தவிதமான இன / மத வேறுபாடுகளை கருத்தில் கொண்டு ஒரு நிறுவனம் அணியச் சொல்வது இல்லை. நான் நினைக்கின்றேன் நீங்கள் உங்களை அப்படி அணியச் சொன்னமையால் உலகம் பூராவும் அப்படித்தான் இருக்கும் என நம்புகின்றீர்கள் என.

ஆனால் இலங்கை பாடசாலைகளில் கற்பிப்பவர்களுக்கு என்று அரசால் அனுமதிக்கப்பட்ட ஆடைகள் உள்ளன. டூ பீஸ் போட்டுக் கொண்டு பாடசாலையில் கற்பிக்க முடியாது, ஆனால் வேட்டி கட்டிக் கொண்டோ அல்லது அபாயா அணிந்து கொண்டோ, கன்னியாஸ்திரிக்குரிய ஆடையை அணிந்து கொண்டோ கூட கற்பிக்கலாம். இனத்தை / மதத்தை அடையாளப்படுத்தும், மாணவர்களின் கவனத்தை திருப்பாத ஆடைகளை அணியத் தடை இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

எதையும் மதமாக பார்ப்பதால்  வரும்  விபரீதம் இது (நான் இசுலாமிய பெண்பிள்ளைகளுடன்  கல்வி  கற்றுள்ளேன் எந்த பிடுங்குதல்களும் இருந்ததில்லை அது  தனி அழகு.)

புரூனேய் இல் இசுலாமிய பெண் பிள்ளைகளுடன் கூட வேலை செய்திருக்கிறேன்.

 அவர்களின் பஜு  குரோங் கண்ணியம் மிக்க இலாகவமான அழகு..

 (எனது மனைவிக்கும் சிபாரிசு செய்து, அவரும் அதனை அணிந்து வந்தார்)

 இதே பஜு  குரோங் பெண்மணிகளை மாலை வேலைகளில் சூப்பர் மார்க்கெட்டில் மேலைத்தேய உடைகளுடனும் காணலாம்.

 மதம் வழிநடத்தும் வரை எல்லாம் சரி மதமாகப் பிடிக்கும் போது தான் கடுப்புகள் ஆரம்பம்….

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனியில்  அகதிகள் தொடக்கம் அதிப அந்தஸ்து உள்ள அனைவருக்கும் சம உரிமையுண்டு.அகதிகளுக்கு வாக்குரிமை மட்டுமே இல்லை.ஆனால் பல இடங்களில் முக்காடு போடுவதற்கு தடையுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

நாடு இப்ப உள்ள நிலைமையில்....அரசாங்கத்தால் அரங்கெற்றப்படும் புதுப் படம்...

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, colomban said:

ஆசிரியை பஹ்மிதா தான் மீண்டும் ஷண்முஹாவிற்கு அனுமதிக்கப்படவேண்டும் என்று கேட்டிருந்தார்

ஒரு ஆசிரிய சமுதாயம்! உருவாகும் சமுதாயத்தை உருவாக்க வேண்டியவர்கள், நடந்துகொள்ளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது. நமது இளைய சமுதாயம் தடம்மாறி செல்வதற்கு இவ்வாறான வழிநடத்தல்களும் காரணமாகிறது. மீண்டும் இந்தப்பாடசாலைக்கு கடமைக்கு வரவேண்டுமென்று விருப்பில் வந்தவர், சர்ச்சைக்குரிய ஆடையை தவிர்த்திருக்கலாம், புடவை ஒன்றும் இந்த ஆசிரியருக்குகோ, அந்த சமுதாயத்துக்கோ  புதிதான, புதுமையான  ஒன்றில்லையே? நாளடைவில் சம்பந்தப்பட்டவர்கள் திருந்தி ஏற்க வழி சமைத்திருக்கும். ஆனால் அவரும் வீம்புக்கு கொம்பு சீவி விடப்பட்டிருக்கிறார். இவர்களும் கண்டும் காணாமல் போயிருந்தால் வந்த வேலை சரிவரவில்லை, நாளடைவில் கொழுவ வழியில்லாமல் தானாக வேறு பாடசாலைக்கு போயிருப்பார், அல்லது சேர்ந்து நடந்திருப்பார். இப்போ அரசு இக்கட்டான நிலையில் மாட்டப்பட்டிருக்குது. ஏதாவது செய்தாலே தப்பிக்க முடியும் என்கிற நிலை. மீண்டும் தமிழரை சிக்க வைக்கும் நிலையில் அதீத பிரயத்தனப்பட்டுக்கொண்டிருக்குது. இவர்களும் தாங்களாகவே அவர்களுக்கு கொழுகொம்பு கொடுக்கிறார்கள். இந்த ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு எதை கற்றுக்கொடுக்கப்போகிறார்கள்? பழிவாங்கலை .......? இவர்களுக்கே நல்லெண்ணம் இல்லை, சகிப்புத்தன்மை இல்லை. இல்லாத ஒன்றை எப்படி நம்பி வரும் மாணவருக்கு கொடுக்கப்போகிறார்கள்? ஆசான் கடவுளுக்கு சமன்!

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை ஷன்முகா இந்து மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்ற சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றேன்

AVvXsEilOoZvHn6W6vXhymbfUAsD3cXlz8_3om7W4MSPfDpim_7BXvBB05iMraJy4-qslJeYOj4O14hfN-5STZ-qEKR7C0mfo0kz7L9AIEF7i8ZqKikF71bSF5H0LgSzmfZ0lL7b3eoHdy9OqonCJU9VejgYeP5mA_e8Kmnz_0-sAoER-y35Eei3kXsGXmH2=s16000

 

திருகோணமலை சன்முகா இந்து மகளிர் கல்லூரியில் நேற்று  நடைபெற்ற சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றேன்

: மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அகமட்

நூருல் ஹுதா உமர்

திருகோணமலை சன்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பிக்கின்ற முஸ்லிம் ஆசிரியையான பாத்திமா பஹ்மிதா மீதான அத்துமீறல் மிகவும் கண்டிக்கத்தக்கதும் மிலேச்சத்தனமானதுமாகும்.

"ஒரு இனத்தின் கலாசாரத்தை மதிப்பது அந்த இனத்தின் உரிமை ஆனால் இன்னுமொரு இனத்தின் கலாசாரத்தை திணிப்பது  எந்த வொரு இனத்தின் உரிமையல்ல." கடந்த மூன்று தசாப்த காலமாக இந்நாட்டில் புற்று நோயாக இருந்து வந்த இன வன்முறைகள் முடிவுக்கு கொண்டு வந்து அனைத்து சமூகங்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தியிருக்கும் இந்தக்காலகட்டத்தில் வெளிநாட்டுச் சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்ற ஒரு சில வன்மக்குழுக்கள் இனத்தின் பெயராலும்.மதத்தின் பெயராலும் நாட்டுக்குள் பிரிவினையை ஏற்படுத்தி அதன் மூலம் சுய இலாபம் அடைய முயற்சித்து வருகின்றார்கள்.

இந்நாடு பல்லின பல்கலாசார சமூக அமைப்பைக் கொண்ட நாடாகும்.அவரவர் கலாசாரம் என்பது அவர்களின் உரிமையாகும். இவ்வுரிமை இலங்கையின் தாய்ச் சட்டமான அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்டதாகும். அதனை அத்துமீறவோ யாருடைய  சுய விருப்பு வெறுப்புக்கேற்ப கட்டுப்படுத்தவோ முடியாது என முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பொறியியலாளர் நஸீர் அஹமட் அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளார்.

 

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது, இந்நாட்டில் இருக்கின்ற எந்த அரச பாடசாலை முறைமைக்குள்ளும் நடக்காத அராஜக  ஜனநாயக விரோத நிகழ்வு இன்று திருகோணமலை சன்முகா இந்து மகளிர் கல்லூரி கல்விச் சமூகம் என்று கூறிக்கொள்கின்ற ஒரு சில இனத்துவேசிகள் அரங்கேற்றியிருப்பது ஒரு சமூகத்தின் உரிமைக்கு பாரிய அச்சுறுத்தலாகவும் சவாலாகவும்  அமைந்துள்ளது.

 

பாடசாலை என்பது அறிவையும், ஒழுக்கத்தையும் எதிர்கால சந்ததியினருக்கு போதிக்கின்ற ஒரு சமூக நிறுவனமாகும்.இந்த நிறுவனத்தின் அறிவிலிகள் சிலர் முஸ்லிம் பெண் ஆசிரியை மீது உடலியல் ரீதியாகவும், உலவியல் ரீதியாகவும்  பாதிப்பை ஏற்படுத்த முனைந்திருப்பது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்தாகும். இது மாணவர்களுக்கு பிழையான நடைமுறையை கற்றுக் கொடுக்கின்ற செயற்பாடாகும்.

 

சன்முகா கல்லூரி நிர்வாகத்தைப் போன்று ஒவ்வொரு இனப்பாடசாலைகளும் தங்களது கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஆடைகளை அணிய வேண்டும் என்று வற்புறுத்துமாயின் பாடசாலைகளில் பல்லின ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஏனைய கல்விப்புல அதிகாரிகள் தமது பணியினை சிறப்பாக செய்ய முடியாத நிலை உருவாகும்.

 

அரச நிறுவனங்களில் கடமையாற்றுகின்றவர்கள் அரசியலமைப்பு ரீதியாக மற்றைய சமூகத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டியதோடு நடைமுறையிலுள்ள அரச நிர்வாக சட்டதிட்டங்களையும் பின்பற்றத் தெரிந்திருக்க வேண்டும்.யாருடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு உட்பட்டு அரச நிர்வாக இயந்திரத்தை கொண்டு செல்ல முடியாது. மற்றையவர்களுக்கு முன்மாதிரியை கற்றுக் கொடுக்க வேண்டிய கல்விச் சமூகம் இன வெறி கொண்டு செயற்படக்கூடாது.

 

அரச நிறுவனங்களில்  அரசின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக செயற்படுகின்ற இவ்வாரான வன்மக்குழுக்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வழங்குவதன் மூலம் பாதிக்கப்பட்ட அந்த பெண் ஆசிரியையான பாத்திமா பஹ்மிதாவிற்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்

https://www.madawalaenews.com/2022/02/h.html

  • கருத்துக்கள உறவுகள்

திரும‌லை ச‌ம்ப‌வ‌த்தை க‌ண்டித்து ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியால் ம‌ன்னாரில் க‌ண்ட‌ன‌ ஆர்ப்பாட்ட‌ம்.

 

AVvXsEi8ZCPRm_ZEqOwRj2xmEFxNT-XjERSNDBv7HgNj7D-bw9cVKNvMDTfaivI0ZjL6USbsSc4gfNLaa8AQniiNcVCV1_6tEwEnyeMEuPzCgVUj0OJ1DHLpyxZ6hHhmKhOYVepi8_uSEQCECEdMs8_LsKVOiDAUZtwUoexg23I6r7jbexiaTT7fFKHevmjv=s320

திருகோண‌ம‌லை ச‌ண்முகா வித்தியால‌ய‌த்தில் அபாயா அணிந்து வ‌ந்த‌மைக்காக‌ முஸ்லிம் ஆசிரியை இன‌வாத‌,  ப‌ய‌ங்க‌ர‌வாத‌ சிந்த‌னை கொண்டோரால் தாக்க‌ப்ப‌ட்ட‌ ம‌னிதாபிமான‌மற்ற‌  செய‌லை க‌ண்டித்து   ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியினால் ம‌ன்னாரில் க‌ண்ட‌ன‌ ஆர்ப்பாட்ட‌ம் இன்று ந‌டை பெற்ற‌து.

 

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் தேசிய‌ அமைப்பாள‌ர் சித்தீக் முஹ‌ம்ம‌த் ச‌தீக் த‌லைமையில் ந‌ட‌ந்த‌ இக்க‌ண்ட‌ன‌ ஆர்ப்பாட்ட‌த்தில் பின்வ‌ரும் கோஷ‌ங்க‌ள் எழுப்ப‌ப்ப‌ட்ட‌ன‌.  

 

திருகோண‌ம‌லை ச‌ன்முகா வித்தியால‌ய‌த்தில் அபாயா அணிந்த‌ ஆசிரியை தாக்க‌ப்ப‌ட்ட‌தை வ‌ன்மையாக‌ க‌ண்டிக்கிறோம்.

 

திருகோண‌மலை சண்முக‌ வித்தியால‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்துக்கு அர‌சு ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும்.

 

 

முன்ன‌ர் எல் ரி ரி ரி ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம் 

இப்போது த‌மிழ் பாடசாலை ப‌ய‌ங்க‌ர‌வாத‌மா?

 

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி.

 

இதேவேளை இத்தாக்குத‌லை க‌ண்டித்து த‌ம‌து க‌ட்சியினால் தேசிய‌ ம‌ட்ட‌த்தில் மேலும் ப‌ல‌ பிர‌தேச‌ங்க‌ளில் அமைதியான‌ ஆர்ப்பாட்ட‌ங்க‌ள் ந‌ட‌த்த‌ப்ப‌டும் என‌ க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார்.

https://www.aljazeeralanka.com/2022/02/blog-post_3.html?fbclid=IwAR1ACWwKJZwoxWyIPUHdf4psIrQmb5KKW-3X0T78qdJymY3T5bai4QzR0oY

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.