Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் தமிழருக்கெதிரான யுத்தத்தில் ரஸ்ஸிய மற்றும் உக்ரேனிய அரசுகளின் பங்கு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 28/2/2022 at 18:35, Ahasthiyan said:
இனி உலகில் நடக்கும் போர்களில் நிகழும் எந்தவொரு வினோதங்களும் எங்களை ஆச்சரியப் படுத்தாது ஏனென்றால் ஒரு போரில் நிகழக்கூடிய உச்சபட்ச கொடூரங்கள், இழப்புக்கள், அக்கிரமங்கள், அத்துமீறல்கள், அழிவுகள், வினோதங்கள் என அனைத்தையும் எங்கள் இனம் சந்தித்து விட்டது, இனிநாங்கள் புதிதாக பார்து வியந்து போக போர்க்கொடுமை என்று எதுவும் இல்லை.... 😏
உக்ரைன் ஜனாதிபதி யுத்தகளத்தில் நிற்கிறார்
பெருமையா பகிர்ந்து கொண்டிருக்கிறது உலகு. -
தன் தாய்நாட்டின் யுத்த களத்தில் நன்னை மட்டும் அல்லாமல் தன் தலைமுறையையே நிறுத்திய தலைவன் ஒருவன் இருந்தான் அறிவீர்களா நீங்கள் 😏
உக்ரைன் சிப்பாய் தன் தாய்நாட்டுக்காய் தன்னை தற்கொலைகுண்டுதாரி ஆக்கிக்கொண்டான், பெருமையாக பகிர்ந்து கொண்டு இருக்குறீர்கள். -
தன் இனத்தின் விடுதலைக்காக ஒரு தலைமுறையே தங்களை தற்கொலைகுண்டுதாரிகள் ஆக்கிக்கொண்டு அழிந்து போனது 😏 கரும்புலிகள் பற்றி அறிவீர்களா நீங்கள்.
உக்ரைன் பெண்மணி வீதியில் நின்று ரஷ்ய சிப்பாயுடன் வாய்வாக்குவாதம் செய்தாளாம் 😂சிங்கபெண் என ஊடகங்கள் காட்டின
அப்படியானால் எங்கள் பெண்கள் தனிபடை அமைத்து ஆயுதம் ஏந்தி களத்திலேயே போராடினார்களே... உக்ரைன் பெண்கள் சிங்கபெண்கள் என்றால் அவர்கள் யாரு 😂
உக்ரைன் இளைஞர்கள் வயதுவந்தவர்கள் அனைவரும் போரிற்கு செல்கிறார்களாம் பெரும்பகட்டாக பாரட்டும் இந்த உலகநாடுகள் தான் -
நாங்கள் வீட்டிற்கு ஒருவரை போராட அழைக்க கட்டாய ஆட்சேர்ப்பு என பழித்துத்தீர்த்தது.
உக்ரைன் சிப்பாய் தன் மகளை பிரிந்து செல்லும் காட்சிகளை இணையத்தில் பார்த்து விட்டு கண்ணீர் வடிக்கிறீர்கள் ஆனால்
போர்முடிந்து பத்துவருடங்கள் களிந்தும் காணாமல் ஆக்கப்பட்ட தன் மகளையும், மகனையும், தந்தையையும் தாயையும் கேட்டு எம் மக்கள் வீதிகளில் அழுதுபுலம்பி திரிவதை அறியவில்லையா எவரும்...
உக்ரைனில் இருந்து வரும் சிறிய காயங்களுடன் பிளாஸ்ரர் ஒட்டப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து வருத்தம் தெரிவிக்குறீர்கள், இன்றும் கூகுளில் ஈழப்போரைத் தேடிப்பாருங்கள்.
கைகால்கள் பிளந்தும், முகம் சிதைந்தும், உடல்உறுப்புகள் வெளியே நொங்கியபடியும், நிர்வாணமாக இறந்தபடியும், அரைகுறைகளைந்த ஆடைகளுடன் கற்பளிக்கப்பட்டு இறந்தபடியும், நெருப்பில் எரிந்தும் பாதி கருகியும் கருகாமலும், பிணக்குவியல்களையும் பாருங்கள்...
அதைவிடவா இவை உங்களை மனவேதனை படுத்துகின்றன,
அங்கே ரஷ்யாவால் அழித்தொழிக்கப்பட்ட இராணுவத்தளங்களில் கருகிக்கொண்டிருக்கும் உடல்கள் அன்று எமது உறவுகளை பூவும்பிஞ்சுமாக குண்டுமழை பொழிந்து அழித்த MI 27 ரக போர்விமானங்களின் விமானிகளின் உடல்களாக கூட இருக்கலாம் மறந்து விடவேண்டாம்...
- இந்துஷாந் இளங்கோ - FB

இதை ஆங்கிலத்தில் போட்டால்நல்லா இருக்கும்

  • Replies 477
  • Views 30.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாதவூரான் said:

இதை ஆங்கிலத்தில் போட்டால்நல்லா இருக்கும்

அதை நாங்கள் செய்யாமல் எங்கள் மனகிளர்ச்சியை தூண்டி, உணர்ச்சி பிழம்பாக்கி தவறான தகவலுடன் கவிதை எழுதி முகப்புத்தகம், வாட்ஸ்ஆப்பில் செய்தி போட்டு ஈழவிடுதலைக்கான "கடமையை" செய்யும் கூட்டமாகவே இருக்கிறோம். 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கிருபன் said:

ரஷ்யாவின் சர்வாதிகாரி பூட்டினது ரஷ்யப்படையினரால் கொல்லப்படும் உக்கிரேனியப் பொதுமக்கள் மீது ஒரு சொல் அனுதாபமும் காட்டவில்லை.

சர்வாதிகாரி பூரினது இப்படியான அழிக்கும் செயல்களினால் தான் இவர்கள் கவரபட்டுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்+
7 hours ago, வாதவூரான் said:

இதை ஆங்கிலத்தில் போட்டால்நல்லா இருக்கும்

இதை யாழ் களத்தில் இருக்கின்ற ஆரேனும் செய்தால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கிருபன் said:

அர்வாதிகாரி *  பூட்டினது ரஷ்யப்படையினரால் கொல்லப்படும் உக்கிரேனியப் பொதுமக்கள் மீது ஒரு சொல் அனுதாபமும் காட்டவில்லை.

கிருபன் எப்போது   NATO நாடுகளின் அதிகாரபூர்வ  பேச்சாளராக மாறினவர் எண்டு சொல்லவேயில்ல...🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

கிருபன் எப்போது   NATO நாடுகளின் அதிகாரபூர்வ  பேச்சாளராக மாறினவர் எண்டு சொல்லவேயில்ல...🤣

பூட்டின் ஒரு சர்வாதிகாரி என்பதை நேட்டோ சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை. இந்த வீடியோவைப் பார்த்தாலே புரியும். புரியாதவர்களுடன் பேசுவது நேரவிரயம்..

17 minutes ago, கிருபன் said:

பூட்டின் ஒரு சர்வாதிகாரி என்பதை நேட்டோ சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை. இந்த வீடியோவைப் பார்த்தாலே புரியும். புரியாதவர்களுடன் பேசுவது நேரவிரயம்..

ஒரு சம்பாசனையின் ஒரு சிறு துண்டை மட்டும் வெட்டி ஒட்டி தமக்கான பிரச்சாரமாக பயன்படுத்துவது இந்திய ஊடகங்களின் கைங்கரியம் என்றுதான் நான் நினைத்து இருந்தேன், ஆனால் இப்ப தான் தெரிகிறது the guardian போன்றவை கூட அதையே செய்கின்றன.

புட்டினை சர்வாதிகாரி என்று சொல்லும் மேற்குலகு இந்தப் போரே ரஷ்யாவை சுற்றி இருக்கும் அதில் இருந்து பிரிந்து போன நாடுகளை நேட்டோவில் இணைத்து ரஷ்யாவை சுற்றி வளைக்க முற்பட்டமையால் ஏற்பட்ட போர் இது என்பதை மறைத்துக் கொள்ள முயல்கின்றது.

சவூதியின் அரசருக்கு சாமரம் வீசிக் கொண்டு புட்டினை சர்வாதிகாரி என்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, கிருபன் said:

பூட்டின் ஒரு சர்வாதிகாரி என்பதை நேட்டோ சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை. இந்த வீடியோவைப் பார்த்தாலே புரியும். புரியாதவர்களுடன் பேசுவது நேரவிரயம்..

ஐயா, 

கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்தறிவதே மெய்.

எண்டு சொல்லியிருக்கெல்லோ.....

சிலவேளை அது உங்களுக்கு சொல்லேல்லையோ தெரியாது..🤣

(எனது கொள்கைக்கு தோதானதை மட்டும் தேடித் தேடி வாசிக்கிறதால வாற பிரச்சினை இதுதான்)

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சாத பூட்டினும் அமைதியான நேட்டோவும் | கலாநிதி கீதபொன்கலன் | திரு சுரேஸ் தர்மா |

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

ஒரு சம்பாசனையின் ஒரு சிறு துண்டை மட்டும் வெட்டி ஒட்டி தமக்கான பிரச்சாரமாக பயன்படுத்துவது இந்திய ஊடகங்களின் கைங்கரியம் என்றுதான் நான் நினைத்து இருந்தேன், ஆனால் இப்ப தான் தெரிகிறது the guardian போன்றவை கூட அதையே செய்கின்றன.

புட்டினை சர்வாதிகாரி என்று சொல்லும் மேற்குலகு இந்தப் போரே ரஷ்யாவை சுற்றி இருக்கும் அதில் இருந்து பிரிந்து போன நாடுகளை நேட்டோவில் இணைத்து ரஷ்யாவை சுற்றி வளைக்க முற்பட்டமையால் ஏற்பட்ட போர் இது என்பதை மறைத்துக் கொள்ள முயல்கின்றது.

சவூதியின் அரசருக்கு சாமரம் வீசிக் கொண்டு புட்டினை சர்வாதிகாரி என்கின்றனர்.

நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்குமான பலப்பரீட்சையில்தான் பூட்டினால் இப்போர் ஆரம்பிக்கப்பட்டது என்பதில் தெளிவு இருக்கின்றது. எனினும் ஒரு இறைமையுள்ள நாட்டை ஆக்கிரமித்து பெரும் அழிவுகளை ஏற்படுத்துவதையும், உக்கிரேன் என்ற தனித் தேசம் இல்லை, உக்கிரேனியர்கள் ரஷ்யர்கள்தான் என்று சொல்லி ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதையும் ஒரு சர்வாதிகாரியால்தான் செய்யமுடியும்.

சோவியத் யூனியனில் லெலின் காலத்தில் ஒரு பொலிட்பீரோ இருந்தது. முக்கிய கொள்கைகள் பொலிட்பீரோவில் விவாதிக்கப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆனால் மேலே இணைக்கப்பட்ட வீடியோவில் உளவுத்துறைத் தலைவர் எப்படி நடுங்கி தடுமாறுகின்றார் என்பதைக் காணும்போது பூட்டின் தான் விரும்பும் விடயங்களைத் தவிர வேறு எதனையும் கேட்பதற்கு தயாராக இல்லை என்பதும் அவரைக் கேள்விகேட்க எவரும் இல்லை என்பதும் தெளிவு.

இப்படியான முழுமையான அதிகாரம் கொண்ட ஒருவரின் படைகளின் ஆக்கிரமிப்பில் உக்கிரேனிய மக்கள் சுதந்திரமாக வாழமுடியாது. ஆதலால் இந்த ஆக்கிரமிப்பை எதிர்க்காமல் இருப்பது, போரை எதிர்க்காமல் இருப்பது, அழிவுகளை உண்டாக்கும் நோக்குடன் செயல்படும் சர்வாதிகாரி பூட்டினை நியாயப்படுத்துவதாகத்தான் கருதவேண்டியுள்ளது.

அருஞ்சொல் இணையத்தில் வந்த கட்டுரையின் சில பகுதிகள்..

ஒருகொடூரமான போரை எந்தக் காரணங்களாலும் ஜனநாயகர்கள் நியாயப்படுத்த முடியாது. மேலும், ஒருபோருக்கான இரு தரப்புகளில் ஏதோ ஒரு தரப்பே எப்போதும் போரை உந்தி முன்னோக்கிச் செல்கிறது. இந்தப் போரைப் பொறுத்த அளவில் அந்த இடத்தில் ரஷ்யா இருக்கிறது.

ரஷ்யா என்பது புடின். புடின் என்பது ரஷ்யா. கடந்த 22 ஆண்டுகளாக ரஷ்யாவைத் தனது இரும்புப் பிடியின் கீழ் வைத்திருக்கும் புடின் அப்படி ஓர் ஆட்சியையே நிலைநிறுத்தியிருக்கிறார். உக்ரைனைச் சுற்றி ஒன்றரை லட்சம் படையினரை நிறுத்தியிருக்கும் அவர் அணு ஆயுதப் படையினரையும் தயாராக இருக்கச் சொல்லியிருப்பது யதேச்சதிகாரத்தின் உச்சம். இதுதான் முற்றதிகாரத்தின் தன்மை - நானே விதி, நானே வழி, நானே நீதி!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ஒரு இறைமையுள்ள நாட்டை ஆக்கிரமித்து பெரும் அழிவுகளை ஏற்படுத்துவதையும், உக்கிரேன் என்ற தனித் தேசம் இல்லை, உக்கிரேனியர்கள் ரஷ்யர்கள்தான் என்று சொல்லி ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதையும் ஒரு சர்வாதிகாரியால்தான் செய்யமுடியும்.

ரஷ்ய சர்வாதிகாரி புரினை விளங்கி கொள்வது சிலருக்கு  அவ்வளவு கஷ்டமாகவா உள்ளது 🤔 சர்வாதிகாரி புரினை இரசிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

ரஷ்ய சர்வாதிகாரி புரினை விளங்கி கொள்வது சிலருக்கு  அவ்வளவு கஷ்டமாகவா உள்ளது 🤔 சர்வாதிகாரி புரினை இரசிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

(ஆகக் குறைநகுறைந்தது ) ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா,லிபியா போன்றவற்றின் மீதான படையெடுப்பையும் கியூபா, வடகொரியா மீதான பொருளாதாரத் தடையையும் இரசிக்கலாமென்றால், சர்வாதிகாரி புட்டினின் படையெடுப்பையும் இரசிக்கலாம். 

(இதைச்  சொல்லும்போது EPRLF காறர் மாதிரி "நாங்கள் எல்லா ஆக்கிரமிப்பிற்கும் எதிரானவர்கள்" என்று அறிக்கை விடப்போகிறார்கள்) 😆

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

இறைமையுள்ள ஈராக்,ஆப்கானிஸ்தான்,லிபியா, சோமாலியா,  யேமன்  போன்ற நாடுகளை நேட்டோ தாக்கும் போது யாரும் எதுவும் இவ்வளவு தூரத்துக்கு எழுதவில்லை. இப்போ நேட்டோ என்ற கும்பல் ரஸ்யா எனும் இறைமயுள்ள நாட்டை சுற்றி படைகளை நகர்த்தி வைக்துள்ளதும் இல்லாமல் சோவியத்யூனியனை உடைத்து உடைந்த நாடுகளிலும் தமது படைகளை குவித்து இறைமையுள்ள ரஸ்யா 30 வருடங்களுக்கு மேலாக பொறுமை காத்து இப்போது இவர்களின் அடாவடிக்கு முற்றுப்புள்ளி வைக்க யுக்ரேனை தாக்குகிறது.

இன்று மொஸ்கோவில் சி என் என் மக்களை பேட்டி காணும் அதே வேளை ரஸயாவில் பல செய்தி நிறுவனங்கள் தடைசெய்யப்ப்டுவது சனநாயகத்தின் ஒரங்கமா?

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, nunavilan said:

சனநாயகக் காவலாளிகளிடமிருந்து இதற்குப் பதில் வராது.

எந்த ஒரு யுத்தத்தையும் ஆரம்பிக்காத, படைகளைத் திரும்பப் பெற்ற, பொருளாதார வளர்ச்சியை முன்னிலைப்படுத்திய டொனால்ட் ட்ரம் இப்போது கிரிமினல் வழக்கை எதிர்நோக்கியுள்ளார்.  😆

ஆனால் பல யுத்தங்களை ஆரம்பித்த பரக் ஒபாமாவுக்கு சாதானத்திற்கான நோபல் பரிசு..🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 28/2/2022 at 19:35, Ahasthiyan said:
உக்ரைனில் இருந்து வரும் சிறிய காயங்களுடன் பிளாஸ்ரர் ஒட்டப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து வருத்தம் தெரிவிக்குறீர்கள், இன்றும் கூகுளில் ஈழப்போரைத் தேடிப்பாருங்கள்.
கைகால்கள் பிளந்தும், முகம் சிதைந்தும், உடல்உறுப்புகள் வெளியே நொங்கியபடியும், நிர்வாணமாக இறந்தபடியும், அரைகுறைகளைந்த ஆடைகளுடன் கற்பளிக்கப்பட்டு இறந்தபடியும், நெருப்பில் எரிந்தும் பாதி கருகியும் கருகாமலும், பிணக்குவியல்களையும் பாருங்கள்...
அதைவிடவா இவை உங்களை மனவேதனை படுத்துகின்றன,

இந்த வட்சப் தகவல் எனக்கும் கிடைத்திருந்தது. பார்த்தபோது இந்த சனநாயக வேடம்போடும் உலகின் அசிங்கமுகத்தையே பதிவாக்கியுள்ளதைக் காணமுடிந்தது. 

மேற்குநாடுகளின் எதேச்சதிகாரமும் ரஸ்ய - உக்ரேனியக் கூட்டணியும் எம்மை அழிப்பதில் ஒன்றாக நின்றன. அழிப்பின்னான மனிதஉரிமை மீறல் விவகாரங்களிலும் சிறிலங்காவை இவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் காத்துவருபவர்கள் என்பதையும் நாம் மனம்கொள்ள வேண்டும். இன்று உக்கிரேனுக்காகப் பாதுகாப்புச் சபையிலிருந்து ஐரோப்பிய ஒன்றியம் என்று எல்லா அமைப்பகளும் உக்கிரேன் (உக்கிரேனியர்களின் சாவுகள் ஏற்புடையனவல்ல)அழிவை பேசுகின்றன. 13ஆண்டுகளுக்கு முன்பு இந்த அமைப்புகளெல்லாம் என்ன உறைநிலையிலா இருந்தன.  மேற்கோ கிழக்கோ முதலில் மனிதம் இருக்கிறதா? இருந்தால் ஏன் 2009இல் எமது  தமிழின அழிவைத் தடுக்காது இருந்தன? அல்லது தமிழின அழிவைத் தடுக்காது இரசித்தனவா? என்ற வினாவும் எழுகிறது. "உக்கிரேனிய அகதிகளின் வரவு நல்வரவு" என்று யேர்மனி வரவேற்கிறது. இதே யேர்மனி தமிழர்கள் தெருத்தெருவாய் அலைந்து அழிவைத் தடுக்குமாறு கேட்டபோது வாழதிருந்ததோடு  தொடர்போராட்டங்களை ஒருங்கிணைத்தோர்மீது வழக்குப் பதிவுசெய்யத கொடுமையையும் செய்ததோடு, அண்மையில் பேர்லினில் மனிதசங்கிலிப் போராட்டத்திலே ஏந்தியிருந்த தமிழீழி தேசியக் கொடியைக் காவல்துறை அகற்ற முயற்சித்துள்ளது.  இதுதான் இவர்களின் சனநாயகமும் மனித உரிமையும்...............

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

இன்று மொஸ்கோவில் சி என் என் மக்களை பேட்டி காணும் அதே வேளை ரஸயாவில் பல செய்தி நிறுவனங்கள் தடைசெய்யப்ப்டுவது சனநாயகத்தின் ஒரங்கமா?

RT நியூஸ் சேனல் ஐயும் நிற்பாட்டிவிட்டார்கள் போலுள்ளது. இதுதான் மேற்கின் ஊடக தர்மம். போங்கடா நீங்களும் உங்கடை ...

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Eppothum Thamizhan said:

RT நியூஸ் சேனல் ஐயும் நிற்பாட்டிவிட்டார்கள் போலுள்ளது. இதுதான் மேற்கின் ஊடக தர்மம். போங்கடா நீங்களும் உங்கடை ...

ஆம் நிற்பாட்டி விட்டார்கள். இதன் அர்த்தம் மேற்கு எதையோ மக்களிடம் மறைக்க முயல்கிறது. உண்மையை ஏற்க மறுக்கிறார்கள். பெயர் ம்ட்டும் தான் ஜனநாயகம். செயல்கள் அத்தனையும் நாசிசம், பாரபட்சம்.

6 hours ago, கிருபன் said:

ஒருகொடூரமான போரை எந்தக் காரணங்களாலும் ஜனநாயகர்கள் நியாயப்படுத்த முடியாது. மேலும், ஒருபோருக்கான இரு தரப்புகளில் ஏதோ ஒரு தரப்பே எப்போதும் போரை உந்தி முன்னோக்கிச் செல்கிறது. இந்தப் போரைப் பொறுத்த அளவில் அந்த இடத்தில் ரஷ்யா இருக்கிறது.

போரை யாரும் நியாயப்படுத்தி விட முடியாது என்பது வெறும் தட்டையான ஒரு நியாயமாகவே பார்க்கின்றேன். ஏனெனில் சிங்கள அதிகாரத்துக்கு எதிராக போரை பிரகடனப்படுத்தி அதன் மூலம் எம் விடுதலையை வென்றேடுக்கலாம் என ஆயுதம் தூக்கிப் போராடிய இனத்தில் இருந்து இதை எழுதுகின்றேன். போரை நியாயப்படுத்த ஏராளமான காரணங்களையும் இந்த உலகம் கொண்டுதான் இருக்கின்றது.

ரஷ்சியாவும் இந்த நியாயங்களைக் கொண்டு இருக்கின்றது. புட்டின் உடனடியாக இந்தப் போரை ஆரம்பிக்கவில்லை. மேற்குலகு தான் இந்தப் போருக்கான ஆயத்தங்களை ஏற்படுத்தியது. 2014 இல் தம் சொல்லைக் கேட்டு இயங்கும் அரசு ஒன்றை அரசியல் சதி ஒன்றின் மூலம் ஏற்படுத்தாமல் இருந்திருக்க வேண்டும். ரஷ்சியா தானும் நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்த போது பரிகசிக்காமல் அதன் எதிர்காலம் தொடர்பான அச்சங்களை களைந்து அதனை இணைத்து இருக்க வேண்டும். ரஷ்சியாவை சுற்றியுள்ள நாடுகளை நேட்டோவில் இணைக்காமல் இருந்திருக்க வேண்டும்.

உக்ரைன் இறைமையுள்ள நாடு தான். ஆனால் அது தன் அருகில் இருக்கும், தன் எல்லையில் இருக்கும், மேற்கால் வஞ்சிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் தேசத்தின் நலன்களுக்கு எதிராக இயங்காமல் இருந்திருக்க வேண்டும். நேட்டோவில் இணையாமல் neutral ஆக இருந்திருக்க வேண்டும். ரஷ்சியாவின் உயிர் நாடிகளுள் ஒன்றாக இருக்கும் கருங்கடலின் ஆதிக்கம் நேட்டோவின் செல்வாக்குள் செல்லாமல் காத்திருக்க வேண்டும். 

கிருபன், புட்டின் இந்தப் போரை ஆரம்பித்து இருக்காவிடின், அவருக்கு உக்ரைனை நேட்டோவில் இணையவிடாமல் தடுத்திருக்க கூடிய மாற்று தெரிவுகள் என்னென்ன என்று சொல்ல முடியுமா? பேச்சுவார்த்தைகள் மூலம் என்று சொல்ல மாட்டீர்கள் என நம்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விளங்க நினைப்பவன் said:

ரஷ்ய சர்வாதிகாரி புரினை விளங்கி கொள்வது சிலருக்கு  அவ்வளவு கஷ்டமாகவா உள்ளது 🤔 சர்வாதிகாரி புரினை இரசிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

ஆங்கிலத்தில் Putin Apologists என்று சொல்லலாம். தமிழில் பூட்டினுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் அல்லது பூட்டினை நியாயப்படுத்துபவர்கள் என்று அர்த்தம் கொள்ளலாம்

4 minutes ago, கிருபன் said:

ஆங்கிலத்தில் Putin Apologists என்று சொல்லலாம். தமிழில் பூட்டினுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் அல்லது பூட்டினை நியாயப்படுத்துபவர்கள் என்று அர்த்தம் கொள்ளலாம்

கண்ணை மூடிக் கொண்டு மேற்குலகை ஆதரிப்பவர்களை எப்படி அழைக்கலாம் கிருபன் ஜீ

  • கருத்துக்கள உறவுகள்

உக்கிரேனிய யுத்தம் இரஸ்சியாவிற்கு அரசியல், இராணுவ, பொருளாதார ரீதியில் ஒரு தோல்விகரமான யுத்தமாகவே எனக்கு தோன்றுகிறது (எனது கருத்து தவறாக இருக்கலாம்).

புட்டின், புலி வாலை பிடித்த நிலமையில், இந்த போரை முடிவுக்கு கொண்டுவரமுடியாமல் திணறுகிறாரோ என தோன்றுகிறது.

இரஸ்சிய விமானப்படையை அதிகமாகப்பயன்படுத்தவில்லை அதற்கு பதிலாக குறுந்தூர ஏவுகணைகளை தெரிந்தெடுத்த நிலையான இலக்குகளின் மீது பாவிக்கிறார்கள், எனது அபிப்பிராயப்படி உக்கிரேன் கரந்தடி உத்திகளை கையாளுவதால் ( உண்மை நிலவரம் தெரியாது) இரஸ்சிய விமானப்படையை பயனற்றதாக்கியுள்ளதாக இருக்கலாம்.

உக்கிரேனிய தலைநகரை கைபற்றுவதற்கு விரைவாக முன்னேறும் இலகு காலாட்படையை பயன்படுத்தாமல் கனரக படையணியை நகருக்கு வெளியே நிறுத்தியிருப்பதன் மூலம் இரஸ்சிய படை நகர்புற யுத்தத்தில் இலகு காலாட்படை இழப்பு குறித்த அச்சமாக இருக்கலாம், கனரக படையணியை கொண்டு இரஸ்சியா எப்படி நகர்புற யுத்தத்தை மேற்கொள்ளப்போகிறது? 

விமானம் மூலம் படையினர கீவில் தரை இறக்கினாலும் கனரக படையணி நகரிற்கு வெளியே இருப்பதால் தேவையான நேரத்திற்குள் கனரகப்படையணி நகரிற்கு வரமுடியாவிட்டால் வானிலிருந்து குதித்த இராணுவத்தினரின் நிலை தற்கொலைக்கு சமமாகி விடும் என கருதுகிறேன், இந்த கருத்து தவறாக இருக்கலாம், (போர் தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது கேள்வி பட்டதன் அடிப்படையிலேயே இக்கருத்தை கூறியுள்ளேன்).

இது ஒரு தேவையற்ற யுத்தம் போல எனக்கு தோன்றுகிறது( எனது கருத்து தவறாக இருக்கலாம்), இந்த யுத்தத்தால் உக்கிரேனியர்கள் மட்டுமல்ல இரஸ்சியாவிற்கும் தீமையே.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

கிருபன், புட்டின் இந்தப் போரை ஆரம்பித்து இருக்காவிடின், அவருக்கு உக்ரைனை நேட்டோவில் இணையவிடாமல் தடுத்திருக்க கூடிய மாற்று தெரிவுகள் என்னென்ன என்று சொல்ல முடியுமா? பேச்சுவார்த்தைகள் மூலம் என்று சொல்ல மாட்டீர்கள் என நம்புகின்றேன்

போல்ரிக் நாடுகள் லித்துவேனியா, லற்வியா, எஸ்தோனியா போன்றன தங்கள் பாதுகாப்புக்காக நேட்டோவில் இணைந்தன. அந்த நாடுகளை ரஷ்யா ஆக்கிரமித்தால் உலகயுத்தம் வரலாம் (சிலவேளை நேட்டோ சும்மா இருக்கவும் கூடும்).

அதுபோல உக்கிரேன் மக்களின் தெரிவு நேட்டோவில் இணைவதாக இருந்தால் அதைத் தடுக்கும் உரிமை ரஷ்யாவுக்கு இருக்கக்கூடாது. உக்கிரேன் நடுநிலையாக இருப்பதா இல்லையா என்பதை அந்நாட்டு மக்கள்தான் தீர்மானிக்கவேண்டும். ரஷ்யா அல்ல. உக்கிரேனியர்கள் நேட்டோவில் இணைவதற்கு ஆர்வம் காட்டவில்லை. ஆனால் பொருளாதார அபிவிருத்திக்காக ஐரோப்பிய யூனியனில் சேர விரும்பினார்கள். ரஷ்யா தனது பார்வைக்குள் உக்கிரேன் தொடர்ந்தும் இருக்கவேண்டும் என்பதற்குத்தான் இப்போரை ஆரம்பித்தது. இப்போரினால் ரஷ்யாவோ, உலகநாடுகளோ நன்மை அடையப்போவதில்லை. 

தமிழர்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க போரை தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் ரஷ்யா ஆக்கிரமிக்க போரை தேர்ந்தெடுத்துள்ளது. இவற்றின் வேறுபாடு எல்லோருக்கும் தெரியும். அதனால்தான் உரிமைக்கான போரை ஆதரிக்கவும், ஆக்கிரமிப்புக்கான போரை எதிர்க்கவும் எங்களால் முடிகின்றது. 

சதாம் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை ரசித்தது கிடையாது. பிரித்தானியாவில் இலட்சக்கணக்கானவர்கள் ஈராக் போரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அதைப்போலவே சிரியாவில் ரஷ்யர்கள் அலெப்போவை அழித்தபோதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இருந்தன. அலெப்போவை அழித்தது போன்றே உக்கிரேனையும் ரஷ்யா அழிக்க முயல்கின்றது. அதனை எவ்வகையில் நியாயப்படுத்தமுடியும்?

16 minutes ago, நிழலி said:

கண்ணை மூடிக் கொண்டு மேற்குலகை ஆதரிப்பவர்களை எப்படி அழைக்கலாம் கிருபன் ஜீ

Ignorant fools என்று நான் சொல்லுவேன்😃

Edited by கிருபன்

10 minutes ago, கிருபன் said:

அதுபோல உக்கிரேன் மக்களின் தெரிவு நேட்டோவில் இணைவதாக இருந்தால் அதைத் தடுக்கும் உரிமை ரஷ்யாவுக்கு இருக்கக்கூடாது. உக்கிரேன் நடுநிலையாக இருப்பதா இல்லையா என்பதை அந்நாட்டு மக்கள்தான் தீர்மானிக்கவேண்டும். ரஷ்யா அல்ல. உக்கிரேனியர்கள் நேட்டோவில் இணைவதற்கு ஆர்வம் காட்டவில்லை. ஆனால் பொருளாதார அபிவிருத்திக்காக ஐரோப்பிய யூனியனில் சேர விரும்பினார்கள். ரஷ்யா தனது பார்வைக்குள் உக்கிரேன் தொடர்ந்தும் இருக்கவேண்டும் என்பதற்குத்தான் இப்போரை ஆரம்பித்தது. இப்போரினால் ரஷ்யாவோ, உலகநாடுகளோ நன்மை அடையப்போவதில்லை. 

நேட்டோவும் அமெரிக்காவும் உக்ரைனினை நேட்டோ அமைப்பில் இணைக்க முற்படுவதே ரஷ்சியாவை பலவீனப்படுத்த என்று தெரிந்து இருந்தும் அது அவர்களின் உரிமை, இறையாண்மை, கடலாமை என்று ரஷ்சியா கண்ணை மூடிக் கொண்டு இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள். இங்கு இன்று புட்டின் இல்லாமல் வேறு ஒருவர் ரஷ்சிய அதிபராக இருந்திருந்தாலும் உக்ரைன் நேட்டோவில் இணைவதை எதிர்த்தே இருப்பார். 

1990 இன் பின்னும் மேற்குலகு ரஷ்சியாவை தன் எதிரியாகத்தான் பார்க்கின்றது. அந்தப் பார்வை மாறும் மட்டும் இந்தப் பிராந்தியத்தில் ஒரு போதும் அமைதி ஏற்படப் போவதில்லை. ஈற்றீல் அணுவாயுத பிரயோகம் வரைக்கும் இந்த நிலை கை மீறிப் போக போகின்றது.

இந்த நிலை ஏற்பட்டால், அதற்கு காரணமாக புட்டினோ ரஷ்சியாவோ இருக்கப் போவதில்லை. தான் மட்டுமே உலகில் வாழவேண்டும் என நினைத்து இருக்கும் அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் தான் காரணம்

  • கருத்துக்கள உறவுகள்

சட்டுப்புட்டு என்டு முடிவுக்கு வாங்கோ கறன்ட் போகப் போகுது.😄

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.