Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் அக்காவிடம் கொடுத்த காணி மாயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் அக்காவிடம் கொடுத்த காணி மாயம்!

யாழில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று புலம்பெயர் உறவுகளுக்கு எச்சரிக்கை விடுப்பதாக அமைந்துள்ளது.நாட்டைவிட்டு புலம் பெயர்ந்து வாழும் நமது உறவுகள் தாய்நாட்டில் தமது இருப்பிடங்களை மறந்துவிடக்கூடாது என்பதற்காக, காணி வாங்கவென ஊரில் உள்ள தமது உறவுகளிடம் பெரும் தொகை பணத்தை அனுப்பி ஏமாந்த சம்பவங்கள் உள்ளன.

அந்தவகையில் அண்மையில் ஐரோப்பிய நாடொன்றில் வாழும் தனது சகோதரனின் 30 பரப்பு காணியை சொந்த சகோதரியே விற்று ஏப்பம் விட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. பிரான்ஸ்சில் இருந்த சகோதரன் காணி வாங்கவென தனது உடன்பிறந்த சகோதரியிடம் காசை அனுப்பி, யாழின் பிரபலமான இடமொன்றில் 30 பரப்பு காணிவாங்கியுள்ளார்.

நீண்ட காலத்தின் பின்னர் விடுமுறைக்கு தாய் நாட்டுக்கு வந்த சகோதரன், தனது காணியை தேடிப்போக , அவரது காணி பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு விற்பனையாகியுள்ளதை அறிந்துள்ளார். சகோதரியை நம்பி அவர் பவர் ஆஃப் அட்டர்னி கொடுக்கபோக, அதுவில்லங்கத்தில் வந்து முடிந்துள்ளது. இந்நிலையில் சொந்த சகோதரியால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த, அந்த குடும்பஸ்தர் விபரீத முடிவெடுக்க துணிந்ததாகவும் அறிய கிடைக்கின்றது.

குறித்த குடும்பஸ்தர் 2000ம் ஆண்டளவில் பிரான்ஸ் இற்கு சென்றவர் எனவும் , திருமணம் முடித்து அவருக்கு 2 குழந்தைகளும் உள்ளதாகவும் தெரியவருகின்றது.இந்த நிலையில் வாயை கட்டி வயிற்றை கட்டி, வெய்யில் பனி பாராது, புலம் பெயர் நாட்டில் வேலை வேலை என உழைக்கும் நம் உறவுகளுக்கு இது ஓர் எச்சரிக்கை தகவலாக உள்ளது.

xthumb_424_356127_1596000488_0393.jpg.pa

22-621c383f1d93d-1.jpg

https://www.thaarakam.com/news/a48de9d2-7e2f-4678-9eec-247520abaf59

  • கருத்துக்கள உறவுகள்

இது எப்படி நடந்தது?...தம்பியின் கள்ள கையெழுத்தை போட்டு அக்கா வித்து விட்டாவோ?
 
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

இது எப்படி நடந்தது?...தம்பியின் கள்ள கையெழுத்தை போட்டு அக்கா வித்து விட்டாவோ?
 
Power of attorney அக்காவிற்கு தம்பியினால் கொடுக்கப்பட்டிந்ததாக செய்தியில் உள்ளதே!

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

Power of attorney 

நானும் வாசித்தேன். Power of attorney  கொடுத்தால் விற்க முடியாது வேண்டுமானால் வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ கொடுக்கலாம் 
  
  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

நானும் வாசித்தேன். Power of attorney  கொடுத்தால் விற்க முடியாது வேண்டுமானால் வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ கொடுக்கலாம் 
  
விற்றகக் கூடியவாறு power of attorney கொடுத்தால் விற்கலாம். 

அல்லது விற்க முடியாதவாறு power of attorney கொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

விற்றகக் கூடியவாறு power of attorney கொடுத்தால் விற்கலாம். 

அல்லது விற்க முடியாதவாறு power of attorney கொடுக்க வேண்டும்.

ஓ விற்க கூடியவாறும் power of attorney   கொடுக்கலாம் என்று எனக்கு தெரியாது ...நன்றி 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, கிருபன் said:

யாழில் அக்காவிடம் கொடுத்த காணி மாயம்!

யாழில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று புலம்பெயர் உறவுகளுக்கு எச்சரிக்கை விடுப்பதாக அமைந்துள்ளது.நாட்டைவிட்டு புலம் பெயர்ந்து வாழும் நமது உறவுகள் தாய்நாட்டில் தமது இருப்பிடங்களை மறந்துவிடக்கூடாது என்பதற்காக, காணி வாங்கவென ஊரில் உள்ள தமது உறவுகளிடம் பெரும் தொகை பணத்தை அனுப்பி ஏமாந்த சம்பவங்கள் உள்ளன.

நான் கேள்விப்பட்டதில் இதே மாதிரி நிறைய சம்பவங்கள் நடந்துள்ளன.
ஒவ்வொன்றையும் பிரித்து எழுதினால் நம் சமூகம்தான் நாறும்.

அங்கிருப்பவர்களிடம் இருக்கும் பொன்னான வாக்கியம்.

"நீங்கள் திரும்பி வர மாட்டியள் எண்டு"

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

நான் கேள்விப்பட்டதில் இதே மாதிரி நிறைய சம்பவங்கள் நடந்துள்ளன.
ஒவ்வொன்றையும் பிரித்து எழுதினால் நம் சமூகம்தான் நாறும்.

அங்கிருப்பவர்களிடம் இருக்கும் பொன்னான வாக்கியம்.

"நீங்கள் திரும்பி வர மாட்டியள் எண்டு"

எப்படி இவர்களால் கூடப் பிறந்த சகோதரங்களையே ஏமாத்த முடியுது 😟

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, ரதி said:

எப்படி இவர்களால் கூடப் பிறந்த சகோதரங்களையே ஏமாத்த முடியுது 😟

சென்ற 15 வருடங்களோடு பாசம் பந்தம் முடிந்து விட்டது என நினைக்கின்றேன். எல்லா குடும்பங்களிடமும் அல்ல. பல உறவுகளிடம் பணம் பொருள் அனுப்பி பாசம் என்றால் என்னவென்று காட்டிக்கொண்டேயிருக்க வேண்டுமாம் 😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

எப்படி இவர்களால் கூடப் பிறந்த சகோதரங்களையே ஏமாத்த முடியுது 😟

காரணம் நாங்கள்தான் அங்கிருப்பவர்களுக்கு எப்படி கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறம் என்ற விபரங்களை கூறுவதில்லை இங்கு நடக்கும் சாமத்திய கல்யாண நிகழ்வுகளில் காட்டப்படும் பகட்டு வாழ்நாளில் உள்ள ஒருமுறை மட்டுமே நடக்கும் விடயங்களின் டாம்பீகம் கொண்ட ரோல்ஸ் ரோய் வாடகை காரை படங்களில் பார்த்து  சொந்தமாய் தம்பி வைத்து இருக்கிறான் என்று நம்பும் அறியாமை போன்றவை .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

எப்படி இவர்களால் கூடப் பிறந்த சகோதரங்களையே ஏமாத்த முடியுது 😟

3 hours ago, குமாரசாமி said:

நான் கேள்விப்பட்டதில் இதே மாதிரி நிறைய சம்பவங்கள் நடந்துள்ளன.
ஒவ்வொன்றையும் பிரித்து எழுதினால் நம் சமூகம்தான் நாறும்.

அங்கிருப்பவர்களிடம் இருக்கும் பொன்னான வாக்கியம்.

"நீங்கள் திரும்பி வர மாட்டியள் எண்டு"

எமக்கு யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் ஒரு சிறிய வீட்டோடு காணி இருந்தது..அதை அம்மாவின் அண்ணா நீண்ட காலமாக கண் வைத்திருந்தார்.மேலே குசா தாத்தா சொல்லி இருப்பது போல் தான் அதாவது "நீங்கள் இங்கு வர மாட்டீர்கள் தானே"எல்லா சொத்துக்களையும் தனக்கு அல்லது தனது பிள்ளைகளின்  பெயருக்கு மாற்றுமாறு பல முறை கேட்டும் தேவை அற்ற முயற்சிகளிலும் ஈடு பட்டுக் கொண்டு இருந்தார்.அம்மா இறந்ததும் அது அவறுக்கு கொஞ்சம் வெற்றி போல் அமைந்து விட்டது போலும்..கள்ள உறுதி போடப்பட்டு விட்டது..அது அப்படி நடந்திருப்பது தெரியமால் நாம் விற்க முற்படும் போது தான் தெரிய வந்தது.பின் இடியப்ப சிக்கல் தான்.அதை வளக்காடி பெறு வதற்குள் ஒரு சகோதரனுக்கு போதும் போதும் என்றாகி விட்டது.கிட்டத் தட்ட 12 லட்சத்திற்கு மேல் தான் கொட்டி மீட்கப்பட்டது..

கடசியில் வளக்காடும் போது அங்கு சாட்டப்பட்ட விடையங்கள் நான் இன்வலிட் சோ எனக்கு தேவையில்லையது..2.அது ஒரு பிள்ளைக்கு மட்டும் சேருமதி அல்ல.எல்லா பிள்ளைகளுக்கும் பங்குண்டு என்றும் சாட்டப்பட்டுள்ளது.உண்மை ஏற்றுக் கொள்கிறேன்..குடும்பத்தில் பெற்றோரில் ஒருவர் இறந்தாலும் அனைத்திலும் பங்கு குடுக்க வேண்டும் மற்ற சகோதரங்களுக்கு.3.விற்பதாக இருந்தால் தங்களுக்கு தெரியாமல் விற்கப் படக் குடாது.இதற்கு மேல் எழுதினால் யாழ் பொறுக்காது..நான் எழுதும் விடையங்கள் இங்கு வந்து போகும் இளைய பெற்றொருக்கு எதிர் கால திட்டங்களை வகுத்து அதற்கு ஏற்ப பிள்ளைகளுக்கு  வழி காட்டிச் செல்வார்கள் என்பதற்காகவே.
அம்மா மற்றும் எனக்கு மிகவும் பக்க பலமாக இருந்த சகோதரன் கடந்த வருடம் காலமாகியதால் இப்போ என் நிலை மத்தளம் போன்றதே.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த "பவர் ஒவ் அட்டணி"யால் நான் மிகவும் அவதிப் பட்டவன்......எம்மை ஏமாற்றுபவர்கள் உக்கிரைனில் இருந்து வரப்போவதில்லை.......சொந்த இரத்த உறவுகளே......நிறைய எழுதலாம்....ஆனால் பலருக்கு என்னை தெரிவதால் எழுத முடிவதில்லை........!  

என்னைப்  பொறுத்தவரை "நட்போடு ஊடாடிய உறவு பொருளோடு உறவாடக் கெடும்" சில விதிவிலக்குகள் இருக்கலாம்.......!

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, suvy said:

நானும் எதிர் பார்க்காமல் எழுதி விட்டேன்..எனக்கும் சில இடங்களில் எழுதுவதால் உறவுகளால் பிரச்சனைகள் வருவதுண்டு.வரும்.என்ன செய்வது....

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்கு வீடு வாசல் படி... ஏமாற்றுவது ஏமாறுவது  ஒரு தொடர்கதை🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 10/3/2022 at 14:37, ரதி said:

ஓ விற்க கூடியவாறும் power of attorney   கொடுக்கலாம் என்று எனக்கு தெரியாது ...நன்றி 

Limited  அல்லது specific purpose க்கு மட்டும் power of attorney கொடுத்தால் பிரச்சனை குறைவு. 

ஆனாலும் ஊழல் இரத்தத்துடன் கலந்திருந்தால் எல்லாம் எப்படியும் நடக்கும. 

மிகப்பெரிய பிரச்சனை,

இலங்கையில் உள்ள சட்டவாளர்கள் கொடுக்கப்படும் பத்திரங்களின் உண்மைத் தன்மையினை உறுதிப்படுத்த முயற்சிப்பதேயில்லை. 

☹️

  • கருத்துக்கள உறவுகள்

புலம்  பெயர் நாடுகளில் பணத்தை மரங்களில் புடுங்குகிறார்கள் என்று இங்குள்ளவர்கள்  சென்று காட்டிய வித்தைகளின்  அறுவடை  இது???

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kapithan said:

Limited  அல்லது specific purpose க்கு மட்டும் power of attorney கொடுத்தால் பிரச்சனை குறைவு. 

ஆனாலும் ஊழல் இரத்தத்துடன் கலந்திருந்தால் எல்லாம் எப்படியும் நடக்கும. 

மிகப்பெரிய பிரச்சனை,

இலங்கையில் உள்ள சட்டவாளர்கள் கொடுக்கப்படும் பத்திரங்களின் உண்மைத் தன்மையினை உறுதிப்படுத்த முயற்சிப்பதேயில்லை. 

☹️

கள்ள உறுதி முடித்துக்கொடுக்கும் சட்டவல்லுனர்கள் அங்கிருக்கும் போது எதையுமே வென்றெடுக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இதில பலரும் உறவுகளிடம் தான் இழந்திருக்கினம், எனக்குத் தெரிந்த ஒரு சம்பவத்தில் மலேசிய உறவுகளின் வீடு வளவை ஆட்சி உறுதி முடித்து எடுத்திட்டாங்கள். உரியவர்கள் இப்ப தான் சட்டத்தரணி ஊடாக மீட்க முயலுகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது பெயரிலும் ஒரு வீடு உள்ளது.

இப்போதும் எனது பெயரில்த்தானா இருக்கிறது ?என்று பார்க்க 

கொஞ்ச நாட்களின் முன் ஏதோவொரு இணையதளம் வந்ததே யாருக்காவது ஞாபகம் இருந்தா இணையுங்கள் தேடிப் பார்ப்போம்.
நன்றி.

இலங்கை சட்டப்படி 10 வருடத்துக்கு மேல் இருந்தால் அவர்களுக்கே ஆட்சி.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

எனது பெயரிலும் ஒரு வீடு உள்ளது.

இப்போதும் எனது பெயரில்த்தானா இருக்கிறது ?என்று பார்க்க 

கொஞ்ச நாட்களின் முன் ஏதோவொரு இணையதளம் வந்ததே யாருக்காவது ஞாபகம் இருந்தா இணையுங்கள் தேடிப் பார்ப்போம்.
நன்றி.

இலங்கை சட்டப்படி 10 வருடத்துக்கு மேல் இருந்தால் அவர்களுக்கே ஆட்சி.

ஆட்சி உறுதி முடித்து 30 வருடம் என்று கேள்விப்பட்டேன். அதோட சோலை வரி, மின்பட்டியலில் பெயர் மாறி இருந்தாலும் சட்ட சிக்கல் இருக்கும் அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ஏராளன் said:

30 minutes ago, ஈழப்பிரியன் said:

எனது பெயரிலும் ஒரு வீடு உள்ளது.

இப்போதும் எனது பெயரில்த்தானா இருக்கிறது ?என்று பார்க்க 

கொஞ்ச நாட்களின் முன் ஏதோவொரு இணையதளம் வந்ததே யாருக்காவது ஞாபகம் இருந்தா இணையுங்கள் தேடிப் பார்ப்போம்.
நன்றி.

இலங்கை சட்டப்படி 10 வருடத்துக்கு மேல் இருந்தால் அவர்களுக்கே ஆட்சி.

Expand  

ஆட்சி உறுதி முடித்து 30 வருடம் என்று கேள்விப்பட்டேன். அதோட சோலை வரி, மின்பட்டியலில் பெயர் மாறி இருந்தாலும் சட்ட சிக்கல் இருக்கும் அண்ணை

அப்ப கையைவிட வேண்டியது தான் என்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

அப்ப கையைவிட வேண்டியது தான் என்கிறீர்களா?

இல்லை விடவேண்டாம்.....அமெரிக்கர்கள் இலங்கையில் சொத்து எப்படி வைத்திருக்கிறார் கள்.....அப்படி நீங்கள் வைத்திருக்க முடியும் ...அதாவது உங்களுக்கு அமெரிக்கா குடியுரிமை இருக்குமாயின்                                     

ஒரு இலங்கை பிரஷையின்  காணி.வீடு வளவு எந்த வித ஒப்பந்தமுமில்லமாலும். வாடகை ஒழுங்காக அறவிடமாலும்.  இருந்து பத்து ஆண்டுகளுக்கு மேல்  வேறு நபர் இருப்பராயின்.  அவர் ஆட்சி உரிமை கோர முடியும்.   உங்களுக்கு அரசியல் செல்வாக்கு இருத்தல் அதுவும் செய்ய முடியாது   இதுவரை உங்கள் காணிக்கு வரி கட்டவில்லை என்றால் உடனும் வரியை செலுத்தி பற்றுச்சீட்டை  கவனமாக வைத்திருங்கள் 

4 hours ago, ஏராளன் said:

இதில பலரும் உறவுகளிடம் தான் இழந்திருக்கினம், எனக்குத் தெரிந்த ஒரு சம்பவத்தில் மலேசிய உறவுகளின் வீடு வளவை ஆட்சி உறுதி முடித்து எடுத்திட்டாங்கள். உரியவர்கள் இப்ப தான் சட்டத்தரணி ஊடாக மீட்க முயலுகின்றார்கள்.

ஏராளன். எந்த ஊரில் நடந்தது....

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஊர் போய் வந்ததவர் சொன்னார்.. ஊரில கடைகளில் வேலை செய்ய ஆக்களில்லை.. அதனால் கடைக்காரர் சொல்லினமாம்.. வெளிநாட்டுக்காரர்.. நல்லா உழையுங்கோ.. உங்கட வாழ்கையை என்ஜோய் பண்ணுங்கோ.. இங்க மட்டும் காசு அனுப்ப வேண்டாமுன்னு. ஏன்னா வேலைக்கு ஆள் பிடிக்கிறது முயல் கொம்பாய் இருக்கென்று.

இப்படியான சம்பவங்கள் நிகழ வெளிநாட்டுக்காரரும் ஒரு காரணம். அவை ஊரில உள்ளவையை பாவிக்க நினைக்க.. ஊரில் உள்ளதுகள்.. இவையைப் பாவிக்குதுகள். அவ்வளவும் தான்.  

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

அப்ப கையைவிட வேண்டியது தான் என்கிறீர்களா?

இல்ல அய்யா..நீங்களாகவே இப்படி ஒரு முடிவுக்கு வராதீங்கள்.ஊரில் உங்களுக்கு மிகவும் நம்பிக்கையான யாரைக் கொண்டும் யாழ்ப்பாணம் கச்சேரியில் போய் ஏதாவது மாற்றங்கள் நடந்திருக்கிறதா என்று பார்க்கலாம்.முயற்சித்து பாருங்கள்..இவற்றினால் யாரும் உடல் உள ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்.✍️

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

அண்மையில் ஊர் போய் வந்ததவர் சொன்னார்.. ஊரில கடைகளில் வேலை செய்ய ஆக்களில்லை.. அதனால் கடைக்காரர் சொல்லினமாம்.. வெளிநாட்டுக்காரர்.. நல்லா உழையுங்கோ.. உங்கட வாழ்கையை என்ஜோய் பண்ணுங்கோ.. இங்க மட்டும் காசு அனுப்ப வேண்டாமுன்னு. ஏன்னா வேலைக்கு ஆள் பிடிக்கிறது முயல் கொம்பாய் இருக்கென்று.

இப்படியான சம்பவங்கள் நிகழ வெளிநாட்டுக்காரரும் ஒரு காரணம். அவை ஊரில உள்ளவையை பாவிக்க நினைக்க.. ஊரில் உள்ளதுகள்.. இவையைப் பாவிக்குதுகள். அவ்வளவும் தான்.  

அது உண்மைதான் ஊரில் உள்ளவர்களுக்கு உதவுவம் என்று பழம்  இல்லா இடத்தில் பழ யூஸ் தொழில் சாலை அமைத்தினம் பழைய பள்ளி நண்பர்கள் என்ன படித்தாங்களோ கடவுளுக்குத்தான் தெரியும் . உற்பத்தி செலவு கூடி அடக்க விலை கூட ஏற்கனவே சந்தையில் உள்ளவர்களுடன் போட்டி போட  முடியாதா நிலை கடைசியில் கணக்கு வழக்கை ஆராய லேபரின் சம்பளத்தை குறைக்க வேணும் அது தவிர்க்க முடியாமல் போயிற்று அவர்கள் பேப்பரில் அறிவித்த சம்பளத்துக்கு போக உள்ளூரில் இருப்பவர்கள் போக ரெடியாக இல்லை கடைசியில் பாவப்பட்ட மலையக மக்கள் தான் அகப்பட்டார்கள் 1000 த்துக்கு அடிபட்டவர்களுக்கு மேலதிகமாக இங்கு போகுது அதுமட்டும் மன  நிறைவு  ஆனால் எங்கடையல் மாமனின் காசில் கொண்டாவை  100 மைலில்  வல்வை வெளியில் அதுவும் போட்டிக்கு ஓடினம் என்கிறார்கள் பெருமையாக கூப்பிட்டு வைத்து மாட்டுக்கு இழுப்பது போல் நாலு குறி இழுக்கனும் .🥵

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.