Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டொலர் தட்டுப்பாடு – வெளிநாட்டில் உள்ள மூன்று தூதரகங்கள் மூடல் !!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டொலர் தட்டுப்பாடு – வெளிநாட்டில் உள்ள மூன்று தூதரகங்கள் மூடல் !!

Peiris-750x375.jpg
 
இலங்கையின் பல தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்கள் தற்காலிக நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், ஒரு வருடத்திற்குள் இராஜதந்திர அலுவலகங்களை மீண்டும் திறப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

டொலர் தட்டுப்பாடு காரணமாக பாக்தாத்தில் உள்ள இலங்கை தூதரகம், ஒஸ்லோவில் உள்ள தூதரகம் மற்றும் சிட்னியில் உள்ள தூதரகம் என்பன மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலை மற்றும் நிதி ஆதாரங்களின் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகளின் அடிப்படையில் சரியான நேரத்தில் தீர்மானங்கள் எட்டப்பட வேண்டும் என ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

டொலர் தட்டுப்பாடு – வெளிநாட்டில் உள்ள மூன்று தூதரகங்கள் மூடல் !! – Athavan News

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  செய்தி 

இன்னும்  வளர்க

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் தூதரகங்களில் ஒரு ஓரமா ஒரு மளிகைக்கடை வைத்திருந்தால் அந்தந்த தூதரக செலவுகளை அது பார்த்துக் கொள்ளும்......மூடவேண்டிய அவசியம் இருக்காது......!   🤔

  • கருத்துக்கள உறவுகள்

தூதரகம் மூடுற அளவுக்கு... நிலைமை கைமீறி போய் விட்டது.
இப்படி நடக்கும், என்று.... நான் எதிர் பார்க்கவே இல்லை. 😁

தேசியத் தலைவர் காலத்தில்... ஈழத்திற்கான  போராட்டத்துடன்,
நிழல் அரசை கொண்டு...  வாழ்ந்தோம் என்ற பெருமை எனக்கு இருந்தது. 💪 👍

அதோடு... ஸ்ரீலங்கா... வங்குரோத்தாகி... மாறி, மாறி கடனும்... 
பரீட்சை  வைக்க முடியாத அளவிற்கு, காகித தட்டுப்பாடும்...
உச்ச கட்டமாக... தூதரங்களையே... மூடுகின்ற காலத்திலும்...
வாழ்கின்றோம், என்ற பெருமையும் எமக்கு உள்ளது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, தமிழ் சிறி said:

சிறி

புலிகள் இதற்காக கடுமையாக உழைத்தார்கள்

பொருளாதார இலக்குகளை  இலக்கு  வைத்து  தாக்கி  உயிரையும் கொடுத்தார்கள்

இன்று  அதன்  அறுவடைக்காலம்

என்றோ  ஒருநாள்  எமது  விடியல்  சாத்தியமாகும்

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த குடும்பத்தின் மற்றும் அமைச்சர்களின் வெளிநாட்டு சொத்துக்களை அரசுடமை ஆக்கினாலேயே பாதிப் பிரச்சனை தீரும். பீரிஸின் சொத்துக்கள் உட்பட. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

டொலர் தட்டுப்பாடு – வெளிநாட்டில் உள்ள மூன்று தூதரகங்கள் மூடல் !!

Peiris-750x375.jpg
 
இலங்கையின் பல தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்கள் தற்காலிக நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், ஒரு வருடத்திற்குள் இராஜதந்திர அலுவலகங்களை மீண்டும் திறப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

டொலர் தட்டுப்பாடு காரணமாக பாக்தாத்தில் உள்ள இலங்கை தூதரகம், ஒஸ்லோவில் உள்ள தூதரகம் மற்றும் சிட்னியில் உள்ள தூதரகம் என்பன மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலை மற்றும் நிதி ஆதாரங்களின் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகளின் அடிப்படையில் சரியான நேரத்தில் தீர்மானங்கள் எட்டப்பட வேண்டும் என ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

டொலர் தட்டுப்பாடு – வெளிநாட்டில் உள்ள மூன்று தூதரகங்கள் மூடல் !! – Athavan News

அமைச்சரே   டொலர்  அச்சடிகக முடியாத?.  ரூபாய் அச்சடிபதை விட  டொலர் அச்சடிபபது லாபம் கூட.   🤪😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாத்தி, மகிந்த குடும்பம் நாட்டை விட்டு ஓடாமல் மக்கள் சுற்றி  வளைத்து பிடிக்க வேண்டும்.😄

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

தூதரகம் மூடுற அளவுக்கு... நிலைமை கைமீறி போய் விட்டது.
இப்படி நடக்கும், என்று.... நான் எதிர் பார்க்கவே இல்லை. 😁

தேசியத் தலைவர் காலத்தில்... ஈழத்திற்கான  போராட்டத்துடன்,
நிழல் அரசை கொண்டு...  வாழ்ந்தோம் என்ற பெருமை எனக்கு இருந்தது. 💪 👍

அதோடு... ஸ்ரீலங்கா... வங்குரோத்தாகி... மாறி, மாறி கடனும்... 
பரீட்சை  வைக்க முடியாத அளவிற்கு, காகித தட்டுப்பாடும்...
உச்ச கட்டமாக... தூதரங்களையே... மூடுகின்ற காலத்திலும்...
வாழ்கின்றோம், என்ற பெருமையும் எமக்கு உள்ளது. 🤣

இதில புலியை அடக்கினோம், ஒட்டகத்தை அடைப்போம் என்கிற வெற்றுவீரம் வேறை! ஒட்டகத்தை அடக்க எங்கே கைநீட்ட திட்டம்? முட்டாள்களின் யோசனை இப்படித்தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் பொருளாதர நிலைமை கட்டுப்பாடின்றி மோசமாகிக்கொண்டு செல்லும் இந்த வேளையில் நாட்டில் திடீரென அரசியல் கொந்தளிப்பு, ஆட்சி மாற்றம், இராணுவ புரட்சி எது வேண்டுமானாலும் நிகழலாம். இந்த நெருக்கடியில் சிக்கப்போகும்  தமிழினத்தை முடிந்தளவு பஞ்சம், பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என்பவற்றிலிருந்து காப்பாற்றவும் இத்தருணத்தை எமக்கு சாதகமாக்க என்னென்ன உத்திகளை கையாளமுடியும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு செயலாற்ற வேண்டியதும் அனைத்து   தமிழ் அரசியல் தலைமைகளின் கடமையாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vanangaamudi said:

நாட்டில் திடீரென அரசியல் கொந்தளிப்பு, ஆட்சி மாற்றம், இராணுவ புரட்சி எது வேண்டுமானாலும் நிகழலாம்.

எது நிகழ்ந்தாலும் இனி நிமிர்வது கஸ்ரம். ஆனால் எதையாவது செய்து நிமிர்ந்துவிடலாம் என முயன்று குப்புற விழுவார்கள்.  காலம் கடந்துவிட்டது முப்பது சேர்த்து பன்னிரண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

பிந்திய செய்தி! இருபத்தொன்பது மில்லியனுக்கு இலங்கை வான்பரப்பை இந்தியாவுக்கு விற்பனை செய்யப்பட்டுவிட்டதாமே, யாரும் கேள்விப்பட்டீர்களோ? பஷில் இந்தியாவுக்கு ஓடுப்பட்டு திரிந்தது இதற்காகத்தானோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

spot_img
spot_img
spot_img
 
MP HARIN FERNANDO DISCLOSES CABINET PAPER SELLING SRI LANKAN AIRSPACE TO INDIA (VIDEO)

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
email sharing button
sms sharing button
sharethis sharing button

A CABINET PAPER SELLING THE ENTIRE SRI LANKAN AIRSPACE TO INDIA UNDER THE GUISE OF SECURITY SYSTEM WAS PRESENTED YESTERDAY, DISCLOSED SAMAGI JANA BALAWEGAYA (SJB) MP HARIN FERNANDO, CALLING IN A BRIEFING TODAY (22).

ACCORDINGLY, THE SRI LANAKN AIRSPACE IS BEING SOLD TO INDIA FOR US$ 29 MILLION UNDER A PERIOD OF TWO YEARS, THE OPPOSITION MP ALLEGED, EMPHASISING THAT THE PRESIDENT WHO CAME TO ENSURE THE COUNTRY’S SECURITY HAS SOLD THE SECURITY OF THE COUNTRY AS WELL AS THE NAVY TO INDIA. 

https://lankanewsweb.net/archives/7081/mp-harin-fernando-discloses-cabinet-paper-selling-sri-lankan-airspace-to-india-video/

  • கருத்துக்கள உறவுகள்
On 21/3/2022 at 19:08, விசுகு said:

நல்ல  செய்தி 

இன்னும்  வளர்க

இது இனி தொடர்கதை, ஆனாலும் இதில் எம்வர்களுக்கும் பாதிப்பே, நாம்தான் அவர்களுக்கு உதவ வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் தெரிந்துதான் கொஞ்சப்பேர் யாழில் ஓடி ஒளித்துஉள்ளனர் போல் உள்ளது நான் நினைக்கிறன் மகிந்த குடும்பத்துக்கு பாடம் எடுக்க போயிருப்பினம் .

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பெருமாள் said:

இதெல்லாம் தெரிந்துதான் கொஞ்சப்பேர் யாழில் ஓடி ஒளித்துஉள்ளனர் போல் உள்ளது நான் நினைக்கிறன் மகிந்த குடும்பத்துக்கு பாடம் எடுக்க போயிருப்பினம் .

ஏற்கெனவே... கோத்தா, மகிந்தவுக்கு... 
வெள்ளை அடித்த ஆட்கள் என்ற படியால்,
அந்த அனுபவத்தை வைத்து... 
செயல் முறையில், பரீட்சித்துப் பார்க்க போயிருப்பினம்.
ஆனால்... இம் முறை, இலவச சேவைதான்.  
அங்கிருந்து துட்டு கிடைக்காது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

பிந்திய செய்தி! இருபத்தொன்பது மில்லியனுக்கு இலங்கை வான்பரப்பை இந்தியாவுக்கு விற்பனை செய்யப்பட்டுவிட்டதாமே, யாரும் கேள்விப்பட்டீர்களோ? பஷில் இந்தியாவுக்கு ஓடுப்பட்டு திரிந்தது இதற்காகத்தானோ?

பணம் உள்ளவர்கள் பணத்தை பாதுகாப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள் கோடிக்கணக்கில் பணமாய் வைத்து அவை இலங்கையின் தற்போதைய நிலையில் மதிப்பிழக்க விடமாட்டார்கள் அவற்றை கருப்பு பணமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி பவுன்ஸ் டொலராய் மாத்தி விடுவார்கள் இந்த நிகழ்வு சீட்டு கட்டு சரிவு போல் மிகவேகமாக நடைபெறுகிறது அதனால் பிளாக்கில் பாரிய தொகை என்றால் இலங்கை ரூபா பவுன்சுக்கு 400 தாண்டி ஓடுகிறது இங்கிலாந்து கருப்பு பண உலகில் நிலைமை படுமோசமாக போய் கொண்டு இருக்கிறது கண்ணுக்கு முன்னே தெரிகிறது எம்பஸிகளை இழுத்து மூடிக்கொண்டு இருக்கினம் இந்த நிலையிலும் நம்ம கொஞ்ச சனம் சிங்கள   ராஜதந்திரம் கனடாவில் சிங்கம் வந்துவிட்டது என்று நம்புகினம் எச்சரிக்கை உணர்வு என்று கடந்து போகவேண்டியதுதான் .

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

பிந்திய செய்தி! இருபத்தொன்பது மில்லியனுக்கு இலங்கை வான்பரப்பை இந்தியாவுக்கு விற்பனை செய்யப்பட்டுவிட்டதாமே, யாரும் கேள்விப்பட்டீர்களோ? பஷில் இந்தியாவுக்கு ஓடுப்பட்டு திரிந்தது இதற்காகத்தானோ?

டாலரா?ரூபாவா?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

டாலரா?ரூபாவா?

29 மில்லியன் டொலர் என்று… மேலே, நுணாவிலான் இணைத்த ஆங்கில இணைப்பில் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கற்பனைக்காக இதை எழுதுகிறேன்

யுத்தம் நடந்தகாலத்தில் சிங்களம் தமிழர்கள்மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட பல பில்லியம் டாலர்களைச் செலவு செய்தது யுத்தத்தின் அகோரத்தின் உச்சம் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு மேலாகும் இந்த வேளையிலேயே சிங்களம் அதியுச்ச போர்ச்செலவீனத்தைச் செய்தது.

போர் முடிவுக்கு வந்து பதின்மூன்று வருடங்கள் முடிவடைந்துள்ளது. ஆக யுத்தத்துக்குச் செலவுசெய்த பணத்துக்குச் ச்மனான பணம் அபிவிருத்திக்காகச் செலவு செய்திருக்கவேண்டும், இதில் கவனிக்கப்படவேண்டிய விடையம் யுத்தம் நடைபெற்ற வேளையில் சிங்களம் இப்போது சந்திக்கும் பொருளாதாரப் பற்றாக்குறையச் சந்திக்கவில்லை.

நாங்கள் சிங்களவர்களை காலம் காலமாகச் சொல்லிக்கொண்டுவாறது "மோடய" என ஆனால் முள்ளிவாய்க்கலுக்குப் பின்பு நாமே சிங்களவர்கள் எம்மைவிட புத்திசாலிகள் என ஏற்றுக்கொண்ட சம்பவங்களும் இருக்கு.

சிங்கள நாடாளுமன்றத்தில் ஒரு சிங்கள உறுப்பினர் எங்களை மோடய என தமிழர்கள் சொன்னார்கள் ஆனால் நாங்கள் புத்திசாலிகள் என்பதை இப்போது நிரூபித்துள்ளோம் என அண்மையில் கூறியதை நினைவுறுத்தவும்.

சரி விடையத்துக்கு வருவோம்

கடந்த பத்துவருடமாக யுத்தத்துக்குச் செலவு செய்யாத பணம் எங்கே போனது. 

ஒன்றும் வேண்டாம் வடக்குக் கிழக்கை இணைத்து தமிழர் தாயகத்தை அங்கீகரித்து சுயநிணய உரிமையுடன் கூடிய தீர்வை நடைமுறைப்படுத்தினால் ......

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மாதம்தோறும் அவர்களது சம்பளத்தில் ஒருநாள் சம்பளத்தை கிட்டத்தட்ட முப்பது மாதங்கள் வடக்குக்கிழக்கு நிர்வாகத்துக்குக் கொடுத்திருந்தால் இலங்கைத்தீவு துரிதமாக முன்னேறியிருக்கும். 

ஆனால் இந்தியாவும் சீனாவும் கடனைக்கொடுத்து கடனுக்கான வட்டிக்காக வடக்குக் கிழக்கை இந்தியாவும் தென்பகுதியை சீனாவும் பங்குபோட்டுக்கொள்ளச் சந்தர்ப்பம் கொடுத்த சிங்களவனை மோடைய என அழைப்பதில் தவறில்லையே.

சென்ற வாரமும் இய்தியாவுக்கு இலங்கை திருவோடு காவிப்போகையில் நாங்கள் குறிப்பிடும் இலங்கைத்தீவின் பகுதிகளை எமக்குத்தா அல்லது தமிழருக்கு உரிமை கொடு என கத்துவம் என்று சொல்லித்தானே பூனகரியையும் மன்னாரையும் அதானிக்கு வாங்க்கிக் கொடுத்தது இந்தியா, இன்னும் சிறிது காலத்தில் குரங்கு அப்பம் பிரித்தகதையாக இலங்கைத் தீவு சிங்களவனுக்கோ தமிழனுக்கோ உரித்துள்ளதாக இல்லாது நாம் இந்த இரு தேசிய இனங்களும் வந்தேறு குடியாக உருவகம்ப்படுத்தப்படுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, vanangaamudi said:

இலங்கையின் பொருளாதர நிலைமை கட்டுப்பாடின்றி மோசமாகிக்கொண்டு செல்லும் இந்த வேளையில் நாட்டில் திடீரென அரசியல் கொந்தளிப்பு, ஆட்சி மாற்றம், இராணுவ புரட்சி எது வேண்டுமானாலும் நிகழலாம். இந்த நெருக்கடியில் சிக்கப்போகும்  தமிழினத்தை முடிந்தளவு பஞ்சம், பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என்பவற்றிலிருந்து காப்பாற்றவும் இத்தருணத்தை எமக்கு சாதகமாக்க என்னென்ன உத்திகளை கையாளமுடியும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு செயலாற்ற வேண்டியதும் அனைத்து   தமிழ் அரசியல் தலைமைகளின் கடமையாகும்.

வேலையில்லா திண்டாட்டம் இருக்கா?...அரசு காசை புதுசு ,புதுசாய் அச்சடிக்குது ...ஆட்களிடம் பண புழக்கம் இருக்கு ...பொருட்கள் தான் இல்லை ...அத்தோடு கூடின விலை கொடுத்து வாங்க வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

ஒரு கற்பனைக்காக இதை எழுதுகிறேன்

யுத்தம் நடந்தகாலத்தில் சிங்களம் தமிழர்கள்மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட பல பில்லியம் டாலர்களைச் செலவு செய்தது யுத்தத்தின் அகோரத்தின் உச்சம் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு மேலாகும் இந்த வேளையிலேயே சிங்களம் அதியுச்ச போர்ச்செலவீனத்தைச் செய்தது.

போர் முடிவுக்கு வந்து பதின்மூன்று வருடங்கள் முடிவடைந்துள்ளது. ஆக யுத்தத்துக்குச் செலவுசெய்த பணத்துக்குச் ச்மனான பணம் அபிவிருத்திக்காகச் செலவு செய்திருக்கவேண்டும், இதில் கவனிக்கப்படவேண்டிய விடையம் யுத்தம் நடைபெற்ற வேளையில் சிங்களம் இப்போது சந்திக்கும் பொருளாதாரப் பற்றாக்குறையச் சந்திக்கவில்லை.

நாங்கள் சிங்களவர்களை காலம் காலமாகச் சொல்லிக்கொண்டுவாறது "மோடய" என ஆனால் முள்ளிவாய்க்கலுக்குப் பின்பு நாமே சிங்களவர்கள் எம்மைவிட புத்திசாலிகள் என ஏற்றுக்கொண்ட சம்பவங்களும் இருக்கு.

சிங்கள நாடாளுமன்றத்தில் ஒரு சிங்கள உறுப்பினர் எங்களை மோடய என தமிழர்கள் சொன்னார்கள் ஆனால் நாங்கள் புத்திசாலிகள் என்பதை இப்போது நிரூபித்துள்ளோம் என அண்மையில் கூறியதை நினைவுறுத்தவும்.

சரி விடையத்துக்கு வருவோம்

கடந்த பத்துவருடமாக யுத்தத்துக்குச் செலவு செய்யாத பணம் எங்கே போனது. 

ஒன்றும் வேண்டாம் வடக்குக் கிழக்கை இணைத்து தமிழர் தாயகத்தை அங்கீகரித்து சுயநிணய உரிமையுடன் கூடிய தீர்வை நடைமுறைப்படுத்தினால் ......

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மாதம்தோறும் அவர்களது சம்பளத்தில் ஒருநாள் சம்பளத்தை கிட்டத்தட்ட முப்பது மாதங்கள் வடக்குக்கிழக்கு நிர்வாகத்துக்குக் கொடுத்திருந்தால் இலங்கைத்தீவு துரிதமாக முன்னேறியிருக்கும். 

ஆனால் இந்தியாவும் சீனாவும் கடனைக்கொடுத்து கடனுக்கான வட்டிக்காக வடக்குக் கிழக்கை இந்தியாவும் தென்பகுதியை சீனாவும் பங்குபோட்டுக்கொள்ளச் சந்தர்ப்பம் கொடுத்த சிங்களவனை மோடைய என அழைப்பதில் தவறில்லையே.

சென்ற வாரமும் இய்தியாவுக்கு இலங்கை திருவோடு காவிப்போகையில் நாங்கள் குறிப்பிடும் இலங்கைத்தீவின் பகுதிகளை எமக்குத்தா அல்லது தமிழருக்கு உரிமை கொடு என கத்துவம் என்று சொல்லித்தானே பூனகரியையும் மன்னாரையும் அதானிக்கு வாங்க்கிக் கொடுத்தது இந்தியா, இன்னும் சிறிது காலத்தில் குரங்கு அப்பம் பிரித்தகதையாக இலங்கைத் தீவு சிங்களவனுக்கோ தமிழனுக்கோ உரித்துள்ளதாக இல்லாது நாம் இந்த இரு தேசிய இனங்களும் வந்தேறு குடியாக உருவகம்ப்படுத்தப்படுவார்கள்.

என்னதான் விளக்கம் கொடுத்தாலும் சிலதுகளுக்கு மோட்டு சிங்களவன் என்றால் காணும் உடனே உச்சி முதல் உள்ளம்கால் வரை நடுங்க தொடங்கும் பிழை அவர்களிடம் இல்லை அவர்களின் மூளைக்குள் உள்ள அடிமை புத்தி அய்யோ எசமானை மோடன் என்று சொல்லிவிட்டார்களே எசமான் கோவிக்க போறாரே எனும் நூறாண்டு கால அடிமை வியாதி திருத்த முடியாது விட்டு விடுங்க .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

அரசு காசை புதுசு ,புதுசாய் அச்சடிக்குது ...ஆட்களிடம் பண புழக்கம் இருக்கு ...பொருட்கள் தான் இல்லை ...அத்தோடு கூடின விலை கொடுத்து வாங்க வேண்டும்

அச்சடித்தது போலியாம்! அதை பயன்படுத்த தேவையேயில்லை, கொடுத்து வாங்குவதற்கு அங்கு ஒன்றுமேயில்லை. டொலரை வாங்குவதற்கு கையாண்ட தந்திரம்!

சின்னப்பிள்ளையில நாங்கள் கடை வைத்து விளையாட உபயோகித்தததை, அவர்கள் இப்போ பெரியளவில் விளையாடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Image

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

Image

இது பழைய செய்தி 😆

இலங்கை கஞ்சாவை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதற்கான பூர்வாங்க வேலைகள் முடிவடைந்துவிட்டன. சட்ட அங்கிகாரம் மட்டுமே தேவை. அதுவும் விரைவில் அங்கிகரிக்கப்படும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.