Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை நெருக்கடி: ஒரு வாரத்தில் புதிய அரசாங்கம்; நாடாளுமன்றத்திற்கு அதிகாரம்: கோட்டாபய ராஜபக்ஷ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நெருக்கடி: ஒரு வாரத்தில் புதிய அரசாங்கம்; நாடாளுமன்றத்திற்கு அதிகாரம்: கோட்டாபய ராஜபக்ஷ

8 நிமிடங்களுக்கு முன்னர்
 
ராஜபக்ஷ

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு வார காலத்திற்குள் புதிய அரசாங்கத்தை அமைத்து, அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீள அமல்படுத்த தான் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரையொன்றை நிகழ்த்தியபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாடு ஸ்திரதன்மை அடைந்த பிறகு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வதற்கும் தான் நடவடிக்கை எடுப்பதாக அவர் இன்று உறுதி வழங்கியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ உரையிலிருந்து:

இன்று எமது நாடு வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் மிகவும் மோசமான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இந்த சந்தர்ப்பத்திற்கு வருவதற்கு முன்பாக, பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் எதிர்நோக்கி வந்த சிரமங்கள் காரணமாக சமூக, அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டது. இந்த பிரச்னைக்கு தீர்வாக பல்வேறு தரப்பினர் பொஸ்திதுவான யோசனையொன்றை முன்வைத்தார்கள்.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மை கட்சிகளை இணைத்த புதிய அரசாங்கமொன்றை ஸ்தாபிக்குமாறே பலரும் யோசனைகளை முன்வைத்திருந்தார்கள். இந்த விடயம் தொடர்பில் கடந்த காலங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் தலைவர்களுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தேன்.

அந்த கருத்துக்களை நானும் ஏற்றுக்கொண்டு, இந்த பிரச்னைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான பின்னணியை ஏற்படுத்தி, அதற்காக மிகவும் சிரமமான கடுமையான பல தீர்மானங்களை எடுத்தேன். கடந்த அமைச்சரவையை நியமிக்கும் போது, அப்போது இருந்த பல சிரேஸ்ட அமைச்சர்களும், அனைத்து ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் இல்லாத, புதிய அமைச்சர்களுடனான புதிய அமைச்சரவையொன்றை ஸ்தாபித்தேன். அதேபோன்று, பிரதமர் ராஜினாமா செய்து, முழு அமைச்சரவையையும் கலைத்து, புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையை நியமிப்பதற்கான இணக்கப்பாட்டிற்கு வந்தேன். எனினும், மே மாதம் 9ம் தேதி காலை நீங்கள் அனைவரும் அறிந்த விதத்தில் மிகவும் அசாதாரண சூழ்நிலையொன்று ஏற்பட்டது.

இந்த சம்பவத்தின் பின்னர், குறுகிய நேரத்தில் நாடு முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டது. ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்தி, முப்படைகளை கடமைகளுக்கு அமர்த்துவதற்கு முன்பாகவே, திட்டமிட்ட இந்த சம்பவம் நாடு முழுவதும் ஏற்பட்டது. சில மணிநேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அடங்கலாக 9 பேர் அமானுஷியமாக தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டனர்.

அதேபோன்று, சுமார் 300 பேர் வரை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதேபோன்று, பெருமளவிலான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. நாடு முழுவதும் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை முதன்மையாக கட்சி பேதங்கள் இன்றி நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

அது தொடர்பிலான விசாரணைகளை நடத்துவதற்கும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் போலீஸ் மாஅதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன். அது எவ்வாறானாலும், அதன் பின்னர் நடத்தப்பட்ட கொலைகள், தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட சம்பவங்களை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. இந்த சம்பவம் நடந்தேறிய சந்தர்ப்பத்திலிருந்து, பாதுகாப்பு செயலாளர், முப்படை தளபதி, போலீஸ் மாஅதிபர், புலனாய்வு பிரதானி உள்ளிட்ட பாதுகாப்பு பிரதானிகளை தொடர்புப்படுத்திக் கொண்டு, நான் நாட்டை அமைதியாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தேன்.

ஜனாதிபதி அலுவலகம் அருகே பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருக்கும் ராணுவப் படை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஜனாதிபதி அலுவலகம் அருகே பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருக்கும் ராணுவப் படை

நாட்டின் அனைத்து பிரஜைகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதே இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தின் அடிப்படை பொறுப்பாக காணப்படுகின்றது. அதனால், அமைதியின்மையை தோற்றுவிக்கும் வகையில் செயற்படுவோருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு முப்படைகளுக்கும், போலீஸாருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு தொடர்புப்பட்ட, திட்டமிட்ட, ஆணை வழங்கிய மற்றும் பிரசாரம் செய்த அனைத்து தரப்பிற்கும் எதிராக கடுமையான சட்டத்தை அமுல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதனால், இவ்வாறு வன்முறைகளில் ஈடுபடாது, அதனை தவிர்த்துக்கொள்ளுமாறு நான் அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் அதேவேளை, நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக நான் அனைத்து கட்சிகளினதும் தலைவர்களுடனும் இணைந்து செயற்பட்டு வருகின்றேன்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை முகாமைத்துவப்படுத்த, அதேபோன்று நாடு அராஜக பாதைக்கு செல்வதை தவிர்த்துக்கொள்வதற்கும், தற்போது நிறுத்தப்பட்டுள்ள அரச செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கும், புதிய அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கு நான் நடவடிக்கை எடுத்து வருகின்றேன்.

நான் இந்த வாரத்திற்குள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் நம்பிக்கையை வெற்றிக்கொண்ட, அதேபோன்று, நாட்டு மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்திக்கொள்ளக்கூடிய பிரதமர் ஒருவர் மற்றும் அமைச்சரவையை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றேன். அதன்பின்னர், நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் கிடைக்கும் விதத்திலான 19வது திருத்தம் அமல்படுத்தும் புதிய அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்த நான் நடவடிக்கை எடுப்பேன்.

புதிய அரசாங்கத்தின் பிரதமருக்கு புதிய திட்டத்தை முன்வைத்து, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பேன். அதேபோன்று, பல்வேறு தரப்புக்களினால் ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யுமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. நியமிக்கப்படும் புதிய அரசாங்கம், நாட்டை ஸ்திரதன்மைக்கு கொண்டு வந்ததன் பின்னர் அனைத்து தரப்புடனும் கலந்துரையாடல்களை நடத்தி, அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திக் கொடுப்பேன்.

இந்த சிரமமான சந்தர்ப்பத்தில் நாட்டை வீழ்ச்சி பாதைக்கு கொண்டு செல்லாது, பொதுமக்களின் உயிர்களுக்கான பாதுகாப்பை போன்று, அவர்களின் சொத்துக்களையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்து, அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கான அரச பொறிமுறையொன்றை தொடர்ச்சியான நடைமுறைப்படுத்துவதற்கு எனக்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன். இந்த சந்தர்ப்பத்தில் அமைதியாகவும், சிந்தித்தும் செயற்படுமாறு அனைத்து இலங்கையர்களிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.

https://www.bbc.com/tamil/sri-lanka-61411531

  • கருத்துக்கள உறவுகள்

புதிய பிரதமரின் தலைமையில் அமைச்சரவையை இவ்வாரத்திற்குள்  ஸ்தாபிப்பேன் : ஜனாதிபதி உறுதி

இவ்வாரத்திற்குள் புதிய பிரதமரின் தலைமையில் அமைச்சரவையை ஸ்தாபிப்பேன் என ஜனாதிபதி உறுதி பூண்டுள்ளார்.

Articles Tagged Under: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ | Virakesari.lk

இன்று இரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போதே இந்த உறுதியை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

இவ்வாரத்திற்குள் புதிய பிரதமரின் தலைமையில் அமைச்சரவையை ஸ்தாபிப்பேன் .

நாட்டில் நிலைமை மோசமடைந்துள்ளது. இதனை மீளக்கட்டியெழுப்ப அனைத்து ஒத்துழைப்புக்களையும் புதிய அமைச்சரவைக்கு வழங்குவேன்.

19 ஆவது அரசியலமைப்பில் உள்ள சிறந்த விடயங்களை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பை உருவாக்க ஒத்துழைப்பேன்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது தொடர்பாக பலர் ஆலோசனை வழங்கியுள்ள நிலையில் அது குறித்து அவதானம் செலுத்துவேன்.

கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்திற்கு காரணமானவர்கள் அனைவருக்கும் தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

http://www.newswire.lk/wp-content/uploads/2022/05/Screenshot_20220511-210851_Drive.jpghttp://www.newswire.lk/wp-content/uploads/2022/05/Screenshot_20220511-210851_Drive.jpg
 
https://www.virakesari.lk/article/127339

  • கருத்துக்கள உறவுகள்

சோத்துப்பிரச்சினை ஒன்று தான்  நாட்டில்???

திருந்தப்போவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

ஓரளவு நிலைமை சீரானாலும் இன்னும் ஐந்து வருடங்கள் ஆனாலும் பொருளாதார நிலைமை சீரடையாது. நாடக்கூலிக்கு வேலை செய்யும் குடும்பங்கள் தான் பரிதாபத்துக்கு உரியது 

  • கருத்துக்கள உறவுகள்

கொதிநிலையில் இருக்கும் மக்களின் எழுச்சியையும் அவர்களின் போராட்டத்தையும்   நீர்த்துப்போகவைக்கும் மாற்றுத்  திட்டம் ஒன்றை ஜனாதிபதி போடுவதாக தெரிகிறது.  புதிய அரசாங்கம் அமைத்தவுடன் நாட்டில் பொருளாதார நெருக்கடி தீர்ந்துவிடுமா? அல்லது மக்களின் அன்றாட கஷ்டங்கள் தான் உடனடியாக தீர்ந்துவிடுமா?

ஜனாதிபதி முறையை ஒழிப்பதுடன் நின்றுவிடாமல் இனி வரும் காலங்களில் குடும்ப வாரிசுகளை மையப்படுத்திய ஆட்சி அதிகார  முறை, அரசியலில் பௌத்த சங்கங்களின் தலையீடு,  நாட்டின் இனங்களுக்குள் பாகுபாட்டை வளர்த்து அரசியல் இலாபம் தேடுவது, சிறுபான்மை மக்களின் பாரம்பரிய வாழ்நிலங்களை திட்டமிட்டு சூறையாடுதல் இதுபோன்ற இன்னும் பல ஜனநாயக விரோத நடைமுறைகளையும் மாற்றியமைத்தல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மேட்டுக்குடி இரண்டின் நாடகம் இது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழமை போல் வெளிநாட்டு மானியங்கள் மூலம் சிங்கள மக்களை குளிர்வித்து விடுவார்கள். ஏனெனில் சிங்கள மக்கள் வீதிக்கு இறங்கியது அன்றாட தேவைகள் இல்லாத காரணத்தினால் மட்டுமே. மற்றும் படி சிங்கள மக்களுக்கு எவ்வித அடிப்படை பிரச்சனைகள் ஏதுமில்லை.

சிங்கள இனவாதம் தற்போதைய பிரச்சனைகள் மூலம் நாடி பிடித்து நோயை அறிந்து விட்டது. இனிமேல் அந்த தவறு வராமல் பார்த்துக்கொள்ளும். ஐ மீன்  இனிவரும் காலங்களில் சிங்கள தேசத்தில் பாண்,பருப்பு,சம்பல்,எரிபொருளுக்கு தட்டுப்பாடு வராமல் கண்ணும் கருத்துமாய் கவனமாக இருக்கும்.

மற்றும்படி சிங்கள தேச தேர்தல் என்பது அவர்களுக்கு ஒரு சூதாட்ட/களியாட்ட நிகழ்வு போன்றது. தமிழர்களின் நிலையோ அன்றுபோல் என்றும் அணிலை ஏற விட்ட நாயின் நிலைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் பொருளாதாரப்பிரச்சினையின் அடிப்படை காரணத்தினை (உண்மையான காரணத்தினை) எதிர்கட்சியினரும் தெரிவிப்பதில்லை, அண்மையில் இரணில் விக்கிரமசிங்க இனது நேர்முகத்தில் இலங்கையர்சின் 2019 கொண்டு வரப்பட்ட வரி வீத குறைப்புதான் இந்த  இன்றையநிலைக்கு காரணம் என அர்சின் நிர்வாகத்திறமியின்மை காரணம் காட்டினார்.

https://data.worldbank.org/indicator/GC.TAX.TOTL.GD.ZS?locations=LK

2012, 2013, 2014 இலங்கயின் வருமான வரி 2019 இல் இருந்ததினை விட குறைவு.

உண்மையான இலங்கை பொருளாதார பிரச்சினை அரசின் உழல்தான், இதனை சுட்டி காட்ட எதிர்கட்சி விரும்பவில்லை என நினைக்கிறேன்.

எதிர்கட்சி ஏன் அரசின் ஊழலை மூடி மறைக்க வேண்டும்? 

எதிர்காலத்தில் எதிர்கட்சி ஆட்சிக்கு வந்தால் இதே ஊழலை செய்ய விரும்புகிறார்களோ?

அப்படியானால் இலங்கைக்கு விடிவே கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் நடைமுறைக்கணக்கு (Current account balance) பற்றாக்குறை மொத்த தேசிய வருமானத்தில் (GDP).

நடைமுறக்கண்க்கில்தான் ஏற்றுமதி இறக்குமதி நிலுவை செல்கிறது, இலங்கயில் காலா காலமாக ஒரே விதமான பற்றாக்குறையே ஏற்பட்டு வருவதனை இந்த தரவுகளின் மூலம் காணலாம்.

https://www.theglobaleconomy.com/Sri-Lanka/current_account/

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

இலங்கை நெருக்கடி: ஒரு வாரத்தில் புதிய அரசாங்கம்; நாடாளுமன்றத்திற்கு அதிகாரம்: கோட்டாபய ராஜபக்ஷ

இவரை பதவி விலகுமாறு கோரியே ஆர்ப்பாட்டம் தொடங்கப்பட்டது.

இப்போ இவரே புதிய அரசு அமைக்கப் போகிறாராமே?

  • கருத்துக்கள உறவுகள்

1.தேயிலை

2. ஆடை ஏற்றுமதி

3. சுற்றிலா 

4. புலம்பெயர்ந்தோர் டாலர்.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ஈழப்பிரியன் said:

இவரை பதவி விலகுமாறு கோரியே ஆர்ப்பாட்டம் தொடங்கப்பட்டது.

இப்போ இவரே புதிய அரசு அமைக்கப் போகிறாராமே?

அதுதான்… எனக்கும் விளங்கவில்லை.
கோத்தாவுக்கு…. வைத்த குறி, மைனாவுக்கு… பட்டுட்டுது. 😂

ரணிலை பிரதமராக்க முனைகின்றனர் என தென்னிலங்கையில் இருந்து செய்திகள் வருகின்றன. சரத் பொன்சேக்காவின் பெயரும் அடிபடுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

தடுப்பூசி ஏற்றுவதை உறுதிப்படுத்துதே, தொற்றுப் பரவலில் இருந்து மீள்வதற்குள்ள சிறந்த வழியாகும் – ஜனாதிபதி!

மக்களின் நம்பிக்கையை பெறக்கூடிய புதிய பிரதமரும், அரசாங்கமும் இந்த வாரத்தில் நியமிக்கப்படும் – ஜனாதிபதி!

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற்று மக்களின் நம்பிக்கையை பெறக்கூடிய புதிய பிரதமரும், அரசாங்கமும் இந்த வாரத்தில் நியமிக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு இன்று(புதன்கிழமை) இரவு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புதிய பிரதமர் மற்றும் அரசாங்கத்தை நியமித்ததன் பின்னர், அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் உள்ளடக்கத்தை நிறைவேற்றுவதற்கு அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தின் பிரதமருக்கு புதிய வேலைத்திட்டத்தை உருவாக்கி இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி பதவியை நீக்குவதற்கான கோரிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், புதிய அரசாங்கம், நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திய பின்னர், அனைத்து தரப்பினருடனும் இந்த விவகாரம் குறித்து விவாதித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் மக்களையும் சொத்துக்களையும் பாதுகாக்கும் அதேவேளையில், நாட்டை வீழ்ச்சியடையச் செய்யாமல், மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையானவற்றை வழங்குவதற்கான அரச பொறிமுறையை தொடர்ந்தும் பேணுவதற்கு உங்கள் ஆதரவை நான் கோருகிறேன் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த வார தொடக்கத்தில் நாட்டில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வன்முறைக்கான மூல காரணத்தை வன்மையாகக் கண்டித்ததோடு, விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கொலைகள், தாக்குதல்கள், மிரட்டல் நடவடிக்கைகள், சொத்துக்களை அழித்தல் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தொடர் கொடூரமான செயல்களை நியாயப்படுத்த முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வுகள் நடந்த தருணத்திலிருந்து, பாதுகாப்பு செயலாளர், ஆயுதப்படைகளின் தளபதிகள், உளவுத்துறை தலைவர் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் கூட்டப்பட்டு, நாட்டில் அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதே அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பு.

வன்முறையை ஏற்படுத்துவோருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு சிறிலங்கா காவல்துறை மற்றும் முப்படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வுகளுக்குத் திட்டமிட்ட, உதவிய, ஊக்குவித்த மற்றும் தொடர்புள்ளவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்ததுடன், நாசகார செயல்களில் இருந்து அனைவரும் விலகுமாறு கேட்டுக் கொண்டார்.

வெறுப்புணர்வை பரப்ப முயற்சிப்பவர்களின் செயல்களை வன்மையாகக் கண்டிக்குமாறு நாட்டிலுள்ள அனைத்து பொறுப்புள்ள குடிமக்களுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://athavannews.com/2022/1281505

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

மக்களின்நம்பிக்கையைப் பெறக்கூடிய பிரதமர் என்டால் தேர்தலில் வெல்லாத தேசியப்பட்டியல் ரணிலோ?

  • கருத்துக்கள உறவுகள்

மாறி சொல்லிப்போட்டார். மக்களின் நம்பிக்கையை பெற்று ஆரவாரமாய் கதிரையில் இருத்தியவர்களை அடித்து கலைத்தாயிற்று. இனி மக்களின் நம்பிக்கையை பெறாதவரை பிரதமர் ஆக்கினால் மக்கள் அடித்து விரட்ட முடியாது என்று நினைத்தார்களோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.