Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய பிரதமராக... ரணில்? – இன்று அல்லது நாளை, பதவியேற்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ரணில்

புதிய பிரதமராக... ரணில்? – இன்று அல்லது நாளை, பதவியேற்பு!

ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடல் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நீடித்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன்போதே பிரதமர் பதவி தொடர்பாக நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டு ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்க இணக்கம் காணப்பட்டதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று அல்லது நாளை புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பார் என தெரிவிக்கப்படுகிறது.

ரணில் விக்ரமசிங்கவிற்கு பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதுடன், அதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குழுவும் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பிரதமர் பதவிக்கு மூன்று பெயர்களை முன்மொழிவதற்கு அரசாங்கத்தின் சுயேச்சைக் குழுவொன்று தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர்களான விஜேதாச ராஜபக்ஷ, டலஸ் அழகப்பெரும மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரை அந்த பதவிக்கு நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பிரேரணை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1281521

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ரணில் விக்ரமசிங்க மீண்டும் இலங்கை பிரதமரானார்; முடிவுக்கு வந்தது அதிகாரச்  சண்டை - BBC News தமிழ்
 
ஐந்து தடவை நாட்டின் பிரதமாராகி... எதுகும் சாதிச்சதாக வரலாறு இல்லை.
விடுதலை புலிகளை பிளவடைய செய்ததை விட,
வேறு ஒன்றும் சொல்லுற மாதிரி இல்லை
இவ௫ம் தொடர்ந்து பிரதமராக தொடர்வாரா... என்பதை,
இலங்கை வாழ் மக்கள் தான்... முடிவு பண்ணவேண்டும்.
 
 
######################    ##################   ###################
 
அதான் ரணில்..!
//எக்காரணம் கொண்டும் கோல்பேஸ் ஆர்ப்பாட்டக்காரர்களை
பலவந்தமாக அகற்றக்கூடாது. அப்படி செய்தால்... உலக நாடுகளிடம் பேச முடியாது .
நாங்கள் தனிமைப்பட்டு விடுவோம்...//
இதுதான்... கோட்டாவுடன் நேற்று நடந்த சந்திப்பில், ரணில் போட்ட நிபந்தனை...
 
ரணில் தாண்டா ஆள்.. ஜனநாயகத்தில் இப்படி டீப்பா இருக்கிறாரே என்று நினைத்து,
அப்படி செய்யவே மாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்தாராம் கோட்டா..
 
உண்மையா சொல்லப் போனால்... பிரதமர் பதவி ஏற்கும் ரணிலுக்கு,
அந்த ஜனநாயகம் பற்றி அக்கறையில்லை..
 
அந்த கோல்பேஸ் ஆர்ப்பாட்டக்காரர்கள்  அப்படியே.. இருந்தால் தான்,
கோட்டா.. விரைவாக வீட்டுக்கு போவார்.. அப்படி போயிட்டா அடுத்தது யார் ?
 
அங்கே தான், நிற்கிறார்... ரணில் !
 
- சிவா ராமசாமி-

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தோர்தலில் தோற்றுப் போனவனுக்கு பிரதமர் பதவியா?

என்னையா; வீடு கொளுத்தினால்த் தான் அடங்குவீங்களா?

1 hour ago, தமிழ் சிறி said:

புதிய பிரதமராக... ரணில்? – இன்று அல்லது நாளை, பதவியேற்பு!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகத்திற்கு இழுக்கு மக்களால் நிராகரிக்கப்பட்டவர் குறுக்கு வழியில் பிரதமராவது ஏற்க முடியாதது. போலிஜனநாயகம் பேசும் மேற்குலத்தின் முகவர் அவர். சஜித் அல்லது அனுரா பிதமராக வரத்தகுதியானவர்கள்.May be an image of 1 personMay be an image of text

  • கருத்துக்கள உறவுகள்

யார் வந்தாலும் தமிழர் அரசியல் தீர்வுத்திட்டம்..? 

குழு/உபகுழு/துணைகுழு .. ரூம் போட்டு கதைத்து கொண்டே இருப்பினம் .. போதாகுறைக்கு  கடதாசி தட்டுப்பாடு , பிரிண்ட் மிசினில் கோளாறு , ஜெராக்ஸ் இயந்திரம் பழுது ? 😢 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாளாவது  இலங்கைத் தீவின் ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என்ற உந்த ஆளின் ஆசை நிறைவேறும் போல தான் இருக்கு.


 பக்சர்களின்  பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை பிரதமமந்திரி;  பின் கொட்ட ராஜினாமா செய்ததும் சட்டப்படி ஜனதிபதி. 

முன்பு மைனாவிடம் இழந்த சொர்க்கத்தை அண்ணன்  நந்தாவிடம் பெறப் போகுது போல ஆள் ....

முழு இலங்கையிலும் ஆகக்  கெட்ட பரதேசி எண்டால் உந்த ஆள் தான் .....

 

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்காவில் எதிர்க்கட்சி என்று ஒன்று இருக்குதா........எல்லாம் பேப்பரில் மட்டும் வாழுது உலகத்தை ஏமாற்றுவதற்கு......!

என்று ஒரு ஜனாதிபதி தனது தரம் இழந்து பிரதமராவதும்.......இன்னொரு நாட்டு பிரஜை  ஜனாதிபதியாவதும் அதற்கு எல்லாக் கட்சிகளும் (தமிழ், முஸ்லீம் உட்பட.  இதுபோல ஒரு தமிழனோ முஸ்லிமோ தேர்தலுக்கு நிற்பதை நினைக்க முடியுமா யோசியுங்கள்.) சலாம் போட்டதும் நடந்தபோதே அங்கு ஒரு குடும்ப ஆட்சி மட்டும்தான் நடந்து கொண்டிருக்கு..... அவர்கள் தேவைக்கு ஏற்றாற் போல் ஆட்களை மாற்றி மாற்றி பயன்படுத்திக் கொள்வார்கள்......ரஷ்யா சீனாவை ஏமாற்ற அவர்கள்....இந்தியாவை சொல்லத் தேவையில்லை.அது தானாகவே சென்று அவர்கள் காலில் அடிபணிந்து கிடைக்கும்.....இப்ப மேற்குலகுகளை சுத்துவதற்கு ரணில் களமிறக்கப் படுகின்றார்.....தேவை முடிய அவர் மீண்டும் பரணில் தூக்கிப் போடப் படுவார்.....அவ்வளவுதான்....பின் அவர்களின் சாம்ராஜ்யம் சுமுகமாய் செல்லும்.....எல்லோரும் அவர்களிடம் வாங்கி திண்டு கொழுத்துக் கிடைக்கும் அடிமைகளே.......! 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கிளாக வந்து சிங்கமாக உருவெடுக்கிறார் ரணில்!

Edited by பகிடி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரணில் பிரதமராகி விட்டார்,.
இனி... சம்பந்தனும், சுமந்திரனும்...   ரணிலுடன் தமக்கு உள்ள நட்பை பயன்படுத்தி...
சிறையில் உள்ள கைதிகளை விடுவிப்பது,
இறுதிப் போரில், அரசியிடம் ஒப்படைத்து...  காணாமல் போனவர்கள், 
இன்னும்... சில சிறைகளிலும், இராணுவ முகாம்களிலும்,
சமையல்காரர்களாகவும், இராணுவ அதிகாரிகளுக்கு வேலைக் காரர்களாகவும்...
உள்ளவர்களை அடுத்த ஒரு மாதத்துக்குள் விடுவிக்க வேண்டிய அலுவலை பார்க்க வேண்டும்.

முன்பு மாதிரி... தீபாவளிக்கு நல்ல தீர்வு  வருகுது, 
புது வருசத்துக்கு... புதிய செய்தி வருகுது என்று, 
சுத்துமாத்து, சொறி... அரசியல் பார்த்துக் கொண்டு  இருந்தால்...

அடுத்து... ராஜபக்ச மாதிரி,   தமிழ் மக்களிடம் இருந்து... 
விரட்டி அடிக்கப்படுவீர்கள், என்பதை  மறக்க வேண்டாம் 

  • கருத்துக்கள உறவுகள்

உவர் அரசியல் கதிரை ஏறி பாதியில் இறங்கினவர் இரண்டுதடவை. இருந்தாலும் ஆசை விடவில்லை. நரி மாதிரி ராஜபக்சக்களை நேரடியாக எதிர்க்க தைரியமில்லை, தந்திரமாய் கதிரை ஏற கனவு காண்கிறார். இதுவும் சிலநாளில் தகர்ந்து விடும். அடி வாங்காமல், சொத்து சேதம் இல்லாமல் தப்பினால் போதும் என்று ஓடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆளை வைத்து மேற்கு நாடுகளில் கடன் வாங்க திட்டமிடப்படுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாபய முன்னிலையில் இன்று மாலை ரணில் பிரதமராக பதவிப்பிரமாணம்?

கோட்டாபய... முன்னிலையில், இன்று மாலை... ரணில் பிரதமராக பதவிப் பிரமாணம்?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 6.30 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ரணில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர் கொள்ளுப்பிட்டி வழுகாராம விகாரைக்கு சென்று மகாசங்கத்தினரின் ஆசிகளைப் பெறவுள்ளார்.

அதன் பின்னர் கங்காராம கோயிலுக்கும் செல்வார் என தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்கனவே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான 130 ஆசனங்களின் ஆதரவு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த சுமார் 25 உறுப்பினர்கள் புதிய பிரதமருக்கு ஆதரவளிக்க இணங்கியுள்ளனர் என கூறப்படுகிறது.

இதேநேரம், கடந்த அரசாங்கத்தில் இருந்து பிரிந்து சென்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் குழு மற்றும் 11 சுயேச்சைக் குழுக்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் ஆதரவையும் ரணில் விக்கிரமசிங்க பெற்றுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2022/1281601

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, இசைக்கலைஞன் said:

இந்த ஆளை வைத்து மேற்கு நாடுகளில் கடன் வாங்க திட்டமிடப்படுது.

 

நடக்குமா???

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

அவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள்

முன்பு இவருடன் இருந்துவிட்டு அங்குபோய் ஒட்டியவர்கள் திரும்ப வந்து ஒட்டுகிறார்கள் போலுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, satan said:

முன்பு இவருடன் இருந்துவிட்டு அங்குபோய் ஒட்டியவர்கள் திரும்ப வந்து ஒட்டுகிறார்கள் போலுள்ளது.

சஜித்தின் கட்சியில் இருந்தும்... பலர் வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

முன்பு இவருடன் இருந்துவிட்டு அங்குபோய் ஒட்டியவர்கள் திரும்ப வந்து ஒட்டுகிறார்கள் போலுள்ளது.

அணிலின்நரித்தனம் இந்தமுறை பொதுஜன பெரமுனவையும் உடைக்காமல் விடாது

  • கருத்துக்கள உறவுகள்

நரி. நரியை பரியாக்குவார்.  மேற்கு நாடுகளுக்கு பழம் நளுவி பாலுக்குள் விழுந்த மாதிரி இவர் கிடைத்துள்ளார். 
கூட்டமைப்பு பெட்டிகளை பெற்றுக்கொள்ள வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

சாணக்கியன் சொன்னது 100 வீதம் சரியாகி விட்டது.

 சிறிலங்கா இன்னும் பல வருடங்களுக்கு கடனிலேயே ஓடும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

தோர்தலில் தோற்றுப் போனவனுக்கு பிரதமர் பதவியா?

என்னையா; வீடு கொளுத்தினால்த் தான் அடங்குவீங்களா?

 

பின்னணியில் இந்தியாவும், மேற்கும் இருப்பதால் தான் அவர், எம்பியாக உள்ளே புகுந்தார்.

இன்று பிரதமர்..... விரைவாக ஜனாதிபதி ஆவார்.

அரசியலுக்கு அப்பால், இந்த ரணில் மேல் எனக்கு ஒரு சாப்ட் கோணர் உள்ளது.

இவரைப்போல அரசியல் துரதிருஷ்டம் பிடித்தவரும் இல்லை. விடாமுயற்சி கொண்டவரும் இல்லை.

முதலில், காமினி மணைவிக்காக விட்டுக் கொடுத்தார். பின்னர், சந்திரிக்காவுக்கு எதிராக வெற்றிக்கோட்டை நெருங்க, குண்டு வெடிப்பில், கண் போக, அதை காட்டி வென்றார் சந்திரிக்கா. புலிகள் பகிஸ்ரிப்பு மகிந்தாவை மயிரிழையான வெற்றி தந்தது.

பின்னர், சரத், மைத்திரி..... விட்டுக் கொடுத்தார்.

இருக்கிற விசருகளுடன் பார்க்கும் போது இந்தாள் பரவாயில்லை.

சஜித்துக்கு ஒரு இழவும் விளக்கம் இல்லை..... என்னை பள்ளியில் சேருங்க.... அட்மிசன் தர வேண்டிய தலைமை வாத்தியார் வெளியே போனால் தான் நான் படிக்க வருவேன் என்பது போல, கோத்தா வீட்ட போனால் தான் பிரதமர் ஆவாராம்.

ரணில் பிரதமர் ஆவார் எண்டோன்ன.....ஓகே.... நான் தயாராம்...

ஆக.... பார்ப்போம்....

Edited by Nathamuni

2 hours ago, இசைக்கலைஞன் said:

இந்த ஆளை வைத்து மேற்கு நாடுகளில் கடன் வாங்க திட்டமிடப்படுது.

ரணில் வந்தால், இசை யாழுக்கு வருகின்றார். இருவருக்கும் இடையில் ஒரு ஊடல் இருக்கு என்று கொளுத்திப் போடுவமா?😂

மீள்வரவுக்கு வாழ்த்துகள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சஜித்தை... 113 எம்.பி.யுடன், ஜனாதிபதி மாளிகை  வருமாறு, கோத்தபாய அழைப்பு.

ரணில்.. எத்தினை எம்.பி.யுடன் வந்தார்?. - ஊர்க்கிழவி.- 🤣

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, நிழலி said:

ரணில் வந்தால், இசை யாழுக்கு வருகின்றார். இருவருக்கும் இடையில் ஒரு ஊடல் இருக்கு என்று கொளுத்திப் போடுவமா?😂

மீள்வரவுக்கு வாழ்த்துகள்!

இசைக்கு ஒரு அமைச்சர் பதவி பார்சல்!

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தமிழ் சிறி said:

சஜித்தை... 113 எம்.பி.யுடன், ஜனாதிபதி மாளிகை  வருமாறு, கோத்தபாய அழைப்பு.

ரணில்.. எத்தினை எம்.பி.யுடன் வந்தார்?. - ஊர்க்கிழவி.- 🤣

கோத்தா கிரந்தம்.....

நான் சொன்னமாதிரி, பேசாமல் போய், பிரதமர் ஆகாமல், நீ போனால் தான், நான் பிரதமர்..... ஆவேன் எண்டால்..... இல்லாத ஊருக்கு வழி கேட்கிற மாதிரி.....

இன்றைய நிலையில் யாருமே பெரும்பான்மை காட்ட முடியாது.

ஆகவே..... இந்த விடயத்தில் மட்டும்.... கோத்தா முடிவு சரி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, வாதவூரான் said:

இசைக்கு ஒரு அமைச்சர் பதவி பார்சல்!

சுமந்திரனும் அமைச்சராக வர சத்தியம் உள்ளதாக முகநூலில் கதைக்கிறார்கள். 😜
இசையும்... வந்தால், இரண்டு தமிழ் அமைச்சர்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

புதிய பிரதமராக ரணில் பதவிப்பிரமாணம்

இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

No description available.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியுள்ள நிலையில் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி மாளிகையில் வைத்து பதவி பிரமாணம் செய்து கொண்டார்.

Image

தேசிய இடைக்கால அரசாங்கமாக புதிய அமைச்சரவை செயற்படவுள்ளதுடன்  புதிய அமைச்சரைவயில் உறுப்பினர்கள் 15 பேர் அடங்குவதாக குறிப்பிடப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்  பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க 2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்து பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியினால் பெற்ற ஒற்றை தேசியப்பட்டியல் ஆசனத்தின் ஊடாக பாராளுமன்றத்திற்குள் நுழைந்தார்.

இன்று அவர் இலங்கையின் பிரதமராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், அவர் இதற்கு முன்னர் ஐந்து முறை பிரதமராக பதவி வகித்துள்ளார்.

அவர் 1993 முதல் 1994 வரை, 2001 முதல் 2004 வரை, 2015 முதல் 2015 (100 நாட்கள்), 2015 முதல் 2018, மற்றும் 2018 முதல் 2019 வரை இலங்கையின் பிரதமராக பணியாற்றினார்.

ரணில் விக்கிரமசிங்க 1994 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருப்பதுடன், 1994 முதல் 2001 வரையிலும், 2004 முதல் 2015 வரை எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ஷ கடந்த திங்கட்கிழமை பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அவருக்குப் பதிலாக விக்ரமசிங்க தற்போது பிரதமராக பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

https://www.virakesari.lk/article/127382

 

பிரதமர் ரணிலுக்கு மஹிந்த வாழ்த்து 
 

 

புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
 

spacer.png
 

https://www.tamilmirror.lk/செய்திகள்/பிரதமர்-ரணிலுக்கு-மஹிந்த-வாழ்த்து/175-296341

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சுப் பதவி, பங்கு போடுகிறார்களாம்…..
விஜயகலா மகேஸ்வரனை…  ஊரிலை நிக்காமல்,  
உடனே கொழும்புக்கு போகச் சொல்லுங்கோ. 😛
 

பிள்ளையானும், சுரேன் ராகவனும் தான்… பாவங்கள்.
இரண்டு நாள் கூட… அமைச்சராக இருக்க முடியாமல் போட்டுது. 😂

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.