Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கு சென்றாலும் இந்தியர்கள்; எனக்கு வெறுப்பாக இருக்கிறது - அமெரிக்காவில் இந்தியப் பெண்கள் மீது இனவெறி தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்கு சென்றாலும் இந்தியர்கள்; எனக்கு வெறுப்பாக இருக்கிறது - அமெரிக்காவில் இந்தியப் பெண்கள் மீது இனவெறி தாக்குதல்

By Rajeeban

26 Aug, 2022 | 12:19 PM
image

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இந்தியப் பெண்கள் நால்வரை மெக்சிகோ அமெரிக்கன் பெண் ஒருவர் இன ரீதியாக வசைபாடியதுடன் அவர்களைத் தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அந்தப் பெண் இந்தியப் பெண்களை தொடர்ந்து தரக்குறைவாகப் பேசுவதோடு "நீங்கள் எல்லோரும் இந்தியாவுக்கே திரும்பிப் போங்கள்" என்று ஆவேசமாகப் பேசுகிறார்.

நடந்தது என்ன? டெக்சாஸ் மாகாணத்தில் உள்ளது டல்லாஸ் நகரம். இங்கு இந்தியப் பெண்கள் நால்வர் ஓர் உணவகத்தில் இரவு உணவை முடித்துவிட்டு கார் பார்க்கிங் லாட்டில் நிற்கின்றனர். அப்போது அங்கே வரும் மெக்சிகோ அமெரிக்கப் பெண் ஒருவர் அவர்களுடன் வாக்குவாதத்தை தொடங்குகிறார்.

அந்தப் பெண், இந்தியர்களாகிய உங்களைப் பார்த்தால் எனக்கு வெறுப்பாக இருக்கிறது. வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திக் கொள்ள இந்தியர்கள் எல்லோரும் அமெரிக்காவுக்கு வந்துவிடுகின்றனர். நான் எங்கு சென்றாலும் இந்தியர்கள் இருக்கின்றனர். உங்கள் இந்தியாவில் வாழ்வது சிறப்பானது என்றால் ஏன் நீங்கள் எல்லோரும் இங்கே வருகிறீர்கள் என்று கேட்கிறார். நீங்கள் எல்லோரும் இந்தியாவுக்கே திரும்பிப் போங்கள் என்றும் கூறுகிறார். அவருடைய பேச்சுக்கிடையே அவ்வப்போது ஆபாச ஆங்கில வார்த்தையையும் பிரயோகப்படுத்துகிறார்.பின்னர் அவர் திடீரென நான்கு இந்தியப் பெண்கள் மீதும் பாய்ந்து தாக்குதலில் ஈடுபடுகிறார். அந்தப் பெண்ணின் செயல்பாட்டை இந்தியப் பெண்கள் சாதுர்யமாக தொலைபேசியில் பதிவு செய்துள்ளனர்.

16614917352027.jpg

16614917452027.jpg

இந்தச் சம்பவம் கடந்த புதன் கிழமை நடந்துள்ளது. சம்பவம் தொடர்பான வீடியோவை பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் மகள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

அடையாளம் தெரிந்தது: இந்த சம்பவம் குறித்து போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்ட போலீஸார் அப்பெண்ணை அடையாளம் கண்டனர். அவர் டெக்சாஸ் நகரின் ப்ளேனோ பகுதியைச் சேர்ந்த எஸ்மெரால்டா அப்டன் என்பது தெரியவந்துள்ளது. அவர் மீது தாக்கி காயத்தை ஏற்படுத்துதல், அச்சுறுத்தும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவரை போலீஸார் சிறையில் அடைத்தனர். அவர் சிறையில் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் ப்ளேனோ போலீஸார் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
 
https://www.virakesari.lk/article/134431

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, கிருபன் said:

இந்தியர்களாகிய உங்களைப் பார்த்தால் எனக்கு வெறுப்பாக இருக்கிறது

🤣 பட்டேலை கண்டதும் பத்தி கொண்டு வந்தால் நீயும் என் தோழனே🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

🤣 பட்டேலை கண்டதும் பத்தி கொண்டு வந்தால் நீயும் என் தோழனே🤣

எதுக்கும்....   @ஈழப்பிரியன்@nunavilan@Maruthankerny@nilmini ஆகியோரை..

கவனமாக இருக்க சொல்லுங்க.  இந்தியன் என்று நினைத்து சாத்தப் போறாங்கள். 😂 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

எதுக்கும்....   @ஈழப்பிரியன்@nunavilan@Maruthankerny@nilmini ஆகியோரை..

கவனமாக இருக்க சொல்லுங்க.  இந்தியன் என்று நினைத்து சாத்தப் போறாங்கள். 😂 

அப்ப @நீர்வேலியான்க்கு சாத்தினாலும் பரவாயில்லை எண்டுறியளா🤣

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, கிருபன் said:

 இந்தியப் பெண்கள் நால்வரை... மெக்சிகோ அமெரிக்கன் பெண் ஒருவர் இன ரீதியாக வசைபாடியதுடன் அவர்களைத் தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடித்தது... மெக்சிகோ அமெரிக்கன். அதுதான்... பகிடி.  🤣

Just now, goshan_che said:

அப்ப @நீர்வேலியான்க்கு சாத்தினாலும் பரவாயில்லை எண்டுறியளா🤣

@நீர்வேலியான், @Justin, @கற்பகதரு ஆகியோருக்கு... 
பழைய பாக்கி, பைசல் பண்ண வேண்டியிருக்கு. 😛
செமத்தியாய்... வாங்க வேண்டிய ஆக்கள். 😜 🤣

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

அடித்தது... மெக்சிகோ அமெரிக்கன். அதுதான்... பகிடி

டெக்சஸ் நியாயப்படி அவங்கட ஊர்தானே…ஆகவே வெள்ளைக்கும் சேர்த்து அடிக்கலாம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, தமிழ் சிறி said:

அடித்தது... மெக்சிகோ அமெரிக்கன். அதுதான்... பகிடி.  🤣

@நீர்வேலியான், @Justin, @கற்பகதரு ஆகியோருக்கு... 
பழைய பாக்கி, பைசல் பண்ண வேண்டியிருக்கு. 😛
செமத்தியாய்... வாங்க வேண்டிய ஆக்கள். 😜 🤣

இவர்கள் புலிகொடியுடன் [தமிழ் ஈழ கொடி]திரிவதால். தமிழ் ஈழத்தவார்கள் என்பது அமெரிக்கர்களுக்கு தெரியும் எனவே… அடி விழும் வாய்ப்புகள் குறைவு 🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kandiah57 said:

இவர்கள் புலிகொடியுடன் [தமிழ் ஈழ கொடி]திரிவதால். தமிழ் ஈழத்தவார்கள் என்பது அமெரிக்கர்களுக்கு தெரியும் எனவே… அடி விழும் வாய்ப்புகள் குறைவு 🤣

வாய்ப்பில்லை,  ராஜா...  😂
நீங்கள் மேற்கோள் கட்டியவர்களில் இருவர்... புலிக் கொடியுடன் திரிந்தால்,
நான்... ஹம் அம்மன் கோவிலில், மொட்டை அடிப்பேன். 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, கிருபன் said:

எங்கு சென்றாலும் இந்தியர்கள்; எனக்கு வெறுப்பாக இருக்கிறது - அமெரிக்காவில் இந்தியப் பெண்கள் மீது இனவெறி தாக்குதல்

உள்ளதை சொல்லுறன். என்ரை கவலை என்னெண்டால் இந்த தொற்று நோய் பெரிய பிரித்தானியாவுக்கு பரவி விடுமோ எண்டதுதான்....🙃

Heart Broken.Gif GIF - Heart broken Vadivelu Chandramukhi movie - Discover  & Share GIFs

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

உள்ளதை சொல்லுறன். என்ரை கவலை என்னெண்டால் இந்த தொற்று நோய் பெரிய பிரித்தானியாவுக்கு பரவி விடுமோ எண்டதுதான்....🙃

Heart Broken.Gif GIF - Heart broken Vadivelu Chandramukhi movie - Discover  & Share GIFs

@குமாரசாமி அண்ணே பெரிய பிரித்தானியா தானே... இதற்கு, விதை போட்டது.
ஆசியர்களுக்கு எதிரான தாக்குதல்களை... ஆரம்பித்து வைத்ததே, வெள்ளையன்தானே.
மான்செஸ்ரர் பகுதியில்  கூட, சில வருடங்களுக்கு முன் தாக்குதல் நடந்த நினைவு. 

உங்களுடைய.. கவலை உண்மையானதா? என்று எனக்கு சந்தேகமாக இருக்குது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

எனது அனுபவத்தில, உந்த உன் நாட்டுக்கு போ என்று சொல்லுற கோஸ்ட்டிகளுக்கு, மறுத்தான் கொடுக்க, அவர்கள் எதனை தமது நாடு என்று சொல்கிறார்களோ, அதுக்கு தலைகீழாக அடித்து, சொல்ல வேண்டியது தான்.

உதாரணமாக, இங்கிலிஷ் வெள்ளை சொன்னால், நீயும் அயர்லாந்தும் போ, நானும் எனது ஊருக்கு போறன்... என்றால், வடிவேலு ஸ்டைலில், ஏது... இது தான் என் ஊரு என்பார்.... அட போடா... பம்மாத்து விடாத... இங்கிலிஷ் காரன் இப்படியா டீசென்ட் இல்லாமல் பேசுவானா என்றால், ஒரு பார்வை பார்த்து விட்டு கிளம்பி விடுவான்... (தான் டீசென்ட் என்று நிரூபிக்கிறாராம்) 😁

அதுபோக... இந்த இந்தியர்கள் போடும் பந்தாவே... அவர்களுக்கு ஆப்பாக வருவதை கண்டுளேன். இப்போது ரிஷிக்கும் அதே நிலை தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

@குமாரசாமி அண்ணே பெரிய பிரித்தானியா தானே... இதற்கு, விதை போட்டது.
ஆசியர்களுக்கு எதிரான தாக்குதல்களை... ஆரம்பித்து வைத்ததே, வெள்ளையன்தானே.
மான்செஸ்ரர் பகுதியில்  கூட, சில வருடங்களுக்கு முன் தாக்குதல் நடந்த நினைவு. 

ஆங்கிலேயன் எதுக்குத்தான் விதை போடேல்லை? பஞ்சமாபாதகங்கள் எல்லாத்துக்குமே விதை போட்டது அவையள் தானே?
போட்ட விதை முழுக்க உலகம் முழுக்க விருட்சமாய் வளர்ந்து நிக்கிறத காந்தக்கண்ணாலை கண்டு களிக்கிறம் எல்லோ.....😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

உங்களுடைய.. கவலை உண்மையானதா? என்று எனக்கு சந்தேகமாக இருக்குது. 🤣

பெரிய பிரித்தானியாவில இழுபறியெண்டால் கவலை வரும்தானே சிறித்தம்பி....நம்ம கோசான்,நாதம்,பெருமாள்,நெடுக்கர்,கிருபன் எண்டு கனபேர் இருக்கினம் எல்லோ....😁

Goundamani Senthil Comedy - Karakattakaran on Make a GIF

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

பெரிய பிரித்தானியாவில இழுபறியெண்டால் கவலை வரும்தானே சிறித்தம்பி....நம்ம கோசான்,நாதம்,பெருமாள்,நெடுக்கர்,கிருபன் எண்டு கனபேர் இருக்கினம் எல்லோ....😁

Goundamani Senthil Comedy - Karakattakaran on Make a GIF

பாத்தியளே… உங்கடை தங்கச்சி  ரதியையும், நந்தனையும் மறந்து போட்டியள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

வாய்ப்பில்லை,  ராஜா...  😂
நீங்கள் மேற்கோள் கட்டியவர்களில் இருவர்... புலிக் கொடியுடன் திரிந்தால்,
நான்... ஹம் அம்மன் கோவிலில், மொட்டை அடிப்பேன். 🤣

சிறி அண்ணை மொட்டை அடிக்கக்கூடிய வாய்ப்பு உண்டா ?.   என்பதை சிரமம் பார்க்காது குமாரசாமி. அணணை அவர்களை உறுதி படுத்துமாறு. கேட்டுக்கேள்கிறேன்...நான் இவரை நேரில் பார்க்க இல்லை 😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

அடித்தது... மெக்சிகோ அமெரிக்கன். அதுதான்... பகிடி.  🤣

மெக்சிகோவில தான் நிக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kandiah57 said:

சிறி அண்ணை மொட்டை அடிக்கக்கூடிய வாய்ப்பு உண்டா ?.   என்பதை சிரமம் பார்க்காது குமாரசாமி. அணணை அவர்களை உறுதி படுத்துமாறு. கேட்டுக்கேள்கிறேன்...நான் இவரை நேரில் பார்க்க இல்லை 😂🤣

மொட்டை அடிப்பதாக சொன்னது அவருக்கல்ல, அம்மனுக்கு🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

மெக்சிகோவில தான் நிக்கிறன்.

நம்மாளின்ரை "தில்"லை, பார்த்தீர்களா. 😁
மெக்சிகன்காரன்... "டெக்சஸ்"´ல்  வைத்து அடித்தால், 
இனி, பண்ணியில் பண்ணிப் பார் என்ற மாதிரி...  
அவர் மெக்சிகோவில், போய் நிற்கிறார். 😂
"பனங்காட்டு  நரி... சலசலப்புக்கு அஞ்சாது" என்று சும்மாவா சொன்னார்கள்.   🤣

  • கருத்துக்கள உறவுகள்

இந்தினுக்கே இந்தியனைப் பிடிக்காது. இதில் இன்னொரு நாட்டவனுக்கு பிடிக்காமல் இருப்பதில் ஆச்சரியம் என்ன? 

😀

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

அந்தப் பெண், இந்தியர்களாகிய உங்களைப் பார்த்தால் எனக்கு வெறுப்பாக இருக்கிறது. வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திக் கொள்ள இந்தியர்கள் எல்லோரும் அமெரிக்காவுக்கு வந்துவிடுகின்றனர். நான் எங்கு சென்றாலும் இந்தியர்கள் இருக்கின்றனர். உங்கள் இந்தியாவில் வாழ்வது சிறப்பானது என்றால் ஏன் நீங்கள் எல்லோரும் இங்கே வருகிறீர்கள் என்று கேட்கிறார். நீங்கள் எல்லோரும் இந்தியாவுக்கே திரும்பிப் போங்கள் என்றும் கூறுகிறா

இந்த பிரச்சனை கமலாக்கு தெரியுமா?.   அது தான் அமெரிக்கா உப ஐனதிபதி   கமலா ...

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

அப்ப @நீர்வேலியான்க்கு சாத்தினாலும் பரவாயில்லை எண்டுறியளா🤣

நீர்வேலியான்   உக்ரைன் மீதான பூடினின் ஆக்கிரமிப்பை, போர் குற்றங்களை ஆதரிக்கவில்லை. அதனால் அவர் சாத்துபட வேண்டுமாக்கும் 🙄

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Kandiah57 said:

சிறி அண்ணை மொட்டை அடிக்கக்கூடிய வாய்ப்பு உண்டா ?.   என்பதை சிரமம் பார்க்காது குமாரசாமி. அணணை அவர்களை உறுதி படுத்துமாறு. கேட்டுக்கேள்கிறேன்...நான் இவரை நேரில் பார்க்க இல்லை 😂🤣

இனி குளிர்காலம் வருது.ஆகையால் மொட்டை அடிக்க சாத்தியம் இல்லை. 😎

8 hours ago, ஈழப்பிரியன் said:

மெக்சிகோவில தான் நிக்கிறன்.

பெரிசு? மெக்சிக்கோவிலை அப்பிடி என்னதான் வித்தியாசமாய் கிடக்கு? 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

நீர்வேலியான்   உக்ரைன் மீதான பூடினின் ஆக்கிரமிப்பை, போர் குற்றங்களை ஆதரிக்கவில்லை. அதனால் அவர் சாத்துபட வேண்டுமாக்கும் 🙄

சும்மா வாலில தொங்கிற பெ.பி ல இருக்கிற எனக்கே இந்த மொத்துன்னா, அவர் அமெரிக்கன், அடி பின்ன வேண்டாம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

சும்மா வாலில தொங்கிற பெ.பி ல இருக்கிற எனக்கே இந்த மொத்துன்னா, அவர் அமெரிக்கன், அடி பின்ன வேண்டாம்🤣

நேட்டோ என்றாலே பின்னிடுவோம். இதில் அமெரிக்கன், பெ.பி, ஈ யூ , யப்பான், என்ற பாரபட்சமே கிடையாது.

அதற்க்காக நீங்கள் கெட்டவர் என்ற அர்த்தம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 27/8/2022 at 02:08, தமிழ் சிறி said:

அடித்தது... மெக்சிகோ அமெரிக்கன். அதுதான்... பகிடி.  🤣

@நீர்வேலியான், @Justin, @கற்பகதரு ஆகியோருக்கு... 
பழைய பாக்கி, பைசல் பண்ண வேண்டியிருக்கு. 😛
செமத்தியாய்... வாங்க வேண்டிய ஆக்கள். 😜 🤣

ஏன், சிறி ஏன் இந்த கோபம், சிவனே என்று பீர் அடித்துக்கொண்டு, நீங்கள் எல்லாரும் எழுதுவதை வாசித்துக்கொண்டு இருக்கிறேன்.  

On 27/8/2022 at 02:08, goshan_che said:

அப்ப @நீர்வேலியான்க்கு சாத்தினாலும் பரவாயில்லை எண்டுறியளா🤣

போட்டு கொடுக்கிறீர்கள்😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.