Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலுவடையும் ரூபாய் பெறுமதி…. டொலர் பெறுமதியில் வீழ்ச்சி !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரூபாயின் பெறுமதியில் வீழ்ச்சி – இன்றைய நாணய மாற்று விகிதம் இதோ !

வலுவடையும் ரூபாய் பெறுமதி…. டொலர் பெறுமதியில் வீழ்ச்சி !

நாட்டின் பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.

வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்களின்படி,டொலரின் கொள்விலை 351.72 ரூபாயாகவும் விற்பனை விலை 362.95 ரூபாயாகவும் இன்று காணப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்னேற்றம் மற்றும் முதலீட்டாளர்களிடத்தில் நம்பிக்கை அதிகரிப்பதன் மூலம் ரூபாயின் மதிப்பு உயர்வடைந்துள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

https://athavannews.com/2023/1326037

 

 

May be a cartoon of text

  • கருத்துக்கள உறவுகள்

இவங்களே ஏத்துவாங்களாம்! அப்புறம் இவங்களே இறக்குவாங்களாம்!

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஒரு பவுண்ஸ் 411/= ( மத்திய வங்கி)

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

விகிதங்களின்படி,டொலரின் கொள்விலை 351.72 ரூபாயாகவும் விற்பனை விலை 362.95 ரூபாயாகவும் இன்று காணப்படுகின்றது.

 

54 minutes ago, MEERA said:

இன்று ஒரு பவுண்ஸ் 411/= ( மத்திய வங்கி)

 

54 minutes ago, MEERA said:

இன்று ஒரு பவுண்ஸ் 411/= ( மத்திய வங்கி)

எது சரியானது   .......411-351=60.     இது மிகப்பெரிய வித்தியாசம் 😄

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kandiah57 said:

 

 

எது சரியானது   .......411-351=60.     இது மிகப்பெரிய வித்தியாசம் 😄

அண்ணா, செய்தியில் உள்ளது USD அமெரிக்க டொலர் நான் கூறியது GBP  பிரித்தானிய பவுண்ஸ்.

British Pound 

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR) 
2023-03-02  411.1135 429.3269

United States Dollar 

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR) 
2023-03-02  343.9719 356.7393
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kandiah57 said:

 

 

எது சரியானது   .......411-351=60.     இது மிகப்பெரிய வித்தியாசம் 😄

என்ன கந்தையர் இன்னும் முறியலையோ😂

  • கருத்துக்கள உறவுகள்

ரூபா வலுவடைந்து வருவது தொடர்பில் ரஞ்சித் சியம்பலாபிட்டிய விளக்கம்

 

இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை, அமைதியான சூழல் உள்ளிட்ட பொருளாதாரம் தொடர்பாக அரசாங்கம் எடுத்த பல முக்கிய தீர்மானங்களினால் இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சின் கூற்றுப்படி, 2022 செப்டம்பரில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 2023 பெப்ரவரிக்குள் 23.5% அதிகரித்து 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும், இதனை 400 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

2022 செப்டம்பரில் 94.9% ஆக இருந்த மொத்த பணவீக்கம் 2023 ஜனவரியில் 60.1% ஆகக் குறைந்துள்ளது.

2022 செப்டம்பரில் 29,802 ஆக இருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 261% அதிகரித்து 2023 பெப்ரவரிக்குள் 107,639 சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பொருளாதாரம் தொடர்பில் அரசாங்கம் எடுத்த பல முக்கிய தீர்மானங்களினால் இந்த அபிவிருத்திகள் அனைத்தும் சாத்தியமானதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/242944

  • கருத்துக்கள உறவுகள்

ரூபாவின் பெறுமதி உயர்வு

Published By: T. SARANYA

02 MAR, 2023 | 04:27 PM
image

(நா.தனுஜா)

அமெரிக்க டொலரொன்றுக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வியாழக்கிழமை உயர்வடைந்துள்ளது.

அதற்கமைய இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் கொள்வனவு பெறுமதி 343.97 ரூபாவாகவும், அதன் விற்பனை பெறுமதி 356.73 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேவேளை நேற்று புதன்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் கொள்வனவு பெறுமதி 351.72 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 362.95 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/149555

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலை

British Pound 

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR) 
2023-03-03  398.4192 417.7282

United States Dollar 

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR) 
2023-03-03  334.5016 348.0322
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ஏராளன் said:

நிதி அமைச்சின் கூற்றுப்படி, 2022 செப்டம்பரில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 2023 பெப்ரவரிக்குள் 23.5% அதிகரித்து 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும், இதனை 400 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அட உலக வங்கியிடம் இருந்து கடன் வாங்காமலே அபிவிருத்தி அடைந்து விடுவார்களாம் பக்கத்து நாட்டு பங்களாதேஷ் காரன் இன்னும் கண்ணை கசக்கி கொண்டு நிக்கிறான் ...

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

அட உலக வங்கியிடம் இருந்து கடன் வாங்காமலே அபிவிருத்தி அடைந்து விடுவார்களாம் பக்கத்து நாட்டு பங்களாதேஷ் காரன் இன்னும் கண்ணை கசக்கி கொண்டு நிக்கிறான் ...

உலகப் பொருளாதாரமே புரியாமல், இலங்கை மக்களை ஏமாத்துறாங்கள்.

இரண்டு நாளா சர்வதேச சந்தையில் டொலர் பெறுமதி சிறு வீழ்ச்சி. அதனால் இலங்கை நாணய பெறுமதி உயர்ந்து விட்டதாக அடித்து விடுகிறார்கள். நாளை மீண்டும் பழைய பெறுமதிக்கு டொலர் திரும்ப, என்ன கதை அளப்பார்கள் என்று பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க டாலருக்கு நிகராக இலங்கை ரூபாய் மதிப்பின் திடீர் உயர்வு பொருளாதாரத்துக்கு சாதகமாக அமையுமா?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 36 நிமிடங்களுக்கு முன்னர்
டாலருக்கு எதிரான இலங்கை ரூபா மதிப்பு அதிகரிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கை, பொருளாதார ரீதியில் இன்று படிப்படியாக முன்னேற்றத்தை கண்டு வருவதாக கூறப்படுகின்ற நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வலுவடைந்துள்ளதை இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின் ஊடாக அவதானிக்க முடிகின்றது.

இதன்படி, அமெரிக்க டாலர் ஒன்றின் கொள்வனவு விலை 351 ரூபா 72 சதமாகவும், விற்பனை விலை 362 ரூபா 95 சதமாகவும் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவிக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சி பீடம் ஏறும் போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 177 ரூபாவில் காணப்பட்டது.

2022ம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் தேதி, அதாவது சரியாக ஒரு வருடத்திற்கு முன்பாக அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 201 ரூபா 89 சதமாக காணப்பட்டது.

இந்த நிலையில், இலங்கை ரூபாவின் பெறுமதி 2022ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னரான காலத்தில் பாரிய சரிவை சந்தித்திருந்தது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 202 ரூபா 09 சதமாக காணப்பட, அடுத்த நாள் 229 ரூபா 50 சதம் வரை சடுதியாக வலுவிழந்தது.

இந்த பெறுமதி வலுவிழப்பானது, தொடர்ந்தும் பல மடங்குகளாக வலுவிழந்தது, இலங்கை பொருளாதாரத்தை பாரிய சவாலுக்கு உட்படுத்தியிருந்தது.

குறிப்பாக 2022ம் ஆண்டு மே மாதம் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரையான காலத்திற்குள் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 364 ரூபா 76 சதமாக பதிவாகியிருந்ததாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பின் பிரகாரம், 364 ரூபா 76 சதமாக நிர்ணயிக்கப்பட்ட அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, தனியார் முகவர் நிலையங்கள் மற்றும் கருப்பு சந்தையின் ஊடாக சுமார் 410 ரூபா வரை சென்றிருந்தது.

2019ம் ஆண்டிற்கும், 2022ம் ஆண்டிற்கும் இடையிலான காலப் பகுதியில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சுமார் 187 ரூபா வரை வலுவிழந்திருந்தது.

இது இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை செலுத்தியிருந்தது.

இலங்கை அரசாங்கத்தின் வசம், டாலர் கையிருப்பு பாரியளவில் குறைவடைந்ததை அடுத்து, நாடு பாரியதொரு தாக்கத்தை எதிர்நோக்கியிருந்தது.

டாலருக்கு எதிரான இலங்கை ரூபா மதிப்பு அதிகரிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

டாலர் கையிருப்பு குறைய காரணம் என்ன?

இலங்கையின் எதிர்நோக்கிய ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கோவிட் பெருந்தொற்று ஆகிய காரணங்கள் இலங்கையின் பொருளாதாரத்தை வீழ்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல பிரதான காரணங்களாக அமைந்திருந்தது.

எனினும், சுதந்திர இலங்கையின் முறையற்ற பொருளாதார கொள்கைகள் இந்த வீழ்ச்சிக்கு வழிவகுத்ததாக மக்கள் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றார்கள்.

சுற்றுலாத்துறை, ஆடை, தேயிலை, ரப்பர் ஏற்றுமதி உள்ளிட்ட துறைகளின் ஊடாக இலங்கை தமக்கான வருமானத்தை பெரிதும் நம்பியிருந்தது.

எனினும், ஈஸ்டர் தாக்குதல் இலங்கையின் பொருளாதாரத்தை வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்றது.

ஈஸ்டர் தாக்குதல் காரணமாக, சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்ட 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 166,975 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்த போதிலும், அடுத்த மாதம் அந்த தொகையானது 37,802ஆக வீழ்ச்சி கண்டிருந்தது.

அதையடுத்து, 2020ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னரான காலத்தில் கோவிட் பெருந்தொற்று காரணமாக நாடு முழுமையாக முடக்கப்பட்டது.

2020ம் ஆண்டு மார்ச் மாதம் 71,370 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்த நிலையில், அந்த மாதம் கோவிட் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக முடக்க நிலை அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையான காலப் பகுதியில் இலங்கைக்கு ஒரு சுற்றுலாப் பயணி கூட வருகைத் தரவில்லை.

எனினும், டிசம்பர் மாதம் 393 சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தார்கள்.

டாலருக்கு எதிரான இலங்கை ரூபா மதிப்பு அதிகரிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

2019ம் ஆண்டு முழுமையாக 19 லட்சத்து 13 ஆயிரத்து 702 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்த நிலையில், 2020ம் ஆண்டு மொத்தமாகவே 5 லட்சத்து 7 ஆயிரத்து 704 சுற்றுலாப் பயணிகள் மாத்திரமே வருகைத் தந்திருந்தார்கள்.

2021ம் ஆண்டு அந்த தொகையானது ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 495ஆக குறைவடைந்தது.

இதனால், இலங்கைக்கு கிடைக்க வேண்டிய வருமானம் முழுமையாக இழக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு தமது வருமானத்தை இழந்து இலங்கை, கையிருப்பிலிருந்த டாலர் உள்ளிட்ட சொத்துக்களையும் இழந்தது.

இது பாரிய பொருளாதார நெருக்கடிக்கு வழி வகுத்தது.

எனினும், இன்று சுற்றுலாத்துறையில் சாதகமான முன்னேற்றத்தை காணக்கூடியதாக உள்ளது.

2023ம் ஆண்டின் கடந்த இரு மாத காலப் பகுதியில் மாத்திரம் 210,184 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதுடன், சுற்றுலாத்துறையின் ஊடாக ஜனவரி மாதத்தில் மாத்திரம் 162 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு, மின்சார வெட்டு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு என பல்வேறு சவால்களை சந்தித்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் அப்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிராக இலங்கையில் போராட்டங்கள் வெடித்தன.

போராட்டத்தை எதிர்கொள்ள முடியாத அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, நாட்டை விட்டு தப்பிச் சென்று, தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதையடுத்து, நாட்டின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார்.

புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, சர்வதேச தொடர்புகள் மற்றும் புதிய கொள்கைகளின் ஊடாக அந்நிய வெளிநாட்டு நாணயங்களின் கையிருப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இறக்குமதி கட்டுப்பாடுகள், சர்வதேச நிறுவனங்களிடமிருந்து கடனுதவிகள், சுற்றுலாத்துறை மேம்படுத்தல், சர்வதேசத்திற்கு வழங்க வேண்டிய கடன்களை வழங்குவதை நிறுத்தி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

டாலருக்கு எதிரான இலங்கை ரூபா மதிப்பு அதிகரிப்பு

டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி எப்படி சடுதியாக அதிகரித்தது?

இலங்கை வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை குறுகிய காலத்திற்கு செலுத்தாதிருக்கின்றமை, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தமை, இறக்குமதி கட்டுப்பாடுகள், ஏற்றுமதி வருமானம் சற்று அதிகரித்துள்ளமை, வெளிநாட்டு பணியாளர்களின் வருமானத்தின் வருகை அதிகரித்துள்ளமை மற்றும் உலக வங்கியிடமிருந்து கிடைக்கப் பெறுகின்ற உதவித் திட்டம் ஆகியவற்றினால் கிடைக்கப் பெற்ற டாலரினால் நாட்டின் கையிருப்பு அதிகரித்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் எம்.கணேஷமூர்த்தி தெரிவிக்கின்றார்.

அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்கு உதவி வழங்கும் வகையில், 400 மில்லியன் டாலரை வழங்க உலக வங்கியின் முதலீட்டு பிரிவான சர்வதேச நிதிக் கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பானது சந்தையில் ஒரு முன்னேற்றகரமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பேராசிரியர் கூறுகின்றார்.

''முக்கியமான காரணம், 400 மில்லியன் டாலரை, இலங்கையிலுள்ள 3 வங்கிகளின் ஊடாக வழங்கவுள்ளதாக உலக வங்கி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. உதவியாக வழங்கப்படும் இந்த தொகையை இறக்குமதிகளுக்காக பயன்படுத்த முடியும் என்ற ஒரு அறிவிப்பு வந்துள்ளது. என்னை பொறுத்த வரையில், ஏற்றுமதியில் கிடைத்த அதிகரிப்பு என்றும் நான் சொல்ல மாட்டேன். அந்நிய செலாவணி வந்தமைக்கான அதிகரிப்பு என்று சொல்வதையும் நம்பமாட்டேன். உலக வங்கி உதவி தொகையை வழங்குவதாக கூறியுள்ளது. இந்த அறிவிப்பானது, சந்தையில் ஒரு சாதகமான மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. சந்தையில் நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளது. அதனாலேயே ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது." என பேராசிரியர் எம்.கணேஷமூர்த்தி குறிப்பிடுகின்றார்.

டாலருக்கு எதிரான இலங்கை ரூபா மதிப்பு அதிகரிப்பு
 
படக்குறிப்பு,

பேராசிரியர் எம்.கணேஷமூர்த்தி

இந்த ரூபாவின் பெறுமதி அதிகரிப்பை சாதகமாக பார்க்க முடியுமா? என பிபிசி தமிழ், பேராசிரியர் எம்.கணேஷமூர்த்தியிடம் வினவியது.

''பார்க்கலாம். ஆனால், இது தற்காலிகமானது. வழக்கமான நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் செல்லுமாக இருந்தால், இது அனைத்தும் ஆவியாகி விடும். ஏனென்றால், இலங்கை இப்போது கடனை திருப்பி செலுத்தவில்லை. இறக்குமதிகளை மிகவும் கட்டுப்படுத்தி வைத்துள்ளார்கள். அதனால் தான், ரூபாவின் பெறுமதி அதிகரிப்பதை போன்று காட்டுகின்றதே தவிர, பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு, ரூபாவின் பெறுமதி அதிகரிக்கவில்லை. இன்னுமொரு காரணம் இருக்கின்றது. இதுவரை காலமும் பணத்தை அரசாங்கம் அச்சிட்டது. ரூபாவின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, டாலருக்கான கேள்வி அதிகரிக்கும். ரூபாவின் நிரம்பல் அதிகரிக்கின்றது, அவ்வாறான நிலையில் டாலர் வரவில்லை என்றால், டாலரின் பெறுமதி அதிகரிக்கும். இப்போது ரூபா அச்சிடப்படுவதில்லை. ரூபா அச்சிடாமையினால், ரூபாவின் நிரம்பல் குறையும் அல்லவா?. டாலரின் பெறுமதி குறைவடைவதற்கு அதுவும் ஒரு காரணமாக அமைகின்றது." என அவர் கூறுகின்றார்.

அவ்வாறாயின், நாடு உண்மையாகவே பொருளாதாரத்திலிருந்து மீளவில்லையா என பிபிசி தமிழ் அவரிடம் கேள்வி எழுப்பியது.

''நிச்சயமாக இல்லை. இதுபோலியாக உருவாக்கப்பட்ட ஒரு நிலைமை. இதனை ஒரு சாதகமான நிலைமையாக பார்க்க முடியாது. இதுவொரு தற்காலிகமான நிலைமை. இலங்கையின் நிலைமைகள் வழமையான நிலைக்கு திரும்புகின்ற போது, சில மாற்றங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. உலக வங்கியினால் வழங்கப்பட்ட இந்த உதவியானது, ஒரு முறை மாத்திரமே வழங்கப்படும். இந்த பணம் பயன்படுத்தப்பட்டதன் பின்னர், மீண்டும் பழைய நிலைக்கு செல்வதற்கான சாத்தியம் உள்ளது." என அவர் தெரிவிக்கின்றார்.

இந்த காலப் பகுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டாலர் கடனுதவி கிடைக்கும் பட்சத்தில், இன்று காணப்படுகின்ற நிலைமையையே தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கான சாத்தியம் உள்ளதாகவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் எம்.கணேஷமூர்த்தி குறிப்பிடுகின்றார்.

https://www.bbc.com/tamil/articles/c3gdyd42nz0o

  • கருத்துக்கள உறவுகள்

தங்கத்தின் விலை குறைந்தது

 

இன்று (03) தங்கத்தின் விலை வேகமாகக் குறைந்துள்ளது.

1627874685_gold1-1200x800-1-300x200.jpg
அதன்படி இன்றைய தங்கத்தின் விலை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தங்க அவுன்ஸ் – ரூ. 638,284.00

  • 24 கரட் 1 கிராம் – ரூ.22,520.00
  • 24 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ. 180,150.00
  • 22 கரட் 1 கிராம் – ரூ. 20,650.00
  • 22 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ.165,150.00
  • 21 கரட் 1 கிராம் – ரூ. 19,710.00
  • 21 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ. 157,650.00

https://thinakkural.lk/article/243239

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 2/3/2023 at 06:18, தமிழ் சிறி said:

வலுவடையும் ரூபாய் பெறுமதி…. டொலர் பெறுமதியில் வீழ்ச்சி !

எனக்கு உந்த தலையங்கம் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு :cool:
உங்களுக்கு???????? :beaming_face_with_smiling_eyes:

விட்டால் சிறிலங்கா உலக வல்லரசாகின்றது எண்டு எழுதினாலும் எழுதுவானுகள் :face_savoring_food:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் பிச்சைக்காரன் கண்ட கனவு. மக்கள் இன்னும் திண்டாட்டத்தில் தெருவில் போராட்டம் தொடருகிறது. ரணில் உப்பிடி எத்தனை புலுடா கதைகளை உருவாக்கி எத்தனை காலம் கதிரையை அலங்கரிக்கப்போகிறார்? உண்மையை பேசி, நல்லதை செய்து உயர விருப்பமில்லை. பொய்யிலே மக்களை ஏமாற்றி ஆட்சியை தொடரலாமென நினைக்கிறாரோ.

10 hours ago, குமாரசாமி said:

விட்டால் சிறிலங்கா உலக வல்லரசாகின்றது எண்டு எழுதினாலும் எழுதுவானுகள்

ஓமோம்.... அமெரிக்காவுக்கே சவால் விடும் வாய்ச்சவடால்கள். நாங்கள் பண வல்லரசாக மாறியிருப்போம், வந்த கொரோனா; இலங்கைக்கு மட்டும் வந்திருந்தால்!

  • கருத்துக்கள உறவுகள்

British Pound 

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR) 
2023-03-08  370.6313 392.3973

United States Dollar 

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR) 
2023-03-08  313.7749 331.0583
  • கருத்துக்கள உறவுகள்


 

  • கருத்துக்கள உறவுகள்

 

—————//——

இதுவொரு தற்காலிகமான நிலைமை. இலங்கையின் நிலைமைகள் வழமையான நிலைக்கு திரும்புகின்ற போது, சில மாற்றங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. உலக வங்கியினால் வழங்கப்பட்ட இந்த உதவியானது, ஒரு முறை மாத்திரமே வழங்கப்படும். இந்த பணம் பயன்படுத்தப்பட்டதன் பின்னர், மீண்டும் பழைய நிலைக்கு செல்வதற்கான சாத்தியம் உள்ளது." என அவர் தெரிவிக்கின்றார்.

இந்த காலப் பகுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டாலர் கடனுதவி கிடைக்கும் பட்சத்தில், இன்று காணப்படுகின்ற நிலைமையையே தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கான சாத்தியம்உள்ளதாகவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர்எம்.கணேஷமூர்த்தி குறிப்பிடுகின்றார்.

________//_____

 

சர்வதேச நாணய நிதியம் கடன்வழங்குவதற்கான எல்லா வழிகளும் திறந்துவிட்டன என்று இலங்கை அறிவித்துள்ளது.. சீனாவும் இந்தியாவும் அதற்கு பச்சை கொடிகாட்டிவிட்டன.. இன்னும் சில வாரங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி வந்து சேர உள்ளது.. அநேகமாக இந்த இலங்கை நாணயத்தின் பெறுமதி நல்லநிலைக்கு வந்து நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம்..

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் லேசுபட்டவர்கள் இல்லை உலக வங்கிக்கே ஆப்பு கொடுக்க போகிறான்கள்😀 பொதுவாகவே எந்த நாட்டுக்கும் உலக வங்கி கடன் அளிப்பது என்றால் அந்த நாட்டின் பண பெறுமதியை வலுவிழக்க செய்த பின்பே குறிப்பிட்ட விகிதம் டொலருக்கு எதிராக குறைவடைய கடன் நாட்டுக்குள் போகும்  அது பொதுவான நடைமுறை இங்கு சகுனி ரணிலின் திருவிளையாடல் பொய்யாக பெறுமதியை உயர்த்தி காட்டி கடன் வரும்போது தற்போதைய பெறுமதிக்கு இறக்கி  கொள்வது ஆனால் இந்த பழைய விளையாட்டு எல்லாம் ஆபிரிக்க நாடுகளிடம் கற்றுகொண்டு அப்டேட் ஆகத்தான் கடன் கொடுப்பவன் இருப்பான் என்பதை மதனமுத்தாக்கள் இலகுவில் மறந்து விடுகின்றனர் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பெருமாள் said:

சிங்களம் லேசுபட்டவர்கள் இல்லை உலக வங்கிக்கே ஆப்பு கொடுக்க போகிறான்கள்😀 பொதுவாகவே எந்த நாட்டுக்கும் உலக வங்கி கடன் அளிப்பது என்றால் அந்த நாட்டின் பண பெறுமதியை வலுவிழக்க செய்த பின்பே குறிப்பிட்ட விகிதம் டொலருக்கு எதிராக குறைவடைய கடன் நாட்டுக்குள் போகும்  அது பொதுவான நடைமுறை இங்கு சகுனி ரணிலின் திருவிளையாடல் பொய்யாக பெறுமதியை உயர்த்தி காட்டி கடன் வரும்போது தற்போதைய பெறுமதிக்கு இறக்கி  கொள்வது ஆனால் இந்த பழைய விளையாட்டு எல்லாம் ஆபிரிக்க நாடுகளிடம் கற்றுகொண்டு அப்டேட் ஆகத்தான் கடன் கொடுப்பவன் இருப்பான் என்பதை மதனமுத்தாக்கள் இலகுவில் மறந்து விடுகின்றனர் .

ஶ்ரீலங்கா… உலக வங்கியிடம் ஏழு முறைக்கு மேல் வாங்கிய கடனை    இதுவரை…. கட்டவில்லையாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

ஶ்ரீலங்கா… உலக வங்கியிடம் ஏழு முறைக்கு மேல் வாங்கிய கடனை    இதுவரை…. கட்டவில்லையாம்.

ஓரிருதடவை வாங்கினால் கடன், தொடர்ந்து ஏந்தினால் பிச்சை .......குடுக்கத் தேவையில்லை.......குடுக்கிறவனும் எதிர்பார்க்க மாட்டான்......!  😎

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

United States Dollar 

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR) 
2023-03-08  313.7749 331.0583

 

53 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அநேகமாக இந்த இலங்கை நாணயத்தின் பெறுமதி நல்லநிலைக்கு வந்து நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம்..

பெப்ருவரி மாதம் 359.47 ரூபாய் இலங்கையில் இருந்த டொலர் பெறுமதி இன்று 313.77 பெறுமதியில் உள்ளது. இதற்கு ஆதவன்நியுஸ் எப்படி தலைப்பு கொடுத்திருக்க வேண்டும்.

வீழ்ச்சி அடையும் ரூபாய் பெறுமதி   டொலர் தனது பெறுமதியில் உயர்ச்சி 😂

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்ததால் சீனி, பருப்பின் விலைகளும் குறைந்தன!

Published By: VISHNU

08 MAR, 2023 | 06:45 PM
image

 

இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்ததன் காரணமாக ஒரு கிலோ வெள்ளைச்  சீனியின் மொத்த விலை 30 ரூபாவினாலும் பருப்பு கிலோ ஒன்றின் மொத்த விலை 40 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வெள்ளைச் சீனி மற்றும் பருப்பு ஆகியவற்றின் மொத்த விலை குறைப்பின் பயனை நுகர்வோர் பெற வேண்டும் என்று  புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு கிலோ சீனிக்கான இறக்குமதி வரி 50 ரூபா 25 சதமாக குறைக்கப்பட்டதன் மூலம் அரசாங்கத்துக்கு  7,000 கோடி ரூபா வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/150038

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருட இறுதிக்குள் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 20 வீதத்தால் வீழ்ச்சியடையும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வருட இறுதிக்குள் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 390 ஆக குறையலாம் என ஃபிட்ச் கணித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தங்கத்தின் விலை பாரியளவில் வீழ்ச்சி!

இன்றைய (09) நிலவரப்படி இலங்கையில் இம்மாத தொடக்கத்தை விட 24 கரட் தங்கத்தின் விலை 39,000 ரூபாவினால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாத தொடக்கத்தில் 24 கரட் தங்கம் 184,000 ரூபாவாக இருந்தது. எனினும், இன்று 24 கரட் தங்கத்தின் விலை 145,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 22 கரட் தங்கத்தின் விலை 170,000 ஆக இருந்ததுடன், தற்போது 134,000 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

https://thinakkural.lk/article/244149

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.