Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேற்று நாட்டவர்கள் மதமாற்ற எண்ணத்துடன் செயற்பட்டால் விரட்டியடிக்கப்படுவார்கள்- மறவன்புலவு சச்சிதானந்தம் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வேற்று நாட்டவர்கள் மதமாற்ற எண்ணத்துடன் செயற்பட்டால் விரட்டியடிக்கப்படுவார்கள்- மறவன்புலவு சச்சிதானந்தம் எச்சரிக்கை

March 25, 2023
 
சைவ சமயத்தவர்களை மதமாற்றம் செய்யும் நோக்குடன் கிறிஸ்தவர்களோ, முகமதியர்களோ அல்லது வேறு சமயத்தவர்களோ நடவடிக்கைகள் மேற்கொண்டால் விரட்டியடிக்கப்படுவார்கள் என மறவன்புலவு சச்சிதானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று (25) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் அவர் குறிப்பிடுகையில் ,

இராவணன் ஆண்ட சிவ பூமியில் பத்தாயிரம் ஆண்டுகளிற்கு மேலாக சைவ சமயத்தினை  பின்பற்றுகின்ற மக்களின் மரபுகளை அழித்து இல்லாதொழிப்பதற்காக கடந்த 400 ஆண்டுகளாக வேறு நாடுகளிலிருந்து வருகை தருகின்றனர்.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் ஆகியோரின் வருகைக்கு பின்னர் தற்பொழுது, கிட்டத்தட்ட 300, 400 மதமாற்று சபைகள் சைவர்கள் மத்தியில் உலா வருகின்றன.

இந்த மண்ணின் மரபான சைவ சமயத்தினை அழிக்க ஒரு போதும் விட மாட்டோம் என்பதுடன் பாம்புகள், மரங்கள், நாய்கள், எலிகள் மற்றும் வேம்புகள் என எமது மரபுகளும் உரிமைகளுமானவற்றினை வெளிவிடுவோம். இவற்றினை சாத்தான்கள் என கூறுவதற்கு நீங்கள் யார்?

2019 ஆண்டு கல்முனை மற்றும் யாழ்ப்பாணத்தில் கூட்டங்களில் பேசுவதற்காக வருகை தந்த ஒருவரும் காவல்துறையினரால் தடுத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

தற்பொழுது தமிழகத்தின் காரூண்யா பல்கலைக்கழகத்தின் வேந்தர் போல் தினகரன் மதமாற்றம் செய்வதற்காக குடும்பத்தாருடன் வந்துள்ளார்.

தூண்டிலிட்டு மீனை பிடிப்பது போன்று அவரை வைத்து மதமாற்றம் செய்யலாம் என இங்குள்ள சபைகள் கனவு காண்கின்றன அவை தகர்த்தெறியப்படும்.

சுற்றுலா, மாணவர், வணிகம் மாற்றும் தொழில் புரிதல் போன்ற காரணிகளின் அடிப்படையில் இலங்கைக்கு வெளிநாட்டவர்கள் வருகை தர முடியும் என்பதுடன் அவ்வாறு வருகை தருபவர்கள் மதமாற்ற செயற்பாடுகளில் ஈடுபட கூடாது என்பது இலங்கையின் எழுதப்பட்ட விதி, மீறி செயற்பட்டால் பயங்கரவாத தடை சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட முடியும்.

போரிற்கு பின்னர் கடந்த 13 ஆண்டுகால இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.

விடுதலை புலிகள் காலத்தில் அவர்கள் அதற்கு அனுமதியளிக்கவில்லை என்பதுடன் அவர்களும் சைவர்களின் கொள்கையான அகம் தான் மதம் என்பதுடன் நம்பிக்கை எனவும் கூறினார்கள்.

சிலுவைகள், புத்த விகாரைகள் போன்றன ஆக்கிரமிப்பு சின்னங்கள் மற்றும் உள்ளங்களை மாற்றுவதாக கூறி மதமாற்றுதல்களை மேற்கொள்கின்றனர்.

கடந்த ஆண்டுகளாக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபவர்களை தடுத்து வருவதுடன் ஏறத்தாழ 40 கூட்டங்களை நிறுத்தியுள்ளோம். மதமாற்றம் நோக்குடன் யாரும் இங்கு வருகை தர வேண்டாம்.

கிறிஸ்தவர்கள் மற்றும் முகமதியர்கள் உங்களது மதம் சார்ந்து தனிப்பட்ட வழிபாடுகளை தாராளமாக மேற்கொள்ளுங்கள் மாறாக சைவ சமயத்தவர்களை மதமாற்றும் நோக்கில் வருகை தந்தாலோ துண்டுப்பிரசுரங்கள் விநியோம் செய்தாலோ அல்லது கூட்டங்கள் நடத்தபட்டாலோ விரட்டியடிக்கப்படுவீர்கள் எனவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
 
https://www.ilakku.org/foreigners-entering-sri-lanka-with-the-intention-of-proselytizing-will-be-deported/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

336865813_728402755416472_6218674427394832837_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=730e14&_nc_ohc=aC9F-2LmlHcAX866_pB&_nc_ht=scontent-fra3-1.xx&oh=00_AfCMZfLQzzis3X-a7ssihbzQjXJ65Na2g413nPgVpNVAog&oe=64254BAA

May be an image of 2 people, people standing, people sitting, suit and indoor

May be an image of 2 people, people sitting and indoor

மறவன்புலவு சச்சிதானந்தம்... தேவையில்லாத வேலை பார்க்கின்றார்.
அப்போ... விகாரை கட்டுபவர்களுக்கு, இவரால் ஏன் எச்சரிக்கை கொடுக்க முடியவில்லை.
இந்தப் பாதிரியார்... சென்னையில் விசா எடுத்து, கொழும்பு கட்டுநாயக்காவில் வந்து இறங்கி,
ரணிலையும் சந்தித்து ஆசீர்வாதம் கொடுத்து விட்டுத்தான்... யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு வந்துள்ளார். 
வந்த இடத்தில், நான்கு மணித்தியால விசாரணையின் பின் திருப்பி அனுப்பப் பட்டுள்ளார்.

இவரின் வருகையை தடுக்க வேண்டும் என சிங்களம் நினைத்திருந்தால்...
கொழும்பு கட்டுநாயக்காவில் வைத்தே திருப்பி அனுப்பி இருக்க வேண்டும்,
அல்லது... சென்னை ஸ்ரீலங்கா தூதரகம் இவரின் விசா விண்ணப்பத்தை நிராகரித்திருக்க வேண்டும்.

இரண்டையும் செய்யாமல்...  பலாலி உள்ளூர் விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்புவது என்பது தமிழ்  சைவர்களுக்கும்,   கிறிஸ்தர்களுக்கும் இடையே.. பிரிவினையை தூண்டி விட சிங்களம்  செயற்பட்டுள்ளது.

இதற்குள்... மறவன் புலவு, இருக்கும் விபரீதம் தெரியாமல், கம்பு  சுற்றிக் கொண்டு நிற்கிறார். 

Edited by தமிழ் சிறி

விகாரை கட்டுபவர்களை விரட்டினால் மறதி புள்ளன் குச்சியாநனந்தன் விரட்டியடிக்கப்படுவார்...😝😝😝

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Iraivan said:

விகாரை கட்டுபவர்களை விரட்டினால் மறதி புள்ளன் குச்சியாநனந்தன் விரட்டியடிக்கப்படுவார்...😝😝😝

வணக்கம் இறைவன். நீண்ட நாட்களின் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்

போல் தினகரன் திருப்பி அனுப்பப்பட்டதாக தினத்தந்தி செய்தி போட்டதே!

1 hour ago, தமிழ் சிறி said:

29 minutes ago, Iraivan said:

விகாரை கட்டுபவர்களை விரட்டினால் மறதி புள்ளன் குச்சியாநனந்தன் விரட்டியடிக்கப்படுவார்...😝😝😝

வணக்கம் வாங்க

இதே கருத்தை தான் நானும் சொல்ல வந்தேன். 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

போல் தினகரன் திருப்பி அனுப்பப்பட்டதாக தினத்தந்தி செய்தி போட்டதே!

போல் தினகரன் திருப்பி அனுப்பப் பட்டதில்  பாதி உண்மை, பாதி பொய்.
அவர் கட்டுநாயக்காவில் இறங்கி கொழும்பு சென்று ரணிலை சந்தித்து,
கண்டிக்கும் போயுள்ளார் போல் தெரிகின்றது.
பின் கொழும்பில் இருந்து... பலாலி விமான நிலையத்துக்கு சென்ற போது,
அங்கு நான்கு மணித்தியால விசாரணையின் பின்.
விமான நிலையத்தில் வைத்தே திருப்பி அனுப்பப் பட்டுள்ளார்.

நான் நினைக்கின்றேன்... கொழும்பில் ஒரு சட்டம், பலாலியில் ஒரு சட்டம் என்ற படியால்....
பலாலி... சர்வதேச விமான நிலைய அந்தஸ்தை பெற்று விட்டது  போலுள்ளது.
அத்துடன்... ஸ்ரீலங்கா சட்டம் தமிழீழ பகுதியில் செல்லாது என்பது நிரூபணம் ஆகியுள்ளது.
கிட்டத்தட்ட...  தமிழீழம் கிடைத்த மாதிரி என நினையுங்கோ... 🙂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களிடையே மத ரீதியான முரண்பாட்டை உருவாக்க சிங்கள அரசுடன் இந்திய ஆர். எஸ். எஸ் இயக்கமும் தமது நடவடிக்கைகளை கடந்த சில வருடங்களாக மேற்கொண்டு வருகின்றனர்.  யுத்த காலத்தில் மக்கள் தினம் தினம் விமான குண்டு வீச்சு, ஷெல்வீச்சு,  இடப்பெயர்வு என று அல்லுற்ற வேளையில் மக்களோடு மக்களாக நின்று மக்களுக்கு உறுதுணையாக நின்றதோடு தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை உலகத்தின் முன் கொண்டு சென்றவர்களும்  கிறிஷதவ மதகுருக்களே. யுத்த காலத்தில் இந்தியாவில் ஒளித்திருந்து தமிழ் மக்களுக்கு எதிரான ஆர். எஸ். எஸ் கோஷ்டியோடு கூடி குலாவி மகிழ்ந்திருந்த மறவன் புலவு சச்சி போன்ற மதவாத சதிகாரர்கள் இப்போது ஆதிக்க சக்திகளின் கைக்கூலிகளாக மாறி மக்களை பிரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த திட்டத்தின் பகுதியே அண்ணாமலை, அர்ஜுன் சம்பபத் போன்ற  சதிகாரர்களின் யாழ் வருகை. மக்களை மதரீதியில் பிளபுபடுத்தி தமிழ் மக்களை சிறுக சிறுக அழிக்கும் மோடியின் கொடூரக் கரங்கள் ஈழத்தை நோக்கி நீண்டுவிட்டது. 

விடுதலைப்புலிகள் இருந்தவரை தமது அரசியல், விடுதலைப் போராட்ட நடவடிக்கைகளில் மதசார்பின்மையைப் பேணி மக்களின் மத நல்லணக்கத்தை சிறப்புடன் முன்னெடுத்ததை இங்கு ஞாபகப்படுத்துகின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

அவர்களும் சைவர்களின் கொள்கையான அகம் தான் மதம் என்பதுடன் நம்பிக்கை எனவும் கூறினார்கள்.

பச்சை பொய். 

  • கருத்துக்கள உறவுகள்

சச்சியானந்தன் குறித்து எனக்கு நல்ல கருத்து இல்லை. ஆனால் இந்த பால் தினகரன் ஒரு கார்ப்பரேட் வியாபாரி. ஜெபத்தை காசுக்கு விற்பவர். அண்மையில் பரிட்சை எழுதும் மாணவர்களுக்க்காக “ஜெப பேனா” க்களை அறிமுகம் செய்துள்ளார் எனக் கேள்விப்பட்டேன். இவருக்கு இது கடவுள் காட்டும் ஓர் எச்சரிக்கையாகக் கூட இருக்கலாம்.

மற்றும்படி எவர் வந்து மக்களுக்கு நல்ல போதனைகளைக் காட்டினாலும் எதிர்ப்பதற்கு எதுவுமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் புத்தரின் பெருக்கத்தை தடுக்க வழிபாருங்கைய்யா. அதை கண்டும் காணாமலும் இருக்கிறீர்களே. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

வேற்று நாட்டவர்கள் மதமாற்ற எண்ணத்துடன் செயற்பட்டால் விரட்டியடிக்கப்படுவார்கள்- மறவன்புலவு சச்சிதானந்தம் எச்சரிக்கை

இதையே உள்நாட்டினர் செய்தால் கண்டும் காணாமல் இருப்போம்.

4 hours ago, தமிழ் சிறி said:

நான் நினைக்கின்றேன்... கொழும்பில் ஒரு சட்டம், பலாலியில் ஒரு சட்டம் என்ற படியால்..

வடமாகாண அரசியல் சட்டம் எல்லாமே உதவி தூதரகம் பிறப்பிக்கும் சட்டம் தான்.

அதற்குள் புகுந்து விளையாட தமிழனுக்கு தெரியலை.

ஆனால் சீனனும் சிங்களவனும் புகுந்து விளையாடுறான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

அடேங்கப்பா...!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text that says 'புத்த பிக்குவுக்காய் கட்டியிருந்த வேட்டியை மட்டிக்கொடுத்தமைக்காய் இன்றுமுதல் "வேட்டியை ஈந்த வீரப்புலவான்" என்று அழைக்கப்படுவாய்!'

புத்த பிக்கு அமர வேண்டிய கதிரையில்... வெள்ளைத் துணி விரிக்கப் படாததால்,
தனது வேட்டியை கழட்டி, வெள்ளைத் துணியாக  பிக்குவின் கதிரையில் விரித்து விட்டு 
அரைக் கால் சட்டையுடன் அமர்ந்திருக்கும் மறவன்புலவு. 😂

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, island said:

தமிழ் மக்களிடையே மத ரீதியான முரண்பாட்டை உருவாக்க சிங்கள அரசுடன் இந்திய ஆர். எஸ். எஸ் இயக்கமும் தமது நடவடிக்கைகளை கடந்த சில வருடங்களாக மேற்கொண்டு வருகின்றனர்.

May be an image of 2 people and people standing

நல்லூர் கோவிலை  உடைத்து மலசல கூடம் கட்ட முயற்சிப்பவருடன் .

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

May be an image of 2 people and people standing

நல்லூர் கோவிலை  உடைத்து மலசல கூடம் கட்ட முயற்சிப்பவருடன் .

நீல கால்சட்டையுடன் நிற்பவன் (கோத்தாவின் கையாள்) இராணுவமே இவனுக்கு வாகனம் எல்லாம் கொடுத்து வைத்திருந்தது, அப்படிப் பட்டவன்   தமிழ் மக்களை திட்டிய திட்டு தெரியுமா…
அப்படி இருந்தும் இரண்டும் எப்படி ஒன்றாய் இணைந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

May be an image of 2 people and people standing

3 hours ago, பெருமாள் said:

நல்லூர் கோவிலை  உடைத்து மலசல கூடம் கட்ட முயற்சிப்பவருடன் .

3 hours ago, தமிழ் சிறி said:

நீல கால்சட்டையுடன் நிற்பவன் (கோத்தாவின் கையாள்) இராணுவமே இவனுக்கு வாகனம் எல்லாம் கொடுத்து வைத்திருந்தது, அப்படிப் பட்டவன்   தமிழ் மக்களை திட்டிய திட்டு தெரியுமா…
அப்படி இருந்தும் இரண்டும் எப்படி ஒன்றாய் இணைந்தது

இரண்டுமே கோடாலிகள் தான்...

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

May be an image of 2 people and people standing

இரண்டுமே கோடாலிகள் தான்...

களையெடுப்புக்கள்  தொடங்கினாள் முதலில் இந்த இரண்டும்தான் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, பெருமாள் said:

களையெடுப்புக்கள்  தொடங்கினாள் முதலில் இந்த இரண்டும்தான் .

களையெடுப்புக்கு இனி சந்தர்ப்பம் இல்லையெண்டாப்பிறகு தானே இரண்டும் களத்திலை இறங்கியிருக்குதுகள்😎

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nedukkalapoovan said:

முதலில் புத்தரின் பெருக்கத்தை தடுக்க வழிபாருங்கைய்யா. அதை கண்டும் காணாமலும் இருக்கிறீர்களே. 

புத்தரை தடுத்தால் பின்னர் சச்சியுடன் சேர்ந்து மற்றவர்களை ஒரு கை பார்ப்போம்   போல் உள்ளது உங்கள. கருத்து. 😂

பக்கா வலதுசாரி கருத்து. வடுதலைப்புலிகளின் கொள்கைக்கும் உங்களுக்கும் இந்த விடயத்தில் ஒத்துவராது போலிருக்கிறதே. 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, island said:

அண்ணாமலை, அர்ஜுன் சம்பபத் போன்ற  சதிகாரர்களின் யாழ் வருகை.

அவர்கள் வந்தபோது விதைத்ததை இவர் தொடருகிறார். அவர்களும் இவ்வாறான கருத்தையே வந்திருந்தபோது  தெரிவித்திருந்தார்கள். இந்திய இலங்கையின் ஒற்றர்களை மக்கள் அடையாளம் கண்டு ஒதுக்க, இப்போ மதத்தை கையிலெடுத்துள்ளார்கள். இப்போ செய்ய வேண்டியது; இந்தச் சச்சியரின் மகுடிக்கு ஆடாமல், இவரை பிடித்து மனநல காப்பகத்தில் போடுவதுதான் சரியான சிகிச்சை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.