Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

திரும்பவும் ஊர் போகும் ஆசையை உங்களது கட்டுரை ஏற்படுத்துகிறது.. 

நாம் பிறந்து வளர்ந்த ஊர் தானே.

1 hour ago, Sabesh said:

எங்களுக்கு சலிப்பு எதுவும் இல்லை... நீங்கள் விலாவரியாக எழுதுங்கள்.  வாசிக்க ஆர்வமாகவும் பிரயோசனமாகவும் உள்ளது.

எனக்கும் உங்களை, இணையவனை போன்று அங்கு போவது பற்றிய சிந்தனை இருக்கிற படியால் பல விடையங்களை அறிய முடிகிறது.

மற்றவர்கள் கூறுவதை வைத்து அங்கு போய் இருக்க முடியாது. ஒரு மூன்று மாதங்களாவது போய் நின்று பாருங்கள். முக்கியமாக உங்கள் மனைவியும் உங்களுடன் வந்து இருந்தால்தான் உங்களால் தொடர்ந்து இருக்க முடியும். உறவுகளைநம்பிப் போக எண்ணாதீர்கள்.

52 minutes ago, Nathamuni said:

பகிடி விடாமல் எழுதுங்கோ!

வாசிக்கிறோம் 👍

பார்ப்போம்.

  • Replies 378
  • Views 31.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    இரண்டு   என் நண்பியும் நானும் அடிக்கடி பலதையும் திட்டமிட்டுக்கொண்டோம். தான் கிட்டத்தட்ட 6000 டொலர் சேர்த்து விட்டதாகவும் போவதற்கிடையில் 10000 டொலர் சேர்த்துவிடுவேன் என்றும் யாரும் யாரிடமும்

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    பன்னிரண்டு    முதன் முதல் கீரிமலைக் கடற்கரைக்கு குளிப்பதற்கு என்று போனால் கடற்கரை முழுதும் பழுப்பு நிறமாக ஊத்தையாக இருக்க” உந்தக் கடலுக்கை சரியான கல்லு, நீங்கள் கேணீக்கை தான் குளிக்கவேண்டும்

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    பத்தொன்பது    எனது முகநூல் மெசெஞ்சரில் நீங்கள் இன்னும் ஊரில் தான் நிற்கிறீர்களா என்ற செய்தி வந்திருந்தது. பார்த்தால் சகாரா. தானும் அங்கு வருவதாக கூறியிருந்தாலும் வேலைகள் தொடர்ந்து காணியில் ந

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

நீங்களெல்லாம் இப்பிடி எழுதி நான் கேட்க வேண்டிய நிலை. நாம் பண்ணைக்கு பணம் கொடுத்தது2019 இல் 

 

 

என்ன செய்வம்..எழுத தோன்றியது அது தான்.மற்றப்படி ஒண்டும் இல்ல..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் இப்படியே எழுதிக்கொண்டு போனால் எனக்கும் நேரம் போதாது. உங்களுக்கும் சலிப்பாகிவிடும் என்பதால் முக்கியமானவற்றை மட்டும் எழுதலாம் என்று இருக்கிறேன். 

நீங்கள் தொடர்ந்து விளாவாரியாக  எழுத வேண்டும்.
சலித்தால் ஒரு கண் அயர்ந்து விட்டு மீண்டும் தொடர்ந்து படிப்பது மனித இயல்பு.
 

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

திரும்பவும் ஊர் போகும் ஆசையை உங்களது கட்டுரை ஏற்படுத்துகிறது.. 

அவாவின் பயண கட்டுரையும் நீங்கள் வெளியிடும் இலங்கை படங்களும் அங்கே போக வேண்டும் என்ற ஆசையை உண்டாக்குபவை தான்.

  • கருத்துக்கள உறவுகள்

சுமே..! தொடர்ந்து எழுதுங்கள்...!

பலரது திட்டங்களை மறு பரிசீலனை செய்ய....அல்லது மீளமைக்க உங்கள் அனுபவங்கள் நிச்சயம் உதவும்...!

அலுப்பாக இருந்தால் சொல்லுவம் தானே...!😄

  • கருத்துக்கள உறவுகள்
On 19/4/2023 at 09:31, சுவைப்பிரியன் said:

கிளிநொச்சியில உள்ள அம்மாச்சி உணவகத்தில் இப்ப உணவு நன்றாக இல்லை.மற்றும் அங்கு வேலை செய்பவர்களுக்கும் திமிர் கூடிப்போச்சு.முன்பு அடிக்கடி போவேன்.இப்ப போவது சரியான குறைவு.நீங்கள் கரடிப்போக்குச் சந்தியில் இருந்து என்றால் பாரதிக்கு போயிருக்கலாமே.சரி அடுத்த முறை பாரப்போம்.

 

அம்மாச்சி உணவகம் அருமையானதொரு பயனுள்ள திட்டம். நானும் பல தடவைகள் அங்கு சென்று உணவு உட்கொண்டு உள்ளேன். வெவ்வேறு அமைவிடங்களில் உள்ளவை பற்றி நல்லதும், குறைகளுமான அபிப்பிராயங்கள் உள்ளன. கிளிநொச்சி அமைவிடத்தில் உள்ள அம்மாச்சி உணவகம் பற்றிய உங்கள் கருத்து வருத்தமளிக்கிறது. இப்படியான திட்டங்களுக்கு நாமே ஆதரவளிக்காவிட்டால் வேறு யார் செய்வார்கள். உங்களைப்போன்றோர் ஆதரவு நிச்சயம் பல்வேறு பிரச்சனைகளின் மத்தியில் தொழில் செய்யும் பெண்களுக்கு தேவை. இங்குள்ள பணியாளர்கள் எப்படியான அடிகளை வாழ்க்கையில் வாங்கினார்கள் என்பது உங்களுக்கு தெரியாமல் இல்லை.  எமது வாய்சுவைக்காக மட்டும் செல்லாது அவர்களை ஊக்குவிக்கவும் அங்கு சென்று உணவு உட்கொள்ளலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 20/4/2023 at 21:59, விசுகு said:

இங்கிருந்து ஒருவர் இப்படித்தான் ஆட்களிடம் காசு வாங்கி இதோ ஊரை சோலையாக்கி பலருக்கும் வேலை வாய்ப்பு கொடுக்கிறேன் என்று புறப்பட்டு தனக்கு ஏர்கண்டிசனுடன் வீடு சமைக்க ஆள் துவைக்க ஆள் காவலுக்கு நாய் என்று நாலு வருஷம் வாழ்ந்து விட்டு இங்கே வந்து கிடக்கிறார். நாலு கோடி காலி. 😭

நான் ஆபிரிக்காவில் இடைநடுவில் இருக்கும்போது அப்பா ஒரு கடிதம் எழுதினார். அதில் “பாம்பு தின்னும் ஊருக்குப் போனால் நடுமுறி நமக்கென வாழவேண்டும்” என்று எழுதியிருந்தார். இவர் அங்குபோய் சிம்பிளாக வாழ முடியாமல் படாடோபமாக இருந்திருக்கின்றார். எத்தனை கோடி என்றாலும் கரையத்தானே செய்யும். 

On 20/4/2023 at 22:16, யாயினி said:

நீங்கள் மெசோ அக்காவை மட்டும் கேட்டதனால் அடுத்திருக்கும் பரோபகாரிகள் கொஞ்சம் பணம் சேர்க்கலாம் என்று யோசிக்கிறம்.🖐️.காலப் போக்கில் அறியத் தாருங்கள்....😀✍️

தனிய ஒரு பரோபகாரரிடம் வாங்கினால் மற்றைய பரோபகாரர்கள் தங்கள் பின்னிருக்கும் ஒளிவட்டம் மங்கிவிடும் எனக் கவலைப்படுவார்கள்! அதனால் எல்லோரும் உதவவேண்டும். பணத்தைச் சேருங்கள். ஒரு தொகையைக் கேட்கிறேன்!😉

பரோபகாரி - பிறர்க்கு உதவி புரிவோன்

பரதேசி - அலைந்து யாசகம் பெறுபவர்

 

On 20/4/2023 at 22:42, Kandiah57 said:

ஐயையோ     பத்தாயிரம்  பவண்ஸ்சா????? எங்கே லண்டனிலா  பண்ணை போடப் போகிறீர்கள் ???🤣😂😂. ....காசு கிடைக்கும்  கிடைத்து. பண்ணை போட்டதும். பண்ணையின் முகவரியை அறியத்தரவும்.  நேரில் வந்து பண்ணையை பார்த்து  எனது பங்களிப்புகள் எவ்வளவு  ?? எப்போது  ?? என்று அறிவிக்கிறேன்.     அப்புறம் இனிமேல் புத்தகங்கள் வாசிக்கமாட்டீர்களா   ???

இலண்டனில் பண்ணை போட பல மில்லியன் பவுண்ட்ஸ் தேவைப்படும் என்பது தெரியாதா?😛

பண்ணையை அமைத்து வேலை இல்லாமல் இருப்போருக்கு வேலை கொடுக்கவேணும் என்பதுதானே மிஷன். அதனால் எனக்கு புத்தகம் வாசிக்க நேரம் எப்போதும் இருக்கும்😎

On 21/4/2023 at 04:12, அக்னியஷ்த்ரா said:

கிருபண்ணை 
பகிடிக்கு சொல்லவில்லை நீங்கள் இறங்குவதென்றால் நானும் இறங்கத் தயார்.
சிங்கை டாலர்களில் தட்டிவிடலாம் 

நானும் நாட்டுக்கு இன்னும் சில வருடங்களில் இறங்குவதாகத்தான் திட்டம். நாடு பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டுவிட்டால் செலவுகள் கூடும். பிஸினஸ் பிளானை புதுப்பிக்கவேண்டும்! கட்டாயம் சொல்கின்றேன்!

On 21/4/2023 at 07:55, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஸ்பொன்ஸருக்கு ஆட்களைப் பிடிக்கிறதென்றால் தெரியாதவர்களிடம் எல்லோ கேக்கவேண்டும். நல்லாத் தெரிஞ்சவை நல்ல ஆட்களுக்கே கடன் தரமாட்டினம் 😀

என்மேல் பூரண நம்பிக்கை உங்களுக்கு இருக்கு என்று எனக்குத் தெரியும். காசு விசயத்தில என்னைப்போல நியாயவான் ஒருத்தரும் இல்லை. 😇 டக்கென்று மாத்திவிடுங்கோ!

On 21/4/2023 at 14:09, Sabesh said:

இவர் இதுக்கு சரிவர மாட்டார்.
எடுத்த எடுப்பிலேயே ஐயாயிரம் பத்தாயிரம் ஆர் குடுப்பினம்.
முதல் அங்கே போய் அப்படி செய்ய வேணும் இப்பிடி செய்ய வேணும் என்று நீங்கள் பெரிய சமூக சேவையாளி போல காட்ட வேண்டும்.  அங்கு இருக்கும் குறைகளை புதிதாக நடப்பது போல கூற வேண்டும்.
ஒரு பெரிய காணி இருக்கு நிறைய பேருக்கு வேலை குடுக்கலாம் ஆனால் திருத்த வேண்டும் என்று ஒரு ஐநூறு ஆயிரம் வாங்க வேணும்.
3 மாதத்தில் திருத்திய காணிக்குள் நரி வருது எலி  வருது எண்டு சுத்தி அடைக்க ஆயிரம் இரண்டாயிரம் எண்டு வாங்க வேண்டும்.
பிறகு கொஞ்ச படங்களை போட வேணும் ... பக்கத்து தோட்ட படமென்றாலும் பரவாயில்லை
இதை இன்னும் பெருசாக்க உளவு இயந்திரம் வேணும் சிறிய கிண்டி வேண்டும் என்று ஒரு ஐயாயிரம் ஆறாயிரம் வாங்கி
பிறகு அடிச்ச வெளிக்கு பெயிண்ட் அடிக்க வாகன பராமரிப்புக்கென்று புதிதான ஆர்வலர்களிடம் ஒரு ஐநூறு ஆயிரம் வாங்கி
இப்பிடி படிப்படியா 2 வருடத்தில் இருபதாயிரம் முப்பதாயிரம் pounds  ஐ வாங்காமல் எடுத்த எடுப்பிலேயே ....

நீங்கள் இதுக்கு சரி வர மாட்டீர்கள்

இது மோசடி செய்யும் பிளானோடு இருப்பவர்களின் வழி!

நம்வழி நேர்மையான வழி. எல்லாக் கணக்கு வழக்கும் பகிரங்கமாக இருக்கும். சோஷல் மீடியாவில் லைவ் கமராவில் பண்ணையை எப்பொதும் பார்க்க வழி செய்வோம்!

On 22/4/2023 at 05:16, Kavi arunasalam said:

FAA06646-EE08-4882-A761-56-F8441-D0-E81.

அப்பிடி எண்டால் கிருபன் நல்ல ஆள் இல்லை எண்டு சொல்லுறீங்களோ?

நல்லவர் இல்லையெண்டாலும் நம்பிக்கையும் நாணயமும் நிறைந்தவர்😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நல்லவர் இல்லையெண்டாலும் நம்பிக்கையும் நாணயமும் நிறைந்தவர்😎

உங்களுக்கு நல்லாத் தெரிஞ்சிருக்கு.  😃😀

8 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

 

அம்மாச்சி உணவகம் அருமையானதொரு பயனுள்ள திட்டம். நானும் பல தடவைகள் அங்கு சென்று உணவு உட்கொண்டு உள்ளேன். வெவ்வேறு அமைவிடங்களில் உள்ளவை பற்றி நல்லதும், குறைகளுமான அபிப்பிராயங்கள் உள்ளன. கிளிநொச்சி அமைவிடத்தில் உள்ள அம்மாச்சி உணவகம் பற்றிய உங்கள் கருத்து வருத்தமளிக்கிறது. இப்படியான திட்டங்களுக்கு நாமே ஆதரவளிக்காவிட்டால் வேறு யார் செய்வார்கள். உங்களைப்போன்றோர் ஆதரவு நிச்சயம் பல்வேறு பிரச்சனைகளின் மத்தியில் தொழில் செய்யும் பெண்களுக்கு தேவை. இங்குள்ள பணியாளர்கள் எப்படியான அடிகளை வாழ்க்கையில் வாங்கினார்கள் என்பது உங்களுக்கு தெரியாமல் இல்லை.  எமது வாய்சுவைக்காக மட்டும் செல்லாது அவர்களை ஊக்குவிக்கவும் அங்கு சென்று உணவு உட்கொள்ளலாம். 

நாம் அவர்களை ஊக்குவிப்பதற்காகவே அங்கு செல்கிறோம். ஆனால் முதல் முறைநாம் செல்லும்போது இப்படி நடந்தால் பரவாயில்லை. இது சுத்தமில்லை என்றுவிட்டுக் கடந்து போகலாம். ஆனால் முன்னர் இருதடவைகள் சென்றபோது இருந்த சுத்தத்துக்கும் கண்ணியத்துக்கும் இப்ப எத்தனையோ மாற்றம். எத்தனை அடிபட்டால் என்ன??? அவர்களுக்கு வருமானத்துக்கு ஒரு வழி ஏற்படுத்தினால் அதை மனமாய் செய்யவேண்டும் தானே ????? ஏனோதானோ என நடப்பது தவறல்லவோ.

11 hours ago, புங்கையூரன் said:

சுமே..! தொடர்ந்து எழுதுங்கள்...!

பலரது திட்டங்களை மறு பரிசீலனை செய்ய....அல்லது மீளமைக்க உங்கள் அனுபவங்கள் நிச்சயம் உதவும்...!

அலுப்பாக இருந்தால் சொல்லுவம் தானே...!😄

சரி சரி 😃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

நீங்கள் தொடர்ந்து விளாவாரியாக  எழுத வேண்டும்.
சலித்தால் ஒரு கண் அயர்ந்து விட்டு மீண்டும் தொடர்ந்து படிப்பது மனித இயல்பு.
 

 

ஓம் ஓம் நல்லாச் சொல்லுவியள். 😀

15 hours ago, யாயினி said:

என்ன செய்வம்..எழுத தோன்றியது அது தான்.மற்றப்படி ஒண்டும் இல்ல..

ஓகே ஓகே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பதினொன்று 


 

எங்கள் ஊர் முழுதும் மாடிவீடுகள் பல இந்த நான்கு ஆண்டுகளில் முளைத்திருந்தன. பல வீடுகளில் ஆட்கள் இல்லை என்பது வேறு. ஒரு நாள் நயினாதீவுப் பயணம். காலையில் எழு மணிக்கே புறப்பட்டு யாழ்ப்பாணம் சென்று அங்கிருந்து குறிக்கட்டுவான் செல்லும் பஸ்சில் நானும் மகளும் ஒவ்வொரு இருக்கையில் அமர ஒரு அரைமணி நேரம் கணவர் நின்றபடியே பயணம் செய்ய பின் இருக்கை கிடைத்துவிட்டது. பஸ் குறிக்கட்டுவானில் நின்றவுடன் முன்னர் நேரே படகில் ஏறமுடியும். இப்போது ஒரு சிறிய கட்டடம்போல் வரிசையாக இருந்து இருந்து நகர்வதற்கு வாங்கு போன்றும் கட்டியுள்ளனர். அன்று பார்த்து எக்கச்சக்கமான சிங்களச் சனம். பஸ் நின்றவுடன் பலரும் அடித்துப் பிடித்து ஓட நானும் விரைவாகச் செல்ல ஏனம்மா அவசரப்படுகிறீர்கள் என்கிறாள் மகள். 

 

அந்தக் கட்டடத்தில் முக்கால்வாசி நிரம்பியிருக்கு. நாம் போய் கடைசி வரிசையில் அமர்கிறோம். சிங்கள மக்களுக்கு விகாரைகளிலேயே இலவச பேருந்துகள் ஒழுங்கு செய்யப்பட்டு நயினாதீவு, கீரிமலை போன்ற இடங்களைப் பார்வையிட ஒரு டூர் போல் ஒழுங்கு செய்கிறார்கள். எங்கள் கோவில்கள் ஏதாவது இப்பிடி எங்களுக்குச் செய்யுமா என்று ஒருவர் அங்கலாய்த்துக் கொண்டு இருந்தார். எம்மை விலத்திக்கொண்டு சிங்களப் பெண்கள் முன்னே செல்கின்றனர். எல்லோரும் எதுவும் பேசாமல் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஒருபத்து நிமிடமாக நானும் பொறுமையாகப் பார்த்துக்கொண்டிருக்க இன்னும் மூன்று பேர் வர நான் காலை நீட்டி அவர்கள் செல்லாதவாறு மறித்தபடி நாமும் வரிசையில் காத்திருக்கிறோம் என்கிறேன். 

 

அம்மா பேசாமல் இருங்கோ என்கிறாள் மகள். அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் முன்னால் பார்த்து ஏதோ சிங்களத்தில் சொல்கிறார்கள். ஒரு பெண் என்னைப் பார்த்து மன்னித்துவிடுங்கள், அவர்களுக்கு எதுவும் தெரியாது. நாம் குழுவாக வந்தோம் என்றவுடன் ஓகே என்று நான் காலை எடுக்கிறேன். ஆனாலும் மனம் குமைக்கிறது. குழுவாக வந்தாலும் ஒழுங்காகப் போகலாம் தானே. தமிழர்களின் நிலை எதுவும் பேசாமல் பார்த்துக்கொண்டு இருக்கும்படி ஆகிவிட்டாதே என்று எண்ணுகிறேன். 20 நிமிடத்தில் நாம் முன் வரிசையின் தொங்கலுக்குச் சென்றுவிட சரி இன்னும் ஒரு பத்து நிமிடம் ஆகும் என சலிப்புடன் எண்ணியிருக்க நாம் இருந்த பக்கத்துக் கதவு திறந்து தமிழ்  ஆட்களெல்லாம் அந்தக் கதவால் இடித்துக்கொண்டு செல்ல குழுவாக வந்தவர்கள் எந்தப் பக்கம் போவது எனக் குழம்பி நிற்க நாமும் கடகடவென சென்று லைஃப் ஜக்கற் எடுத்து அணிந்துகொண்டு கடைசி ஆட்களாக இயந்திரப்படக்கில் ஏறுகிறோம். அவர்கள் நிற்கஎம்மவர்கள் வந்து எறிவிட்டார்கள் என்று மனதில் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது.

 

நாம் கடைசியாக ஏறியபடியால் முன்பக்க இருக்கை இருக்கும் பக்கம் நிற்கிறோம். நடுவில் ஒரு சிங்கள மதகுரு இருக்கிறார். அவரின் இரு பக்கமும் இரு இருக்கைகள் வெறுமையாக இருக்கின்றன. எனக்குப் பக்கத்தில் இருப்பவரை தள்ளி இருக்கும்படி கூற அவரோ பிக்குவையும் என்னையும் மாறி மாறிப் பரிதாபப் பார்வை பார்க்கிறார். நான் மீண்டும் கூற பிக்குவுக்கு விளங்கியதோ என்னவோ தன்பக்கம் வரும்படி கையால் அவருக்கு சைகை செய்ய அவர் தள்ளி இருக்க நான் அமர்கிறேன். படகு நகர கணவரும் மகளும் நின்று வீடியோ எடுக்கின்றனர். மகளுக்கு அந்தப் பயணம் நன்கு பிடித்துப்போகிறது. நாம் சென்றபோது நேரம் 11.15. 12.30 இக்குத்தான் பூசை. நாம் கால்களைக் கழுவி கோவிலைச் சுற்றிக் கும்பிட்டு அர்ச்சனைத் தட்டும் வாங்கி வந்து அரிச்சனைத் தட்டைக் கொடுப்பதற்காகக் காத்திருக்க எனக்கு முன்னால் உள்ளவரின் தட்டுவரை வாங்கி கிட்டத்தட்ட முப்பது தட்டுகளை ஒன்றாகப் பக்கம்பக்கம் அடுக்கி வைத்துவிட்டு தேங்காய்களை எடுத்துவிட்டு பாதித் தேங்காய்களை வைத்து விபூதி சந்தனச் சரையையும் வைக்கின்றனர் இருவர். தீபம் காட்டி மந்திரம்ஓதிவிட்டு ஐயர் தீபத்தைக் கொண்டுவர முண்டியடித்து எல்லோரும் வணக்குகின்றனர். அதன்பின் எல்லோரும் அரிச்சனைத் தட்டுகளை மறுபுறத்தால் சென்று எடுக்கின்றனர். எல்லாம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தட்டுகள் தானே. தாம் கொடுத்த தட்டுத்தான் அது என எண்ணாமல் எடுத்துப் போகின்றனர். 

 

ஒரு ஐயர் வந்து முதலாவதாக எனது தட்டை வாங்க, கொடுத்துவிட்டு அடுத்த பக்கம் போய் நிற்கிறேன். எனக்குப் பின்னர் வந்தவர்கள் என் பின்னால் போய் நிற்க என கணவரும் மகளும் அருகில் நிற்கின்றனர். ஐந்தோ ஆறாவதாய் ஒரு பெண் வந்து என் மகளை இடித்துக்கொண்டு எனக்கு முன்னால் வரப் பார்க்கிறார். நான் மெதுவாக தங்கச்சி இவ்வளவு பேர் நிக்கிறம். இடிக்காமல்  பின்னால போய் நில்லுங்கோ. ஐயர் அங்கையும் தீபம் கொண்டு வருவார் என்றதும் என்னை எரிக்கும் பார்வை பார்த்துவிட்டு அப்பெண் அங்காலே போகிறது. மனிசன் நக்கலாய் ஆரிட்டை என்றுவிட்டு நமட்டுச் சிரிப்பு சிரிக்க, நான் ஏதோ இடையில வந்தது போலயல்லோ நீங்கள் சிரிக்கிறீர்கள் என்கிறேன். 

 

தீபம் கொண்டு ஐயர் வந்து எல்லாருக்கும் காட்டிவிட்டு நாம் கொடுக்கும் தட்சணையை வாங்கிக்கொண்டு அரிச்சனைத் தட்டுகளுக்குத் தண்ணீர் தெளித்துவிட்டுப் போக நான் சென்று நான் வைத்த அரிச்சனைத்தட்டை எடுக்கிறேன். முதலாவதாகக் கொடுத்து முதலாவதாகப் போய் எடுத்தது எனக்கு ஓட்டப்போட்டியில் முதலாம் இடம் கிடைத்ததுபோல் மகிழ்ச்சி ஏற்படுகிறது.

 

வெளியே வந்து நாகதம்பிரானுக்கு நாகமும் பாலும் வாங்கி வைத்துக்கொண்டு நான்காவதாக நிற்க அந்தப் பக்கத்தாலும் சிலர் வந்து நிற்கின்றனர். இங்கு இவர்களும் எதற்காக நிற்கிறார்கள் எனும் யோசனையின்றி தாம் முதலில் போகவேண்டும்போல் முன்னே நகர, கலோ கியூ இந்தப் பக்கம் என்று அவர்களைக் கூப்பிடுகிறேன். கோயிலுக்கு வந்தாலும் உனக்குச் சண்டை தானோ என்கிறார் இந்தாள். அப்ப எல்லாரையும் போக விட்டிட்டு எப்ப ஒருத்தருமில்லையோ அப்ப போவமோ என்கிறேன். பிள்ளைகளின் நட்சத்திரங்களைச் சொல்லி  மூவரும் பாலூற்றிவிட்டு வர, அன்னதானம் உண்டுவிட்டுப் போவோம் என்கிறார் மனிசன். சிறுவயதில் வரும்போது உண்டதுண்டு. வெளிநாடு வந்தபின் மூன்று தடவைகள் அங்கு சென்றிருந்தாலும் ஒருநாளும் அன்னதானம் செய்யுமிடத்தில் உண்டதில்லை. இம்முறை சம்மதித்து சென்று அமர்ந்து உணவு உண்ண மனதில் ஒரு நின்மதி எழுகிறது. அம்மா அங்க எப்பிடி சாப்பிட்டவா என்கிறாள் மகள். உவளுக்குப் பசி என்கிறார் மனிசன். உண்டபின் நயினாதீவைச் சுற்றிப் பார்க்கிறோம் என்று நடந்து சென்று விட்டு வர நேரம் போய்விடுகிறது. இன்னும் பத்து நிமிடத்தில் படகு புறப்பட்டுவிடும். எல்லோருக்கும் பதட்டம் தொற்றிககொள்கிறது.

 

உடனே அங்கு நின்ற ஓட்டோ ஒன்றைப் பிடித்து விபரத்தைக் கூற அவர்  விரைவாகக் கொண்டுவர இடையில் மறித்து வைத்துள்ளனர். அதற்கு அப்பால் வாகனங்கள் செல்ல முடியாது. நடந்துதான் செல்ல வேண்டும். ஓட்டோக்காரர் விடயத்தைக் கூற அவர் போகும்படி கூறி கயிற்றை மேலே இழுத்து தடியை உயர்த்தி அனுமதிக்க ஓட்டோ படகுக்குக் கிட்டச்சென்று எம்மையும் ஏற்றும்படி கையைக் காட்டுகிறார். நாம் முன்னே ஓட கணவர் ஓட்டோ காறருக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு ஓடிவருகிறார்.  எம்மைக் கண்டுவிட்டு நிறுத்தி எம்மையும் ஏற்றிச் செல்கிறது படகு. படபடப்பு நீங்கி எமக்கு நின்மதி ஏற்படுகிறது.

 

பின் பஸ் பிடிக்க ஓடிப் போனால் இரண்டு பஸ்கள் நிற்கின்றன. ஒன்று சிவப்பு அரச பஸ். மற்றது பச்சை தனியார் பஸ். எதில் ஏறுவது என்று நாம் குழம்பியபடி நிற்க, தனியார் வண்டி வேகமாகப் போவாங்கள். சிவப்பில போங்கோ என்கிறார் ஒருவர்.அதில் போய் ஏற கடைசி சீற்றில் தான் இடம் கிடைக்கிறது. பஸ்ஸும் கடைசி என்பதனால் வேறு எங்கோ இருந்து வரும் படக்குக்காகவும் காத்திருந்து அரை மணி நேரத்தின் பின்னர் புறப்படுகிறது. அவ்வளவு சனம். கால்கள் மிதிபட்டும் நெருக்கியடித்தும் தூங்கி வழிந்தும் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தால் இன்னும் அரை மணித்தியாலத்தில் தான் கடைசி பஸ் வெளிக்கிடும் என்கின்றனர். அதுவரை காத்திருக்க முடியாது என்று ஓட்டோ பிடித்து வீடு வருக்கிறோம். மின்வெட்டு வேறு. வீதிகள் இருண்டு சனநடமாட்டம் அற்று இருக்கு. மனதில் ஒரு பயமும் ஏற்படுகிறதுதான். 

 

அடுத்த நாள் காலை எழுந்து குளித்து முடித்து காலை உணவு  உண்ண வந்து மேசையில் அமர்கிறோம். இடியப்பம், சம்பல், உருளைக்கிழங்குப் பிரட்டல், சொதி. தற்செயலாக என் விரலைப் பார்த்த நான் அதிசயிக்கிறேன். என் நடுவிரலில் இருபது ஆண்டுகளாக இருந்து வளர்வதும் நான் வெட்டுவதுமாக என்னைத் தொல்லை செய்த சாம்பல் நிறக் காய்(உண்ணி) காணாமல் போயிருந்தது. நாகபூசணி அம்மனின் அருள்தான் என்கிறார் என் மச்சாள்.      



 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

நல்லவர் இல்லையெண்டாலும் நம்பிக்கையும் நாணயமும் நிறைந்தவர்😎

87890275-5-F53-4343-AB3-F-2-A644-DB93-FF

  • கருத்துக்கள உறவுகள்

நாகபூசணி அம்மனையே அலறவிட்ட அக்காவுக்கு பாராட்டுக்கள்......!

நான் அங்கும் சரி இங்கும் சரி எந்தக் கோவிலுக்கு போனாலும் அன்னதானம் சாப்பாடு கொஞ்சமாவது கட்டாயம் சாப்பிட்டுவிட்டுத்தான் வருவேன்.....சந்தர்ப்பம் கிடைத்தால் அங்கு கொஞ்சம் வேலைகளும் செய்வதுண்டு......! 😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, suvy said:

நாகபூசணி அம்மனையே அலறவிட்ட அக்காவுக்கு பாராட்டுக்கள்......!

நான் அங்கும் சரி இங்கும் சரி எந்தக் கோவிலுக்கு போனாலும் அன்னதானம் சாப்பாடு கொஞ்சமாவது கட்டாயம் சாப்பிட்டுவிட்டுத்தான் வருவேன்.....சந்தர்ப்பம் கிடைத்தால் அங்கு கொஞ்சம் வேலைகளும் செய்வதுண்டு......! 😁

நானும் அதே. கோயிலுக்கு போனால் கையும் காலும் சும்மா இருக்காது. அது மாதிரி கோயில் அன்னதானம் எண்டால் அதைப்போல சொர்க்கம் வேறெதுவுமில்லை. :folded_hands:

உந்த கலியாண வீடு,சாமத்திய வீட்டு கொண்டாட்டங்களிலை அப்பப்ப சாப்பாடு சரியில்லை எண்டு கத்துறம். ஆனால் கோயில் அன்னதானங்களிலை அப்பிடியொரு சம்பவங்களே நடக்கிறேல்லை அவதானிச்சனீங்களோ? :beaming_face_with_smiling_eyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பன்னிரண்டு 

 

முதன் முதல் கீரிமலைக் கடற்கரைக்கு குளிப்பதற்கு என்று போனால் கடற்கரை முழுதும் பழுப்பு நிறமாக ஊத்தையாக இருக்க” உந்தக் கடலுக்கை சரியான கல்லு, நீங்கள் கேணீக்கை தான் குளிக்கவேண்டும் “ என்றார்எம்மைக் கவனித்துக்கொண்டு நின்ற ஒருவர். மகளும் நானும் சென்று கேணியைப் பார்த்தால் ஒரு நான்கு இளம் பெண்கள் விளையாடிக்கொண்டு இருக்கினம். அதற்குள் சென்று வடிவாக நீந்த முடியாது என்று தெரிந்துவிட காங்கேசன் துறைக்கே போகலாம் என்று முடிவெடுக்கிறோம். முன்னர் கீரிமலையில் ஒரு மடம் இருந்தது. நாம் சிறுவர்களாய் இருந்த நாட்தொட்டு வெளிநாடு வரும்வரை ஆண்டில் ஒரு தடவை கீரிமலைக்குப் போவோம். அந்த மடத்தில் நன்னீர் கிணறும் உண்டு. அங்கு சென்று குளித்து, மடத்தில்  அசுவாசமாக இருந்து உண்டு குடித்து மகிழ்ந்து வருவோம். இப்ப அந்த மடம் இடிபாடுகளுடன் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. எம்மூரைச் சேர்ந்த ஆறு திருமுருகன் என்பவர் பெரிய மண்டபம் ஒன்றும், வயோதிபர்களுக்காக மடம் ஒன்றும் வெளிநாட்டவர் போனால் கூடத் தங்குவதற்கு வசதியாக மண்டபத்துடன் கூடிய அறைகளும் கட்டியுள்ளார். மறு  பக்கம் ஒரு சிறு கோவில். அதில் ஒரு இளம் ஐயர் நின்றுகொண்டு வாங்கோ, அரிச்சனை செய்துவிட்டுப் போங்கோ என்கிறார். நாம் போகவில்லை. நகுலேச்சுரம் என்று சொல்லப்படும் இலங்கையின் ஐந்து ஈச்சரங்களில் ஒன்றான அது புதுப்பிக்கப்பட்டு அழகாகக் காட்சி தருகிறது. நாம் உள்ளே செல்ல யாரும் கோவிலின் உள்ளே இல்லை. மூலஸ்தானம் பூட்டப்பட்டு இருக்க நாம், சுற்றிக் கும்பிட்டுவிட்டு வெளியே வருகிறோம். அங்கிருந்து பஸ்சில் போவதற்காக பஸ்ராண்டுக்குப் போனால் அரை மணி செல்லும் பஸ் வெளிக்கிட என்கிறார் காத்திருந்த ஒருவர். 

 

கண்ணில் அம்மாச்சி  உணவகம் பட அங்கு சென்றுவிட்டுச் செல்வோம் என்கிறேன். அந்தப் பகுதிகளிலோ அல்லது காங்கேசன் துறையிலோ அதுபோல உணவகம் இல்லாததால் மனிசன் ஓம் என்று சம்மதிக்கிறார்.  நாம் உள்ளே செல்ல கொஞ்ச சிங்களச் சனம் இருந்து உணவு உண்கிறது. நாம் வடைக்கும் தேனீருக்கும் ஓடர் கொடுத்துவிட்டு சென்று அமர்கிறோம். கிளிநொச்சி மற்றும் கோண்டாவிலில் இருக்கும் அம்மாச்சியில் நாம் தான் வாங்கிக்கொண்டு சென்று அமர வேண்டும். இது நன்றாக சுத்தமாக இருக்கு. சுத்தம் செய்வதற்கு என்று ஒரு பெண் முண் பகுதியில் நிற்கிறார். நாம் ஓடர் செய்தபோது வடை சுட்டுத் தருகிறோம். போய் இருங்கள் என்று சொன்னதனால் வந்து இருந்தோம். 

 

சிறிது நேரத்தில் ஒரு சுற்றுலாப் பயணிகளுடன் பஸ் வந்து நிற்க தப தப என எல்லோரும் உள்ளே வருகின்றனர். உள்ளே போதிய இடம் இல்லாததால் சிலர் திரும்பவும் பஸ்சுக்குள் போகின்றனர். பத்து நிமிடமாகியும் எமக்கு வடையோ தேநீரோ வரவில்லை. பிறகு வந்தவர்கள் சுற்றி நின்று ஓடர் செய்வதும் வாங்கிச் சென்று சென்று உண்பதுமாக இருக்க போய் கேளுங்கப்பா என்கிறேன். வரும் தானே பொறு என்று கூறிவிட்டு பார்த்துக்கொண்டிருக்க கடுப்பாகி நான் எழுந்து சென்று, தங்கச்சி வடையும் தேனீரும் கேட்டனாங்கள் இன்னும் வரேல்லை என்கிறேன். அந்தப் பெண் என்னை கவனிக்காததுபோல் நின்று அவர்களுக்கே கொடுத்துக்கொண்டு நிற்க, நான் திரும்பி வந்து எழும்புங்கோ போவம் என்கிறேன். கொஞ்சம் பொறுமையாய் இரன் என்று மனிசன் சொல்லி வெளியே நின்ற பெண்ணைப் பார்க்கிறார். அந்தப் பெண் நாம் வந்ததையும் இத்தனைநேரம் இருந்ததையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தார். உடனே பொறுங்கோ நான் எடுத்துக்கொண்டு வாறன் என்று கூறி ஐந்து நிமிடத்தில் எமக்கு வடையும் தேனீரும் கொண்டுவந்து தர நான் நன்றி என்கிறேன். 

 

வடை கோபத்தில் கூட மிகச் சுவையாக இருக்கிறது. தேனீரும் தான். வேறு ஏதும் வேணுமா என்றும் கேட்க, மோதகமும்  கடலை வடையும் உளுந்து வடையும் போண்டாவும் ஆறு ஆறு பார்சல் தர முடியுமா என்று கேட்க இருங்கோ கட்டிக்கொண்டு வாறன் என்று செல்லிவிட்டுச் செல்கிறார்.  ஒரு பத்து நிமிடங்களில் பார்சலையும் கையால் எழுதிய பில்லையும் கொண்டு வர நான் எழுந்து பில்லுக்குரிய பணத்தைக் கொடுத்துவிட்டு இந்தாங்கோ நீங்கள் வச்சுக்கொள்ளுங்கோ என்று ஆயிரம் ரூபாய்த் தாளைக் கொடுக்க வேண்டாம் என்று மறுக்கிறார். நான் அவர் மறுக்க மறுக்க அவர் பொக்கற்றில் வைத்துவிட்டு நீங்கள் செய்தது பெரிய உதவி என்றுவிட்டு வர, கெதியா ஓடிவா பஸ் வெளிக்கிடுதுபோல என்றபடி ஓடிச் சென்று மனிசன் மறிக்க நானும் மகளும் அவர் பின் ஏறுகிறோம். பஸ்சில் நான்குபேரே இருக்க நாம் முன்பக்கம் சென்று அமர்கிறோம். எங்கும் வெறிச்சோடி வீடுவாசல்கள் பெரிதாக இல்லாமல் இருக்கு.  

 

காங்கேசன்துறை கடற்கரை முன்னர் 2017,19 களில் சென்றபோது நன்றாகச் சுத்தமாக இருந்தது. இப்ப சிறிது பொலிதீன், பெட்டிகள் என்று ஆங்காங்கே குப்பைகள் சேரத் தொடங்கிவிட்டன. வாரநாட்களில் சென்றால் ஆட்கள் நடமாட்டமே இன்றி இரண்டு மணிநேரம் தனியாகவே நாம் மட்டும் நீந்திவிட்டு வந்தோம். ஒரு சனிக்கிழமை சென்றால் எம்மவர்கள் குடும்பம் குடும்பமாக, நண்பர்கள் கூட்டம், ஆண்களும் பெண்களும் ஒருபுறம் திருவிழாவுக்கு வந்ததுபோல் அத்தனை சனம். சிலர் பட்டம்கூட விட்டுக்கொண்டு நின்றனர். அன்று ஆட்களைப் பார்ப்பதும் அவர்களின் கூத்துக்களைப் பார்ப்பதிலுமே நேரம் போய்விட்டது. ஆட்கள் சாய்ந்து இருப்பதற்கு வசதியாக பெரிதாக எதுவும் இல்லை. கடைகளும் நிறைய இல்லை. இருக்கும் இரு கடைகளும் சிங்களவர்களே வைத்திருக்கின்றனர் என்றார் ஒருவர். வெயில் மட்டும் சொல்லி முடியாது. மற்றப்படி நீந்துவதற்கு ஏற்ற கடற்கரை. அங்கு பயணிகள் விடுதிகூட இருக்கு.ராஜபக்க்ஷவின் என்று கேள்வி. 

 

கசூரினா கடற்கரையில் கிழமை நாட்களில் பெரிதாக ஆட்கள் இல்லை. உள்ளே போனால் மட்டுமே நன்றாக நீந்தலாம். ஒரு ஐம்பது நூறு மீற்றர் வரை முழங்காலளவு தண்ணீர்தான். ஒருநாள் வான் பிடித்துக்கொண்டு இருபது பேர் போய் வந்தோம். வானுக்கு 10000 ரூபாய். உணவுகள் வீட்டிலிருந்தே செய்துகொண்டு போனோம். எனக்குக் கடையில் வாங்கும் உணவுகள் பிடிப்பதே இல்லை. அதனால் ஆட்டிறைச்சிக் கறி, சம்பல்  சொதியுடன் இடியப்பமும் அவித்து பாணும் வாங்கிச் சென்றோம். முதல் நாள் நானும் மச்சாளும் பிள்ளைகளும் சேர்ந்து ரோள்ஸ் செய்ததில் கடினமாக இருக்கவில்லை. ஃபிரிஜ் இல் வைத்துவிட்டு கலை எழுந்து பொரித்து, ஆக யூஸ், மிக்சர், தண்ணீர்  மட்டுமே வெளியில் வாங்கியது. திரும்ப வரும்போது எல்லாமே காலி. உறவுகளுடன் கூடி மகிழ்ந்து உண்டது என்பது எமக்கு மனதுக்கு அத்தனை மகிழ்வைத் தந்தது. இடையில் பண்ணாகத்தில் நிறுத்தி கடையில் ஐஸ்கிரீம், யூஸ் என வாங்கிக் குடித்து ஊர் வந்து சேர்ந்தோம்.


 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

 

வடை கோபத்தில் கூட மிகச் சுவையாக இருக்கிறது. தேனீரும் தான். வேறு ஏதும் வேணுமா என்றும் கேட்க, மோதகமும்  கடலை வடையும் உளுந்து வடையும் போண்டாவும் ஆறு ஆறு பார்சல் தர முடியுமா என்று கேட்க இருங்கோ கட்டிக்கொண்டு வாறன் என்று செல்லிவிட்டுச் செல்கிறார்.  ஒரு பத்து நிமிடங்களில் பார்சலையும் கையால் எழுதிய பில்லையும் கொண்டு வர நான் எழுந்து பில்லுக்குரிய பணத்தைக் கொடுத்துவிட்டு இந்தாங்கோ நீங்கள் வச்சுக்கொள்ளுங்கோ என்று ஆயிரம் ரூபாய்த் தாளைக் கொடுக்க வேண்டாம் என்று மறுக்கிறார். நான் அவர் மறுக்க மறுக்க அவர் பொக்கற்றில் வைத்துவிட்டு நீங்கள் செய்தது பெரிய உதவி என்றுவிட்டு வர, கெதியா ஓடிவா பஸ் வெளிக்கிடுதுபோல என்றபடி ஓடிச் சென்று மனிசன் மறிக்க நானும் மகளும் அவர் பின் ஏறுகிறோம். பஸ்சில் நான்குபேரே இருக்க நாம் முன்பக்கம் சென்று அமர்கிறோம். எங்கும் வெறிச்சோடி வீடுவாசல்கள் பெரிதாக இல்லாமல் இருக்கு.  

 


 

பாராட்டுக்கள் உங்கள் நல்ல உள்ளத்திற்கு, இதுதான் சுமே

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளதை உள்ளபடியே எழுதிக் கொண்டு செல்கிறீர்கள்......நன்றாய் இருக்கு தொடர்......!   👍

  • கருத்துக்கள உறவுகள்

கோவிலில் அக்காவின் செயல், இங்கே வந்த புதிதில், பஸ் ஏறப்போய், முண்டியடிக்க கிளம்பி, வெள்ளையம்மாக்களிடம் பேச்சு வாங்கி, ஜென்மத்துக்கும் மறக்காத பாடம் எடுக்கும், நம்மவர் நினைவே வந்தது.

நல்லா எழுதுகிறீர்கள்.  தொடருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இடையில் பண்ணாகத்தில் நிறுத்தி கடையில் ஐஸ்கிரீம், யூஸ் என வாங்கிக் குடித்து ஊர் வந்து சேர்ந்தோம்.
 

அட பக்கத்தில வந்திருக்கிறியள், பண்ணாகமா? வழக்கம்பரையா?

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ தொடர்ந்து எழுதுங்கள்.. யாழில் நீண்டகால்ங்களுக்கு பிறகு ஒரே மூச்சிலும் அடுத்த பாகங்களுக்கு காத்திருந்து படிக்கும் பகுதி ஆகிவிட்டது உங்கள் தொடர்..

 

 

On 23/4/2023 at 12:51, suvy said:

நாகபூசணி அம்மனையே அலறவிட்ட அக்காவுக்கு பாராட்டுக்கள்......!

நான் அங்கும் சரி இங்கும் சரி எந்தக் கோவிலுக்கு போனாலும் அன்னதானம் சாப்பாடு கொஞ்சமாவது கட்டாயம் சாப்பிட்டுவிட்டுத்தான் வருவேன்.....சந்தர்ப்பம் கிடைத்தால் அங்கு கொஞ்சம் வேலைகளும் செய்வதுண்டு......! 😁

 

On 23/4/2023 at 22:49, குமாரசாமி said:

நானும் அதே. கோயிலுக்கு போனால் கையும் காலும் சும்மா இருக்காது. அது மாதிரி கோயில் அன்னதானம் எண்டால் அதைப்போல சொர்க்கம் வேறெதுவுமில்லை. :folded_hands:

உந்த கலியாண வீடு,சாமத்திய வீட்டு கொண்டாட்டங்களிலை அப்பப்ப சாப்பாடு சரியில்லை எண்டு கத்துறம். ஆனால் கோயில் அன்னதானங்களிலை அப்பிடியொரு சம்பவங்களே நடக்கிறேல்லை அவதானிச்சனீங்களோ? :beaming_face_with_smiling_eyes:

 

வெளிநாட்டுக்காரர் விலாசாம் காட்டும் இடங்களாகவும் பூசாரிகள் வயிறு வளர்க்கும் மற்றும் காசு பார்க்கும் இடமாக கோவில்கள் மாறி இருப்பதாலும் கோயிலில் சாதி குறைந்தவர்களை வேலை செய்யவோ கோயிலில் முக்கியமான இடங்களில் எதையாவது தொடவோ அனுமதிப்பது இல்லை என்பதாலும் பிற்போக்குதனங்களையும் தன் சக மனிதர்களில் ஏற்றத்தாழ்வுகளையும் கற்பிக்கும் இப்படியான பெரிய கோவில்களுக்கு நான் என் குழந்தைகளை கூட்டிப்போவதில்லை நானும் போவதில்லை.. என் பிள்ளைகளும் இப்படியான பழக்கங்களை பழகக்குடாது என்பதில் கவனமாக உள்ளேன்.. ஊரில் ஒதுக்குப்புரமாக உள்ள இந்த பிராமண பூசாரிகளின் கால்தடம்படாத அண்ணமார் வைரவர் போன்ற கோவில்களுக்கு கூட்டி சென்று இவைதான் தமிழர்களின் சாமிகள் இதுதான் உண்மையான பழந்தமிழர்களின் வழிபாட்டு முறை ஆகமப்பூசைகள் சமஸ்கிருதத்தில் சொல்லி ஊரை ஏமாற்றி காசு புடுங்கும் கோவில் வழிபாட்டு முறை வேற்று மதத்தவர்களினது என்று சொல்லி வைத்திருக்கிறேன்... 
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, உடையார் said:

பாராட்டுக்கள் உங்கள் நல்ல உள்ளத்திற்கு, இதுதான் சுமே

உது ரூமச் 😃

6 hours ago, suvy said:

உள்ளதை உள்ளபடியே எழுதிக் கொண்டு செல்கிறீர்கள்......நன்றாய் இருக்கு தொடர்......!   👍

உங்கள் ஊக்குவிபிபுக்கு நன்றி அண்ணா

2 hours ago, ஏராளன் said:

அட பக்கத்தில வந்திருக்கிறியள், பண்ணாகமா? வழக்கம்பரையா?

பண்ணாகம் தான். பண்ணாகத்தில் எனக்கு தெரிந்த எழுத்தாளர் ராணி சீதரன் இருக்கிறார். அவரிடமும் மீண்டும் ஒருதடவை சென்றேன்.

 

38 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சுமோ தொடர்ந்து எழுதுங்கள்.. யாழில் நீண்டகால்ங்களுக்கு பிறகு ஒரே மூச்சிலும் அடுத்த பாகங்களுக்கு காத்திருந்து படிக்கும் பகுதி ஆகிவிட்டது உங்கள் தொடர்..

மிக்க நன்றி பாலபத்திரரே

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

வெளிநாட்டுக்காரர் விலாசாம் காட்டும் இடங்களாகவும் பூசாரிகள் வயிறு வளர்க்கும் மற்றும் காசு பார்க்கும் இடமாக கோவில்கள் மாறி இருப்பதாலும் கோயிலில் சாதி குறைந்தவர்களை வேலை செய்யவோ கோயிலில் முக்கியமான இடங்களில் எதையாவது தொடவோ அனுமதிப்பது இல்லை என்பதாலும் பிற்போக்குதனங்களையும் தன் சக மனிதர்களில் ஏற்றத்தாழ்வுகளையும் கற்பிக்கும் இப்படியான பெரிய கோவில்களுக்கு நான் என் குழந்தைகளை கூட்டிப்போவதில்லை நானும் போவதில்லை.. என் பிள்ளைகளும் இப்படியான பழக்கங்களை பழகக்குடாது என்பதில் கவனமாக உள்ளேன்.. ஊரில் ஒதுக்குப்புரமாக உள்ள இந்த பிராமண பூசாரிகளின் கால்தடம்படாத அண்ணமார் வைரவர் போன்ற கோவில்களுக்கு கூட்டி சென்று இவைதான் தமிழர்களின் சாமிகள் இதுதான் உண்மையான பழந்தமிழர்களின் வழிபாட்டு முறை ஆகமப்பூசைகள் சமஸ்கிருதத்தில் சொல்லி ஊரை ஏமாற்றி காசு புடுங்கும் கோவில் வழிபாட்டு முறை வேற்று மதத்தவர்களினது என்று சொல்லி வைத்திருக்கிறேன்... 

நான் ஒரு சைவன். குல தெய்வ வழிபாட்டை கொண்டவன்.மனிதர்களை மதிப்பவன். சாதி என்றால் பெரிதாக அலட்டிகொள்ளாதவன்.
நானொரு ஆன்மீகவாதி.  புலம்பெயர்ந்த நாட்டில் தெய்வ பீடத்தில்  சாதி வேற்றுமையை இன்னும் நான் காணவில்லை.

3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஊரை ஏமாற்றி காசு புடுங்கும் கோவில்

என்ன சொல்லி காசு புடுங்கினார்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பதின்மூன்று 


 

உறவினர்களின் வீடுகளுக்குச் செல்லச் செல்ல கணவருக்கு மட்டுமல்ல எனக்கு மகளுக்குக் கூட எமக்கு என்று ஒரு வீடு இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றவாரம்பித்துவிட்டது. கணவருக்கு ஒரு நாலரைப் பரப்புக் காணி தங்கையின் காணியுடன் சேர்ந்து இருக்கு. பத்து ஆண்டுகளாக கணவர் குடும்பத்தைப் பார்த்து, தங்கைக்கு வீடுகட்டி சீதனம் கொடுத்து திருமணம் செய்து வைத்து தமையனை ஐந்து தடவை வெளிநாடு செல்லக் காசு அனுப்பி, தம்பியை ஒரு ஆண்டுகளாக மாமி சிங்கபூரில் வைத்திருந்து பணம் முழுவதும் செலுத்தி லண்டன் அனுப்பி, இப்பிடி எல்லாம் குடும்பத்துக்காக உழைத்ததில் மாமி ஐந்து பரப்பு வீட்டுக்காணியும் எட்டுப் பரப்பு தோட்டக் காணியும் ஐந்து இலட்சம் காசும் மகளுக்குக் கொடுத்து மிகுதி இருந்த நாலேகால் பரப்புக் காணியை குடும்பத்தைப் பார்த்ததுக்காக கணவர் பெயரில் எழுதிவிட்டார். 90 ம் ஆண்டிலிருந்து தங்கையே  குத்தகைக்கு விட்டு அதையும் அனுபவித்து வருகிறார். 

 

நான் போகும்போதே வன்னியில் காணி வாங்கி ஆட்களை வைத்து ஒரு பண்ணையோ அன்றி கோழி ஆடுமாடுகளுக்கான இயற்கை உணவு தயாரிப்பதையோ அல்லது விளையும் நெல்களை விவசாயிகளுக்கு உதவும் பொ ருட்டு வாங்கிக் களஞ்சியப்படுத்தி பின் விற்கும் ஒரு சிறு செயலையோ ஆரம்பிக்கலாம் என எண்ணி இரண்டு மூன்று இது தொடர்பானவர்களிடம் முன்னரே கதைத்து பல சூம் மீற்றிங்கில் ஆலோசித்து, பலரும் நீங்கள் வாருங்கள் நாம் உதவுகிறோம் என்றனர். ஆனால் பிரபாவின் அனுபவமும் வேறு சிலருடன் நேரில் சென்று தொடர்ந்து கதைத்தபோது வெளிநாட்டில் இருக்கும் நான் தனித்து அவற்றைச் செய்வதில் பல இடற்பாடுகள் இருப்பதை அறிய முடிய, எம் ஊர் என்றால் கூட பலர் எமக்கு உதவ இருப்பார்கள். தெரியாத வன்னியில் நான் தனியாக எதுவும் செய்வது ஆபத்தானது என்று தெரிய, முதலில் சிறிதாக ஏதும் தொடங்கி உன் ஆசைக்கு செய்துபார். இரண்டு மூன்று ஆண்டுகளில் நாம் இங்கு வந்து தொடர்ந்து இருக்கும்போது ஏதாவது பெரிதாகச் செய்யலாம் என்றார் கணவர்.  

 

அவர் கூறுவது சரியாகப் பட சிறிதாக ஒரு ஒருங்கிணைந்த பண்ணை ஆரம்பித்தால் தெரியும் என்று எண்ணி லண்டனில் யூ டியூபில் பார்த்த ஒரு பெண் ஆசிரியர் நடாத்தும் பண்டைத்தரிப்புப் பண்ணையை போய்ப் பார்த்தால் வீடியோவில் பார்ப்பது எதுவும் உண்மையானதாக இருக்காது என்று தெரிந்தது. சிறிய குளம் போன்று ஒன்று அமைத்து அதில் தாராக்கள், அன்னம் எல்லாம் அந்தப் பண்ணையில் இருப்பதாகக் காட்டினார்கள். எத்னையோ கோழிகள், ஆடுகள் இருக்கும் என்று வந்தால் ஒரு சிலதைத் தவிர வேறு எதையும் பண்ணையில் காணவில்லை. என்ன இப்படி வெறுமையாக இருக்கிறதே என்றால் எல்லாம் விலைப்பட்டுவிட்டன என்கிறார். அப்ப நீங்கள் எதுவும் பெருக்குவதில்லையா என்றதற்கு தன் மகனே தயாரித்தது என்று ஒரு பெரிய இயந்திரத்தைக் காட்டினார். கூடுகள் கிளீன் பண்ணிக்கொண்டு இருக்கிறம். நாளைக்கு வேறெங்கோ இருந்து கோழிக்குஞ்சுகள் வருகின்றன. ஒரே நேரத்தில்  400 குஞ்சுகள்  பொரிக்க வைக்க முடியும் என்றதுடன் வெளிநாட்டில் இருந்து வரும்போது வாத்து முட்டைகள் ஒரு பெட்டி கொண்டுவந்து தருகிறீர்களோ என்றார். பார்ப்போம் என்றுவிட்டு வருகிறேன்.

 

முன்னர் புலிகளின் பொருண்மிய மேம்பாட்டு பேரவையின் கீழ் வேலை செய்ததாகக் கூறிய ஒருவர் உடுப்பிட்டியில் ஒரு மாதிரிப் பண்ணையை நடத்துகிறார் என்று ஒரு வீடியோ. அதில் தான் 13 பண்ணைகளை காரைநகரில் நடத்துவதாகவும் ஊடுப்பிட்டியில் நான்கு கனடாவில் வாழும் தமிழர்கள் சேர்ந்து நடத்துவதாகவும் அதை இவர் தற்காலிகமாகப் பாராமரிப்பதாகவும் கூற லண்டனில் இருந்தே அவருக்கு தொலைபேசியில் அழைத்துக் கதைத்திருந்தேன். என்  நண்பன் ஒருவரின் வீடு காரைநகரில். அவர்களும் அப்போது வெளிநாட்டில் இருந்து அங்கு வந்திருந்தனர். எம்மை வரும்படி அழைத்ததன்பேரில் நானும் கணவரும் மட்டும் சென்று உரையாடும்போது பண்ணை பற்றி விசாரித்தால் அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. இளந்திரையனையும் தெரியவில்லை.

 

நான் உடனே தொலைபேசியில் அழைக்க சுகம் விசாரிக்கிறார். நான் விபரத்தைக் கூறி உங்கள் பண்ணைகளில் ஒன்றையாவது நான் பார்க்கவேண்டும். என்  நண்பர்களைக் கேட்டால் அவர்களுக்கு விளங்கவில்லை. ஒருக்கா அவர்களுக்கு உங்கள் பண்ணை எங்கு இருக்கு என்று கூறமுடியுமா என்கிறேன். 


நான் பார்க்க ஆட்கள் இல்லாததால் என் பண்ணைகளை மூடிவிட்டேன் என்கிறார். அப்ப சரி நாளை உடுப்பிட்டிப் பண்ணையைப் பார்க்க வருகிறோம் என்கிறேன். அந்தப் பண்ணையும் இப்ப மூடியாச்சு. கனடாக்காரர் நாலுபேருக்கும் பிரச்சனை. நான் இப்ப ஊரெழுவில் ஒரு பண்ணையைப் பாராமரிக்கிறேன் என்கிறார்.  மூன்று மாதங்களில் 14 பண்ணைகளை எதனால் மூடினீர்கள் என்று கேட்க நேரில வாங்கோ கதைபம் என்கிறார். நண்பர்கள் உம்மை நல்லாத்தான் ஏமாத்தியிருக்கிறார் என்று சிரிக்க என்னை மட்டுமா ??? என எண்ணி அவமானமாகவும் கோபமாகவும் இருக்கு. அடுத்த இரண்டு நாட்கள் வேறு அலுவல்களால் போகமுடியாதிருக்க போன் செய்துவிட்டு அவர் ஊரெழுவிலாவது நிற்கிறாரா என்று உறுதிப்படுத்திக்கொண்டு நானும் கணவரும் செல்கிறோம். ஒரு நான்கு பரப்புக்காணி இருக்கும். இரு பக்கமும் மாட்டுத் தீவனப் புற்கள் மற்றும் சோளம் என்பன நடப்பட்டிருக்கு. உள்ளே சென்றால் பெரிய கொட்டில் ஒன்று போடப்பட்டு ஆறு பால்மாடுகள் கட்டப்பட்டிருக்கு. இன்னொரு பக்கம் ஒரு பத்து ஆடுகள் மேல் தட்டில் நிற்கின்றன. ஒரு நான்கு  கூடுகளில் நல்ல ஆரோக்கியமான கோழிகள் இருக்க பார்க்க ஆசையாகத்தான் இருக்கு. எம்மைக் கண்டுவிட்டு வந்து கதைக்கிறார். 

 

இதுவும் ஒரு கனடாக்காரரின் காணிதான். எல்லாமாக இருபது பரப்பு. இப்ப இவ்வளவும் தான் செய்யிறம். போகப்போக பெரிதாக்கலாம் என்று இருக்கிறம் என்கிறார். உங்கள் பண்ணைகள் ஏன் மூடினீர்கள் என்றதற்கு, நாங்கள் நாங்கள் நின்றால்தான் பண்ணையை ஒழுங்காகப் பாராமரிக்கலாம். நான் மற்றவர்கள் பண்ணையைக் கவனிக்க வந்தவுடன் அங்கு வேலை செய்பவர்களும் கவனம் இல்லை. கோழிகள் எல்லாம் நோய் வந்து செத்துவிட்டன. இப்ப நான் இதை மட்டும் தான் பார்க்கிறேன் என்றவுடன் அவர் சொல்லாமலே பல விடயங்கள் எனக்குப் புரிகின்றன. 

 

எதுவும் பேசாமல் அவரிடம் இருந்து விடைபெற்று வர, என்ர போன் நம்பர் இருக்குத் தானே அக்கா. பண்ணை போட உதவிகள் தேவை என்றால் அடியுங்கோ  என்கிறார். உங்களுக்கு அடித்துவிட்டுத்தான் மறுவேலை என்று மனதுள் சொல்லியபடி வருகிறேன்.  

 

நான் ஒரு முன்மாதிரிப் பண்ணையை உருவாக்கி இவர்களுக்குக் காட்டவேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. சில பெண்கள் வன்னியில் பண்ணைகளை நடத்துகிறனர். அதையும் பாருங்கள் என்று ஒருவர் முன்மொழிகிறார். ஏற்கனவே பார்த்தவைபோல்தான் இவையும் இருக்கும் என்னும் எண்ணத்தில் இனி எதையும் பாற்பதில்லை என்று முடிவுசெய்கிறேன். 

 

இணுவிலில் எந்தக் காணியுமே விற்பனைக்கு இலை. இருப்பது இரண்டு மூன்று பரப்பு மட்டுமே. அதுவும் ஒரு பரப்பு 30-40 லட்சம் என்று போகிறது. எனவே இணுவிலில் என்றில்லை நல்லகாணி இணுவிலுக்கு அருகில் இருந்தால் வாங்குவோம் என்று முடிவெடுத்து புரோக்கர்மாரிடம் கூறினால் ஒவ்வொரு நாளும் அந்தக் காணி இன்ன விலை என்று ஒரே தொல்லை.  ஒரு பத்து தோட்டக்காணிகள் ,கலட்டுக் காணிகள், வெறுங்காணிகள் என்று பார்த்து வெறுத்துவிட்டது. எதுவும் நான் நினைத்ததுபோல் அமையவில்லை. கடைசியில் ஒரு காணி சுற்றிவர வீடுகள் பதின்மூன்று பரப்பு . கொஞ்சம் உள்ளுக்குப் போகவேண்டும். எங்கள் ஊரின் எல்லையில் எனக்குப் பிடித்துவிட பேரம் பேசுகிறோம். காணி உரிமையாளர் சுவிஸில். ஒரு காணிக்கு ஒரு புரோக்கர் இருக்கமாட்டார். கடைசி நான்கு பேராவது வருவார்கள். அது ஏன் என்றும் தெரியவில்லை.நானும் கணவரும் நான்கு புரோக்கரும் காணிக்காரரின் தமையனும் சுற்றிவர இருக்க ஒரு பரப்பு 15 லட்சம் என்கின்றனர். இதுக்கு 15  லட்சம் அதிகம். 11 லட்சம் என்றால் வாங்குகிறோம் என்கிறார் கணவர். கிணறு இல்லை. மதிலோ வேலியோ இல்லை. எனவே இந்த விலை அதிகம் என்கிறார். கடைசியில் புரோக்கர் பதின்மூன்று இலட்சம் என்று இறங்கி வர கணவர் 12 லட்சம் என்றால் சொல்லுங்கள் முடிக்கலாம் என்கிறார். 

 

காணிக்காரரின் தமையன் எதுக்கும் தம்பிக்குப் போன் அடிப்பம். அவர் என்ன சொல்லுறார் என்று பார்ப்பம் என்று விட்டு போன் செய்ய, அழைப்பில் வருகிறார் தம்பியார். எடுத்த எடுப்பிலேயே பதின்மூன்று என்றால் வாங்கட்டும். இல்லாட்டில் போகட்டும் என்று கூற கோபத்துடன் நானும் கணவரும் எழுகிறோம். எம்மைக் கூட்டி வந்து புரோக்கர் இருங்கோ கதைச்சுப் பார்ப்பம் என்கிறார். உவரிட்டை காணி வாங்கத் தேவை இல்லை என்றுவிட்டு விடுவிடு என்று சென்றுவிடுகிறோம். இனிமேல் காணி ஒன்றும் பார்ப்பதில்லை என்று முடிவெடுத்து போனில் வரும் புரோகர்களின் தொலைபேசியை எடுக்காமல் விடுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எதுவும் பேசாமல் அவரிடம் இருந்து விடைபெற்று வர, என்ர போன் நம்பர் இருக்குத் தானே அக்கா. பண்ணை போட உதவிகள் தேவை என்றால் அடியுங்கோ  என்கிறார். உங்களுக்கு அடித்துவிட்டுத்தான் மறுவேலை என்று மனதுள் சொல்லியபடி வருகிறேன்.  

இனி வரும் காலங்களில் நம்மவர்களையே நம்பமுடியாது போலிருக்கு.....?

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் யு டியூபில் ஒரு சினிமாவைத்தான் பார்க்கிறோம், நேரில் சென்று பார்க்கும்போதுதான் நாம் எவ்வளவு ஏமாற்றப் படுகிறோம் என்பது புரியும் ..........எல்லாம் அனுபவம்தான்......ஒன்றும் செய்யேலாது போனவை போனவைதான்.......தொடருங்கள் சகோதரி...........!  

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

பதின்மூன்று 


 

பத்து ஆண்டுகளாக கணவர் குடும்பத்தைப் பார்த்து, தங்கைக்கு வீடுகட்டி சீதனம் கொடுத்து திருமணம் செய்து வைத்து தமையனை ஐந்து தடவை வெளிநாடு செல்லக் காசு அனுப்பி, தம்பியை ஒரு ஆண்டுகளாக மாமி சிங்கபூரில் வைத்திருந்து பணம் முழுவதும் செலுத்தி லண்டன் அனுப்பி, இப்பிடி எல்லாம் குடும்பத்துக்காக உழைத்ததில் மாமி ஐந்து பரப்பு வீட்டுக்காணியும் எட்டுப் பரப்பு தோட்டக் காணியும் ஐந்து இலட்சம் காசும் மகளுக்குக் கொடுத்து மிகுதி இருந்த நாலேகால் பரப்புக் காணியை குடும்பத்தைப் பார்த்ததுக்காக கணவர் பெயரில் எழுதிவிட்டார். 90 ம் ஆண்டிலிருந்து தங்கையே  குத்தகைக்கு விட்டு அதையும் அனுபவித்து வருகிறார். 

 

 

4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

அங்கு சென்று இருப்பதென்று முடிவானால், இது எழுத்தில் தேவை இல்லாத விடையம் என்று நினைக்கிறேன்.  வீண் வம்பு ;)

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.