Jump to content

யாழ். நெடுந்தீவில் பயங்கரம்! : வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 5 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

கடந்த காலத்தில் வடக்கில் இரவில் நடந்த படுகொலைகளை கண்டு நடுங்கியவர்களுக்கு இதை கண்டு பிடிப்பது ஒன்றும் பெரிய கஷ்ரமில்ல. இராணுவ முகாம்களுக்குள் மதிலோரத்தில் பதுங்கு குழிகளை அமைத்து, அந்த மதிலியேயே சிறு துவாரங்களை அமைத்து  அதற்குள் இருந்தவாறு தெருவில் போவோர் வருவோரை கண்காணித்து தமக்கு வேண்டாதவர்களை போட்டுத்தள்ளியவர்கள் வேறெங்குமிருந்து வரவில்லை, வேறெங்கும் போகவுமில்லை எல்லாமே இராணுவ அரங்கத்துக்கருகிலேயே நடந்தன, அங்கிருந்து வந்தவர்களாலேயே அரங்கேற்றப்பட்டது. அன்று துப்பாக்கி, இன்று வாள் அதொன்றே வித்தியாசம். நான் திரும்பியும் வந்துவிட்டேன் என்று பொய்ச்சொல்லு, என்று சொல்லி அனுப்பியவருடன் வந்திறங்கியது வாள்வெட்டுக்குழு!

 

 

இவ்வளவு நேரமும்  கொலைகாரர் அங்கே என்னத்தை தேடிக்கொண்டிருந்திருப்பார்கள்? கடற்படையைக்கடந்து வந்த கொலைகாரர் கடற்படைக்குள்ளேயே இருக்கலாமல்லவா? இதுகளை தடுக்க முடியாவிட்டால் இவர்கள் எல்லாம் ஏன் இன்னும் இங்கே எங்கள் இடத்தை அடைத்துக்கொண்டும் எங்களை அச்சுறுத்திக்கொண்டும் இருக்கிறார்கள்?

நரியார் கதிரை ஏறியவுடன் அழைத்தது முப்படை, தெற்கை அடக்குவதற்கு. தாடியர்; வடக்கை அழிப்பதற்கு. நம்மவருக்கு அதாவது நம்ம தலைவர்களுக்கு இதில பங்குமில்லை பழியுமில்லை அவர்கள் உறக்கத்தில். இவர்கள் வேணுமா நமக்கு? மக்களை வழிநடத்துவதற்கு, தன்னுயிரை கொடுத்து காப்பதற்கு துணிந்த நல்ல தலைவனே தேவை. பிச்சுத்தின்னும், ஓடி ஒழியும் ஓநாய்கள் தேவையில்லை. 

அனலைதீவு! அப்படித்தானே? ஒவ்வொரு தீவாய் குறித்து செய்தி வெளிவருகின்றது. வடக்கில்  இராணுவ ஆட்சிக்காலத்தில் தீவுகளை குத்தகைக்கு எடுத்து மக்களை கொத்தடிமைகளாக நடத்தியவர்கள் யாரென்று கேட்டால் தெரியும் பதில்!

 

24 minutes ago, satan said:

சம்பவத்துடன் தொடர்பில்லாத வேறு ஒரு நபரை குற்றவாளியாக அடையாளங்கண்டு கைது செய்து அவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என சான்றிதழ் அளிக்கப்படும்வரை வரை படகுசேவை இடைநிறுத்தம்.

தீவுப் பகுதிகளில் சிலவற்றை இந்தியாவுக்கோ, சீனாவுக்கோ கொடுத்து மின் உற்பத்தி 
நிலையங்கள் அமைக்கப் போவதாக முன்பு செய்தி வந்தது.
அது உண்மையானால் அங்கு மக்கள் இருக்கக் கூடாது என்று சம்பந்தப் பட்ட நாடுகள் கேட்டிருக்கலாம்.
இப்போ… மக்களை அங்கிருந்து கலைக்க அரசே… ஒட்டுக்குழுத் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின்
துணையுடன் படிப்படியாக கொலைகளை செய்து மக்களை அங்கிருந்து விரட்ட ஆரம்பித்துஇருக்கலாம்.
தமிழ் இனம்… ஒழுங்கான தலைவன் இல்லாத இனம் தானே. எதுவும் செய்யலாம் என்ற இறுமாப்பு இவர்களிடம் வந்து விட்டது.

மற்ற நாடுகள்…. தமது மூத்த குடிமக்களை பொன் போல பாதுகாப்பார்கள்.
இங்கு கொத்தாக கொலை செய்கிறார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 98
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் தற்போதைய நிலை வட கிழக்கில், இரத்தம் பார்த்த கரங்கள், இறக்கும் அடங்கமாட்டார்கள் சிங்கள இராணுவ கடற்படை பொலிஸ்ன் புலனாய்பகள் பல இருக்கின்றார்கள்.

இணையவன் கடைசிநேரத்தில் போய் வெட்டுவாங்கி கஷ்டப்பட போகின்றீர்களா? உங்கள் முடிவை மாற்றி இருக்கும் நாட்டில் நல்ல தெரிவை செய்யுங்கள்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, உடையார் said:

இதுதான் தற்போதைய நிலை வட கிழக்கில், இரத்தம் பார்த்த கரங்கள், இறக்கும் அடங்கமாட்டார்கள் சிங்கள இராணுவ கடற்படை பொலிஸ்ன் புலனாய்பகள் பல இருக்கின்றார்கள்.

இணையவன் கடைசிநேரத்தில் போய் வெட்டுவாங்கி கஷ்டப்பட போகின்றீர்களா? உங்கள் முடிவை மாற்றி இருக்கும் நாட்டில் நல்ல தெரிவை செய்யுங்கள்

என்னைப் பொறுத்தவரை,  ஊருக்கு… சுற்றுலா போவது ஓகே.
நிரந்தரமாக தங்குவதற்கு அது சரியான இடம் அல்ல.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுந்தீவில் 5 பேர் வெட்டிப் படுகொலை - புங்குடுதீவு வாசியிடம் பொலிஸார் தீவிர விசாரணை

Published By: VISHNU

23 APR, 2023 | 09:54 AM
image

யாழ். நெடுந்தீவு படுகொலை தொடர்பில் புங்குடுதீவு பகுதியை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டு பொலிஸாரினால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

வெளிநாடு ஒன்றில் இருந்து, அந்நாட்டினால் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட புங்குடுதீவை சேர்ந்த நபர் ஒருவர், நெடுந்தீவில் உள்ள சம்வம் இடம்பெற்ற முதியவரின் வீட்டிற்கு வந்து சென்றதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரை பொலிஸார் அழைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

https://www.virakesari.lk/article/153516

News - நெடுந்தீவு, மாவிலிதுறைக்கு அண்மையில் 5 புரை வெட்டிக் கொலை செய்த பிரதான சூத்திரதாரி நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் கனடிய குடியுரிமையுள்ள 50 வயதானவர்.

நெடுந்தீவு மாவிலித்துறைக்கு எதிரில் உள்ள வீட்டில் நேற்று காலையில் 5 சடலங்களுடன் ஒருவர் குற்றுயிராக மீட்கப்பட்டார்.

வீட்டு உரிமையாளர் கார்த்திகேசு நாகசுந்தரி (74) நாகநாதி பாலசிங்கம் (75), அவரது மனைவி பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை (72), வேலாயுதம் பிள்ளை நாகரத்தினம் (76), சுப்ரமணியம் மகாதேவன் (78) ஆகியோரே கொல்லப்பட்டிருந்தனர்.

கொல்லப்பட்ட அனைவரும் நெருங்கிய குடும்ப உறவினர்கள்.

அங்குள்ள சிவன் ஆலயமொன்றின் கும்பாபிஷேகத்திற்காக அவர்கள் வந்திருந்தனர். பிருத்தானியாவிலிருந்து வந்து முல்லைத்தீவு பாண்டியன்குளத்தில் தங்கியிருந்தவர், அங்கிருந்த உறவினர்களுடன் நெடுந்தீவுக்கு வந்திருந்தார்.

இந்தக் கொலை தொடர்பில் நடாத்தப்பட்ட விசாரணையில், கொலைச்சந்தேகநபர் நேற்றிரவே புங்குடுதீவில் வைத்து கைது செய்யப்பட்டார். புங்குடுதீவு, 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த சபாரத்தினம் ரகு என்ற 50 வயதானவரே கைது செய்யப்பட்டார்.

கைதானவர் கனடிய குடியுரிமையுடையவர். ஹெரோயின் பாவனையாளர்.தொடர் போதைப் பாவனையால் இயல்பு நிலையில் இல்லாதவர்.

நீண்ட கால பகையை தீர்க்க இந்த கொலையை செய்தாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொலையின் பின்னர்49 பவுண் தங்கநகைகளையும் இவர் திருடிச் சென்றுள்ளார். தற்போது நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொலைச்சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளியான தகவல்படி கொல்லப்பட்டவர்கள் அனைவரும் அவரது உறவினர்கள்.

அவர்கள் கோயில் திருவிழாவிற்காக நெடுந்தீவில் வந்து தங்கியிருந்ததை அறிந்துள்ளார்.

கொலை நடந்த வீட்டு உரிமையாளர், தனது வீட்டின் அறைகளை வாடகைக்கு வழங்கி வந்தவர். இதை சாதகமாக பயன்படுத்தி, கோயில் திருவிழாவிற்காக வந்ததாக குறிப்பிட்டு, அந்த வீட்டில் 2 நாட்களாக தங்கியிருந்துள்ளார். நீண்ட காலமாகி விட்டதால் தன்னை அந்த முதியவர்கள் அடையாளம் கண்டு கொள்ளவில்லையென சந்கேநபர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று அதிகாலை 4.30 மணியளவில் முதியவர்கள் துாக்கத்திலிருந்த போது, கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளார். வீட்டில் 5 முதியவர்கள் இருந்ததாகவும் அவர்களை வெட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டு நாய் குரைத்து சத்தமிட, நாயையும் வெட்டியுள்ளார், நாய் காயத்துடன் தப்பித்துக் கொண்டது.

இந்த சமயத்தில் அந்த வீட்டில் வந்து தங்கியிருக்கும் மற்றொரு உறவினர் அங்கு வந்ததாகவும் அவரையும் வெட்டிக் கொன்றுவிட்டு அங்கிருந்து வெளியேறி படகில் புங்குடுதீவு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

கத்தியை நெடுந்தீவிலுள்ள கிணறொன்றில் போட்டுவிட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் இன்று காலை சான்றுப் பொருட்களை மீடக நெடுந்தீவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்.

வட்சப்பில் வந்த செய்தி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

நேற்று அதிகாலை 4.30 மணியளவில் முதியவர்கள் துாக்கத்திலிருந்த போது, கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளார். வீட்டில் 5 முதியவர்கள் இருந்ததாகவும் அவர்களை வெட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவர் வீட்டின் வெளியேயும் ஏனையவர்கள் வீட்டின் உள்ளே படுக்கை மற்றும் ஏனைய பாகங்களிலும் கொடூரமான வெட்டு காயங்களுடன் சடலங்களாக காணப்பட்டனர்.

1 hour ago, ஏராளன் said:

இந்த சமயத்தில் அந்த வீட்டில் வந்து தங்கியிருக்கும் மற்றொரு உறவினர் அங்கு வந்ததாகவும் அவரையும் வெட்டிக் கொன்றுவிட்டு அங்கிருந்து வெளியேறி படகில் புங்குடுதீவு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

 

1 hour ago, ஏராளன் said:

கைதானவர் கனடிய குடியுரிமையுடையவர். ஹெரோயின் பாவனையாளர்.தொடர் போதைப் பாவனையால் இயல்பு நிலையில் இல்லாதவர்.

போதைப்பொருள்  பாவனையாளர், மனநலம் சரியில்லாதவர்கள் சிலை வைக்கவும் உடைக்கவும், கொலை செய்யவும் பயன்படுத்தப்படுகின்றனரா? அல்லது அவர்களது நோயே அதுதானா? அல்லது கொடூரங்களை நடத்தியபின் அப்படியாகிவிடுகிறார்களா?

 

1 hour ago, ஏராளன் said:

நீண்ட கால பகையை தீர்க்க இந்த கொலையை செய்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

1 hour ago, ஏராளன் said:

இதை சாதகமாக பயன்படுத்தி, கோயில் திருவிழாவிற்காக வந்ததாக குறிப்பிட்டு, அந்த வீட்டில் 2 நாட்களாக தங்கியிருந்துள்ளார். நீண்ட காலமாகி விட்டதால் தன்னை அந்த முதியவர்கள் அடையாளம் கண்டு கொள்ளவில்லையென சந்கேநபர் குறிப்பிட்டுள்ளார்.

 

1 hour ago, ஏராளன் said:

வெளிநாடு ஒன்றில் இருந்து, அந்நாட்டினால் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட புங்குடுதீவை சேர்ந்த நபர் ஒருவர், நெடுந்தீவில் உள்ள சம்வம் இடம்பெற்ற முதியவரின் வீட்டிற்கு வந்து சென்றதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்

 

1 hour ago, ஏராளன் said:

கைதானவர் கனடிய குடியுரிமையுடையவர்.

ஜெர்மனியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டவர் என்றும் செய்தி வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் வரும்போது சகல உண்மைகளும் வெளிவரும்தானே. வரும் செய்திகளைப் பார்த்தால் இந்த அப்பாவி முதியவர்களின் படுகொலைகள் தனிப்பட்ட பகையால் நடந்தது மாதிரி உள்ளது. அதுவும் புலம்பெயர்ந்த நாட்டில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டவர்தான் சந்தேகநபர்.  வயதான காலத்தில் நிம்மதியாக இருக்க வேண்டுமென்றால் ஒருவருடனும் பகைவளர்க்கக்கூடாது.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, கிருபன் said:

அதுவும் புலம்பெயர்ந்த நாட்டில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டவர்தான் சந்தேகநபர்.

இதில் இருந்து இலங்கையில் வாழ்கின்ற ஈழதமிழன் மட்டும் தான் தீயவன் என்பது போன்ற கருத்துக்கள் உண்மை இல்லை என்பது தெளிவாகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

நீண்ட காலமாகி விட்டதால் தன்னை அந்த முதியவர்கள் அடையாளம் கண்டு கொள்ளவில்லையென சந்கேநபர் குறிப்பிட்டுள்ளார்.

 

34 minutes ago, கிருபன் said:

வயதான காலத்தில் நிம்மதியாக இருக்க வேண்டுமென்றால் ஒருவருடனும் பகைவளர்க்கக்கூடாது.

பகையை நீண்ட காலமாக மனதில் வைத்து வளர்த்து மனநலம் பாதிக்கப்பட்டிருக்குமோ சந்தேக நபருக்கு? எங்கோ ஒவ்வொரு நாட்டிலிருந்தாலும் செய்திகளும் பகைகளும் தொடர்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, கிருபன் said:

உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் வரும்போது சகல உண்மைகளும் வெளிவரும்தானே. வரும் செய்திகளைப் பார்த்தால் இந்த அப்பாவி முதியவர்களின் படுகொலைகள் தனிப்பட்ட பகையால் நடந்தது மாதிரி உள்ளது. அதுவும் புலம்பெயர்ந்த நாட்டில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டவர்தான் சந்தேகநபர்.  வயதான காலத்தில் நிம்மதியாக இருக்க வேண்டுமென்றால் ஒருவருடனும் பகைவளர்க்கக்கூடாது.

 

இறந்தது கிழடு கட்டையள்.

இது கடற்படை வேலையா இருக்கலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

இறந்தது கிழடு கட்டையள்.

இது கடற்படை வேலையா இருக்கலாம்!

வயதானவர்கள் என்றாலும் அவர்கள் ஆசைப்படும் மட்டும் வாழத்தானே வேண்டும்!

புங்குடுதீவைச் சேர்ந்த ஒருவரை சந்தேகத்தில் கைது செய்திருக்கின்றார்கள். இவர் ஜேர்மனியில் இருந்து திருப்பி அனுப்பட்டவர் என்றும் செய்தி சொல்கின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுந்தீவின் வீட்டு உரிமையாளர்கள் வெளிநாட்டில் வாழ்ந்த சூழலில் அந்த வீட்டுக்கு கள்ள உறுதி முடித்து ஒருவர் சொந்தம் கொண்டாடியதாகவும் வீட்டு உரிமையாளர்கள் அவர்மீது வழக்கு போட்டதாகவும் முன்பு ஒரு செய்தி உலாவியது அதற்கும் இதற்கும் தொடர்பு இருக்குமோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அதுவும் புலம்பெயர்ந்த நாட்டில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டவர்தான் சந்தேகநபர்.  

அவர்தான் உண்மையான குற்றவாளி என இன்னும் நிரூபிக்கப்படவில்லை. எதுவும் திருட்டுபோகவில்லை பழைய பகை சம்பவத்துக்கு காரணம், இல்லை, பணம் நகைக்காக நடந்தது என்கிறது செய்திகள். அவர்கள் ஒரு முடிவுக்கு வரட்டும். அங்க ஒருத்தர் ஏன் அவசரப்படுகிறார்? போலீசாரை அறிவுறுத்துகிறார் என்பதே எனது சந்தேகமும் கேள்வியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5 வயோதிபர்கள் படுகொலை – சந்தேகநபர் கைது!

நெடுந்தீவில் ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய 51 வயதான ஒருவரென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நெடுந்தீவு – மாவலி இறங்கு துறையில் உள்ள கடற்படை முகாமுக்கு அருகில் குறித்த வீட்டில் வசித்துவந்த வயோதிபப் பெண், நெடுந்தீவுக்கு வருவோருக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதை தொழிலாக செய்து வந்துள்ளார். இந்தநிலையில், நெடுந்தீவில் உள்ள ஆலய மகா கும்பாபிஷேகத்திற்கு யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு மற்றும் புலம்பெயர் நாடொன்றில் இருந்து வந்திருந்த ஐந்து வயோதிபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை நெடுந்தீவு சென்று இறங்குதுறைக்கு அருகில் குறித்த வயோதிபப் பெண்ணின் வீட்டில் தங்கியுள்ளனர்.
அவ்வாறே, தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபரும், கடந்த 19 ஆம் திகதி குறித்த வீட்டுக்குச் சென்று தங்கியிருந்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவ தினமான நேற்று அதிகாலை 5 – 6 மணிக்கு இடைப்பட்ட வேளையில், சந்தேகநபர் குறித்த 5 பேரையும் கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளார். பின்னர், அவர்களிடமிருந்து பெருந்தொகையான தங்க ஆபரணங்களையும் அபகரித்து, குறிக்கட்டுவான் பிரதேசத்துக்கு தப்பிச்சென்றுள்ளார் என்றும் புங்குடுதீவு பகுதியில் மறைந்திருந்தபோது அவர் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அத்துடன், குறித்த வீட்டில் இருந்த வளர்ப்பு நாயும் கழுத்தில் வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது. கொலையான ஒருவரின் அடையாள அட்டை வீட்டின் வெளியே காணிக்குள் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன் , திறப்பு ஒன்றும் வெளியில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. கொலையானவர்கள் எவரும் உறக்கத்தில் கொல்லப்படவில்லை என்றும் இருவரின் சடலங்கள் வீட்டின் வெளியே காணப்பட்டதுடன், அவர்கள் தப்பியோட முற்பட்ட வேளையில் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்தநிலையில், கொலை நடந்த வீட்டுக்கு, வழமையாக வந்துசெல்லும், பணிப்பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபரிடமிருந்து, கொள்ளையிடப்பட்டதாகக் கருதப்படும் தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பல பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சந்தேகநபரை இன்று (23) ஊர்காவற்துறை நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

https://thinakkural.lk/article/250366

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

அங்க ஒருத்தர் ஏன் அவசரப்படுகிறார்? போலீசாரை அறிவுறுத்துகிறார் என்பதே எனது சந்தேகமும் கேள்வியும்.

பொதுமக்கள் பதற்றப்படக்கூடாது என்பதும் குற்றவாளி வெளியில் இருந்தால் இன்னமும் கொலைகளைச் செய்யக்கூடும் என்பதும் அவசரத்திற்குக் காரணமாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கிருபன் said:

பொதுமக்கள் பதற்றப்படக்கூடாது என்பதும் குற்றவாளி வெளியில் இருந்தால் இன்னமும் கொலைகளைச் செய்யக்கூடும் என்பதும் அவசரத்திற்குக் காரணமாக இருக்கலாம்.

சரியாகச்சொன்னீர்கள்! அவர் பொதுமக்கள் மேல் மிகுந்த அக்கறையுள்ளவர், கடந்தகாலங்களில் மக்களை பாதுகாப்பதில் மிகுந்த சிரத்தை எடுத்து உழைத்தவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எல்லாம் வடக்கில் என்ன கொலை நடந்தாலும்.. புலம்பெயந்தவர்களை கோர்த்து விடுவது பாசனாகி விட்டது. ஏனெனில் சிங்களப் பொலிஸாரின் பொதுவான மனநிலை என்பது வெளிநாட்டுக் காசு தான் குற்றங்களுக்கு காரணம் என்பது.

மேலும் இந்தச் சம்பவத்தில் கைதானவர் சந்தேக நபர் தான். அவர் ஜேர்மனியில் இருந்து அனுப்பப்பட்டிருந்தால்.. அதற்குப் பின்னால் அவர் முன்னர் எந்தக் கூலிப்படையில் இருந்தவர்.. இப்போ அவருக்குள்ள தொடர்புகள்.. அதில் சிங்களப் படைகளுடனான தொடர்புகள்..குறிப்பாக கடற்படையுடனான தொடர்புகள்.. (குற்றத்தை செய்துவிட்டு.. ஒருவர் படகில் நெடுந்தீவில் இருந்து புங்குடுதீவு போகும் வரை சொறீலங்கா கடற்படை என்ன நித்திரையா செய்தது.. நம்ப முடியவில்லையே...) அவர் மீதான குற்றங்கள் என்ன.. அவர் ஜேர்மனியில் இருந்து திருப்பி அனுப்பப்படக் காரணம் என்ன உள்ளிட்ட பல கேள்விகள் தொக்கு நிற்க..

சிங்களப் பொலிஸ் சொல்வதெல்லாம்.. சோடிப்பதெல்லாம்.. உண்மை என்று சொல்ல முடியாது. எனவே சாத்தியமான அளவுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். குற்றங்கள் நடக்க முதல் இயன்ற அளவு தடுக்கப்பட வேண்டும். ஏனெனில்.. ஒருவர் உயிரிழந்தால்.. அவரை உயிர் மீட்டு.. நீதி வழங்க முடியாது. எனவே குற்றவாளிகள் இனங்காணப்பட்டால்.. அவர்கள் தொடர்ந்து குற்றம் செய்யா வண்ணம் தொடர் கண்காணிக்கப்படனும் இல்லை என்றால்.. குற்றத்துக்கு தண்டனையாக சிறையில்.. நன்நடத்தைக்கு உட்படுத்தப்பட வேண்டும். 

மேலும்.. பகை என்று பார்த்தாலும்.. 5 பேர் மேல் ஒரு பகை.. நாய் மீது பகை என்றெல்லாம் அமைய முடியாது. முன்னர் தனிப்பட்ட பகை என்ற கோணத்தில் வந்த செய்தி.. இப்போ.. கொள்ளைக்கான கொலை என்ற கோணத்தில் போகுது.

இப்படித்தான்.. புங்குடுதீவு மாணவியையும் கொலை செய்தவர்கள் இருக்க.. கொலை செய்ய தூண்டியவர்களை சிங்களப் பொலிஸும்.. அரசியல்வாதிகளும் காப்பாற்றியமை அறிந்ததே. 

இதில் டக்ளஸ் மக்கள் அக்கறையில் கருத்துச் சொன்னாரா.. இல்லை உண்மையான குற்றவாளிகளை காப்பாற்றக் கருத்துச் சொன்னாரா என்பதுதான் முக்கிய விடயம். ஏனெனில்.. இவர் மீதே பகிரங்க கொலை குற்றச்சாட்டு உள்ளது. அதன் வழக்கில் இருந்து ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகுந்த சிரமப்பட்டு கைய்யும் மெய்யுமாக பிடித்துக்கொடுத்த நாங்களே அமைதியாக இருக்குறம் . கண்டவன் கிண்டவனெல்லாம் அதுவும் சில ஈபிடிபிகாரனுகள் படுற பாடு . 

 

நெடுந்தீவில் படுகொலை செய்யப்பட்டவர்கள் நீண்டகாலமாகவே எம்மோடு பழகியவர்கள் மாத்திரமன்றி எமது உறவினர்களும் ஆவர் . மேற்படி படுகொலை நடைபெற்ற வீட்டின் அருகில் கடற்படையின் பிரதான முகாம் காணப்படுகின்ற அதேவேளையில் அப்பகுதி ஓர் உயர் பாதுகாப்பு வலயமாகவும் காணப்படுகின்றது . ஆகவே பொதுமக்களை பாதுகாக்கமுடியாத , பொதுமக்களுக்கு இன்னல் விளைவிக்கின்ற வகையில் காணப்படுகின்ற அந்த முகாம் தேவைதானா எனும் கருத்தின் அடிப்படையிலும் இப்படுகொலைகள் குறித்த விசாரணைகள் நேர்மையாக துரிதகதியில் இடம்பெறவேண்டுமென்றும் நேற்றைய தினம் எமது அறிக்கைகள் வெளிவந்திருந்தன . ஆனால் இவ்வறிக்கைகள் கடற்படையினர் மீது குற்றம் சுமத்தி கொலைகாரரை காப்பாற்றுவதற்கான அறிக்கைகள் போன்று அமைந்திருப்பதாக இன்றைய தினம் பேரினவாதிகளின் கைக்கூலிகளான ஈபிடிபி கும்பலின் கருத்துகள் வெளிப்படுகின்றன . 

 

இந்த ச. ரகுநாதன் எனும் நபர் இணையத்தளங்களில் குறிப்பிடப்படுவது போன்று கனடா நாட்டின் குடியுரிமை பெற்றவரல்ல . இவரது தகப்பனார் புங்குடுதீவு குறிகாட்டுவானை சேர்ந்தவர் , தாயார் குருநாகல் மாவட்டத்தினை சேர்ந்தவர் . 1990 க்கு முன்பே இவர் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்துசென்றுவிட்டார் . அங்கு வெள்ளையின பெண்மணியை ( அவர் ஓர் மருத்துவர் என்று கூறப்படுகின்றது ) திருமணம் செய்திருந்தபோதிலும் தகராறுகள் காரணமாக குடும்பத்தினை பிரிந்து வாழ்ந்திருக்கிறார் . பின்னர் 2018 ம் ஆண்டளவில் நாடுகடத்தப்பட்டிருந்தார் . இவரது தாயாரின் மரண இறுதிச்சடங்கு புங்குடுதீவில் நடைபெற்றிருந்தது . அப்போது எடுக்கப்பட்ட படங்கள் ஒரு முகநூலில் பதிவிடப்பட்டிருந்தது. அதனை பெற்றுக்கொண்ட நான் நெடுந்தீவு பொலிஸ் தரப்பினருக்கு அனுப்பியிருந்தேன் . அவர்களும் இவரையே தாங்கள் சந்தேகிப்பதாகவும் எனக்கு உறுதிப்படுத்தியிருந்தனர் .ஆனாலும் இந்நபரை கைதுசெய்வதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கவில்லை . அதன்பின்னர் உயர்மட்ட பொலிசாருக்கு நான் தகவல் வழங்கியிருந்தேன் . இவர் காலையிலேயே புங்குடுதீவு வந்து ஒன்றுமே நடவாதது போன்று சாதாரணமாக இருந்திருக்கிறார் . பின்னர் இரவு 7 . 30 மணியளவில் புங்குடுதீவு பெருங்காட்டிலுள்ள ஒரு வீட்டில் இவர் தங்கிநிற்பதை உறுதிப்படுத்திக்கொண்ட நாங்கள் அவ்வீட்டினை சுற்றிவளைத்ததோடு பொலிசாரை அங்குவரவழைத்திருந்தோம் . உண்மையில் அந்த வீட்டின் உரிமையாளருக்கும் ( முதியவர் ) நெடுந்தீவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக எதுவும் தெரிந்திருக்கவில்லை . அந்த வீட்டுக்காரர் இந்த ரகுநாதனுக்கு நெருங்கிய உறவினருமல்ல . இவரது நெருங்கிய உறவினர்கள் , சகோதரர்கள் இவரோடு பெரிதாக தொடர்பு வைத்துக்கொள்வதில்லை . கடந்த நான்கு ஆண்டுகளாக இவர் புங்குடுதீவிலும் இல்லை . 

 

இவரது நெருங்கிய உறவினர் சிறீரெலோ எனும் அரச ஆதரவு கட்சியின் முக்கிய தலைவர் ஆவார் . அவருடனேயே கொழும்பிலும் , வவுனியாவிலும் வசித்துவந்ததாக இந்த நபர் எம்மிடம் நேற்று கூறியிருந்தார். கடந்த மாதமே இவர் புங்குடுதீவுக்கு வந்து சிலநாட்கள் நின்றுவிட்டு நெடுந்தீவிலேயே படுகொலை சம்பவம் நடைபெற்ற தருணம் வரைக்கும் தங்கியிருந்துள்ளார் . ஆகவே சமூக வலைத்தளங்கள் , இணையத்தளங்கள் சரியான முறையில் தகவல்கள், ஆதாரங்களை பெற்று செய்திகளை வெளியிடுவதே அனைவருக்கும் நல்லது

https://www.facebook.com/100001390380135/posts/pfbid02bGepiqeQCG7Jf4cxbsnpF6PQ1gu7bZbAydgmW4HYKuvVv9GTj5WtLVKoQ8vnfmYHl/

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சமூக குற்றம் இடம்பெறும்போது அவசரப்பட்டு வெறும் ஊகங்களின் அடிப்படையில் நாமே அடுத்தவர்கள் மீது பழிபோடுவது உண்மையான குற்றவாளிகளை நாமே காப்பாற்ற உதவுவது போலாகும்.

சமூக ஊடகங்களிலும் கருத்து பரிமாற்றங்களிலும் இவ்வகையான ஊகங்கள் பலதடவை இவ்வாறு நடந்திருக்கிறது

ஆதாரங்களே இல்லாமல் அவர்தான் செய்திருக்கவேண்டும், இவர்தான் செய்திருக்கவேண்டும் என்று சொல்லிபோக குற்றங்களே புரியாத அளவிற்கு எம் இனம் யோக்கியமா என்ன?

இது கும்பல் கும்பலாய் பலபேரை படுகொலை செய்துவிட்டு இஸ்ரேல் அமெரிக்க சதி என்று அடுத்தவர்மேல் பழிபோடும் மத பயங்கரவாதிகளின் செயலை ஒத்தது.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொலையாளி என சந்தேகிக்கப் படுபவரின் படம் முகநூலில் உள்ளது.
அவர்தான்... கொலையாளி என்று, இன்னும் உறுதி செய்யப் படாததால்... 
யாழில் இணைக்கவில்லை.

Link to comment
Share on other sites

நெடுந்தீவை உலுக்கிய கொடூர கொலை! குற்றவாளி வழங்கிய வாக்குமூலம்

 

நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாக கொலை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டவர் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, “குறித்த வயோதிபர்களின் வீட்டில் தங்கியிருந்தேன். எனக்கு பணம் தேவை என்பதனால் அவர்கள் அணிந்திருந்த நகைளை அபகரிக்க முடிவெடுத்தேன். தனியாக நகைகளை கொள்ளையிட்டால் பிடித்துவிடுவார்கள் என நினைத்து, சம்பவத்தை திசை திருப்பவே அனைவரையும் கொலை செய்தேன்.

 

நான் நெடுந்தீவு வந்தால் குறித்த வயோதிபர்களின் வீட்டில்தான் தங்கிச் செல்வேன். அதுபோன்று கடந்த சில தினங்களுக்கு முன் வந்து தங்கியிருந்தேன். அங்கு வெளிநாட்டிலிருந்து வந்திருந்தவர்கள் நகைகள் அணிந்திருந்தனர்.

பொலிஸ் குழுவினர் துரித விசாரணை

நெடுந்தீவை உலுக்கிய கொடூர கொலை! குற்றவாளி வழங்கிய வாக்குமூலம் (video) | Man Murdered Five Elderly People In Was Arrested  

அனைவரது நகைகளையும் அபகரித்து விற்பனை செய்து வரும் பணத்தில் கடவுச்சீட்டு பெற்று நான் மீளவும் ஜேர்மனிக்கு செல்ல திட்டமிட்டேன். அதனால் நேற்று அதிகாலை 4.30 பின்னர் நித்திரையிலிருந்த அனைவரையும் கொலை செய்துவிட்டு நகைகளை எடுத்துக்கொண்டு தப்பிக்க எண்ணினேன்.”என்று கைது செய்யப்பட்டவர் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.  

இதேவேளை சந்தேகநபரிடமிருந்து 26 பவுண் தங்க நகைகள், ஆடைகள் மற்றும் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

நெடுந்தீவை உலுக்கிய கொடூர கொலை! குற்றவாளி வழங்கிய வாக்குமூலம் (video) | Man Murdered Five Elderly People In Was Arrested

 

நேற்றையதினம்(22.04.2023) நெடுந்தீவு மாவிலி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் கடற்படை முகாமிற்கு அண்மையிலுள்ள வீடொன்றில் இருந்து வெட்டுக்காயங்களுடன் ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டன.

மேலும் 100 வயது மூதாட்டி ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுல செனரத்தின் கட்டளையில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் விஷாந்தின் வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் துரித விசாரணைகளை முன்னெடுத்தனர்.

 

நெடுந்தீவை உலுக்கிய கொடூர கொலை! குற்றவாளி வழங்கிய வாக்குமூலம் (video) | Man Murdered Five Elderly People In Was Arrested

பொலிஸ் குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நெடுந்தீவில் நடமாடிவிட்டு நேற்றுக் காலை அங்கிருந்து வெளியேறிச் சென்ற நபரை புங்குடுதீவில் வைத்து நேற்றிரவு கைது செய்தனர்.

குற்றவாளி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர்

 

ஜேர்மனியில் கொலை முயற்சி வழக்கொன்றில் குற்றவாளியாகக் கண்டறிந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு 51 வயது நபரே கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து அதிகளவு தங்கநகைகள் கைப்பற்றப்பட்டன. அதுதொடர்பில் விசாரணை மேற்கொண்ட போதே சந்தேகநபர் தானே கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

நெடுந்தீவை உலுக்கிய கொடூர கொலை! குற்றவாளி வழங்கிய வாக்குமூலம் (video) | Man Murdered Five Elderly People In Was Arrested

இதனை தொடர்ந்து சந்தேகநபரை நெடுந்தீவுக்கு அழைத்துச் சென்று ஏனைய சான்றுப்பொருள்களை மீட்கும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். சந்தேக நபர் இன்று மாலை ஊர்காவற்றுறை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளார்.

https://tamilwin.com/article/man-murdered-five-elderly-people-in-was-arrested-1682233632

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, valavan said:

ஒரு சமூக குற்றம் இடம்பெறும்போது அவசரப்பட்டு வெறும் ஊகங்களின் அடிப்படையில் நாமே அடுத்தவர்கள் மீது பழிபோடுவது உண்மையான குற்றவாளிகளை நாமே காப்பாற்ற உதவுவது போலாகும்.

சமூக ஊடகங்களிலும் கருத்து பரிமாற்றங்களிலும் இவ்வகையான ஊகங்கள் பலதடவை இவ்வாறு நடந்திருக்கிறது

ஆதாரங்களே இல்லாமல் அவர்தான் செய்திருக்கவேண்டும், இவர்தான் செய்திருக்கவேண்டும் என்று சொல்லிபோக குற்றங்களே புரியாத அளவிற்கு எம் இனம் யோக்கியமா என்ன?

இது கும்பல் கும்பலாய் பலபேரை படுகொலை செய்துவிட்டு இஸ்ரேல் அமெரிக்க சதி என்று அடுத்தவர்மேல் பழிபோடும் மத பயங்கரவாதிகளின் செயலை ஒத்தது.

 

உண்மைதான். குறிப்பாக எமது சமூகத்தில் ஊகங்கள் ரீதியான குழப்பங்கள் இன்னும் அதிகளவே காணப்படும். எல்லோரையுமே சந்தேககண்களுடன் பார்க்கவேண்டிய நிலை. தவிர, வெவ்வேறு கால சூழ்நிலைகளில் வெவ்வேறு தரப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்தும்போது அதிகளவு உணர்ச்சிவசப்படவே செய்வார்கள். அத்துடன் நடுநிலமையுடன் ஒரு விடயத்தை அணுகக்கூடிய மனநிலையும் காணப்படுவது கடினம். 

1 hour ago, nunavilan said:

இதேவேளை சந்தேகநபரிடமிருந்து 26 பவுண் தங்க நகைகள், ஆடைகள் மற்றும் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

ஒரு பவுண் கிட்டத்தட்ட 160,000 ரூபா என்று கணக்கு வைத்தால் 26 பவுண்கள் கிட்டத்தட்ட 41 இலட்சம் ரூபாய்கள். இப்போது பிரான்ஸ்/யூரோ பக்கம் 75 இலட்சம் போகுதாம் ஏஜென்சி மூலம். இவருக்கு வெளிநாடு மிகுதி பணத்திற்கு இன்னும் மூன்று பேரை கொலை செய்யவேண்டுமோ வெளிநாடு செல்வதற்கு?

பல சமூக விரோத செயல்களுக்கு வெளிநாட்டு செல்வாக்கு பல விதங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

 

 

நிலோஷனுக்கு வயசு போட்டுது. முதலில் 5 பேர் கொலை என்கிறார்.. பின்னர் கொல்லப்பட்ட அறுவருமே.. என்கிறார்.. அது கிடக்க..

இவரின் கருத்துப்படி.. நீண்ட குடும்பப் பகை என்கிறார்...

சொறீலங்கா பொலிஸ் ஜேர்மனிக்குப் போக பணத்துக்கு கொலை என்கிறது..

பணத்தை கொள்ளையிட்டால்.. பொலிஸ் பிடிக்கும் என்று பயந்தாராம்.. ஆனால் கொலை செய்தால் பிடிக்காது.. என்று நம்பினாராம்...

அதுபோக கொலை செய்தவர்.. எப்படி சொறீலங்கா கடற்படைக் கண்காணிப்பை தாண்டி படகில் புங்குடுதீவுக்கு போனார்.. அதுவும் அந்த அதிகாலை வேளை..????!

ஆக.. இந்த நபர் சொறீலங்கா கடற்படைக்கு பரீட்சயமான ஆளாக இருக்க வேண்டும் அல்லது கடற்படையின் தேவைக்காக..இந்தக் கொலையில் இவர் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்..??! இன்றேல்.. கடற்படை எப்படி ஒத்துழைப்பு வழங்கும்...??!

ஒருவேளை கடற்படைக்கு இந்த முதியவர்களின் வீடு பிரதேசம்.. முகாம் விரிவாக்கத்திற்கு அவசியமோ.. அல்லது கடற்படை.. ஈபிடிபி கூட்டிணைந்து இந்தப் பகுதியை கைப்பற்றி தாம்.. ஆதாயம் தேட விளைச்சவையோ..??!

ஏனெனில்.. பணத்துக்காக கொலை செய்தேன் அதுவும் பொலிஸ் பிடிக்காது என்று நம்பினேன் என்பது ஒரு ஏற்றுக்கொள்ளக் கூடிய வாதமே அல்ல. கொள்ளையை  விட கொலை பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஜேர்மனியில் இருந்து வந்தவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதும் நம்பத்தகுந்ததாக இல்லையே.

ஆக.. இந்தக் கொலைக்கான பின்னணி வேறு. ஒருவேளை இந்த நபர் 3ம் நபர்களுக்காக.. அதில் சொறீலங்கா கடற்படை முதன்மையாகிறது.. அவர்களுக்காக அவர்களின் ஒத்துழைப்போடு.. இந்தக் கொலையை அவர்களிடம் இருந்தான உத்தரவாதங்களின் பெயரில் செய்திருக்க வேண்டும். அதில் இவரின் பணத்தேவையும் அவர்களின் தேவையும் சமப்பட்டிருக்க வேண்டும். 

சொறீலங்கா பொலிஸாரின் கதை திரைக்கதை வசனம்.. தமிழக சீரியல் மாதிரி நம்பத்தகுந்ததா இல்லையே...??!

 

Edited by nedukkalapoovan
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுந்தீவில் 5 பேர் படுகொலை : சந்தேக நபரை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி !

23 APR, 2023 | 09:15 PM
image

நெடுந்தீவில் ஐந்து முதியவர்களை படுகொலை செய்து, 100 வயதான வயோதிப பெண்மணிக்கு கடும் காயங்களை விளைவித்து, கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நபரை 48 மணிநேர பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்துறை நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது.

 

நெடுந்தீவில் ஐவர் படுகொலை செய்ப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த வீட்டில் கடந்த இரு தினங்கள் தங்கியிருந்த 51 வயதான நபர் கைது செய்யப்பட்டார்.

 

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கொலையானவர்களின் நகைகள், கையடக்க தொலைபேசிகள் என உடமைகள் சில மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

அந்நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் சந்தேக நபரை முற்படுத்திய பொலிஸார் 48 மணித்தியாலத்திற்கு தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி கோரினார்.

 

அதனை ஏற்றுக்கொண்ட மன்று, 48 மணிநேர விசாரணையின் பின் மன்றில் மீண்டும் சந்தேகநபரை முற்படுத்துமாறு பொலிஸாருக்கு பணித்தது.

https://www.virakesari.lk/article/153564

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலாநிதி ஜெகான் பெரேரா நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஊழலுக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதே ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது. அந்த கட்சி மீது மக்களுக்கு பெரும் கவர்ச்சி ஏற்படுவதற்கும் அதுவே பிரதான காரணமாகவும் இருந்தது. உயர் மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரை தலைவிரித்தாடும் ஊழல் 1970 களின் பிற்பகுதியில்  திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அரசாங்கத்துறையையும் தனியார்துறையையும் தழுவியதாக வழமைானதாக்கப்பட்டுவிட்டது. பாரிய அபிவிருத்தி திட்டங்களும் வெளிநாட்டு உதவிகளும் அதிகாரப் பதவிநிலைகளில் இருந்தவர்கள் ஊழலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்கின. 2022 பொருளாதார வீழ்ச்சியும் அதன் விளைவாக மக்கள் அனுபவிக்கவேண்டி வந்த இடர்பாடுகளும் ஊழலை ஒழிக்கவேண்டும் என்றும் அதில் சம்பந்தப்பட்டவர்களை அகற்றவேண்டும் என்றும் உறுதிப்பாட்டை இறுக்கமாக்கியது. அரசியல் அதிகாரத்தை ஒருபோதும் கொண்டிராத கட்சி என்ற வகையில் தேசிய மக்கள் சக்தியே (முன்னணி கட்சிகள் மத்தியில்) ஊழல் குற்றச்சாட்டில் இருந்து விடுபட்டதாக இருந்தது. ஊழலினாலும் முறைகேடுகளினால் சீரழிந்துகிடக்கும் நாட்டை துப்புரவு செய்ய வேண்டும் என்ற வேட்கை  ஆட்சிமுறை தொடர்பில் மக்களுக்கு இருந்த அக்கறையின் மைய  விவகாரமாக இருந்தது. வேறு எந்த பிரச்சினையினாலும் அதை மறைப்புச் செய்ய முடியவில்லை. இனத்துவ தேசியவாதத்தை கிளறிவிடுவதற்கு சில எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட பிரயத்தனம் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. தேசிய மக்கள் சக்தியை தவிர, தங்கள் மத்தியில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களைக்  கொண்ட எந்தவொரு பிரதான அரசியல் கட்சியினாலும் ஊழல் பிரச்சினையை கையாள்வதற்கான அரசியல் துணிவாற்றல் தங்களுக்கு இருப்பதாக வாக்காளர்களை நம்பச்செய்ய முடியவில்லை. அதனால், அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிப்பது, வாழ்க்கைச் செலவைக் குறைப்பது போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தவறியிருப்பதாக எதாச்க்கட்சிகளினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களோ அல்லது அவற்றின் வாதங்களோ வாக்காள்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.  ஊழலை ஒழிக்க  வேண்டும் என்பதும் ஊழலுக்கு உடந்தையாக இருந்தவர்களை அகற்ற வேண்டும் என்பதுமே வாக்களர்களின் பிரதான அபிலாசையாக இருக்கிறது. முன்னைய அரசாங்கத்தின் இரு முக்கிய உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதை அடுத்து ஊழலையும் அதனுடன் இணைந்த தண்டனையின்மையையும் கையாளுவதில் அரசாங்கம் அக்கறையுடன் இருக்கிறது என்ற திருப்தி தற்போதைக்கு வாக்காளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.  பதிவு செய்யப்படாத ஆடம்பர வாகனம் ஒன்று தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் வன்முறை நடத்தை வரலாற்றைக் கொண்டவர்.  ஆனால், அவர் முன்னர் ஒருபோதும்  கைது செய்யப்பட்டதில்லை. அவரின் குடும்பம் காலத்துவத்துக்கு  முன்னரான  உயர்குடி தொடர்புகளை கொண்டவர் என்பதும் சமூகத்தின் ஒரு பிரிவினரின் வாக்குகளை பெற்றுத்தரக்கூடிய ஆற்றல் கொண்டவர் என்று கருதப்பட்டதாலும்  அவர் கைதுசெய்யப்படால் இருந்திருக்கலாம். ஆனால்,  தற்போதைய அரசாங்கம் அவரையும் பாராளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்ட  முன்னைய அரசாங்கத்தின் இன்னொரு உறுப்பினரையும் பதிவு செய்யப்படாத வாகனங்களை வைத்திருந்த ஒப்பீட்டளவில் சிறிய குற்றச்சாட்டு தொடர்பில்  இப்போது கைது செய்திருக்கிறது. இதை இவர்களின் பல சகாகக்கள் மோசடி செய்ததாக கூறப்படும் கோடிக்கணக்கான பணத்துடன்  ஒப்பிடமுடியாது. ஆனால், இது ஒரு தொடக்கம். பிரதான பிரச்சினை அதனால், பிரதான பிரச்சினையான ஊழலை தாமதமின்றி கையாளத் தொடங்கி முன்னைய அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகளில் சிலருக்கு எதிராக நடவடிக்கையை அரசாங்கம் எடுத்திருப்பதால் அது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உண்மையில் அக்கறையுடன் இருப்பதாக மக்கள் கருதுகிறார்கள். முன்னைய அரசாங்கத்தின் இரு உறுப்பினர்களுக்குைஎதிரான குற்றச்சாட்டுக்களை மறுதலிப்பது கஷ்டம். ஏனைன்றால் சான்றுகள் ( பதிவுசெய்யப்படாத இரு  மோட்டார் வாகனங்கள் ) கைவசம் இருக்கின்றன. கோடிக்கணக்கான பணமோசடி சம்பந்தப்பட்ட சிக்கலான வழக்குகளில் சான்றுகளைப் பெறுவது கஷ்டம். முன்னைய அரசாங்கங்களினால் கடந்த காலத்தில் நீதிமன்றங்களுக்கு கொண்டுவரப்பட்ட ஊழல் வழக்குகளில் பல தடவைகள் இடம்பெற்றதைப் போன்று அந்த சிக்கலான வழக்குகள் நீண்ட சட்ட நடைமுறைகளுக்கு உள்ளாகி இறுதியில் குற்றஞ்சாட்டப்படுபவர்கள் விடுதலையாகி விடவும் கூடும். ஆனால், தற்போதைய வழக்குகள் நேரடியானவை சிக்கலற்றவை என்பதால் அவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் குற்றவாளிகளாகக் காணப்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது. அதன் விளைவாக, இன்றைய தருணத்தில் அரசாங்கத்தின் மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் மக்கள் மத்தியில் எடுபடப் போவதில்லை. குறிப்பாக, முன்னைய அரசாங்கத்தினால் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை  இன்னறய அரசாங்கம் கையாளுகின்ற முறை தொடடர்பான விமர்சனங்களைப் பொறுத்தவரையில் நிலைமை இதுவே. அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிப்பதாகவும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதாகவும் ஜனாதிபதி தேர்தலின்போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பது இன்னொரு விமர்சனம். ஆனால் , தங்களது பொருளாதார இடர்பாடுகள்  சாத்தியமானளவு விரைவாக தணிக்கப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புவார்கள் என்கிற அதேவேளை,  புதிய அரசாங்கம் ஒரு மாத காலத்துக்கு முன்னர்தான் பதவிக்கு வந்தது என்பதையும் குறைந்த முன்னுரிமை கொண்ட துறைகளில் இருந்து உயர்ந்த முன்னுரிமை கொண்ட துறைகளுக்கு வளங்களை  மாற்றிப்பகிர்வதற்கு புதிய வரவு  --  செலவு திட்டம் ஒன்றை  நிறைவேற்ற வேண்டியிருக்கிறது என்பதையும் அவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். வரிக் கட்டமைப்புகளில் மாற்றங்களைச் செய்வதற்கு சட்டங்களில் மாற்றம் செய்யவேண்டும். பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கும் நிலையில் அது இந்த நேரத்தில் சாத்தியமில்லை. அத்துடன்,  ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அதன் போட்டிக் கட்சிகள் வழங்கிய வாக்குறுதிகளின் பினபுலத்தில் நோக்கவேண்டியதும் அவசியமாகும்.  நம்பமுடியாத நிவாரணப் பொதிகள் அவற்றில் அடங்கும். சமூகத்தின் மிகவும் நலிவுற்ற குழுக்களுக்கு மாதாந்தம் நலன்புரி கொடுப்பனவு வழங்குவதாகவும் கடன்நிவாரணத் திட்டங்கள் அறிமுகம், மாற்றுத் திறனாளிகளுக்கும் மிகவும் வறுமைப்பட்டவர்களுக்கு கொடுப்பனவுகள் அதிகரிப்பு, விவசாயிகளுக்கு கடன் ரத்து, வரிக்குறைப்பு,  இலட்சக்ணக்கில் தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல், சகல தரப்பினருக்கும் சம்பள அதிகரிப்பு, பெருமளவு வெளிநாட்டு முலீடுகளைப் பெறுதல் அல்லது குறுகிய கால வரையறைக்குள் கடன் நிவாரணங்களைப் பெறுதல் என்று பெருவாரியான வாக்குறுதிகளை அந்த கட்சிகள் வழங்கின. கடனை திருப்பிச் செலுத்துவதில் இலங்கையின் ஆற்றல் குறித்த தற்போதைய மதிப்பீடு மற்றும் சர்வதேச உறவுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது இந்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றுவது சாத்தியமில்லை. அதனால் அரசாங்கம் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது பாசாங்கத்தனமானதாகும். சாத்தியமான பங்காளிகள் அறகலய போராட்ட இயக்கத்தினால் " முறைமை மாற்றம் " என்று சுருங்கச் சொல்லப்பட்ட ஊழல் நிறைந்த ஆட்சி முறையை முற்று முழுவதுமாக மாற்றவேண்டும் என்ற மக்களின் வேட்கை பாராளுமன்ற தேர்தலிலும் மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கக்கூடிய பிரசாரத் தொனிப்பொருளாக தொடர்ந்து விளங்கப்போகிறது. ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்காளிக்காதவர்களும் கூட ஊழலற்ற ஆட்சிமுறையை விரும்புவதால் இந்த தடவை அந்த கட்சிக்கு வாக்களிக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது. மறுபுறத்தில், கடந்த மாதம் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் கண்டதைப் போன்று மக்கள் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்களுக்கு அல்லது தங்களுக்கு உதவியவர்களுக்கு உணர்ச்சிபூர்வமாக வாக்களிக்கவும் நாட்டம் காட்டலாம்.  அது உள்ளூர் மட்டத்தில் சலுகைகளைச் செய்திருக்கக்கூடிய முன்னைய அரசாங்க உறுப்பினர்களுக்கு அனுகூலமாக அமையும். எல்பிட்டிய பிரதேச சபையில்  47 சதவீதமான வாக்குகளைக்  கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி அரைவாசி ஆசனங்களைப் பெற்றது. ஆனால், கூடுதல் சதவீதமான வாக்குகளை ஏனைய கட்சிகளே பெற்றன. நாட்டில் இன, மத சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளில் காணப்படும் நிலைவரங்களும்  தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை ஆசனங்களை பெறுவதை சிக்கலாக்கும். தேசிய மக்கள் சக்தி முன்னர் பெரும்பான்மையினச் சமூகத்தின் மீதே பிரதானமாகக் கவனத்தைக் குவித்தது.  அதன் உயர்மட்டத் தலைவர்களும் அந்த இன, மதப் பின்னணியில் இருந்து வந்தவர்களே. அதனால் இன, மத சிறுபான்மைச் சமூகங்ளைப் பொறுத்தரை, தங்கள் மத்தியில் வேலை செய்யாத ஒரு தேசியக் கட்சியை விடவும் தங்களது பிரிவுசார்ந்த நலன்களுக்காக குரல் கொடுக்கின்ற கட்சிகளுக்கே வாக்களிப்பதில் இயல்பாகவே நாட்டம் காட்டுவார்கள். ஆனால், சிறுபான்மைச் சமூகங்கள் தங்களது சொந்த அரசியல் தலைவர்கள் மீதும் விரக்தியடைந்திருக்கின்ன. குறிப்பாக அந்த சமூகங்களின் இளம்  தலைமுறையினர் பிரிந்து வாழ்வதை விடவும் பிரதான சமூகத்துடனும் தேசிய பொருளாதாரத்துடனும் இணைந்து வாழ்வதில் முன்னரை விடவும் இப்போது கூடுதல் அக்கறை காட்டுகிறார்கள். அரசாங்கம் தானாகவே அரசியலமைப்புக்கு திருத்தங்களைச் செய்யும் செயன்முறைகளில் ஈடுபடுவதற்கு வசதியாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களை பாராளுமன்றத்தில் கைப்பற்றுவது சாத்தியமில்லை என்பதே  இந்த ஆய்வில் இருந்து பெறக்கூடிய முடிவாகும். அதற்கு சாதாரண பெரும்பான்மை ஒன்று கிடைக்கலாம். ஆனால் அதுவும் நிச்சயமானதல்ல. அதனால் பாராளுமன்றத்துக்கு தெரிவாகக்கூடிய கூட்டாகச் செயற்பட்டு சட்டங்களையும் அரசியலமைப்புத் திருத்தங்களையும் நிறைவேற்ற வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்படுமானால் அதுவே நாட்டுக்கு  நல்ல வாய்ப்பாக அமையும். அதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணசிக்க பிரேமதாச கூறியதைப் போன்று எதிர்க்கட்சிகளுடன்  கலந்தாலோசனை, விட்டுக்கொடுப்பு, கருத்தொருமிப்பு அவசியமாகும். ஊழலும் தண்டனையின்மையும் கோலோச்சிய கடந்த காலத்தைப் போலன்றி ஊழலை முடிவு கட்டுவதற்கு தேவையான சடடங்களைக் கொண்டு வருவதற்கு அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவது எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை ஒரு அமிலப் பரீட்சையாகும். தேசிய மக்கள் சக்தி அதன் பங்காளிகளாக வரக்கூடியவர்களை  இன, மத சிறுபான்மை கட்சிகளில் தேடிக் கொள்ளக்கூடியது சாத்தியம். https://www.virakesari.lk/article/198148
    • பட மூலாதாரம்,@PKSEKARBABU படக்குறிப்பு, சென்னையில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் நடைபெற்ற பள்ளி, கல்லூரி மாணவிகள் கந்த சஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை நடத்தும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் உள்ள மாணவிகளை வைத்து கோவில்களில் கந்த சஷ்டி பாராயணம் செய்ய வைக்கும் நிகழ்ச்சிகளுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளே இதற்கு கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. நவம்பர் இரண்டாம் தேதியன்று சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவிகள் கந்த சஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பள்ளி மாணவிகள் 69 பேர், கபாலீஸ்வரர் கோவில் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் 51 பேர் என மொத்தம் 120 பேர் இதில் பங்கேற்று கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தனர்.   'விருப்பத்தின் பேரில் கந்த சஷ்டி பாராயணம் பாட அனுமதி' பட மூலாதாரம்,@PKSEKARBABU படக்குறிப்பு, இந்நிகழ்வில் 120 பேர் பங்கேற்று கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தனர் அந்தத் தருணத்தில் இதுகுறித்து பேட்டியளித்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, "இந்து சமய அறநிலையத் துறை சார்பில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இசைக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளை மட்டுமே அவர்கள் விருப்பத்தின் பேரில் கந்த சஷ்டி பாராயணம் பாட அனுமதிக்கிறோம்" என்று தெரிவித்தார். 738 மாணவ, மாணவிகளுக்கு கந்த சஷ்டி பாராயணம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதுபோல 12 கோவில்களில் மாணவ, மாணவிகள் பங்கேற்று பாட உள்ளதாகவும் அவர் கூறினார். எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டிருந்த இந்த கந்த சஷ்டி பாராயண நிகழ்வின் வீடியோவை மேற்கோள்காட்டி, ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், பாராட்டும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டார். ஆனால், விரைவிலேயே தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் இயக்கங்களிலிருந்து கண்டனக் குரல்கள் எழுந்தன. நவம்பர் ஐந்தாம் தேதி வெளியான திராவிடர் கழகத்தின் அதிகாரபூர்வ இதழான விடுதலையின் முதல் பக்கத்திலேயே இதனைக் கண்டித்து செய்தி வெளியானது. "தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தென்மாவட்டத்தில் நடத்தப்படும் கல்லூரியிலிருந்து கந்த சஷ்டி கவசம் பாட முருகன் கோயிலுக்கு மாணவர்/மாணவிகளை அனுப்ப வேண்டும் என்று துறையின் அதிகாரிகள் கட்டாயப்படுத்தப்படுவதாக ஒரு செய்தி வருகிறது. கல்லூரி நடத்தப்படுவது எந்தத் துறையால் என்றாலும், மாணவர்கள் வந்திருப்பது கல்வி கற்கத் தானே ஒழிய, பஜனை செய்ய அல்ல. திராவிட மாடல் அரசின் கொள்கை செயல் திட்டங்களுக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது யார் என்ற கேள்வி எழவில்லையா?" என அந்நாளிதழ் கேள்வி எழுப்பியிருந்தது. பட மூலாதாரம்,@PKSEKARBABU படக்குறிப்பு, 'மாணவ, மாணவிகளை மட்டுமே அவர்கள் விருப்பத்தின் பேரில் கந்த சஷ்டி பாராயணம் பாட அனுமதிக்கிறோம்' என்று தெரிவித்தார் அமைச்சர் சேகர் பாபு ‘திமுக அரசின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணானது’ அதேபோல, மே 17 இயக்கமும் இதனைக் கண்டித்து எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டது. "கந்த சஷ்டி பாராயணம் என்ற தொடர் ஆன்மீக நிகழ்வை முன்னெடுப்பதும், அதில் பள்ளி, கல்லூரி மாணவர்களை பங்கேற்க வைப்பதும், திராவிடத்தின் வழிவந்த - 'திராவிட மாடல்' ஆட்சியை நடத்திக்கொண்டிருப்பதாக சொல்லிக்கொள்ளும் திமுக அரசின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணானதாகும்.” “மதச்சார்பின்மையை கடைபிடிக்க வேண்டிய தமிழ்நாடு அரசு ஒரு குறிப்பிட்ட மதத்தை வளர்த்தெடுக்கும் வகையில் செயல்படுவது ஏற்புடையதல்ல" என அந்த இயக்கத்தின் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.   திமுகவின் தோழமைக் கட்சிகள் எதிர்ப்பு Twitter பதிவை கடந்து செல்ல, 1 எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 1 விரைவிலேயே தோழமைக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இதனை எதிர்க்க ஆரம்பித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரான து. ரவிக்குமார் இதனைக் கண்டித்து எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். "தமிழ்நாட்டில் அதிக அளவில் பெண்கள் கல்லூரிக்குப் போக வேண்டும் என்பதற்காக ‘புதுமைப் பெண்’ திட்டத்தைச் செயல்படுத்துகிறார் முதலமைச்சர். அவரது நல்ல நோக்கத்துக்கு மாறாக பள்ளி மாணவிகளைப் பாராயணம் பாடச் சொல்லி ‘பழமைப் பெண்’ திட்டத்தைச் செயல்படுத்துகிறார் மாண்புமிகு அமைச்சர் சேகர் பாபு.” “கல்வியின் மதச்சார்பற்ற தன்மையைக் காப்பாற்ற வேண்டுமென்றால் ‘அறநிலையத்துறை நடத்தும் கல்வி நிறுவனங்களைப் பள்ளி, கல்லூரித் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று கேட்பது தவிர வேறு வழியில்லை" என அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், "அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பீர்களா அல்லது பாராயணம் பாடச் சொல்லி கோவிலுக்கு அனுப்புவீர்களா?" எனக் கேள்வி எழுப்பினார். Twitter பதிவை கடந்து செல்ல, 2 எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 2 இதற்கிடையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாணவர் அமைப்பான தமிழ்நாடு மாணவர் கழகத்தினர் சென்னை ராயப்பட்டையில் உள்ள பெரியார் படிப்பகம் முன்பாகத் திரண்டு, அமைச்சர் சேகர் பாபுவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஊர்வலமாகச் செல்ல முயன்ற அவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர். இப்படி எதிர்ப்புகள் வந்தபோதும், சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவின் ஒரு பகுதியாக, நவம்பர் ஆறாம் தேதி மாணவியரை வைத்து கந்த சஷ்டி பாராயணம் நடைபெற்றிருக்கிறது. வட பழனியில் நடந்த நிகழ்வில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பள்ளி மாணவிகள் 69 பேர், கபாலீஸ்வரர் கோவில் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் 50 பேர் என மொத்தம் 119 பேர் பங்கேற்று கந்த சஷ்டி கவசம் பாராயணம் பாடினர்.   பட மூலாதாரம்,@DRAVIDARKAZAGAM படக்குறிப்பு, சேகர் பாபுவைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாணவர் அமைப்பான தமிழ்நாடு மாணவர் கழகம் நடத்திய போராட்டம் அனைத்துலக முருகன் மாநாடும் விமர்சனங்களும் தி.மு.க. அரசு 2021இல் பதவியேற்ற பிறகு, இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சராக பி.கே. சேகர் பாபு பொறுப்பேற்றார். இதற்குப் பிறகு, இந்து சமய அறநிலையத் துறையின் பணிகள் வேகமெடுத்தன. வெகு சீக்கிரத்திலேயே அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சிலரை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நியமனம் செய்தார். மேலும், நூற்றுக்கணக்கான கோவில்களுக்குக் குடமுழுக்கு செய்வது, ஆன்மீக நூல்களை வெளியிடுவது என விறுவிறுப்பாகச் செயல்பட்டார் சேகர் பாபு. ஆனால், விரைவிலேயே இவரது நடவடிக்கைகள் மீது விமர்சனங்களும் எழுந்தன. குறிப்பாக, அனைத்துலகமுருகன் மாநாடு நடத்த முடிவுசெய்தபோது பெரும் விமர்சனங்கள் எழுந்தன. அந்த மாநாட்டிற்கு தி.மு.கவை கடுமையாக விமர்சனம் செய்துவரும் இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத்தை அழைத்ததும், அதில் நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்களும் பெரும் எதிர்ப்பைச் சந்தித்தன. குறிப்பாக, 8வது மற்றும் 12வது தீர்மானங்கள் விமர்சனத்தை எதிர்கொண்டன. எட்டாவது தீர்மானமாக, 'கந்த சஷ்டி விழாக்காலங்களில் அருள்மிகு முருகன் திருக்கோவில்களில் மாணவர், மாணவியரைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.’ என்றும் 12வது தீர்மானமாக ‘முருகப் பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோவில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப் பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்குப் பரிந்துரைக்கலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது’ என்றும் குறிப்பிடப்பட்டது. இதற்குக் கண்டனம் தெரிவித்த திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி, "இந்த இரண்டு தீர்மானங்களையும் எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்? தி.மு.க. அரசின் கொள்கை என்பது மதச் சார்பற்ற தன்மை கொண்டதாயிற்றே! தி.மு.க. அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்குக் கூட மதச்சார்பற்ற கூட்டணி என்றுதானே பெயர் - இதற்குமேல் விளக்கத் தேவையில்லை" என்று குறிப்பிட்டார். தி.மு.கவின் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அந்தத் தருணத்தில் இதற்குக் கண்டனம் தெரிவித்தது. ஆனால், தி.மு.கவின் தரப்பில் இருந்து அப்போது பதில் ஏதும் வரவில்லை. சேகர் பாபு இவற்றையெல்லாம் தானாகச் செய்யவில்லையெனக் கருதுவதாகச் சொல்கிறார் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவரான கொளத்தூர் மணி. "அறநிலையத் துறை நடத்தும் பள்ளிகள், கல்லூரிகள் மீது தனக்கு உரிமை இருப்பதாகக் கருதுகிறார் சேகர் பாபு. அறநிலையத் துறை அரசின் அங்கம். அப்படியிருக்கும் போது சேகர் பாபு தன் விருப்பப்படி எப்படிச் செயல்படுகிறார் என்பது புரியவில்லை. இது மிகவும் கண்டனத்திற்கு உரியது.” என்கிறார் கொளத்தூர் மணி. தொடர்ந்து பேசிய அவர், “அறநிலையத் துறை செய்வது சரியென்றால், பள்ளிகளில் சென்று இதேபோலப் பேசிய மகாவிஷ்ணு மீது வழக்குப் போட்டது ஏன்? இதையெல்லாம் அவர் தானாகச் செய்வதாகத் தோன்றவில்லை" என்று கூறினார்.   அமைச்சர் சேகர்பாபு பதில் என்ன? பட மூலாதாரம்,@PKSEKARBABU படக்குறிப்பு, தி.மு.க. ஆட்சி வந்த பிறகுதான் இப்படி நடப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலளிக்கவில்லை கந்த சஷ்டி பாராயணம் தொடர்பாக எழுந்திருக்கும் எதிர்ப்புகள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் பிபிசி கேட்டபோது, "இதை ஒன்றும் புதிதாகச் செய்யவில்லை. கடந்த ஆண்டும் வடபழனி, கந்தகோட்டம், திருச்செந்தூர் போன்ற இடங்களில் இதேபோன்ற பாராயணம் நடந்தது. இதை ஏன் தேவையில்லாமல் சர்ச்சையாக்குகிறீர்கள்?" என்கிறார் சேகர் பாபு. தி.மு.க. ஆட்சி வந்த பிறகுதான் இப்படி நடப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு அவர் பதிலளிக்கவில்லை. கூட்டணிக் கட்சியினரே இது குறித்து விமர்சிப்பது குறித்துக் கேட்டபோது, "ஆன்மீகம் தொடர்பாக எவ்வளவோ நல்ல விஷயங்களைச் செய்கிறோம். அதில் கவனம் செலுத்துங்கள்" என்று மட்டும் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c1lge5z7415o
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • வெற்றி பெற வாழ்த்துகள் வெற்றி பெற வாழ்த்துகள் இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) வாத்தியார் 2) கந்தையா 57 3) வசி 4) சுவைபிரியன் 5) தமிழ்சிறி 6)கிருபன் 7)alvayan 8 ) சுவி 9) வீரப்பையன் 10)புலவர் 11) அகஸ்தியன் 12) ஈழப்பிரியன் 13) புரட்சிகர தமிழ் தேசியன் 14)goshan_che 15) நுணாவிலான் 16)வில்லவன்
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப், கடந்த ஏப்ரல் மாதம் தனக்கு எதிரான முதல் குற்றவியல் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜரானார். எழுதியவர், மேடலின் ஹால்பர்ட் பதவி, பிபிசி நியூஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவர் மீது பல குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தீர்ப்பளிக்கப்படாத பல குற்றவியல் வழக்குகள் உள்ள ஒருவர் அமெரிக்க அதிபராவது இதுவே முதல்முறை. பல குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்ளும் அதேவேளையில் டிரம்ப் அமெரிக்காவின் மிக உயர்ந்த பதவியில் உட்காரப் போவது, அமெரிக்காவில் இதுவரை நடந்திராத ஒன்று. டிரம்ப் வெள்ளை மாளிகைக்குள் நுழையும் போது, அவர் எதிர்கொள்ளும் நான்கு குற்ற வழக்குகள் என்ன ஆகும் என்பது இந்த கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. ஆபாசப் பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்ப் மீது ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக 34 மோசடி வழக்குகள் சுமத்தப்பட்டன வணிக ஆவணங்களில் முறைகேடு செய்ததாக அவர் மீது முன்வைக்கப்பட்ட 34 குற்றச்சாட்டுகள் நியூயார்க் நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் உறுதி செய்யப்பட்டது. இவை நியூயார்க்கில் கடுமையான குற்றங்களாக கருதப்படுகின்றன. மே மாதம், நியூயார்க்கின் நடுவர் மன்றம் டிரம்பை குற்றவாளி என்று அறிவித்தது. இந்த கணக்கு பதிவேடு முறைகேடுகள் அனைத்துமே ஆபாச நடிகைக்கு பணம் தரப்பட்டதுடன் (hush money) தொடர்புடையவை. நியூயார்க் நீதிபதி ஜுவான் மார்ச்சென், டிரம்புக்கான தண்டனை அறிவிப்பை செப்டம்பர் மாதத்தில் இருந்து நவம்பர் 26-ஆம் தேதி வரை ஒத்திவைத்திருந்தார். அதாவது அமெரிக்க அதிபர் தேர்தல் முடியும் வரை தள்ளிவைக்கப்பட்டது. முன்னாள் புரூக்ளின் வழக்கறிஞர் ஜூலியா ராண்டில்மேன் கூறுகையில், தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றாலும், நீதிபதி மார்ச்சென் திட்டமிட்டபடி சட்ட நடவடிக்கையை தொடர முடியும் என்று கூறினார். ஆனால், முதியவர் என்பதாலும் முதல்முறை குற்றவாளி என்பதாலும் டிரம்புக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்பில்லை என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு வேளை தண்டனை அறிவிக்கப்பட்டால், டிரம்பின் வழக்கறிஞர்கள் உடனடியாக தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். ஏனெனில் டிரம்ப் சிறைக்கு அனுப்பப்பட்டால், அவர் தனது அதிகாரப்பூர்வ வேலையைச் செய்ய முடியாது என்று ஜூலியா கூறுகிறார். "இந்த மேல்முறையீட்டு செயல்முறை பல ஆண்டுகளுக்கு நீடிக்கலாம்" என்றும் அவர் கூறினார். தேர்தல் முடிவுகளை மாற்ற சதி செய்ததாக வழக்கு பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றதால், கிரிமினல் வழக்குகளில் அவருக்கு இருந்த பிரச்னைகள் ‘முடிவுக்கு வந்ததுள்ளன’ கடந்த ஆண்டு டிரம்ப் மீது சிறப்பு வழக்கறிஞர் ஜாக் ஸ்மித், கிரிமினல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார். இந்த வழக்கு 2020 அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்ற பின்னர் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பானது. டிரம்ப் இந்த வழக்கில் தன்னை நிரபராதி என்று கூறினார். அதிபர் என்ற முறையில் டிரம்ப் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து அவருக்கு ஓரளவு சட்டப் பாதுகாப்பு இருப்பதை அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்தது. இதனையடுத்து இந்த வழக்கு பற்றி குழப்பம் நிலவுகிறது. எவ்வாறாயினும், தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும் டிரம்பின் முயற்சி அதிபர் என்கிற முறையிலான அவரது அதிகாரப்பூர்வ கடமைகளுக்குள் வராது என்று ஸ்மித் தனது வாதத்தை மீண்டும் முன்வைத்தார். முன்னாள் அரசு வழக்கறிஞர் நயீம் ரஹ்மானியின் கூற்றுப்படி, டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றதால், கிரிமினல் வழக்குகளில் அவருக்கு இருந்த பிரச்னைகள் ‘முடிவுக்கு வந்ததுள்ளன’. "பதவியில் இருக்கும் அதிபருக்கு எதிரான குற்றம்சாட்டில் வழக்குப் பதிவு செய்ய முடியாது என்பது உறுதியாகிவிட்டது. எனவே வாஷிங்டன் டிசி நீதிமன்றத்தில் நடந்து வரும் தேர்தல் மோசடி தொடர்பான வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டு விடும்" என்று அவர் கூறுகிறார். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய ஸ்மித் மறுத்தால், டிரம்ப் ஏற்கனவே கூறியதைப் போல அவரை அதிகாரத்தில் இருந்து நீக்க முடியும். "இரண்டு நொடிகளில் நான் அவரை நீக்குவேன்" என்று டிரம்ப் அக்டோபரில் ஒரு வானொலி பேட்டியில் கூறினார்.   அரசு ஆவணங்கள் தொடர்பான வழக்கு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தீர்ப்பளிக்கப்படாத பல குற்றவியல் வழக்குகள் உள்ள ஒருவர் அமெரிக்க அதிபராவது இதுவே முதல்முறை (கோப்புப் படம்) டிரம்பிற்கு எதிரான மற்றொரு வழக்கையும் ஸ்மித் முன்னெடுத்தார். அரசின் ரகசிய ஆவணங்களை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக டிரம்ப் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், இதை டிரம்ப் மறுத்தார். டிரம்ப் தனது இல்லமான 'மார்-ஏ-லாகோ'வில் முக்கியமான அரசு ஆவணங்களை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அந்த ஆவணங்களை சட்டத் துறை திரும்பப் பெற முயன்றது. இந்த வழக்கை டிரம்ப் அதிபராக இருந்த போது நியமிக்கப்பட்ட ஃபுளோரிடா நீதிபதி எலைன் கேனன் விசாரித்தார். கடந்த ஜூலை மாதம் டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்தார். இந்த வழக்கை விசாரிக்க சட்டத் துறை ஸ்மித்தை முறைகேடாக நியமித்துள்ளதாகக் கூறி குற்றச்சாட்டுகளை அவர் தள்ளுபடி செய்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து ஸ்மித் மேல்முறையீடு செய்துள்ளதாக ரஹ்மானி கூறினார். ஆனால், தற்போது டிரம்ப் அதிபராவது உறுதியாகிவிட்ட நிலையில், தேர்தல் மோசடி தொடர்பான வழக்கை போல் ரகசிய ஆவணங்கள் தொடர்பான வழக்கும் ரத்து செய்யப்படலாம் என ரஹ்மானி கூறுகிறார். "ரகசிய ஆவணங்கள் வழக்கை நிராகரிப்பதற்கான லெவந்த் சர்க்யூட் மேல்முறையீட்டை (Eleventh Circuit appeal) சட்டத்துறை (DOJ) கைவிடும்," என்று அவர் கூறினார்.   ஜார்ஜியா வழக்கு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ‘அமெரிக்க அதிபராக, அவர் அதிபர் அலுவலகத்தில் இருக்கும் வரை, அவர் மீது எந்த வழக்கும் பதியப்பட மாட்டாது என நம்புகிறேன்’ என டிரம்பின் வழக்கறிஞர் ஸ்டீவ் செடோ கூறுகிறார் ஜார்ஜியாவிலும் டிரம்ப் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இந்த விவகாரம் 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின் முடிவை மாற்றச் சதி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பானது. இந்த விஷயத்தில் பல்வேறு தடைகள் இருந்தன. மாவட்ட வழக்கறிஞர் ஃபேன்னி வில்லிஸை தகுதி நீக்கம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த வழக்கு தொடர்பான வழக்கறிஞர் ஒருவருடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. ஒரு மேல்முறையீட்டு நீதிமன்றம் வில்லிஸ் இந்த வழக்கில் இருக்க அனுமதிக்கப்பட வேண்டுமா என்பதை பரிசீலித்து வருகிறது. ஆனால் தற்போது டிரம்ப் அதிபராக வந்துவிட்டார். எனவே இந்த வழக்கு இன்னும் தாமதமாகலாம் அல்லது தள்ளுபடி செய்யப்படலாம். இந்த வழக்கு ரத்து செய்யப்படும் என்பதே சட்ட வல்லுநர்களின் கருத்து. டிரம்ப் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் விசாரணைகளுக்கு வர முடியுமா என்று நீதிபதி கேட்ட போது டிரம்பின் வழக்கறிஞர் ஸ்டீவ் செடோ, "அமெரிக்க அதிபராக, அவர் அதிபர் அலுவலகத்தில் இருக்கும் வரை, அவர் மீது எந்த வழக்கும் பதியப்பட மாட்டாது என நம்புகிறேன்” என்றார். - இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/ce9g3j4j44no
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.