Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வசந்தகரணாகொடவிற்கு எதிரான அமெரிக்க தடை - ரஸ்யா அதிருப்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image

இலங்கை உட்பட இறைமையுள்ள எந்த நாட்டின் உள்விவகாரங்களிலும் தலையிடுவதை  ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கைக்கான ரஸ்ய தூதுவர்Levan Dzhagaryan  தெரிவித்துள்ளார்.

மேற்குலக நாடுகள் தங்கள் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் மேற்குலகில் மனித உரிமை மீறல்கள் குறித்து பேசுகின்றோம்,அவர்களிற்கு பல பிரச்சினைகள் உள்ளன,அவ்வாறான நிலை காணப்படுகின்ற போதிலும்  இலங்கை போன்ற நாடுகளிள் உள்விவகாரங்களில் தலையிடுவதை  ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

நீங்கள் எதனை செய்யவேண்டும் எதனை செய்யக்கூடாது என உங்களிற்கு பாடம் நடத்துவதற்கு - இலங்கைக்கு எவருக்கும் உரிமை இல்லை  - இது உங்களின் உள்விவகாரம் என ரஸ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.

நீங்கள் கண்ணாடி வீட்டிலிருந்துகொண்டு கல் எறியக்கூடாது என ஆங்கிலத்தில் தெரிவிப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வசந்தகரணாகொடவிற்கு எதிரான அமெரிக்க தடை - ரஸ்யா அதிருப்தி | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா விதித்த தடைக்கு ரஷ்யா கண்டனம்

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகள் "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை" என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.

நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரஷ்ய தூதுவர், எந்தவொரு இறையாண்மை கொண்ட நாட்டின் உள்நாட்டு விவகாரங்களிலும் தலையிட அமெரிக்காவுக்கோ அல்லது ஏனைய மேற்கத்திய நாடுகளுக்கோ எந்த உரிமையும் இல்லை என்று வலியுறுத்தினார்.R

Tamilmirror Online || அமெரிக்கா விதித்த தடைக்கு ரஷ்யா கண்டனம்

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி போடு அரிவாளை.

இந்தியா எங்களுக்கு பக்கத்தில் கிடக்கும் பூதம் என்றால் இது எம்மை விடாத பேய். 

15 minutes ago, விசுகு said:

அப்படி போடு அரிவாளை.

இந்தியா எங்களுக்கு பக்கத்தில் கிடக்கும் பூதம் என்றால் இது எம்மை விடாத பேய். 

சீனா எனும் இன்னொரு காட்டேரியும் இருக்கு..

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

சீனா எனும் இன்னொரு காட்டேரியும் இருக்கு..

அது  ஏற்கனவே நாட்டுக்குள்ள  தானே கிடக்கு??

இந்தியா  உடையணும்

ரசியா அழியணும்

ஆனால்  இந்த காட்டேறியைத்தான் எந்த  வகையிலும் திட்டமுடியல

வழியே  இல்லையா???☹️

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விசுகு said:

அது  ஏற்கனவே நாட்டுக்குள்ள  தானே கிடக்கு??

இந்தியா  உடையணும்

ரசியா அழியணும்

ஆனால்  இந்த காட்டேறியைத்தான் எந்த  வகையிலும் திட்டமுடியல

வழியே  இல்லையா???☹️

ரசியாவின் கலாபாக் காதலர்களே பூட்லர் அருமை பெருமைகளை பேசும் மகா ஜனங்களே, சிறப்பு பேச்சாளர்களே, ஏதாவது இது பற்றி தலிவருக்கு எடுத்து சொல்லி..  வழியே  இல்லையா???☹️

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, நிழலி said:

சீனா எனும் இன்னொரு காட்டேரியும் இருக்கு..

இன்னொன்றையும் கவனித்தீர்களா??

எந்தவொரு இறையாண்மை கொண்ட நாட்டின் உள்நாட்டு விவகாரங்களிலும் தலையிட அமெரிக்காவுக்கோ அல்லது ஏனைய மேற்கத்திய நாடுகளுக்கோ எந்த உரிமையும் இல்லை என்று வலியுறுத்தினார்

ஆனால் நாங்க படையெடுக்கலாம்???

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

அமெரிக்கா விதித்த தடைக்கு ரஷ்யா கண்டனம்

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகள் "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை" என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.

நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரஷ்ய தூதுவர், எந்தவொரு இறையாண்மை கொண்ட நாட்டின் உள்நாட்டு விவகாரங்களிலும் தலையிட அமெரிக்காவுக்கோ அல்லது ஏனைய மேற்கத்திய நாடுகளுக்கோ எந்த உரிமையும் இல்லை என்று வலியுறுத்தினார்.R

Tamilmirror Online || அமெரிக்கா விதித்த தடைக்கு ரஷ்யா கண்டனம்

ரஷ்சியா தொடர்ந்து அமெரிக்காவை மேற்குலகை கண்டிப்பது நல்லது. அப்போதுதான் அவர்கள் தாங்கள் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில்.. இணைத்தலைமை நாடுகள் என்ற கூட்டு வழிகாட்டலின் கீழ் இலங்கையில்.. தமிழ் மக்களை இனப்படுகொலை செய்ய நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி நின்று மிகப் பெரிய மனித இனப் படுகொலைகளை உரிமை மீறல்களை நாடத்த துணை நின்றதை வெளிப்படையாக உணரத்தலைப்படுவர்.

இன்று பூகோள அரசியல் பாதுகாப்பு நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக தாமே உதவி நின்ற...  மனித இன படுகொலையாளர்களுக்கு  எதிராக தாமே நடவடிக்கை எடுக்க நிற்பந்திக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்சியாவின் இந்தக் கண்டனம்.. அமெரிக்காவும் மற்றும் மேற்குலக நாடுகளும்.. மேலும் மேலும் உண்மையான இனப்படுகொலையாளர்களுக்கு.... கொடிய மனித உரிமை மீறல் செய்த சிங்களப் படைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தூண்டப்படுவர்.. மாறாக கூட்டுப் பயிற்சியும்... ஆயுத சப்பிளையும் செய்வதை தவிர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடிப் போடுங்கோ! தட்டையாப் போட்டா தோசை, உருட்டிப் போட்டா இட்லி!😂

எப்பிடிப் போட்டாலும் ரஷ்யாவின் செயல்கள் எல்லாம் "உலகப் பெரும் நன்மை" நோக்கியே!😎

  • கருத்துக்கள உறவுகள்

உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு என்பதுதான்  கருப்பொருள்.  வசந்த கரனகொட எனும் பெயரைக் கூறி ரஸ்யத் தூதுவர் இதனைக் கூறினாரா அல்லது பொதுவாகக் கூறினாரா என்பது முக்கியம். 

இங்கே சில விடயங்களை கவனிக்க வேண்டும். 

1) பிழை யார் செய்தாலும் அது பிழைதான். அது ..மெரிக்காவாக இருந்தாலும், ரஸ்யாவாக இருந்லும் சரி இலங்கையாக இருந்தாலும் சரிதான்

2) ..மெரிக்கா தன்னுடைய நாட்டிற்குள் நுழைவதற்குத்தான் தடை விதித்துள்ளது. அது ...மெரிக்காவின் சொந்த முடிவு. இதில் யாரும் தலையிட முடியாது. 

3) சரியைச் சரியென்றும் பிழையைப் பிழையென்றும் யாரும் கூறலாம். அதனைக் கூறுவதற்கு யாரும் பக்கச் சார்பானவர்களாக இருக்க வேண்டும்  என்பதல்ல. 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

ஆக... மொத்தத்தில் அமெரிக்காவின் எதிரி ரஷ்சியா ஆதரிக்கிற  சிங்களப் படைத் தலைமைகள்.. அரசியல்வாதிகள் எல்லோர் மீதும் அவர்களின் கடந்த கால போர்க்குற்ற.. மனித உரிமைகள் மீறல்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ.. அமெரிக்காவும் மேற்குநாடுகளும்.. கூட்டுப்பங்காளியாக இருந்ததற்கு பிராய்ச்சித்தமாக.. ராஜபக்ச குடும்பம்.. உட்பட ஐநா அறிக்கையில்.. ஐநா மனித உரிமை மையம்.. மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களால்.. இனங்காணப்பட்டுள்ள.. மோசமான மனித உரிமை மீறல்களை செய்து.. தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த.. போர்க்குற்றவாளிகள்.. மற்றும் அவர்களின் வால்பிடிகள் மீது அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் தடை விதிப்பதோடு.. அவர்கள் இந்த நாடுகளின் எல்லைக்குள் பிரவேசிக்கும் சமயம் கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்த வேண்டும்.

மேலும் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த மனித உரிமை மீறல்கள்.. போர்க்குற்றங்கள்.. அங்கு அரங்கேறிய தமிழினப் படுகொலையின் விளைவுகள் என்பதை ஏற்றுக் கொண்டு.. தமிழர் தாயக இருப்பையும் பாதுகாப்பையும் அமெரிக்காவும் மேற்நாடுகளும் ஐநாவின் உதவியோடு அங்கீகரித்து ஏற்று நின்று அவர்களின் முதன்மைப் பங்களிப்போடு தமிழ் மக்களுக்கு ஒரு நீதியான... சுயநிர்ணய உரிமையுள்ள.. இறையாண்மை உள்ள தேசத்தை உருவாக்கி தமிழ் மக்களை சிங்களப் படை ஆக்கிரமிப்பில் இருந்தும்.. இனப்படுகொலைகளில் இருந்தும் பாதுகாக்க முன்வர வேண்டும். 

இதனை செய்ய அமெரிக்கா முன்வரவில்லை என்றால்.. அமெரிக்கா - ரஷ்சியாவோடு சேர்ந்து கூட்டிணைந்து நாடகமாடுவதாகவே கொள்ளப்பட வேண்டும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

ரஷ்சியா தொடர்ந்து அமெரிக்காவை மேற்குலகை கண்டிப்பது நல்லது. அப்போதுதான் அவர்கள் தாங்கள் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில்.. இணைத்தலைமை நாடுகள் என்ற கூட்டு வழிகாட்டலின் கீழ் இலங்கையில்.. தமிழ் மக்களை இனப்படுகொலை செய்ய நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி நின்று மிகப் பெரிய மனித இனப் படுகொலைகளை உரிமை மீறல்களை நாடத்த துணை நின்றதை வெளிப்படையாக உணரத்தலைப்படுவர்.

இன்று பூகோள அரசியல் பாதுகாப்பு நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக தாமே உதவி நின்ற...  மனித இன படுகொலையாளர்களுக்கு  எதிராக தாமே நடவடிக்கை எடுக்க நிற்பந்திக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்சியாவின் இந்தக் கண்டனம்.. அமெரிக்காவும் மற்றும் மேற்குலக நாடுகளும்.. மேலும் மேலும் உண்மையான இனப்படுகொலையாளர்களுக்கு.... கொடிய மனித உரிமை மீறல் செய்த சிங்களப் படைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தூண்டப்படுவர்.. மாறாக கூட்டுப் பயிற்சியும்... ஆயுத சப்பிளையும் செய்வதை தவிர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர். 

நெடுக்ஸ் மிகச்  சரியான கோணத்தில், சிந்தித்து  எழுதிய மிகச் சிறந்த கருத்து. 👍

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நுணுக்கமான இராசதந்திரம் (nuanced diplomacy) தான் தாயகத்தில் மிஸ்ஸிங்!

"மேற்கு படுகொலை சேர்ந்து செய்தது, அதன் பிராயச்சித்தமாக இப்ப ரஷ்யா , சீனா எதிர்த்தாலும் தமிழருக்கு நீதி கொடுக்க வேண்டியது மேற்கின் கடமை! இதில் சிலாகிக்க எதுவும் இல்லை, செய்ய வேண்டிய கடமைக்கு சிலாகிப்பு, ஊக்குவிப்பு எதற்கு?"

நிச்சயம் இப்படி "நுணுக்கமாக யோசிக்கும்" இராசதந்திரிகள் தாயகம் சென்று தமிழர் தலைமையை ஏற்க வேண்டும், செய்வார்களா?😎

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் உள்ளவர்களுக்கு இவை தெரியாமல் இல்லை. அல்லது இப்படிச் சிந்திக்கத் தெரியாமலும் இல்லை. ஆனால் அதனை செயற்படுத்த ஆர்வமற்றிருக்கிறார்கள்... தொடர்புகளை பேண வேண்டிய ராஜதந்திரிகள்.. மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றோடு பேச ஆர்வம் காட்டாமல்.. புலி நீக்க அரசியலைப் பேசிக்கிட்டு திரிகிற சிலரின் பின்னால் கட்டுண்டு கிடக்கிறார்கள். தேர்தல் அரசியலை மையப்படுத்தி எதிரியின் நகர்வுகளுக்குள் நசுங்கிக் கிடந்தாவது பதவிகளை அனுபவிக்கவே நிற்கிறார்கள்.. அப்படியானவர்களை வழி நடுத்துபவர்கள் தான் கட்டிலில் கட்டுண்ட தலைவர்களாகவும் உள்ளனர். 

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, nedukkalapoovan said:

ஆக... மொத்தத்தில் அமெரிக்காவின் எதிரி ரஷ்சியா ஆதரிக்கிற  சிங்களப் படைத் தலைமைகள்.. அரசியல்வாதிகள் எல்லோர் மீதும் அவர்களின் கடந்த கால போர்க்குற்ற.. மனித உரிமைகள் மீறல்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ.. அமெரிக்காவும் மேற்குநாடுகளும்.. கூட்டுப்பங்காளியாக இருந்ததற்கு பிராய்ச்சித்தமாக.. ராஜபக்ச குடும்பம்.. உட்பட ஐநா அறிக்கையில்.. ஐநா மனித உரிமை மையம்.. மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களால்.. இனங்காணப்பட்டுள்ள.. மோசமான மனித உரிமை மீறல்களை செய்து.. தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த.. போர்க்குற்றவாளிகள்.. மற்றும் அவர்களின் வால்பிடிகள் மீது அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் தடை விதிப்பதோடு.. அவர்கள் இந்த நாடுகளின் எல்லைக்குள் பிரவேசிக்கும் சமயம் கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்த வேண்டும்.

மேலும் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த மனித உரிமை மீறல்கள்.. போர்க்குற்றங்கள்.. அங்கு அரங்கேறிய தமிழினப் படுகொலையின் விளைவுகள் என்பதை ஏற்றுக் கொண்டு.. தமிழர் தாயக இருப்பையும் பாதுகாப்பையும் அமெரிக்காவும் மேற்நாடுகளும் ஐநாவின் உதவியோடு அங்கீகரித்து ஏற்று நின்று அவர்களின் முதன்மைப் பங்களிப்போடு தமிழ் மக்களுக்கு ஒரு நீதியான... சுயநிர்ணய உரிமையுள்ள.. இறையாண்மை உள்ள தேசத்தை உருவாக்கி தமிழ் மக்களை சிங்களப் படை ஆக்கிரமிப்பில் இருந்தும்.. இனப்படுகொலைகளில் இருந்தும் பாதுகாக்க முன்வர வேண்டும். 

இதனை செய்ய அமெரிக்கா முன்வரவில்லை என்றால்.. அமெரிக்கா - ரஷ்சியாவோடு சேர்ந்து கூட்டிணைந்து நாடகமாடுவதாகவே கொள்ளப்பட வேண்டும். 

ககக்கக போ... மூன்றாம் புலிகேசி தோற்றார் போங்கள். 🤣

உண்மையில் இது மிகவும் காத்திரமான கருத்து. 

மற்றும், ...மெரிக்கா அண்மைய காலத்தில் மேற்கொண்டபடையெடுப்ப, போர்க்குற்றங்களுக்கு ..மெரிக்காவிற்கு சிரி லங்காவில் தடைவிதித்தால் சரிக்குச் சரியாகிவிடும். 

  • கருத்துக்கள உறவுகள்

எப்பிடியெல்லாம் முண்டுகுடுக்கவேண்டிக் கிடக்குது!🙄

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களின் உறுதியான நண்பன் ரஷ்யா தனது ஆதரவை மறுபடியும் தெரிவித்துள்ளது. இதனால் தான் சிங்களவர்களும் ரஷ்யாவை தான் உறுதியாக ஆதரிக்கின்றனர். இதை தான் ரஞ்சித் அண்ணாவும் சென்ற வருடமே கட்டுரையில் சொல்லியிருந்தார். மேற்குலநாட்டில் வாழ்து கொண்டிருக்கும் இலங்கை தமிழர்கள் தான் சிலர் தான் எந்தவொரு காரணமும் இல்லாமல் ரஷ்யாவை ஆதரித்து பிரசாரம் செய்பவர்கள்.

5 hours ago, விசுகு said:

ஆனால் நாங்க படையெடுக்கலாம்???

அய்யா ரஷ்யா உலகை ஆளவேண்டுமானால் படை எடுத்து ஆக்கிரமிக்க தானே வேண்டும்.

2 hours ago, Justin said:

நிச்சயம் இப்படி "நுணுக்கமாக யோசிக்கும்" இராசதந்திரிகள் தாயகம் சென்று தமிழர் தலைமையை ஏற்க வேண்டும், செய்வார்களா?😎

மேற்குலக சுகபோக வாழ்கையைவிட்டு அவர்கள தாயகம் செல்லவோ அல்லது அவர்ளின் கனவு தேசம் ரஷ்யா செல்லவோ மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வசதி கரணக கரணகொடவின் தடைக்கே இந்தக்குதி என்றால், மகிந்த, கோத்தாவுக்கு தடை விதித்தால் எந்தக்குதி குதிப்பார் இவர்? இவ்வளவும், அதை அமெரிக்கா விரைவாக செய்யத் தூண்டுகிறார் இவர். இறுதியில் இவர்களும் இலங்கையின் போர்குற்றங்களின் சூத்திரதாரிகள் என்பதை ஒருவர்மேல் ஒருவர் குற்றஞ்சாட்டி வெளிப்படுத்துவர். ரஸ்யாவுக்கு; தன்குற்றம் தனக்கு தெரியவில்லை மற்றவர்க்கு பாடம் எடுக்கிறார். ரஸ்யா கூறிய இதே வார்த்தைகளை ஐ. நா. வில் இலங்கையை எதிர்த்த நாடுகளுக்கு, சீனா தெரிவித்திருந்தது. இந்தச் சீனா எத்தனை நாடுகளில் ஊடுருவியுள்ளது என்பதை மறைப்பதற்காக, தற்காப்புக்காக இந்த வார்த்தைப்பிரயோகங்களை செய்கின்றன போலுள்ளது. அதே நேரம் ஒரு இனத்தின் சமூக விவகாரங்களில் தலையிட்டு அவர்களின் வாழ்நிலையை, இருப்பை சீர்குலைப்பதை எப்படி அங்கீகரிக்கிறார்கள் இவர்கள்?  

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகள் மனித உரிமை அமைப்புக்கள் அனைத்தும் ரசியாவுக்கு எதிராக இருக்கும் இந்த சூழலில் தமிழ் அமைப்புக்கள் ரஷ்யாவின் இந்த நிலைப்பாட்டை கையில் எடுத்து பொது மேடைக்கு கொண்டு வர வேண்டும். ரஷ்யாவுக்கு கோபம் வரக்கூடாது என்று பம்மக் கூடாது. உக்ரெனிய டைஸ்போரா அமைப்புக்களோடு சேர்ந்து இயங்க வேண்டும். அப்போது தான் எமக்கும் எதாவது நியாயம் கிடைக்கும். உலக அரசியல் சூழலுக்குள் நம்மை நாமும் உள்படுத்த வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு என்பதுதான்  கருப்பொருள்.  வசந்த கரனகொட எனும் பெயரைக் கூறி ரஸ்யத் தூதுவர் இதனைக் கூறினாரா அல்லது பொதுவாகக் கூறினாரா என்பது முக்கியம். 

இங்கே சில விடயங்களை கவனிக்க வேண்டும். 

1) பிழை யார் செய்தாலும் அது பிழைதான். அது ..மெரிக்காவாக இருந்தாலும், ரஸ்யாவாக இருந்லும் சரி இலங்கையாக இருந்தாலும் சரிதான்

2) ..மெரிக்கா தன்னுடைய நாட்டிற்குள் நுழைவதற்குத்தான் தடை விதித்துள்ளது. அது ...மெரிக்காவின் சொந்த முடிவு. இதில் யாரும் தலையிட முடியாது. 

3) சரியைச் சரியென்றும் பிழையைப் பிழையென்றும் யாரும் கூறலாம். அதனைக் கூறுவதற்கு யாரும் பக்கச் சார்பானவர்களாக இருக்க வேண்டும்  என்பதல்ல. 

இவர்கள் குத்தி முறிவதை பார்க்க சிரிப்பாக இருக்கு, யார் செய்தாலும் அது பிழையே, இந்த மரிக்காவின் அருமை பெருமைகள் சொன்னாவுடன் மாக்கா ஐனதிரளாக மக்கள் கூட்டம் அலை மோதுகின்றது,

சரியென்ன கிந்தியாவின் வாலை பிடித்த படியே இருப்பம் சுத ந்திரம் வந்துவிடும்🙃 , இனி எந்த நாடும் எம்மை கவனிக்காது, சரகில்லை இப்ப எம்மிடம் 

இந்த மரிக்கா தன் சுய நலத்திற்காக வடகொரியாவுடன் கை கொடுத்திச்சு, மோடிக்கு பயண தாடி எடுத்துவிட்டது, வசந்த கரன்னாகொட இவருக்கு தேவையென்றால் தாடி எடுப்பார்கள் மரிக்கா (திரு கோணலையை தருகின்றோம் என்று சொல்லுங்கள்🤣)

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்றவாளி வசந்த கரன்னகொடவை அமெரிக்கா தடைப்பட்டியலில் சேர்த்திருப்பது நல்லவிடயமே. ஆனால், இதன்மூலம் ஏதாவது உடனடியாக எமக்கு நடந்துவிடுமா என்றால் , இல்லையென்பதே பதில். ஏனென்றால், எம்மீது  கட்டவிழ்த்துவிடப்பட்ட இனக்கொலையில் தலைமை தாங்கிச் செயற்பட்ட அரச உயர்நிலையினர், ராணுவ உயரதிகாரிகள்,  இடைநிலை அதிகாரிகள், கீழ்மட்ட ராணுவ வீரர்கள் என்று ஒரு பெரும் பட்டியலே இன்னும் அப்படியே இருக்கிறது. இவர்கள். அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். அதனூடாக, எமக்கான நீதியும், எமது விடுதலைப் போராட்டத்திற்கான நியாயமும் கிடைக்கப்பட வேண்டும். இதனை யார் செய்தாலும் நாம் நிச்சயம் வரவேற்கவேண்டும். 

ரஸ்ஸியாவோ சீனாவோ இன்றுவரை தமிழினத்திற்கு ஆதரவாக ஒருபோதும் நின்றதில்லை, இனிமேலும் அப்படித்தான். ஐ நா சபையில் எமக்கெதிராக இவர்கள் இன்றுவரை செயற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். இடையிடையே சிங்கள ஆளும் வர்க்கத்திற்கும், ராணுவ மேலதிகாரிகளுக்கும் எதிராக மேற்குலகினால் விடுக்கப்படும் தடைகள் குறித்து இவர்கள் கண்டனம் தெரிவிக்கிறார்கள். சிங்கள அதிகாரிகளுக்கெதிராக மேற்குலகினால் விடுக்கப்படும் தடைகளை ரஸ்ஸியாவோ சீனாவோ கண்டிப்பது சரிதான் என்று தமிழர் ஒருவரால் நினைக்க முடிகிறதென்றால், அவரின் மூளை பிசகிவிட்டது என்று அர்த்தம். ஆகவே, அவர்களின் கருத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் கடந்துசெல்வதே நாம் செய்ய வேண்டியது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு என்பதுதான்  கருப்பொருள்.  வசந்த கரனகொட எனும் பெயரைக் கூறி ரஸ்யத் தூதுவர் இதனைக் கூறினாரா அல்லது பொதுவாகக் கூறினாரா என்பது முக்கியம். 

இங்கே சில விடயங்களை கவனிக்க வேண்டும். 

1) பிழை யார் செய்தாலும் அது பிழைதான். அது ..மெரிக்காவாக இருந்தாலும், ரஸ்யாவாக இருந்லும் சரி இலங்கையாக இருந்தாலும் சரிதான்

2) ..மெரிக்கா தன்னுடைய நாட்டிற்குள் நுழைவதற்குத்தான் தடை விதித்துள்ளது. அது ...மெரிக்காவின் சொந்த முடிவு. இதில் யாரும் தலையிட முடியாது. 

3) சரியைச் சரியென்றும் பிழையைப் பிழையென்றும் யாரும் கூறலாம். அதனைக் கூறுவதற்கு யாரும் பக்கச் சார்பானவர்களாக இருக்க வேண்டும்  என்பதல்ல. 

அமெரிக்கா தனது நாட்டுக்குத்தான் வரக்கூடாது என்று கூறியுள்ளது. ருசியாவுக்குள் போக முடியாது என்று கூறவில்லை. எனவே ரஸ்சியாவின் கூற்று பொருத்தமற்றது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Cruso said:

1) அமெரிக்கா தனது நாட்டுக்குத்தான் வரக்கூடாது என்று கூறியுள்ளது. ருசியாவுக்குள் போக முடியாது என்று கூறவில்லை. எனவே

2) ரஸ்சியாவின் கூற்று பொருத்தமற்றது.

1) அதை யாம் வழிமொழியும்

2) ரஸ்ய தூதுவர் வசந்த கரனகொடவிற்குத் தடைவிதிததற்கு எதிர்ப்புத் தெரிவித்தாரா அல்லது  இன்னொரு நாட்டின்(இலங்கையின்)  உள் விவகாரங்களில் தலையீடு செய்வதை ஒட்டி கருத்துக் கூறினாரா ? இராசதந்திரிகள் பொதுவாக தனிநபரைக் குறிப்பிட்டு கருத்துக் கூறுவது இல்லை என்பது என் பொதுவான கணிப்பீடு. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

1) போர்க்குற்றவாளி வசந்த கரன்னகொடவை அமெரிக்கா தடைப்பட்டியலில் சேர்த்திருப்பது நல்லவிடயமே. ஆனால், இதன்மூலம் ஏதாவது உடனடியாக எமக்கு நடந்துவிடுமா என்றால் , இல்லையென்பதே பதில். ஏனென்றால், எம்மீது  கட்டவிழ்த்துவிடப்பட்ட இனக்கொலையில் தலைமை தாங்கிச் செயற்பட்ட அரச உயர்நிலையினர், ராணுவ உயரதிகாரிகள்,  இடைநிலை அதிகாரிகள், கீழ்மட்ட ராணுவ வீரர்கள் என்று ஒரு பெரும் பட்டியலே இன்னும் அப்படியே இருக்கிறது. இவர்கள். அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். அதனூடாக, எமக்கான நீதியும், எமது விடுதலைப் போராட்டத்திற்கான நியாயமும் கிடைக்கப்பட வேண்டும். இதனை யார் செய்தாலும் நாம் நிச்சயம் வரவேற்கவேண்டும். 

2) ரஸ்ஸியாவோ சீனாவோ இன்றுவரை தமிழினத்திற்கு ஆதரவாக ஒருபோதும் நின்றதில்லை, இனிமேலும் அப்படித்தான். ஐ நா சபையில் எமக்கெதிராக இவர்கள் இன்றுவரை செயற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். இடையிடையே சிங்கள ஆளும் வர்க்கத்திற்கும், ராணுவ மேலதிகாரிகளுக்கும் எதிராக மேற்குலகினால் விடுக்கப்படும் தடைகள் குறித்து இவர்கள் கண்டனம் தெரிவிக்கிறார்கள். சிங்கள அதிகாரிகளுக்கெதிராக மேற்குலகினால் விடுக்கப்படும் தடைகளை ரஸ்ஸியாவோ சீனாவோ கண்டிப்பது சரிதான் என்று தமிழர் ஒருவரால் நினைக்க முடிகிறதென்றால், அவரின் மூளை பிசகிவிட்டது என்று அர்த்தம். ஆகவே, அவர்களின் கருத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் கடந்துசெல்வதே நாம் செய்ய வேண்டியது.

1)

2) ரஸ்யாவும் சீனாவும் இலங்கை அரசிற்கு ஆதரவாக உலக அரங்கில் நிற்கிறார்கள். அவர்களுக்கு இலங்கை அரசு தமிழரா சிங்களவரா என்பது பிரச்சனை  இல்லை. பூகோள ரீதியில்  முக்கியத்துவம் மிக்க இடத்தில் இருக்கும் ஒரு நாட்டின் அரசுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். நாளை இந்தியா உடையும்போது இந்தியாவிற்கு ஆதரவாகவும, இந்தியா உடைந்து தமிழ்நாடு தனிநாடாகும்போது பூகோள அமைவிட முக்கியத்துவம் கருதி தமிழ்நாட்டிற்கு ஆதாரவாக நிற்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் இந்த தடைதமிழர்களிற்கு எந்த நன்மையினை செய்யபோகிறது?

அமெரிக்கா இலங்கை படைகளுக்கு தொடர்ச்சியாக பயிற்சி வழங்கி வருகிறது, இந்த நிலையில் சில இலங்கை இராணுவ அதிகாரிகளிற்கு தடை வழங்குவதன் மூலம் இலங்கை இராணுவததிற்கு வெள்ளை அடிக்கும் முயற்சியிலேயே அமெரிக்கா ஈடுபடுகிறது.

முன்னர் ஐ எம் எப் இலங்கைக்கு கடன் வழங்குவதற்கான நிபந்தனையாக இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என கோரும் என தவறான கருத்தினை வெளியிட்டு அது சமூக வலைத்தளத்திலிருந்து சிந்தி சாதாரண மக்களிலிருந்து தமிழ் அரசியல்வாதிகள் தமக்கான கால அவகாசத்திற்காக (மக்களை ஏமாற்ற) அதனை பயன்படுத்தி பின்னர் எல்லாம் ஒன்றும் அற்ற ஏமாற்றமாக முடிவடைந்துவிட்டது.

இது போன்ற ஒரு ஒரு நிகழ்வினை தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றுவதற்கு பயன்படுத்துதற்கு அரசியல்வாதிகள் தயாராக இருப்பதால் இதற்கு யாழ்கள உறவுகள் இரு அணியாக பிரிந்து இந்த அமெரிக்காவின் வெள்ளை அடிப்பு முயற்சியினை பிரபலமாக்காமல் இருப்பது நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.