Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தையிட்டி விகாரைக்கு ஆதரவு தெரிவித்து பேரணி முன்னெடுப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: NANTHINI

13 MAY, 2023 | 03:20 PM
image

தையிட்டி விகாரைக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாண சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் இன்று (13) பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு ஆதரவு தெரிவித்து, 'அனைத்து மதங்களையும் ஒன்றாக மதிக்க வேண்டும்' என்ற தொனிப்பொருளில் இப்பேரணி தையிட்டி சந்தியிலிருந்து விகாரை வரை முன்னெடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பூஜை வழிபாடுகள் மற்றும் மக்களுக்கான மதிய அன்னதானமும் இடம்பெற்றது. 

IMG-20230513-WA0027.jpg

இப்பேரணியில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விகாரைக்கு ஆதரவு தெரிவித்து பதாதைகளை தாங்கியவாறு நின்றனர்.

இதன்போது யாழ்ப்பாண சிவில் சமூக நிலைய தலைவர் அருண் சித்தார்த் கருத்துரைக்கையில், 

IMG-20230513-WA0042.jpg

இலங்கையில் அனைவருக்கும் அனைத்து மதங்களையும் மதிக்கின்ற மத வழிபாடுகளை மேற்கொள்ளும் சுதந்திரம் உண்டு. தையிட்டி விகாரை யாழ்ப்பாண மாவட்ட வரைபடத்தில் 1959ஆம் ஆண்டு விகாரைக்குரிய பகுதி என குறிக்கப்பட்டுள்ள நிலமாகும். 

இது பொதுமக்களின் காணிகள் அல்ல. விகாரை அழிவடைந்த காலத்தில் பொதுமக்கள் அக்காணியை கையகப்படுத்தி, தமது குடியிருப்பினை மேற்கொண்டிருந்தனர். ஆனாலும், அது விகாரைக்குரிய நிலமாகவே காணப்படுகிறது. 

பொதுமக்களின் காணியில் விகாரை அமைக்கப்பட்டால், அவர்கள் நீதிமன்றத்தினை நாட முடியும்.

ஒவ்வொரு மதத்தையும் இனத்தையும் கூறி இனவாதம் மற்றும் மதவாதத்தினை எவரும் தூண்ட முயற்சிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார். 

IMG-20230513-WA0041.jpg

IMG-20230513-WA0025.jpg

IMG-20230513-WA0028.jpg

IMG-20230513-WA0024.jpg

IMG-20230513-WA0026.jpg

IMG-20230513-WA0032.jpg

IMG-20230513-WA0038.jpg

IMG-20230513-WA0040.jpg

IMG-20230513-WA0023.jpg

IMG-20230513-WA0021.jpg

IMG-20230513-WA0034.jpg

https://www.virakesari.lk/article/155204

எதிர்ப்பு போராட்டத்தில இருந்த சனத்தை விட ஆதரவுக்கு அதிகமாக இருக்கே!

  • கருத்துக்கள உறவுகள்

விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை விட ஆதரவு தெரிவித்தவர்கள் அதிகாமாக உள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, MEERA said:

விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை விட ஆதரவு தெரிவித்தவர்கள் அதிகாமாக உள்ளனர்.

அந்த அளவுக்கு... எமது அரசியல்வாதிகள், தமது செய்கைகள் மூலம் 
மக்களிடமிருந்து அந்நியப்  பட்டு போய் விட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையாரைப் பிடிக்கப்போய் அது குரங்காகிவிட்ட கதையாகவுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, MEERA said:

விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை விட ஆதரவு தெரிவித்தவர்கள் அதிகாமாக உள்ளனர்.

 

16 minutes ago, தமிழ் சிறி said:

அந்த அளவுக்கு... எமது அரசியல்வாதிகள், தமது செய்கைகள் மூலம் 
மக்களிடமிருந்து அந்நியப்  பட்டு போய் விட்டார்கள். 

 

8 minutes ago, karu said:

பிள்ளையாரைப் பிடிக்கப்போய் அது குரங்காகிவிட்ட கதையாகவுள்ளது.

எங்கட சனத்துக்கு தங்கட வீடு வளவு பாதுகாப்பாக இருக்கும் வரை அசையாதுகள். 8 குடும்பங்களின் காணி தானே என வாளாவிருக்கலாம். ஆனால் பிரச்சனை நம்வீட்டு படலையை தட்டும் போது நமக்காக யாரும் இருக்கமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ஏராளன் said:

அருண் சித்தார்த்

அடடா அருண் சித்தார்த்தா?

இன்னொரு விவகாரத்துக்குள் குளிர்  காய வந்துவிட்டாரா?

என்னை விடுங்கோ  கச்சாமி!

  • கருத்துக்கள உறவுகள்

படத்தில் ஒரு சிறுமி  புத்த பிக்குவை காலில் விழுந்து கும்பிடுகிறள்   ...காலம் போகப் போக    எல்லோரும் வழிபாடுவார்கள்.  அவங்களும்.  சொன்னபடியே வடக்கு கிழக்கில்   1000.   விகாரைகள்.   கட்டியெழுப்புவார்கள்.      தமிழருக்கு உறுதியான கொள்கை கிடையாது...இடத்திற்கு இடம்....நேரத்திற்கு நேரம் மாறி கொண்டே இருக்கும்.....இலங்கையில் குண்டுகள் போட்டால்   மனித உரிமை மீறல்....போர் குற்றம்.....வேறு எங்காவது போட்டால்   ...அது சரி....மனித உரிமை மீறல்லில்லை.....போர் குற்றமுமில்லை........என்பார்கள்...அப்படி செய்பவன். மாகவீரன்.  ஆகிவிடுவன்.  சிங்களவன்.  தமிழனை கொண்டு தமிழனுக்கு பாடம் புகட்டுகிறன்.   

  • கருத்துக்கள உறவுகள்

அம்பேத்கர் படம் அங்கே தென்படுகிறது.  இதன் பின்ணணி யை விளக்க வேண்டிய அவசியமே கிடையாது. 

மத மாற்றத்திற்கான அடிப்படைக் காரணங்களைத் தகர்க்கும்வரை எம்மிடையே ஒற்றுமையும் முன்னேற்றமும் சாத்தியமில்லை. அரசியல் தீர்வும் சாத்தியம் இல்லை. 

☹️

 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ஏராளன் said:

அதனைத் தொடர்ந்து, பூஜை வழிபாடுகள் மற்றும் மக்களுக்கான  மதிய அன்னதானமும் இடம்பெற்றது. 

நல்லூருக்கும் போவார்கள், கிறிஸ்தவர்களிடமும் போவார்கள், வயிறே தெய்வம் அவர்களுக்கு. இதில் உள்ளவர்கள் யாரது காணியிலும் விகாரை இல்லை, அதனால் அன்னதானம் முக்கியம்.சில சிங்களவரை தமிழர் என அல்லது கொழும்பில் உள்ள சிலரை முந்தி மருதற்ற ஆளோடு யாழ்ப்பாணம் வந்தவர்களைப்போல் கூட்டி வந்து தமிழர் வரவேற்பு என படம் காட்ட  சந்தர்ப்பமும்  உண்டு.  இந்த அருண் ஒரு அறிவற்றது. இது முன்பு கூறியது, "நாட்டில் பல சிங்கள பகுதிகளில் தமிழ் ஆலயங்கள் உள்ளன அந்த ஆலயங்களை கட்டுவதற்கு எந்த சிங்கள மக்களும் எதிர்த்ததாக சரித்திரம் இல்லை தமிழர் பகுதியில் பவுத்த சின்னங்களை உருவாக்கும்போதுதமிழ் அரசியல்வாதிகள் எதிர்ப்பது தவறு. குருந்தூர் மலையில் விகாரை அமைப்பதால் தமிழ் மக்களுக்கு ஒரு நட்டமும் ஏற்படப்போவதில்லை. கோவிலும் விகாரையும் அருகில் இருப்பதால் தமிழ் சிங்கள மக்கள் இணைந்து செயற்படவும் ஒற்றுமையாகவும் வாழ இது நல்ல வாய்ப்பு."     

சிங்கள பகுதிகளில் சைவ ஆலயங்கள் இருப்பது உண்மை. அதற்கு சிங்கள மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது காரணம் அங்கே சைவர்கள் வாழ்கிறார்கள், அவர்கள் வழிபடுவதற்கு ஆலயம் தேவை, சிங்களவருடைய காணிகளில் அடாத்தாக அவர்கள் கட்டவில்லை, தங்கள் சொந்தப்பணத்தில் கட்டுகிறார்கள், அவர்கள் அங்கே பலகாலம் வாழ்கிறார்கள். இங்கு, அரசியல்வாதிகள் எதிர்க்கவில்லை, மக்கள் தங்கள் குடியிருப்பு காணிகளை கேட்க்கின்றனர், அவர்களது பிரதிதிகள் அவர்களுக்காக பேசவேண்டியது கடமை. குருந்தூரில் பவுத்தமதத்தினர் யாருமில்லை, சைவ கோயிலை இடித்து, அவர்களது வழிபடும் உரிமையை மறுத்து, விகாரைகள் கட்டுவதால் சிங்கள மக்களே இல்லாத இடத்தில ஒற்றுமை எப்படி வரும் என்று விளக்க இவரால் முடியுமா? இன்னும் குரோதம், வெறுப்பு, பழிவாங்கல் அல்லவா வளரும்? கொழும்பில் தாய் பிள்ளைபோல் வாழ்ந்தவர்களை அடித்து துரத்தியவர்கள், கொழும்பில் இணைந்து ஒற்றுமையாக வாழ முடியாதவர்கள் இங்கே எப்படி இணைந்து வாழமுடியும் என்பதை விளக்க முடியுமா இவரால்? ஒற்றுமை என்றால் என்னவென்று தெரியுமா இவருக்கு (அடிமைக்கு)? ஆயுதத்தால், அடக்குமுறையால், அபகரிப்பினால் ஒற்றுமை வளரும் என்று எந்த ஆசிரியர் சொல்லிகொடுத்திருப்பார் இவருக்கு? அடிமைப்புத்தியுள்ள, சொல்வார் பக்கம் இழுப்படுகிற அரைவேக்காடுகளை  தேடி எடுத்து அனுப்புகிறார்கள். பிக்கு சொல்கிறார், "இது தவறு" என, இன்னொரு பிக்கு சொல்கிறார் "கிழக்கில் பிக்கு பொய்யான ஆவணங்களை தயார்படுத்தி கொண்டுபோய் தமிழரை அச்சுறுத்துகிறார், இதற்கு சில அதிகாரிகளும் உடந்தையாக இருந்து போலி ஆவணங்களை தயார் செய்து கொடுக்கிறார்கள்." அவர்களை அப்படிச்செய்ய வேண்டாம் என்று கோரிக்கை வைக்கிறார். ஆனால் இது இப்படி உளறுது. வரலாறு தெரியாதவர்களால், திரிபு படுத்துபவர்களாலேயே எல்லாப்பக்கமும் பிரச்சனை. சொந்தபுத்தியுமில்லை, சொல்வார் புத்தி கேட்பதற்கு பக்குவமுமில்லை, அவர்களுக்கு தெரிந்ததெல்லாம்  அடாவடிதான்.    

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நல்லூரை இடிப்பேன்.. புலிகளை அழிப்பேன்.. என்ற இந்த வெத்துவேட்டு.. கூலிங்கிளாஸ் கோமாளி (தானும் டக்கிளஸ் மாதிரி நிரந்தர சிங்களக் கூலியாகலாம் என்ற கனவோடு அலையும்.. கொன்னைத் தமிழ் பேசித் திரியும்).. ஏலவே மக்களுக்கு நிவாரணம் தருவதாகக் கூட்டி வந்து.. சொறீலங்காவின் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடத்தியது. அங்கு வந்திருந்த மக்களிடம்.. ஊடகங்கள் வினவிய போது நிவாரணம் வழங்கப்படும் என்றே அழைத்து வந்து சிங்கக் கொடியை கையில் தந்திருக்கிறார்கள். கருத்துச் சொல்ல வேற இல்லை என்றார்கள்.

அதேபோல்.. இதுவும் என்ன நிவாரண அறிவிப்போ. இலவசம் என்றால்.. அங்கலாய்க்கும் மக்கள் நிலையை.. இவன் போன்ற கூலிகள் நன்கு பாவித்துக் கொள்கிறார்கள். என்ன இப்ப கூலிகளின் காலம்.. அவ்வளவும் தான்.

அதற்காக.. சொந்த நிலத்தில் சோடிக்கப்பட்ட புனைவுகளுடன்  நிகழும் திட்டமிட்ட வகையில் கட்டமைத்து திணிக்கப்படும்.. பெளத்த சிங்கள மயமாக்கம்.. மற்றும் மதமாற்றங்களை அனுமதிக்க முடியாது. அது தமிழினத்தின் நீண்ட கால இருப்புக்கு பாதகமாகவும்.. நில மற்றும் அதிகார இழப்பை நோக்கியும்.. இன அழிப்பை பூர்த்தி செய்யும் வகையிலுமே இது இருக்கும்.

ஒரு சில கூலிகளின் சில்லறைத்தனங்களுக்கு மொத்த இனத்தையும்.. மண்ணையும் பறிகொடுக்க முடியாது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nedukkalapoovan said:

நல்லூரை இடிப்பேன்..

இடித்து மலசலகூடம் அமைப்பேன் என்று சொன்னதாக கேள்விப்பட்டேன், பன்றிப்புத்தி! அதனுடைய அறிவு அவ்வளவுதான்! இதனிடம் இருந்து நல்லது எதையும் எதிர்பார்க்கமுடியுமோ? ஏதோ பிரச்சனை இருக்கும்போல.....

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, satan said:

இடித்து மலசலகூடம் அமைப்பேன் என்று சொன்னதாக கேள்விப்பட்டேன், பன்றிப்புத்தி! அதனுடைய அறிவு அவ்வளவுதான்! இதனிடம் இருந்து நல்லது எதையும் எதிர்பார்க்கமுடியுமோ? ஏதோ பிரச்சனை இருக்கும்போல.....

இவன் விடுதலைப்புலிகளால் தேடப்பட்ட ஒருவன். காட்டிக்கொடுப்பதே இவனின் பிரதான தொழில். அதற்காக கூலி வாங்கிப் பிழைப்பதே இவனின் பிழைப்பு. போர் முடிந்த கையோடு.. தென்னிலங்கையில் பதுங்கிக் கிடந்த இவனை.. சிங்கள இராணுவப் புலனாய்வுப் பிரிவு தத்தெடுத்து.. களமிறக்கியது.. தமிழ் தேசிய சக்திகளை ஓரம்கட்ட. அந்தப் பணியை... சம் சும் மாவை தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பே பொறுப்பெடுத்த பின்..

இவனை.. தமிழ் மக்களின் சிவில் அமைப்பு.. அரசியல் அமைப்பு.. பிரதான சக்தியாக்கியாச்சு. அதில் வீரகேசரிக்கு கூட்டுப் பொறுப்பு அளிக்கப்பட்டிருக்குது. 

இப்ப இவனின் தொழில் உள்ளூர் ரவுடித்தனம்.. ஒரு கூட்டம் நிவாரணத்துக்கு அலையும் சனத்தை வைச்சு.. இப்படியான போலி நாடகம் ஆடுவது.. அதற்கு சிங்கள பெளத்த பேரினவாதிகளிடமும்.. அடிவருடிகளிடம் கூலி வாங்குவது. அதற்கு மத நல்லிணக்கம்.. இன நல்லிணக்கம் என்று அடித்துவிடுவது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா ஒரு சாட்டுக்கு உள்ள தூக்கிப் போட்டிட்டு.. இப்ப வெளிய விட்டாய்ச்சு. இதுதான் சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பின் கீழ் ஊரில நடக்கும்.. 'நீதி' நிலை நாட்டல். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை விட ஆதரவு தெரிவித்தவர்கள் அதிகாமாக உள்ளனர்.

இப்ப இதுதான் நிலைமை உலகெங்கிலும்

புலத்தில் இன்று எமக்கு வரும் சனத்தை விட அவர்கள் வைத்தால்???

வெளிநாட்டு தலித் அரசியல் கும்பல் பூரா அங்கை முகாமிட்டது இதுக்குதான் போல...

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்துக்கு என்ன மண்ணாங்கட்டிக்கு அம்பேத்கர் என்ற மராட்டியனின் இயக்கம்?

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஏராளன் said:

தையிட்டி விகாரை யாழ்ப்பாண மாவட்ட வரைபடத்தில் 1959ஆம் ஆண்டு விகாரைக்குரிய பகுதி என குறிக்கப்பட்டுள்ள நிலமாகும்.

இது உண்மைதானோ? இப்படி ஒரு தகவல் செய்திகளில் முன்பு வாசிக்கவில்லை. 1959ம் ஆண்டு யாழ் மாவட்ட வரைபடத்தை ஒருக்கால் போடுங்கோ பார்ப்போம். நம்ம வீட்டு காணி உள்ள இடத்தில் என்ன குறிக்கப்பட்டு உள்ளது என பார்க்க வேண்டும் 😇

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பகிடி said:

யாழ்ப்பாணத்துக்கு என்ன மண்ணாங்கட்டிக்கு அம்பேத்கர் என்ற மராட்டியனின் இயக்கம்?

அம்பேத்கார் இன மொழி கடந்து அனைத்து தாழ்த்தப்பட்ட மக்கள் நலனுக்காக  தனது வாழ்நாழ் முழுவதும் போராடிய  மாபெரும் தலைவர். சாதி அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் தமது விடுதலைக்கான வழிகாட்டியாக அம்பேத்காரை பார்ககிறார்கள்.  ரொரொண்டோவில் சின்ன யாழ்பபாணம் இருக்கிறது  என பெருமையாக கூறலாம் என்றால் யாழ்பபாணத்தில் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள மக்கள்  அம்பேத்கார் இயக்கத்தை  நடத்துவதில் தப்பில்லை. ஆனால் அதை தமது சுயநல அரசியலுக்கு பாவிக்கும் அருண் சித்தார்த் போன்ற நபர்களை விமர்சியுங்கள். அவர்களின் தவறை சுட்டிக்காட்டுங்கள். அதற்காக அம்பேத்கார் போன்ற மாமனிதர்களை இழிவுபடுத்தாதீர்கள்.  

பிரபாகரனை கூட தமது சுயநல அரசியலுக்கு பயன்படுத்தும் தமிழர்கள் உண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்

ஒருதடவை இவர்களுக்குப்பின்னால் போய் ஏமாந்த சனம், இன்னும் ஏன் இந்த கூத்தாடிகளை பின்தொடருகிறார்கள்? தேவையுள்ளதாலா? பேராசையினாலா? இதே தொழிலா? அதே கூட்டமா? என்று விளங்கவில்லை. "உன் நண்பனைக்காட்டு நான் உன்னைப்பற்றி சொல்கிறேன்.". என்றொரு பழமொழியுண்டு. அரசியல் செய்ய திறமை, நேர்மை அற்றவர்கள் மக்களைப்பற்றி கவலையற்றவர்கள், முன்னேற்றமில்லாமல் மக்களை சுரண்டுபவர்கள், அடாவடியையும் இனவாதத்தையும் முதலாகக் கொண்டு செயற்படுபவர்கள்; ரவுடிகளை, ஏமாற்றுக்காரரை, அறிவு குறைந்தவர்களை (சரி பிழை தெரிந்தாற்தானே அவர்களால் பிழைகளை சுட்டிக்காட்டவும் தட்டிக்கேட்கவும் முடியும்)  அமைச்சர்களாக தங்கள் அவையில் வைத்திருப்பார்கள். அவர்களாலேயே அங்கு தாக்குபிடிக்கவும் மக்களை யார் அதிகமாக ஏமாற்றுகிறார்களோ அவர்களே திறமையானவர்கள் என ஒருவரை ஒருவர் பாராட்டவும் பாதுகாக்கவும் முடிகிறது. இதனாலேயே நாடு இந்த நிலைக்கு வந்தது அவர்கள் அதைப்பற்றி கவலை கொள்கிறார்களா? அப்போதும் தங்களை புகழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள். ஒரு அமைச்சர் தலைவர் தவறு விடும்போது மரணமே ஏற்படும் என்று தெரிந்தாலும் எச்சரிக்க வேண்டும், அதனாலேயே முற்காலத்தில் மந்திரமாருக்கு அதிக மரியாதையிருந்தது. நாட்டின் பாதுகாப்பு அவர்கள் கைகளிலிருந்தன. கேட்காத அரசனால் நாடு இக்கட்டில் இருக்குமானால் அங்கே தடுத்துரைத்த குற்றத்திற்காக மந்திரி சிறையில் போடப்பட்டிருப்பார். எச்சரிக்காது விட்டு நாடு கஸ்ரத்தை எதிர்நோக்கினாலும் தண்டிக்கப்படுபவர் மந்திரியே. ஆனால் இங்கு ஒருவர் அரசை கையேற்றால் சிறையிலுள்ள சமூக விரோதிகளுக்கு விடுதலை, பதவி,. பாராட்டு அளித்து பாராளுமன்றம் கொண்டு வருகிறார்கள். தங்கள் இல்லாத செல்வாக்கை உயர்த்த, தங்களை புகழ, காப்பாற்ற, கேள்விகளை தடுக்க. அப்போ அவர்கள் என்னதான் செய்ய முடியும்? இல்லையென்றால்; சிறைதான் அனுபவிக்க வேண்டும். எப்படி பேசுவது, என்ன பேசுவது, எவ்வாறு நடந்துகொள்வது, அமைச்சரின் பணி என்ன, வரைமுறை என்ன எதுவும் தெரியாது, எல்லாவற்றுக்குள்ளும் மூக்கை நுழைத்து, கருத்து சொல்வார்கள், அறிக்கை விடுவார்கள். அறிவுள்ளவர்கள் வாயை மூடிக்கொள்வார்கள். இவர்கள் பேசுவது ஒன்று, அவர்கள் சொல்லும் பதில் வேறொன்றாக இருக்கும், அதைப்பற்றி அவர்கள் வெட்கப்படுவதுமில்லை, அதுவே சாமர்த்தியம் என தம்மை மெச்சுவார்கள். "ஊமையர் சபையில் உளறுவாயன் மகா பிரசங்கி."

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் குடாநாட்டில் விகாரை வந்தால் என்ன? மசூதி வந்தால் என்ன? தேவாலயம் வந்தால்தான் என்ன..?


தென்மராட்சியில் வீடு குடி புகுதலுக்கு குறைந்த சாதிக்காரர் கொடுத்த படங்களை கோவிலில் வைத்துக் கொடுத்த ஐயர் பதவி நீக்கம் : இது இந்தவார உதயன் செய்தி.. (இணைப்பு கீழே)

குடாநாட்டில் பல கோவில்கள் முளைத்தபோதும் எந்தக் கோவிலும் சைவர்களாக வாழும் மக்களில் ஒரு பகுதியினரை தீண்டப்படாதவர்கள் என்று சொல்லி கோவில் வளாகத்தில் நுழைய விடுவது இல்லை.இன்றுவரை அதுதான் சமூக நியதி.

நீண்ட காலமாக பல அரச பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட சாதி பிள்ளைகள் படிக்கும்போது நக்கல் நையாண்டி ஒதுக்கம். பல பாடசாலைகளில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆசிரியராக அதிபராக கடமைபுரிய முடியாது.அப்படி கஸ்ரப்பட்டு வந்தாலும் உயர்சாதி மாணவர்களே அவர்களை மதிப்பதில்லை.. அவர்கள் காது பட சாதிபெயர் சொல்லி நக்கல் நையாண்டி.. இதை ஆசிரியர்களே ஊக்குவிக்கின்றனர்.. இவற்றுக்கும் அரசுக்கோ பேரினவாதிகளுக்கோ இஸ்லாமியர்களுக்கோ சம்பந்தம் இல்லை.. சக தமிழர்கள் தன் சகதமிழன்மேல் செய்வது..

எனவே யாழ் குடாநாட்டில் விகாரை வந்தால் என்ன? மசூதி வந்தால் என்ன? தேவாலயம் வந்தால்தான் என்ன? அது அடுத்தவன் காணியில் பலவந்தமாக வராதவரைக்கும் எமக்கு என்ன…
 

 

large.970E02C1-D81E-408D-9AD1-96BEC22D25E2.jpeg.f3e27c450416d5dc42f910c225c4f812.jpeg

  • கருத்துக்கள உறவுகள்+

நாளைக்கு உதுக்குப் போனாக்களின்ர (தமிழராயிருந்தால்) காணியிலை புத்தர் வந்து குந்தட்டும், அப்ப வெளிக்கும் அவைக்கு. நடுத்தெருவுக்கு வந்து குய்யோமுறையோ என்டு கத்தேக்கிலை கைகொட்டிச் சிரிக்க வேணும், உவையளைப் பாத்து (கர்மா வளைஞ்சு வரலாம்).  

உதுக்குப் போன சனத்துக்கு கொஞ்சம் கூட புத்தியில்லை... சைக். வஞ்சகத்துக்குப் பெயர் போனாக்கள் தமிழர். 

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

யாழ் குடாநாட்டில் விகாரை வந்தால் என்ன? மசூதி வந்தால் என்ன? தேவாலயம் வந்தால்தான் என்ன..?


தென்மராட்சியில் வீடு குடி புகுதலுக்கு குறைந்த சாதிக்காரர் கொடுத்த படங்களை கோவிலில் வைத்துக் கொடுத்த ஐயர் பதவி நீக்கம் : இது இந்தவார உதயன் செய்தி.. (இணைப்பு கீழே)

குடாநாட்டில் பல கோவில்கள் முளைத்தபோதும் எந்தக் கோவிலும் சைவர்களாக வாழும் மக்களில் ஒரு பகுதியினரை தீண்டப்படாதவர்கள் என்று சொல்லி கோவில் வளாகத்தில் நுழைய விடுவது இல்லை.இன்றுவரை அதுதான் சமூக நியதி.

நீண்ட காலமாக பல அரச பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட சாதி பிள்ளைகள் படிக்கும்போது நக்கல் நையாண்டி ஒதுக்கம். பல பாடசாலைகளில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆசிரியராக அதிபராக கடமைபுரிய முடியாது.அப்படி கஸ்ரப்பட்டு வந்தாலும் உயர்சாதி மாணவர்களே அவர்களை மதிப்பதில்லை.. அவர்கள் காது பட சாதிபெயர் சொல்லி நக்கல் நையாண்டி.. இதை ஆசிரியர்களே ஊக்குவிக்கின்றனர்.. இவற்றுக்கும் அரசுக்கோ பேரினவாதிகளுக்கோ இஸ்லாமியர்களுக்கோ சம்பந்தம் இல்லை.. சக தமிழர்கள் தன் சகதமிழன்மேல் செய்வது..

எனவே யாழ் குடாநாட்டில் விகாரை வந்தால் என்ன? மசூதி வந்தால் என்ன? தேவாலயம் வந்தால்தான் என்ன? அது அடுத்தவன் காணியில் பலவந்தமாக வராதவரைக்கும் எமக்கு என்ன…
 

 

large.970E02C1-D81E-408D-9AD1-96BEC22D25E2.jpeg.f3e27c450416d5dc42f910c225c4f812.jpeg

உது பெரிய அதிசயமல்ல.

வெளிநாடு என்று வந்துவிட்டு வெள்ளையன் வேலையிடத்தில துவேசமாக என்னை நடத்துகிறான் என்று ஊளை இட்டுக்கொண்டு பிறகு நீ அந்த சாதி இந்தத் சாதி என்று சண்டை பிடிக்கிற சனம் தான் எங்கடை சனம்.. வெளிநாடு சனம் இன்னும்  நாகரீகமான ஒரு சமூகமாக வர இன்னும் ஒரு தலைமுறை வேண்டும். உங்கை ஒரு ஐந்து தலைமுறையாவது எடுக்கும். இது எங்கடை ஆக்களுக்கு.

இந்தியாவில இருந்து வந்ததுகள் மாறமுதல் இந்தியாவே இருக்கும்  எண்டது ஐமிச்சம்!

Edited by saravanar

  • கருத்துக்கள உறவுகள்
On 14/5/2023 at 12:12, பாலபத்ர ஓணாண்டி said:

தென்மராட்சியில் வீடு குடி புகுதலுக்கு குறைந்த சாதிக்காரர் கொடுத்த படங்களை கோவிலில் வைத்துக் கொடுத்த ஐயர் பதவி நீக்கம்

அந்தப்படத்தை, பாதிரியார் மந்திரிச்சு கொடுத்தால்; வறுமையை பயன்படுத்தி மதம் மாற்றி விட்டார்கள் என்று கதையை திசை திருப்பி வசை பாடுவோம். எம்மிடம் உள்ளதை இழக்க மாட்டோம், பக்கத்தில இருக்க இடம் விடமாட்டோம் என்பவர்களை, தள்ளி இடம் கொடு என்று சண்டை போடவா முடியும்? எனக்கு பக்கத்தில வந்து  உட்க்கார், என்னிடம் உள்ளதை  பகிர்ந்துகொள் என்று சொல்லி இடம் விடத்தான்  முடியும். அதற்கும் குற்றம் சொல்பவர்களை என்ன செய்வது? 

  • கருத்துக்கள உறவுகள்
On 13/5/2023 at 22:12, பாலபத்ர ஓணாண்டி said:

தென்மராட்சியில் வீடு குடி புகுதலுக்கு குறைந்த சாதிக்காரர் கொடுத்த படங்களை கோவிலில் வைத்துக் கொடுத்த ஐயர் பதவி நீக்கம் :

பின்ன கோவில் தீட்டுப்பட நாங்கள் விடுவமே. நாங்கள் ஆறுமுகத்திண்ட ஆக்களெல்லே! 

  • கருத்துக்கள உறவுகள்
On 14/5/2023 at 03:56, பகிடி said:

யாழ்ப்பாணத்துக்கு என்ன மண்ணாங்கட்டிக்கு அம்பேத்கர் என்ற மராட்டியனின் இயக்கம்?

சாதி ஒழிப்பிற்கு

 

On 14/5/2023 at 08:41, island said:

அம்பேத்கார் இன மொழி கடந்து அனைத்து தாழ்த்தப்பட்ட மக்கள் நலனுக்காக  தனது வாழ்நாழ் முழுவதும் போராடிய  மாபெரும் தலைவர். சாதி அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் தமது விடுதலைக்கான வழிகாட்டியாக அம்பேத்காரை பார்ககிறார்கள்.  ரொரொண்டோவில் சின்ன யாழ்பபாணம் இருக்கிறது  என பெருமையாக கூறலாம் என்றால் யாழ்பபாணத்தில் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள மக்கள்  அம்பேத்கார் இயக்கத்தை  நடத்துவதில் தப்பில்லை. ஆனால் அதை தமது சுயநல அரசியலுக்கு பாவிக்கும் அருண் சித்தார்த் போன்ற நபர்களை விமர்சியுங்கள். அவர்களின் தவறை சுட்டிக்காட்டுங்கள். அதற்காக அம்பேத்கார் போன்ற மாமனிதர்களை இழிவுபடுத்தாதீர்கள்.  

பிரபாகரனை கூட தமது சுயநல அரசியலுக்கு பயன்படுத்தும் தமிழர்கள் உண்டு. 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.