Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

14 ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வருடம் இன்று

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

14 ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வருடம் இன்று

நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய போர் மௌனிக்கப்பட்டு இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக வருடாந்தம் மே மாதம் 18ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படுகிறது.

வருடாந்தம் மே மாதம் 12ம் திகதி முதல் 18 ஆம் திகதிவரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, வடக்கு கிழக்கில், நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.

இந்தநிலையில், வடக்கு மற்றும் கிழக்கின் பல பகுதிகளில் நேற்றைய தினமும் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டிருந்தது. இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த ஊர்தி பவணி, முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து கடந்த 12ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த ஊர்திப் பவணியானது, இன்றைய தினம் கிளிநொச்சி பரந்தன் ஊடாக முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் முற்றத்தை சென்றடையவுள்ளது.

இதேவேளை, இலங்கையில் போரின் போது பணியாற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரி கோர்டன் வெயிஸ் 9வது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உரையை ஆற்றவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அவர் ஆயுதப் போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கையில் ஐக்கிய நாடுகளின் பேச்சாளராக பணியாற்றினார்.இந்தநிலையில் இன்று நியூயோர்க்கில் அவர் தமது நினைவேந்தல் உரையை நிகழ்த்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

https://thinakkural.lk/article/254201

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் முற்றத்தை நோக்கி நகரும் தாயக நினைவேந்தல் அமைப்பின்  தமிழ் இனப்படுகொலை ஊர்திப் பவனி

18 May, 2023 | 09:46 AM

image

தாயக நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோரியும் இனப்படுகொலையை இளஞ்சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும்  முல்லைத்தீவில் இருந்து முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவு படங்கள் தாங்கிய ஊர்திப் பவனியானது கடந்த 12 ம் திகதி தொடங்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்த காலப் பகுதியில் கடுமையான ஷெல் தாக்குதல்கள் மற்றும் விமானத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களால் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்பட்ட கப்பலடிப் பகுதியிலிருந்து  முள்ளிவாய்க்கால் மண்ணினை எடுத்து  தொடங்கிய இந்த ஊர்திப் பவனியானது வவுனியா சென்று  மன்னார் சென்று அங்கிருந்து வெள்ளாங்குளம்  ஊடாக மல்லாவி நகரை அடைந்து மாங்குளம் கிளிநொச்சி பூநகரி சாவகச்சேரி ஊடாக யாழ்ப்பாணத்தை சென்றடைந்து அங்கு பல்வேறு இடங்களுக்கும் சென்று ஆறாவது நாள் பயணம் புதன்கிழமை (17) காலை வரணி மத்திய கல்லூரி முன்றலில் இருந்து ஆரம்பமானது.

இந்த ஊர்தி பவனியானது கொடிகாமம் பளை பரந்தன் தர்மபுரம் விசுவமடு ஊடாக வள்ளிபுனம் பகுதியை வந்தடைந்துள்ளது.

இந்த தமிழ் இனப்படுகொலை ஊர்திக்கு பல்வேறு பகுதிகளிலும் அதிகளவான மக்கள்  திரண்டு அஞ்சலி செலுத்தினர் .

இதனை தொடர்ந்து இன்று (18) காலை வள்ளிபுனம் செஞ்சோலை வளாக சந்தியில் இருந்து ஆரம்பமாகும் ஊர்தி பவனி புதுக்குடியிருப்பு சந்தி சென்று காலை 8 மணிக்கு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இருந்து ஊர்தியுடன் மோட்டார் சைக்கிள்கள் முச்சக்கர வண்டிகள் அடங்கிய மாபெரும் வாகன பேரணியாக முள்ளிவாய்க்கால் முற்றத்தை சென்றடையவுள்ளதாகவும்  எனவே அனைவரையும் இந்த வாகன பேரணியில்  கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

received_143237988662454.jpeg

received_148772481389541.jpeg

received_785984989504475.jpeg

received_578408317609419.jpeg

received_1339467650244220.jpeg

received_9420473161358312.jpeg

received_977730313662457.jpeg

received_626711055705002.jpeg

received_641224680740287.jpeg

received_1241653600044263.jpeg

received_3516669555243702.jpeg

received_641024537362694.jpeg

received_572238701660374.jpeg

received_1423497475069462.jpeg

received_1588432291647375.jpeg

received_1342259643035201.jpeg

received_148511218082323.jpeg

received_248322147782589.jpeg

received_264775392672593.jpeg
 

https://www.virakesari.lk/article/155561

  • கருத்துக்கள உறவுகள்

kuthu vilakku . . | Yuvaraaj Satyanarayanan | Flickr

இறுதிப் போரில் மரணித்த பொது மக்களுக்கும், போராளிகளுக்கும்…
இதயம் கனத்த… நினைவு அஞ்சலிகள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

IMG-4060.jpg

  • கருத்துக்கள உறவுகள்

போரில் மரணித்த போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் நினைவஞ்சலிகள்.......!

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கு கூட்டமைப்பினைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட  26 பேருக்கு தடை

14ஆவது ஆண்டு நினைவேந்தல் : முள்ளிவாய்க்கால் பிரகடனம் !!

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்ததில் கொல்லப்பட்ட உறவுகளுக்கான 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது,

இந்நிலையில் போரின் சுவடுகளை தாங்கிய முள்ளிவாய்க்காலில் முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

இதன்போது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14ஆவது ஆண்டு நினைவேந்தலின் முள்ளிவாய்க்கால் பிரகடனம் வாசிக்கப்பட்டது.

mullivaikaal-pirakdanam.jpg

mullivaikaal-pirakdanam1.jpg

mullivaikaal-pirakdanam2.jpg

https://athavannews.com/2023/1332140

 

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல் ஆரம்பம்!!

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல் ஆரம்பம்!!

முள்ளிவாய்கால் நினைவுமுற்றத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ சற்றுமுன் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலி இடம்பெற்று வருகின்றது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த நிகழ்வில் போரில் 14 உறவுகளை இழந்த, மன்னாரைச் சேர்ந்த கொன்சியூலஸ் வினிதா எனும் தாயொருவரால் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது.
mulli1.jpg
 
mulli12.jpg
 
mulli13.jpg
 
  • கருத்துக்கள உறவுகள்

போரில் மரணித்த போராளிகளுக்கும் பொது மக்களுக்கும்நினைவஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் விடுதலைக்கு எது சரியான வழி என்று பட்டதோ அந்த வழியை எந்த சமரசத்துக்கும் உட்படாமல் நடத்தி அதற்க்கு தன்னையும் தன் மனைவி பிள்ளைகள் ஆகியோரையும் ஆகுதி ஆக்கிக் கொண்ட என் இனத்தின் தலைவனுக்கு வீர வணக்கம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறுதிப்போரில் மரணித்த மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் நினைவஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளினால் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஸ்டிப்பு

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளினால் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஸ்டிப்பு

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளினால் இன்று முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது,

வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகில் அமைதிவழி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன்   அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
  • கருத்துக்கள உறவுகள்

2023 மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் இலட்சக்கணக்கில் குவிந்த மக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்

Published By: VISHNU

18 MAY, 2023 | 12:48 PM
image

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இன்று வியாழக்கிழமை மே 18 முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் இறுதி நாள் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

S7950026.JPG

அந்தவகையில் கிரான் சின்னவெம்பு கிராமத்தில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் உறவுகளும் தமிழர் தாயக மக்களும் இணைந்து இன்று காலை இவ் நினைவு தினத்தினை நினைவு கூர்ந்தனர்.

S7950039.JPG

இதன்போது உயிர் நீத்த உறவுகளினை நினைவு கூர்ந்து அக வணக்கம் செலுத்தப்பட்டு ஈகைச் சுடர் ஏற்றியதுடன் மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

S7950024.JPG

நிகழ்வின் இறுதியில் உயிர் நீத்தவர்களின் நினைவாக தென்னங் கன்றுகளும் வழங்கப்பட்டன. அத்துடன் தமிழர் தாயக மக்கள் அமைப்பின் இணைப்பாளர் குருசுமுத்து வி.லவக்குமார் முள்ளி வாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் நிவைவேந்தல் தொடர்பாக உரையாற்றினார். 

S7950019.JPG

S7950008.JPG

S7950011.JPG

https://www.virakesari.lk/article/155587

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தழிழகத்திலும் முன்னெடுப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தழிழகத்திலும் முன்னெடுப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த ஈழத்தமிழர் நினைவாக கோஷங்களை எழுப்பியதோடு, பதாததைகளை ஏந்தியவாறும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சென்னையிலுள்ள மெரினா கடற்கரையில் அமைக்க வேண்டும். மே 18 நினைவு தமிழின அழிப்பு நாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1332194

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Published By: VISHNU

18 MAY, 2023 | 01:54 PM
image

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் வியாழக்கிழமை (18) உணர்வு பூர்வமாக தமிழ் பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மன்னாரிலும் அனுஷ்டிக்கப்பட்டது.

DSC_1244.JPG

தமிழின படுகொலை வாரத்தை முன்னிட்டு இனப் படுகொலைக்கு நீதி கோரியும் முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்தும் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் இனப்படுகொலை குறித்து பல்வேறு நினைவேந்தல்கள் இடம் பெற்று வரும் நிலையில்,  வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் வியாழக்கிழமை (18) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம் பெற்றது.

DSC_1236.JPG

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மெசிடோ நிறுவனத்தின் அனுசரணையில்  மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் தமிழின படுகொலை அஞ்சலி நிகழ்வுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டது.

DSC_1230.JPG

அஞ்சலி ஏற்பாடு செய்யப்பட்ட பகுதிகளில்  தமிழின படுகொலை நினைவு நாள் மே-18 எனும் தொனிப்பொருளில் பதாகை காட்சிப்படுத்தப்பட்டு வெள்ளைக்கொடி மற்றும் வெள்ளை நிற தோரணங்கள் பறக்கவிடப்பட்டுள்ளது.

DSC_1226.JPG

இதன் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

DSC_1223.JPG

குறித்த நினைவேந்தல் மற்றும் கஞ்சி வழங்கும் நிகழ்வில் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ மற்றும் மெசிடோ நிறுவன பணியாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

DSC_1208.JPG

DSC_1218.JPG

https://www.virakesari.lk/article/155596

  • கருத்துக்கள உறவுகள்

எவ்ளவு காலம் போனாலும் மிகவும் சோகமான நாட்கள் இவை. என்ன செய்ய காலத்தின் விதியை மாற்ற பயணம் தொடரவேண்டும்.

Diwali Oil Lamp Stock Photo - Download Image Now - Diwali, Diya - Oil Lamp,  Oil Lamp - iStock

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப்போரில் வீரசாவடைந்த பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்ககாலில் மரணித்த பொதுமக்கள், போராளிகள் அனைவருக்கும் நினைவு அஞ்சலி.🪔

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப்போரில் மரணித்த போராளிகள் 
மற்றும் பொதுமக்களுக்கு வீரவணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப்போரில் மரணித்த மாவீரர்களுக்கு வீரவணக்கங்களும் பொதுமக்களுக்கு நினைவஞ்சலிகளும்....

முள்ளிவாய்க்காலில் முடிந்து போன எம் தலைமுறையின் போரின் இறுதியில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றேன். 
இதே போரில் கொல்லப்பட்ட  போராளிகளுக்கும் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும் வீரவணக்கத்தையும் செலுத்துகின்றேன்.

ஒரு இனம் மேலாதிக்கம் செய்து கொண்டும், இன்னொரு இனம் அதன் ஆதிக்கத்தின் கீழ் வீழ்ந்து கிடக்கும் வரை போர் என்பது ஓய்வதில்லை. அதன் வடிவங்களும் நிகழும் காலங்களும் வேண்டும் என்றால் மாறாலாம்.
 

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலையில் தடையையும் மீறி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

image

திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு தடைவிதிக்கும் முகமாக திருகோணமலை பொலிஸாரினால் சில அமைப்புகளுக்கும் அமைப்புகளின் தலைவர்களுக்கும் வியாழக்கிமை (18) தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

IMG_20230518_095114.jpg

அந்தவகையில் பல இடங்களில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி வழங்கும் நிகழ்வு தடைப்பட்டிருந்தபோதும் பல இடங்களில் மக்கள்  முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியினை பகிர்ந்து முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூர்ந்திருந்தனர்.

அந்தவகையில் திருகோணமலை அலஸ்தோட்டம் இறை இரக்க ஆலயத்தில் இடம்பெற்றபோது.

IMG_20230518_094747.jpg

IMG_20230518_093849.jpg

IMG_20230518_093807.jpg

திருகோணமலையில் தடையையும் மீறி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

எமது தேசத்தின் விடுதலைக்காகவும், எமது மக்களின் நலன்களுக்காகவும் இறுதிவரை நின்று சமராடி ஈற்றில் தனது உயிரையும் எமக்காகக் கொடுத்த எமது தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், பல வீர வலாறுகளின் நாயகர்களாகத் திகழ்ந்த எமது தளபதிகள் மற்றும் தோளோடு தோள் நின்று களமாடி வீரச்சாவடைந்த போராளிகளுக்கும், தாயக விடுதலையினை ஆதரித்து நின்றதாலேயே கொன்றொழிக்கப்பட்ட எமது உறவுகளுக்கும் எனது சிரம் தாழ்த்திய வீரவணக்கமும், கண்ணீர் அஞ்சலிகளும் !!!

நாம் மீண்டும் உயிர்பெறுவோம். விடுதலைக்கான எமது கனவு எப்போதும் உயிர்ப்புடனிருக்கும் !! எமது விடுதலைப் போராட்டம் வெற்றிபெற என்னாலான அனைத்து வழிகளிலும் நான் செயற்படுவேன் !

புலிகளினதும், தமிழரினதும் தாகம் தமிழீழத் தாயகமே !

  • கருத்துக்கள உறவுகள்

எமது தேசத்தின் விடிவுக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய தலைவனுக்கும், போராளிகளுக்கும் எனது வீரவணக்கத்தையும், பொதுமக்களுக்கு எனது இதய அஞ்சலியையும் செலுத்துகின்றேன். 🙏 எம்மினம் ஒருநாள் விடுதலையடையும் என்ற நம்பிக்கையுடன்!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.