Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தமிழர் இனப்படுகொலை குறித்து கனடா பிரதமர் விடுத்த அறிக்கைக்கு இலங்கை கண்டனம்- இராஜதந்திர முறுகல்

Published By: Rajeeban

19 May, 2023 | 10:30 AM
image

தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் தினத்தை அங்கீகரிக்கும் விதத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ  தெரிவித்துள்ள கருத்துக்களை தொடர்ந்து இலங்கைக்கும் கனடாவிற்கும் இடையில் இராஜதந்திரமோதல் ஏற்பட்டுள்ளது.

கனடா பிரதமர் விடுத்துள்ள அறிக்கையை இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கண்டித்துள்ளார்.

இன்று நாங்கள் 14 வருடங்களிற்கு பின்னர் துன்பகரமான விதத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை நினைகூறுகின்றோம் என தெரிவித்துள்ள கனடா பிரதமர் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலையில்உட்பட  ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்கள் இழக்கப்பட்டன,பலர் காணாமல்போனார்கள் காயமடைந்தார்கள் இடம்பெயர்ந்தார்கள் என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் மற்றும் அர்த்தமற்ற வன்முறையால் ஏற்பட்ட துயரத்துடன் தொடர்ந்தும் வாழும் அவர்களின் குடும்பத்தவர்கள் குறித்து எங்கள் சிந்தனைகள் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின் பல சமூகங்களில் நான் சந்தித்த பலர் தமிழ் கனடா பிரஜைகளின் கதைகள் மனித உரிமைகள் சமாதானம் ஜனநாயகம் போன்றவற்றை இலகுவாக கருதமுடியாது என்பதை நினைவுபடுத்தி நிற்கின்றன எனவும் கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாகவே கடந்த வருடம் மே18ம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவுதினமாக நாங்கள் அங்கீகரித்தோம் என தெரிவித்துள்ள கனடா பிரதமர் மோதலால் கொல்லப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் உரிமைக்காகவும்  இலங்கையில் தொடர்ந்தும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளவர்களிறகாக  குரல்கொடுப்பதை கனடா நிறுத்தாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த அறிக்கையை கண்டித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர்  இது இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகளி;ற்கு உதவியாக அமையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 
https://www.virakesari.lk/article/155654

  • Replies 61
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பெருமாள்

கனடா பிரதமரை பணபெட்டி சொகுசு வீடு போன்றவையை வாங்கி கொண்டு பல் இழிக்கும் சுமத்திரன் சம்பந்தன் போல் இலங்கை இந்திய அரசுகள் பார்க்க ********முட்டாள்தனம்  ****** பொருந்திய நாட்டின் அதிபர்   . நடந்தது இனஅழி

ரஞ்சித்

உண்மை, நானும் அங்கிருந்தேன். கெவின் ரட் வெளியில் வந்துகூடப் பார்க்கவில்லை. மேலும், மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு மைதானம் ஒன்றிற்குச் செல்லுமாறு அழுத்தம் கொடுப்பதற்காக கலகம் அடக்கும் பொலீஸாரு

satan

உண்மையை கூறினால்; நல்லிணக்கம் கெடுகிறது. உரிமையை கேட்டால்; நல்லிணக்கம் கெடுகிறது. அப்படி ஒன்று இருந்தாற்தானே கெடுகிறதற்கு? அது கெட்டு பல சகாப்தங்கள் கடந்துவிட்டது, அது இவர்களுக்கு விளங்கவில்லை அது இரு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒப்பீட்டளவில் கனடிய தமிழர்கள் அவுஸ்ரேலிய தமிழர்களை விட பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் செல்வாக்கு செலுத்துகின்றனர், 2009 இல் அவுஸ்ரேலிய முன்னாள் இடதுசாரிக்கட்சியினை சேர்ந்த பிரதமரின் சிட்னி உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக தமிழர்கள் அமைதியான முறையில் வீதி மறியல் செய்திருந்தனர், அப்போது பிரதமர் அலுவலகம் அமைதி காத்திருந்தது, பின்னர் ஆட்சிக்கு வந்த வலதுசாரி கட்சி இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கையில் தமிழருக்கு எந்த பிரச்சினையுமில்லை என்ற விடயத்தினை கூறியிருந்தது, அத்துடன் நிற்காமல் இலங்கைக்கு கடற்கலஙளையும் வழங்கியிருந்தது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

May 18, 2023
Ottawa, Ontario
 
The Prime Minister, Justin Trudeau, today issued the following statement on Tamil Genocide Remembrance Day:

“Today, we reflect on the tragic loss of life during the armed conflict in Sri Lanka, which ended 14 years ago. Tens of thousands of Tamils lost their lives, including at the massacre in Mullivaikal, with many more missing, injured, or displaced. Our thoughts are with the victims, survivors, and their loved ones, who continue to live with the pain caused by this senseless violence.

“The stories of Tamil-Canadians affected by the conflict – including many I have met over the years in communities across the country – serve as an enduring reminder that human rights, peace, and democracy cannot be taken for granted. That’s why Parliament last year unanimously adopted the motion to make May 18 Tamil Genocide Remembrance Day. Canada will not stop advocating for the rights of the victims and survivors of this conflict, as well as for all in Sri Lanka who continue to face hardship.

“In October 2022, we joined our international partners in adopting an United Nations Human Rights Council (UNHRC) resolution that calls on the Sri Lankan government to address the human rights, economic, and political crises in the country. Canada has been a global leader in the adoption of other UNHRC resolutions calling for freedom of religion, belief, and pluralism in Sri Lanka – essential elements to secure peace and reconciliation in the years to come – and we will continue our work to safeguard human rights across the world. And in January 2023, our government imposed sanctions against four Sri Lankan government officials in response to human rights violations on the island.

“On behalf of the Government of Canada, I invite all Canadians to recognize the many contributions that Tamil-Canadians have made – and continue to make – to our country. I also encourage everyone to learn more about the impact of the armed conflict in Sri Lanka, and express solidarity to all those who suffered or lost loved ones.”

https://pm.gc.ca/en/news/statements/2023/05/18/statement-prime-minister-first-tamil-genocide-remembrance-day

வீரகேசரி டெல்லி ஊதும் மகுடிக்கு ஆடும் நாகபாம்பு .நேரடியாக் தமிழர் இனபடுகொலை எனும் Genocide Remembrance Day என்ற பதம் தலையங்கத்தில் வைத்து இருக்கலாம் .

Edited by பெருமாள்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கனடா பிரதமரை பணபெட்டி சொகுசு வீடு போன்றவையை வாங்கி கொண்டு பல் இழிக்கும் சுமத்திரன் சம்பந்தன் போல் இலங்கை இந்திய அரசுகள் பார்க்க ********முட்டாள்தனம்  ****** பொருந்திய நாட்டின் அதிபர்   . நடந்தது இனஅழிப்பு இல்லை நிறுவ முடியாது   என்று சொல்பவர்கள் எல்லாம் கருணா பிள்ளையானை விட மோசமானவர்கள் .

Edited by பெருமாள்
தணிக்கை
  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, கிருபன் said:

இது இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகளி;ற்கு உதவியாக அமையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையை கூறினால்; நல்லிணக்கம் கெடுகிறது. உரிமையை கேட்டால்; நல்லிணக்கம் கெடுகிறது. அப்படி ஒன்று இருந்தாற்தானே கெடுகிறதற்கு? அது கெட்டு பல சகாப்தங்கள் கடந்துவிட்டது, அது இவர்களுக்கு விளங்கவில்லை அது இருந்திருந்தால் ஏன் மற்றவர்கள் சுட்டிகாட்டப்போகிறார்கள்? சுட்டிக்காட்டுவதால் நெஞ்சு சுடுகுதுபோல் குதிக்கிறார்கள்.

3 hours ago, கிருபன் said:

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ  தெரிவித்துள்ள கருத்துக்களை தொடர்ந்து இலங்கைக்கும் கனடாவிற்கும் இடையில் இராஜதந்திரமோதல் ஏற்பட்டுள்ளது.

ராஜதந்திர மோதல், ஆயுத மோதலாக  மூளாமல் யாராவது தடுத்து நிறுத்துங்கள். இல்லையெனில் கனடா அழிவைச்சந்திக்க நேரிடும்!

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பெருமாள் said:

வீரகேசரி டெல்லி ஊதும் மகுடிக்கு ஆடும் நாகபாம்பு .நேரடியாக் தமிழர் இனபடுகொலை எனும் Genocide Remembrance Day என்ற பதம் தலையங்கத்தில் வைத்து இருக்கலாம் .

தமிழ்ப் பத்திரிகைகளே... தமிழனுக்கு சார்பாக இல்லாமல், 
சிங்ககளத்துக்கு நோகாமல் இருக்க பாடுபடும் போது,
மற்றவன்... இன்னும் ஏறி மிதிப்பான். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சும்மா விடபடாது உந்த கனடாக்காரரை.

கனடாவுக்கான இலங்கை உதவிகள் அனைத்தையும் நிறுத்த வேண்டும்.

நாலு யுத்த விமானத்தை அனுப்பி, பயமுறுத்த வேணும். இரண்டு ரொக்கெட்டினை ஒட்டவா பக்கமா விடவேணும்.

கனடா தூதரை துரத்த வேண்டும். அங்கை இருக்கிற இலங்கை தூதரை திருப்பி கூப்பிடவேணும். ராஜதந்திர உறவை கட் பண்ண வேணும்.

இரண்டு வெருட்டு போட்டால் தான், வாயை மூடிக்கொண்டு இருப்பினம். 🤪

2 hours ago, தமிழ் சிறி said:

தமிழ்ப் பத்திரிகைகளே... தமிழனுக்கு சார்பாக இல்லாமல், 
சிங்ககளத்துக்கு நோகாமல் இருக்க பாடுபடும் போது,
மற்றவன்... இன்னும் ஏறி மிதிப்பான். 

Edited by Nathamuni
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
38 minutes ago, Nathamuni said:

சும்மா விடபடாது உந்த கனடாக்காரரை.

கனடாவுக்கான இலங்கை உதவிகள் அனைத்தையும் நிறுத்த வேண்டும்.

நாலு யுத்த விமானத்தை அனுப்பி, பயமுறுத்த வேணும். இரண்டு ரொக்கெட்டினை ஒட்டவா பக்கமா விடவேணும்.

கனடா தூதரை துரத்த வேண்டும். அங்கை இருக்கிற இலங்கை தூதரை திருப்பி கூப்பிடவேணும். ராஜதந்திர உறவை கட் பண்ண வேணும்.

இரண்டு வெருட்டு போட்டால் தான், வாயை மூடிக்கொண்டு இருப்பினம். 🤪

இதைத்தான் விரைவில் எதிர்பார்த்தேன்..சொல்லிப்போட்டியள்.....அடபோங்கப்பா..சீனனுக்கே சீனவெடி கொழுத்திப்போட்ட கனடாவுக்குக்கு..ஶ்ரீலங்கா ஒரு தூசூ....

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, alvayan said:

இதைத்தான் விரைவில் எதிர்பார்த்தேன்..சொல்லிப்போட்டியள்.....அடபோங்கப்பா..சீனனுக்கே சீனவெடி கொழுத்திப்போட்ட கனடாவுக்குக்கு..ஶ்ரீலங்கா ஒரு தூசூ....

கனடா வாழ் தமிழர்களின் உழைப்பதற்கு தலை வணங்குகிறேன்’....தொடர்ந்தும்  உழையுஙகள்.   தீர்வு விரைவில் கிடைக்கலாம்    

5 hours ago, பெருமாள் said:

கனடா பிரதமரை பணபெட்டி சொகுசு வீடு போன்றவையை வாங்கி கொண்டு பல் இழிக்கும் சுமத்திரன் சம்பந்தன் போல் இலங்கை இந்திய அரசுகள் பார்க்க ********முட்டாள்தனம்  ****** பொருந்திய நாட்டின் அதிபர்   . நடந்தது இனஅழிப்பு இல்லை நிறுவ முடியாது   என்று சொல்பவர்கள் எல்லாம் கருணா பிள்ளையானை விட மோசமானவர்கள் .

உண்மை தான்  ...ஆனால் அவர்களை யார்  பாராளுமன்றம் அனுப்பினாங்க??.    உங்கள் தமிழ் மக்கள் இல்லையா   பெருமாள்   ??? 

  • Like 2
Posted
4 hours ago, தமிழ் சிறி said:

தமிழ்ப் பத்திரிகைகளே... தமிழனுக்கு சார்பாக இல்லாமல், 
சிங்ககளத்துக்கு நோகாமல் இருக்க பாடுபடும் போது,
மற்றவன்... இன்னும் ஏறி மிதிப்பான். 

வெளி நாடுகளில் வசிக்கும் தமிழர்களில் எத்தனை பேர் தம் சொந்த பெயரில் இருக்கும் முகனூலிலோ அல்லது தம் சொந்த டுவிற்றர் கணக்கிலோ மே 18 இனை இனப்படுகொலை நாள் என்று துணிந்து பதிவிட்டார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, தமிழ் சிறி said:

தமிழ்ப் பத்திரிகைகளே... தமிழனுக்கு சார்பாக இல்லாமல், 
சிங்ககளத்துக்கு நோகாமல் இருக்க பாடுபடும் போது,
மற்றவன்... இன்னும் ஏறி மிதிப்பான். 

யாரப்பா இது...🥺

தமிழ் மொழியில் இலங்கையில்  வெளிவரும் இந்தியப் பத்திரிகை. இந்திய பத்திரிகை இலங்கைத் தமிழருக்குச் சார்பாக  செய்திகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கலாமா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, பெருமாள் said:

May 18, 2023
Ottawa, Ontario
 
The Prime Minister, Justin Trudeau, today issued the following statement on Tamil Genocide Remembrance Day:

“Today, we reflect on the tragic loss of life during the armed conflict in Sri Lanka, which ended 14 years ago. Tens of thousands of Tamils lost their lives, including at the massacre in Mullivaikal, with many more missing, injured, or displaced. Our thoughts are with the victims, survivors, and their loved ones, who continue to live with the pain caused by this senseless violence.

“The stories of Tamil-Canadians affected by the conflict – including many I have met over the years in communities across the country – serve as an enduring reminder that human rights, peace, and democracy cannot be taken for granted. That’s why Parliament last year unanimously adopted the motion to make May 18 Tamil Genocide Remembrance Day. Canada will not stop advocating for the rights of the victims and survivors of this conflict, as well as for all in Sri Lanka who continue to face hardship.

“In October 2022, we joined our international partners in adopting an United Nations Human Rights Council (UNHRC) resolution that calls on the Sri Lankan government to address the human rights, economic, and political crises in the country. Canada has been a global leader in the adoption of other UNHRC resolutions calling for freedom of religion, belief, and pluralism in Sri Lanka – essential elements to secure peace and reconciliation in the years to come – and we will continue our work to safeguard human rights across the world. And in January 2023, our government imposed sanctions against four Sri Lankan government officials in response to human rights violations on the island.

“On behalf of the Government of Canada, I invite all Canadians to recognize the many contributions that Tamil-Canadians have made – and continue to make – to our country. I also encourage everyone to learn more about the impact of the armed conflict in Sri Lanka, and express solidarity to all those who suffered or lost loved ones.”

https://pm.gc.ca/en/news/statements/2023/05/18/statement-prime-minister-first-tamil-genocide-remembrance-day

வீரகேசரி டெல்லி ஊதும் மகுடிக்கு ஆடும் நாகபாம்பு .நேரடியாக் தமிழர் இனபடுகொலை எனும் Genocide Remembrance Day என்ற பதம் தலையங்கத்தில் வைத்து இருக்கலாம் .

ஏனப்பு.. தமிழர் இனப்படுகொலை குறித்து என.. வீரகேசரி சரியாகத்தானே எழுதி உள்ளது? 

2 hours ago, நிழலி said:

வெளி நாடுகளில் வசிக்கும் தமிழர்களில் எத்தனை பேர் தம் சொந்த பெயரில் இருக்கும் முகனூலிலோ அல்லது தம் சொந்த டுவிற்றர் கணக்கிலோ மே 18 இனை இனப்படுகொலை நாள் என்று துணிந்து பதிவிட்டார்கள்?

சொந்த செலவில் சூனியம் வைக்க வேண்டும்? நாளைக்கு யார் யாருடன் நிற்பார்கள் என்று தெரியாது. ஆர்வ கோளாற்றில், உணர்ச்சி பிரவாகத்தில் எதையாவது பண்ணிவிட்டு கடைசியில் நாம தனியாக நிற்கவேண்டியதுதான்.

  • Haha 1
Posted
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

சொந்த செலவில் சூனியம் வைக்க வேண்டும்? நாளைக்கு யார் யாருடன் நிற்பார்கள் என்று தெரியாது. ஆர்வ கோளாற்றில், உணர்ச்சி பிரவாகத்தில் எதையாவது பண்ணிவிட்டு கடைசியில் நாம தனியாக நிற்கவேண்டியதுதான்.

ஆக, இலங்கை அரசு செய்ததை இனப்படுகொலை எனச் சொல்வது ஆர்வக்கோளாறினாலும், உணர்ச்சி பிரவாகத்தினாலுமா? இலங்கை அரசு இனப்படுகொலை யில் ஈடுபடவில்லையா?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
On 19/5/2023 at 03:25, vasee said:

ஒப்பீட்டளவில் கனடிய தமிழர்கள் அவுஸ்ரேலிய தமிழர்களை விட பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் செல்வாக்கு செலுத்துகின்றனர், 2009 இல் அவுஸ்ரேலிய முன்னாள் இடதுசாரிக்கட்சியினை சேர்ந்த பிரதமரின் சிட்னி உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக தமிழர்கள் அமைதியான முறையில் வீதி மறியல் செய்திருந்தனர், அப்போது பிரதமர் அலுவலகம் அமைதி காத்திருந்தது, பின்னர் ஆட்சிக்கு வந்த வலதுசாரி கட்சி இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கையில் தமிழருக்கு எந்த பிரச்சினையுமில்லை என்ற விடயத்தினை கூறியிருந்தது, அத்துடன் நிற்காமல் இலங்கைக்கு கடற்கலஙளையும் வழங்கியிருந்தது.

அதுக்கு முன்னமே படைக்கலன்கள் &  கடற்கலஙகளை வழங்கியிருந்தவஙகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by நன்னிச் சோழன்
பிற்சேர்க்கை
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உக்ரைன் விடயத்தில் கனடாவின் நிலைப்பாடை விழுந்தடிச்சு வரவேற்கும் அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகள்.. இந்த விடயத்தில் கனடாவின் நிலைப்பாட்டை ஒத்துக்கொள்ளாதது ஏனோ..???! கனடா தனது கூட்டுகளிடம் இதனை வலியுறுத்துமா..??! இல்ல கனடா தமிழர்களின் வாக்கு போரத்துக்காக மட்டும் இந்த அறைகூவலா..??!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, நன்னிச் சோழன் said:

அதுக்கு முன்னமே கடற்கலஙகளை வழங்கியிருந்தவஙகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி உங்களது தகவலுக்கு, அவுஸ்ரேலியாவில் தமிழர்களின் அரசியல் முயற்சிகளைவிட சிங்களவர்கள் (குறிப்பாக கல்வி சார் சமூகம்) தொடர்ச்சியாக மேலாதிக்கம் செலுத்தினர், பத்திரிகைகளின் ஆக்கங்கள் எழுதுவதிலிருந்து, தமிழர் தொண்டு நிறுவனங்களை முடக்குவது என தீவிரமாக செயல்பட்டனர்.

அவுஸ்ரேலியாவில் உள்ள தமிழர்களிடையே (பெரும்பாலான தமிழர்கள்) தாம் மற்ற நாடுகளில் உள்ள தமிழர்களைவிட கல்வியில் உயர்ந்தவர்கள் எனும் எண்ணம் இருந்தது(ஆனாலும் என்னைப்போலவே பல கல்வி சார்பற்ற அகதிகளாக வந்த தமிழர்கள் இருந்தார்கள்) அதனால் மற்ற நாடுகளைபோல இலகுவாக தமிழர் ஓரணியில் நின்று சிங்களத்தின் படுகொலைகளை வெளிப்படுத்தமுடியவில்லை.

இந்த கல்விசார் சமூகம் ஒரு வித்தியாசமான உலகில் வாழ்ந்தார்கள், வாழ்கின்றார்கள், அவர்களது வீடுகளில் சிங்கள கலைப்படைப்புகள் வீட்டு வரவேற்பறைகளில் காணப்படும்.

ஒரு சாதாரண மனித அவலத்தை கூட கண்டும் காணாமல் கடந்த சமூகமாக இருக்ககூடியளவில் இருந்தார்கள்.

ஆனால் முழுக்க முழுக்க அவர்களில் குற்றம் சொல்லி கடந்துவிடமுடியாது,

இரண்டு சமூகமாக தமிழர்கள் இங்குள்ளார்கள் என்பதே இந்த பிரச்சினைகளுக்கு காரணம்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாக்கு அரசியல்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கனடா பிரதமர் சிங்கத்தோடு மோதுகிறார். இது நெருப்புடன் விளையாடுவதற்கு சமம்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, குமாரசாமி said:

வாக்கு அரசியல்.

வாக்கு அரசியலா என்பது தெரியவில்லை, ஏனென்றால் தமிழர்கள் அவுஸ்ரேலியாவில் சிங்களவர்களை விட கூட வசிக்கிறார்கள் என கருதுகிறேன், செயற்பாடு மற்றும் அவுஸ்ரேலிய நாட்டின் தேசிய நலனும் எமக்கெதிராக இருந்தது என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, nedukkalapoovan said:

உக்ரைன் விடயத்தில் கனடாவின் நிலைப்பாடை விழுந்தடிச்சு வரவேற்கும் அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகள்.. இந்த விடயத்தில் கனடாவின் நிலைப்பாட்டை ஒத்துக்கொள்ளாதது ஏனோ..???! கனடா தனது கூட்டுகளிடம் இதனை வலியுறுத்துமா..??! இல்ல கனடா தமிழர்களின் வாக்கு போரத்துக்காக மட்டும் இந்த அறைகூவலா..??!

வாக்கு...தமிழருக்கு கனடாவில் எப்படி வந்தது???.     அவர்கள் தந்த வாக்கை தான்   அவர்களுக்கு போடுகிறோம்.....மட்டுமல்ல எங்கள் சார்பாக கதைக்கும்படி    செய்வது    திறமை தான்  

5 minutes ago, vasee said:

வாக்கு அரசியலா என்பது தெரியவில்லை, ஏனென்றால் தமிழர்கள் அவுஸ்ரேலியாவில் சிங்களவர்களை விட கூட வசிக்கிறார்கள் என கருதுகிறேன், செயற்பாடு மற்றும் அவுஸ்ரேலிய நாட்டின் தேசிய நலனும் எமக்கெதிராக இருந்தது என கருதுகிறேன்.

கனடா பாராளுமன்றத்தில் ஒரு சட்டம் கொண்டு வருவதான்.  மூலம்    இந்த வாக்குகளை   பறிக்க முடியும்.........ஆகவே வாக்கு அரசியல் என்பது ஏற்புடையதல்ல 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, vasee said:

வாக்கு அரசியலா என்பது தெரியவில்லை, ஏனென்றால் தமிழர்கள் அவுஸ்ரேலியாவில் சிங்களவர்களை விட கூட வசிக்கிறார்கள் என கருதுகிறேன், செயற்பாடு மற்றும் அவுஸ்ரேலிய நாட்டின் தேசிய நலனும் எமக்கெதிராக இருந்தது என கருதுகிறேன்.

தெரியாமல் சொல்லிவிட்டேன். மன்னிக்கவும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த அறிக்கை வராமல் தடுப்பதற்கே, இலங்கை முந்திக்கொண்டு கனடாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்தல் என்கிற ஆதாரமற்ற குற்றச்சாட்டை எழுப்பியது. இலங்கை எப்படிப்பட்டது என்பதை அதன் செயல், சொற்கள், கொடுக்கும் வாக்குறுதிகள்,  மீறல்களை அவதானிக்கும் யாராலும் இலகுவாக கண்டுபிடித்துவிட முடியும். உவர்களின் ஏமாற்று எல்லா இடங்களிலும் எப்போதும் பலிக்காது. அலி சப்ரி உதோடு வாயை மூடிக்கொண்டிருப்பது நல்லது, இல்லையோ மூக்குடைப்படுவது நிட்சயம்.

30 minutes ago, nedukkalapoovan said:

கனடா தனது கூட்டுகளிடம் இதனை வலியுறுத்துமா..??!

முன்பொருதடவை கோரிக்கை வைத்திருந்தது என நினைக்கிறன்.

20 minutes ago, குமாரசாமி said:

வாக்கு அரசியல்.

அதுமட்டுமல்ல.... அவர்களின் கடின உழைப்பு, காய் நகர்த்தல்கள், அரசியலில் உள்ள ஈடுபாடு, தாய் நாட்டிலுள்ள அக்கறை, விடா முயற்சி இளம் சந்ததியினரின்  ஆர்வம் இவைகளுந்தான்!      

நாங்களும் தான் தவறாமல் வாக்குப்போட்டு அனுப்பி விட்டு காத்திருக்கிறோமல்லவா, ஏதாவது அசைக்க முடிந்ததா எம்மால்?

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted
7 hours ago, vasee said:

நன்றி உங்களது தகவலுக்கு, அவுஸ்ரேலியாவில் தமிழர்களின் அரசியல் முயற்சிகளைவிட சிங்களவர்கள் (குறிப்பாக கல்வி சார் சமூகம்) தொடர்ச்சியாக மேலாதிக்கம் செலுத்தினர், பத்திரிகைகளின் ஆக்கங்கள் எழுதுவதிலிருந்து, தமிழர் தொண்டு நிறுவனங்களை முடக்குவது என தீவிரமாக செயல்பட்டனர்.

அவுஸ்ரேலியாவில் உள்ள தமிழர்களிடையே (பெரும்பாலான தமிழர்கள்) தாம் மற்ற நாடுகளில் உள்ள தமிழர்களைவிட கல்வியில் உயர்ந்தவர்கள் எனும் எண்ணம் இருந்தது(ஆனாலும் என்னைப்போலவே பல கல்வி சார்பற்ற அகதிகளாக வந்த தமிழர்கள் இருந்தார்கள்) அதனால் மற்ற நாடுகளைபோல இலகுவாக தமிழர் ஓரணியில் நின்று சிங்களத்தின் படுகொலைகளை வெளிப்படுத்தமுடியவில்லை.

இந்த கல்விசார் சமூகம் ஒரு வித்தியாசமான உலகில் வாழ்ந்தார்கள், வாழ்கின்றார்கள், அவர்களது வீடுகளில் சிங்கள கலைப்படைப்புகள் வீட்டு வரவேற்பறைகளில் காணப்படும்.

ஒரு சாதாரண மனித அவலத்தை கூட கண்டும் காணாமல் கடந்த சமூகமாக இருக்ககூடியளவில் இருந்தார்கள்.

ஆனால் முழுக்க முழுக்க அவர்களில் குற்றம் சொல்லி கடந்துவிடமுடியாது,

இரண்டு சமூகமாக தமிழர்கள் இங்குள்ளார்கள் என்பதே இந்த பிரச்சினைகளுக்கு காரணம்.

உந்த மேட்டுக்குடி வகையறாக்களை இலகுவா விளங்குற மாதிரி நானொன்டு  சொல்லட்டே... சில பேருக்கு புண்ணில புளி போட்ட மாதிரி பத்தும். 

அதுக்கு முதலிலை ஒரு சின்ன நினைவு மீள்வு.

இயக்கம் 95ஆம் ஆண்டு யாழிலை வசிச்ச 10 இலட்சம் பேரிலையிருந்து வெறும் 5,000 பேரை நொண்டியையும் அவன் கொண்டுவந்திருக்கிற 20,000 பேரையும் அடிச்சுத் துரத்த வாங்கோ என்டு சொன்ன போது, சூரியக்கதிரை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு ஓடித் தப்பினவை 3 இலட்சம் பேர். 

"ஓடிப் போனவர்கள் பேடிகள்....." என்ற இந்த வரலாறு சுமந்த கவிதை ஞாபகம் இருக்குமென்டு நினைக்கிறன். சில பேருக்கு இதைக் கேட்டால் மண்டையாலை போகுமாம், ஏனென்டால் தங்களின்ர குட்டுகளை வெளிக்காட்டுற கவிதை என்டபடியாலை. யாழிலையும் சூடான வாதங்கள் நடந்கது சில மாதங்களுக்கு முன்னர், இது தொடர்பாய் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தக் கவிதை வாறதுக்கு முன்னாலை இயக்கம் சனத்தை அடிபட வாருங்கோ என்டு கெஞ்சிக் கேட்டு உதயன், ஈழநாதம் மற்றும் யாழிலை இருந்து வெளியான நாளேடுகள் மற்றும் இதழ்களில் விட்ட கட்டுரைகளை பல பத்து (எல்லாம் எடுத்து வைச்சிருக்கிறன்.) ஆனால் சேர்ந்தவர்கள் 2000 ஆயிரத்திற்கும் குறைவானவர்கள். இதனாலை யாழில் இருந்து முற்றாகத் தமிழர் சேனை பின்வாங்கியது. அன்றேல் மற்றொரு பின்னோக்கிப் பாய்ச்சலே சிங்களத்தின் வரலாறாயிருக்கும் என்பது வெள்ளிடமலை.

இந்தக் காண்டில், புலிகள், சனத்தின்ர கோழைத் தனத்தை, குறிப்பாய் இந்த வாச்சான் பிழைச்சான் என்டு வெளிநாடுகளுக்கு ஓடின யாழைப் பிறப்பிடமாகக் கொண்ட கோழைத் தமிழர்களை ("யாழ்ப்பாணிகள்" என்டு வசியுங்கோவன், இன்னும் சூடேறும்), சாடையாய் விளாசி ஒரு கட்டுரை விட்டவங்கள். அது பல வரலாறுகளைக் கொண்டிருக்குப் பாருங்கோ (அதையும் எடுத்து வைச்சிருக்கிறன்).

சரி இனி விசயத்துக்கு வருவம்.

ஆக, வெளிநாடுகளுக்கு போனவையளிலை பாதிக்குப் பாதி ஊரில் எந்தவொரு இடரும் ஏற்பாடாமல் வெளிநாட்டு மோகத்தால் ஓடினாக்கள் (ஓடிப்போய் மனம் மாறி நாட்டுக்கு ஏதேனும் செஞ்சாக்கள் மிக அரிது). அவுஸ். வாழ் தமிழர்களிலை இப்படிப்பட்ட ஆக்கள் தான் நீங்கள் சொல்லுற வகையறா. இப்பிடியான ஆக்கள் தமக்கு நடந்தால் அது வேதனை மற்றாக்களுக்கு நடந்தால் வேடிக்கை என்டு வாழுறவையள். இக்கூட்டம் (தமிழரில்) எல்லா நாடுகளிலும் (ஐரோப்பிய அமெரிக்க அவுஸ்) உண்டு. இவையள் தாமாக மனம் மாறினால் அன்றேல் மாற வழியில்லை. போதாகுறைக்கு நீங்கள் சொன்ன மாதிரி சிங்களவரோடையும் கூட்டாக வாழ்வார்கள், எமதினைத்தையே தூற்றி. நானே நேரில் கேட்டுள்ளேன்,; எமது இனத்தின் விடுதலைப் போராத்தைத் தூற்றி - இத்தனைக்கும் இதுகள் எந்தவொரு அமைப்புகளிலையும் இருந்ததில்லை!!

----------------------------------------------------------------
சும்மா ஏசாதீங்கோ. எமது நடைமுறை அரசு இருந்த போது நிறைய உதவிகள் செஞ்சவங்கள். அவுஸ்ரேலியா முந்தி ஏதிலி தகுநிலை விண்ணப்பத்தில் "தமிழீழம்" என்று போடும் படி ஏதோ வழங்கினது என்பது ஞாபத்தில் உண்டு. மற்றும் அவுஸ்திரேலியா இறுதிப் போரிலும் செய்திகளுக்கு ஏதோ செஞ்சவங்கள்.... எங்கடை சனங்கள் முன்னெடுப்புகளை நிறுத்தினதாலை இப்ப எல்லாம் உறங்கு நிலையில் உள்ளது. இளம் சந்ததிகளிலை சில பேர் மெல்லம் மெல்லமாக எழும்புறாங்கள். பாப்பம். ஆனால் உந்தக் கழுதை வயசானதுகள் திருந்தாதுகள்🤪, தங்கடை பிள்ளையளையும் மாத்தாதுகள். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, கிருபன் said:

கனடா பிரதமர் விடுத்துள்ள அறிக்கையை இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கண்டித்துள்ளார்.

விரைவில் இவரின் கண்டிப்பு பட்டியலில் அமெரிக்காவும் இணைத்துக்கொள்ளப்படும். முன்பெல்லாம் இவர்களை கண்டிப்பவர்களை  வெள்ளைப்புலி என்று அழைப்பதுண்டு, இப்போ மோதல். எல்லாப்பக்கமும் கை நீட்டல், கண்டிப்புக்கு ஒன்றும் குறைச்சலில்லை. குளத்தோடு கோவிச்சுக்கொண்டு பின்பக்கத்தை கழுவாமல் விட்ட கதைதான் வாயை கொடுத்து நாறப்போகினம். சும்மா உள்நாட்டில் கதாநாயகர்களாக கட்டிக்கொள்ள விடும் அறிக்கை. போரின் கதா நாயகனே விரட்டியடிக்கப்பட்டுவிட்டார், வெறும் உறுமலுக்கு மட்டும் குறைச்சலில்லை. செய்த குற்றத்தை மறைக்க போடும் நாடகம் உடைபட்டுப்போன அவமானம் பிடுங்குது.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி🍰
    • சிரியாவில் இருந்து தனது இராணுவத்தை மீளப் பெறும் ரஷ்யா December 15, 2024 12:45 pm ரஷ்யா வடக்கு சிரியாவின் முன்னணிப் பகுதிகளிலிருந்தும், அலவைட் மலைகளில் உள்ள நிலைகளிலிருந்தும் தனது இராணுவத்தை மீளப் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு சிரியாவில் உள்ள அதன் இரண்டு முக்கிய தளங்களை விட்டு வெளியேறவில்லை என்று நான்கு சிரிய அதிகாரிகள் ரொயிட்டர்ஸிடம் உறுதிப்படுத்தியுள்ளனர். ரஷ்யாவுடன் நெருங்கிய கூட்டணியை உருவாக்கிய அசாத்தின் ஆட்சிக்கவிழ்ப்பு, ரஷ்யாவின் தளங்களான லடாகியாவில் உள்ள ஹ்மெய்மிம் விமானத் தளம் மற்றும் டார்டஸ் கடற்படை தளத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. வெள்ளிக்கிழமை செயற்கைக்கோள் காட்சிகள், ஹ்மெய்மிம் தளத்தில், திறந்த நிலையில், ஏற்றத் தயாராகி வரும் நிலையில், குறைந்தது இரண்டு அன்டோனோவ் AN-124 விமானங்கள் இருப்பதைக் காட்டுகிறது. சனிக்கிழமை லிபியாவிற்கு குறைந்தது ஒரு சரக்கு விமானம் பறந்ததாக, சிரிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரஷ்யர்களுடன் தொடர்பு கொண்ட சிரிய இராணுவ மற்றும் பாதுகாப்பு வட்டாரங்கள், மொஸ்கோ தனது படைகளை முன் வரிசைகளில் இருந்து பின்வாங்கி, சில கனரக உபகரணங்களையும் மூத்த சிரிய அதிகாரிகளையும் திரும்பப் பெறுவதாக ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தன. ஆனால், நிலைமையின் தீவிரம் காரணமாக பெயர் குறிப்பிட விரும்பாத அந்த வட்டாரங்கள், ரஷ்யா தனது இரண்டு முக்கிய தளங்களிலிருந்து வெளியேறவில்லை என்றும், தற்போது அவ்வாறு செய்யும் எண்ணம் இல்லை என்றும் கூறின. சில உபகரணங்கள் மொஸ்கோவிற்குத் திருப்பி அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய இடைக்கால நிர்வாகத்திற்கு நெருக்கமான மூத்த கிளர்ச்சி அதிகாரி ஒருவர், சிரியாவில் ரஷ்ய இராணுவ இருப்பு மற்றும் அசாத் அரசாங்கத்திற்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான கடந்தகால ஒப்பந்தங்கள் பற்றிய பிரச்சினை விவாதிக்கப்படவில்லை என்று ரொய்ட்டர்ஸிடம் கூறினார். “இது எதிர்கால பேச்சுவார்த்தைகளுக்கான விஷயம், சிரிய மக்களே இறுதி முடிவை எடுப்பார்கள்” என்று அந்த அதிகாரி கூறினார். “எங்கள் படைகள் இப்போது லடாகியாவில் உள்ள ரஷ்ய தளங்களுக்கு அருகில் உள்ளன,” என்று அவர் மேலும் கூறினார். தளங்கள் குறித்து சிரியாவின் புதிய ஆட்சியாளர்களுடன் ரஷ்யா விவாதித்து வருவதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது. சிரியாவின் புதிய ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், ரஷ்யா அதன் தளங்களிலிருந்து விலகவில்லை என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு ரஷ்ய வட்டாரம் தெரிவித்துள்ளது.     https://oruvan.com/russia-to-withdraw-its-troops-from-syria/
    • இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி🎉🎂🎊
    • ஜனாதிபதி அநுரகுமாரவை சந்தித்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்  15 DEC, 2024 | 09:49 PM ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகல் சென்ற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினருக்கு புதுடில்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இந்திய பாதுகாப்பு  ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் உள்ளிட்டவர்களை இன்று (15 ) இரவு சந்தித்து கலந்துரையாடியுள்ளார். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு  வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்டோரும் இந்த சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/201373 இலங்கையுடனான நட்புறவை என்றும் பேணுவோம் - ஜனாதிபதியிடம் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு Published By: VISHNU   15 DEC, 2024 | 10:01 PM இலங்கையுடனான நட்புறவை என்றும் பேணுவோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகல் சென்ற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினருக்கு புதுடில்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு  வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்டோரும் இந்த சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/201375
    • நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகளில் 24 மணித்தியாலங்கள் வரை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதிகளை சுற்றி அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், அந்த அமைப்பு மெதுவாக உருவாகி வடமேற்கு நோக்கி நகரும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், எதிர்வரும் இரு தினங்களில் அது நாட்டின் வடபகுதிக்கு அருகில் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கைகள் கடல் பகுதிகளுக்கு, • காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு 50-60 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரிக்க கூடும் என்பதுடன் அந்த கடற்பரப்புகள் கொந்தளிப்பாக காணப்படக்கூடும். அந்த கடல் பகுதிகளில் சில இடங்களில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். • காங்கசன்துறையிலிருந்து புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது  50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் என்பதால் சில சமயங்களில் சீற்றமாக காணப்படும். பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் வங்காள விரிகுடா கடற்பகுதியில் உள்ள மீனவ மற்றும் கடல்வாழ் சமூகத்தினர் இந்த அமைப்பு தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகள் குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலப்பரப்பைப் பொறுத்தவரை, நாட்டின் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் வசிக்கும் பொதுமக்கள் இந்த அமைப்பு தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் கணிப்புகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=197351
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.