Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடிகர் ரஜினிகாந்தின் உதவியை நாடியுள்ளது இலங்கை !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடிகர் ரஜினிகாந்தின் உதவியை நாடியுள்ளது இலங்கை !

kugenMay 31, 2023
 
1685467830_7668632_hirunews.jpg

இலங்கையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த தென்னிந்திய நடிகரான ரஜினிகாந்தின் உதவியை இலங்கை நாடியுள்ளது.

தென்னிந்தியாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற நடிகரான ரஜினிகாந்தை இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஷ்வரன் இந்த வாரம் அவரது இல்லத்தில் சந்தித்ததாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.

சந்திப்பின் போது, துணை உயர்ஸ்தானிகர் ரஜினிகாந்தை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

அவருடைய வருகை சினிமா, சுற்றுலா மற்றும் ஆன்மீக மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவை மேம்படுத்தும் என்று வெங்டேஸ்வரன் கூறியுள்ளார்.

இலங்கைக்கான பயணத்தின் போது, பிரத்தியேகமான இராமாயண பாதை மற்றும் இலங்கையில் உள்ள பிற தனித்துவமான பௌத்த தலங்களை ஆராய வேண்டும் என்றும் பிரதி உயர்ஸ்தானிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்தார்.

http://www.battinews.com/2023/05/blog-post_114.html

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் சுற்றுலாதுறை தூதராகிறார் நடிகர் ரஜினிகாந்த்? சென்னை சந்திப்பால் வெடிக்கும் சர்ச்சை!

IMG-20230531-112236.jpg

சென்னை: இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடிகர் ரஜினிகாந்த் உதவியை அந்நாட்டு அரசு நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையின் சுற்றுலா துறை தூதராக செயல்பட நடிகர் ரஜினிகாந்த் ஒப்புதல் தெரிவித்தால் தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு வெடிக்கும் எனவும் தமிழ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்தை இந்தியாவுக்கான இலங்கையின் துணை தூதர் டி.வெங்கடேஷ்வரன் அண்மையில் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இத்தகவலை இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஜினிகாந்துடனான சந்திப்பின் போது, இலங்கைக்கு வருகை தர வேண்டும் என அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது; மேலும் ரஜினிகாந்த் வருகையின் மூலம் இலங்கையின் சினிமா, சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா மேம்படுத்தப்படும் எனவும் இச்சந்திப்பின் போது டி.வெங்கடேஷ்வரன் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக இலங்கையில் உள்ள ராமாயண பாதை, பவுத்த தலங்களை ரஜினிகாந்த் பார்வையிட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க உதவ வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது.

அதாவது இலங்கையின் சுற்றுலா தூதராக நடிகர் ரஜினிகாந்த் செயல்பட வேண்டும் என்பது அந்நாட்டின் விருப்பம். இந்த கோரிக்கையை ரஜினிகாந்த் ஏற்றுக் கொண்டாரா? இல்லையா? என்பது உறுதி செய்யப்படவில்லை.

ஆனால் பல லட்சம் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசின் சுற்றுலா தூதராக செயல்பட நடிகர் ரஜினிகாந்த் ஒப்புதல் தெரிவித்தால் தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடைபெறும் என தமிழ் தேசிய அமைப்பினர் இப்போதே எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்

https://tamil.oneindia.com/news/chennai/actor-rajinikanth-to-become-sri-lanka-s-tourism-ambassador-514229.html

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஆனால் பல லட்சம் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசின் சுற்றுலா தூதராக செயல்பட நடிகர் ரஜினிகாந்த் ஒப்புதல் தெரிவித்தால் தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடைபெறும் என தமிழ் தேசிய அமைப்பினர் இப்போதே எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்

https://tamil.oneindia.com/news/chennai/actor-rajinikanth-to-become-sri-lanka-s-tourism-ambassador-514229.html

அது தானே பார்த்தேன்.எதிர்ப்போம்.தெரிஞ்சதை மட்டும் செய்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் நன்றாகத் திட்டமிட்டு காய் நகர்த்துகிறது.......ரஜனியை வைத்து தமிழர்களைத் தமிழர்களாலேயே  பிரித்தாள்வதுதான் உள் நோக்கம். .......வந்தால் மலை போனால் முடி......!  

  • கருத்துக்கள உறவுகள்

ரஜனிகாந்த் தமிழரல்ல, தமிழரால் வளர்ந்தவர். தமிழகத்தில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக நடந்த எந்தப்போராட்டத்திலும்கலந்து கொள்ளாதவர். சினிமாத்துறை எங்களுக்கு ஆதரவாக போராடியபோது  ஈழத்தமிழர் வேலையில்லாமல் போராட்டம் செய்வர், எங்களுக்கு வேலையில்லையா வேலை நிறுத்தத்தில் ஈடுபட என்று வினா எழுப்பினவர். அதுமட்டுமல்ல தமிழகம் காவேரி நீர் வேண்டி செய்த போராட்டத்திலும் கலந்து கொள்ளாமல் விலகியிருந்தவர். அவர் கன்னடாவை சேர்ந்தவர், பாதிராஜா தமிழ் திரையுலகுக்கு கொண்டுவந்து சேர்த்தார் அவரை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
28 minutes ago, satan said:

ரஜனிகாந்த்  ஈழத்தமிழருக்கு ஆதராவாக திரைப்பட குழுவினரால் நடத்தப்பட்ட   கண்டன போராட்டத்தில் கலந்து கொண்டவர். இவரை தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் பாலச்சந்தர்.

இது ரஜனிக்கு வக்காளத்து வாங்கும் கருத்தல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தூதுவர், கொழும்பில் பிரபலமான ரஞ்சனாஸ் துணிக்கடையுடன் தொடர்புடையவராமே....

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசின் சுற்றுலா தூதராக செயல்பட நடிகர் ரஜினிகாந்த் ஒப்புதல் தெரிவித்தால்....

அந்தளவு துணிவு  இவருக்கு  கிடையாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இலங்கையின் சுற்றுலாதுறை தூதராகிறார் நடிகர் ரஜினிகாந்த்? சென்னை சந்திப்பால் வெடிக்கும் சர்ச்சை!

ரசனிக்கு கடைசி காலத்திலை ஏழரைச்சனி பிடிக்கப்போகுது. வேங்கையன் விளையாட்டு வெள்ளித்திரையோட நிற்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ரசனிக்கு கடைசி காலத்திலை ஏழரைச்சனி பிடிக்கப்போகுது. வேங்கையன் விளையாட்டு வெள்ளித்திரையோட நிற்கட்டும்.

அவருக்கு தன் விரல் வீக்கம் தெரியும் அண்ணா. அரசியலுக்கு வரமுயன்று வாங்கின காயம் மாறவே ஆயுள் முடிஞ்சு போகும். 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இலங்கை அரசின் சுற்றுலா தூதராக செயல்பட நடிகர் ரஜினிகாந்த் ஒப்புதல் தெரிவித்தால் தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடைபெறும் என தமிழ் தேசிய அமைப்பினர் இப்போதே எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்

புலம் பெயர் தமிழர் பெரும்பான்மையினர் தென்பகுதி சுற்றுலா பிரதேசங்களுக்கு மகிழ்வுடன் பயணம் செய்கின்றனர். முக்கியமாக புலம் பெயர் தமிழரின்  அடுத்த தலைமுறை பிள்ளைகள் வளர்ந்த பின்னர் தென்பகுதி சுற்றுலாவில் மிக அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தமது வேற்றின நண்பர்களுடன் சேர்ந்து கூட அப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்லுகின்றனர்.  தமது தென்னிலங்கை சுற்றுலா படங்களை காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர். 

வட பகுதியில் உள்ள பல தமிழ் யூருப்பர்ஸ்  தென்பகுதி சென்று சுற்றுலா பிரதேசங்களை வீடியோ எடுத்து தமது தளங்களில் பதிவிடுகின்றனர்.  

ஆகவே இவ்வாறான எதிர்பபுகள் எந்த பிரஜோசனமும் அற்றவை. 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

சிங்களம் நன்றாகத் திட்டமிட்டு காய் நகர்த்துகிறது.......ரஜனியை வைத்து தமிழர்களைத் தமிழர்களாலேயே  பிரித்தாள்வதுதான் உள் நோக்கம். .......வந்தால் மலை போனால் முடி......!  

ரஜினி தமிழ்ளார??.   புதிய தகவலாக இருக்கிறது......இன்று தான் அறிகிறேன்    இப்படி போலித் தமிழர்கள்   அதிகரிப்பால்   தான் தமிழர்களின் பிரச்சினையும் கூடிக்கொண்டே போகிறது   🙏🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ரஜினி தமிழ்ளார??.   புதிய தகவலாக இருக்கிறது......இன்று தான் அறிகிறேன்    இப்படி போலித் தமிழர்கள்   அதிகரிப்பால்   தான் தமிழர்களின் பிரச்சினையும் கூடிக்கொண்டே போகிறது   🙏🤣

ரஜினி கன்னடர் என்பது அநேகமானவர்களுக்கு தெரிந்த விடயம்.......ஆனால் அவரது ரசிகர்கள் பெரும்பாலானோர் தமிழர்கள் கந்தையா.......!  😁

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இந்தியாவோ அல்லது தமிழ்நாடோ அல்ல. சினிமா நடிகர்களைக் கொண்டாடுவதற்கு. படத்தைப் பொழுது போக்கா பார்த்துவிட்டு தங்கள் வேயைப் பார்க்கப் போய் விடுவார்கள்.அவர் வந்தால் அவர் மீதான கொஞ்ச நஞ்ச மரியாதையைும் அவர் இழக்க நேரிடும்.

10 hours ago, satan said:

ரஜனிகாந்த் தமிழரல்ல, தமிழரால் வளர்ந்தவர். தமிழகத்தில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக நடந்த எந்தப்போராட்டத்திலும்கலந்து கொள்ளாதவர். சினிமாத்துறை எங்களுக்கு ஆதரவாக போராடியபோது  ஈழத்தமிழர் வேலையில்லாமல் போராட்டம் செய்வர், எங்களுக்கு வேலையில்லையா வேலை நிறுத்தத்தில் ஈடுபட என்று வினா எழுப்பினவர். அதுமட்டுமல்ல தமிழகம் காவேரி நீர் வேண்டி செய்த போராட்டத்திலும் கலந்து கொள்ளாமல் விலகியிருந்தவர். அவர் கன்னடாவை சேர்ந்தவர், பாதிராஜா தமிழ் திரையுலகுக்கு கொண்டுவந்து சேர்த்தார் அவரை.

ரஜனியை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் பாலசந்தர் .படம் அபுர்வராகங்கள். அடுத்தபடம் மூன்று முடிச்சு. அதில்தான் சிகரட் ஜ்டையில் காட்டினார் அதன் பிறகு தில்லுமுல்லு. இந்த 3 படத்திற்கு மேல் பாலசந்தர் இயக்கத்தில் அவர் நடிக்கவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் கமலை வைத்து பல படங்களை இயக்கி உள்ளார்..இத ரஜனிக்கு ஆதரவான பதிவல்ல. தகவல்மட்டும்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, island said:

புலம் பெயர் தமிழர் பெரும்பான்மையினர் தென்பகுதி சுற்றுலா பிரதேசங்களுக்கு மகிழ்வுடன் பயணம் செய்கின்றனர். முக்கியமாக புலம் பெயர் தமிழரின்  அடுத்த தலைமுறை பிள்ளைகள் வளர்ந்த பின்னர் தென்பகுதி சுற்றுலாவில் மிக அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தமது வேற்றின நண்பர்களுடன் சேர்ந்து கூட அப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்லுகின்றனர்.  தமது தென்னிலங்கை சுற்றுலா படங்களை காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர். 

வட பகுதியில் உள்ள பல தமிழ் யூருப்பர்ஸ்  தென்பகுதி சென்று சுற்றுலா பிரதேசங்களை வீடியோ எடுத்து தமது தளங்களில் பதிவிடுகின்றனர்.  

ஆகவே இவ்வாறான எதிர்பபுகள் எந்த பிரஜோசனமும் அற்றவை. 

புலம்பெயர்ந்த   தமிழர்களுக்கும்   பிரபலமானவருக்கும் என்ன வித்தியாசம் என்று சொல்ல முடியுமா ?

Edited by பெருமாள்
எழுத்து பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் இலங்கை தமிழர்களிடம் ரஐனி விஐய் பொன்னியின் செல்வன் போன்ற பிரபலமானவர்கள் நடித்த படம் வந்தால் அது எவ்வளவு போறிங் படமாக இருந்தாலும் கட்டாயம் தியோட்டரில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஒரு பழக்கம் அல்லது பாஷன்  தோன்றி இருப்பதை காண கூடியதாக உள்ளது.ஒரு 10 வீதம் தான் தமிழ் விளங்கி கொள்ள முடியும் என்ற நிலயில் உள்ள சிலரிடம் கூட) ரசனி என்ன செய்தாலும் வெளிநாட்டில் அவருக்கு பாதிப்பு வராது என்று நினைக்கிறேன். இந்தியாவில் இருந்து சிங்கல பிரதேசங்களுக்கு வருகின்ற உல்லாச பயணிகளில் பெரும் தொகையான தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் வருகிறார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

ரஜனிகாந்த்  ஈழத்தமிழருக்கு ஆதராவாக திரைப்பட குழுவினரால் நடத்தப்பட்ட   கண்டன போராட்டத்தில் கலந்து கொண்டவர். இவரை தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் பாலச்சந்தர்.

இது ரஜனிக்கு வக்காளத்து வாங்கும் கருத்தல்ல.

தகவலுக்கு நன்றி. நான் பார்த்த பழைய காணொளி ஒன்றில் கர்நாடகா தமிழருக்கு நீர் வழங்க மறுத்து, தமிழகம் பெரும் போராட்டம் செய்தது. அப்போ பாரதிராஜா ஆவேசமாக பேசியபோது குறிப்பிட்டிருந்தார். ஒருவேளை நான் தவறுதலாக புரிந்திருக்கலாம். அடுத்து, முதன் முதல் சினிமாத்துறை செய்தபோராட்டத்தில் ரஜனி மறுத்து விட்ட  கருத்து  பத்திரிகையில் வந்திருந்தது. அடுத்தமுறை நானும் பாத்தேன், போராட்டம் தொடங்கியபின் ரசிகரோடு வந்து அமர்ந்திருந்தார். தவறெனில் மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

புலம்பெயருக்கும் ஒரு தமிழர்களில்  பிரபலமானவருக்கும் என்ன வித்தியாசம் என்று சொல்ல முடியுமா ?

புலம்பெயர்ந்தாலே அது பிரபலம் தானே 😃

18 hours ago, கிருபன் said:

சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடிகர் ரஜினிகாந்தின் உதவியை நாடியுள்ளது இலங்கை !

kugenMay 31, 2023
 
1685467830_7668632_hirunews.jpg

இலங்கையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த தென்னிந்திய நடிகரான ரஜினிகாந்தின் உதவியை இலங்கை நாடியுள்ளது.

தென்னிந்தியாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற நடிகரான ரஜினிகாந்தை இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஷ்வரன் இந்த வாரம் அவரது இல்லத்தில் சந்தித்ததாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.

சந்திப்பின் போது, துணை உயர்ஸ்தானிகர் ரஜினிகாந்தை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

அவருடைய வருகை சினிமா, சுற்றுலா மற்றும் ஆன்மீக மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவை மேம்படுத்தும் என்று வெங்டேஸ்வரன் கூறியுள்ளார்.

இலங்கைக்கான பயணத்தின் போது, பிரத்தியேகமான இராமாயண பாதை மற்றும் இலங்கையில் உள்ள பிற தனித்துவமான பௌத்த தலங்களை ஆராய வேண்டும் என்றும் பிரதி உயர்ஸ்தானிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்தார்.

http://www.battinews.com/2023/05/blog-post_114.html

இலங்கை சுற்றுலாத்துறை மேம்படுவது நல்லதுதானே. எமது உறவுகளுக்கும் தொழில்  வாய்ப்பு, விருத்தி ஏற்படும். 

ரஜனியை விட நயாந்தாரா போன்ற பெண் பிரபலங்களை அழைக்கலாமே 😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

புலம்பெயருக்கும் ஒரு தமிழர்களில்  பிரபலமானவருக்கும் என்ன வித்தியாசம் என்று சொல்ல முடியுமா ?

புலம் பெயரெலாம், ஆனால் எல்லோருக்கும் பிரபல்யமாக முடியாது. அதுதான் வித்தியாசம்.

  • கருத்துக்கள உறவுகள்

கடன் கேட்பதற்கு முதற்படி,, வருக வருக என்று அழைக்கிறார்! 

19 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ரஜினிகாந்துடனான சந்திப்பின் போது, இலங்கைக்கு வருகை தர வேண்டும் என அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது;

கூப்பிட்டு வைச்சு கேக்கப்போகினம் போல.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

கடன் கேட்பதற்கு முதற்படி,, வருக வருக என்று அழைக்கிறார்! 

கூப்பிட்டு வைச்சு கேக்கப்போகினம் போல.

அவர்  ..ரஜினி   கடன் கொடுக்க மாட்டார்....அந்த பழக்கம் அவரிடமில்லை   🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

ரஜனியை விட நயாந்தாரா போன்ற பெண் பிரபலங்களை அழைக்கலாமே 😁

மகியின் ஆட்சி நடந்தால் நயனை யோசித்திருபார், நடப்பது ரணிலின் ஆச்சே😁

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பெருமாள் said:

புலம்பெயர்ந்த   தமிழர்களுக்கும்   பிரபலமானவருக்கும் என்ன வித்தியாசம் என்று சொல்ல முடியுமா ?

புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழ் தேசியத்தின் பலம் என்று பலராலும் சிலாகிக்கப்படுபவர்கள். அவர்களே தென்னிலங்கைக்கு சுற்றுலாப்பயணம் செய்து இலங்கையின் சுற்றுலாதுறை மேம்பாட்டுக்கு உதவும் போது பிரபலமானவரால் இதற்கு மேல் என்ன செய்துவிட முடியும். 

வட கிழக்கில் பெரிதாக சுற்றுலா பிரதேசங்கள் இல்லாததால் புலம் பெயர்ந்த தமிழ் பிள்ளைகள் சுற்றுலா மையங்கள் அதிகம் உள்ள தென்னிலங்கையை நோக்கி செல்வது இயல்பானதே. 

  • கருத்துக்கள உறவுகள்

இதே வாயினால்தானே தமிழ்படங்கள்தான் இலங்கையில் வன்முறையை தூண்டுகின்றன என்று அதுவும் ஒரு அரசின் ராஜாங்க அமைச்ச்சர் தெரிவித்திருந்தார், அதனை எந்த ஒரு அரச தரப்பும் கண்டிக்கவில்லை.

இப்போ அதே தரப்பு வன்முறைகளை வளர்த்துவிடும் தமிழ்படங்களின் உச்ச நடிகர் ஒருவரை தமதுநாட்டின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு உதவிகேட்டு நிக்கிறதே இது எந்த வகையான பொழைப்பு?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, valavan said:

இதே வாயினால்தானே தமிழ்படங்கள்தான் இலங்கையில் வன்முறையை தூண்டுகின்றன என்று அதுவும் ஒரு அரசின் ராஜாங்க அமைச்ச்சர் தெரிவித்திருந்தார், அதனை எந்த ஒரு அரச தரப்பும் கண்டிக்கவில்லை.

இப்போ அதே தரப்பு வன்முறைகளை வளர்த்துவிடும் தமிழ்படங்களின் உச்ச நடிகர் ஒருவரை தமதுநாட்டின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு உதவிகேட்டு நிக்கிறதே இது எந்த வகையான பொழைப்பு?

அவரது படங்களில் வன்முறை  ஒருபோதும் இருந்ததில்லை  என்று  சொல்வார்கள்???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.