Jump to content

முல்லைத்தீவு நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல், தொடர் அழுத்தங்களால் பதவியை துறந்து நாட்டை விட்டு வெளியேறினார் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

28 SEP, 2023 | 08:15 PM
image
 

குருருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

இது குறித்து அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தவை வருமாறு,

குருந்தூர்மலை வழக்கில் நீதிபதி வழங்கிய கட்டளைகளை மாற்றியமைக்குமாறு தொடர்ச்சியாக அரச தரப்பால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. 

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மற்றும்  பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்  பாராளுமன்றத்திலும், பாராளுமன்றிற்கு வெளியிலும் எனக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.

அண்மையில் எனக்கான (நீதிபதிக்கான) பொலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்ட அதேவேளை, புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக என்னைக் கண்காணித்துவந்தனர்.

சட்டமா அதிபர், என்னை (முல்லைத்தீவு நீதிபதியை) தனது அலுவலகத்தில் 21.09.2023ம் திகதி அன்று சந்திக்க  வருமாறு அழைத்து, குருந்தூர்மலை வழக்கின் நீதிமன்றக் கட்டளைகளை மாற்றியமைக்கும்படி அழுத்தம் பிரயோகித்தார்.

குருந்தூர் மலை வழக்குடன் தொடர்புபடுத்தி எனக்கு (முல்லைத்தீவு நீதிபதிக்கு) எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் ( Court of Appeal) எனது தனிப்பட்ட பெயர் குறிப்பிடப்பட்டு இரண்டு வழக்குகள் கோப்பிடப்பட்டுள்ளன.

இவற்றின் அடிப்படையில் எனக்கு நேர்ந்த உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக நான் மிகவும் நேசித்த எனது நீதிபதிப் பதவிகள் அனைத்தையும் துறந்துள்ளேன்.

இது குறித்த பதவி விலகல் கடிதத்தினை கடந்த 23-09-2023 அன்று பதிவுத் தபால் ஊடாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ளேன் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா, தன்னுடைய பதவி விலகலை அறிவித்த பின்னர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

384743483_324690610230232_80105881425246

நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/165666

Link to comment
Share on other sites

ஒரு தமிழ் நீதிபதிக்கே இந்த நிலைமை! 

ரணில் அரசு, எதிர்பார்த்தது போன்று மிக தந்திரமாக அத்தனை நயவஞ்சக்துடனும் கோத்தா அரசைப் போன்றே இயங்குகின்றது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் நீதித்துறைக்கு விழுந்த சம்மட்டியடி: சிறீதரன் எம்.பி காட்டம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா, தன்மீது தொடர்ச்சியாகப் பிரயோகிக்கப்பட்டுவந்த அழுத்தங்கள் காரணமாக, தனது பதவியை துறந்துள்ளமை, இந்த நாட்டின் நீதித்துறையினது சுயாதீன இயங்குநிலையை அடியோடு ஆட்டம் காணச்செய்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா இன்றையதினம் தனது பதவியை துறந்த விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், 

சரத்வீரசேகர அவதூறு

''நீதிபதி சரவணராஜா கடந்த 2023.07.04 ஆம் திகதி தனது கடமை நிமித்தம் குருந்தூர்மலைக்கு விஜயம் செய்திருந்தபோது தெரிவித்த கருத்துகளை மேற்கோள்காட்டி 2023.07.07 ஆம் திகதி நாடாளுமன்ற உரையிலும், அதன்பின்னர் பொதுவெளியிலும் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியை, நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர அவதூறுக்கு உள்ளாக்கியிருந்தார்.

முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் நீதித்துறைக்கு விழுந்த சம்மட்டியடி: சிறீதரன் எம்.பி காட்டம் | Mullaitivu Judge Who Resigned Suddenly

அதன்பின்னர் குருந்தூர்மலையில் தமிழர்கள் வழிபாடியற்றுவதற்கு, சட்டவரைமுறைகளுக்கு உட்பட்டு நியாயபூர்வமாக வழங்கப்பட்ட தீர்ப்பினை மாற்றம் செய்யுமாறு சட்டமா அதிபர் மட்டத்தில் பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் மற்றும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவி விலகியுள்ளமை இந்த நாட்டின் நீதித்துறைக்கும், ஜனநாயகத்துக்கும் விழுந்திருக்கிற சாட்டையடி.

மேலும், இதை மிகமோசமான இனவாதச் செயலாகவே கருதவேண்டியுள்ளது. இதற்கு, எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவிக்கிறேன்.

இராணுவத்தினரால் கொலைமுயற்சி

2000 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் யாழ்ப்பாண மாவட்ட நீதிபதியாக இருந்த சிறீநிதி நந்தசேகரன் மீது, இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொலைமுயற்சியை அடியொற்றி, மீளவும் வடக்கின் தமிழ் நீதிபதி ஒருவர்மீது பகிரங்கமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தகையதொரு உயிர் அச்சுறுத்தல், இலங்கையின் நீதித்துறையின் இயங்குநிலையும் மெல்லமெல்ல இராணுவமயப்படுத்தப்படுவதற்கான எத்தனமாகவே தென்படுகிறது.

முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் நீதித்துறைக்கு விழுந்த சம்மட்டியடி: சிறீதரன் எம்.பி காட்டம் | Mullaitivu Judge Who Resigned Suddenly

நீதித்துறையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் இந்த நாட்டில், இன, மத ஆக்கிரமிப்புகளும், அடக்குமுறைகளும் எத்தனை வீரியமாய் இருக்கும் என்பதுபற்றி, சர்வதேச சமூகம் இனியேனும் கூருணர்வோடு செயலாற்ற வேண்டும் என்றும், இத்தகையதொரு நிலை, இன்னுமோர் தமிழ் நீதிபதிக்கு ஏற்படாதிருக்க வழிவகை செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.

https://tamilwin.com/article/mullaitivu-judge-who-resigned-suddenly-1695912631

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாட்டின் நீதிபதிக்கு அச்சுறத்தல் சகல அதிகாரமும் உள்ள நாட்டின் அதிபர் கண்டும் காணாமலும் விட்டுள்ளார் எனில் இதற்கு அவரும் உடந்தையே, இதில் என்ன கேவலம் எனில் அவர்களது நாடாளுமன்றில் இயற்றப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட தீர்ப்பினை விமர்சித்து ஒரு ரவுடி நாடாளுமன்ற உறுப்பினர் அச்சுறுத்தல் செய்கிறார் அதாவது நாட்டின் சட்ட வரை முறைகளைக் கேலி செய்கிறார் அதைப்பார்த்துக்கொண்டு நாட்டின் அதிபரும் நீதி அமைச்சரும் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் இந்த லட்சணத்தில் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு என இந்தியக்கனவை எமது கூத்தமைப்பும் விக்கி வகையறாக்களும் காண்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

ஒரு தமிழ் நீதிபதிக்கே இந்த நிலைமை! 

ரணில் அரசு, எதிர்பார்த்தது போன்று மிக தந்திரமாக அத்தனை நயவஞ்சக்துடனும் கோத்தா அரசைப் போன்றே இயங்குகின்றது.

அதன் மறுபக்கம்?

சிங்களம் இனி உள்ளக விசாரணையை முன்வைக்க முடியாத வாறு தனக்கு ஆப்பை சொருகிவிட்டுள்ளது.

சரத் வீரசேகர பாராளுமன்றில் புத்திசாலித்தனமாக பேசுவதாகநிணைத்து தனது கட்சித்தலைமைக்கே ஆப்படித்து விட்ட முழு முட்டாள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு தீர்வு வழங்கப் போகிறேன் என்று நாளாந்தம் சொல்லித் திரியும் ரணிலை யோசித்துப் பார்க்கிறேன்.

புற புதுகில் குத்தும் ரணிலைவிட கோத்தா பரவாயில்லைப் போல உள்ளது என்று சொல்லும் நிலமை.

Edited by ஈழப்பிரியன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

தமிழர்களுக்கு தீர்வு வழங்கப் போகிறேன் என்று நாளாந்தம் சொல்லித் திரியும் ரணிலை யோசித்துப் பார்க்கிறேன்.

புற புதுகில் குத்தும் ரணிலைவிட கோத்தா பரவாயில்லைப் போல உள்ளது என்று சொல்லும் நிலமை.

தலைவருக்கு அப்பொழுதே புரிந்த இது இப்ப தான் எமக்கு புரிய ஆரம்பிக்கிறது. 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

தமிழர்களுக்கு தீர்வு வழங்கப் போகிறேன் என்று நாளாந்தம் சொல்லித் திரியும் ரணிலை யோசித்துப் பார்க்கிறேன்.

புற புதுகில் குத்தும் ரணிலைவிட கோத்தா பரவாயில்லைப் போல உள்ளது என்று சொல்லும் நிலமை.

ரணிலின். தில்லுமுல்லு அமெரிக்கா பெண்கள்  கண்டு பிடித்து விட்டார்கள் போல் தெரிகிறது   

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா, தன்னுடைய பதவி விலகலை அறிவித்த பின்னர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

IMG-4497.jpg

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ரணிலின். தில்லுமுல்லு அமெரிக்கா பெண்கள்  கண்டு பிடித்து விட்டார்கள் போல் தெரிகிறது  

அமெரிக்காவில் என்ன அண்ணா நடந்தது?
அவர் கிடைத்த பதவியை பயன்படுத்தி அமெரிக்கா கியூபா ஈரான் எல்லாம் ஒரோ விசிட்ராம் இப்போது உங்களது நாட்டில் பேர்லின் குளோபல் டயலொக் என்று ஒரு மாநாட்டிற்காக வந்திருக்கிறாராம்.
https://www.berlinglobaldialogue.org/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

ரணிலின். தில்லுமுல்லு அமெரிக்கா பெண்கள்  கண்டு பிடித்து விட்டார்கள் போல் தெரிகிறது   

அவருடைய மனைவியே இன்னும் கண்டுபிடிக்கலையாம்.

இதுக்குள்ள நீங்க வேறு அமெரிக்க பெண் ஆபிரிக்க பெண் என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

முல்லைத்தீவு நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல், தொடர் அழுத்தங்களால் பதவியை துறந்து நாட்டை விட்டு வெளியேறினார் !

நல்ல விடயம். இவர் நாட்டை விட்டு வெளியேறியது நல்ல விடயம். 
ஏனென்றால் சிங்கள அட்டூழியத்தின்  நிகழ்கால சாட்சியாக இவர் இருக்கக்கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, ஈழப்பிரியன் said:

அவருடைய மனைவியே இன்னும் கண்டுபிடிக்கலையாம்.

இதுக்குள்ள நீங்க வேறு அமெரிக்க பெண் ஆபிரிக்க பெண் என்று.

இல்லை அணணை  ஒரு காணொளி பாரத்தேன்  ஒரு கூட்டத்தில் அமெரிக்கா பெண  பெயர் சரியாக தெரியாது சந்தா பாவர்  அதிக நேரம் உரையாடினார். இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் சங் உம. உடனிருந்தவள்     விபரம் சரியாக தெரியவில்லை    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிழைக்கத்தெரிந்த நீதிபதி. இந்த லூசுக்கூட்டங்களுடன் நின்று மாறடிப்பதை விட நாலு கன்று வைத்து தண்ணி ஊற்றலாம் என நினைத்து நாட்டை விட்டே வெளியேறிப்போனார் போல. 

இலங்கை நீதிபதிகளுக்கு பிஜி போன்ற நாடுகளில் அதிக மதிப்பு உண்டு. நீதிபதிகளாகவே வேலை எடுக்கலாம். 

இனியென்ன.. ஊடகங்களில் வெளிவந்த ஆதாரங்களே போதும் வெளிநாடு ஒன்றில் அரசியல் தஞ்சம் அடைவதற்கு. 

ஒரு நீதிபதிக்கு ஒரு பிரச்சனை என்றால் நாட்டில் உள்ள மற்ற நீதிபதிகள் குரல் கொடுக்கவோ அல்லது உதவிக்கரம் நீட்டவோ மாட்டார்களா? இவர்களுக்கு என ஏதாவது சபை ஏதும் இல்லையோ? கடைசி பாதிக்கப்பட்ட நீதிபதி சார்பாக ஒரு கண்டன அறிக்கையாவது விடமாட்டார்களோ?

ஐயா விக்கினேஸ்வரனும் முன்னாள் நீதியரசரே. அவராச்சும் தனது சகபாடி சார்பாக குரல் கொடுக்கலாமே?

இந்த பதவி விலகல் இலங்கை அரசாங்கத்திற்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தும். 

Edited by நியாயத்தை கதைப்போம்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

இனியென்ன.. ஊடகங்களில் வெளிவந்த ஆதாரங்களே போதும் வெளிநாடு ஒன்றில் அரசியல் தஞ்சம் அடைவதற்கு. 

ஏற்கனவே சிலதூதரகங்களுடன் தொடர்பு கொண்டு பலத்த ஏற்பாடுகளை செய்திருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த துரும்பு சீட்டை பயன்படுத்தி நாம் ஏன் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது?

ஏற்கனவே சகல தூதரகங்கள் வெளியுறவுத்துறைகளுக்கு இதுபற்றி தெரிந்திருந்தாலும் நாமும் ஒரு பிரச்சாரத்தில் ஈடுபடலாமே?

  • Like 1
Link to comment
Share on other sites

13 minutes ago, ஈழப்பிரியன் said:

 

இந்த துரும்பு சீட்டை பயன்படுத்தி நாம் ஏன் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது?

ஏற்கனவே சகல தூதரகங்கள் வெளியுறவுத்துறைகளுக்கு இதுபற்றி தெரிந்திருந்தாலும் நாமும் ஒரு பிரச்சாரத்தில் ஈடுபடலாமே?

@goshan_che யும் @Kavi arunasalam மும் இணைந்து சில மீம்ஸ் மற்றும் ஆங்கிலத்தில் short Message ஆக சிலவற்றை உருவாக்கினால் எம்மால் அதை பயன்படுத்தி பகிர முடியும் என நினைக்கிறேன

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீதிபதியை அழைப்பதற்கு சட்டமா அதிபருக்கு அதிகாரமில்லை-முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் குறித்து அம்பிகா சற்குணநாதன்

Published By: RAJEEBAN

29 SEP, 2023 | 09:53 AM
image
 

நீதிபதியை அழைப்பதற்கு சட்டமா அதிபருக்கு அதிகாரமில்லை என சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் அவ்வாறு சட்டமா அதிபர் அழைத்திருந்தால் அது நீதித்துறையின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகும் என குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ சரணவராஜா முன்வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்து அவர் இவ்வாறு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

384743483_324690610230232_80105881425246

குருந்தூர்மலை விவகாரத்தில் அவர் வழங்கிய கட்டளைகளுக்காக   உயிர் அச்சுறுத்தலையும் அழுத்தங்களையும் எதிர்கொண்டதாக தெரிவித்து தனது பதவியை இராஜினாமா செய்துள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டீ சரவணராஜா சட்டமா அதிபர் தன்னை அழைத்து நீதிமன்றக்கட்டளைகளை மாற்றியமைக்கும்படி கேட்டுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார்.

நீதிபதியை அழைப்பதற்கு சட்டமா அதிபருக்கு அதிகாரமில்லை, நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு மாத்திரம் அதற்கான அதிகாரமுள்ளது.

ஆனால் சட்டமாஅதிபர் உண்மையிலேயே அழைத்திருந்தால் அது நீதித்துறையின் சுதந்திரத்தினை குறைமதிப்பிற்கு உட்படுத்த முயலும் அரசாங்கத்தின் நோக்கத்தை அது வெளிப்படுத்துகின்றது.

சட்டமா அதிபர் திணைக்களம் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது.என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/165674

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீத்தித்துறை அச்சுறுத்தல் நாட்டின் ஜனநாயகத்தை கேள்விக்குறி ஆக்குகின்றது!

ThivaSeptember 29, 2023
sr_1537996-696x392.jpg
 

தனக்கு ஏற்படுத்தப்பட்ட உயிர் அச்சுறுத்தல் மற்றும் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாக தனது பதவிவை துறப்பதாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா அறிவித்துள்ளமையானது நாட்டின் நீதித்துறை எத்தகைய சவால்களை சந்தித்துள்ளது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை (29) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அதில் மேலும் உள்ளதாவது

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பான நீதிமன்ற வழக்கின் தீர்ப்புகள் மற்றும் கள விஜயங்கள் மீதான அழுத்தங்களும் அச்சுறுத்தல்களும் நீதிபதி அவர்களுக்கு விடுக்கப்பட்டு வந்துள்ளது இதனூடாக வெளிப்பட்டுள்ளது. சுயாதீனமாக செயற்பட வேண்டிய நீதிக்கட்டமைப்பை ஆட்டங்காணச் செய்த குறித்த அச்சுறுத்தல்வாதிகளை ஜனநாயக மாண்பற்றவர்களாகவே கருத வேண்டியுள்ளது.

குருந்தூர்மலை வழக்கு தொடர்பாக நீதிபதி சரவணராஜா அவர்கள் கடந்த 04.07.2023 அன்று குருந்தூர்மலைக்கு விஜயம் செய்திருந்தபோது தெரிவித்த கருத்துகளை சுட்டிக்காட்டி 07.07.2023 அன்றைய பாராளுமன்ற உரையிலும் தொடர்ந்து பொதுவிலும் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர கடுமையான அவதூறுகளை வெளிப்படுத்தியிருந்தார்.

பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி நீதித்துறையை கேலிக்குள்ளாக்கிய ஒருவரது நிலைப்பாட்டுக்கு அமைவாக நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களமும் செயற்பட்டுள்ளமை அதிர்ச்சியை தருகிறது. குருந்தூர்மலை விவகாரத்தில் நீதிபதி வழங்கிய கட்டளைகளை மாற்றியமைக்குமாறு சட்டமா அதிபர் மட்டத்திலிருந்தும்இ அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளமையானது மோசமான அதிகார துஸ்பிரயோகமாக அமைகிறது.

அத்துடன் நீதிபதிக்கான பொலிஸ் பாதுகாப்பு அண்மையில் குறைக்கப்பட்டிருந்ததோடு புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக தன்னைக் கண்காணித்து வந்திருந்ததாகவும் நீதிபதியால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவற்றுக்கு மேலதிகமாக குருந்தூர் மலை வழக்குடன் தொடர்புபடுத்தி தனக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில்( Court of Appeal)தனிப்பட பெயர் குறிப்பிடப்பட்டு இரண்டு வழக்குகள் கோப்பிடப்பட்டுள்ளதாகவும் இவற்றின் அடிப்படையில் தனக்கு நேர்ந்த உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் மிகவும் நேசித்த தனது நீதிபதிப் பதவிகள் அனைத்தையும் துறந்துள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ. சரவணராஜா அறிவித்துள்ளார்.

இந்த பதவி துறத்தலானது பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே இலங்கையின் அனைத்து அரச நிறுவனங்களும் செயற்பட வேண்டும் என்ற கடும்போக்குவாதத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. அந்த கடும்போக்குவாதத்துக்கு நீதித்துறையும் விலக்கல்ல என்ற துர்ப்பாக்கிய நிலையை கண்டு நான் பெரிதும் கவலையடைந்துள்ளேன்.

தனிநபர்களாலும் அரச கட்டமைப்புகளாலும் வஞ்சிக்கப்படும் மக்கள் சட்டத்தை நம்பி அதை நடைமுறைப்படுத்தும் நீதித்துறையை நாடுகிறார்கள். நீதித்துறை ஒன்றே சுயாதீனமாக செயற்பட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இத்தனை காலமும் இருந்து வந்துள்ளது. 

ஆனால் நீதித்துறையையும் வளைத்துப்போடும் வகையில் சிலர் செயற்படும்போது அதை தடுக்காமல் நீதித்துறைக்கு காவலாக இருக்க வேண்டியவர்களே நீதித்துறையின் சுயாதீனத்தை கேள்விக்குட்படுத்தும் போது நாட்டின் எதிர்காலம் குறித்த அச்சம் மக்களிடம் உருவாக்குகிறது.

ஏற்கனவே இந்நாட்டின் சட்டங்கள் வடக்கு – தெற்கு என்ற பேதங்களை பார்க்கின்றன என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் இந்த சம்பவமானது அக்குற்றச்சாட்டுகளை இன்னும் வலுச்சேர்த்துள்ளது.

வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல்கள் தொடர்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் பணிப்புரைகளையே மீறிச் செயற்படக்கூடிய தரப்புகள் இந்நாட்டை ஆபத்தான பாதைக்கு இட்டுச் செல்கிறார்கள் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஜனநாயக மாண்புகள் தெரியாத அவற்றை மதிக்காத அரசியல்வாதிகளாலும் நாட்டில் இன ஒற்றுமையை சிதைத்து அதில் இலாபம் பார்க்க நினைக்கும் தரப்புகளாலும் முன்னெடுக்கப்படும் இத்தகைய செயற்பாடுகளை தடுத்துநிறுத்தி சுயாதீனமான சட்ட நீதித்துறையின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பணிகளை இச்சந்தர்ப்பத்திலாவது நாம் ஆரம்பிக்க வேண்டும் – என குறிப்பிட்டுள்ளார்.
 

 

https://thinakaran.com/?p=10297

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

 

இந்த துரும்பு சீட்டை பயன்படுத்தி நாம் ஏன் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது?

ஏற்கனவே சகல தூதரகங்கள் வெளியுறவுத்துறைகளுக்கு இதுபற்றி தெரிந்திருந்தாலும் நாமும் ஒரு பிரச்சாரத்தில் ஈடுபடலாமே?

நீதிபதிக்கு அகதி அந்தஸ்தை ஏதோ ஒரு நாடு கொடுத்திருப்பதால் இது அவர்களுக்கு தெரியும்.

உள்ளக விசாரணை என்று இனி உருட்ட முடியாது!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 அதே நேரம் சர்வதேச விசாரணையை தட்டிக்கழிக்கவும் முடியாது, நீதியமைச்சர் பச்சைப்பொய் சொல்கிறார். இதிலிருந்தே  இலங்கையின் நீதிபரிபாலனம் எந்தளவுக்கு மலினப்படுத்தப்பட்டுள்ளது என்பது வெள்ளிடைமலை. தாங்கள் விரித்த வலையில்  தாங்களாகவே சிக்கிக்கொண்டுள்ளார்கள். எதை மறுக்கிறார்களோ அதற்குள் தாங்களாகவே மாட்டி உண்மையை கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். இனி சொல்வார்கள், நீதிபதி அரசியல் தஞ்சம் பெறுவதற்காக பொய் சொல்கிறார் என்று இன்னொரு பொய்யை சொல்லி மாட்டுப்படுவார்கள். நீதிபதி மனநிலை குன்றியவர் எனும்போதே, அப்படிப்பட்ட நீதிபதியை நியமித்தது தாம்தான் என்பதால் இவர்களும் மனநலம் குன்றியவர்களே. மூடர் தம் வாயாலேயே மாட்டுவர்!    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

@goshan_che யும் @Kavi arunasalam மும் இணைந்து சில மீம்ஸ் மற்றும் ஆங்கிலத்தில் short Message ஆக சிலவற்றை உருவாக்கினால் எம்மால் அதை பயன்படுத்தி பகிர முடியும் என நினைக்கிறேன

முயற்சிக்கிறேன். மேற்க்கு விளங்க கூடிய ரிவெரெனஸ் உள்ள டெம்ப்லேட் ஒன்றை தேடவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

நீதிபதிக்கு அகதி அந்தஸ்தை ஏதோ ஒரு நாடு கொடுத்திருப்பதால் இது அவர்களுக்கு தெரியும்.

உள்ளக விசாரணை என்று இனி உருட்ட முடியாது!

கனடா கொடுத்து உள்ளது   😁🤣 நான் நினைத்து இருந்தேன் பிரித்தானியா கொடுக்கும் என்று  ...பிரதமர் இந்தியான். என்பதை மறந்து போனேன்   🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீதிபதி சரவணராஜா மீளவும் பதவிக்குத் திரும்ப கூடிய நிலையினை அரசாங்கம் உடனடியாக ஏற்படுத்த வேண்டும் - யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

Published By: DIGITAL DESK 3

29 SEP, 2023 | 03:48 PM
image
 

அழுத்தத்துக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியிருக்கும் நீதிபதி சரவணராஜா மீளவும் தன் பதவிக்குத் திரும்பி, சுயாதீனமான முறையில் தனது கடமைகளைச் செய்யக் கூடிய நிலையினை அரசாங்கம் உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா அவர்களின் பதவி விலகல் குறித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில்,முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிப் பதவி உள்ளடங்கலாக நீதித் துறையிலே தான் வகித்த அனைத்துப் பதவிகளையும் அரசியல் ரீதியான அழுத்தங்களின் காரணமாகவும், உயிர் அச்சுறுத்தலின் காராணமாகவும் இராஜினாமாச் செய்துவிட்டு, இலங்கையிலே வாழ முடியாத நிலையில் நாட்டை விட்டு வெளியேறி இருக்கும் நீதிபதி  ரி.சரவணராஜா அவர்கள் இன்று எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி ஜனநாயகத்தினையும், நீதியினையும் மதிக்கும் அனைவருக்கும் அதிர்ச்சி அளிப்பதுடன், இலங்கையின் நீதித் துறையின் சுயாதீனத் தன்மை எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதனையும் தெளிவாக வெளிக்காட்டுகிறது.

நீதிபதி சரவணராஜா அவர்கள் குருந்தூர் மலையில் தொல்பொருள் திணைக்களத்தினால் சிங்கள பௌத்தத் தேசியவாத நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட மீறல்களை வெளிப்படையாக கண்டனம் செய்து, நியாயமான தீர்ப்புக்களை வழங்கிய ஒரு நீதிபதி ஆவார்.

தமிழ் மக்களின் நினைவேந்தல் செயற்பாடுகளுக்கு அரசினால் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்ட போதெல்லாம் மக்களின் நினைவேந்தல் உரிமையினை உறுதிப்படுத்தித் தீர்ப்புக்களை வெளியிட்ட ஒருவர். இவ்வாறான நேர்மையும், துணிச்சலும் மிக்க நீதிபதியினை அச்சுறுத்தும் வகையில் தென்னிலங்கையில் உள்ள தீவிர சிங்கள தேசியவாத சக்திகள் வெறுப்புப் பிரசாரங்களை அண்மையிலே முன்னெடுத்திருந்தனர். 

கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இந்த நீதிபதியினை மிகவும் மோசமான முறையில் விமர்சித்தும் அச்சுறுத்தியும் இருந்தார். நீதிபதி சரவணராஜா தனது இராஜினாமாக் கடித்தத்திலே தனது உயிருக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் குறித்தும், தாம் எதிர்நோக்கிய அழுத்தம் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த 21 செப்டெம்பர் 2023 அன்று சட்டமா அதிபர் நீதிபதி சரவணராஜாவினை சட்டமா அதிபர் அலுவலகத்திற்கு அழைத்ததாகவும், அந்த சந்திப்பிலே குருந்தூர்மலை விவகாரம் தொடர்பிலே நீதிபதி சரவணராஜா வழங்கிய தீர்ப்புக்களை மாற்றியமைக்கும்படி நீதிபதியின் மீது ஆலோசனை என்ற வடிவத்திலே அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாகவும் ஊடகங்களிலே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சட்டத்திற்கு அமையத் தன் கடமைகளைச் செய்த ஒரு நீதிபதிக்கே இந்த நிலைமை ஏற்படின், நாளாந்தம் இனவாத செயன்முறைகளை எதிர்கொண்டு போராடும் நாட்டின் சிறுபான்மை சமூகங்களின் நிலைமை என்ன என்ற கேள்வியும் இங்கே எழுகின்றது.

நீதிபதி சரவணராஜாவுக்கு எதிராக இடம்பெற்ற வெறுப்புப் பிரசாரங்கள், அச்சுறுத்தல்கள், அவரது பணியினை அவர் சுயாதீனமாகச் செய்வதனைத் தடுக்கும் வகையில் அவரின் மீது பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்கள் அனைத்தினையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த முயற்சிகளில் ஈடுபட்ட அனைவரும் நீதிபதி சரவணராஜா இன்று எதிர்கொள்ளும் நெருக்கடி தொடர்பிலே பொறுப்புக்கூறலுக்கு உள்ளாக்கப்படல் வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோருகிறது.

வடக்குக் கிழக்கின் நீதிக் கட்டமைப்பு இன்று அச்சுறுத்தல்களையும், அழுத்தங்களையும் சந்தித்து வருகிறது. வடக்குக் கிழக்கில் பணியாற்றும் நீதிபதிகள் அச்சுறுத்தப்படுவதற்கு அடிப்படையான காரணமாக அமைவது இலங்கை அரசினது சிங்கள பௌத்த நிகழ்ச்சி நிரலே. தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தப் பிரதேசத்தினை சிங்கள பௌத்த

மயமாக்குவதும், தமிழ் மக்களின் நினைவேந்தல் செயன்முறைகளை வலிந்து தடுத்தலும் இந்த நிகழ்ச்சி நிரலின் பகுதிகளாகும். இந்த நிகழ்ச்சி நிரலிற்குத் துணை போகாத நீதிபதிகளும், ஏனைய அரச ஊழியர்களும் பல்வேறு வழிகளில் அச்சுறுத்தலுக்கும், அழுத்தத்துக்கும், நிர்ப்பந்தங்களுக்கும் ஆளாகின்றனர்.

சிங்கள பௌத்த மேலாதிக்கம் ஒழியும் வரை வடக்குக் கிழக்கிலே நீதித் துறையும் சரி ஏனைய நிருவாகத் துறைகளும் சரி பாதிப்பினையே எதிர்கொள்ளும். எனவே, சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினை எதிர்த்து, நாட்டின் எல்லா சமூகங்களும் சமத்துவமான முறையிலே வாழ்வதனை உறுதிப்படுத்தும் முயற்சிகளை முன்னெடுப்பதற்கான அணி திரட்டலிலே நாட்டின் எல்லா முற்போக்கு சக்திகளும் இன, மத, பிராந்திய பேதமின்றி ஒன்றிணைய வேண்டும்.

நாடு மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடி ஒன்றிலே அகப்பட்டிருக்கும் இன்றைய நிலையில், இனவாதத்தினைக் கையில் எடுக்கும் அரசியல் சக்திகள்மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் இருந்து அவர்களைத் திசைதிருப்பிவிட முயற்சி செய்கின்றனர். நீதிபதி சரவணராஜா போன்றோர் இலக்கு வைக்கப்படுவது இந்த இனவாத முயற்சியின் வடிவமே.

அரசாங்கத்தினதும், சிங்கள மேலாதிக்க சக்திகளினதும் இந்தத் தந்திரோபாயத்தினை விளங்கிக் கொண்டு இனவாதத் தரப்புக்களையும், மக்களின் நலனிலே அக்கறை அற்ற இந்த அரசாங்கத்தினையும் தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

அழுத்தத்துக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியிருக்கும் நீதிபதி சரவணராஜா மீளவும் தன் பதவிக்குத் திரும்பி, சுயாதீனமான முறையில் தனது கடமைகளைச் செய்யக் கூடிய நிலையினை அரசாங்கம் உடனடியாக ஏற்படுத்த வேண்டும்; நீதித் துறையின் சுயாதீனம் பாதுகாக்கப்பட வேண்டும்; வடக்குக் கிழக்கிலே நீதித் துறையும், அழுத்தங்களுக்கும் எதிர்கொள்ளும் நீதிபதிகளும் அச்சுறுத்தல்களுக்கும் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். இந்த அழுத்தங்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் அடிநாதமாக இருக்கும் அரசாங்கத்தினதும், சிங்கள பௌத்த மேலாண்மைவாத சக்திகளினதும் இனவாதம் முறியடிக்கப்பட வேண்டும்; இந்த நோக்கங்களுக்காக நாட்டு மக்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டியது அவசியம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்துகிறது.நீதிபதி சரவணராஜா மீளவும் பதவிக்குத் திரும்ப கூடிய நிலையினை அரசாங்கம் உடனடியாக ஏற்படுத்த வேண்டும் - யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் | Virakesari.lk

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.