Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லியோ விமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரர்களான ஆண்டனி தாஸ்(சஞ்சய் தத்), ஹரால்டு தாஸ்(அர்ஜுன்) ஆகியோர் சட்டவிரோதமாக போதைப் பொருள் வியாபாரம் செய்து வருவார்கள். ஆனால் உலகை பொருத்தவரை அவர்கள் புகையிலை வியாபாரிகள். ஆண்டனி தாஸின் மகன் லியோ(விஜய் )தான் போதைப் பொருட்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வார். புகையிலை ஃபேக்டரியில் ஏற்படும் தீ விபத்தில் லியோ இறந்துவிடுவார்.
 

அதிகம் விற்பனையாகும் டிவிகளில் 65% வரை தள்ளுபடி- பெரிய திரைகள் அதிக சேமிப்பு

இந்த சம்பவம் நடந்து 20 ஆண்டுகள் கழித்து இமாச்சல பிரதேசத்தில் மனைவி சத்யா(த்ரிஷா), இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வரும் பார்த்திபன்(விஜய்) குறித்து தாஸ் சகோதரர்களுக்கு தெரிய வரும்.

பார்த்திபனின் புகைப்படத்தை பார்த்த தாஸ் சகோதரர்களோ லியோ சாகவில்லை என்று முடிவு செய்வார்கள். லியோ தான் பார்த்திபனா, இல்லை ஒரே மாதிரி இருக்கும் இரண்டு பேரை தவறாக புரிந்து கொள்கிறார்களா என்பதே கதை.

லியோ படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள், நடிகைகள் இருந்தாலும் அது விஜய்யின் ஒன் மேன் ஷோவாக இருக்கிறது. லியோ மற்றும் பார்த்திபனாக சிறப்பாக நடித்திருக்கிறார் விஜய்.

இவர் நிஜமாகவே பார்த்திபன் தானா இல்லை ஒரு வேளை லியா தான் டபுள் கேம் ஆடுகிறாரா என கிளைமாக்ஸ் காட்சி வரை நம்மை யோசிக்க வைக்கிறார். கடைசி நிமிடம் வரை இருக்கையை விட்டு எழ முடியாத அளவுக்கு காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கிறது.

படத்தில் சில மைனஸுகள் இருக்கிறது. ஆனால் அதை எல்லாம் தன் நடிப்பால் சரிகட்டிவிடுகிறார் விஜய். லியோ தாஸாக ஒரு Badass ஆக வித்தியாசமாக மிரட்டியிருக்கிறார் விஜய்.

தந்தை, கணவராக விஜய்யின் நடிப்பு சிறப்பு. விஜய் போன்ற ஒரு மாஸ் ஹீரோவுக்கு பவர்ஃபுல்லான வில்லன் வேண்டும். அது தான் லியோவில் மிஸ்ஸிங். அர்ஜுன் மிரட்டியிருந்தாலும் அவர் படம் முழுக்க வரவில்லை.

குடும்ப சென்டிமென்ட்டை கையில் எடுத்துள்ளார் லோகேஷ். அது ஆக்ஷனுக்கு இடையூறாக வந்துவிட்டது.

வில்லன்களின் உலகை விரிவாக காட்டியிருந்தாலும், அது கவரவில்லை. சஞ்சய் தத், அர்ஜுன் ஆகிய இரண்டு நல்ல நடிகர்கள் வில்லன்களாக நடித்திருக்கும்போதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் அனல் பறக்கவில்லை. இரண்டாம் பாதியில் அனிருத்தின் இசை உச்சத்தை தொட்டுவிட்டது.

லியோ படம் துவங்கிய அரை மணிநேரத்திலேயே அடுத்தது என்னவென்பதை எளிதில் கணிக்க முடிகிறது. இருந்தாலும் அதை தன் ஸ்டைலில் கொடுத்து ரசிகர்களை திருப்தி அடைய செய்திருக்கிறார் லோகேஷ்.

த்ரிஷாவின் கதாபாத்திரம் ரசிக்கும்படியாக இருக்கிறது. அவர் சும்மா வந்துவிட்டு செல்லவில்லை. அர்ஜுன், ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

லியோ- விஜய் ஷோhttps://tamil.samayam.com/tamil-cinema/movie-review/vijay-starrer-leo-movie-review-and-rating/moviereview/104546721.cms

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கொழும்பான். படம் நல்லா இருப்பதாகத்தான் பரவலாக பேச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

லியோ - ரசிகர்கள் விமர்சனம்: குடும்பங்கள் கொண்டாடும் படமா?

லியோ

பட மூலாதாரம்,X / TRISHA

19 அக்டோபர் 2023, 02:54 GMT
புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

லோகேஷ் கனகராஜ் இயக்கி, நடிகர் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் இன்று (வியாழன், அக்டோபர் 19) வெளியாகி இருக்கிறது.

தமிழ்நாட்டில் அதிகாலை 4 மணி காட்சிக்குச் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்திருந்த நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் இப்படம் இன்று (வியாழன், அக்டோபர் 19) அதிகாலை 4 மணிக்கு வெளியானது.

லியோ, விஜய், லோகேஷ் கனகராஜ்

பாலக்காட்டில் உள்ள திரையரங்குகளில் அதிகாலை 4 மணிக்கு திரைப்படம் வெளியானதையடுத்து, தமிழகத்திலிருந்தும் ரசிகர்கள் பாலக்காட்டிற்குச் சென்று படம் பார்த்தனர்.

லியோ, விஜய், லோகேஷ் கனகராஜ்
படக்குறிப்பு,

பாலக்காட்டில் உள்ள ஒரு திரையரங்கத்தில் 4 மணிக் காட்சிக்காகக் குழுமியிருந்த நடிகர் விஜய்யின் ரசிகர்கள் ஆரவாரமாகக் கொண்டாடினர்

பாலக்காட்டில் உள்ள ஒரு திரையரங்கத்தில் 4 மணிக் காட்சிக்காகக் குழுமியிருந்த நடிகர் விஜய்யின் ரசிகர்கள் ஆரவாரமாகக் கொண்டாடினர்.

படம் திரையிடப்பட்டபோது திரைக்கு முன்னும் சென்று நடனமாடித் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

நடிகர் விஜய் ரசிகர்மன்றத்தினரின் கூற்றுப்படி, கேரளாவில் 620 திரைகளில் இப்படம் வெளியிடப்படுகிறது.

 

படம் பார்த்த ரசிகர்கள் கூறுவது என்ன?

கேரளாவின் பாலக்காட்டில் திரைப்படம் வெளியான திரையரங்கு ஒன்றில் லியோ திரைப்படம் பார்த்த ரசிகர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.

"திரைக்கதை மிகவும் வேகமாக இருந்தது. முதல் பாதி மிகவும் போவதே தெரியாது. லோகேஷின் படம் எப்போதும் அப்படித்தான் இருக்கும். இரண்டாம் பாதி சற்று மெதுவாக நகர்கிறது. ஆனால் கிளைமேக்ஸ் நெருங்கும்போது விறுவிறுப்படைகிறது." என்று ஒரு ரசிகர் கூறினார்.

"கிராபிக்ஸ் மிகவும் தரமாக இருக்கிறது. கழுதைப் புலிகள் வரும் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது" என்று மற்றொரு ரசிகர் கூறினார்.

லியோ

பட மூலாதாரம்,X/@LOKESH KANAGARAJ

"இதுவரைக்கும் விஜய் திரைப்படம் என்றால் மாஸ் வசனங்கள் இருக்கும். மாஸ் காட்சிகள் இருக்கும். இரண்டு மூன்று டான்ஸ் இருக்கும். இந்தப் படத்தில் விஜய் என்ற நடிகரை லோகேஷ் கனகராஜ் தேவையான அளவு பயன்படுத்தியிருக்கிறார்" என்று பிபிசியிடம் பேசிய இன்னொருவர் தெரிவித்தார்.

"என்ன எதிர்பார்த்தோமோ அது படத்தில் இருக்கிறது. குடும்பமாகவும் பார்க்கலாம். பெண் ரசிகர்கள் ஏராளமானோர் படத்துக்கு வந்திருக்கிறார்கள்." என்றார் படம் பார்த்த ரசிகர்களில் ஒருவர்

"முழுமையான ஆக்சன் படம் இது" என்று பரவலாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

லியோவில் எல்சியூ காட்சிகள் இருப்பதாக படம் பார்த்த ஒரு ரசிகர் கூறினார்.

லியோ

மதுரை ரசிகர்கள் கூறுவது என்ன?

மதுரையில் பிபிசியிடம் பேசிய ரசிகர் ஒருவர், "இசை, திரைக்கதை போன்றவை சிறப்பாக இருப்பதாகத் தெரிவித்தார். வாரிசு திரைப்படம் மெதுவாக நகர்ந்தது. இந்தப்படம் ஆக்ஷனுடன் வேகமாகச் செல்கிறது. குடும்பத்துடன் படத்தை பார்க்கலாம்" என்றார்.

"படம் 200 சதவிகிதம் சிறப்பாக வந்திருக்கிறது" என்று மற்றொரு ரசிகர் தெரிவித்தார்

"சிங்கத்தின் கர்ஜனை சிறப்பாக இருந்தது" என்று ஒரு ரசிகரும், "ட்விஸ்டுக்கு மேல் ட்விஸ்ட்" என்று மற்றொரு ரசிகரும் கூறினார்கள்.

"எதிர்பார்ப்பைவிட அதிகமாகவே படம் இருந்தது. சீட் நுனியில் இருந்து பார்க்க வேண்டியிருந்தது. குடும்பத்துடன் படத்தை பார்க்கலாம்" என்று பெண் ஒருவர் கூறினார்.

லியோ

சென்னையில் பெண் ரசிகர் ஒருவர் கூறும்போது, " எனக்கு திரைக்கதை மிகவும் பிடித்திருந்தது. எங்கேயும் அலுப்புத் தட்டவே இல்லை, அடுத்து என்ன, அடுத்து என்ன என எதிர்பார்ப்புக்குள்ளேயே வைத்திருந்தது மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது என்றார்.

"LCU என்பது வலிந்து தினிக்கப்பட்டிருக்கிறது, ஒரு வேளை அது வியாபார யுக்திக்காக மட்டும் ஹைலைட் செய்யப்பட்டிருக்கலாம். கதையோடு அது ஒட்டவே இல்லை" என்று மற்றொரு ரசிகர் தெரிவித்தார்.

தமிழகத்தில் 4 மணிக் காட்சிக்கு அனுமதி மறுப்பு

முன்னர் இந்தப் படத்திற்கு சிறப்புக் காட்சிகளை வெளியிட அனுமதிக்க வேண்டுமெனக் கோரி அரசிடம் தயாரிப்புத் தரப்பு விண்ணப்பித்தது. அதன்படி, அக்டோபர் 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதிவரை சிறப்புக் காட்சிகளைத் திரையிட அனுமதி அளித்து அரசு அரசாணை வெளியிட்டது.

ஆனால், இதற்குப் பிறகு, வேறு ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. அதில் காட்சிகள் காலை 9 மணிக்குத் துவங்கி இரவு 1.30 மணிக்குள் நிறைவுபெற வேண்டுமெனக் கூறப்பட்டிருந்தது.

அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த தயாரிப்புத் தரப்பு அதிர்ச்சியடைந்தது.

மேலும், படத்தின் நீளம் இரண்டே முக்கால்மணி நேரமாக இருக்கும் நிலையில், அரசு குறிப்பிட்டிருக்கும் காலத்திற்குள் ஐந்து காட்சிகளை திரையிடுவது இயலாத காரியம் என்றும் தயாரிப்புத் தரப்புக் கூறியது.

இதையடுத்து, அதிகாலை நான்கு மணி காட்சிக்கு அனுமதி கோரி படத்தைத் தயாரித்த செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதை விசாரித்த உச்சநீதிமன்றம், கூடுதல் காட்சியைத் திரையிட அனுமதித்துவிட்டு, அதற்கான நேரம் வழங்காவிட்டால் எப்படித் திரையிட முடியும் எனக் கேள்வியெழுப்பிய நீதிபதி, 4 மணி காட்சிக்கு அனுமதி மறுத்தது.

 

லியோ படம் தொடர்பாக இதுவரை வெடித்த சர்ச்சைகள்

பொதுவாக நடிகர் விஜய் நடித்த படங்களின் பாடல் வெளியீட்டு விழாக்கள் பிரம்மாண்டமாக நடக்கும் நிலையில், இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. நடிகர் விஜய் அரசியலில் ஈடுபட விரும்புவதால் ஆளும் கட்சி அதற்கு முட்டுக்கட்டை போடுகிறது என்பது உள்பட பல காரணங்கள் இதற்குக் கூறப்பட்டன. ஆனால், அதற்குச் சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்திருந்த ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தயாரிப்புத் தரப்பு கூறியது.

இதற்குப் பிறகு, லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியான போது அதில் விஜய் கெட்ட வார்த்தை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு, ட்ரெய்லரில் அந்த வார்த்தை நீக்கப்பட்டது.

இதற்கு நடுவில் லியோ படத்தில் 'நான் ரெடிதான்' பாடலில் நடனமாடிய நடனக் கலைஞர்கள் 1,300 பேருக்கு பேசியபடி சம்பளம் அளிக்கப்படவில்லையென அவர்கள் புகார் கூறினர். ஆனால், அடுத்த சில நாட்களில் முழுமையாக அளிக்கப்பட்டு இந்த விவகாரம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

https://www.bbc.com/tamil/articles/c89w5g720n4o

  • கருத்துக்கள உறவுகள்

லியோ Review: ஸ்டைலிஷ் மேக்கிங், தெறிக்கும் ஆக்‌ஷன் மட்டும் போதுமா?!

1141430.jpg  
 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான ‘விக்ரம்’ படத்துக்குப் பிறகு தமிழ் ரசிகர்களால் அதிகமாக பயன்படுத்தப்பட்ட சொல் ‘எல்சியூ’ (LCU). ’லியோ’ படம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே இது LCU-வில் இடம்பெறுமா என்பதே ரசிகர்களின் பெரிய கேள்வியாக இருந்து வந்தது. இதன் காரணமாக இப்படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பும் உருவாகியிருந்தது. அந்த எதிர்பார்ப்பை ‘லியோ’ பூர்த்தி செய்ததா என்பதைப் பார்க்கலாம்.

இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய மலைக் கிராமத்தில் மனைவி, பிள்ளைகள் என அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் பார்த்திபன் (விஜய்). காஃபி ஷாப் வைத்திருக்கும் அவர், அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து விடும் காட்டு விலங்குகளை பிடிக்கும் அனிமல் ரெஸ்க்யூவராகவும் இருக்கிறார். அப்படி ஒருமுறை ஊருக்குள் வந்து விடும் கழுதைப்புலியை திறமையாக பிடிப்பதால் ஊர் மக்களிடம் நன்மதிப்பை பெறுகிறார். இன்னொரு பக்கம் செயற்கையாக விபத்துகளை ஏற்படுத்தி பணம் பறிக்கும் மிஷ்கின் கும்பலால் தன் மகளின் உயிருக்கு ஆபத்து வரும் நேரத்தில் தன்னையே அறியாமல் ஒட்டுமொத்த கும்பலையும் கொன்றுவிடுகிறார்.

சிறைக்குச் சென்று வெளியே வரும் அவரது புகைப்படத்தைப் பேப்பரில் பார்த்து, பல வருடங்களுக்கு முன்பு இறந்துபோன லியோ தாஸ் தான் பார்த்திபனா என்பதை தெரிந்து கொள்ள வருகின்றனர் போதைப் பொருட்களை கடத்தும் ஆண்டனி தாஸும் (சஞ்சய் தத்) அவரது தம்பி ஹரால்ட் தாஸும் (அர்ஜுன்). இவர்களால் பார்த்திபனுக்கும், அவரது குடும்பத்துக்கும் பல இடையூறுகள் நிகழ்கின்றன. அவற்றில் இருந்து பார்த்திபன் தப்பித்தாரா, இறந்துபோன லியோ யார், இப்படம் LCU-வில் இடம்பெற்றதா? - இப்படி பல கேள்விகளுக்கு விடை சொல்கிறது ‘லியோ’ திரைக்கதை.

 

(முன்குறிப்பு: நிறைவாக விமர்சனம் செய்வதற்கு சில ஸ்பாய்லர்களைப் பகிர வேண்டியுள்ளதால், படம் பார்க்காதவர்கள் இனிவரும் பகுதியை தேவையெனில் தவிர்க்கலாம்.)

படம் ஆரம்பிக்கட்டபோது இது டேவின் குரோனன்பெர்க் இயக்கத்தில் 2005-ஆம் ஆண்டு வெளிவந்த ‘A History of Violence’ படத்தின் தழுவல் என்று கூறப்பட்டு வந்தது. எனினும், படக்குழு அதனை வெளிப்படையாக சொல்லவில்லை. ஆனால், ‘லியோ’ படத்தின் தொடக்கத்திலேயே இது அப்படத்தின் தாக்கத்தில்தான் என்ற நன்றி அறிவிப்புடனேயே படம் ஆரம்பிக்கிறது. படத்துக்கு முந்தைய புரொமோஷன் பேட்டிகளில் முதல் 10 நிமிடங்களை ரசிகர்கள் கண்டிப்பாக தவறவிடவேண்டாம் என்று படக்குழு தொடர்ந்து ஹைப் ஏற்றிவிட்டது. ஆனால், அதுவே அந்தக் காட்சிகளுக்கு வில்லனாகிவிட்டதோ என்று தோன்றும் அளவுக்கு சொதப்பல்தான் அங்கு நிகழ்ந்தது. ஊருக்குள் புகுந்த கழுதைப்புலியை ஹீரோ கொல்லாமல் அடக்கி, அதனை வனத்துறை ரேஞ்சரான கவுதம் மேனன் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கு ஹீரோ ஏதாவது புத்திசாலித்தனமாக செய்திருந்தால் ஹைப் ஏற்றப்பட்ட அந்த 10 நிமிட காட்சியில் அரங்கமே அல்லோலகல்லோலப் பட்டிருக்கும். ஆனால், அப்படி எதுவும் நிகழவில்லை.

உண்மையில், ஹீரோவின் என்ட்ரியாக இருந்திருக்க வேண்டியது அந்த காஃபி ஷாப் சண்டைக் காட்சிதான். ‘கருகரு கருப்பாயி’ பாடல் கிராமோஃபோனில் பின்னணியில் ஒலிக்க வில்லன்களை விஜய் வதம் செய்வது அக்மார்க் லோகேஷ் டச். இதன்பிறகுதான் படம் சூடுபிடிக்கிறது. விஜய் சிறைக்கு சென்று வருவது, விஜய் குடும்பம் தொடர்பாக காட்சிகள், சஞ்சய் தத், அர்ஜுன் கும்பல் விஜய்யை தேடி வருவது என திரைக்கதையில் தொய்வுகள் இல்லாமல் தூக்கிப் பிடிக்கும் சில காட்சிகள் முதல் பாதியை நகர்த்திச் செல்கின்றன. விஜய் - த்ரிஷா இடையிலான காட்சிகள், கவுதம் மேனன் - விஜய் இடையிலான நட்பு ஆகியவை சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. எனினும், முந்தைய லோகேஷ் படங்களோடு ஒப்பிடுகையில், இடைவேளை காட்சியை இதில் இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாம் என்ற உணர்வு எழுகிறது. டீசரில் வைரலான அந்த ‘ப்ளடி ஸ்வீட்’ வசனம் சப்பென்று வைக்கப்பட்டது ஏமாற்றம்.

படத்தின் பெரும் பிரச்சினையே இரண்டாம் பாதிதான். திரைக்கதையில் எந்தவித புதுமையையும் செய்யாமல் ஸ்டன்ட் இயக்குநர்களான அன்பறிவை மட்டும் நம்பி இரண்டாம் பாதியை எழுதியுள்ளார் லோகேஷ். விஜய் சண்டை போடுகிறார், போடுகிறார். அதை மட்டும்தான் போட்டுக் கொண்டே இருக்கிறார். அதிலும் க்ளைமாக்ஸுக்கு முன்னால் சுமார் 25 நிமிடம் நடக்கும் ஒரு சண்டைக் காட்சி, சஞ்சய் சத் - விஜய் இடையே நடக்கும் கார் சேஸிங் காட்சியெல்லாம் காதில் புகை வரவைத்துவிடுகின்றன. லியோ கதாபாத்திரத்துக்கான ஃப்ளாஷ்பேக் எழுதப்பட்ட விதம் படு சொதப்பல். மடோனோ செபாஸ்டியன் கதாபாத்திரம், மூடநம்பிக்கை, நரபலி என தாறுமாறாக எங்கெங்கோ செல்கிறது திரைக்கதை. பார்வையாளர்களுக்கு சர்ப்ரைஸ் என்று நினைத்துக் கொண்டே சம்பந்தமே இல்லாமல் வைக்கப்பட்ட கேமியோக்கள் எல்லாம் படுசொதப்பல்.

லோகேஷ் - விஜய் கூட்டணியின் முந்தைய படமான ‘மாஸ்டரில்’ விஜய் நடை, உடை, பாவனை அனைத்தும் அதற்கு முன்பு பார்த்திராத வகையில் ரசிகர்களுக்கு புதிதாக இருக்கும். இதில் அதைவிட ஒருபடி மேலே சென்று எமோஷனல், ஆக்‌ஷன், அழுகை, கோபம் என நடிப்பில் மிளிர்கிறார். அமைதியான குடும்பத் தலைவனாக பார்த்திபன் கதாபாத்திரத்திலும், ஆக்‌ஷனில் அதிரடி காட்டும் லியோ கதாபாத்திரத்திலும் வித்தியாசம் காட்டி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மனைவி தன் மீது சந்தேகப்படுவது தெரிந்து உடைந்து அழும் காட்சியில் பார்ப்பவர்களை கலங்க வைக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் படங்களில் நாயகிக்கு வேலை இல்லை என்று விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் த்ரிஷாவின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக எழுதப்பட்டுள்ளது. விஜய் - த்ரிஷா இடையிலான கெமிஸ்ட்ரியும் பல வருடங்களுக்குப் பிறகும் கூட சிறப்பாக ஒர்க் அவுட் ஆகிறது. வில்லன் வலிமையாக இருந்தால் படத்தின் சுவாரஸ்யம் கூடும் என்பது திரைக்கதை விதி. இதில் சஞ்சய் தத், அர்ஜுன் என்ற இரண்டு வில்லன்கள் இருந்தும் இருவருமே சொத்தை வில்லன்களாக காட்டப்பட்டிருக்கிறார். அதிலும் அர்ஜுன் எல்லாம் சிகரெட் பிடிப்பதற்காக மட்டுமே நடிக்கவைக்கப்பட்டிருக்கிறார்.

வனத்துறை அதிகாரியாக வரும் கவுதம் மேனன் தன்னுடைய கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்துள்ளார். படத்தில் நெப்போலியனான வரும் ஜார்ஜ் மரியனும் சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளார். இவர்கள் தவிர பிரியா ஆனந்த், மிஷ்கின், சாண்டி உள்ளிட்டோர் வீணடிக்கப்பட்டுள்ளனர். அதிலும் அனுராக் காஷ்யப் கதாபாத்திரம் எல்லாம் பரிதாபம். தானே தேடி வந்து இந்தப் படத்தில் நடித்ததாக அனுராக் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். தேடி வந்த குற்றத்துக்காக ஒரு பெரிய இயக்குநர் என்ற இரக்கம் கூட இல்லாமல் இப்படியா செய்வது? மடோனா செபாஸ்டியன் கதாபாத்திரம் எல்லாம் எதற்காக வைக்கப்பட்டது என்றே தெரியவில்லை.

அனிருத் இசையில் ‘நான் ரெடிதான் வரவா’, ‘Badass' பாடல்கள் சிறப்பு. சென்சார் பிரச்சினையால் ‘நான் ரெடி’ பாடலின் பெரும்பாலான வரிகள் ‘டவுங் டவுங்’ என்றே வருகிறது. பின்னணி இசையில் கூடுதல் உழைப்பு காட்டியிருக்கலாம். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு வெண்மை படர்ந்த பனிப் பிரேதசத்தின் அழகை கண்முன் கொண்டுவருகிறது. லோகேஷ் படங்களுக்கே உரிய அடர்ந்த செந்நிற லைட்டிங் படத்தை ஒரு டார்க் டோனிலேயே வைத்திருக்க உதவியுள்ளது. சஞ்சய் தத்தின் போதைப் பொருள் கிடங்கு, விஜய்யின் வீடு, காஃபி ஷாப் ஆகியவற்றியின் நேர்த்தியில் கலை இயக்குநரின் உழைப்பு தெரிகிறது.

லோகேஷ் கனகராஜின் முந்தையப் படங்கள் அனைத்திலும் ரசிகர்களுக்கான சின்னச் சின்ன சர்ப்ரைஸ் அம்சங்கள் ஆங்காங்கே இடம்பெற்றிருக்கும். உதாரணமாக படம் முழுக்க வரும் ஒரு டம்மி கதாபாத்திரம் திடீரென வீறு கொண்டு எழுந்து வில்லன்களை துவம்சம் செய்யும். ‘கைதி’ நெப்போலியன், ‘விக்ரம்’ ஏஜெண்ட் டினா போன்றவை உதாரணம். அப்படியான விஷயங்கள் 'லியோ'வில் மிஸ்ஸிங். சர்ப்ரைஸ் என்று நினைத்து வைக்கப்பட்ட சில காட்சிகளிலும் கூட சர்ப்ரைஸ் இல்லாமல் போனது சோகம். படத்தின் க்ளைமாக்ஸில் வரும் அந்த ‘ஒரு’ குரலைத் தவிர.

திரைக்கதையில் உழைப்பை கொட்டாமல் மேல்பூச்சுகளையும், வெற்று ‘ஹைப்’களையும் மட்டுமே நம்பி நீண்டநாள் தாக்குப்பிடிக்க முடியாது என்பதற்கு ‘லியோ’ சரியான உதாரணம். விஜய்யின் நடிப்பு, ஸ்டைலிஷ் மேக்கிங், தெறிக்கவிடும் ஆக்‌ஷன், முதல் பாதியை தாங்கிப் பிடிக்கும் சில காட்சிகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் ‘லியோ’ மிகப் பெரிய ஏமாற்றம் என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும். இரண்டாம் பாதியின் ஃப்ளாஷ்பேக் காட்சியை சிறப்பாக எழுதி, தேவையற்ற ஆக்‌ஷன் காட்சிகளை கத்தரித்திருந்தால் ‘லியோ’ பதுங்காமல் பாய்ந்திருக்கும்.

லியோ Review: ஸ்டைலிஷ் மேக்கிங், தெறிக்கும் ஆக்‌ஷன் மட்டும் போதுமா?! | Leo Movie Review - hindutamil.in

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

படம் நல்லா இருப்பதாகத்தான் பரவலாக பேச்சு.

IMG-4925.jpg

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

IMG-4925.jpg

🤣நான் படம் பார்ப்பதில்லை ஐயா. கடந்த 5 வருடத்தில் பொன்னியின் செல்வன் 1,2 மட்டுமே.

எல்லாவற்றையும் பற்றி வாசிப்பேன். பார்ப்பது மிக அரிது.

நகைசுவையை பார்ப்பேன்

  • கருத்துக்கள உறவுகள்

லியோ – விமர்சனம்!

christopherOct 20, 2023 10:14AM
leo-review.jpg

வித்தியாசமான விஜய் படம்!

விஜய்யும் லோகேஷ் கனகராஜும் மீண்டும் இணைகிறார்கள் என்ற தகவல் வெளியானதில் இருந்து, ‘லியோ’ தியேட்டருக்கு வரும் கணம் வரை எதிர்பார்ப்பு மிகுந்து உச்சம் தொட்டது. அதற்கு நிறைய காரணங்கள் உண்டென்றபோதும், இரண்டு மட்டுமே பிரதானமாக இருந்தன.

‘மாஸ்டர்’ படத்தில் விஜய்யின் நடிப்பு அபாரமானதாக இருந்தது முதற்காரணம். இரண்டாவது, அந்த படத்தில் விஜய்யின் ஹீரோயிசத்திற்காக மாநகரம், கைதியில் தென்பட்ட லோகேஷ் கனகராஜின் படைப்பாக்க சிறப்பம்சங்கள் பின்னே தள்ளப்பட்டிருந்தன.

ஆதலால், லோகேஷ் கனகராஜின் தனித்துவமான காட்சியாக்கத்தோடு விஜய்யின் நடிப்பில் ஒரு மைல்கல்லாக ’லியோ’ அமையுமா என்ற கேள்வி மிகுந்திருந்தது. அதற்கு என்ன பதில் தந்திருக்கிறது விஜய் & லோகேஷ் கனகராஜ் கூட்டணி?

😎 LEO Trailer | Records in Peace 🔥💥 Team Announced the records |  Thalapathy Vijay | Lokesh Kanagaraj - YouTube

பெயர் குழப்பம்!

இமாச்சலப் பிரதேசத்திலுள்ள தியோக் எனுமிடத்தில் பேக்கரியொன்றை நடத்துகிறார் பார்த்திபன் (விஜய்). மனைவி சத்யா (த்ரிஷா), குழந்தைகள் சித்து (மேத்யூ தாமஸ்), ஜிட்டு (இயல்) உடன் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

ஒருநாள் இரவு, அவரது கடைக்குள் ஒரு கேங்க்ஸ்டர் கும்பல் நுழைகிறது. அவர்களில் ஒருவரிடம் துப்பாக்கி இருப்பதைக் காண்கிறார் பார்த்திபன். அந்த நேரத்தில் ஜிட்டுவும், ஸ்ருதி என்ற பணிப்பெண்ணும் அங்கிருக்கின்றனர். கடையைக் கொள்ளையடிப்பதோடு, மூவரையும் கொலை செய்யவும் அக்கும்பல் துணிகிறது. அதனைத் தடுக்கும் முயற்சியில், அந்த கும்பலைச் சேர்ந்த அனைவரையும் சுட்டுத் தள்ளுகிறார் பார்த்திபன்.

வழக்கு விசாரணையில் தற்காப்பிற்காக பார்த்திபன் சுட்டதாக முடிவாகிறது. அதைத் தொடர்ந்து, அவர் விடுவிக்கப்படுவது மட்டுமல்லாமல் வீர தீர் செயலுக்காகவும் பரிந்துரைக்கப்படுகிறார். ஆனால், அவரால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையில் இறங்குகின்றனர். அவர்களிடம் இருந்து பார்த்திபன் தன் குடும்பத்தினரைக் காக்கப் போராடுகிறார்.

அப்போது, தெலங்கானாவைச் சேர்ந்த ஆண்டனி தாஸ் (சஞ்சய் தத்), அவரது சகோதரர் ஹெரால்டு தாஸின் (அர்ஜுன்) ஆட்கள் பார்த்திபனைத் தேடி வருகின்றனர். ‘நீதான் லியோன்னு ஒத்துக்கோ’ என்று அவரை ‘டார்ச்சர்’ செய்கின்றனர்.

ஆண்டனியின் மகனான லியோ, இருபதாண்டுகளுக்கு முன்னர் போதைப்பொருள் கடத்தலில் பெரும்புள்ளியாகத் திகழ்ந்தவர். அவர் இறந்துவிட்டாரா அல்லது காணாமல்போய் விட்டாரா என்பது மர்மமாகவே இருந்து வருகிறது.

அந்தக் கும்பலின் தொடர் துரத்தல்களை அடுத்து, ஒருகட்டத்தில் ’பார்த்திபன் ஒரு முன்னாள் குற்றவாளியோ’ என்று சத்யாவே சந்தேகப்படுகிறார். அந்த நேரத்தில், பார்த்திபன் குடும்பத்தினரைக் கூண்டோடு தகர்க்கும் முயற்சியில் ஆண்டனி & ஹெரால்டின் ஆட்கள் இறங்குகின்றனர்.

லியோவுக்கும் அந்த கும்பலுக்குமான மோதலுக்குக் காரணம் என்ன? உண்மையில், பார்த்திபன் தான் லியோவா என்ற கேள்விக்குப் பதில் சொல்கிறது மீதமுள்ள திரைக்கதை.

’பெயர் குழப்பம்’ திரைக்கதையில் பிரதான இடத்தைப் பிடித்தாலும், வாழ்நாளில் திரைப்படமே பார்க்காத ஒருவர் கூட ‘பார்த்திபனும் லியோவும் ஒரே ஆள்தான்’ என்று சொல்லிவிடுவார். அதனால், இந்தக் கதையில் புதிய விஷயமென்று எதுவுமில்லை. ஆனால், அதற்குத் திரையுருவம் தந்த வகையில், சில இடங்களில் நம்மை சுவாரஸ்யப்படுத்துகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்; சில இடங்களில் ‘ப்ச்’ என்று உதட்டைப் பிதுக்க வைத்திருக்கிறார்.

Leo' advance booking update: Thalapathy Vijay's film projected to open at  Rs 130 cr worldwide, biggest for an Indian movie in 2023 - BusinessToday

’வாவ்’ விஜய்!

வழக்கமாக, விஜய் படங்களில் என்னவெல்லாம் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்களோ அவையனைத்தும் ‘லியோ’வில் உண்டு. ஆனால், அது சற்றே வேறுபட்டு அமைந்திருப்பதுதான் வித்தியாசம்.

நடிப்பைப் பொறுத்தவரை, விஜய்க்கு ஒரு மைல்கல்லாக அமைந்திருக்கிறது ‘லியோ’. கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி தவிர்த்து, மற்ற இடங்களில் எல்லாம் நட்சத்திரமாக அல்லாமல் வெறுமனே ஒரு நடிகராகத் தோன்றியிருப்பது சிறப்பு. அதுவே, அவர் தோன்றும் காட்சிகள் அனைத்தையும் ‘வாவ்’ என்று ஆச்சர்யப்பட வைக்கிறது.

த்ரிஷாவுக்கு இதில் விஜய்யின் மனைவி வேடம். மேத்யூ தாமஸ், இயலுக்குத் தாய் பாத்திரத்தில் பாந்தமாகப் பொருந்தியிருக்கிறார்.

கௌதம் மேனன் படம் முழுக்கத் தோன்றியிருக்கிறார். அவரது மனைவியாக வரும் பிரியா ஆனந்த் நான்கைந்து இடங்களில் தலைகாட்டியிருக்கிறார். ‘கைதி’யில் வந்த ஜார்ஜ் மரியமும் இதில் உண்டு.

பிரதான வில்லன்களாக வரும் சஞ்சய் தத்தும் அர்ஜுனும் திரையில் மிரட்டியிருக்கின்றனர். மன்சூர் அலிகான் இரண்டொரு காட்சிகளில் தோன்றியிருக்கிறார். படத்தில் மடோனா செபாஸ்டியன் இடம்பெறும் காட்சிகள் நன்றாக உள்ளன.

இவர்கள் தவிர்த்து மிஷ்கின், சாண்டி, பாபு ஆண்டனி, மதுசூதன் ராவ், லீலா சாம்சன், டான்ஸ் மாஸ்டர்கள் சாந்தி, தினேஷ், ஜனனி குணசீலன், சச்சின் மணி என்று பலர் இதில் இடம்பிடித்துள்ளனர். ராமகிருஷ்ணன், வையாபுரி, ஜவஹர் ஆகியோர் இரண்டொரு ஷாட்களில் தலைகாட்டியிருக்கின்றனர்.

இவர்களோடு அனுராக் காஷ்யப்பும் இடம்பெற்றிருக்கிறார். ஆனால், அவருக்கு ஏன் அப்படியொரு காட்சி தரப்பட்டது என்பது லோகேஷ் கனகராஜுக்கே வெளிச்சம்.

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு, ஒரு ஹாலிவுட் படத்தைத் தமிழில் பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது. சண்டைக்காட்சிகளில் அவரது உழைப்பு அபாரம்.

பிலோமின் ராஜ் படத்தொகுப்பு கன கச்சிதமாகக் காட்சிகளை அடுக்கியிருக்கிறது. ஆனால், பிளாஷ்பேக் காட்சிகளில் மட்டும் அவரிடம் தடுமாற்றம் தெரிகிறது.

’ஜெயிலர்’ அளவுக்கு இல்லாவிட்டாலும், இருக்கையை விட்டு எழாமல் ‘லியோ’வைப் பார்க்க வைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது அனிருத்தின் பின்னணி இசை. அதேநேரத்தில், வழக்கமாக அவரது பாடல்கள் தரும் உற்சாகம் இதில் கிடைக்கவில்லை.

என்.சதீஷ்குமாரின் கலை வடிவமைப்பு இப்படத்தின் மிகப்பெரிய பலம். விஷுவல் எபெக்ட்ஸ் இடம்பெறாத காட்சிகள் அனைத்தும் ‘ரிச்’சாக தெரிவதில் அவரது குழுவின் உழைப்பு கடுமையாக உழைத்திருக்கிறது.

அனைத்துக்கும் மேலாக, அன்பறிவ் சகோதரர்களின் சண்டைக்காட்சி வடிவமைப்புதான் இப்படத்தின் உயிர்நாடியாக விளங்குகிறது.

எல்லாம் சரி, லோகேஷ் கனகராஜின் திரைக்கதை மாயாஜாலம் எப்படியிருக்கிறது? இதில் ‘எல்சியு’ உள்ளதா? கமர்ஷியல் படம் என்பதைத் தாண்டி, மேற்கத்திய படங்கள் பார்த்த அனுபவத்தை இதில் லோகேஷ் தருகிறாரா? இக்கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்குப் பதிலாகத் தலையைச் சொறிய வேண்டியிருக்கிறது. ஏனென்றால், இதில் ‘கைதி’, ‘விக்ரம்’, ‘மாநகரம்’ தந்த அனுபவம் கொஞ்சம் கூட கிட்டவில்லை. முக்கியமாக, பிளாஷ்பேக் பார்த்தபிறகு மொத்தப்படமும் ’மிகச்சிறியதாக’த் தோன்றுகிறது.

அந்த வகையில், லோகேஷ் கனகராஜ் ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறார். கூடவே, ‘ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்’ எனும் ஹாலிவுட் படத்தைத் தமிழில் தர வேண்டிய அவசியம் என்ன என்று புலம்ப வைத்திருக்கிறார்.

Thalapathy Vijay's Leo poster creates a political controversy

சாக்லேட் காபி காட்சி!

தொண்ணூறுகளில் புகழ் பெற்ற சில பாடல்களை ஆக்‌ஷன் மற்றும் த்ரில் ஊட்டும் காட்சிகளில் பயன்படுத்தும் வழக்கத்தைத் தன் படங்களில் மேற்கொண்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ். அவ்வாறு ’விக்ரமில்’ இடம்பெற்ற ‘வத்திக்குச்சி வத்திக்குச்சி சட்டுன்னுதான் பத்திக்க்குச்சி’ எனும் அசுரன் படப் பாடல் ரசிகர்களிடையே வைரல் ஆனது.

விஜய் நடத்திவரும் கடைக்கு வந்து சாண்டி சாக்லேட் காபி கேட்பதாக, இதிலும் அதேபாணியில் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது.

அந்தக் காட்சியில் ‘கரு கரு கருப்பாயி..’, ‘தாமரைப் பூவுக்கும்..’ பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவ்விரு பாடல்களையும் இன்றும் ரசிப்பவர்களுக்கு, அக்காட்சியனுபவம் தருவது ‘கூஸ்பம்ஸ் மொமண்ட்’களாக இருக்கும்.

குறிப்பாக, அதில் விஜய்யின் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் அருமையாக அமைந்திருக்கின்றன. அதற்கு இணையாக, அந்த பின்னணியில் அன்பறிவ் சண்டைக்காட்சியை வடிவமைத்திருப்பது நிச்சயம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும்.

அந்த காட்சி உட்படத் திரைக்கதையின் சில இடங்கள் நம்மைக் குதூகலப்படுத்துகின்றன. அதேநேரத்தில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள அதீத வன்முறை நிறைந்த சண்டைக்காட்சிகளும், எல்சியுவில் இடம்பெற வேண்டுமென்பதற்காக வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகளின் இருப்பும் நம்மை அயர்வுற வைக்கின்றன.

வித்தியாசமான விஜய் படமொன்றை பார்க்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு ‘லியோ’ சரியான சாய்ஸ். ஆனால், அதில் முழு திருப்தி கிடைக்க வேண்டுமென்று மட்டும் எதிர்பார்க்கக் கூடாது!
 

https://minnambalam.com/cinema/leo-movie-review/

 

  • கருத்துக்கள உறவுகள்

 ஜபிசி தமிழ்த் தொலைக்காட்சியில் பணியாற்றிய   ஈழத்தமிழ் பெண் ஜனனி இதில் நடித்துள்ளார். 

 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் இந்த படத்தை பார்த்தேன்...விஜய் வழமைக்கு மாறாக நடுத்தர வயசு கீரோவாய் நடித்து உள்ளார்....படத்தில் பெரிய நடிகர்களை வில்லனாக போடாமல் விட்டு இருந்தால் படம் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும்...சண்டைக் காட்சிகள் அதிகம்...டூயட் பாட்டுக்கள் இல்லை ...விஜய்,சாண்டி நடிப்பு அற்புதம் 
 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே இரைச்சல். இனிமேல் கொப்பிகற் அனிடுத் இசையமைக்கும் படங்களைப் பார்ப்பதில்லை என யோசித்திருக்கிறேன். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Kapithan said:

ஒரே இரைச்சல். இனிமேல் கொப்பிகற் அனிடுத் இசையமைக்கும் படங்களைப் பார்ப்பதில்லை என யோசித்திருக்கிறேன். 

அனுருத்து மியூசிக் ஏற்கனவே ரயில் ஸ்ரேசன்லை நிண்ட மாதிரி இருக்கும்....இப்ப சொல்லி வேலையில்லை..... இன்றைய மேலைத்தேய பாடல்களை கொப்பியடிச்சும் திருந்துகிறார் இல்லை.....🤣

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

அனுருத்து மியூசிக் ஏற்கனவே ரயில் ஸ்ரேசன்லை நிண்ட மாதிரி இருக்கும்....இப்ப சொல்லி வேலையில்லை..... இன்றைய மேலைத்தேய பாடல்களை கொப்பியடிச்சும் திருந்துகிறார் இல்லை.....🤣

காலி பெருங்காய டப்பா சரக்கு முடிந்து விட்டது போல் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

நான்தியேட்டர் போகலாம் எண்டு கிளம்ப, நண்பர் போனீல சொன்னார், தல அஜித் கோஸ்டி வந்து படம் குப்பை எண்டு நக்கல் அடிக்க, படம் பார்த்து வெளீல வந்த தளபதி கோஸ்டி அடிபாட்டீல போய் போலீஸ் வந்ததாம் எண்டு.

அதோட போறேல்ல எண்டு முடிவு.😂

  • கருத்துக்கள உறவுகள்
On 20/10/2023 at 14:57, island said:

ஈழத்தமிழ் பெண் ஜனனி இதில் நடித்துள்ளார். 

அவா என்ன பாத்திரத்தில் நடித்துள்ளார்? நான் இன்னும் பார்க்கவில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அவா என்ன பாத்திரத்தில் நடித்துள்ளார்? நான் இன்னும் பார்க்கவில்லை.

 

சிறிய ரோலில் நடித்துள்ளார். விஜய் நடத்தும் cofffee shop ல்  ஜனனியிடம் ரகளை செய்யும் வில்லனுடன் விஜய் சண்டை போடும் காட்சி.  

லியோ - பாட்ஷாவின் இன்னொரு version

ஆனாலும், விஜயின் நடிப்பு நல்லா இருக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

A History Of Violence எனும் படத்தின் தழுவல் என கூறப்பட்டாலும் அந்த படம் அளவிற்கு இந்த படம் அவ்வளவு மோசமில்லை என கருதுகிறேன், படம்  மிக நீளமாக இருப்பதும் காட்சிகள் மற்றும் கதையும் (கதை என்று பெரிதாக இல்லை என நினைக்கிறேன்) மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் சுற்றி வருவது போல இருப்பதால் படம் பெரிதாக ஒட்டவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உதவாத படம். ஒரு கதையும் இல்லை. சும்மா ஒரே சண்டை மட்டும் தான். 600 கோடி வசூலாம் எப்பிடியெண்டு தெரியேலை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல தாசப்தங்களுக்கு பிறகு கொழும்பு பம்பலபிட்டி மெஜெஸ்டிக் தியேட்டரில் பார்த்தேன். 
விஜை நடிப்பை ரசிக்கலாம். பாட்சாவை ஞாபகப்டுத்துகி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.