Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

Live Update

நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வில் இருந்தார். அவ்வப்போது சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கும், உள்ளூரில் இருக்கும் மருத்துவமனைகளுக்கும் செல்வது வழக்கம். இதனால் அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்து வந்தார். இதற்கிடையில், கடந்த மாதம் 18-ம் தேதி சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த், நீண்ட நாள் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார்.

 
விஜயகாந்த்
 
விஜயகாந்த்

அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு, தே.மு.தி.க தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி கடந்த 14-ம் தேதி நடந்த கட்சிப் பொதுக்குழுக் கூட்டத்தில், விஜயகாந்த் முன்னிலையில் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார், பிரேமலதா. பின்னர் விஜயகாந்தின் காலில் விழுந்து ஆசியும் பெற்றார். இந்த நிலையில், மீண்டும் உடல்நலக் குறைவால் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

 
42 mins ago

இது குறித்து தே.மு.தி.க வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "மருத்துவப் பரிசோதனையில் கேப்டனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால், வென்டிலேட்டர் சிகிச்சையளிக்கப்படுகிறது" எனக் குறிப்பிட்டிருந்தது. மேலும் மருத்துவமனை பகுதியில் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில், நடிகர் விஜயகாந்த் சிகிச்சைக் குறித்து மருத்துவ நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,நேற்று உடல்நிலை சீரற்ற நிலையில், மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஏற்கெனவே நுறையீரல் தொற்று இருந்த நிலையில், அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது. அதனால் அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தி தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்" எனக் குறிப்பிட்டிருக்கிறது.

விஜயகாந்த் மரணம் தொடர்பான தகவல்கள் வெளியான நிலையில், தொண்டர்களும், அவரது ரசிகர்களும் பெரும் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். அவரது உடல், சாலிகிராமத்தில் இருக்கும் அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. அவரது இல்லத்தில் தேமுதிக கட்சிக் கொடி, அறைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருக்கிறது.

https://www.vikatan.com/government-and-politics/corona-dmdk-leader-actor-vijayakanth-passed-away?pfrom=home-main-row

 

  • Replies 69
  • Views 6.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • 1. இந்த வீடியோவில் விஜயகாந்த் எப்படி பட்ட தமிழ் உணர்வாளராய் இருந்தார் என மிக அழகாக கூறப்பட்டுள்ளது. இந்த விஜயகாந்தைத்தான், அவரின் கடைசிகாலங்களில் தெலுங்கன், தமிழை தமில் என உச்சரிப்பவர் என சிலர் விமர்ச

  • குமாரசாமி
    குமாரசாமி

    தமிழ் நாட்டு இதர நடிகர்கள் அச்சமடையுமளவிற்கு மனித நேயமிக்கவர் என கூறுகின்றார்கள். ஏனைய நடிகர்களை திட்டுவது போல் விஜய்காந்த் அவர்களை திட்டியதை நான் எங்கும் காணவில்லை.

  • இது  என்றும்  பலருக்கு புரியப்போவதில்லை  அவர்கள் தமிழர்கள் எனினும் இந்தியார்கள் ..  ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள் 

  • கருத்துக்கள உறவுகள்

விஜயகாந்த் காலமானார்

விஜயகாந்த்

பட மூலாதாரம்,VIJAYAKANTH FACEBOOK

28 டிசம்பர் 2023, 03:10 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 நிமிடங்களுக்கு முன்னர்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"நிமோனியாவுக்காக அனுமதிக்கப்பட்ட அவர், வென்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவர்களின் தீவிர முயற்சியும் பலனளிக்காமல் அவர் இறந்துவிட்டார்" என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக "மருத்துவப் பரிசோதனையில் கேப்டன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் சிகிச்சை கொடுக்கப்படுகிறது" என்று தேமுதிக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இத்தகைய சூழலில் தேமுதிக நிர்வாகிகளும் தொண்டர்களும் விஜயகாந்தின் இல்லத்தில் குவிந்து வருகிறார்கள்.

விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டிருக்கும் மியாட் மருத்துவமனையிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் குன்றியிருக்கும் விஜயகாந்த் பல தருணங்களில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.

கடந்த மாதம் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்தி கடந்த 11-ஆம் தேதி வீடு திரும்பினார். கட்சியின் பொதுக்குழு கூட்டத்திலும் பங்கேற்றார்.

செவ்வாய்க்கிழமையன்று மீண்டும் மருத்துவமனை சென்ற விஜயகாந்துக்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவர் காலமானார்.

விஜயகாந்த்

தலைவர்கள் இரங்கல்

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தின் பதிவில், "உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர்,சகோதரர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன். அவர் நல்ல திரைப்படக்கலைஞர், நல்ல அரசியல் தலைவர், நல்ல மனிதர், நல்ல சகோதரர், ஒட்டுமொத்தமாக ஒரு நல்லவரை நாம் இழந்து இருக்கிறோம்.

சகோதரர் திரு.விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் என்றில்லை" என்று கூறியுள்ளார்.

சிபிஎம் தலைவர் பாலகிருஷ்ணன் தனது இரங்கல் செய்தியில், "அவர் சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது, அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. எதையும் நேர்மையாக, தைரியமாக பேசக்கூடியவர். ஒரு எளிய மனிதன் போல பழகுபவர். சில நாட்களாக சிகிச்சையில் இருந்தார், அப்போது நலம் விசாரித்தேன். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்" என்று கூறினார்.

கவிஞர் வைரமுத்து இரங்கல்

பெரும் கலைஞனை இழந்துள்ளேன். என் பாடலை அழகாக பாடிய கதாநயகன், என் நீண்ட கால நண்பரை இழந்துள்ளேன். எரிமலை எப்படி பொறுக்கும் என்று சிவந்த கண்களோடு பேசிய அவர் மறைந்து விட்டார். திரையில் நல்லவர், அரசியலில் வல்லவர். சினிமாவிலும் அரசியலிலும் டூப் போடாமல் இருந்தார்.

கலைஞர் மறையட்டும் ,ஜெயலலிதா மறையட்டும், அதன் பிறகு அரசியல் பற்றி யோசிக்கலாம் என்று பலர் யோசித்த போது, அவர்கள் இருக்கும் போதே, எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியை எட்டிவிட்டார். ஒரு மதுரைக்காரரை இழந்து விட்டேன்.

விஜயகாந்த் எதையுமே என்னிடம் மறைத்ததில்லை. எனக்கு பிடித்த தலைவர்கள் பற்றிய பிடிக்காத கருத்துகளை என்னிடம் கூறுவார். பணிவை, கனிவை அவரிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம். அவருடைய மண்டபம் இடிபடக் கூடாது என்று கலைஞரிடம் வாதிட்டவர்களில் நானும் ஒருவர்.

விஜயகாந்த்

பட மூலாதாரம்,VIJAKANTH

விஜயராஜ், விஜயகாந்தாக மாறியது எப்படி ?

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1952-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி அழகர்சாமி என்ற ரைஸ் மில் முதலாளியின் மகனாகப் பிறந்தார் விஜயராஜ் என்ற விஜயகாந்த். படிப்பில் பெரிதாக ஆர்வமில்லாமல், விஜயகாந்த் தினமும் நண்பர்களுடன் இணைந்து தியேட்டருக்குச் சென்று எம். ஜி. ஆர் திரைப்படங்கள் பார்ப்பது வழக்கம்.

"ஒரு கட்டத்தில் எம்ஜிஆரின் திரைப்படங்களை ஒவ்வொரு காட்சியையும் விளக்குமளவிற்கு சினிமாவின் மீது ஆர்வமானார். அதனைத் தொடர்ந்து, விஜயகாந்த் சென்னைக்குச் சென்று சினிமாவில் சாதிக்க வேண்டுமென முடிவெடுத்துவிட்டார்." என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

சென்னை வந்தவரை தமிழ் சினிமா உடனே அள்ளி அணைத்துக் கொள்ளவில்லை. எங்கு சென்றாலும் விஜயகாந்த் கறுப்பு என அவரது நிறத்தைக் காரணம் காட்டியே பல நிராகரிப்புகளை அவர் எதிர் கொள்ள வேண்டியிருந்தது.

தொடர் முயற்சியால், 1979-ஆம் ஆண்டு எம். ஏ. காஜாவின் இயக்கத்தில் “இனிக்கும் இளமை” என்ற திரைப்படத்தில் நடித்து தன் திரைப்பயணத்தைத் தொடங்கினார்.

எம். ஏ. காஜாவிற்கு விஜயராஜ் என்ற பெயரில் விருப்பமில்லை; அந்தக் காலக்கட்டத்தில் ரஜினிகாந்த் புகழின் உச்சத்திலிருந்ததால் அவரது பெயரிலிருந்த காந்த் என்பதை எடுத்து, விஜயராஜ் என்ற பெயரில் இணைத்து விஜயகாந்த் எனப் பெயர் மாற்றம் செய்தார்.

விஜயகாந்த்

பட மூலாதாரம்,VIJAYAKANTH

திரைத்துறையில் சாதனை படைத்த விஜயகாந்த்

'சட்டம் ஒரு இருட்டறை', 'தூரத்து இடி முழக்கம்', 'அம்மன் கோவில் கிழக்காலே', 'உழவன் மகன்', 'சிவப்பு மல்லி' என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களுள் ஒருவரானார் விஜயகாந்த்.

'வைதேகி காத்திருந்தாள்', 'உழவன் மகன்', 'கேப்டன் பிரபாகரன்','வானத்தைப் போல', 'தவசி', 'ரமணா' என இதுவரை 150 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ள விஜயகாந்த், 1984 ஆம் ஆண்டு மட்டும் ஒரே ஆண்டில் 18 திரைப்படங்களில் நடித்து சாதனை புரிந்தார்.

இயக்குநர் எஸ்.ஏ. சந்திர சேகர் மற்றும் இராம நாராயணன் ஆகிய இருவரும் தான் விஜயகாந்தின் அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்களை இயக்கினார்கள். அவை பெரும்பாலும் வசூலைக் குவித்தன.

1984 ஆம் ஆண்டு மட்டும் ஒரே ஆண்டில் 18 திரைப்படங்களில் நடித்து வரலாற்றுச் சாதனை புரிந்தார், விஜயகாந்த்.

https://www.bbc.com/tamil/articles/ce5j35dgpv1o

  • கருத்துக்கள உறவுகள்

உணவிட்டவர் என பலர் நினைவு கூறும் மனிதர்.

ஒரு காலத்தில் ஈழதமிழருக்கு அதிகம் உதவியவர்.  

ஆத்மா சாந்தி அடையட்டும்🙏

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜயகாந்த் இன்று வியாழக்கிழமை (28) காலை காலமாகியுள்ளார்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளதாக வைத்தியசாலை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த் அதன்பிறகு அவர் தேமுதிக கட்சியை ஆரம்பித்து அரசியலில் நுழைந்தார். எம்எல்ஏவாகவும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் வெற்றிகரமாக செயல்பட்டார். 

இந்நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான விஜயகாந்த்  சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்த், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தற்போது சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டின் முன்பு தொண்டர்கள் குவித்து வரும் நிலையில், அப்பகுதியில் பொலிஸ் பாதிகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/172594

  • கருத்துக்கள உறவுகள்

வாழும்போதே பிறரால் நெஞ்சார வாழ்த்தப்பட்டவர். 

இந்தக் கொடுப்பினை எல்லோருக்கும் வாய்த்ததில்லை. 

🙏

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

நல்ல உள்ளம் படைத்த மனிதர்.
துணிவாக அரசியல் கருத்துக்களை முன் வைத்தவர்.

அன்னாரின்  ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.  🙏

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல உள்ளம் படைத்த உண்மையான மனிதர் , ஆத்மா சாந்தியடையட்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள். ஆத்மா சாந்தியடையட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

கனல் தெறிக்கும் கண்களுடன் அனல் தெறிக்கும் வசனங்களைத் திரையில் பேசியவர்.  எல்லோரையும் அன்புடனும், சமமாகவும் நடத்தியவர். 

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான மனிதரும் சிறந்த நடிகருமாவார் .........அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்.......!

ஆழ்ந்த இரங்கல்கள்........! 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழரை உளமார நேசித்த நல்உள்ளம்!
தமிழீழ மக்களுக்காக தமிழகத்தில் ஓங்கி ஒலித்த குரல்....

கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

விஜயகாந்த்துக்கு முழு அரச மரியாதையுடன் இறுதி நிகழ்வு என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அதேபோல் இராஜாஜி மண்டபத்தில் அஞ்சலி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாம்.

  • கருத்துக்கள உறவுகள்
இறுதி வணக்கம் !
🖤🖤🖤🙏🙏🙏
சில விடைபெறல்கள் வலிகளில் இருந்து விடுதலை ! நேசமித்திரன்.
May be an image of ‎1 person and ‎text that says '‎نلنه SUN /NEWS ....IN BREAKING விஜயகாந்த் காலமானார் பிரபல நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த்( (71) காலமானார்! மியாட் மருத்துவமனையில் இருந்து அவர் உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது! SUNNEWSTAMIL SUNNEWS • sunnewslive.in 28-DEC-23‎'‎‎
 
 
 

ஆழ்ந்த இரங்கல்கள் 🙏

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

விஜயகாந்த் வாழ்க்கையின் 10 முக்கிய அம்சங்கள்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்த பத்து தகவல்கள்

பட மூலாதாரம்,VIJAYAKANTH/FACEBOOK

28 டிசம்பர் 2023, 07:41 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி, இதுதான் நடிகர் விஜயகாந்தின் இயற்பெயர். மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1952-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி அழகர்சாமி என்ற ரைஸ் மில் முதலாளியின் மகனாகப் பிறந்தவர். நடிப்பதற்காக சென்னை வந்த பிறகு தனது பெயரை "விஜயகாந்த்" என மாற்றிக்கொண்டார்.

சினிமா வாய்ப்பு இவருக்கு பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு தான் கிடைத்தது. அவரது முதல் படம், 1979-ஆம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான 'இனிக்கும் இளமை'. அவரது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய திரைப்படம் 'சட்டம் ஒரு இருட்டறை'. இந்த திரைப்படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

அதன் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறினார். 'புலன் விசாரணை', 'சேதுபதி ஐபிஎஸ்', 'சத்ரியன்', 'கேப்டன் பிரபாகரன்','வானத்தைப் போல', 'தவசி', 'ரமணா' என இதுவரை 150 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் விஜயகாந்த்.

 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்த பத்து தகவல்கள்

பட மூலாதாரம்,VIJAYAKANTH/FACEBOOK

54 புதிய இயக்குநர்களை அறிமுகம் செய்த ஒரே நடிகர்

"தனது சினிமா வாழ்க்கையில் 54 புதிய இயக்குனர்களை அறிமுகம் செய்தவர் நடிகர் விஜயகாந்த். உலக சினிமாவில் இதை வேறு யாரும் செய்திருக்க மாட்டார்கள். அதிகமான புதிய தயாரிப்பாளர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் வாய்ப்பு அளித்தவர்"

"சொல்வதெல்லாம் உண்மை திரைப்படம் மூலம் என்னை தயாரிப்பாளராக அறிமுகப்படுத்தியது அவர் தான். இந்த காட்சி எதற்கு, வசனம் எதற்கு, கதையை இப்படி மாற்றலாமா என்றெல்லாம் அவர் பேசமாட்டார். கதையை ஒத்துக்கொண்டு, சம்பளம் வாங்கிவிட்டால் எதையும் பேசாமல், விரைவாக நடித்துக் கொடுத்து விடுவார். மிகச்சிறந்த மனிதர் என்பதைத் தாண்டி ஒரு நல்ல தொழில்முறைக் கலைஞர் விஜயகாந்த்" என்று கூறினார் தயாரிப்பாளர் டி. சிவா.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்த பத்து தகவல்கள்

பட மூலாதாரம்,VIJAYAKANTH/FACEBOOK

பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்களுக்கு வாய்ப்பு அளித்தவர்

பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் உடனான இவரது கூட்டணி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 1986ஆம் ஆண்டு வெளியான ஊமை விழிகள் எனும் திரைப்படத்தில், அப்போதைய நடிகர்கள் பலரும் நடிக்கத் தயங்கிய டி.எஸ்.பி தீனதயாளன் என்ற காவல்துறை அதிகாரி வேடத்தில் திரையில் தோன்றினார் நடிகர் விஜயகாந்த்.

தனது இமேஜ் பற்றிக் கவலைப்படாமல், சற்று வயதான வேடத்தில் இந்த படத்தில் அவர் நடித்திருப்பார். இந்த அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்களுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது.

தொடர்ந்து திரைப்பட கல்லூரியிலிருந்து வந்த தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றி உழவன் மகன், செந்தூரப் பூவே, காவியத் தலைவன் போன்ற திரைப்படங்களைக் கொடுத்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்த பத்து தகவல்கள்

பட மூலாதாரம்,DMDK

சண்டைக் காட்சிகளில் டூப் வேண்டாமென மறுத்தவர்

நடிகர் விஜயகாந்தின் திரைப்படங்களில் அதிகம் பேசப்படுவது அவரது சண்டைக்காட்சிகளே. பல திரைப்படங்களில் தனக்கு டூப் வேண்டாம் என மறுத்து, சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளார். சண்டைக்காட்சிகளில் தனெக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கியிருந்தார் விஜயகாந்த.

இதற்கு பின்னால் ஒரு முக்கிய சம்பவம் உள்ளது என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். 'நாளை உனது நாள்' திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த விபத்தில், அவருக்கு டூப் போட்ட ஒரு ஸ்டண்ட் கலைஞர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு, இனிமேல் எனக்கான சண்டைக்காட்சிகளில் நானே நடித்துக் கொள்கிறேன், டூப் வேண்டாமென முடிவெடுத்துள்ளார்.

இதற்காக பிரத்யேக சண்டைப் பயிற்சிகளையும் அவர் எடுத்துள்ளார். தனது பெரும்பாலான படங்களில் டூப் போடாமல் நடித்ததால், பலமுறை இவருக்கு தோள்பட்டை இறக்கம் ஏற்பட்டுள்ளது.

 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்த பத்து தகவல்கள்

பட மூலாதாரம்,VIJAYAKANTH/FACEBOOK

கமல்- ரஜினி அலையில் தனித்து தெரிந்தவர்

1984ஆம் ஆண்டு, விஜயகாந்தின் சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஆண்டு. அந்த ஒரே ஆண்டில் மட்டும் விஜயகாந்த நடித்த 18 திரைப்படங்கள் வெளியாகின. மிகச்சில நடிகர்களுக்கு இந்த சாதனை உள்ளது.

கமல் ரசிகர்கள், ரஜினி ரசிகர்கள் என்ற தலைமுறை உருவான போது, அதற்கு இணையாக தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் விஜயகாந்த். தனது பல படங்களில் நீண்ட உணர்ச்சிபூர்வமான வசனங்களை, தன்னுடைய பாணியில் ஒரே டேக்கில் பேசி முடிப்பவர் விஜயகாந்த்.

"கிராமங்களில் இவரது படங்கள் வெளியாகும் தினத்தன்று திருவிழாவுக்கு செல்வது போல கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் வண்டி கட்டிக்கொண்டு படம் பார்க்கச் செல்வோம்", என்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த ரசிகர் அறிவுமணி.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்த பத்து தகவல்கள்

பட மூலாதாரம்,VIJAYAKANTH/FACEBOOK

கேப்டன் என்ற பட்டம்

கமல், ரஜினி, சத்யராஜ், பிரபு, கார்த்திக் என அப்போது இருந்த முன்னணி நடிகர்களுக்கு கூட 'நூறாவது படம்' என்றாலே தோல்வி தான். ஆனால் நடிகர் விஜயகாந்திற்கு நூறாவது படமான 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

1991ஆம் ஆண்டு, ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் வெளியான 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் வெள்ளிவிழா கொண்டாடியது. அந்த திரைப்படத்திற்கு பிறகு சினிமா துறையிலும், ரசிகர்கள் மத்தியிலும் கேப்டன் என்றே அழைக்கப்பட்டார்.

 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்த பத்து தகவல்கள்

பட மூலாதாரம்,VIJAYAKANTH/FACEBOOK

நடிகராக இருந்தவர் நடிகர் சங்கத் தலைவரானார்

விஜயகாந்த் 1999-ஆம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவரானார். அவர் நடிகர் சங்கத் தலைவரானபோது, நடிகர் சங்கம் மிகப் பெரும் கடன் சுமையில் இருந்தது.

அதனை வெளி நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் கடன்களை அடைத்தார். அதோடு மட்டுமல்லாமல், நலிந்த கலைஞர்களுக்கு, உதவி செய்வதற்காக ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி, பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார்.

2002-ஆம் ஆண்டு காவிரி நதி நீர் பிரச்னை உச்சத்தில் இருந்தபோது, அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து “நீர் தராத கர்நாடகாவுக்கு மின்சாரம் இல்லை” என்ற போராட்டத்தை நெல்லையில் நடத்தினார்.

மனிதாபிமானமிக்க நடிகர்

விஜயகாந்த் குறித்து பிபிசி தமிழுக்காக ஒருமுறை பேசிய நடன இயக்குனர் பிருந்தா, “விஜயகாந்த் சினிமா படப்பிடிப்புத் தளங்களில் ஒழுக்கத்தினைக் கடைப்பிடிப்பார். அவரது 'ஷாட்' முடிந்தவுடன் சென்று கேரவனில் அமர மாட்டார்." என்றார்.

"விஜயகாந்த் போன்று ஒரு நல்ல மனிதரைப் பார்க்கவே முடியாது. அவர் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது, நடிகர் சங்கத்தின் கடன்களை அடைக்க வெளிநாடுகளில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது, நடன இயக்குனர்களையும், நடனக் கலைஞர்களையும் மிகவும் அன்போடு கவனித்துக் கொள்வார். "

"நடன இயக்குனர்களுக்கு சிங்கப்பூரிலிருந்து, மலேசியாவிற்குச் செல்லும்போது விமான டிக்கெட்டுகளையே முன்பதிவு செய்து கொடுத்தார். நடனக் கலைஞர்கள் தானே என அவர் எங்களை பேருந்தில் பயணம் செய்யவிடவில்லை. மிகவும் அற்புதமான மனிதர்” என்றார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்த பத்து தகவல்கள்

இளம் நடிகர்களுக்கு கைகொடுத்தவர்

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் 1993இல் வெளியான திரைப்படம் 'செந்தூரப் பாண்டி'. இந்த படத்தில் விஜய்க்கு அண்ணனாக, கவுரவ வேடத்தில் தோன்றியிருப்பர் நடிகர் விஜயகாந்த்.

இதேபோல 1999இல் 'பெரியண்ணா' என்ற திரைப்படம், அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த சூர்யா நடித்த திரைப்படம். அதிலும் ஒரு கவுரவ வேடத்தில் தோன்றியிருப்பர் நடிகர் விஜயகாந்த்.

"சூர்யா நடிப்பில் வந்த மாயாவி திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்திற்காக அவரிடம் பேசியபோது, உடனே ஒத்துக்கொண்டார். பொதுவாக அவரைப் போன்ற பெரிய நடிகர்கள் அவ்வளவு எளிதாக நடிக்க ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அடுத்த நாளே, ஏவிஎம் ஸ்டூடியோவில் தான் நடித்துக் கொண்டிருந்த படத்தின் உணவு இடைவெளியில் எங்களுக்கான பகுதியை முடித்து கொடுத்தார்" என மாயாவி திரைப்படத்தின் இயக்குனர் சிங்கம் புலி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்த பத்து தகவல்கள்

பட மூலாதாரம்,VIJAYAKANTH/FACEBOOK

'ஏழை எளியவர்களுக்கு உதவுவதில் விஜயகாந்த் போல் யாரும் இல்லை'

விஜயகாந்த் குறித்து பிபிசி தமிழுக்காக ஒருமுறை பேசிய நடிகர் ரமேஷ் கண்ணா, "விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது, நான் இணைந்து கொள்ள விருப்பப்பட்டேன். அவர் என்னை அழைத்து நீ என் கட்சியில் சேர்ந்தால் ஓரு சார்பாளனாகிப் போவாய். நீ எல்லாருக்கும் பிடித்தவனாக இரு என அறிவுரை வழங்கினார். " என்றார்.

"பெரும்பாலான உதவி இயக்குனர்களுக்கு சாப்பாடு இருக்காது. வறுமை தான். அப்பொழுதெல்லாம் கண்ணை மூடிக் கொண்டு நாங்கள் நடிகர் விஜயகாந்த் வீட்டிற்குச் செல்வோம். அதேபோல், அவர் என்ன உணவு உண்பாரோ அதே உணவைத் தான் அனைவருக்கும் வழங்கச் சொல்வார்."

"படப்பிடிப்புத் தளத்திலும் இதே தான், லைட் யூனிட்டிலிருந்து, சவுண்ட் யூனிட்டிலிருந்து அனைவருக்கும் ஒரே சாப்பாடு தான் வழங்கச் சொல்வார். படப்பிடிப்புத் தளத்தில் பாகுபாடு பார்க்காமல் அனைவருடனும் அமர்ந்து ஒன்றாக உணவு உண்பார்" என்றார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்த பத்து தகவல்கள்

பட மூலாதாரம்,VIJAYAKANTH/FACEBOOK

வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட்ட விஜயகாந்தின் பிறந்தநாள்

சினிமாவில் பல உச்சங்களைத் தொட்ட விஜயகாந்த் 2005-ஆம் ஆண்டு, செப்டம்பர் 14-ஆம் தேதி மதுரையில் மாபெரும் மாநாடை நடத்தி, அதில், ”தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்” என்ற தனது கட்சியின் பெயரையும் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து விஜயகாந்த் சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு முழு நேர அரசியலில் இறங்கினார்.

விஜயகாந்த் 2006-இல் கட்சி தொடங்கிய பிறகு, ஒவ்வொரு வருடமும் அவரது பிறந்த நாளை 'வறுமை ஒழிப்பு தினமாக' கடைபிடித்து வந்தார்.

அந்நாளில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் விஜயகாந்தின் வழியைப் பின்பற்றி ஏழை, எளிய மக்களுக்கான நலதிட்ட உதவிகளை 'இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே' என்ற முழக்கத்தோடு செய்து வருகின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/c0xy9pdl4d6o

  • கருத்துக்கள உறவுகள்

எம்மில் பலருக்கு விஜயகாந்த் அவர்கள் ஒரு தமிழ் திரைப்பட கதாநாயகனாகவே தெரியும். 

எனது நினைவில் விஜயகாந்த் ஆரம்பம் வைதேகி காத்திருந்தாள் படம், இதில் வரும் பாடல்கள், அதில் அவர் நடிப்பு எம்முடன் கலந்தவை. 

ஆழ்ந்த அனுதாபங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்
மதுரையில் அரிசிஆலை நடத்தி வந்த குடும்பத்தில் இருந்து சினிமா ஆர்வத்தில் சென்னைக்கு வந்து விட்டார் விஜயராஜு. வாய்ப்பு தேடி அலைந்த காலங்களில் சாப்பாட்டுக்கே கஷ்டம்... ஊரில் இருந்தும் எந்த உதவியும் பெற மனமில்லை.
இரண்டொரு படங்கள் நடித்த பின்னும் கூட அடுத்த வாய்ப்புகள் வரவில்லை. மீண்டும் கஷ்டம்....
ஒரு வழியாக ரஜினி கமலுக்கு இணையாக எந்த சினிமா பேக்ரவுண்டும் இல்லாமல் சினிமா உலகில் தனக்கென தனி இடம் பிடித்தார் கேப்டன்.
அப்போதெல்லாம் நான்கு கேட்டகிரியாக ஷுட்டிங் ஸ்பாட்டில் உணவுகள் தரம் பிரித்து வழங்கப்படும். ஹீரோ, ஹீரோயின், டைரக்டர், கேமரா மேன் போன்றோருக்கு ஒரு வகை,
அசிஸ்டன்ட் கேட்டகிரிக்கு தனி, லைட்மேன் போன்றோருக்கு தனி, கடைசியா ட்ரைவர், மற்ற சிப்பந்தி வேலை பார்ப்பவர்களுக்கு தனி... இதுதான் காலங்காலமாக இருந்த வழக்கம்.
ஆனால் விஜயகாந்த் அவர்கள் படப்பிடிப்பில் மட்டும் அனைவருக்கும் ஒரே வகையான சாப்பாடு, விஜயகாந்த் மட்டன் சாப்பிட்டால் கடைசி பணியாள் வரை மட்டன் சாப்பாடு, அவருக்கு மீன் பொறித்தால் கடைசி பணியாள் வரை மீன் கொடுக்க வேண்டும்.
சாப்பிடுறதுல என்னைய்யா ஆள் பாத்து கொடுக்குறிங்க ன்னு சொல்லி அத்தனை பேருக்கும் ஒரே சாப்பாடு ன்னு கொண்டு வந்தது விஜயகாந்த்...
தயாரிப்பாளர் தலைல அந்த செலவை கட்டல.... என் சம்பளத்துல இருந்து அத பண்ணுங்க... மிச்சத்தை மட்டும் கொடுங்கனு சொல்லிட்டு போயிடுவார்...
கோடம்பாக்கத்துல அவரோட அலுவலகத்துல அணையா விளக்கு மாதிரி அடுப்பு எரிஞ்சுட்டே இருக்கும்... பசின்னு வர்ற அத்தனை பேரும் சாப்டுட்டு போயிட்டு இருப்பாங்க.
சிலர் லாம் மெஸ் ன்னு நினைச்சு உள்ள வந்துட்டு சாப்டுட்டு ரூபாய் கொடுக்க போனப்போ இது விஜயகாந்த் சார் ஆஃபீஸ் ங்க ன்னு சொல்லி அனுப்பி வைப்பாங்களாம்.
அந்த அளவுக்கு பிறர் பசியை போக்கிய வள்ளல்.
காலாகாலமா கடன்ல மட்டும் இருக்குனு கணக்கு காட்டுன நடிகர் சங்க கடனை யெல்லாம் அடைச்சு அத நல்ல நிலைக்கு கொண்டு வந்த சிறந்த நிர்வாகி ‌.
எதிர்கட்சி தலைவர் அளவுக்கு வெகு விரைவில் வந்த அரசியல்வாதி...
அவருக்கு சினிமால நடிக்க வந்த அளவுக்கு நிஜத்துல நடிக்க வரல.
அவரோட இயல்பை எல்லா இடத்துலயும் வெளிப்படுத்தினார். அது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.
சிரிச்சாலும் வெள்ளந்தியான சிரிப்பு... ஒருத்தரோட கஷ்டம்னாலும் அத பாத்து கண்ணீர் விட்டு அழுற மனசு... அப்படிப்பட்ட ஒரு மனுஷன்.
அரசியல்வாதிகளில் வள்ளல் ன்னு MGR யை சொல்லுவாங்க... நான் அவரை பாத்ததில்ல... ஆனா வாழும் வள்ளலா பாத்தது விஜயகாந்த் அவர்களைத்தான்...
பல லட்சக்கணக்கான பேரின் பசியை போக்குன, கண்ணீரைத்துடைத்த விஜயகாந்த் மதுரை மாநாட்டுல சொல்றார்.
"என் சொந்த காசுலதான் கட்சி துவங்குறேன். காசு வரும் போகும். இது இல்லாமலே போனாலும் பரவால்ல... மனுசன் என்னய்யா அதிகபட்சமா தேட போறான் சாப்பாடுதான...
இத்தன லச்சம் பேரு இங்க வந்துருக்கிங்க, உங்க ஒவ்வொருத்தர் வீட்லயும் ஒரு வேளை சோறு வாங்கி சாப்டாலும் என் ஆயுள் பத்தாது. அவ்வளவு அன்பை தேடி வச்சுருக்கேன்" ன்னு சொன்னார்.
ஆழ்ந்த இரங்கல் கேப்டன்... உங்கள் நல்ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாறட்டும்...😔😔😔🙏
May be a doodle of 1 person
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் ஒம் சாந்தி 

  • கருத்துக்கள உறவுகள்

''சட்டம் ஒரு இருட்டறை'' அந்தக்காலத்தில் சிறிய தொலைக்காட்சிப் பெட்டியில் படமோடும்போது மணற்றரையிலேயிருந்து பார்த்தபடம். என்னோடு படம் பார்த்தவர்கள் பலரில்லை. பல்வேறு விடுதலைத் திசைகள் தேடிப்பறந்தனர். பின்னர் உரு சிலரை மட்டுமே சந்தித்துள்ளேன். சிலர் படகோடு கடலோடு கலந்த துயரமும் நடந்தது. காலங்கள் மாறினாலும் இன்றும் இந்தக் கதைதொடுக்கும் வினாக்களுக்கான பதில் நிறைவாகவில்லையல்லவா? சட்டத்தைத் தமக்குச் சாதகமாக வளைப்பது தொடர்கிறது.

நன்றி


நன்றி - யூரூப்

உரு - ஒரு

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன எம் ஜி ஆர் என எல்லோராலும் போற்றப்பட்ட விஜயகாந்துக்கு 

ஆழ்ந்த அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

விஜயகாந்த் உடல் நல்லடக்கம் குறித்து குடும்பத்தினர் அறிவிப்பு!

download-8.jpg

பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் இன்று(28) காலமானார். சுகயீனமுற்றிருந்த அவர் கொரோனா தொற்றுக்குள்ளானதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை மியாட் மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதியானது.

மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டபோதிலும், இன்று(28) காலை 6:10 மணியளவில் மருத்துவ சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டது.

மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்கு விஜயகாந்தின் உடல் கொண்டு செல்லப்பட்ட நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார்.

அத்துடன் விஜயகாந்த் உடலுக்கு முழு அரச மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என்று அறிவித்தார்.

இந்நிலையில் விஜயகாந்தின் உடல் அவரது வீட்டில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களின் அஞ்சலிக்காக இன்றும், நாளையும் அவரது உடல் தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட உள்ளது.

நாளை 29ஆம் திகதி மாலை 4.45 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

https://thinakkural.lk/article/286210

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.