Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

ஒருவருக்கு நீண்ட கால்கள் இருப்பது சில அனுகூலங்களையும், சில பிரதிகூலங்களையும் தரவல்லது.

லேடீஸ் அன்ட் ஜென்ரில்மன் !   இவர் தான் கொக்கை தடிமாதிரி உயரமானவர் எண்டு சொல்லாமல் சொல்லுறார் 🤣

ஓகே....இப்ப என்ர கேள்வி என்னவெண்டால்......
தமிழர்களை பற்றி சிங்களச்சனம் என்ன நினைக்கினம்? தமிழர் பிரச்சனையை பற்றி ஏதும் கதைக்கினமோ? 

அல்லது தமிழர்களுக்கு பிரச்சனையே இல்லையென்று நினைக்கின்றர்களா?

  • Replies 364
  • Views 38k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    பாகம் II   ஒருவருக்கு நீண்ட கால்கள் இருப்பது சில அனுகூலங்களையும், சில பிரதிகூலங்களையும் தரவல்லது. விமானப்பயணத்தில் பிரதிகூலம் என்னவெனில், எக்கானாமி இருக்கைகள் இடையேயான  இடைவெளி போதாமையால், ம

  • Thumpalayan
    Thumpalayan

    எல்லார்ட வரவேற்புக்கும் நன்றி. ஒவொருநாளும் யாழப் பாக்காட்டிக்கு எனக்கு பத்தியப்படாது. எழுதத்தான் பஞ்சி, அதைவிட அநேகமான புலம்பெயர் உறவுகள் அடுத்த கட்டத்துக்கு நகர விரும்பாமையும் (moving on) ஒருவகை விரக

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்

‘Negativity’ இல்லாமல் ஒரு ஆய்வு போல எழுதியுள்ளீர்கள், கோஷான்..! 

இலங்கை மீளக் கடன்களைச் செலுத்த ஆரம்பிக்கும் போது, நிலமை மீண்டும் மோசமடையலாம்..!

மீண்டும் கண்டதில் மிக்க மகிழ்ச்சி…!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

வெளியில் இருந்து நினைத்தை போல் நாட்டின் நிலை அவ்வளவு மோசம் இல்லை. அல்லது மோசமாய் இருந்து, ரணில் வந்த பின் முன்னேறியுள்ளது.

அது சரி ....... இலங்கை பெற்ற கடன்களை மீள செலுத்தி விட்டதா? பௌத்த விகாரைகளின் கட்டுமானப்பணிகள் குறைந்து விட்டதா? மக்கள் தங்கள் நிலங்களில் சுதந்திரமாக குடியேற அனுமதித்துள்ளார்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
41 minutes ago, satan said:

அது சரி ....... இலங்கை பெற்ற கடன்களை மீள செலுத்தி விட்டதா? பௌத்த விகாரைகளின் கட்டுமானப்பணிகள் குறைந்து விட்டதா? மக்கள் தங்கள் நிலங்களில் சுதந்திரமாக குடியேற அனுமதித்துள்ளார்களா?

அடிச்சான் பார் ஆப்பு...🤣

டம்பியர் இனி அங்காலை இஞ்சாலை அரக்கேலாது...😎

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க மகிழ்ச்சி வாருங்கள்… வரவேண்டும்,. .

  • கருத்துக்கள உறவுகள்

ஏண்ணா..போன இடத்தில் சம் சும்மை கண்டீர்களா....லங்காகாமாதாவுக்கு...நற்சான்றிதழ் கொடுக்கிறியளே...😎

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
On 25/3/2024 at 12:28, goshan_che said:

வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….

IMG-6202.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

லேடீஸ் அன்ட் ஜென்ரில்மன் !   இவர் தான் கொக்கை தடிமாதிரி உயரமானவர் எண்டு சொல்லாமல் சொல்லுறார் 🤣

எல்லாம் ஒரு அவையடக்கம், பவ்வியம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தனது கடனை திரும்பி கொடுத்துவிட்டதோ  என்ன ஒரு அக்கறை புல்லு அரிக்குது 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

தமிழர்களை பற்றி சிங்களச்சனம் என்ன நினைக்கினம்? தமிழர் பிரச்சனையை பற்றி ஏதும் கதைக்கினமோ?

எதுவும் கதைப்பதாக தெரியவில்லை. சொல்லப்போனால் தமிழர்களே இதை பற்றி அதிகம் அலட்டி கொள்ளவில்லை. 

கேள்வி கேட்ட என்னை பைத்தியக்காரர் போல தமிழர்கள் சிலர் பார்க்கிறார்கள்.

சம் சும், கஜே, விக்கி வகையறாக்களின் பைத்தியக்காரத்தனம் = தமிழ் தேசியமே பைத்தியக்காரத்தனம் என நினைக்கும் போக்கு பல தமிழரிடம் கண்டேன்.

முன்னர் பெரும்பான்மையான தமிழர் அரசியல் உணர்வோடும், ஒரு 25% நழுவும் மனநிலையில் இருந்திருப்பின், இப்போ பத்துக்கு எட்டு பேர் நழுவல் மனநிலையில்தான் உள்ளனர்.

ஆனால் சிங்கள பெளத்தத்தை மீறி ஒரு அடி நகரவில்லை நாடு.

முன்னர் போல சிங்கலே…அடிதடி, வெருட்டு, வெளிப்படையாக இல்லை - ஆனால் பிக்குகளின் சிங்கள மக்கள் மீதான பிடி அப்படியேதான் இருக்கிறது.

நான் கதைத்த மட்டில், போர் வெற்றி இறுமாப்பை பொருளாதார அழிவு கொஞ்சம் குறைத்துள்ளது, ஆனால் இன்றும் தமிழர் நிலத்தை பறிப்பது, அரசியல் உரிமையை மறுப்பது, சிங்கள மயமாக்கலை நியாயப்படுத்துவது இப்படியானவற்றில் சிங்கள சமூகம் பழைய மனநிலையில்தான் உள்ளது.

நான் நினைக்கிறேன்….

பிரித்தானிய காலத்தில் இருந்தது போல சிங்கள இனவாதம் முகிழ்த்துக் கிடக்கிறது. இப்போ இருக்கும் பிரச்சனைகள் தீர, முஸ்லிம், தமிழர்களின் நல்வாழ்வு கண்ணை குத்தும் போது - இன்னொரு அநகாரிக தம்மபால, அல்லது பண்டா வந்து அதை இலகுவாக கிண்டி கிளப்பலாம்.

தமிழர்களும், முஸ்லிம்களும் மனசார தாம் இரண்டாம் பட்சமாக நடத்தப்படுவதாக உணர்கிறனர். அதுவே உண்மையும் கூட.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புங்கையூரன் said:

‘Negativity’ இல்லாமல் ஒரு ஆய்வு போல எழுதியுள்ளீர்கள், கோஷான்..! 

இலங்கை மீளக் கடன்களைச் செலுத்த ஆரம்பிக்கும் போது, நிலமை மீண்டும் மோசமடையலாம்..!

மீண்டும் கண்டதில் மிக்க மகிழ்ச்சி…!

நன்றி அண்ணா.

பலர் இதைத்தான் சொல்கிறனர். கூடவே ரணிலை வெல்ல வைக்க சில வெளிச்சக்திகள் நாட்டை தேர்தல் வரையாவது ஓரளவு சுமுகமாக வைத்திருக்க முனைவதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் போகும் போக்கில் இலங்கையில் எதுவுமே அரசின் உரிமையாக இருக்காது போலவே தெரிகிறது.

விமான சேவை, விரைவு நெடுஞ்சாலை சேவை, என இலாபம் தரும் சகலதும் விற்க ஏற்பாடாகியுள்ளது.

இலங்கை அரசு என்பது வரியை வசூலித்து, கடனை கட்டும் வேலையை மட்டும் செய்வதாக இருக்க கூடும்.

எரிபொருளில் இருந்து சகல இறக்குமதியும் தனியார் வசம் இருக்கும்.

இப்படி நாடு முதலாளிகள்/முதலீட்டாளர்கள் கைக்கு போவது - சிறுபான்மையினருக்கு நல்லது என்றே நான் நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐசே சொல்லவே இல்லவா, நானும் கொழும்புலாதானே வா ஈக்கேன். அனியாயம் வா, ரெண்டு பேரும் செட் ஆகி ஈக்கலாம், புதுக்கடைக்கு கூட்டிட்டுபோத்து, தெருவேர கடையிலா பாபத் ஓடர் பண்ணி தின்டிக்கலாம் வா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, satan said:

அது சரி ....... இலங்கை பெற்ற கடன்களை மீள செலுத்தி விட்டதா? பௌத்த விகாரைகளின் கட்டுமானப்பணிகள் குறைந்து விட்டதா? மக்கள் தங்கள் நிலங்களில் சுதந்திரமாக குடியேற அனுமதித்துள்ளார்களா?

கடன் - அது வடிவேலு வாடகை சைக்கிள் எடுத்த கதைதான். சைக்கிளை விடும் போது வாடகை கட்டினால் போதும்🤣.

உண்மையில் வெளியில் இருந்து நாம் குத்தி முறியும் அளவுக்கு இலங்கை அரசோ, மக்களோ கடனை பற்றி அக்கறை காட்டுவதே இல்லை. 

அவர்களின் ஒரே நோக்கு - அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் சீராக இருக்க வேண்டும்.

பெளத்த விகாரைகள் - இருப்பன இன்னும் புதுப்பிக்கப்படுகிறன. அனுராதபுரத்தில் அத்தனை விகாரைகளிலும் ஏதோ ஒரு மராமத்து பணி நடந்தபடியே இருக்கிறது.

சம்பந்தமே இல்லாமல் சிங்கள பகுதிகளில் கூட கத்தோலிக்கர் இடங்களில் புத்தர் முளைத்துள்ளார். தமிழர் பகுதிகள் பற்றி சொல்லவா வேண்டும். புத்தருக்கு பின்பக்கம் காட்டி படம் எடுக்க கூடாது, புத்தரை பச்சை குத்த கூடாது, டி சேர்ட் அணிய கூடாது இந்த மொக்குதனங்களும் அப்படியே உள்ளன.

மக்கள் நிலங்கள் இன்னும் கொஞ்சம் விடுவிக்கபட்டுள்ளன.

ஆனால் சுதந்திரம்? அது எதை நீங்கள் சுதந்திரம் என்கிறீர்கள் என்பதை பொறுத்து உள்ளது.

வேலை, வியாபாரம் செய்ய, படிக்க, ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து அரசியல் செய்ய சுதந்திரம் உள்ளது. ஆனால் உண்மையான ஒரு மக்கள் எழுச்சியை ஏற்படுத்த முனைந்தால் - ஆப்பு நிச்சயம்.

தமிழர் சிங்களவர் முஸ்லிம் எல்லாருக்கும் இதுவே நிலமை. தமிழரும்கும் முஸ்லீமுக்கும் இன ஒதுக்கல் ஒரு கூடிய பரிமாணம்.

அறகலவுக்கு சமைத்துக்கொடுத்தோர், மாலுப்பாண் வாங்கி தந்தோர், கோட்டாவின் நீச்சல்ன்குளத்தில் குளித்தோர் என சிலரிடம் பேசினேன். எல்லாரும் ஏதோ ஒரு வகையில் பழி வாங்கப்பட்டுள்ளனர், அல்லது மிரட்டவாவது பட்டுள்ளனர்.

8 hours ago, alvayan said:

ஏண்ணா..போன இடத்தில் சம் சும்மை கண்டீர்களா....லங்காகாமாதாவுக்கு...நற்சான்றிதழ் கொடுக்கிறியளே...😎

🤣 நற்சான்றிதழ் இல்லை….மனதில் பட்டதை எழுதியுள்ளேன்.

10 hours ago, alvayan said:

மிக்க மகிழ்ச்சி வாருங்கள்… வரவேண்டும்,. .

நன்றி❤️

5 minutes ago, colomban said:

ஐசே சொல்லவே இல்லவா, நானும் கொழும்புலாதானே வா ஈக்கேன். அனியாயம் வா, ரெண்டு பேரும் செட் ஆகி ஈக்கலாம், புதுக்கடைக்கு கூட்டிட்டுபோத்து, தெருவேர கடையிலா பாபத் ஓடர் பண்ணி தின்டிக்கலாம் வா

என்ன வா செய்ய…எனக்கும் ஆசதான்வா…ஆனா மூஞ்சிய காட்ட ஏலா சுட்டி செட் ஆக முடியலவா.

ஆனா புது கடை பெயித்து நல்லா திண்டே தான். ராவுல பெயித்து, அந்த பிட்டுவத்தில் ஈந்து கொண்டு நெய்பரோட்டாவும், குலுக்கி சர்பத்தும் அடிச்சா….செல்லி வேல இல்ல வாப்போ…❤️

2 hours ago, Kavi arunasalam said:

IMG-6202.jpg

இது சும்மா…டிரெயிலர்தான்🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

கோசான் எங்களை இலவசமாக இலங்கைக்கு கூட்டிக் கொண்டு போன மாதிரி பிரமையாக உள்ளது.நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

பாகம் II

நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.

(முற்றும்)

இது ஏற்கனவே இலங்கைச் சுற்றுலா போய் வந்த யாரையோ "கொக்கத் தடி போட்டு கொழுவி" இழுக்கிற மாதிரி எனக்குத் தெரியுது😎!

இங்கே பலருக்கு 'கிச்சு கிச்சு" மூட்டி விடும் தகவல்களை சுருக்கமாகத் தந்திருக்கிறீர்கள், ஏற்கனவே சிலர் நெளிய ஆரம்பித்து விட்டார்கள்😂!

நல்ல நேர்மறையான, காய்தல் உவத்தல் இன்றிய ஒரு பயணக் கட்டுரை. உள்ளதை உள்ளபடி சொல்லுகின்றீர்கள். 

இலங்கை இப்போதைக்கு நல்லா உள்ளது என்பதுவும், யாழ்ப்பாணம் பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறுகின்றது என்பதுவும் சிலருக்கு எரிச்சல் ஊட்டக்கூடிய தகவல்களாக இங்கு இருக்கும் என நினைக்கின்றேன்.
 
3 hours ago, goshan_che said:

பிரித்தானிய காலத்தில் இருந்தது போல சிங்கள இனவாதம் முகிழ்த்துக் கிடக்கிறது. இப்போ இருக்கும் பிரச்சனைகள் தீர, முஸ்லிம், தமிழர்களின் நல்வாழ்வு கண்ணை குத்தும் போது - இன்னொரு அநகாரிக தம்மபால, அல்லது பண்டா வந்து அதை இலகுவாக கிண்டி கிளப்பலாம்.

மிகவும் சரியான கூற்று(கள்)!

சிங்கள பெளத்தம் ஒரு போதும் தன் இனவாதத்தை கைவிடப் போவதில்லை. ஆனால், இன்றைய உலக போக்கினாலும், பொருளாதார நிலையாலும் அதனால் முன்னரைப் போல தீவிர நிலையை அடைய முடியாமல் தேங்கி நிற்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

வாங்க ராசா

பயணக் கட்டுரை சுருங்கி விட்டது கவலையாக உள்ளது

தொடருங்கள்

உங்கள் இலங்கை பற்றிய தகவல்கள் தெரிந்தவை அறிந்தவை தான். ஆனால் எனக்கு இவற்றில் புரியாதது அல்லது ஆச்சரியமாக இருப்பது தனிநபர்களும் சரி அரசும் சரி ஒரு ரூபாய் வருமானம் 5 ரூபாய் செலவில் எப்படி கனவில் வாழ முடிகிறது?

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

ஓட்டு மொத்த இலங்கையும் வெளி நாட்டு மோகத்தில் தவிக்கிறது

2 hours ago, விசுகு said:

ஒரு ரூபாய் வருமானம் 5 ரூபாய் செலவில் எப்படி கனவில் வாழ முடிகிறது?

எல்லாரும் வெளி நாடு ஒடுவதுக்கு காரணம் அதுதான் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

கோசான் எங்களை இலவசமாக இலங்கைக்கு கூட்டிக் கொண்டு போன மாதிரி பிரமையாக உள்ளது.நன்றி.

நன்றி அண்ணா. 

அப்ப எல்லாருமா சேர்ந்து டிக்கெட் காசை refund பண்ணுங்கோ🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

இது ஏற்கனவே இலங்கைச் சுற்றுலா போய் வந்த யாரையோ "கொக்கத் தடி போட்டு கொழுவி" இழுக்கிற மாதிரி எனக்குத் தெரியுது😎!

இங்கே பலருக்கு 'கிச்சு கிச்சு" மூட்டி விடும் தகவல்களை சுருக்கமாகத் தந்திருக்கிறீர்கள், ஏற்கனவே சிலர் நெளிய ஆரம்பித்து விட்டார்கள்😂!

முடிந்தளவு யாழில் பலர் எழுப்பிய சந்தேகங்கள், கருத்துக்களை வைத்து,  நேரில் நிலைமையை அவதானித்தேன். அதனையே எழுதியுமுள்ளேன்.

கொக்கதடி மேல் மாம்பழங்கள் தாமாக விழுந்தாலும் சந்தோசமே🤣.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

அப்ப எல்லாருமா சேர்ந்து டிக்கெட் காசை refund பண்ணுங்கோ

உங்களுக்கில்லாததா.

முழுப்பெயரையும்,வங்கி இலக்கம்,கைபேசி இலக்கம் என்பவற்றை உடன் அனுப்புங்க.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

நன்றி அண்ணா. 

அப்ப எல்லாருமா சேர்ந்து டிக்கெட் காசை refund பண்ணுங்கோ🤣.

ஒரு கோதாரியும் வேணாம் கூடve  கூட்டிகொண்ட 

8 minutes ago, goshan_che said:

முடிந்தளவு யாழில் பலர் எழுப்பிய சந்தேகங்கள், கருத்துக்களை வைத்து,  நேரில் நிலைமையை அவதானித்தேன். அதனையே எழுதியுமுள்ளேன்.

கொக்கதடி மேல் மாம்பழங்கள் தாமாக விழுந்தாலும் சந்தோசமே🤣.

என்கைய a உங்க இடது கை நாதமுனி இன்னும் கருத்தில் இறங்கவில்லையா ?

ஆரம்பத்தில் அவரில சந்தேகம் இனிஊருறுதி  ஆகி விட்டது  நன்றி வணக்கம் .😄

Edited by பெருமாள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

இலங்கை இப்போதைக்கு நல்லா உள்ளது என்பதுவும், யாழ்ப்பாணம் பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறுகின்றது என்பதுவும் சிலருக்கு எரிச்சல் ஊட்டக்கூடிய தகவல்களாக இங்கு இருக்கும் என நினைக்கின்றேன்.

நன்றி நிழலி.

இதில் இப்போதைக்கு என்பது முக்கியமான சொல்.

யாழ்பாணம் பொருளாதாரத்தில் முன்னேற நேரடியான வெளி நாட்டு காசு, என்பதை விட வெளிநாட்டு தமிழர் சந்தை என்பது கொஞ்சம் முன்னுக்கு வர தொடங்கியுள்ளது.

பனை அபிவிருத்திச் சபை மிக நேர்த்தியாக கற்கண்டு, பனங்கட்டி, இன்னும் பல பொருட்களை பொதி செய்து விற்கிறார்கள். பண்டதரிப்பில் அவர்கள் அலுவலக கட்டிடம் உள்ள கடையில் பலதையும் வாங்க முடிந்தது.

சாவகச்சேரியில் ஜப்னா அராக் என பனஞ்சாராயம் அழகிய போத்தலில் 800 ருபாயில் கிடைக்கிறது. 

மூலைக்கு மூலை மிக்சர் கடைகள். சுண்டல் வண்டிகள் கூட நேர்தியாகவே உள்ளன.

ஆனைக்கோட்டை பக்கம் நல்லெண்ணை, எள்ளு பாகு குடும்ப கைத்தொழிலாக பரவலாக நடக்கிறது.

குடும்பங்கள் வறுமையிலும் மானத்தோடு வாழ புலம் பெயர் மக்கள் போய், அல்லது இங்கே இருந்தபடி வாங்கும் பொருட்கள் உதவுகிறன.

இது அடி மட்டதில் என்றால் மேல் மட்டத்தில் பல கொழும்பு வாழ் யாழ் மக்கள் மீள வந்து முதலீடுகள் செய்துள்ளார்கள்.

இவ்வளவு ஏன், புறக்கோட்டையில் ஒரு சுண்டல் வியாபாரி பனங்கிழங்கு விற்றார். யார் என பார்த்தால் யாழ்ப்பாணத்தவர். ஒரு காலத்தில் ஆளை சிஐடி அப்படியே அமுக்கி இருக்கும். காலம் மாறி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

முடிந்தளவு யாழில் பலர் எழுப்பிய சந்தேகங்கள், கருத்துக்களை வைத்து,  நேரில் நிலைமையை அவதானித்தேன். அதனையே எழுதியுமுள்ளேன்.

கொக்கதடி மேல் மாம்பழங்கள் தாமாக விழுந்தாலும் சந்தோசமே🤣.

இப்படி கேட்பதை விட நேரில நிழலி அல்லது மோகனிடம் யார் இந்த பெருமாள் என்று கேட்டு இருக்கலாம் நானும் வெயிட் பண்ணினேன் உங்களுக்கு திண்ணை இல்லாவிடில் யாழ் இல்லை என்று வெயிட் பண்ணி இருக்கேன் நானும் ரெடியாத்தான் இருக்கேன் .ஸ்டார் மியுக் ௦......😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

வாங்க ராசா

பயணக் கட்டுரை சுருங்கி விட்டது கவலையாக உள்ளது

தொடருங்கள்

உங்கள் இலங்கை பற்றிய தகவல்கள் தெரிந்தவை அறிந்தவை தான். ஆனால் எனக்கு இவற்றில் புரியாதது அல்லது ஆச்சரியமாக இருப்பது தனிநபர்களும் சரி அரசும் சரி ஒரு ரூபாய் வருமானம் 5 ரூபாய் செலவில் எப்படி கனவில் வாழ முடிகிறது?

கேள்வி பதிலாக மீதி தொடர்கிறதே அண்ணா. 

இன்னும் சிலதை பிற்சேர்க்கை போல எழுதுகிறேன்.

உங்கள் ஆச்சரியம்தான் எனக்கும்.

ஒரு அளவுக்கு மேல் கேட்பது இங்கிதம் இல்லை. அத்தோடு கஸ்டம்தான் நீங்கள் மாசாமாசம் அனுப்புங்கோ எண்டு சொன்னால் கதை கந்தல் ஆகி விடும்.

ஆனால் கனவில் இல்லை, நிஜமாகவே சமாளிக்கிறார்கள். பலருக்கு சொந்தமாக ஒரு குடிசைதன்னும் இருப்பதால் அந்த செலவு குறைவாக இருக்கும்.

ஆனால் வியாபாரிகள், சுயதொழில் செய்வோர், முதலீட்டாளர்கள், digital nomads போல creative, IT industry களில் வேலை செய்வோர் நன்றாக உழைக்கிறார்கள்.

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.