Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
50 minutes ago, வீரப் பையன்26 said:

8ச‌த‌ வீத‌த்தை தாண்டி விட்டின‌ம்

 

14 minutes ago, விசுகு said:

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் இலக்கு பிரதிநிதிகளை தெரிவு செய்வது அல்ல அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அடுத்த கட்டத்துக்கு நகர்வது தான். அது நடந்திருக்கிறது. இனி பேரம் கூட்டணி அமைத்தல் என்று அடுத்த கட்டம்.???

ntk-1717468072.jpg?04062024171617

நாம் தமிழர் கட்சி...  புதிய சின்னத்தில், குறுகிய காலத்தில்போட்டியிட்டே...
8ச‌த‌ வீத‌த்தை வாக்கைப் பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வந்திருக்கின்றார்கள் என்றால் பழைய சின்னத்தில் போட்டியிட்டு இருந்தால்... தமிழகத்தின் இரண்டாவது, மூன்றாவது கட்சியாக வந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 
அமைதியாக ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதே உண்மை.

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Kavi arunasalam said:

பணி முடியப் போகிறதோ?

large.IMG_6534.jpeg.ba61dfcd6899c0d38781

🤣.......

ஜீயின் செல்வாக்கு இப்படி அதலபாதாளத்திற்கு போனதால், அவர்களே ஜீயை ஆண்டவனிடம் அனுப்பி விடுவார்களோ..........

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, தமிழ் சிறி said:

 

ntk-1717468072.jpg?04062024171617

நாம் தமிழர் கட்சி...  புதிய சின்னத்தில், குறுகிய காலத்தில்போட்டியிட்டே...
8ச‌த‌ வீத‌த்தை வாக்கைப் பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வந்திருக்கின்றார்கள் என்றால் பழைய சின்னத்தில் போட்டியிட்டு இருந்தால்... தமிழகத்தின் இரண்டாவது, மூன்றாவது கட்சியாக வந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 
அமைதியாக ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதே உண்மை.

விவ‌சாயி சின்ன‌த்துக்கு

5000 ஓட்டுக‌ள் ம‌க்க‌ள் போட்டு இருக்கின‌ம் சில‌ தொகுதிக‌ளில்

 

அந்த‌ ஓட்டு கூட‌ வ‌ய‌தான‌வ‌ர்க‌ளின் ஓட்டாய் தான் இருக்க‌ கூடும் த‌மிழ்சிறி அண்ணா

 

சீமான் க‌ட்சி என்றால் விவ‌சாயி சின்ன‌ம் தானே என்று சொல்லும் வ‌ய‌தான‌வ‌ர்க‌ளும் இருக்கின‌ம்

 

விவ‌சாயி சின்ன‌ம் இருந்து இருக்க‌னும் வாக்கு ச‌த‌ வீத‌ம் 8 தாண்டி 12 க்கு போய் இருக்கும்

ப‌ல‌ கிராம‌ங்க‌ளுக்கு மைக் சின்ன‌ம் போய் சேர‌ வில்லை

அப்ப‌டி இருந்தும் 21 நாள் பிர‌ச்சார‌த்தின் போது இவ‌ள‌வு ஓட்டு கிடைச்ச‌து பாராட்ட‌ த‌க்க‌து

அண்ண‌ன் சீமான்ட‌ சொந்த‌ தொகுதியில் போட்டியிட்ட‌ ச‌கோத‌ரி கிட்ட‌ த‌ட்ட‌ 2ல‌ச்ச‌ம் ஓட்டை பெற்று இருக்கிறா

15 தொகுதியில் 1ல‌ச்ச‌ ஓட்டை த‌ண்டி இருக்கின‌ம்

கூட்டி க‌ழிச்சு பார்த்தா இந்த‌ 15 தொகுதியில் ம‌ட்டும் 20 ல‌ச்ச‌ ஓட்டு நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு கிடைச்சு இருக்கு த‌மிழ் சிறி அண்ணா🙏🥰..........................................................

Posted
1 hour ago, வீரப் பையன்26 said:

அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ க‌ட்சியாக‌ மாறிய‌து நாம் த‌மிழ‌ர்🙏🥰....................................................

 

1 hour ago, வீரப் பையன்26 said:

8ச‌த‌ வீத‌த்தை தாண்டி விட்டின‌ம்

உங்க‌ட‌ க‌ணிப்பு பிழைச்சு போச்சு அண்ணா...............................................................

இவை தொடர்பான நம்பிக்கை தரக்கூடிய தளத்தில் அல்லது செய்தி சேவையின் மூலத்தை இணைத்து விடுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யார் யாரெல்லாம் BJP க்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறார்களோ அவர்களெல்லாம் இந்தியாவின் உடைவை/பிரிவினையை விரும்பவில்லை என்பது பொருள். 

இந்தியாவின் ஒருமைப்பாட்டை விரும்புபவர்கள் மாத்திரமே BJP க்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பார்கள். 

யாழ் களத்தில் உள்ளவர்களில்  யார் யாரெல்லாம் BJP க்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்? 

😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, நிழலி said:

 

இவை தொடர்பான நம்பிக்கை தரக்கூடிய தளத்தில் அல்லது செய்தி சேவையின் மூலத்தை இணைத்து விடுங்கள். 

தேர்தல் ஆணையத்தின் இணைய‌த்தில் சென்று பாருங்கோ😋...................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, வீரப் பையன்26 said:

தேர்தல் ஆணையத்தின் இணைய‌த்தில் சென்று பாருங்கோ😋...................................

அப்படியோ?   நா.த.கவின் பெயரைக் காணோம். "வேறு-others" என்ற வகைக்குள் சேர்த்தே வீதம் போட்டிருக்கிறார்கள். எப்படி இந்த வீதங்களெல்லாம் கண்டு பிடிக்கிறீர்கள்🥰?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, வாத்தியார் said:

35  லட்சம் வாக்குகளை பெற்று நா த க சாதனை

தமிழகத்தில் எத்தனை கோடி வாக்காளர்கள்??

மூன்றரை கோடி என்றால் கணக்கு சரியல்லவா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, வாத்தியார் said:

35  லட்சம் வாக்குகளை பெற்று நா த க சாதனை

வாத்தியார் அண்ணா 35 ல‌ச்ச‌த்தி 50 ஆயிர‌ம்.......................ஓட்டை நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெற்று இருக்கு🙏....................................  

35 minutes ago, Justin said:

அப்படியோ?   நா.த.கவின் பெயரைக் காணோம். "வேறு-others" என்ற வகைக்குள் சேர்த்தே வீதம் போட்டிருக்கிறார்கள். எப்படி இந்த வீதங்களெல்லாம் கண்டு பிடிக்கிறீர்கள்🥰?

40 தொகுதியில் போட்டியிட்ட‌ வேட்பாள‌ர்க‌ள் கிடைச்ச‌ ஓட்டுக்க‌ளை எண்ணிப் பார்த்தால்

35 ல‌ச்ச‌த்தி . 50ஆயிர‌ம் ஓட்டுக்கு மேல் கிடைச்சு இருக்கு

அப்ப‌ எத்த‌னை ச‌த‌வீத‌ம் வ‌ரும் என்று பாருங்கோ🙏..........................................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தென் காசியில் மட்டும் ஒரு லட்சத்து 33 ஆயிரம் வாக்குகளை நாம் தமிழர் கட்சி தனித்து நின்று பெற்றிருப்பது பெரிய சாதனை தான். 

Posted
49 minutes ago, வீரப் பையன்26 said:

தேர்தல் ஆணையத்தின் இணைய‌த்தில் சென்று பாருங்கோ😋...................................

செய்தியை / தகவலை இணைத்தவர் நீங்கள், எனவே நீங்கள்  மூலத்தை இணைக்க வேண்டியவர், அதை வாசிப்பவர்கள் அல்ல.
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

3-வது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க மக்கள் வாய்ப்பு கொடுத்துள்ளனர் - பிரதமர் மோடி

Published By: VISHNU   04 JUN, 2024 | 10:24 PM

image

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி,  290-க்கும் அதிகமான இடங்களில் பாரதிய சனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வருகிறது.

தற்போதைய நிலவரப்படி பாரதிய சனதா கட்சி 160க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பிரதமர் மோடி வெற்றி பெற்றார்.

இவர் 6,12,970 வாக்குகள் பெற்றார். 3-வது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க மக்கள் வாய்ப்பு கொடுத்துள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற வெற்றிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தொடர்ந்து 3வது முறையாக வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி.

நாட்டு மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை தேர்தல் வெற்றி கொடுத்துள்ளது.

இவ்வளவு பெரிய அளவிலான தேர்தல் பயிற்சியை நடத்திய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி.

இந்தியாவின் தேர்தல் செயல்முறை மற்றும் முறையின் நம்பகத்தன்மை குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்கிறார்கள் என்றார்.

https://www.virakesari.lk/article/185331

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாற்பதும் திமுக கூட்டணிக்கே! - தமிழகத்தில் அதிமுக+, பாஜக+ ‘வாஷ் அவுட்’

சென்னை: தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் 1 தொகுதியிலும் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி தொடங்கி எண்ணப்பட்ட நிலையில், தமிழகத்தில் அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணியை வாஷ் அவுட் செய்து 40 இடங்களையும் திமுக கூட்டணியே வென்றுள்ளது. இது மட்டுமல்லாமல் தமிழகத்தின் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியிலும் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தாரகை வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகள் கொண்ட இந்த மக்களவைத் தேர்தலில், திமுக தலைமையில் ஓர் அணி, அதிமுக தலைமையில் ஓர் அணி, பாஜக தலைமையில் ஓர் அணி, நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி என 4 முனைப் போட்டியுடன் தேர்தல் களம் சூடுபிடித்த நிலையில் மற்ற தென் மாநிலங்களில் பாஜகவின் வீச்சு பெரிய அளவில் இருக்க தமிழகத்தில் மட்டும் பாஜகவை கணக்கைத் தொடங்கவிடாமல் கட்டுப்படுத்தியுள்ளது திமுக கூட்டணி.

கவனம் பெறும் பாஜகவின் வாக்கு சதவீதம்: இருப்பினும், இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக பல்வேறு இடங்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக, மதுரை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் இரண்டாம் இடம் பிடித்து அதிமுகவை மூன்றாம் இடத்துக்குத் தள்ளி அந்தக் கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மதுரை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் மதுரை கிழக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்திய தொகுதிகளில் அதிமுகவை விட பாஜக அதிக வாக்குகள் பெற்றது. மேலூர், மதுரை வடக்கு, மதுரை மேற்கு தொகுதிகளில் பாஜகவை விட அதிமுக அதிக வாக்குகளை பெற்றுள்ளது.

சறுக்கிய பாமக: தமிழகத்தில் காலை முதலே தருமபுரியில் பாமக நம்பிக்கை நட்சத்திரத்தை ஒளிரச் செய்து கொண்டிருக்க பிற்பகலுக்கு மேல் பின் தங்கியது. ஒரு கட்டத்தில் திமுக வேட்பாளர் அ.மணி வெற்றியைப் பதிவு செய்தார். இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியால் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. தேர்தல் முடிவுகள் வருத்தமளித்தாலும், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதால் அதை பா.ம.க. ஏற்றுக் கொள்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

நீலகிரியில் ஆ.ராசா 3வது முறையாக வெற்றி: நீலகிரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆ ராசா வெற்றி பெற்று மூன்றாவது முறையாக நீலகிரி எம்பி ஆக பதவி ஏற்க இருக்கிறார். இந்நிலையில், வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்ற பின் செய்தியாளர்களிடம் அவர் , திமுகவின் சமூக நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை அங்கீகரித்து தமிழக மக்கள் இந்த வெற்றியை வழங்கி இருக்கின்றனர் எனத் தெரிவித்தார்.

அண்ணாமலை தோல்வி: கோவையில் வெற்றி நிச்சயம் என அண்ணாமலை முழங்கிய நிலையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றிருக்கிறார். இது குறித்து பேசிய அவர், “கோவை தொகுதியில் வெற்றி என்பது நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். தமிழக முதல்வர் விடிவை ஏற்படுத்தி கொடுப்பார் என மக்கள் நம்புகின்றனர். சென்னைக்கு அடுத்து கோவை போன்ற தொழில் நகரம் தனித்தன்மை இழந்து வரும் நிலையில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப தேர்தல் முடிவுகள் வழிவகுக்கும்.” என்றார்.

 

’மோடி அலை எனும் மாயை’ - சிதம்பரம் தொகுதியின் வெற்றி வேட்பாளரான திருமாவளவன், “சென்ற முறை பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது ஒரு மாயை. அது உண்மை அல்ல. மோடி அலை என்பது ஒரு மாயை. அது உண்மை இல்லை என மக்கள் இப்போது நிரூபித்துள்ளார்கள்.” என்று கூறினார்.

காங்கிரஸ் பளிச்: தமிழகம், புதுச்சேரி எனப் போட்டியிட்ட 10 இடங்களிலும் வெற்றி பெற்ற காங்கிரஸ் வெற்றியை சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடி வருகிறது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் வேட்பாளர் வைத்திலிங்கம் பெருவாரியான வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து அவரது ஆதரவாளர்கள் வாக்கு எண்ணும் மைத்திற்க்கு வெளியே பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தாமரை மலர்ந்தே தீரும் என்று பகல் கனவு கண்ட தமிழிசை போன்ற ஊர்க்குருவிகளுக்கு தமிழ் மக்கள் தக்க பாடம் புகட்டி இருக்கிறார்கள்-மக்கள் விரோத பாசிச பாஜக தமிழ் மண்ணில் வேரறுக்கப்பட்டுள்ளது என புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக மாநில அமைப்பாளருமான இரா.சிவா கருத்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்: அத்தனைக்கும் முத்தாய்ப்பாக, ”பா.ஜ.க.வின் பணபலம் – அதிகார துஷ்பிரயோகம் – ஊடகப் பரப்புரை ஆகிய அனைத்தையும் உடைத்தெறிந்து பெற்றுள்ள இந்த வெற்றி மகத்தான வெற்றியாக; வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாக அமைந்திருக்கிறது! தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியான பிறகு - இந்திய ஜனநாயகத்தையும் அரசியல்சாசனத்தையும் காக்கத் தேவையான அரசியல் செயல்பாடுகளைத் தி.மு.க. தொடர்ந்து முன்னெடுக்கும்." என்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கமல் வாழ்த்து: ‘இந்தியாவைக் காக்கும் போரில், திமுகவுடன் இணைந்து களம் கண்ட கூட்டணிக் கட்சியினருக்கும், மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும், எங்கள் கூட்டணிக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். சிந்தாமல் சிதறாமல் சந்தேகம் இல்லாமல் நாம் பெற்றிருக்கும் இந்த வெற்றி, இந்தியாவுக்கு வழியும், ஒளியும் காட்டக்கூடியவை’என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்

தமிழகத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற்றதாகவும், புகார் எதுவும் வரவில்லை என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.

நாற்பதும் திமுக கூட்டணிக்கே! - தமிழகத்தில் அதிமுக+, பாஜக+ ‘வாஷ் அவுட்’ | Tamil Nadu Election Results 2024 LIVE updates: DMK alliance leads in all 40 Lok Sabha seats - hindutamil.in

Posted

அண்ணாமலை ஏதேனும் அறிக்கை வெளியிட்டு இருக்கின்றாரா?

இந்த தேர்தலில், அண்ணாமலையும் தமிழிசையும் தோற்றது மிக சந்தோசம் தரும் விடயங்கள். ஆனால், துரை வைகோ வென்றது சந்தோசமான விடயம் அல்ல எனக்கு. 

9 minutes ago, ஏராளன் said:

 

இவ்வளவு பெரிய அளவிலான தேர்தல் பயிற்சியை நடத்திய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி.

 

எங்கள் (பா.ஜ .க.) உத்தரவுகளை கேட்டு அப்படியே நடந்து கொண்ட தேர்தல் ஆணையத்திற்கு நன்றி என்று சொல்லியிருக்க வேண்டும்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, வாத்தியார் said:

மொத்தம் 35 17 567  😂

இல்லை வாத்தியார் அண்ணா
இது பின்னேர‌ த‌க‌வ‌ல் பிந்தி கிடைத்த‌ த‌க‌வ‌லை பாருங்கோ 

த‌ற்போதைய‌ மொத்த‌ வாக்கு விழுக்காட்டை பாருங்கோ

யாழ்க‌ள‌ போட்டியின் போது 
உங்க‌ளுக்கு நான் சொன்ன‌து நினைவு இருக்கும் 

நீங்க‌ள் நாம் த‌மிழ‌ர் 5ச‌த‌ வீத‌த்துக்குள் என‌ கேள்விக்கு  ப‌திலில் போட்டிங்க‌

அப்ப‌ நான் சொன்னேன் யூன்4ம் திக‌தி பாருங்கோ புள்ளி விப‌ர‌ம் வேறு மாதிரி இருக்கும் என்று.............................
நீங்க‌ள் சின்ன‌ம் ப‌றி போன‌தை வைத்து அப்ப‌டி க‌ணித்து இருக்க‌லாம் ஆனால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இளைய‌ர்க‌ள் ப‌ட்டால‌ம் அதிக‌ம் வாத்தியார் அண்ணா......................................26க‌ளில் கூட்ட‌னியா அல்ல‌து த‌னித்து நிப்ப‌தான்னு இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் தெரியும்..........................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
24 minutes ago, வாத்தியார் said:

மொத்தம் 35 17 567  😂

இது உத்தியோகபூர்வ தளம் என நினைக்கின்றேன். இங்கு தமிழ்நாட்டில் கட்சிவாரியாக எத்தனை சதவீதம் வாக்குகள் விழுந்துள்ளன என உள்ளது:

 

https://results.eci.gov.in/PcResultGenJune2024/partywiseresult-S22.htm

 

IMG-7916.jpg

 


 

Edited by நியாயம்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

main-qimg-2b31bfc7f8925cbbce4133845bcbc1

இந்த படம் இப்போ உலாவருது, பார்த்தவுடன் சிரிப்பு வந்துவிட்டது 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, நீர்வேலியான் said:

main-qimg-2b31bfc7f8925cbbce4133845bcbc1

இந்த படம் இப்போ உலாவருது, பார்த்தவுடன் சிரிப்பு வந்துவிட்டது 

அண்ணாம‌லை ஹா ஹா

நான் நினைக்கிறேன் இந்த‌ தேர்த‌ல் ஓட‌ இவ‌ரை இட‌ம் மாற்ற‌ கூடும் அல்ல‌து 2026ம‌ட்டும் வைத்து இருப்பின‌ம்...........................பாட்டாளி ம‌க்க‌ள் க‌ட்சிக்கு பீஜேப்பியாள் தான் சொந்த‌ தொகுதியில் தோத்த‌வை

 

அதுக‌ளுக்கு எங்கை கொள்கை கோட்பாடு தேர்த‌லுக்கு தேர்த‌ல் சூக்கேஸ்சில் ப‌ண‌ம் போனால் உட‌ன‌ வேறு கூட்ட‌னி வைப்பின‌ம்....................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அயோத்தில் பாஜக தோல்வி: 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி வெற்றி

புதுடெல்லி: உத்தர பிரதேசம் அயோத்தி உள்ளடக்கிய பைஸாபாத்தில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. இங்கு சமாஜ்வாதியின் வேட்பாளர் அவ்தேஷ் பிரசாத் சுமார் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.  உ.பி. முதல் மத்தியில் ஆட்சி அமைப்பது வரை காரணமாக இருப்பது எனக் கருதப்பட்டது அயோத்தி தொகுதி. இங்கு பல ஆண்டுகளாக பாபர் மசூதி, ராமர் கோயில் விவகாரம் நிலவி வந்தது.

 

தனது ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் அயோத்தியில் ராமர் கோயிலை கட்டும் உறுதியை பாஜக அளித்தது. இதனால், ராமர் கோயில் பிரச்சனையில் அரசியல் ஆதாயம் தேட பாஜக முயல்வதாகப் புகாரும் எழுந்திருந்தது.

இந்நிலையில், இதன் மேல்முறையீட்டு தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 9, 2019 இல் ராமர் கோயிலுக்கான வழி பிறந்தது. இதையடுத்து நீதிமன்ற அமர்வின் உத்தரவின்படி, அறக்கட்டளை அமைக்கப்பட்டு ராமர் கோயில் கட்டப்படுகிறது.

இதற்கான பூமி பூஜையை பிரதமர் மோடி முன்னிருந்து நடத்தினார். கடந்த ஜனவரியில் ராமர் கோயிலின் தரைத்தளம் கட்டப்பட்டு பிரதமர் நரேந்திரமோடியால் திறந்து வைக்கப்பட்டது.

னவே, ராமர் கோயிலால், உ.பி.யில் பாஜகவிற்கு அனைத்து தொகுதிகளிலும் வெற்றி உறுதி எனக் கருதப்பட்டது. இதன் பலன் நாட்டின் இதர மாநிலங்களிலும் கிடைக்கும் எதிர்பார்ப்பும் பாஜகவிற்கு இருந்தது.

ஆனால், இந்த பலன் தற்போது உ.பி.யிலேயே கிடைக்காமல் போய் விட்டது. அயோத்யாவின் தொகுதியில் பாஜக வேட்பாளர் லல்லுசிங் சுமார் 55,000 வாக்குகளில் தோல்வி அடைந்துள்ளார்.

இங்கு சமாஜ்வாதி சார்பில் போட்டியிட்ட அவ்தேஷ் பிரசாத்திற்கு கிடைத்த வெற்றி வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமர் கோயில் விவகாரம் எழுந்தது முதல் பைஸாபாத்தும் ஒரு முக்கியத் தொகுதியாகி விட்டது.

நீண்ட காலமாக பாஜக வசமுள்ள பைஸாபாத்தில் 2009 இல் மட்டுமே காங்கிரஸ் வென்றிருந்தது. பிறகு 2014 முதல் பாஜகவின் எம்பியாக உள்ள லல்லுசிங் மீண்டும் அங்கு போட்டியிட்டிருந்தார்.

இவர் அயோத்தி சட்டப்பேரவை தொகுதியில் 5 முறை பாஜக எம்எல்ஏவாகவும் இருந்தவர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லல்லுசிங்கின் வெற்றி, 2014 தேர்தலில் தோல்வியில் முடிந்துள்ளது.

பைஸாபாத்தில் இண்டியா கூட்டணியின் அங்கமாக இருந்தும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் தனித்து போட்டியிட்டது. கடந்த 1989 மக்களவை தேர்தலில் சிபிஐ சார்பில் பைஸாபாத்தின் எம்பியானார் மித்ரஸென் யாதவ்.

இவரது மகன் அர்விந்த்ஸென் யாதவ் இந்தமுறை சிபிஐக்காகப் போட்டியிட்டார். ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியான அர்விந்த்ஸென், பைஸாபாத்தில் சமாஜ்வாதி வேட்பாளரின் வாக்குகளை அதிகமாகப் பிரிப்பார் என அஞ்சப்பட்டது.

ராமர் கோயில் கட்டப்பட்டதில் தன் மீதானப் புகாருக்கு பாஜகவும் அஞ்சியிருந்தது. இதனால், பாஜகவும் கடைசிகட்ட தேர்தல்களில் மட்டும் ராமர் கோயிலை பற்றி பேசத் துவங்கியது.

குறிப்பாக, இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயில் இடிக்கப்பட்டு விடும் என்ற பீதியை பிரதமர் மோடியே கிளப்பியிருந்தார். இதுபோன்ற கருத்துக்களும் பைஸாபாத்தில் பாஜகவின் தோல்விக்கு காராணமாகி விட்டதாகக் கருதப்படுகிறது.

பாஜகவின் மத்திய, மாநில அரசுகள் சார்பில் பைஸாபாத்திற்கு ரூ.50,000 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அமலாகி வருகின்றன. எனினும், சமாஜ்வாதியை வெற்றிபெறச் செய்து பைஸாபாத்வாசிகள், ராமர் கோயிலை அரசியலில் இருந்து பிரித்து வைத்து விட்டனர்.

https://www.hindutamil.in/news/india/1259660-bjp-defeated-in-ayodhya-1.html

Adverti
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, வாத்தியார் said:

மொத்தம் 35 17 567  😂

Screenshot-20240604-210947-Chrome.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

புலிகள் காலத்தில் எம் ஜி ஆர்- இந்திரா.. வி பி சிங்.. ஜார்ச் பெர்னான்டஸ் காலங்களைத் தவிர.. ஹிந்திய நடுவன் அரசுத் தேர்தல் ஈழத்தமிழர்களுக்கு முக்கியமாக அமைந்ததில்லை.  அதே நிலை தான் தமிழகத்திலும்.. எம் ஜி ஆருக்கு பின்.. ஈழத்தமிழர் நிலைப்பாட்டில்.. தமிழக தேர்தல்கள் சாதகமான செல்வாக்குச் செய்யவில்லை. மாறாக.. தி மு க - கூட்டணி வெற்றியும் சரி.. அதிமுக-கூட்டணி வெற்றியும் சரி.. ஈழத்தமிழருக்கு பாதகமாக அமைந்ததே யதாத்தம். சிறு ஈழத்தமிழர் ஆதரவுக் கட்சிகளால்.. எம் ஜி ஆருக்கு பின் ஈழத்தமிழர் சார்பு நிலைப்பாட்டை எடுக்க முக்கிய கட்சிகளை வலியுறுத்தக் கூடிய வலிமை இருக்கவில்லை.

அதனால் தான் தனித்து நிற்கும் நாம் தமிழரின் வெற்றியையும்.. நாம் தமிழரின் ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டையும் மையப்படுத்தி.. ஈழத்தமிழர்கள்.. குறிப்பாக புலம்பெயர் ஈழத்தமிழர்கள்.. நாம் தமிழரின் வெற்றியை தார்மீக எதிர்பார்ப்புடன் கடந்து செல்கின்றனர்.. தேர்தலுக்கு தேர்தல்.

நாம் தமிழர் பெரிய மாற்றத்துக்கான சிறிய புள்ளியாக இருக்க முடியுமே தவிர.. அது பெரிய மாற்றத்துக்கான பெரிய சக்தி அல்ல. ஆனால்.. தேர்தலுக்கு தேர்தல் நாம் தமிழரின் செல்வாக்கு தமிழகத்தில் உயர்ந்து செல்வதை நாம் தமிழர் கட்சி சாதகமாக்கி மக்களை ஏமாற்றத்துக்கு இடமளிக்காது தொடர்ந்து தூய அரசியலை முன்னெடுத்தால்.. நிச்சயம்.. நாம் தமிழர் தமிழகத்தில் வலுவான மாற்றுச் சக்தியாக வளர இடமுண்டு. அது திராவிடக் கூத்தாடிகளின் ஈழத்தமிழர் எதிர்ப்பு மனநிலைக்கு முடிவு கட்டவும்.. தமிழ் நாட்டின் உண்மையான வளர்ச்சிக்கு உதவுவதாகவும் இருக்க முடியும்.

ஆனால்.. எனி தமிழகத்தில்.. ஒரு ஈழத்தமிழர் சாதக மாற்றம் வந்தாலும்.. இலங்கையில் அதன் செல்வாக்கு என்பது எந்தளவுக்கு.. ஈழத்தமிழினத்துக்கு சாதகமான விளைவுகளைக் கொணரும் என்பது கேள்விக்குறியே. ஏனெனில்.. ஹிந்திய நடுவன் அரசுகளின் நிலைப்பாடு தொடந்து ஈழத்தமிழர் விரோத.. சிங்கள பெளத்த பேரினவாத ஆதரிப்பாகவே இருந்து வருகிறது. இதில் மாற்றம் என்பதை நாம் தமிழர் சாதிக்க முன்.. ஈழத்தில் ஈழத்தமிழருக்கான அடையாளம் எஞ்சி இருக்குமோ என்பது சந்தேகமே.

அந்த வகையில்... இந்த ஹிந்திய தேர்தல்களுக்கு ஈழத்தமிழர்கள் முக்கியம் கொடுப்பது என்பது.. அநாவசியமான காலவிரயமான விடயங்களே. வெறும் எதிர்பார்ப்பற்ற பார்வையாளர்களாக இருந்து கொள்வதே சிறப்பு. 

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, வீரப் பையன்26 said:

அண்ணாம‌லை ஹா ஹா

நான் நினைக்கிறேன் இந்த‌ தேர்த‌ல் ஓட‌ இவ‌ரை இட‌ம் மாற்ற‌ கூடும் அல்ல‌து 2026ம‌ட்டும் வைத்து இருப்பின‌ம்...........................பாட்டாளி ம‌க்க‌ள் க‌ட்சிக்கு பீஜேப்பியாள் தான் சொந்த‌ தொகுதியில் தோத்த‌வை

 

அதுக‌ளுக்கு எங்கை கொள்கை கோட்பாடு தேர்த‌லுக்கு தேர்த‌ல் சூக்கேஸ்சில் ப‌ண‌ம் போனால் உட‌ன‌ வேறு கூட்ட‌னி வைப்பின‌ம்....................................................

புரியவில்லை,..

திமுக   பெற்ற வாக்கு 27%   கிட்டத்தட்ட 

அதிமுக  பெற்ற வாக்கு   21% கிட்டத்தட்ட 

பிஜேபி பெற்ற வாக்கு  12 % கிட்டத்தட்ட   இது ஒரு பெரிய வளர்ச்சி  வீதசாரத்ப்படி என்று சொன்னால் .....100க்கு 40. ஆகவே 12க்கு,. 5.  பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்து இருக்கும்  27 % வாக்கு பெற்றவர்கள் எப்படி 40. பாராளுமன்ற உறுப்பினர்களையும். பெற முடியும்  ??  இந்தியாவுக்கு தேவை விகிதாச்சார தேர்தல் முறை   

100-27=73.       இந்த 73%.  வாக்களாருக்கு   ஒரு பிரதிநிதி கூட. இல்லையா??  மோடி அவர்களே !!!!மாற்றுங்கள்.  தேர்தல் முறையை   🤣🤪😂

  • Haha 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல வைத்தியரை பார்ப்பது எமக்கு நன்று.  மிகவும் முற்றிவிட்டது. யாழ் களம் தொடர்ந்து இப்படியான பழிவாங்கல்களுக்கு அனுமதிப்பது துரதிருஷ்டவசமானது. 
    • புலிகள் காலத்திற்கு காலம் இங்கள் அரசியல் நநகர்வுகளைகளில் சில நெகிழ்வுத்தன்மையைக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் அரசியல் இலக்கில் எந்த விட்டுக்கொடுப்பையும் செய்யாமல் உறுதியாக இருந்தார்கள். சீமானும் ஏன் அப்படி இருக்கக் கூடாது. புலிகள் அளவு உறுதி என்று சொல்ல முடியாது விட்டாலும் ஏனைய கட்சிகளோடு ஒப்பிடுகையில் அவர் எங்களுக்கு உறுதியானவராகத் தெரிகிறார்.வருகின்ற இடைத்தேர்தலில் திமுக அந்தத் தொகுதியை பெரும்பாலும் காங்கிரசுக்குத்தான் ஒதுக்கும். சீமானைத்தவிர  மற்றைய எல்லோரும் காங்கிரகச ஆதரிப்பார்கள். அதிமுக  இடைத்த்தேர்தல் நீதியாக நடைபெறாது என்ற காரணத்தைக் கூறி ப் புறக்கணிக்கும். உண்மையில் இது விஜை கரிசோதனைக்களமாக சோதித்துப்பார்க்கலாம். ஆனால் அவர் இந்த இடைத் தேர்தலை nஎதிர்கொள்வாரா என்பது இந்த நிமிடம் வரை உறுதியாகச் சொல்ல முடியாது.ஆக சீமானே இனத்தின் எதிரிகாங்கிரசை எதிர்த்துக் களமாடுவார்.
    • இதுவரை உலகமெல்லாம் சென்று வந்த எமது பிரதிநிதிகள் புலம்பெயர் மக்களிடமிருந்து எடுத்துச் சென்று தாயகத்தில் செய்த செயற்திட்டங்கள் ஏதாவது????
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.