Jump to content

சங்கா?,குத்துவிளக்கா?; தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் இழுபறி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சங்கா?,குத்துவிளக்கா?; தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் இழுபறி

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பாகப் போட்டியிடுவது தொடர்பில் அரசியல் கட்சியினருக்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடல் இழுபறியில் முடிவு எட்டப்படாமல் முடிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் பாராளுமன்றத்  தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுக்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளின் கூட்டான தமிழ் மக்கள் பொதுச் சபையினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றையதினம்(26) யாழிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளான புளொட் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோ அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ரெலோவின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம், ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமி, தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான என்.சிறீகாந்தா, தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில்  அதன் மத்திய குழு உறுப்பினர்களான சிவநாதன் மற்றும் பார்த்திபன், ஜனநாயகப் போராளிகள் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர் வேந்தன், செயலாளர் துளசி ஆகியோரும், சிவில் சமூகங்களைப்  பிரதிநிதித்துவப்படுத்தி  நிலாந்தன், யதீந்திரா, வசந்தராஜா, யாழ். பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.

இதன்போது எதிர்வரும் பாராளுமன்றத்  தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற கருத்தைப் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு சில கட்சியினர் கோரியுள்ளனர்.

எனினும், ஒரு தரப்பு அரசியல் பிரமுகர்கள் அதனை விரும்பவில்லை.

ஒரு தரப்பினர் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் குத்துவிளக்கு சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிடுவதெனில் தாம் பொதுக் கட்டமைப்பாகப் போட்டியிடமாட்டோம் என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்காத தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், சிவில் சமூகங்களின் கூட்டாகக் காணப்படும் தமிழ் மக்கள் பொதுச் சபையினர் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பாகத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எந்தவிதமான தீர்மானத்தையும் எடுக்கவில்லை.

தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பானது ஜனாதிபதித் தேர்தலை மையமாகக் கொண்டே உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், பாராளுமன்றத் தேர்தலில் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிவில் அமைப்புகளின் கூட்டான தமிழ் மக்கள் பொதுச் சபையானது தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதா? இல்லையா என்ற முடிவை எடுப்பதற்கு சில நாட்கள் அவகாசத்தை கோரியுள்ளது.

இதையடுத்து  நாளைய தினம்(28) தமிழ் மக்கள் பொதுச் சபையானது இது தொடர்பில் கூடி தமது முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
https://thinakkural.lk/article/310007

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, சுவைப்பிரியன் said:

எமது தெரிவு இரன்டும் இல்லை.

இவர்களின் சின்னமாக சிங் சக்: தாளம் எப்படி? பொருந்துமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரியத்தாருக்கு இடம் கிடைக்குமா? அல்லது பலிகொடுக்கப்பட்டாயிற்றா? 🤣

சிச்சுவேசன் சாங்  👍

என்ஜாய்  மக்களே

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா எப்ப பாத்தாலும் புடுங்குப்படுறியள்.பகல்ல சங்கை வைச்சிருங்கோ ..
இரவில குத்து விளக்க வைச்சிருங்கோவன் 😎

  • Like 1
  • Haha 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிதாக பதவியேற்ற அநுர என்பவர் தற்போது வீசும் அநுர அலையை தக்க வைக்கவேண்டுமென்றால், திடீரென தமிழ் மக்களிடம் அவர் பக்கம் வீச தொடங்கிய  நன்மதிப்பை தக்க வைக்க வேண்டுமென்றால், கடந்த காலத்தில் தமிழர் சார்பில் பாராளுமன்றத்திலும், அரசிலும்  அங்கம் வகித்த எவரையும் தனது அரசவையிலோ மக்கள் நிர்வாக சேவைகளிலோ  சேர்த்து கொள்ளவே கூடாது.

அதுவே தமிழர்கள் இவர்மேல் தாமாக கொண்டுள்ள நம்பிக்கையை மேலும் அதிகரிக்க உதவும்.

  • Like 7
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

சங்கா?,குத்துவிளக்கா?; தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் இழுபறி

large.IMG_7089.jpeg.065034e4758aa8b236f7

  • Like 3
  • Haha 7
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

அரியத்தாருக்கு இடம் கிடைக்குமா? அல்லது பலிகொடுக்கப்பட்டாயிற்றா? 🤣

சிச்சுவேசன் சாங்  👍

என்ஜாய்  மக்களே

பொதுவேட்பாளராக களமிறங்குபவர் இனிமேல் எந்த தேர்தல்களிலும் பங்குபெற மாட்டார் என்ற உத்தரவாதத்துடனேயே களமிறக்கப்பட்டார்.

இதனாலேயே பலரும் பின் வாங்கினார்கள்.

ஆனாலும் அரசியலில் எதுவும் நடக்கலாம்.

2 hours ago, குமாரசாமி said:

இரவில குத்து விளக்க வைச்சிருங்கோவன் 😎

என்னையா இரவில் விளக்கை அணைத்துத் தானே பழக்கம்.

இதென்ன சாட்சி வைத்து காதல் பண்ணுற பழக்கம்?

1 hour ago, valavan said:

புதிதாக பதவியேற்ற அநுர என்பவர் தற்போது வீசும் அநுர அலையை தக்க வைக்கவேண்டுமென்றால், திடீரென தமிழ் மக்களிடம் அவர் பக்கம் வீச தொடங்கிய  நன்மதிப்பை தக்க வைக்க வேண்டுமென்றால், கடந்த காலத்தில் தமிழர் சார்பில் பாராளுமன்றத்திலும், அரசிலும்  அங்கம் வகித்த எவரையும் தனது அரசவையிலோ மக்கள் நிர்வாக சேவைகளிலோ  சேர்த்து கொள்ளவே கூடாது.

அதுவே தமிழர்கள் இவர்மேல் தாமாக கொண்டுள்ள நம்பிக்கையை மேலும் அதிகரிக்க உதவும்.

வடக்குக்கு பழைய அரச அதிபர் மகேசனுக்கே பதவி கொடுத்துள்ளனர்.

இவர் மகத்தான சேவை செய்து கொண்டிருந்த காலத்தில்

அங்கயனும் டக்கிளசும் அவர்கள் கைக்குள் போட முயன்று முடியாமல் போக அவரை மிகவும் மிரட்டியே வெளியே விட்டார்கள் என்கிறார்கள்.

இதுபற்றி மேலதிக தகவல்கள் யாருக்கும் தெரிந்திருந்தால் சொல்லலாம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kavi arunasalam said:

large.IMG_7089.jpeg.065034e4758aa8b236f7

அருமையான கருத்தோவியம்👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஏனப்பா எப்ப பாத்தாலும் புடுங்குப்படுறியள்.பகல்ல சங்கை வைச்சிருங்கோ ..
இரவில குத்து விளக்க வைச்சிருங்கோவன் 😎

இதென்ன மனைவியா?? 🤪😂.    கட்சி சின்னம் சட்டப்படி ஒன்று தான் வைத்திருக்க. முடியும்   🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

இதென்ன மனைவியா?? 🤪😂.    கட்சி சின்னம் சட்டப்படி ஒன்று தான் வைத்திருக்க. முடியும்   🙏

ஆசையை பாரு ..?🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

ஆசையை பாரு ..?🤣

எனககில்லை   குமாரசாமி அண்ணைக்கு   ....😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

வடக்குக்கு பழைய அரச அதிபர் மகேசனுக்கே பதவி கொடுத்துள்ளனர்.

இவர் மகத்தான சேவை செய்து கொண்டிருந்த காலத்தில்

அங்கயனும் டக்கிளசும் அவர்கள் கைக்குள் போட முயன்று முடியாமல் போக அவரை மிகவும் மிரட்டியே வெளியே விட்டார்கள் என்கிறார்கள்.

இதுபற்றி மேலதிக தகவல்கள் யாருக்கும் தெரிந்திருந்தால் சொல்லலாம்.

இது இன்னொரு திரியில் பேசப்பட்ட, 2020 தேர்தல் முடிவுகளோடு தொடர்பானது என்பதால் இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்:

யாழ் அரச அதிபர் வேதநாயகம் 2020 தேர்தலுக்கு சில மாதங்கள் முன்னர் அரசினால் இடம் மாற்றப் பட்டார். அந்த வேளையில் இடமாற்றத்தை இடை நிறுத்தும் படி பாராளுமன்றத்தில் வற்புறுத்தியது சுமந்திரனும், சரவணபவனும்.

பின்னர் வந்தவர் தான் அரச அதிபர் மகேசன். 2020 தேர்தல் நேரம், இவர் தான் யாழ் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுலவலர். 2020 இல் வாக்குகள் திருடப் பட்டன/மாற்றப் பட்டன என்று முறையிடும் நபர்கள், உண்மையில் மகேசனைத் தான் விசாரிக்கத் தூண்டியிருக்க வேண்டும்.

ஆனால், அரச அதிபர் மகேசனோ நேர்மையான ஒரு நிர்வாகி எனப் பெயர் பெற்றவர். நிர்வாகத்தில் அரசியல்வாதிகள் தலையிடாமல் கறாராக இருந்த ஒருவர். இதனால் தான் டக்ளஸ், அங்கஜன் ஆகியோரின் தூண்டுதலால் கென்யாவுக்கான இலங்கைத் தூதுவராக அனுப்ப ப்பட்டார் என நம்பப் படுகிறது.

 இங்கே பொயின்ற் என்னவென்றால்: அரசியல் காழ்ப்புணர்வினால் பரப்பப் படும் போலித் தகவல்கள், வதந்திகள் victimless crimes அல்ல! "2020 தேர்தலில் யாழ் மாவட்டத்தில் முறைகேடுகள் நடந்தன" என கதை பரப்புவோர், மகேசனின் நேர்மையையும் களங்கப் படுத்துகிறார்கள். நூற்றுக் கணக்கான தேர்தல் பணியாளர்களின் சேவையையும் களங்கம் செய்கிறார்கள். 

  • Like 5
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

தகவலுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

வடக்குக்கு பழைய அரச அதிபர் மகேசனுக்கே பதவி கொடுத்துள்ளனர்.

என்ன பதவி ?? 

வேதநாயகம்   என்பவருக்கு தான்   ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளது   அவர் அனுர இடமிருந்து பதவி பெற்றுக் கொண்ட படமமும்.  இன்று யாழ்ப்பாணம் ஆளுநர் அலுவலகத்தில் பதவியேற்றுள்ள  படமும் பார்த்தேன்  🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

யாழ் அரச அதிபர் வேதநாயகம் 2020 தேர்தலுக்கு சில மாதங்கள் முன்னர் அரசினால் இடம் மாற்றப் பட்டார்

1 hour ago, Kandiah57 said:

என்ன பதவி ?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

என்ன பதவி ?? 

வேதநாயகம்   என்பவருக்கு தான்   ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளது   அவர் அனுர இடமிருந்து பதவி பெற்றுக் கொண்ட படமமும்.  இன்று யாழ்ப்பாணம் ஆளுநர் அலுவலகத்தில் பதவியேற்றுள்ள  படமும் பார்த்தேன்  🙏🙏

புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்களில் மகேசன் என்ற பெயரும் இருந்தது:

Mr. K. Mahesan -- Secretary Ministry of Sports and Youth Affairs

Edited by ரசோதரன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Justin said:

இங்கே பொயின்ற் என்னவென்றால்: அரசியல் காழ்ப்புணர்வினால் பரப்பப் படும் போலித் தகவல்கள், வதந்திகள் victimless crimes அல்ல! "2020 தேர்தலில் யாழ் மாவட்டத்தில் முறைகேடுகள் நடந்தன" என கதை பரப்புவோர், மகேசனின் நேர்மையையும் களங்கப் படுத்துகிறார்கள். நூற்றுக் கணக்கான தேர்தல் பணியாளர்களின் சேவையையும் களங்கம் செய்கிறார்கள்

அட சீ! இது தெரிந்திருந்தால் மகேசன் மீதும் சேற்றை வாரி இறைத்து வசை மாரி பொழிந்திருப்போமே!  நமக்கு அவ்வளவு விவரம் பத்தாது.  இப்படியெல்லாம் எமது பொய அம்பலப்படும் என்று எப்படி தெரியும். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள், குத்துவிளக்கை வைத்திருப்பதா சங்கூதி  அணைப்பதா என்று முடிவெடுப்பதற்குள் தேர்தல் முடிந்து அடுத்த தேர்தலும் வந்துவிடும், அதற்க்காவேனும் பயன்படட்டும் சின்னம்.  குத்துவிளக்கும் வேண்டாம் சங்கும் ஊதவேண்டாம் என்று மக்கள் ஒதுங்கப்போகிறார்கள். ஒரு விடயத்தில்தானும் ஒத்துப்போகிறார்களா இவர்கள் மக்களுக்காக? இப்பவே இப்படி குத்தி முறிகிறார்கள் என்றால் தேர்தலை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் மக்களை தயார் படுத்தாமல்? எதிரி தன் ஆட்களை புகுத்த இவர்கள்தான் காரணம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, valavan said:

தமிழர்கள் இவர்மேல் தாமாக கொண்டுள்ள நம்பிக்கையை மேலும் அதிகரிக்க உதவும்.

சிறப்பாக சொன்னீர்கள்.  அவர் மேல் தாமாக நம்பிக்கை கொண்டுள்ளார்கள் 🙆‍♂️  எந்த அடிப்படையில் இப்படி நம்பிக்கை வைக்கின்றனர் என்பது விளங்கவில்லை. 21ம் திகதி வரை இருந்த யாழ்பாணத்தை அனுரா வந்து புதிய மாற்றங்களுடன் மாற்றிவிட்டார் என்கின்றனர். ரசோதரன் அண்ணா அறிமுகபடுத்திய பழைய பாடல் ஒன்று தான் நினைவுக்கு வருகின்றது ஒன்றுமே புரியவில்லை உலகத்திலே என்மோ நடக்குது மர்மமாக இருக்குது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/9/2024 at 14:03, ஈழப்பிரியன் said:

என்னையா இரவில் விளக்கை அணைத்துத் தானே பழக்கம்.

இதென்ன சாட்சி வைத்து காதல் பண்ணுற பழக்கம்?

குத்துவிளக்கின்ர மெல்லிய வெளிச்சம் தரும் அருமை தெரியாத பாவியா நீங்கள்? 

On 27/9/2024 at 14:48, Kandiah57 said:

இதென்ன மனைவியா?? 🤪😂.    கட்சி சின்னம் சட்டப்படி ஒன்று தான் வைத்திருக்க. முடியும்   🙏

On 27/9/2024 at 14:51, விசுகு said:

ஆசையை பாரு ..?🤣

கந்தையருக்கு எப்ப பாத்தாலும் அந்த நினைப்புதான்  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்கிற எனது விருப்பு (எனக்கு வாக்களிப்பில் பங்கில்லை என்கிற போதும்) அவர்களது நிலைப்பாட்டில் இருந்தே உருவானது. இதுவரையில் தமிழர் சார்பாக இருந்த தமிழ் அரசியல் வாதிகளின் கையாலாகத்தன்மையும், தமிழ் மக்களின் அரசியல் ரீதியிலான விடுதலையினை முன்னெடுக்காமையும், சிங்கள் ஆட்சியாளர்கள் தொடர்பான அவர்களின் சிநேகமான பார்வையும்தான். அதனாலேயே தமிழரின் அரசியல் அபிலாஷைகளை மீண்டும் பேசுகின்ற, அவலங்களைப் பேசுகின்ற, உரிமைகளை நினைவுபடுத்துகின்ற ஒருவர் வருகின்றபோது அவரை ஆதரிக்கலாம் என்று முடிவெடுத்தேன்.மேலும் இதுவரை காலமும் சிங்களத் தலைவர் ஒருவருக்கு தமிழர்கள் கொடுத்துவந்த ஆதரவினால் இதுவரையில் நாம் அடைந்தது எதுவும் இல்லையென்பதும் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் சிங்களத் தலைவர்களுக்கு தமிழர்களின் அரசியல் உங்களை அண்டி வாழ்வதல்ல என்பதைக் காட்டுவதற்கும் பொதுவேட்பாளர் தேவை என்று எண்ணினேன்.

அதனாலேயே பொதுவேட்பாளர் எனும் கோட்பாட்டின் பின்னால் நின்ற அரசியல்வாதிகள் குறித்து நான் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. அவர்களின் கடந்தகால அரசியலும், பின்னணியும் எப்படியிருப்பினும் நோக்கம் சரியானதாக எனக்குப் பட்டது. அதனாலேயே அக்கோட்பாட்டை ஆதரித்தேன். இப்போதும் அக்கோட்பாட்டினை ஆதரிக்கிறேன், அதில் எனக்கு எந்த ஐய்யமும் இல்லை.

ஆனால் இவ்வுன்னத கோட்பாட்டின் பின்னால் ஒளிந்துநின்று தமது சொந்த நலன்களைப் பெற்றுக்கொள்ள முயன்ற அதே அரசியல்வாதிகளின் முகங்களை இப்போது பார்க்கும்போது வருத்தமடைகிறேன். சுரேஷ், விக்கி, சிறீதரன் என்று அதே பழைய முகங்கள். பொதுவேட்பாளர் எனும் எண்ணக்கரு இவர்களின் சுய ரூபங்களைப் புதுப்பிக்கவில்லை, இவர்களை மாற்றவில்லை. பொதுவேட்பாளரின் பின்னால் நின்ற அதே அரசியல்வாதிகளின்  இன்றைய செயற்பாடுகளும், பேரம்பேசல்களும் இவர்களின் இணைப்பினாலேயே பொதுவேட்பாளர் எனும் எண்ணக்கருவிற்கான தமிழ் மக்களின் ஆதரவு குறைவடைவதற்குக் காரணமாக அமைந்தது என்றும் எண்ணத் தோன்றுகிறது. 

இவர்களிடையே உண்மையான இனம் சார்ந்து செயற்பட்டு, பொதுவேட்பாளர் எனும் கோட்பாட்டிற்கு உயிர் கொடுத்த சிவில் சமூக அமைப்புக்கள், நிலாந்தன் ஆகியோரின் முயற்சிகளை நாம் மறக்கவில்லை. அவர்களின் நோக்கம் உண்மையானது, சமூக நலன் சார்ந்தது. அவர்கள் எடுக்கும் தமிழர் நலன்சார்ந்த எந்த முயற்சிக்கும் எப்போதும் எனது ஆதரவு இருக்கும். 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

 இதுவரையில் தமிழர் சார்பாக இருந்த தமிழ் அரசியல் வாதிகளின் கையாலாகத்தன்மையும், தமிழ் மக்களின் அரசியல் ரீதியிலான விடுதலையினை முன்னெடுக்காமையும், சிங்கள் ஆட்சியாளர்கள் தொடர்பான அவர்களின் சிநேகமான பார்வையும் - - - -

இவர்களிடையே உண்மையான இனம் சார்ந்து செயற்பட்டு, பொதுவேட்பாளர் எனும் கோட்பாட்டிற்கு உயிர் கொடுத்த சிவில் சமூக அமைப்புக்கள், நிலாந்தன் ஆகியோரின் முயற்சிகளை நாம் மறக்கவில்லை. அவர்களின் நோக்கம் உண்மையானது, சமூக நலன் சார்ந்தது. அவர்கள் எடுக்கும் தமிழர் நலன்சார்ந்த எந்த முயற்சிக்கும் எப்போதும் எனது ஆதரவு இருக்கும். 

தமிழர் நலன் சார்ந்து தமிழ் கட்சிகள் செயற்படுவார்கள் என்று அவர்களை பாராளுமன்றம் அனுப்பினால்… தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றியோ, காணாமல் போனவர்கள் பற்றியோ, தமிழர்களின் எதிர்கால இருப்பு பற்றிய  எதுவித அக்கறையும், அடுத்த நகர்வும் இல்லாமல்…   அவர்கள் தமது சுய தேவையை பூர்த்தி செய்ய சிங்களத் தலைவர்களுடன் ஒட்டி உறவாடும் போது… 

இவர்களை… சிங்கள கட்சிகளிடம் “புறோக்கர்” மாதிரி செயல் பட மேலும் அனுமதிக்காமல், நேரடியாகவே தமிழ் மக்கள்…. சிங்கள கட்சிக்கு ஆதரவு தெரிவித்து தமது தேவைகளை தற்காலிகமாக பூர்த்தி செய்து கொள்வதுதான் சிறந்த வழி.

தற்போது இருக்கும்… “சீழ்” பிடித்துப் போன தமிழ்  தலைமைகளை தமிழ் அரசியல் அரங்கில் இருந்து முற்றாக அப்புறப் படுத்தாவிடில், தமிழ் மக்களுக்கு விமோசனம் என்பது எட்டாக்கனி தான்.

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்கிற எனது விருப்பு (எனக்கு வாக்களிப்பில் பங்கில்லை என்கிற போதும்) அவர்களது நிலைப்பாட்டில் இருந்தே உருவானது. இதுவரையில் தமிழர் சார்பாக இருந்த தமிழ் அரசியல் வாதிகளின் கையாலாகத்தன்மையும், தமிழ் மக்களின் அரசியல் ரீதியிலான விடுதலையினை முன்னெடுக்காமையும், சிங்கள் ஆட்சியாளர்கள் தொடர்பான அவர்களின் சிநேகமான பார்வையும்தான். அதனாலேயே தமிழரின் அரசியல் அபிலாஷைகளை மீண்டும் பேசுகின்ற, அவலங்களைப் பேசுகின்ற, உரிமைகளை நினைவுபடுத்துகின்ற ஒருவர் வருகின்றபோது அவரை ஆதரிக்கலாம் என்று முடிவெடுத்தேன்.மேலும் இதுவரை காலமும் சிங்களத் தலைவர் ஒருவருக்கு தமிழர்கள் கொடுத்துவந்த ஆதரவினால் இதுவரையில் நாம் அடைந்தது எதுவும் இல்லையென்பதும் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் சிங்களத் தலைவர்களுக்கு தமிழர்களின் அரசியல் உங்களை அண்டி வாழ்வதல்ல என்பதைக் காட்டுவதற்கும் பொதுவேட்பாளர் தேவை என்று எண்ணினேன்.

அதனாலேயே பொதுவேட்பாளர் எனும் கோட்பாட்டின் பின்னால் நின்ற அரசியல்வாதிகள் குறித்து நான் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. அவர்களின் கடந்தகால அரசியலும், பின்னணியும் எப்படியிருப்பினும் நோக்கம் சரியானதாக எனக்குப் பட்டது. அதனாலேயே அக்கோட்பாட்டை ஆதரித்தேன். இப்போதும் அக்கோட்பாட்டினை ஆதரிக்கிறேன், அதில் எனக்கு எந்த ஐய்யமும் இல்லை.

ஆனால் இவ்வுன்னத கோட்பாட்டின் பின்னால் ஒளிந்துநின்று தமது சொந்த நலன்களைப் பெற்றுக்கொள்ள முயன்ற அதே அரசியல்வாதிகளின் முகங்களை இப்போது பார்க்கும்போது வருத்தமடைகிறேன். சுரேஷ், விக்கி, சிறீதரன் என்று அதே பழைய முகங்கள். பொதுவேட்பாளர் எனும் எண்ணக்கரு இவர்களின் சுய ரூபங்களைப் புதுப்பிக்கவில்லை, இவர்களை மாற்றவில்லை. பொதுவேட்பாளரின் பின்னால் நின்ற அதே அரசியல்வாதிகளின்  இன்றைய செயற்பாடுகளும், பேரம்பேசல்களும் இவர்களின் இணைப்பினாலேயே பொதுவேட்பாளர் எனும் எண்ணக்கருவிற்கான தமிழ் மக்களின் ஆதரவு குறைவடைவதற்குக் காரணமாக அமைந்தது என்றும் எண்ணத் தோன்றுகிறது. 

இவர்களிடையே உண்மையான இனம் சார்ந்து செயற்பட்டு, பொதுவேட்பாளர் எனும் கோட்பாட்டிற்கு உயிர் கொடுத்த சிவில் சமூக அமைப்புக்கள், நிலாந்தன் ஆகியோரின் முயற்சிகளை நாம் மறக்கவில்லை. அவர்களின் நோக்கம் உண்மையானது, சமூக நலன் சார்ந்தது. அவர்கள் எடுக்கும் தமிழர் நலன்சார்ந்த எந்த முயற்சிக்கும் எப்போதும் எனது ஆதரவு இருக்கும். 

நானும் இதே எண்ணத்திலேயே இருக்கிறேன்.

இதிலே இரட்டை வேடம் போட்ட பலரை வெளியே கொண்டுவர முடிந்துள்ளது.

ரஞ்சித் நேரமிருக்கும் போது இந்தக் காணொளியைக் கேட்டுப் பாருங்கள்.

5 minutes ago, தமிழ் சிறி said:

இவர்களை… சிங்கள கட்சிகளிடம் “புறோக்கர்” மாதிரி செயல் பட மேலும் அனுமதிக்காமல், நேரடியாகவே தமிழ் மக்கள் சிங்கள கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமது தேவைகளை தற்காலிகமாக பூர்த்தி செய்து கொள்வதுதான் சிறந்த வழி.

சிறி அடுத்துவரும் தேர்தலில் தமிழர் பகுதிகளில் என்பிபியும் கணிசமான ஆசனங்களை எடுக்கப் போகுது.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

சிறி அடுத்துவரும் தேர்தலில் தமிழர் பகுதிகளில் என்பிபியும் கணிசமான ஆசனங்களை எடுக்கப் போகுது.

நானும் அப்படித்தான் நினைக்கின்றேன் ஈழப்பிரியன்.
தமிழ் மக்கள்…. தமிழ் கட்சிகளுக்கு கொடுத்த கால அவகாசத்தை சரியாக பயன்படுத்தாமால், தங்களுக்குள் “குடுமிப் பிடி” சண்டை பிடித்துக் கொண்டு இருந்ததை எவரும் ரசிக்கவில்லை.
அவர்கள் அமைதியாக வேறு ஒரு மாற்றத்திற்கு தயாராகி விட்டதாகவே ஊரில் இருந்து வரும் செய்திகளும் தெரிவிக்கின்றன.

  • Like 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓம்…டிரம்ப் வெல்ல உதவும் குணங்களில் இதுவும் ஒன்று. தனக்கு தேவை என்றால் பழசை மறந்து விடுவார். தற்போதைய பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் 2018 இல் டிரம்பை தூக்கி போட்டு மிதித்துள்ளார். ஆனால் அவர் பதவிக்கு வந்ததுமே, டிரம்ப் வெல்ல கூடும் என ஊகித்து, அமெரிக்கா போய், வான்சை சந்தித்து, அவர் மூலம் டிரம்பை ஷேப் பண்ணி விட்டார். ——— @குமாரசாமி @Kandiah57 @தமிழ் சிறி ஜேர்மன் நிதியமைச்சரை தூக்கி அடித்து கூட்டணியை உடைத்துள்ளார் சான்சிலர். தேர்தல் மேகம்கள் சூழுதோ? நேற்றுதான் குசா அண்ணை தேர்தல் வரும் எண்ட மாரி எழுதினவர்.
    • தடித்த குடியரசு பெண்மணி ஒருவர் கமலா ஜனாதிபதியானால் வெள்ளைமாளிகை முழுவதும் கறி மணமாகவே இருக்கும் என்றார். உஷாவின் மாளிகையில் எப்படி மணக்கும். இது சாதாரண வார்த்தைகள் இல்லை.   இதற்கு முன்னர் ரம்பை கிழிகிழி என்று கிழித்தார்.
    • சொத்து யாரது எண்டு சொல்லுங்கோ… கள்ள உறுதி முடிக்கிறம்… விக்கிறம்…🤣 இதென்ன என்ர உன்ர எண்டு பிரிச்சு பேசிகொண்டு. அப்படியா நாம் பழகிறோம்🤣
    • வேன்ஸ் இன் பின்புலம் மிக சுவாரசியமானது.  சிற்ரூரில் வாழ்க்கை, உழைக்கும் வர்க்க பின்புலம், இராணுவ உத்தியோகம், வெள்ளையினமல்லாத மனைவி என பல விடயங்களில் டிரம்புக்கு எதிரான வாழ்க்கை. மேலே பகிடி சொன்ன உழைக்கும், நடுத்தர மக்கள் ஏன், எப்படி வலது சிந்தனையால் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம். ஆனால் டிரம்ப்பை போலவே ஆளும் உளறுவாயன். டிரம்பை விட லூசுதனமாக மேடைகளில் பேசுவார். மைக் பென்ஸ் போல காலம்தாழ்த்தியாவது டிரம்பை எதிர்க்க கூட மாட்டார் என நினைக்கிறேன். டிரம்ப்பின் நாலு வருடத்தின் பின் டிரம்ப்பின் அரசியல் பிராண்டுக்கு வாரிசு இவரா இல்லை டிரம்பின் மகளா என்பதில் லடாய் ஆரம்பிக்கலாம்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.