Jump to content

தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட் - விஜய் சொல்ல வருவது என்ன?

மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள கட்-அவுட் விவாதங்களை எழுப்பியுள்ளது

பட மூலாதாரம்,TVK IT WING/X

படக்குறிப்பு, மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள கட்-அவுட் விவாதங்களை எழுப்பியுள்ளது கட்டுரை தகவல்
  • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 27 அக்டோபர் 2024, 02:42 GMT
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

கட்சி தொடங்கி சுமார் 9 மாதங்களுக்குப் பின், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் அதன் தலைவர் விஜய் உரையாற்ற உள்ளார். மாநாடு நடைபெறும் இடத்தில் பல்வேறு தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், மன்னர்களின் கட்-அவுட்கள் இடம் பெற்றிருப்பது குறித்து விவாதம் எழுந்துள்ளது.

இந்த கட்-அவுட்கள் விஜயின் கொள்கைகளை ஓரளவு தெளிவுபடுத்தும் விதமாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதேவேளையில், இன்னும் தெளிவு இருக்க வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஒவ்வொரு கட்-அவுட்டுக்கும் நோக்கம் இருக்கிறது, அதைத் தங்கள் கட்சியின் தலைவர் கூறினால்தான் அந்நோக்கம் நிறைவேறும் என்கின்றனர், தமிழக வெற்றிக் கழகத்தினர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்-அவுட்கள் குறித்துப் பரவலாக பேசப்படுவது ஏன்?

 

விஜய் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கினார். அதுகுறித்து, விஜய் நேரடியாகத் தெரிவிக்காமல், அறிக்கை வாயிலாக அதன் அறிவிப்பு வந்தது. பிறகு, ஆகஸ்ட் 22ஆம் தேதி, கட்சியின் கொடி மற்றும் பாடல் வெளியிடப்பட்டது. இரு நிகழ்வுகளுக்கும் இடையே, விஜய் தன் அரசியல் கொள்கை, நிலைப்பாடு குறித்து நேரடியாக ஊடகங்களிடம் பேசவில்லை.

எனினும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்டிராங் கொலை, விமானப் படை சாகச நிகழ்வில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் போன்ற பிரச்னைகள் குறித்த தனது கருத்தை அறிக்கைகள் வாயிலாகத் தெரிவித்து வந்தார்.

இந்தப் பின்னணியில்தான், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு தமிழக அரசியல் தளத்தில் எழுந்திருக்கும் எதிர்பார்ப்பைப் பார்க்க வேண்டியுள்ளது. கட்சி தொடங்கி, இத்தனை மாதங்கள் கழித்து அவர் என்ன பேசப் போகிறார் என்பது குறித்து அரசியல் நோக்கர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளாரா?

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியின் வி.சாலையில் இன்று மாலை 4 மணிக்கு அக்கட்சியின் மாநில மாநாடு நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் கட்சியின் சார்பாக செய்யப்பட்டுள்ளன.

மாநாடு நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்-அவுட்கள் குறித்து சமூக ஊடகங்களிலும் அரசியல் அரங்கிலும் பரவலாக விவாதிக்கப்படுகிறது. ஒருபுறம் வேலுநாச்சியார், காமராஜர், பெரியார், மறுபுறம் அம்பேத்கர், சுதந்திர போராட்டர் வீரர் அஞ்சலை அம்மாள் ஆகியோருக்கு நடுவே விஜய் நிற்பது போன்று கட்-அவுட் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்-அவுட்களை வைத்திருப்பதன் மூலம் விஜய் சொல்ல வருவது என்ன? அவர் தனது நிலைப்பாட்டை தெளிவாக்கியுள்ளாரா என்பதை அறிய அரசியல் நோக்கர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.

 
பெரியார், அம்பேத்கர், காமராஜர் குறித்து ஏற்கனவே பேசியுள்ளார் விஜய்

பட மூலாதாரம்,X/ACTORVIJAY

படக்குறிப்பு, பெரியார், அம்பேத்கர், காமராஜர் குறித்து ஏற்கெனவே பேசியுள்ளார் விஜய் (கோப்புப்படம்)

“இதுதான் என் கொள்கை என்பதை அவர் முழுமையாகத் தெளிவுபடுத்தவில்லை. கட்-அவுட்கள் வாயிலாக தமிழ் தேசியம், திராவிடம், தேசியம் மூன்றையும் அவர் முழுமையாக, தெளிவாக முன்னிறுத்தவில்லை. அவர் ஒருவேளை திராவிடம்தான் தனது கொள்கை என்று நினைத்திருந்தால், தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை எழுந்தபோது ஆளுநரைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும்” என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.

பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றை உணர்த்தும் வகையில் பெரியார், சமூக நீதிக்காக அம்பேத்கர், கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் காமராஜர் கட்-அவுட்களை வைத்திருக்கலாம் என ப்ரியன் கருதுகிறார்.

ஆனால், “பெரியார் கட்-அவுட் வைத்திருப்பதால் கடவுள்-மறுப்பு கொள்கையில் அவரின் நிலைப்பாடு என்ன என்பது தெரியவில்லை” என்கிறார் ப்ரியன்.

“எனினும், புதிதாக கட்சி தொடங்குபவர்கள், இன்றைய சூழலில் பெரியாரை முன்னெடுப்பதற்குப் பெரிதும் தயங்குவர். ஆனால், அவரை தைரியமாக முன்னெடுத்ததற்குப் பாராட்ட வேண்டும்.”

கடந்த இரண்டு ஆண்டுகளாக, விஜய் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், ஒவ்வொரு தொகுதியிலும் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை கௌரவிக்கும் விதமாக நிகழ்ச்சி நடத்தி வருகிறார். கடந்த மே மாதம் அப்படி நடைபெற்ற கல்வி நிகழ்ச்சியில், ‘பெரியார், அம்பேத்கர், காமராஜரை படியுங்கள்’ என்று ஏற்கெனவே கூறியிருந்தார். பெரியாரின் பிறந்த நாளன்று பெரியார் திடலுக்குச் சென்று அவருடைய சிலைக்கு விஜய் மரியாதை செலுத்தினார்.

மேலும், நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாடு குறித்தும் அவர் பேசியுள்ளார்.

 
சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்த தன் நிலைப்பாட்டை விஜய் தெளிவுபடுத்த வேண்டும் என, அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்

பட மூலாதாரம்,LOYOLAMANI/X

படக்குறிப்பு, சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்த தனது நிலைப்பாட்டை விஜய் தெளிவுபடுத்த வேண்டும் என, அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்

அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகியோருக்கு கட்-அவுட்கள் வைத்திருப்பதன் ‘அரசியல் கணக்கு’ குறித்து விளக்கினார், மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி.

“கட்-அவுட்கள் ஓரளவு தெளிவாக இருப்பதாக நினைக்கிறேன். தான் குறிவைக்கும் வாக்கு வங்கியை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அம்பேத்கர் மூலம் தலித் வாக்கு வங்கியை குறிவைக்கிறார். பெரியார் மூலம் சமூக நீதியை முன்னிறுத்துகிறார். காமராஜரை முன்னிறுத்துவதன் வாயிலாக, காங்கிரஸ் மற்றும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகளை குறிவைக்கிறார். வேலுநாச்சியார் மூலமும் குறிப்பிட்ட சமூக வாக்கு வங்கி குறிவைக்கப்படுகிறது,” என்கிறார் அவர்.

எம்ஜிஆர், அண்ணா இடம்பெறாதது ஏன்?

மறைந்த தலைவர்கள் அண்ணா, எம்ஜிஆர் குறித்து நேர்மறையான கருத்துகளைக் கூறி வரும் விஜய், அவர்களுக்கு கட்-அவுட் வைக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், அவ்விரு தலைவர்களுக்கும் கட்-அவுட் வைத்தால் விஜய் தனது தனித்தன்மையை நிரூபிக்க முடியாது என்கிறார் ப்ரியன்.

ஏற்கெனவே, விஜய் திரைப்படங்களில் எம்ஜிஆர் பாடல்கள், அவர் குறித்த குறியீடுகள் இடம்பெற்றுள்ளன. மேலும், தவெக கொடி பாடலில், எம்ஜிஆர், அண்ணாவின் படங்கள் பின்னணியில் இடம் பெற்றிருந்தன. மேலும், செப்டம்பர் 15 அன்று அண்ணாவின் பிறந்த நாளன்று அவரை நினைவுகூர்ந்து விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இருப்பினும், “அண்ணா, எம்ஜிஆருக்கு கட்-அவுட் வைப்பது நியாயமும் இல்லை. அண்ணா ஆரம்பித்த கட்சியும் எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியும் ஏற்கெனவே தமிழகத்தில் உள்ளது. இவர்களை முன்னிறுத்தி வாக்கு கேட்பதாக அக்கட்சியினர் சொல்லிவிடக்கூடாது என்பதால் தவிர்த்திருக்கலாம்” என்கிறார் ப்ரியன்.

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலேயே வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் கட்-அவுட்களை வைத்திருப்பதாக ப்ரியன் கூறுகிறார்.

 
தமிழ் மன்னர்களுக்கு கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளதை விமர்சிக்கிறார், பத்திரிகையாளர் மணி

பட மூலாதாரம்,𝗧𝗩𝗞 𝗜𝗧 𝗪𝗜𝗡𝗚/X

படக்குறிப்பு, தமிழ் மன்னர்களுக்கு கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளதை விமர்சிக்கிறார், பத்திரிகையாளர் மணி

இதுதவிர, தமிழ்த்தாய், சேர, சோழர், பாண்டிய மன்னர்களுக்கும் கட்-அவுட்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், மாநாட்டு பந்தலின் நுழைவுவாயிலில் சுதந்திர போராட்ட வீரர்கள், சுந்தரலிங்கம், வீரபாண்டிய கட்டபொம்மன், அழகுமுத்துகோன், மன்னர் பெரும்பிடுகு முத்தரையர், தீரன் சின்னமலை, மன்னர் பூலித்தேவன், மருது சகோதரர்கள், ஒண்டிவீரன் உள்ளிட்டோரின் கட்-அவுட்களும் வைக்கப்பட்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

“சேர, சோழ, பாண்டியர்களின் கட்-அவுட்களை வைத்திருப்பது, தமிழ் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் விஷயமாக உள்ளது. கட்-அவுட்களில் இடம்பெற்றுள்ள சில தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், மன்னர்களை குறிப்பிட்ட சாதியினர் கொண்டாடுகின்றனர் என்பதற்காக அவர்களை சாதி ரீதியானவர்கள் என முத்திரை குத்துவது சரியில்லை.

தமிழ் மன்னர்களை முன்னெடுத்ததால் நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் தமிழ்த் தேசியம் என்று இதைச் சொல்ல முடியாது. ஏனெனில், சீமான் பெரியாரை ஏற்றுக்கொள்ளவில்லை” என்கிறார், ப்ரியன்.

சிந்தனையில் தெளிவின்மையா?

ஆனால், மன்னர்களுக்கு கட்-அவுட் வைத்திருப்பது குறித்த ப்ரியனின் இந்தக் கருத்துடன் முரண்படும் பத்திரிகையாளர் ஆர். மணி, அதைக் கடுமையாக விமர்சிக்கிறார்.

“மன்னர்களுக்கு கட்-அவுட் வைத்தது அபத்தமாக இருக்கிறது. ஜனநாயகத்தில் மன்னர்களுக்கு எந்த வேலையும் இல்லை. இது, சிந்தனையில் தெளிவின்மையைக் காட்டுகிறது” எனத் தெரிவித்தார்.

“எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டும் என நினைத்தால் அவரால் வெல்ல முடியாது. தெளிவான பாதை இருக்க வேண்டும். யார் மனதும் கோணக்கூடாது என நினைத்து அரசியல் செய்ய ஆரம்பித்தால் அவர் படுதோல்வியைச் சந்திப்பார்," என்று விமர்சிக்கும் மூத்த பத்திரிகையாளர் மணி, ஒருவேளை அவருக்கு போகப் போக தெளிவு வரலாம் எனக் கருதுவதாகக் கூறுகிறார்.

 
விஜய் கட்சி கொடியை அறிமுகப்படுத்தியபோது

பட மூலாதாரம்,TVK HQ

படக்குறிப்பு, விஜய் கட்சி கொடியை அறிமுகப்படுத்தியபோது

தமிழக வெற்றிக் கழகம் இந்த கட்-அவுட்கள் மூலம் உணர்த்த முயலும் செய்தி என்னவென்று பிபிசி தமிழிடம் பேசிய தவெக செய்தித் தொடர்பாளர் லயோலா மணி, "இவை அனைத்தையும் பற்றி விஜய் இன்று மாநாட்டில் பேசுவார்," என்று தெரிவித்தார்.

"பெரியார், அம்பேத்கர், காமராஜர் சமத்துவத்திற்காகவும் சமூக நீதிக்காகவும் போராடியவர்கள். அதைத்தான் நாங்களும் வலியுறுத்துகிறோம். விஜய் இந்தத் தலைவர்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறார்” என்றார்.

மேற்கொண்டு பேசியவர், "பெண் விடுதலை இல்லை என்றால் சமூக விடுதலை இல்லை. பெண்கள் அதிகாரத்திற்கு வந்தால்தான் சமூக விடுதலை கிடைக்கும். பெண் தலைவர்கள், போராளிகளை அடையாளப்படுத்தி, பெண்கள் முன்னேற்றம், பெண் கல்வியை வலியுறுத்தும் விதமாக அவர்களின் கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன" என்றார்.

இந்த கட்-அவுட்கள் பிரதிபலிக்கும் செய்தியைப் பார்த்தால், அவை ஒரு "ஒட்டுமொத்த கலவையாக" இருப்பதாகவும், "அரசியலில் விஜயின் எண்ண ஓட்டம் என்னவென்பதைக் காட்டும் வகையில் இல்லாமல், அவர் குழப்பமான மனநிலையில் இருப்பதாகவே காட்டுவதாகவும்" கூறுகிறார் ப்ரியன்.

ஆனால், "இது கலவையாக இல்லை, ஒரு கொள்கையாக இருக்கிறது" என்று கூறும் லயோலா மணி, ஒவ்வொரு தலைவர் குறித்தும் விஜய் கூறும்போது அதன் நோக்கம் சென்று சேரும் எனவும், மன்னர்களை முன்னிலைப்படுத்தியதன் நோக்கத்தையும் அவர் மாநாட்டில் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகம் மாநாடு

பட மூலாதாரம்,TVK IT WING/X

மற்ற கட்சிகளுக்கு உணர்த்துவது என்ன?

மற்ற அரசியல் கட்சிகள் மீது மாநாடு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

“திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் மீது தவெக மாநாடு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அக்கட்சியின் கொள்கைகள்தான் தீர்மானிக்கும்” என்கிறார் ப்ரியன்.

வக்பு வாரியம், சாதிவாரி கணக்கெடுப்பு, ஒரே நாடு-ஒரே தேர்தல் உள்ளிட்ட சமகால பிரச்னைகள் குறித்து அவருடைய நிலைப்பாட்டை வைத்துதான் முடிவெடுக்க வேண்டும் என்கிறார் அவர்.

“தனது இலக்கு 2026 சட்டமன்ற தேர்தல்தான் என விஜய் கூறியிருப்பதால், திமுகவுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தால்தான், தன்னை நிலைநிறுத்த முடிகிறதோ இல்லையோ, ஓரளவுக்குத் தாக்கத்தையாவது ஏற்படுத்த முடியும்” என்கிறார் பத்திரிகையாளர் மணி.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் ஏறிய குதிரையில் சக்கடத்தாரும் ஏறியிருக்கிறார் ........... சறுக்கி விழாமல் இருந்தால் சரிதான் . .........!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தின் மருமகன், தங்கத் தமிழன், வருங்கால முதல்வர்... விஜய் வாழ்க. 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, தமிழ் சிறி said:

ஈழத்தின் மருமகன், தங்கத் தமிழன், வருங்கால முதல்வர்... விஜய் வாழ்க. 🙂

அவருடைய DNA யில் சாவகச்சேரி யின் அடி இருக்கிறதாம். மற்றையது, அவருடைய பூட்டனாருக்கு  மட்டுவில் கத்தரிக்காயும் கொட்டடிச் சந்தை வீச்சு மீனும் நல்லாப் பிடிக்குமாம். 

😉

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை தமிழ்த்தேசியம் சிறு சிறு குழுக்கள் பேசி வந்தது.. பெரும்பான்மை தமிழ்மக்களுக்கு அதை மறைத்து திராவிட மாயைக்குள் இரண்டு பெரிய கட்சிகளும் மூடி தமிழர்களை விழிப்படைய விடாமல் வைத்திருந்தனர்.. அதன் பின்னாடி சீமான் தான் அதை பேசுபொருளாக்கி இன்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வந்திருக்கிறார்..

அதை தொடர்ந்து இன்று விஜை திராவிடமும் தமிழ்தேசியமும் தனது இருகண்கள் என்று சொல்லி இருக்கிறார்..

அவர் சொல்வது சரி பிழை வெல்வார் தோற்பார் என்பதற்கு அப்பால் ஒரு சினிமா பிரபலத்துடன் வந்திருப்பவர் ஓட்டு போடுரமோ இல்லையோ என்னதான் பேசுகிறார் என்று ஒட்டுமத்த தமிழ்மக்களும் உற்று பாத்துக்கொண்டிருக்ககூடிய ஒருவர் தமிழ்தேசியத்தை தனது வாயில் இருந்து உச்சரித்திருக்கிறார்.. தனது கொள்கைகள் இரண்டில் ஒன்று என்று சொல்லி இருக்கிறார்.. அவ்வளவு மக்களையும் தமிழ்தேசியம் என்ற சொல் சென்று சேர்ந்திருக்கும்..

உலகம் எங்கும் பரந்து வாழும் என்போன்ற உண்மையிலேயே மனசார சாதிபேதமற்ற தமிழ் தேசியத்தை நேசிக்கும் (பைத்தியக்கார கடும்போக்கு ஈழத்தமிழ் சுயநல தமிழ்தேசிய அல்லது விளக்கமில்லா விசருகள் அல்லது சுயநலத்துக்கு கடும்தேசியம் பேசும் புலம்பெயர் கூட்டத்தை அல்ல) என் போன்ற பலர் ஆனந்தக்கண்ணீர் விட்ட தருணம் இது..

 

இந்த உழைப்பு முழுவதும் சீமானை சாரும்.. அவருக்கு முன் தமிழ்நாட்டில் குழுக்களாக இயங்கிய இயங்கும் தமிழ்தேசிய இயக்கங்களையும் சாரும் என்றாலும் தமிழ் தேசியத்தை அரசியல் மயப்படுத்தியதில் சீமானைத்தான் சாரும்.. 

இப்படி இன்னும் பல தமிழ்தேசியக்கட்சிகள் இனி வரும்.. தமிழ் தேசியத்துக்கு இனி ஏறு முகம்தான்..💪

 

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திராவிட‌ பூச்சாண்டி காட்டி ம‌க்க‌ளை ஏமாற்றி ம‌ன்ன‌ர் ஆட்சி ந‌ட‌த்தும் க‌ழிவிட‌ மாட‌ல‌ வீட்டுக்கு அனுப்பி

 

அர‌சிய‌லில் விஜேய் வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள்................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'கூத்தாடி, கடவுள் மறுப்பு, குடும்ப அரசியல், பிளவுவாத அரசியல்' - விஜய் பேசியது என்ன? முழு விவரம்

தமிழக வெற்றிக் கழகம், த.வெ.க, நடிகர் விஜய்

பட மூலாதாரம்,TVK

27 அக்டோபர் 2024

தமிழ்நாடு அரசியல் அரங்கில் புதுவரவான நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடந்து முடிந்துள்ளது. கட்சி தொடங்கப்பட்டு சுமார் 9 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அதன் கொள்கைகள் என்ன? அரசியல் எந்த பாதையில் பயணிக்கப் போகிறது? என்று நிலவிய எதிர்பார்ப்புகளுக்கு பதில் தரும் நிகழ்வாக இந்த மாநாடு அமைந்திருந்தது.

ஓர் அரசியல் தலைவராக தவெக கட்சி மாநாட்டில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான தனது தொண்டர்கள் மத்தியில் நடிகர் விஜயின் முதல் பேச்சு எப்படி இருந்தது? அவர் என்னென்ன விஷயங்கள் பற்றி பேசினார்?

‘அரசியல் ஒரு பாம்பு, ஆனால்…’

தவெக மாநாட்டில் பேச்சைத் துவங்கிய விஜய், ஒரு குழந்தை தனது தாயைப் பார்த்து சிரிப்பதுபோல, தன்முன் ஒரு பாம்பு வந்தால் அதனையும் பயமின்றிப் பிடித்து விளையாடும், என்றார்.

"அதேபோல, அரசியல் ஒரு பாம்பு. பயமறியா ஒரு குழந்தையைப் போல அதைக் கையில் பிடித்து விளையாடுகிறேன்,” என்றார் அவர்.

மேலும், “அரசியலில் நான் ஒரு குழந்தை என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அரசியல் பாம்பைக் கண்டு இந்தக் குழந்தைக்கு பயமில்லை,” என்றார்.

“அரசியல் ஒன்றும் சினிமா கிடையாது, இது ஒரு போர்க்களம். சீரியஸாக, ஆனால் சிரிப்போடு எண்ணங்களைச் செயல்படுத்துவதுதான் என் வழி. அரசியலில் கவனமாகக் களமாடவேண்டும். ஏனெனில், சினிமா பாடல் வெளியீட்டு நிகழ்வில் பேசியதிலிருந்து இது வித்தியாசமான மேடை,” என்றார்.

‘அரசியல் மாற வேண்டும்’

பேச்சைத் துவங்கி இவற்றைச் சொன்னபிறகு, தான் உணர்ச்சிவசமாக பேசப்படும் வழக்கமான மேடைபேச்சின் பாரம்பரியத்திலிருந்து விலகி வந்துவிட்டதாகக் கூறினார் விஜய். தனது கட்சி நிர்வாகிகளின் பெயரைச் சொல்லி, ‘அவர்களே… அவர்களே…’ என்று அவர்களை அழைத்தவர், “வழக்கமான அரசியல் பேச்சுகளைப் போல அப்படி ஏன் பேசவேண்டும்? நாம் அனைவரும் ஒன்றுதான்,” என்றார்.

அறிவியல் தொழில்நுட்பம் மட்டும்தான் மாறவேண்டுமா? அரசியலும் மாற வேண்டும். மேடைகளில் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் பேச வேண்டிய அவசியமில்லை. இப்போது என்ன பிரச்னை, அதற்கு என்ன தீர்வு என்பதைச் சொன்னாலே மக்களுக்கு நம்பிக்கை வந்துவிடும்,” என்றார் விஜய்.

இன்று இருக்கும் தலைமுறையைப் புரிந்துகொண்டால்தான் அரசியலைச் சுலபமாக முன்னெடுத்துச் செல்ல முடியும். மற்ற அரசியல்வாதிகளைப் பற்றிப் பேசி நேரம் விரயம் செய்யப் போவதில்லை, ஆனால் கண்ணை மூடிக்கொண்டு இருக்கப் போவதில்லை." என்றார்.

 
தமிழக வெற்றிக் கழகம், த.வெ.க, நடிகர் விஜய்

பட மூலாதாரம்,TVK

‘பெரியாரைப் பின்பற்றுவோம், ஆனால்…’

கட்சியின் கொள்கை வழிகாட்டிகள் பற்றி விஜய் பேசினார்.

‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியார் கட்சியின் கொள்கை வழிகாட்டியாக இருப்பார், என்ற அவர், “ஆனால், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை மட்டும் நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த விஷயத்தில் அண்ணாவின் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கொள்கையைப் பின்பற்றுவோம்,” என்றார்.

“அதாவது, ஒவ்வொரு தனிமனிதரின் கடவுள் வழிபாடு என்பது அவரவர் விருப்பம். அதில் கட்சி எந்த வகையிலும் தலையிடாது. அதேநேரத்தில், பெரியாரின் பெண் கல்வி, பெண் முன்னேற்றம், சமூகச் சீர்திருத்தம், சமூக நீதி, பகுத்தறிவுச் சிந்தனை ஆகியவற்றின் அடிப்படையில் கட்சி செயல்படும்," என்றார் நடிகர் விஜய்.

‘பெண்களை வழிகாட்டியாகக் கொண்ட முதல் கட்சி’

அதேபோல், காமராஜரின் மதச்சார்பின்மை, நேர்மையான நிர்வாகச் செயல்பாடு, அம்பேத்கரின் வகுப்புவாதிப் பிரதிநிதித்துவ கோட்பாட்டை நிலைநிறுத்துவதும், சாதிய ஒடுக்குமுறையை எதிர்ப்பதுமே நமது நோக்கம், என்றார் அவர்.

வீரமங்கை வேலுநாச்சியாரும், த.வெ.க-வின் கொள்கை வழிகாட்டியாக திகழ்வார். பெண்களைக் கொள்கைத் தலைவராக ஏற்று வந்த முதல் கட்சி த.வெ.க தான். முன்னேறத் துடிக்கும் சமூகத்தில் பிறந்து முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட அஞ்சலை அம்மாள் நமக்கு வழிகாட்டியாக இருப்பார். சொத்தை இழந்தாலும், சுயநலமின்றி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் அஞ்சலை அம்மாள்," என்று விஜய் கூறினார்.

 
தமிழக வெற்றிக் கழகம், த.வெ.க, நடிகர் விஜய்

பட மூலாதாரம்,TVK

'நமக்கு ஏன் அரசியல்?’

மேலும் பேசிய விஜய், செயல்தான் முக்கியம் என்றும், சமரசம், சண்டை நிறுத்தத்திற்கு இடமில்லை, ஆனால் வெறுப்பு அரசியலுக்கும் இடமில்லை, என்றும் கூறினார்.

ஆரம்பத்தில் தானும் எல்லோரையும்போல, 'நமக்கு எதற்கு அரசியல்?’ என்றுதான் நினைத்ததாகவும் ஆனால், அப்படி நினைப்பது சுயநலம் என்றும் தெரிவித்தார். “என்னை, வாழவைத்த மக்களுக்கு என்ன செய்யப்போகிறோம் என்று யோசித்தபோது, அதற்குக் கிடைத்த விடை அரசியல்,” என்றார்.

கொள்கை எதிரி, அரசியல் எதிரி யார்?

தனது கட்சியின் கோட்பாடாக ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதை அறிவித்த போதே தனது எதிரியை அறிவித்துவிட்டதாகக் கூறினார் விஜய்.

சாதி, மதம், இனம், மொழி, பாலினம், பணம், எனப் பிரிக்கும் பிளவுவாத அரசியலையும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும் தான் எதிர்க்கப் போவதாகத் தெரிவித்தார்.

“ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது குறிப்பிட்ட ‘கலரைப்’ பூசி, ‘ஃபாசிசம்’ என்று பேசிக்கொண்டு, சிறுபான்மை,-பெரும்பான்மை பயத்தைக் காட்டுகிறார்கள். நாம் பாசிசம் என்றால், நீங்கள் பாயாசமா?,” என்றார்.

இந்த மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள்,” என்றார்.

பிளவுவாத அரசியல் செய்பவர்கள் த.வெ.க-வின் கொள்கை எதிரி. திராவிடம், பெரியர், அண்ணா பெயரை வைத்துக்கொண்டு, தமிழ் நாட்டைச் சுரண்டும் ஒரு குடும்பச் சுயநலக் கூட்டம் நமது அரசியல் எதிரி,” என்றார் விஜய்.

 
தமிழக வெற்றிக் கழகம், த.வெ.க, நடிகர் விஜய்

பட மூலாதாரம்,TVK

‘டீசென்ட்டான அரசியல்’

எந்த அரசியல் தனைவரையும் பெயர் குறிப்பிட்டுப் பேசாதது ஏன் என்ற கேள்வி எழும் என்று பேசிய விஜய், தான் அப்படிப் பேசாதது பயத்தால் அல்ல, தான் ‘டீசென்ட்டான அரசியல் செய்ய வந்திருப்பதாகக் கூறினார்.

எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் பற்றி என்ன பேசினார்?

மேலும், தனது அரசியல் பயணத்தில் முக்கியப் பங்காற்றப் போவது பெண்கள், என்றார் விஜய்.

சினிமா நடிகனுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும் என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்வதாகக் கூறிய அவர், "சினிமா என்றால் பாட்டு, நடனம், பொழுதுபொக்கு மட்டுமல்ல, அது தமிழ்நாட்டின் கலை, இலக்கியம், வாழ்வியல், பண்பாடு, என்று அனைத்தையும் உள்ளடக்கியது," என்றார். சினிமா தான் தமிழகத்தில் சமூக-அரசியல் புரட்சிக்கு உதவியது, என்றார். “திராவிட சித்தாந்தத்தை அனைவரிடமும் கொண்டு சேர்த்தது சினிமா தான்,” என்றார் விஜய்.

என்னை ‘கூத்தாடி’ என்று அழைக்கின்றனர். எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் ஆகியோர் அரசியலுக்கு வந்த போதும் அவர்களை இதே பெயர் சொல்லித்தான் விமர்சித்தனர். ஆனால் அவர்கள் இருவரும் தான் தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தினர்,” என்றார்.

அதேபோல், தான் சினிமாவுக்கு வந்தபோது தான் எதிர்கொண்ட உருவக்கேலிகளையும், அவமானங்களையும் பற்றிப்பேசினார் விஜய்.

“நான் சினிமாவுக்கு வந்தபோது என் தோற்றத்தை வைத்து அவமானப்படுத்தினர். ஆனால் அதுபற்றிக் கவலைப்படாமல் உழைத்து மேலே வந்தேன்,” என்றார் விஜய்.

‘ஆட்சி அதிகாரத்தில் பங்கீடு’

மேலும், “கொள்கை கோட்பாட்டளவில் திராவிடம், தமிழ் தேசியம் ஆகிய இரண்டுக்கும் பிரிவினை இல்லை, இரண்டும் நமது இரண்டு கண்கள்,” என்றார்.

தனது செயல்திட்டத்தின் முக்கிய விஷயமாக, அதிகாரப் பகிர்வைக் கூறினார் விஜய். “2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. இருந்தாலும், நம்மோடு கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கீடும், அதிகாரப் பகிர்வும் கொடுப்போம்,” என்று விஜய் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

 

 

 

 

சில காணொளிக் காட்சிகள்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இங்கிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது பாகிஸ்தான் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. ராவல்பிண்டியில் நடைபெற்று வந்த 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 267 ஓட்டங்களும் பாகிஸ்தான் 344 ஓட்டங்களும் எடுத்தன. 77 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 9 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 24 ஓடங்கள் எடுத்தது. ஸாக் கிராவ்லி 2, டென் டக்கெட் 12, ஆலி போப் 1 ஓட்டத்தில் ஆட்டமிழந்தனர். ஜோ ரூட் 5, ஹாரி புரூக் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி நோமன் அலி, சஜித் கான் ஆகியோரது சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 37.2 ஓவர்களில் 112 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. ஜோ ரூட் 33, ஹாரி புரூக் 26, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 3, ஜேமி ஸ்மித் 3, கஸ் அட்கின்சன் 10, ரேஹான் அகமது 7, ஜேக் லீகச் 10 ஓட்டங்களில் நடையை கட்டினர். பாகிஸ்தான் அணி தரப்பில் நோமன் அலி 6, சஜித் கான் 4 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து 36 ஓட்டங்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணி 3.1 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சைம் அயூப் 8 ரன்னில் ஜேக் லீச் பந்தில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஷான் மசூத் 6 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 23 ரன்களும், அப்துல்லா ஷபிக் 5ரன்களும் சேர்த்தனர். முதல் இன்னிங்ஸில் 134 ரன்கள் விளாசிய சவுத் ஷகீல் ஆட்ட நாயகனாக தேர்வானார். பந்து வீச்சில் 19 விக்கெட்களையும், பேட்டிங்கில் 72 ஓட்டங்களுடன் சேர்த்த சஜித் கான் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்திருந்தது. மசூத் தலைமையில் முதல் வெற்றி பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் 2021-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. கேப்டன் ஷான் மசூத் தலைமையில் பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக 6 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில் தற்போது அடுத்தடுத்து இரு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. அவரது தலைமையில் பாகிஸ்தான் வென்றுள்ள முதல் தொடர் இதுவாகும். ஷான் மசூத் தலைமையில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவிடம் 3-0 என்ற கணக்கிலும், வங்கதேசத்திடம் 2-0 என்ற கணக்கிலும் டெஸ்ட் தொடரை இழந்திருந்தது. தற்போது தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. https://thinakkural.lk/article/311226
    • புதிதாய் மலர்ந்துள்ள சீன - இந்திய உறவு லோகன் பரமசாமி மிகவேகமாக வளர்ந்து வரும் நாடுகளின் கூட்டான பிறிக்ஸ் நாடுகள் சர்வதேச அரசியலில் தம்மை பலம் கொண்ட ஒருதரப்பாக காட்டிக்கொள்வதில் நடிக்கின்றனவா? அல்லது உண்மையாகவே தமக்குள்ளே காணப்படும் அனைத்து வேற்றுமைகளையும் மறந்து மேலை நாடுகளின் பலத்தை முறியடிக்க வேண்டும் என்பதில் உறுதிகொண்டு செயற்படுகின்றனவா என்பதை அறிவதில் சர்வதேச அரசியல் ஆர்வலர்கள் மிகவும் அதிகமான கரிசனையைக் காண்பித்து வருகின்றனர். பிரேசில் ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள், மேலும் சில வலிமை வாய்ந்த, வளர்ந்து வரும் நாடுகளையும் இணைத்து கொண்டு சர்வதேச அரங்கை தம் கைவசம் வைத்து கொள்வதில் மிகவேகமாக நகர்ந்து வருகின்றன.  அதேவேளை இந்த வளர்ச்சியின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நான்கு வருடகால பதற்ற நிலையை தணித்துக் கொள்வதற்கு ஏற்ற வகையிலானதொரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக இரு தரப்பும் அறிவித்துள்ளன.  இவ்வொப்பந்தம் குறித்த அறிக்கை சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இவ்வாரம் இடம்பெறவிருக்கும் பிறிக்ஸ் மாநாட்டிற்கு செல்வதற்கு சற்று முன்பாக வெளியிடப்பட்டுள்ளது.  அதாவது ரஷ்யாவில் வோல்கா நதிக்கரையில் இருக்கும் கஸான் நகரில் இடம் பெறும் பிறிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் மோடியும் சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்னும்  கடந்த புதன்கிழமை சந்தித்தார்கள்.  இவ்விரு நாடுகளின் தலைவர்களும் அருகருகே புதிய அங்கத்தவர்களுடன் சந்திப்புக்களை நடத்தவுள்ளனர். தமக்குள்ளே இருக்கும் பிரச்சினைகளுக்கு ஏற்கனவே தீர்வு கண்டு விட்ட நிலையை சர்வதேச நாடுகளுக்கு எடுத்து சொல்லும் வகையில் இந்த அறிக்கை வெளியிடபட்டதா என்றொரு கேள்வி எழுகின்றது. ஆசியாவின் இரண்டு மிகப்பெரிய நாடுகளான இந்தியாவும் சீனாவும் 2020ஆம் ஆண்டு ஜுன் மாதம் இந்திய மாநிலமான ஜம்மு-காஷ்மீரின் லடாக்; இடம்பெற்ற கைகலப்பு யுத்தத்தில் இருபது இந்திய இராணுவ வீரர்களும் நான்கு சீன இராணுவத்தினரும் கொல்லபட்டதாக அறிவிக்கபட்டது. அன்றிலிருந்து இருதரப்பு இராணுவமும்  முறுகல் நிலையிலேயே இருந்தன. இருந்தபோதிலும் பதற்ற நிலையை தணித்துக் கொள்ளும் வகையில் இருதரப்பிலும் இராஜதந்திர மட்டத்திலும் இராணுவ மட்டத்திலும் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வந்தன.  கடந்த வாரம் நிலையெடுத்திருக்கும்  இருதரப்பு இராணுவத்தினரையும் மீளப்பெற்றுக் கொள்ளும் ஒப்பந்தம் நிறைவடைந்து விட்டதாக தொலைகாட்சிக்கு பேட்டி அளிக்கையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.சுப்பிரமணியம் ஜெய்சங்கர் கூறியிருந்தார்.  இதனைத்தொடர்ந்து  இந்தியத்தரப்பில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் விக்ரம் மிசிறியின் அறிக்கையால் இது உறுதி செய்யபட்டிருந்தது. 2020ஆம் ஆண்டு எழுந்த பதற்றநிலைக்கான தீர்வு காணப்பட்டுள்ளது என்பதுடன்  நிலைமைகள் நடைமுறைக்கு சாதகமான வகையில் நகர்ந்து வருவதாகவும் பிரதமர் மோடியும், ஜனாதிபதி ஷியும்  தமது சந்திப்பின் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர்.  மேலதிக திட்டங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நகர்வுகள் குறித்து சரியான தகவல்கள் எதுவும் இன்னமும் வெளியிடப்படவில்லை. பல்லாயிரக்கணக்கான துருப்புகளும், தாக்குதல் கலன்களும் விமானங்களும் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளதாக்கு கைகலப்பு யுத்தத்தை தொடர்ந்து நிறுத்தி வைக்கபட்டிருந்தன. இவற்றை மீளப்பெற்றுக்கொள்வதில் இந்தியத் தரப்பு சாதகமான சமிக்ஞையைக் காண்பித்துள்ளது. இந்தியப் பாதுகாப்பு விவகாரங்களுக்கான சிந்தனையாளர்களும் இதனையொரு வரவேற்கத்தக்க விவகாரமாகவே காண்கின்றனர்.  அதேவேளை சீனத் தரப்பில், இவ்வொப்பந்தம் குறித்து சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் குறிப்பிடுகையில்,  ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறை படுத்தப்பட வேண்டும் என்றார்.  இதனையே படைகளைப் பின் வாங்கிக்கொள்ளும் நடவடிக்கைகளுக்கான நிபுணர்கள் குழு புதுடில்லியை கேட்டுக் கொள்வதாகவும் கூறபட்டது. இது, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை மேலும் சாதகமாக்குவதற்கும் நீண்ட காலத்திற்கு கொண்டு செல்வதற்குமான முன்னேற்றகரமானதொரு நகர்வாகக் கூறப்பட்டுள்ளது.  சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் தனது ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அண்மைய காலங்களில் இந்தியாவும் சீனாவும் எல்லை விவகாரங்கள் குறித்து இராஜதந்திர ரீதியாகவும் இராணுவ தொடர்புகள் ஊடாகவும் நாடாத்திய பேச்ச வார்த்தைகளின் பயனாக ஒரு தீர்வை கண்டுள்ளன என்றார். அத்துடன், இந்தியாவுடன் தீர்க்கமான மேலதிக வளர்ச்சியைக் காண்பதிலும்  தீர்வை முழு மனதுடன் நடைமுறைப் படுத்தவதிலும் சீனத் தரப்பு உறுதியுடன் இருப்பதாக தெரிவித்திருந்தார்.  சீனச் சிந்தனைத் தரப்புக்களும் இது நிச்சயமாக சீன இந்திய உறவை மேம்படுத்தி கொள்வதற்கான பாரியதொரு முன்னேற்றமே எனக் கூறியுள்ளனர்.  அதேவேளை சீனத்தரப்பில் கூறபட்டு வரும் பத்திரிகை தகவல்களின் படி  கடந்த காலங்களில் இடம்பெற்ற சீன இந்திய உறவில் எற்பட்ட முறிவு  ஒரு பொருளாதார நலன்களுக்கான பின்னடைவாகவே பார்க்கபடுகிறது. இது இந்தியாவில் சீன எதிர்ப்புவாதத்தையும் தேசியவாத வசைப்பேச்சுக்களையும் ஊக்குவித்தாகவும் இந்தியாவில் இயங்கும் சீன நிறுவனங்களுக்கு எதிரான விரோத நடவடிக்கைகளையும் சீன கம்பனிகளை கடுமையான விசாரணைகளுக்கு உட்படுத்தம் நிலையையும் ஏற்படுத்தியது.  அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான மக்கள் தொடர்பையும் நிறுத்தி வைத்திருந்ததாக சீனத் தரப்பால் கருதப்படுகிறது. இந்தியாவின் முதன்மை இறக்குமதி பொருட்களைக் கொண்ட  நாடுகளில் சீனா உள்ளது. சுமார் 56.29பில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்கள் இவ்வருடம் ஏப்பிரல் மாத்திலிருந்து செப்டெம்பர் மாதம் வரை சீனாவிடமிருந்து  இறக்குமதியாகி உள்ளது. இது சீனாவுக்கு இந்திய மிகப்பெரும் சந்தைப்படுத்தல் தளம் என்பதையே காட்டிநிற்கின்றது.  சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா சீனாவை பதிலீடு செய்வதற்கான முதன்மை உற்பத்தி நாடாக தன்னை ஆக்கி கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது. ஆனால் இதற்கு இந்தியா தன்னையொரு சீனாவுடனான நட்பு நாடாக வைத்திருப்பதன் ஊடாகவே முடியும் என்பது சீனாவின் பார்வையாக உள்ளது.  ஆனால் அமெரிக்க ஆய்வாளர்களின் பார்வை சீன, இந்திய தரப்புகளின் பார்வையில் இருந்த முற்றிலும் வேறுபட்டதொரு விடயமாக உள்ளது. நாடுகளின் வெளியுறவுத்துறை குறித்த ஆய்வுகளை வெளியிடும் புகழ் பெற்ற அமெரிக்க சஞ்சிகையான ‘பொரின்பொலிசியில்’ செல்வாக்கு மிக்க ஆய்வாளர் மைக்கல் கூகெல்மன் என்பவர், “ஒரு பாதுகாப்பு ரோந்துகளை தவிர்த்துக் கொள்ளும் ஒப்பந்தம் வர்த்தக நலன்களை கொண்டு வரலாம். ஆனால் அதற்காக ஒட்டுமொத்த சீன, இந்திய உறவின் நெகிழ்ச்சித் தன்மையாக அதனைக் கண்டு விட முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.  இதற்கும் மேலாக சீன, இந்திய எல்லைகளில்  இராணுவத்தினர் மத்தியில் நம்பிக்கையீனம் மிகவும் வலுப்பெற்றதாகவே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதோடு, இவை எல்லாவற்றிற்கும் மேலாக சீனா தெற்காசிய நாடுகள் மத்தியல் தனது செல்வாக்கை முன்நகர்த்தி வருகிறது. அத்துடன் இந்து சமுத்திரத்திலும்  மிகவும் கசப்பான போட்டிநிலை உள்ளது. இவை அனைத்தம் தொடர்ச்சியாக இருந்த வண்ணமே உள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.  ஆக அமெரிக்கத் தரப்பு ஆசியப்பிராந்தியத்தில் சமாதான சூழல் ஏற்படும் என்பதில் அதிக நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை காணக்கூடியதாக உள்ளது. அந்த வகையில் பிறிக்ஸ் நாடுகளின் கூட்டு மேலை நாடுகளுக்கு சாவாலாக உண்மையுடனும் வெளிப்படைத் தன்மையுடனும் மேலும் இறுக்கமான சமாதான முன்னகர்வுகளை எடுத்துக் காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியிருப்பதையே இருப்பதையே வெளிப்படுத்தி நிற்கிறது.   https://www.virakesari.lk/article/197258
    • இங்கு கசப்பான ஒரு உண்மையை நோக்க வேண்டும். சிங்கள மக்கள் ஒரு பொது தேர்தலில் தமிழ் கட்சிகளுக்கு வாக்கு அளிப்பார்களா? சிங்கள மக்கள் தமது இனம் பார்த்து வாக்கு அளிக்கின்றார்கள் என்றால் தமிழர்களும் அப்படி செய்யலாமா?
    • சூடானின் துணை இராணுவ ஆதரவுப் படைகள், எல் கெசிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் குறைந்தது 124 பேரைக் கொலை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது அந்த நாட்டில் இடம்பெற்று வரும் 18 மாத காலப் போரின் மிகக் கொடிய சம்பவங்களில் ஒன்றாகும் என்று கருதப்படுகிறது. அத்துடன் குறித்த மாநிலத்தில் நடந்த தாக்குதல்களில் மிகப்பெரியது என்றும் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். உயர் பதவியில் இருந்த Abuagla Keikal என்ற துணை இராணுவ அதிகாரி ஒருவர், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நாட்டின் இராணுவத்திடம் சரணடைந்ததைத் தொடர்ந்து, சரணடைந்த அதிகாரி வசித்து வந்த விவசாய கிராமத்தின் மீது இந்த பழிவாங்கும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சூடானில் இடம்பெற்று வரும் போரால் 11 மில்லியனுக்கும் அதிகமான மக்களை இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன் நாட்டின் சில பகுதிகளை கடுமையான பசி அல்லது பஞ்சத்துக்கும் தள்ளியுள்ளது. 2021 இல் நாட்டில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் அங்கு உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்தது. https://thinakkural.lk/article/311213
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.