Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிர்ச்சி தரும் சுமந்திரனின் சதிகள் ஆதாரபூர்வமாக அம்பலம்:

சுமந்திரனும் இத்தியாதிகளும் ஈழத்தமிழ்த்தேசியத்தை எவ்வாறு புதிய அரசியலமைப்பு ஊடாக முற்றாகச் சிதைக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்களை இந்த ஒரு மணி நேர காட்சிப்படுத்தலுடனான நேர்காணலில் தமிழ்நெற் ஆசிரியர் முன்வைக்கிறார்.

Edited by Sasi_varnam

  • Sasi_varnam changed the title to அரசியல் சதிகள் அம்பலம்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த 1 மணித்தியால காணொளியை கவனமாகப் பாருங்கோ.

சுமந்திரன் ஐயா மட்டுமல்ல ஒரு நாடு இரு தேசமும் சிக்கல் தான் போல!

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதுள்ள அரசியல்வாதிகள் இந்தக் காணொளியை  பார்த்து தம்மை திருத்திக் கொள்ள வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி சசி.

இங்கு சிலர் கதிர்காமர் திருச்செல்வம் போன்றோரை புகழ்ந்தனர்.

அவர்கள் இதையும் கொஞ்சம் பார்க்க வேண்டும்.

இந்தக் காணொளியின்படி சுமந்திரனுக்கு ஏதாவது பெரிய பதவிகள் கிடைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che, @nedukkalapoovan, @valavan, @kandiah Thillaivinayagalingam, @satan, @Kapithan, @Kandiah57, @விசுகு, @நிழலி, @குமாரசாமி, @ரஞ்சித், @கிருபன்    ஆகியோர் இந்தக் காணொளியை நேரம் ஒதுக்கி பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

@goshan_che, @nedukkalapoovan, @valavan, @kandiah Thillaivinayagalingam, @satan, @Kapithan, @Kandiah57, @விசுகு, @நிழலி, @குமாரசாமி, @ரஞ்சித், @கிருபன்    ஆகியோர் இந்தக் காணொளியை நேரம் ஒதுக்கி பார்க்க வேண்டும்.

இதுபற்றி நானுட்பட பலரும் பல தடவை கருத்து பகிர்ந்ததுதான்,

தமிழ்சிறி நீங்கள் Mention பண்ணியதால் சொல்கிறேன்.

சுமந்திரனை தமிழர்களின் ஏகோபித்த பிரதிநிதியாக தமிழர்களும் ஏற்றுக்கொண்டதில்லை சிங்களவர்களும் ஏற்றுக்கொண்டதில்லை அப்படியிருக்கும்போது இவர்களின் தீர்மானங்கள் ஆலோசனைகள் எந்த வகையில் செல்லுபடியாகும்?

இவர் பற்றி ஒருமணிநேரமாக இவர்கள் உரையாடுவது அநாவசியமற்ற ஒன்றாகவே பலருக்கு படும், அடுத்து எமது அரசியல் தேர்வுகளாக எது இருக்க வேண்டும்  யார் இருக்க வேண்டும் தலைமை தாங்கவேண்டும் என்பதை  கற்றறிந்த இவர்கள் கை நீட்டி காட்டினால் அல்லது அடையாள படுத்தினால் அதில் ஒரு பயன் இருக்கும்.

சுமந்திரன் முன்னைய ஆட்சிகள்போல் சிங்களவர்களுடன் ஒட்டிக்கொண்டு பதவிகளை பெற்று இந்த ஆட்சியிலும் வண்டியோட்டலாம் என்று நினைக்கிறார் போலும்,

ஆனால் நேற்று கிளிநொச்சியில் நடந்த கூட்டத்தில் இலங்கை பிரதமர் ஹரிணி , தமது கட்சியை சாராதர்களுக்கும் உங்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கும்  எவருக்கும் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவித்திருக்கிறார்,

இந்த காணொலியில் 31:57 நிமிடத்திலிருந்து அவர் கருத்துக்கள் உள்ளன.

ஒருவேளை தென்பகுதி கட்சிகள் மட்டுமல்ல  ,கடந்தகால  தமிழ்கட்சிகள் மற்றும் சுமந்திரன் வகையறாக்கள் பற்றி யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் மக்கள் மனநிலையை நாடி பிடித்து பார்த்தும் இந்த கருத்தை சொல்லியிருக்கலாம்.

தேர்தலின் பின்னரே சிங்களத்தின் முகங்கள் தெளிவாகும்.

தமிழர் தேசியத்தை உறுதியாக நகர்த்த வேண்டுமென்றால், புலத்திலும் நிலத்திலும் உள்ள தமிழர்கள் ஒரே கோட்டில் பயணிக்க வேண்டும், துரதிர்ஷ்டவசமாக புலத்திலும் பல பிரிவு தாயகத்திலும் பல பிரிவு , 

சிங்களவனிடம் உரிமை கேட்கபோக அரசியல் பேரம் பேச  ஓரணி, ஒரே குரல் ஒற்றுமை வேண்டும் அது எங்கே வாழ்கிறது?

அதனால்தான் இதுவரை தமிழர் தேசியம் பெயரில் குப்பை கொட்டிய அனைத்து கட்சிகளும் இந்த பொது தேர்தலில் ஓரம்  கட்டப்படவேண்டும், நேர்மையும் திறமையுமுள்ள புதியவர்கள் தமிழர் பிரதிநிதிகளாக வேண்டும், தாயகத்தில் அரசியலும், புலத்தில் பொருளாதாரம் ஆலோசனைகள் , சர்வதேச தொடர்புகள் என்றும் ஒன்று சேர்ந்து ஒரேகோட்டில்  நகர வேண்டும் என்பதே அங்கலாய்ப்பு இதெல்லாம் எந்தளவில் சாத்தியமாகும் என்பது காலத்தின் முடிவு., 

இந்த பொது தேர்தலில் தமிழர் அரசியலில் பெரும் மாற்றம் வேண்டும் புதியவர்களின் கையில்  மக்கள் ப்ரதிநிதித்துவம் ஒப்படைக்கப்பட வேண்டுமென்பதே அங்குள்ள பெரும்பாலான மக்களின் விருப்பாக இருப்பதாகவும் தெரிகிறது.

அப்படி புதியவர்களின் கையில் பொறுப்புகள் போனாலும் இந்த தேர்தல் அவர்களை இனம் காண மட்டுமே உதவி செய்யும், அடுத்த தேர்தலில்தான் அவர்களின் ஒற்றுமையும் அர்ப்பணிபும் நேர்மையும் கொண்டு ஒரு உறுதியான தமிழர் தலைமையாக தேர்தலை  தமிழர் பகுதியிலிருந்து தேர்தலை எதிர்கொள்ள  பயன்படும். ஒரே தலைமைத்துவமாக சிங்களத்துடன் பேரம் பேச தகுதி பெறும். 

இது எல்லாம் நக்கவேண்டும் நடந்தால் நல்லாயிருக்கும் ,அதுவரை எங்கே செல்லும் இந்த பாதை கேஸ்தான்.

Edited by valavan
ஒருவரி சேர்ப்புக்காக.,,

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய மக்கள் சக்தி, சுமந்திரனுடன் எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளது.( ஒரு தகவலுக்காக)

6 hours ago, தமிழ் சிறி said:

@goshan_che, @nedukkalapoovan, @valavan, @kandiah Thillaivinayagalingam, @satan, @Kapithan, @Kandiah57, @விசுகு, @நிழலி, @குமாரசாமி, @ரஞ்சித், @கிருபன்    ஆகியோர் இந்தக் காணொளியை நேரம் ஒதுக்கி பார்க்க வேண்டும்.

நன்றி தமிழ் சிறி.

ஆனால் நேரம் பொன்னானது.

நான் ஏற்கனவே சொல்லியது தான். இத் தேர்தலில் சுமந்திரன் உட்பட, டக்கி, சிறிதரன், கஜேந்திரன்கள் எல்லாரும் மக்களால் நிராகரிக்கப்பட வேண்டும். தமிழ் தேசியம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் கூட்டம் இது.

இம் முறை என் இந்த எதிர்பார்ப்பில் 60 வீதமாவது நிறைவேறும்.

பி.கு:

சசி இக் காணொளியை சில தினங்களிற்கு முன் வட்ஸ்அப் பில் அனுப்பி வைத்து இருந்தார். அப்பவும் நான் பார்க்க விரும்பவில்லை. பார்க்காமல் விட்டதன் இன்னொரு காரணம் தமிழ்னெட் ஆசிரியரும் இதே வகையை சார்ந்த சந்தர்ப்பவாதி என்பதால்.

  • கருத்துக்கள உறவுகள்

காணொளியை முழுமையாகப் பார்த்தேன்.  இவர் எம்மைப்போல் ஒரு சாமான்யன் அல்ல.  நீண்ட காலம் இவ்வாறான அரசியல் ஆய்வுகளை செய்பவர். புலம் பெயர்  அரசியல்  அமைப்புகளுடன் நீண்டகாலமாக தொடர்சசியான தொடர்புகளை பேணுபவர்.  ஆகவே இவர் கூறியவற்றை நடைமுறைப்படுத்துவதானால் இவரும்,  இவரது புலம் பெயர் அமைப்புக்களும் கூட்டாக  தாயகம் சென்று, இதை  மக்களுக்கு புரியவைத்து  மக்கள் பிரதிநிதியாக பாராளுமன்றம் சென்று இவர் இப்போது கூறியவற்றை நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். அதற்கான குறைந்த பட்ச முயற்சிகளையாவது எடுத்திருக்க வேண்டும். புலம் பெயர் தமிழ் அரசியல் அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருப்பவராதலால்  இதற்குத்தேவையான நிதிவளத்தையும் கொண்டவராகவே இருப்பார். 

ஒரு மாதத்திற்கு  முன்பு இவருக்கு இந்த ஞானோதயம் வந்திருந்தாலும் தாயகம் சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்து மக்களைச்சந்தித்து இக் காணொளியில் கூறிய விடயங்களை மக்களுக்கு கூறி இவர் குறை கூறும் அரசியல்வாதிகளை தோற்கடித்து பாராளுமன்றம் சென்று இதை நடைமுறைப்படுத்த முயற்சிதிருக்கலாம்.  

 அதை விடுத்து எங்கோ ஒரு மூலையில் இருந்து கற்பனை குதிரையில் ஏறி போகமுடியாத ஊருக்கு வழி சொல்லி  பொழுது போக்குவதில் அர்ததம் இல்லை. தாயக அரசியல்வாதிகள் மோசமானவர்கள் தான். ஆனால்,  அவர்களை குறை சொல்ல இந்த கற்பனாவாதிக்கு எந்த அருகதையும் இல்லை.  

சுமந்திரனாவது இப்போதைய அரசியலமைப்பை விட  மேம்பட்ட ஒரு அரசியலமைப்பை உருவாக்க பல முயற்சிகளை செய்துள்ளார். இவர் எதையும் செய்யாது வெறும்  இவ்வாறான அலசல்கள் மட்டும் தான். 

இப்போதைய ground reality என்ன என்பதைப்பற்றி எந்த அக்கறையுமற்று மாய உலகில் வாழ்பவர்களுக்கு வெறும் வாயை மெல்லும் இவர் சொல்வது இனிக்கலாம்.  

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

நான் ஏற்கனவே சொல்லியது தான். இத் தேர்தலில் சுமந்திரன் உட்பட, டக்கி, சிறிதரன், கஜேந்திரன்கள் எல்லாரும் மக்களால் நிராகரிக்கப்பட வேண்டும். தமிழ் தேசியம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் கூட்டம் இது.

இம் முறை என் இந்த எதிர்பார்ப்பில் 60 வீதமாவது நிறைவேறும்.

2 தடவைக்கு மேல் பா.உ களாக இருந்தவர்கள் தாங்களாகவே விலகி இளையோருக்கு சந்தர்ப்பம் வழங்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஏராளன் said:

2 தடவைக்கு மேல் பா.உ களாக இருந்தவர்கள் தாங்களாகவே விலகி இளையோருக்கு சந்தர்ப்பம் வழங்கவேண்டும்.

ஏராளன், பராளுமன்ற உறுப்பினர்கள் விலகுவது புதியவர்கள் வருவது வரவேற்கத்தக்கதே. ஆனால் அதுவல்ல இங்கு பிரச்சசனை. இந்த தமிழ் நெற் ஜெயா கூறுவதை போன்ற பிரிந்து போகக்கூடிய இணைப்பாட்சியை ( Confederation)  அரசியலமைப்பை உருவாக்கக் கூடிய வலு இப்போது தமிழர் தரப்பில் உள்ளதா?  பாரிய அரசியல் பலமும் சக்திவாய்ந்த உலக நாடுகளின் அபரிமிதமான ஆதரவும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். அதல பாதாளத்தில் இருக்கும் தமிழர் அரசியல் பலத்தையும் ஏறெடுத்து கூட பார்ககாத உலநாடுகளின் தற்போதைய நிலையில் இது சாத்தியமா? 

சாத்தியமான சந்தர்ப்பங்களைப் பாவித்து இன்றைய நிலையை விட மேம்பட்ட அதிகார பரவலாக்கத்துடன் கூடிய அரசியலமைப்பை உருவாக்க முற்படுவதே புத்திசாலித்தனமான செயல் என்பது எனது கருத்து. 

Edited by island
எழுத்துப்பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

நீலன், சுமந்திரன் போன்றோர் அரசியலமைப்பை மாற்றச் செய்த முயற்சிகளில் தனிநாடாக உருவாவது உள்ளடக்கப் படவில்லை. ஆனால், ஒற்றையாட்சிக்குள் சில உரிமைகளைப் பெறும் அம்சங்கள் இருந்தன. தமிழ்நெற் ஆசிரியர் தமிழ் தேசியத்தின் ஆதர்சமான (ideal) விடயங்களை மட்டும் முன்வைத்துப் பேசுவது அதியசமோ, "அதிரடிச் செய்தியோ" அல்ல! ஆனால், ஆதர்சமான விடயங்கள், அப்படியே ஆதர்சமாக மட்டும் தான் இருக்கும். மணிக்கணக்காகப் பேசலாம், பந்தி பந்தியாக எழுதலாம். தாயகத்தில் ஒரு துரும்பையும் இந்த ஆதர்ச நிலைப்பாடுகள் அசைக்க உதவாது.

எப்படி ஆதர்ச நிலைப்பாடுகளை தாயகத்தில் தமிழ் மக்கள் அனுபவிக்கக் கூடிய தொட்டுணரக் கூடிய (tangible) விடயங்களாக மாற்றுவது என ஒரு திரியை கோசான் ஆரம்பித்து, இறுதியில் பலருக்கு ஆர்வம் இல்லாமையால் அது அணைந்து போயிருக்கிறது. அந்தத் திரியிலே கூட தீவிர தமிழ் தேசியர்கள் சிலர் வந்து எழுதினார்கள், "இது கடைசியில் எங்கே போகுமென்று தெரியும், எனவே இதில் நாம் பேச ஒன்றுமில்லை" என.

பாவனைப் பயனைப் பார்ப்பதை விட மேலாக, பகட்டைப் பார்த்து கார், வீடு, உடை, நகைகள் வாங்குவது போலவே, தீவிர தமிழ் தேசியர்களும் வெளியில் என்ன தோற்றமென்று பார்த்துத் தான் தீர்வை எடை போடுகிறார்கள். உள்ளடக்கம், நடைமுறை நன்மைகள் என்னவென்று யோசிப்பது குறைவு. 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, valavan said:

சுமந்திரன் முன்னைய ஆட்சிகள்போல் சிங்களவர்களுடன் ஒட்டிக்கொண்டு பதவிகளை பெற்று இந்த ஆட்சியிலும் வண்டியோட்டலாம் என்று நினைக்கிறார் போலும்,

சுமந்திரன் 2010 அரசியலுக்கு வந்து பாராளும்மன்றம் சென்றதில் இருந்து இலங்கை அரசில் சேர்ந்து எந்த அமைச்சரானார்  அல்லது பதவியை பெற்றார்?

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

@goshan_che, @nedukkalapoovan, @valavan, @kandiah Thillaivinayagalingam, @satan, @Kapithan, @Kandiah57, @விசுகு, @நிழலி, @குமாரசாமி, @ரஞ்சித், @கிருபன்    ஆகியோர் இந்தக் காணொளியை நேரம் ஒதுக்கி பார்க்க வேண்டும்.

நேரம் கிடைக்கவில்லை சிறி. நிச்சயமாக கேட்டு விட்டு எழுதுகிறேன். நன்றி.

அழைப்புக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விளங்க நினைப்பவன் said:

சுமந்திரன் 2010 அரசியலுக்கு வந்து பாராளும்மன்றம் சென்றதில் இருந்து இலங்கை அரசில் சேர்ந்து எந்த அமைச்சரானார்  அல்லது பதவியை பெற்றார்?

விளங்க நினைப்பவன் ,

நான் எங்கே எழுதி இருக்கேன் சுமந்திரன் அமைச்சர் பதவியை பெறபோகிறார் என்று? நான் அர்த்தப்படுத்தியது பதவியென்று முன்னைய ஆட்சியிலிருந்ததுபோல் ஜனாதிபதி சட்டத்தரணி, அது,இது , மானே தேனே, பொன்மானே என்று எதாச்சும்...

  நிராகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அமைச்சர் பதவியென்று நான் அர்த்தப்படுத்தியது டக்ளசை, அவரும் ஓடோடி போய் அநுரவ சந்திச்சார் இல்லையா அதனால.

நானும் பாக்கிறன் விளங்க நினைப்பவனின் அலசல்கள் இப்போலாம் கொஞ்சம் ஓவராதான் போய்க்கிட்டிருக்கு 😉

Edited by valavan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, தமிழ் சிறி said:

@goshan_che, @nedukkalapoovan, @valavan, @kandiah Thillaivinayagalingam, @satan, @Kapithan, @Kandiah57, @விசுகு, @நிழலி, @குமாரசாமி, @ரஞ்சித், @கிருபன்    ஆகியோர் இந்தக் காணொளியை நேரம் ஒதுக்கி பார்க்க வேண்டும்.

அழைப்பிற்கு நன்றி  சிறித்தம்பி!
என்னத்த சொல்ல?
தமிழர்களின் அழிவிற்கும் பிரச்சனைகளுக்கும் தமிழர்களே காரணம் என சிங்களம் சொல்லத் தலைப்படுகின்றது.சொல்லுகின்றது.
அதில் உண்மையும் இருக்குத்தானே.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, island said:

காணொளியை முழுமையாகப் பார்த்தேன்.  இவர் எம்மைப்போல் ஒரு சாமான்யன் அல்ல.  நீண்ட காலம் இவ்வாறான அரசியல் ஆய்வுகளை செய்பவர். புலம் பெயர்  அரசியல்  அமைப்புகளுடன் நீண்டகாலமாக தொடர்சசியான தொடர்புகளை பேணுபவர்.  ஆகவே இவர் கூறியவற்றை நடைமுறைப்படுத்துவதானால் இவரும்,  இவரது புலம் பெயர் அமைப்புக்களும் கூட்டாக  தாயகம் சென்று, இதை  மக்களுக்கு புரியவைத்து  மக்கள் பிரதிநிதியாக பாராளுமன்றம் சென்று இவர் இப்போது கூறியவற்றை நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். அதற்கான குறைந்த பட்ச முயற்சிகளையாவது எடுத்திருக்க வேண்டும். புலம் பெயர் தமிழ் அரசியல் அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருப்பவராதலால்  இதற்குத்தேவையான நிதிவளத்தையும் கொண்டவராகவே இருப்பார். 

ஒரு மாதத்திற்கு  முன்பு இவருக்கு இந்த ஞானோதயம் வந்திருந்தாலும் தாயகம் சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்து மக்களைச்சந்தித்து இக் காணொளியில் கூறிய விடயங்களை மக்களுக்கு கூறி இவர் குறை கூறும் அரசியல்வாதிகளை தோற்கடித்து பாராளுமன்றம் சென்று இதை நடைமுறைப்படுத்த முயற்சிதிருக்கலாம்.  

 அதை விடுத்து எங்கோ ஒரு மூலையில் இருந்து கற்பனை குதிரையில் ஏறி போகமுடியாத ஊருக்கு வழி சொல்லி  பொழுது போக்குவதில் அர்ததம் இல்லை. தாயக அரசியல்வாதிகள் மோசமானவர்கள் தான். ஆனால்,  அவர்களை குறை சொல்ல இந்த கற்பனாவாதிக்கு எந்த அருகதையும் இல்லை.  

சுமந்திரனாவது இப்போதைய அரசியலமைப்பை விட  மேம்பட்ட ஒரு அரசியலமைப்பை உருவாக்க பல முயற்சிகளை செய்துள்ளார். இவர் எதையும் செய்யாது வெறும்  இவ்வாறான அலசல்கள் மட்டும் தான். 

இப்போதைய ground reality என்ன என்பதைப்பற்றி எந்த அக்கறையுமற்று மாய உலகில் வாழ்பவர்களுக்கு வெறும் வாயை மெல்லும் இவர் சொல்வது இனிக்கலாம்.  

காணொளியில் உள்ள முக்கியமான விடயங்களை யாராவது சுருக்கமாக குறிப்பிட்டால் பலருக்கும் உதவியாக இருக்கும் (நானும் பார்க்கவில்லை).

இது ஒரு அரசியல் தீர்வு சம்பந்தமான விடயம் என புரிகிறது, நீங்கள் கூறும் கள யதார்த்தம் சிறுபான்மையினரை பொறுத்தவரை தற்போது தற்காலிகமாக மாறிவிட்டது என்பது உண்மை.

ஆனால் இனவாத பெரும்பான்மையில் எந்த மாற்றமும் நிகழவில்லை என்ற யதார்த்தினை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை.

இலங்கை அரசியல் அமைப்பு சட்டமாக இருந்தாலும் சரி இலங்கை சட்டவமைப்பாக இருந்தாலும் சரி இலங்கையினை ஒரு மோசமான நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது, புதிதாக சட்டவமைப்பிலோ அல்லது அரசியல் சட்டவமைப்பிலோ மாற்றம் ஏற்படுத்தாது ஒன்றிணைந்த இலங்கைக்குள் அனைத்து மக்களும் சம உரிமையுடன் வாழ முடியாது என்பது வரலாறாக உள்ளது, 

அதற்கு சான்றாக இலங்கையில் நிகழ்ந்தேறிய இனக்கலவரங்கள் மனித உரிமைகள் இருக்கின்றது, தற்போது மக்கள் விரும்புவது அமைதியான பாதுகாப்பான வாழ்வு அதனை ஒற்றை ஆட்சிமுறைமைக்குள்ளே அதிகார பரவலாக்கமின்றி அரசியல் அமைப்பு சட்டமாற்றம், சட்டவாக்க மாற்றத்தினூடாக இலங்கை ஒற்றை ஆட்சிக்குள்ளாகவே நிறைவேற்றினால் மக்கள் இந்த காணி,நிதி ,நீதி, காவல்துறை அதிகாரங்கள் என தனித்து கோரமாட்டார்கள்.

ஆனால் புதிய அரசால் கூட அதனை ஏன் செய்ய முடியவில்லை?

நான் நினைக்கிறேன் சட்டவைமைப்பு மற்றும் அரசியலைமப்பு மாற்றங்களினால் ஏற்படும் புதிய ஜனநாயக சூழ்நிலை இலங்கையில் நிலவிய மற்றும் நிலவுகின்ற இனவாத நடவடிக்கைகலை சட்ட ரீதியாக சவால்களை எதிர்கொள்ள அரசுகள் விரும்பாமை காரணமாகும்.

அதனால் பாதுகாப்புதுறை மட்டுமன்றி அரசியல் உயர் பீடங்கள் கூட பிரச்சினையினை எதிர்கொள்ளும் நிலை உருவாகும்.

இந்த புதிய அரசு இதுவரை ஆட்சி பீடமேறாத அரசு அதனால் இந்த சட்ட மாற்றம் ஏற்படுத்துவதால் கட்சி ரீதியாக பாதிப்புள்ளாக மாட்டார்கள், ஆனால் பாதுகாப்புதுறை மற்றும் பெரும்பான்மை இன ஆதரவினை இழக்கும் அரசியல் தற்கொலையினை செய்ய விரும்பவில்லை.

மக்கள் இந்த அரசிற்கு அறுதிப்பெரும்பான்மை கொடுக்க வேண்டும், அதன் பின்னர் மக்கள் ஒன்றை புரிந்து கொள்வார்கள் இலங்கை இன்னும் மாற்றத்திற்கு தயாராகவில்லை என்பதுதான்.

அடிப்படை பிரச்சினையே இனவாதத்தினை இலங்கையிலிருந்து நீக்க முடியாமைதான், இலங்கை மட்டுமன்றி இந்தியாவில் கூட இதே நிலைதான் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பில்லாமல் ஒரு தேசமாக வளர்ச்சி அடைய முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/11/2024 at 16:23, தமிழ் சிறி said:

@goshan_che, @nedukkalapoovan, @valavan, @kandiah Thillaivinayagalingam, @satan, @Kapithan, @Kandiah57, @விசுகு, @நிழலி, @குமாரசாமி, @ரஞ்சித், @கிருபன்    ஆகியோர் இந்தக் காணொளியை நேரம் ஒதுக்கி பார்க்க வேண்டும்.

அழைப்பிற்கு நன்றி சிறியர். இதைத்தானே நாங்கள் தொடர்ச்சியாக கூறி வருகிறோம். சிலர் நாங்கள் தேவையில்லாமல் குறைகூறுவதாக குற்றம் சாட்டுகின்றனர். அவரை குறை கூற எங்களுக்கு என்ன அவசரம்? அவரோடு வாய்க்கால் வரம்புச்சண்டையா எங்களுக்கு ?தேவையில்லாத கம்பு செருகி அவரை மறைக்கிறார்கள். அவர் யாராகவும் இருந்துவிட்டு போகட்டும், ஆனால் ஒரு இனம், அதற்காக இழக்க வேண்டியதெல்லாம் இழந்து ஏதுமற்று நிற்பவர்களின் உரிமையை தாரைவார்த்துக்கொடுக்க இவருக்கு என்ன அருகதை? ஆதாரத்தோடு எழுதினால், பந்தி பந்தியாக அலட்டல் செய்கிறோமென்கிறார்கள். இதிலிருந்தே இவர்களும் அப்படியானவர்கள் என்றே புரிகிறது. இவர்களை திருத்த முடியாது, மாறவும் தயாரில்லை. மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்! 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, satan said:

சாத்தான்.... இதில் குறை கூறும் பலர்,
புலிகளின் போராட்ட காலத்திலேயே... சிங்களத்துக்கும், ஓட்டுக்கு குழுக்களுக்கும் முட்டுக் கொடுத்துக் கொண்டு இருந்த ஆட்கள் என்பதால்.... 
இவர்களின் கருத்தை  மினைக்கெட்டு  வாசித்து உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். 
இவர்களை பொருட்படுத்த வேண்டிய அவசியமே இல்லை.

"மூக்கு இருக்கும் மட்டும்... சளியும் இருக்கும் என்பது போல்",
இவர்களை, சகித்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான். 
 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 5/11/2024 at 16:23, தமிழ் சிறி said:

@goshan_che, @nedukkalapoovan, @valavan, @kandiah Thillaivinayagalingam, @satan, @Kapithan, @Kandiah57, @விசுகு, @நிழலி, @குமாரசாமி, @ரஞ்சித், @கிருபன்    ஆகியோர் இந்தக் காணொளியை நேரம் ஒதுக்கி பார்க்க வேண்டும்.

அழைப்பிற்கு நன்றி சிறி, ஆனால் எதுவும் இங்கு எழுதத் தோன்றவில்லை, பார்க்கவும் பிடிக்கவில்லை. சிங்கள இனவாதிகளைத் தமிழர்களே  தூக்கிக்கொண்டாடும் காலத்தில் இருக்கிறோம். இதில் பேசுவதற்கென்று எதுவுமில்லை. நடப்பதைப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். 

  • கருத்துக்கள உறவுகள்
On 7/11/2024 at 09:07, ரஞ்சித் said:

சிங்கள இனவாதிகளைத் தமிழர்களே  தூக்கிக்கொண்டாடும் காலத்தில் இருக்கிறோம்.

இவ்வளவு நாளும் தமிழ் கட்சிகளிடம் ஏமாந்து விட்டார்களாம் தட்டி கேட்க ஆள் இல்லாமல் இருந்ததாம் இப்போது தட்டி கேட்க அனுரகுமார திசநாயக்க வந்துவிட்டாராம் 😒

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.