Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2086001973.JPG

தேங்காய் விலை உயர்வுக்கான காரணம் இதுதான்
 
அண்மைக்காலமாக இலங்கையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவி வருவதுடன் விலையும் உயர்வடைந்துள்ளமை குறித்து முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர  கருத்து வெளியிட்டுள்ளார்.

அதன்படிஇ வருடாந்தம் 200 மில்லியன் தேங்காய்களை குரங்குகள் அழித்தமையே தேங்காய் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் போது இந்த நிலைமையை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டமாகஇ இலங்கையின் குரங்குகளை சீன மிருகக்காட்சிசாலைகளுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஆனால்இ சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நீதிமன்றத்திற்குச் சென்று தடுத்து நிறுத்தி, மரத்தில் புடவை கட்டுதல் தாள்களை தொங்கவிடுதல், நிலத்தின் ஒரு பகுதியை மீண்டும் புல்வெளிக்கு விடுதல் போன்ற நடைமுறைக்கு மாறான தீர்வுகளை வழங்கியதாகவும் இந்த நிலையில் குரங்குகளை சீனாவுக்கு திருப்பி அனுப்ப இன்னும் வாய்ப்பு இருப்பதால் அந்த பிரேரணையை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை நாட்டில் கடந்த சில தினங்களாக தேங்காய் 200 முதல் 220 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 https://newuthayan.com/article/தேங்காய்_விலை_உயர்வுக்கான_காரணம்_இதுதான்  
 
  • கருத்துக்கள உறவுகள்

1. போலி டாக்டர் சபாநாயகர்

2. யூனிபோர்மை தச்சு கொடுக்கும் கல்வி அமைச்சர்

3. 12 வயதுக்கு கீழ் விளம்பரபடத்தில் நடிக்க தடை போடும் கலாச்சார அமைச்சர்

 இந்த வகையில் முன்னாள் அமைச்சர் பேச்சை கேட்டு குரங்கு ஏற்றுமதியில் இறங்கினாலும் ஆச்சரியமில்லை🤣

  • கருத்துக்கள உறவுகள்

குரங்கு ஏற்றுமதியை அரசு பரிசீலிக்கும்…

அமைச்சர் லால் காந்த.

https://www.dailymirror.lk/breaking-news/Govt-ready-to-resume-discussion-on-exporting-Toque-monkeys-Minister/108-297900

பிகு

அடுத்த முறை ஊருக்கு வலு அவதானமா போகவேணும். பிடிச்சு சைனாவுக்கு ஏத்தி போடுவாங்கள்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

உணவகங்களில் தேங்காய்ப் பாலைக் கொண்டு செய்யப்படும் உணவுகள் நிறுத்தம்!

தேங்காய் தட்டுப்பாட்டுக்கான காரணம் வெளியானது!

நாட்டின் அண்மைக்காலமாக நிலவிவரும் தேங்காய் தட்டுப்பாட்டிற்கு வருடத்தின் முதல் சில மாதங்களில் நிலவிய கடுமையான வெப்பமான வானிலையே பிரதான காரணம் என ருஹுனு பல்கலைக்கழகத்தின் பயிர் விஞ்ஞானப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அருண குமார தெரிவித்துள்ளார்.

அத்துடன்  நாட்டில் வருடாந்தம் பயிரிடப்படும் தென்னை மரக்கன்றுகளின் எண்ணிக்கை சுமார் 70 இலட்சம் வரை குறைந்துள்ளமையும்  இதற்கான காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  ‘குறுகிய காலத்திற்குள் தேங்காய் தட்டுப்பாடு ஏற்படுவதென்றால் குரங்களுகளின் எண்ணிக்கையில் உடனடி அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அப்படியொரு உடனடி அதிகரிப்பு இல்லை என்பது தெளிவாகிறது. மேலும் மார்ச் முதல் ஜூன் வரை, நாட்டில் அதிக வெப்பநிலை உயர்வு மற்றும் தேங்காய் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

தென்னை மரத்திற்கு உகந்த வெப்பநிலை 27-28 சென்டிகிரேட் வெப்பநிலையாகும். ஆனால் 33 சென்டிகிரேடுக்கு மேல் செல்லும் போது, தென்னை மரங்களின் மகரந்தச் சேர்க்கை குறைந்து, காய்க்கும் தன்மை குறைகிறது” இவ்வாறு பேராசிரியர் அருண குமார தெரிவித்துள்ளார்

இதேவேளை உலகிலேயே அதிக தேங்காய் பாவனையைக் கொண்ட நாடாக இலங்கை திகழ்வதாகவும்,  ஒருவர் வருடத்திற்கு 114 தேங்காய்களை உட்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1412082

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை கூறப்பட்ட காரணங்கள்

1. குரங்கு

2. வெப்பநிலை 

ஆனால் உண்மை இன்னமும் வெளிவரவில்லையே??? $$$

உள்ளூர்ச் சந்தையை புறக்கணித்து ஏற்றுமதியை ஊக்குவித்ததன் பலன். 

பாரிய தென்னந்தோட்டங்கள் ஏற்றுமதி நிறுவனங்களுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்திற்கு இணங்க தமது உற்பத்திகளை ஏற்றுமதி நோக்கி திருப்பியதால் டாலர் இருக்கு தின்ன தேங்காய் இல்லையே…..!

யாழ் உறவுகளுக்கு ஞாபகம் இருக்கும் “தேங்காய் தண்ணீர் ஏற்றுமதி

  • கருத்துக்கள உறவுகள்

குரங்குகளை பிடித்து சைனாவுக்கு அனுப்புற கையோட என்கடைவெத்து வேட்டு தமிழ் அரசியல்வாதி கள் எனும் குரங்கு கூட்டத்தையும் முக்கியமாய் சுமத்திரன் என்ற குரங்கையும் அனுப்பினால் புண்ணியமாய் போகும் .😄

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பெருமாள் said:

குரங்குகளை பிடித்து சைனாவுக்கு அனுப்புற கையோட என்கடைவெத்து வேட்டு தமிழ் அரசியல்வாதி கள் எனும் குரங்கு கூட்டத்தையும் முக்கியமாய் சுமத்திரன் என்ற குரங்கையும் அனுப்பினால் புண்ணியமாய் போகும் .😄

குரங்கும்...சுமந்திரனும் ஒன்றா கோபாலு ?

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people and text

குரங்குகளுக்கு தனித்தீவு. புதிய வேலைத் திட்டம் ஆரம்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 13/12/2024 at 15:39, MEERA said:

இதுவரை கூறப்பட்ட காரணங்கள்

1. குரங்கு

2. வெப்பநிலை 

ஆனால் உண்மை இன்னமும் வெளிவரவில்லையே??? $$$

உள்ளூர்ச் சந்தையை புறக்கணித்து ஏற்றுமதியை ஊக்குவித்ததன் பலன். 

பாரிய தென்னந்தோட்டங்கள் ஏற்றுமதி நிறுவனங்களுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்திற்கு இணங்க தமது உற்பத்திகளை ஏற்றுமதி நோக்கி திருப்பியதால் டாலர் இருக்கு தின்ன தேங்காய் இல்லையே…..!

யாழ் உறவுகளுக்கு ஞாபகம் இருக்கும் “தேங்காய் தண்ணீர் ஏற்றுமதி

இதுதான் உண்மையும் குரங்கை விட மனிதனுக்கு குரங்குப்புத்தி அதிகம் அதிலும் அரசியல் வாதிகளுக்கு சொல்ல தேவையில்லை. பிரச்சினைகளுக்கு மேலே பெரிய கோடு போடுவது 
 நேற்று ஒரு காணொளி பார்த்தேன் குவைத்தில் அதிகமாக இறங்கியுள்ள தேங்காய்கள்  அத்தனை பொதிகளிலும் முத்திரை குத்தப்பட்டுள்ளது இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என அது மட்டுமல்லாமல் நோய் தாக்கியது நோயை கட்டுப்படுத்த முடியாத அரசாங்கமுமே பொறுப்பு.

தற்போது குரங்குகளுக்கு தனி தீவாம்  அனுப்ப வேண்டியது குரங்குகளை அல்ல 

  • கருத்துக்கள உறவுகள்
On 25/12/2024 at 17:48, தனிக்காட்டு ராஜா said:

தனி நீங்கள் பார்த்த காணொளி இதுவா?

https://www.facebook.com/share/r/1DsbScGRTM/?mibextid=wwXIfr

  • கருத்துக்கள உறவுகள்
On 26/12/2024 at 04:48, தனிக்காட்டு ராஜா said:

அனுப்ப வேண்டியது குரங்குகளை அல்ல 

On 12/12/2024 at 09:18, goshan_che said:

அடுத்த முறை ஊருக்கு வலு அவதானமா போகவேணும். பிடிச்சு சைனாவுக்கு ஏத்தி போடுவாங்கள்🤣

தப்பித்து வெளிநாடுகளுக்கு ஓடிய குரங்குகளும், சமயத்தில் திரும்பி  வரும். கவனமாக தப்ப  விடாமல், விமான நிலையத்தில் வைத்தே பிடித்து அனுப்பிவிடுங்கள் சீனாவுக்கு.  இந்தக்குரங்கு இங்கிலிஷ் கதைக்கும் என்றும் சொல்லுங்கள் மறக்காமல்.       

  • கருத்துக்கள உறவுகள்
On 11/12/2024 at 22:54, யாயினி said:

கடந்த அரசாங்கத்தின் போது இந்த நிலைமையை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டமாக  இலங்கையின் குரங்குகளை சீன மிருகக்காட்சிசாலைகளுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டத்தின் தார்ப்பரியத்தை இந்த சுற்றுசூழல் ஆர்வலர்கள் நன்கு புரிந்துகொண்டுதான் செயற்பட்டிருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.

இலங்கையிலிருந்து அனுப்பப்படும் குரங்குகள் சீனாவில்  மிருகக் காட்சிசாலைக்கு போகாது சீனர்களின் சமயலறைக்குதான் போகும் என்பதை மனதில் வைத்து தமது எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறார்கள். ஆகவே இங்கு ஜீவகாருண்யத்திற்குத்தான் முதலிடம்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, vanangaamudi said:

நீங்கள் பிலாஸ்டிக்கில் செய்த மீன், இறைச்சி எங்கே வாங்கிகொள்வீர்கள்?

15 hours ago, satan said:

தப்பித்து வெளிநாடுகளுக்கு ஓடிய குரங்குகளும், சமயத்தில் திரும்பி  வரும். கவனமாக தப்ப  விடாமல், விமான நிலையத்தில் வைத்தே பிடித்து அனுப்பிவிடுங்கள் சீனாவுக்கு.  இந்தக்குரங்கு இங்கிலிஷ் கதைக்கும் என்றும் சொல்லுங்கள் மறக்காமல்

முன்பு தமிழ் நண்டு …இப்போ தமிழ் குரங்கு….

இப்படித்தான் இன்னொரு குரங்கு போய்  இறங்க….இங்கே இருந்து வேறொரு குரங்கு போட்டு கொடுத்து நாலாம் மாடிக்கு ஏர்போர்ர்ட்டில் இருந்து அள்ளிப்போனார்கள்.

எஜமானர்கள் மாறும் போது, கூ, கா கொடுக்கும் கூட்டமும் மாறுவது வழமைதானே🤣.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/12/2024 at 09:18, goshan_che said:

அடுத்த முறை ஊருக்கு வலு அவதானமா போகவேணும். பிடிச்சு சைனாவுக்கு ஏத்தி போடுவாங்கள்🤣

ஐயா! நீங்கள் கூறியதற்குத்தான் பதிலளித்தேனே தவிர அதைவிட தவறாக நானேதும் கூறவில்லையே.

16 hours ago, vanangaamudi said:

இங்கு ஜீவகாருண்யத்திற்குத்தான் முதலிடம்.

ம்..... செய்வது மனித படுகொலை. இதில ஜீவ காருண்யம் பேச்சு, செய்த தவறுகளை மறைக்க. போகப்போக உலகநாடுகளுக்கு தர்ம சிந்தனை போதிக்குது இலங்கை. ஐ . நாவிலே தனது குற்றத்தை மறைத்து  பேய்க்காட்டிக்கொண்டு.    

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Gf-JPy-CXs-AAbbnm.jpg

தேங்காய் விலை உயர்விலும்  மருதனாமடம் ஆஞ்சநேயர் கோவில் தேர்த்திருவிழாவில் சிதறு தேங்காய்  அடித்து பக்தர்கள் தம்  நேர்த்தியை நிறைவேற்றினர். 😎

  • கருத்துக்கள உறவுகள்

தேங்காய் வாங்க காசில்லாமல் இருப்பவர்களுக்கு கொடுப்பதே கடவுளுக்கு செலுத்தும் நேர்த்தி. பாவப்பட்ட மக்கள் இதை எடுப்பதற்கு அனுமதித்திருப்பார்களா, தேங்காய் அடித்து நேர்த்தி செலுத்துபவர்கள்? ஒருவர் பிள்ளையாருக்கு வடை மாலை போடுவிட்டு, கண்மூடி தேவாரம் பாடினாராம், தேவாரம் முடிய கண் திறந்து பார்த்தபோது வடை மாலையை காணவில்லையாம். பின் என்ன நடந்திருக்கும்? வாசகர்களுக்கே விடுகிறேன் விடையை கண்டுபிடியுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று உரிக்காமல் பொச்சோட 280 தேங்காய் 105 ரூபாய்ப்படி முப்பதாயிர சொச்சத்துக்கு குடுத்தன்.. உரிக்காத தேங்காயே இந்த விலைபோகுது.. அதுவும் வீட்ட வந்து எடுத்துக்கொண்டு போகிறார்கள்.. அவ்வளவு தேங்காய்க்கு டிமாண்ட் இருக்கு இப்ப..

நிற்க..

இவ்வளவும் தானாய் பழுத்து விழுந்த தேங்காய்தான்.. இப்ப தேங்காய் புடுங்க உரிக்க எல்லாம் வேலைக்கு ஆள்கள் இல்லை.. இப்ப மரம் ஏறும் தொழிலாளர்கள் அருகி வருகின்றனர்.. அவர்கள் தலைமுறை எல்லாம் படித்தும், வெளிநாடு போயும், வேறு மெக்கானிக் மேசன் நகைவேலை போன்ற தொழில்களில் ஈடுபடுகின்றனர்.. 

இந்த தொழில்களை வைத்துதானே சாதிகளை பிரித்தார்கள்.. இப்பொழுது இந்த பரம்பரை தொழிலை நாங்கள் செய்யமாட்டம் என்பதும் சாதி ஒழிப்பில் முக்கிமான பங்காற்றுகிறது.. அப்புறம் பொருளாதரம்.. பொருளாதாரம் மேம்படும் போது நீ என்னடா மயிர்சாதி என்ன சொல்லுறது உன்னட்ட நான் என்ன மயித்துக்கு வேலைக்கு வரப்போறன் என்ற நிலை வரும்போது சாதி தேவையில்லாத ஆணியாகப்போய்விடும்.. இப்ப வெளிநாட்டுக்கு போய் எல்லா சாதியினரும் நல்ல வசதியாக இருக்கிறார்கள்.. மேல்மாடி வீடுகள் என்ன கார் என்ன..

எங்கட ஊரிலையே தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கும் பகுதிகள் ஓலைக்குடிசைகளுடன் புறிம்பாக தெரியும்.. இண்டைக்கு ஊரே வெளிநாடு போய் எல்லாரும் வசதியான்வர்கள்.. யாரும் யாரையும் கணக்கில் எடுப்பதில்லை.. நீ ஜயரா இரு இல்லா ஆட்டுக்குடீயா இரு .. எனக்கென்ன.. எண்ட மனநிலை..

மிகச்சிறந்த மாற்றம்.. இது தொடரவேண்டும்.. இப்படி பரம்பரையாக மீன்பிடிப்பவர்கள்,  தச்சுவேலை செய்பவர்கள் செய்பவர்கள், நகை வேலை செய்பவர்கள் எல்லாம் தம் தம் குலத்தொழிலை விட்டு மாறி வேறு வேலைகள் படிப்பு என்று பொருளாதாரத்தில் மேம்படவேண்டும்.. இது சாதி அமைப்பின் தலையில் ஓங்கி அடிக்கும் சம்மட்டி அடிகளில் பலமான ஒரு அடியாக இருக்கும்..

மீன் தேவை எண்டால் மீனவர்கள் அல்லாத வெள்ளாளரும் மற்றைய சமூகத்தவரும் மீன்பிடிக்க போகனும்.. தேங்காய் வேணும் என்றால் கோயிலுக்கு புக்கை பொங்கவேணும் எண்டால் ஜயர் ஏறிபுடுங்கட்டும்..

வெளிநாடுகளில் தொழில்கள் சாதிமுறை இல்லாமல் லாபம் பார்த்து விரும்பியவர்கள் எல்லோரும் செய்கிறார்கள்.. முடிதிருத்த யாரும் படிக்கலாம்.. 

அதுபோல ஊரில் இன்னும் இன்னும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிள்ளைகள் படிப்பு, வெளிநாடு என்று போய் பொருளாதரத்தில் மேம்படட்டும்.. எங்கள் தலைமுறையில் இல்லை எண்டாலும் இன்னும் ஒரு மூன்று நாலு தலைமுறையில் கிழடுகள் ஆரும் வாங்கில இருந்து கொண்டு ரைம்பாசுக்கு பழையகதை பேசுற விடயமாகட்டும் சாதி.. புதுத்தலைமுறை உதுக்கு நேரமில்லாமல் இருக்கட்டும்..

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இப்ப வெளிநாட்டுக்கு போய் எல்லா சாதியினரும் நல்ல வசதியாக இருக்கிறார்கள்.. மேல்மாடி வீடுகள் என்ன கார் என்ன..

எங்கட ஊரிலையே தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கும் பகுதிகள் ஓலைக்குடிசைகளுடன் புறிம்பாக தெரியும்.. இண்டைக்கு ஊரே வெளிநாடு போய் எல்லாரும் வசதியான்வர்கள்.. யாரும் யாரையும் கணக்கில் எடுப்பதில்லை..

உண்மை. மேற்குலக நாடுகள் அவர்களிடம் அங்கே ஏற்படுத்திய மாற்றம் அது.

ஆனால் .. தமிழ்நாட்டில் சாதி கட்சி வைத்திருப்பது ஒரு பெருமையாக அதன் தலைவரை இராமதாஸ் Sir என்று பெருமையாக இப்ப வெளிநாட்டு எங்களது ஆட்களால் ஒரு பகுதியினரால் பிரசாரபடுத்தபடுகின்றது.இலங்கையையில் என்ன பார்வையோ🙄

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

நேற்று உரிக்காமல் பொச்சோட 280 தேங்காய் 105 ரூபாய்ப்படி முப்பதாயிர சொச்சத்துக்கு குடுத்தன்.. உரிக்காத தேங்காயே இந்த விலைபோகுது.. அதுவும் வீட்ட வந்து எடுத்துக்கொண்டு போகிறார்கள்.. அவ்வளவு தேங்காய்க்கு டிமாண்ட் இருக்கு இப்ப..

நிற்க..

இவ்வளவும் தானாய் பழுத்து விழுந்த தேங்காய்தான்.. இப்ப தேங்காய் புடுங்க உரிக்க எல்லாம் வேலைக்கு ஆள்கள் இல்லை.. இப்ப மரம் ஏறும் தொழிலாளர்கள் அருகி வருகின்றனர்.. அவர்கள் தலைமுறை எல்லாம் படித்தும், வெளிநாடு போயும், வேறு மெக்கானிக் மேசன் நகைவேலை போன்ற தொழில்களில் ஈடுபடுகின்றனர்.. 

இந்த தொழில்களை வைத்துதானே சாதிகளை பிரித்தார்கள்.. இப்பொழுது இந்த பரம்பரை தொழிலை நாங்கள் செய்யமாட்டம் என்பதும் சாதி ஒழிப்பில் முக்கிமான பங்காற்றுகிறது.. அப்புறம் பொருளாதரம்.. பொருளாதாரம் மேம்படும் போது நீ என்னடா மயிர்சாதி என்ன சொல்லுறது உன்னட்ட நான் என்ன மயித்துக்கு வேலைக்கு வரப்போறன் என்ற நிலை வரும்போது சாதி தேவையில்லாத ஆணியாகப்போய்விடும்.. இப்ப வெளிநாட்டுக்கு போய் எல்லா சாதியினரும் நல்ல வசதியாக இருக்கிறார்கள்.. மேல்மாடி வீடுகள் என்ன கார் என்ன..

எங்கட ஊரிலையே தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கும் பகுதிகள் ஓலைக்குடிசைகளுடன் புறிம்பாக தெரியும்.. இண்டைக்கு ஊரே வெளிநாடு போய் எல்லாரும் வசதியான்வர்கள்.. யாரும் யாரையும் கணக்கில் எடுப்பதில்லை.. நீ ஜயரா இரு இல்லா ஆட்டுக்குடீயா இரு .. எனக்கென்ன.. எண்ட மனநிலை..

மிகச்சிறந்த மாற்றம்.. இது தொடரவேண்டும்.. இப்படி பரம்பரையாக மீன்பிடிப்பவர்கள்,  தச்சுவேலை செய்பவர்கள் செய்பவர்கள், நகை வேலை செய்பவர்கள் எல்லாம் தம் தம் குலத்தொழிலை விட்டு மாறி வேறு வேலைகள் படிப்பு என்று பொருளாதாரத்தில் மேம்படவேண்டும்.. இது சாதி அமைப்பின் தலையில் ஓங்கி அடிக்கும் சம்மட்டி அடிகளில் பலமான ஒரு அடியாக இருக்கும்..

மீன் தேவை எண்டால் மீனவர்கள் அல்லாத வெள்ளாளரும் மற்றைய சமூகத்தவரும் மீன்பிடிக்க போகனும்.. தேங்காய் வேணும் என்றால் கோயிலுக்கு புக்கை பொங்கவேணும் எண்டால் ஜயர் ஏறிபுடுங்கட்டும்..

வெளிநாடுகளில் தொழில்கள் சாதிமுறை இல்லாமல் லாபம் பார்த்து விரும்பியவர்கள் எல்லோரும் செய்கிறார்கள்.. முடிதிருத்த யாரும் படிக்கலாம்.. 

அதுபோல ஊரில் இன்னும் இன்னும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிள்ளைகள் படிப்பு, வெளிநாடு என்று போய் பொருளாதரத்தில் மேம்படட்டும்.. எங்கள் தலைமுறையில் இல்லை எண்டாலும் இன்னும் ஒரு மூன்று நாலு தலைமுறையில் கிழடுகள் ஆரும் வாங்கில இருந்து கொண்டு ரைம்பாசுக்கு பழையகதை பேசுற விடயமாகட்டும் சாதி.. புதுத்தலைமுறை உதுக்கு நேரமில்லாமல் இருக்கட்டும்..

ப்ரோ….

கைய குடு ப்ரோ….இந்த கருத்தை எழுதின கைக்கு @Nathamuni மோதிரம் போடுவார் நான் ஒரு முத்தம் கொடுத்துகிறேன்.

இப்ப வெளி நாட்டில் பறை அவையவை தானே அடிக்கிறம்…

வெள்ளை அவையவை தானே கட்டுறம்

செலவு படையலை அவையவைதானே தூக்கி போய் முன் சந்தியில் வைக்கிறம்.

அதே நிலை ஏனைய தொழிகளுக்கும் ஊரில் வர வேண்டும். வந்து கொண்டுள்ளது. வந்து விடும்.

பிகு

ஆரும் யாழில் ஆசாரவாதிகள் போர்வையில் மறைந்திருக்கும் சாதியவாதிகள் பாரம்பரிய தொழில் அழிவதாக கவலைப்பட்டால் - அவர்கள் பிள்ளைகளை ஊருக்கு அனுப்பி இந்த தொழில்களை நடத்த சொல்லலாம்.

ஏறுபட்டி, தளைநார் எண்ட செலவு.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

பிகு

ஆரும் யாழில் ஆசாரவாதிகள் போர்வையில் மறைந்திருக்கும் சாதியவாதிகள் பாரம்பரிய தொழில் அழிவதாக கவலைப்பட்டால் - அவர்கள் பிள்ளைகளை ஊருக்கு அனுப்பி இந்த தொழில்களை நடத்த சொல்லலாம்.

ஏறுபட்டி, தளைநார் எண்ட செலவு.

தொழில்கள் அழிவதில்லை அழியவும் முடியாது.

ஆனால் அது ஒரு பரம்பரை அல்லது ஒரு சமூகம் சார்ந்த தொழிலாக இனி தொடரக்கூடாது. அம்புட்டுத்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

தொழில்கள் அழிவதில்லை அழியவும் முடியாது.

ஆனால் அது ஒரு பரம்பரை அல்லது ஒரு சமூகம் சார்ந்த தொழிலாக இனி தொடரக்கூடாது. அம்புட்டுத்தான். 

ஏன்….முன்பு கொழும்பில் சப்பாத்து பொலிஷ் போடும் தொழில் இருந்தது…

சாப்பாடு வீட்டில் கட்டி எடுத்து போய் வேலையிடத்தில் கொடுக்கும் தொழில் இருந்தது…

இலண்டனில் பஸ் கண்டக்டர் தொழில் இருந்தது, கரிசுரங்கத்தொழில் இருந்தது…

பின் இல்லாமல் போனது.

ஊரில் இப்போ மாட்டு வண்டி ஓட்டும் தொழில் இல்லை.

எல்லாமும் மாறும், அழியும்.

சிலது அழியாது….சிகை அலங்காரம் போன்றவை…ஆனால் அதை எல்லோரும் செய்யும் தொழில் ஆக்காவிடில் அதுவும் அழியும்.

இப்போ சவரம் நாமே செய்வது போல் ஆகும் அல்லது வெளிநாடு போல் அதை சகல சாதியினரும் கற்று தொழிலாக செய்யும் நிலை வரும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இங்கே எனது நண்பர் ஒருவர். இப்படித்தான் ஒரு சீப்பு ஒரு கத்தரிக்கோல் இருந்தால் காணும் அந்த மாதிரி உழைக்கலாம் என்று சலூன் போட்டார். நான் சொன்னேன் தெரியாத தொழில் பார்த்து என்று. இப்ப வாங்கிய வீட்டை வித்தும் கடன் முடிஞ்ச பாடில்லை என்று அழுகிறார். 

எல்லா தொழில்களும் பார்க்க சுலபமாகத் தான் இருக்கும். அது சார்ந்த  படிப்பு மற்றும் தேர்ச்சி அற்று....??

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இவ்வளவும் தானாய் பழுத்து விழுந்த தேங்காய்தான்.. இப்ப தேங்காய் புடுங்க உரிக்க எல்லாம் வேலைக்கு ஆள்கள் இல்லை.. இப்ப மரம் ஏறும் தொழிலாளர்கள் அருகி வருகின்றனர்.. அவர்கள் தலைமுறை எல்லாம் படித்தும், வெளிநாடு போயும், வேறு மெக்கானிக் மேசன் நகைவேலை போன்ற தொழில்களில் ஈடுபடுகின்றனர்.. 

பெரிய தென்னை தோட்டங்களில் மரத்தில் ஏறி தேங்காய் புடுங்குவதில்லை அதற்கென வேலையாள்களும் இருப்பதில்லை, விழுகின்ற தேங்காய்களையே விற்பதாக கேள்விப்பட்டுள்ளேன்.

யாழ்பாணிய சாதியம் என்பது (தற்போதுள்ள சாதிய கட்டமைப்பு) கிட்டதட்ட 200 வருட பழமை கொண்டதாக இருக்கலாம், அதனை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்த வாலறுந்த நரியினை மத, மொழி தொண்டராக பேணுவதன் உள்நோக்கமே இந்த  சாதியத்தினை பேணுவதற்குதான்.

சாதியம் அழிந்தால் இனம் முன்னேறும், நாடு முன்னேறும் ஆனால் அந்த சாதியம் இல்லாவிட்டால் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள், அதனால் சாதியம் அழியாமல் காப்பார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்த தொழில்களை வைத்துதானே சாதிகளை பிரித்தார்கள்.. இப்பொழுது இந்த பரம்பரை தொழிலை நாங்கள் செய்யமாட்டம் என்பதும் சாதி ஒழிப்பில் முக்கிமான பங்காற்றுகிறது.. அப்புறம் பொருளாதரம்.. பொருளாதாரம் மேம்படும் போது நீ என்னடா மயிர்சாதி என்ன சொல்லுறது உன்னட்ட நான் என்ன மயித்துக்கு வேலைக்கு வரப்போறன் என்ற நிலை வரும்போது சாதி தேவையில்லாத ஆணியாகப்போய்விடும்.. இப்ப வெளிநாட்டுக்கு போய் எல்லா சாதியினரும் நல்ல வசதியாக இருக்கிறார்கள்.. மேல்மாடி வீடுகள் என்ன கார் என்ன..

தம்பி நீங்கள் தொழில் செய்யிறியளோ இல்லையோ சாதி இருந்த படியே இருக்கும். புலம்பெயர்ந்த தமிழ்ச்சனத்திட்டையே சாதி பார்க்கிற குணம் போகவேயில்லை....இந்த லட்சணத்திலை....😂

2 hours ago, விசுகு said:

தொழில்கள் அழிவதில்லை அழியவும் முடியாது.

ஆனால் அது ஒரு பரம்பரை அல்லது ஒரு சமூகம் சார்ந்த தொழிலாக இனி தொடரக்கூடாது. அம்புட்டுத்தான். 

டாக்குத்தர்ர மோன் டாக்குத்தருக்கு படிக்கக்கூடாது எண்டுறியள்? 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.