Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தேய்பிறையில தலைமயிர்,நகம் வெட்டினால் திருப்பி வளராது எண்டு சொன்னதை இப்பவும் நம்பிக்கொண்டு.....🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, கிருபன் said:

எனக்கு அண்ணன் பென்சில் குதிரைப்பீயில செய்யிறது எண்டு சொன்னதை கனகாலம் நம்பி, பென்சிலின் கூரைத் தொடுவதில்லை.  மாறிக்கீறித் தொட்டாலும் கைகழுவவேண்டும் எண்டு அலாதிப்படுவன்!

உங்களின் அண்ணருக்கு... பென்சில் செய்வதன் மூலப் பொருளையும், 
அதன் செய்முறையையும் யார் சொல்லிக் கொடுத்திருப்பார்கள் என அறிய ஆவல்.  😂

எனக்குத் தெரிந்து.. யாழ்ப்பாணத்திலேயே அப்ப   ஆறு குதிரைகள்தான் நின்றது.
அந்த ஆறு குதிரையும் போடும் சாணியை வைத்து, 
ஒரு பள்ளிக்கூடத்துக்கு கூட பென்சில் தயாரிக்க போதாது. 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சின்ன வயதில் உண்மை என நம்பிய பொய்களில் ஒன்றை உண்மையாக்கி அதில் வெற்றியும் பெறுவதற்கு முயன்ற சம்பவம் ஒன்று சிறித்தம்பியின் வாழ்வில் நடைபெற்றுள்ளது. அதனை அவர் இங்கு உறவுகளுக்குச் சொல்லித்தான் ஆகவேண்டும். தவறினால் நான் சொல்கிறவரை காத்திருக்கத் தயவுடன் வேண்டுகிறேன்.😌

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றும் நம்பாமல் ஆனால் கடைப்பிடிக்கும் சனி பயம்கள்

1. நல்லெண்ணையை கையில் வாங்கினால் அவர்களின் சனியன் எமக்கு தொத்தி விடும் 🤣

2. காலை கழுவும் போது குதி மேற்பகுதியை கழுவாவிட்டால், நளன் போல எம்மையும் சனியன் பிடிக்கும்

3. ஏழரை, அஷ்டமாத்து காலங்களில் சனிகிழமையில் மச்சம் சாப்பிட்டால் சனி கேமை கேப்பார்

4. பிரட்டாசி மாசம் சனி விரதம் பிடிச்சு எள்ளெண்ணை ஏரிக்காட்டில் சனி கேமை கேப்பார்

5. விரத சோற்றை சனிக்கு படைத்து அதை காகம் தின்ன முதல் நாம் தின்றால் சனி கேமை கேப்பார்

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Aalif Ali !!: June 2018

அணிலின் முதுகில் முன்பு கோடுகள் இருக்கவில்லை.
ராமர் பாலம் கட்டும் போது... அணிலும் உதவி செய்ததை பார்த்து,
ராமர் அந்த அணிலை அன்புடன் முதுகில்  தடவிக்  கொடுக்கும் போது.
ராமரின்  மூன்று விரல்கள் அந்த அணிலின் முதுகில் பதிந்து விட்டது.  

இப்போ நீங்கள் பார்க்கும் அணில்கள் எல்லாம், 
ராமர் தடவிய அணிலின் வாரிசுகளே. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, தமிழ் சிறி said:

அணிலின் முதுகில் முன்பு கோடுகள் இருக்கவில்லை.
ராமர் பாலம் கட்டும் போது... அணிலும் உதவி செய்ததை பார்த்து,
ராமர் அந்த அணிலை அன்புடன் முதுகில்  தடவிக்  கொடுக்கும் போது.
ராமரின்  மூன்று விரல்கள் அந்த அணிலின் முதுகில் பதிந்து விட்டது.  

ஆண்டுநிறைவில் ராமபக்தர்கள் கூடிக் கும்மியடிக்கும் பலன் உள்ளதுபோல் தெரிகிறது.

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி   

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

 வயது வந்தவர்களுக்கு மட்டும் 

1- கண்ணும் கண்ணும் பார்த்தால் கற்பம் தரிக்கும் 

2- உடுப்பு மற்றும் மலசல கூடத்தின் ஊடாக பிள்ளை உருவாகும்

3- பெண்களுக்கு மாதம் 31 நாளும் பிள்ளை தரிக்கும் 

4- உடலுறவு என்பது நாய்க்கொழுவலில் தான் முடியும்

5- ஒரு பெண்ணை தொட்டால் கட்டிக்க வேண்டும். 

(இவற்றை நம்பி தொலைச்சவை அதிகம்)

இனி சிறு குழந்தைகளுக்கானது தொடரும்....🤪

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுய இன்பம் கண்டால் கண்கள் உள்ளே போய், கன்னங்கள் ஒட்டிபோய் மெலிந்து,உள்ளங்கயில் மயிர் வளர்ந்துவிடும் என நமபினேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, goshan_che said:

இன்றும் நம்பாமல் ஆனால் கடைப்பிடிக்கும் சனி பயம்கள்

1. நல்லெண்ணையை கையில் வாங்கினால் அவர்களின் சனியன் எமக்கு தொத்தி விடும் 🤣

2. காலை கழுவும் போது குதி மேற்பகுதியை கழுவாவிட்டால், நளன் போல எம்மையும் சனியன் பிடிக்கும்

3. ஏழரை, அஷ்டமாத்து காலங்களில் சனிகிழமையில் மச்சம் சாப்பிட்டால் சனி கேமை கேப்பார்

4. பிரட்டாசி மாசம் சனி விரதம் பிடிச்சு எள்ளெண்ணை ஏரிக்காட்டில் சனி கேமை கேப்பார்

5. விரத சோற்றை சனிக்கு படைத்து அதை காகம் தின்ன முதல் நாம் தின்றால் சனி கேமை கேப்பார்

__  நான் நம்பி கடைபிடிக்கும் பழக்கம் ....... இன்றும் நான் கழிவறைக்கு சென்றால் (1 என்றாலும், 2 என்றாலும் )  கடமை முடிந்தபின் குதிகால்கள் கழுவும் பழக்கம் உண்டு . ....... இங்கு பயணங்களின் நடுவில் வீதித் தரிப்பிடங்களில் , நண்பர்கள் வீடுகளிலும் கூட அது சாத்தியமில்லை . ...... ஆனாலும் நான் கையில் சிறிது நீர் எடுத்து சுற்றுமுற்றும் பார்த்து பின் முன்  கால்களுக்கும் காய் உதறுவதுபோல் தெளித்துவிடுவேன் .......இல்லாவிட்டால் அடுத்து கால்கழுவும் வரை பத்தியப்படாமல் இருக்கும் . .....!

__   நான் இப்பவும் சனிக்கிழமைகளில் தவறாமல் நல்லெண்ணெய் ( விசேஷமாய் கருவேப்பிலை ,  வெந்தயம், சி . சீரகம், கருஞ் சீரகம் எல்லாம் போட்டு காய்ச்சியது )  தேய்த்து அரை மணித்தியாலம் ஊறிப் பின் முழுகுவது பின் மூன்று உள்ளி தீயில் சுட்டு சாப்பிடுவது வழக்கம் . ....... சமயங்களில் சனி தவறினால் புதன்....... இன்று காலையும் முழுகினானான் ........ இரு வாரங்களுக்கு முன் தமிழ் கடையில் மூன்று நல்லெண்ணெய் போத்தல் குறைந்த விலையில் போட்டிருந்தார்கள் . ....... அதை  வெளியே கொண்டு வரும் போது படியில் தட்டுப்பட்டு ஒண்டு மேல் மூடியுடன் உடைந்து விட்டது .......இனி இது சமையலுக்கு கூடாது  அதை பூவலில் (குப்பையில் )  போட்டுட்டு வாங்கோ என்று மனிசி சொல்லுறாள் ....... நான்விடேல்ல ஒரு வெற்றுத் தண்ணிபோத்தல் எடுத்து அதற்குள் அதை விட்டுக் கொண்டு வந்து வடி தட்டால் வடித்து முழுகிறதுக்கு எண்ணெய் தயாரித்து வைத்திருக்கிறன் ........ இனி இது இரண்டு வருடத்துக்கு போதும் . ........!  💪

  • Like 1
Posted
1 hour ago, suvy said:

__   நான் இப்பவும் சனிக்கிழமைகளில் தவறாமல் நல்லெண்ணெய் ( விசேஷமாய் கருவேப்பிலை ,  வெந்தயம், சி . சீரகம், கருஞ் சீரகம் எல்லாம் போட்டு காய்ச்சியது )  தேய்த்து அரை மணித்தியாலம் ஊறிப் பின் முழுகுவது பின் மூன்று உள்ளி தீயில் சுட்டு சாப்பிடுவது வழக்கம் . ....... சமயங்களில் சனி தவறினால் புதன்....... இன்று காலையும் முழுகினானான் ....... . ........!  💪

உங்கள் தலையில் உள்ள நீண்ட, கடும் கறுப்பு நிற முடியின் ரகசியம் இது தானா அண்ணா?😄

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

Aalif Ali !!: June 2018

அணிலின் முதுகில் முன்பு கோடுகள் இருக்கவில்லை.
ராமர் பாலம் கட்டும் போது... அணிலும் உதவி செய்ததை பார்த்து,
ராமர் அந்த அணிலை அன்புடன் முதுகில்  தடவிக்  கொடுக்கும் போது.
ராமரின்  மூன்று விரல்கள் அந்த அணிலின் முதுகில் பதிந்து விட்டது.  

இப்போ நீங்கள் பார்க்கும் அணில்கள் எல்லாம், 
ராமர் தடவிய அணிலின் வாரிசுகளே. 🤣

சீதையின் முதுகில் கோடுகள் இல்லையா?

அல்லது சீதையை ஶ்ரீராமன் தொடவே இல்லையா?

-பெரியார் திரைப்படப்பாடல்-

1 hour ago, colomban said:

சுய இன்பம் கண்டால் கண்கள் உள்ளே போய், கன்னங்கள் ஒட்டிபோய் மெலிந்து,உள்ளங்கயில் மயிர் வளர்ந்துவிடும் என நமபினேன்.

நெஞ்சு கூடு கட்டும்.

தொய்வு வரும்.

கண்பார்வை மங்கும்.

இதெல்லாம் கூட ஓக்கே…

கைரேகை அழிந்து விடும் எண்டு ஒருத்தன் மிரட்டிட்டான் பாஸ்….🤣

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, suvy said:

__  நான் நம்பி கடைபிடிக்கும் பழக்கம் ....... இன்றும் நான் கழிவறைக்கு சென்றால் (1 என்றாலும், 2 என்றாலும் )  கடமை முடிந்தபின் குதிகால்கள் கழுவும் பழக்கம் உண்டு . ....... இங்கு பயணங்களின் நடுவில் வீதித் தரிப்பிடங்களில் , நண்பர்கள் வீடுகளிலும் கூட அது சாத்தியமில்லை . ...... ஆனாலும் நான் கையில் சிறிது நீர் எடுத்து சுற்றுமுற்றும் பார்த்து பின் முன்  கால்களுக்கும் காய் உதறுவதுபோல் தெளித்துவிடுவேன் .......இல்லாவிட்டால் அடுத்து கால்கழுவும் வரை பத்தியப்படாமல் இருக்கும் . .....!

__   நான் இப்பவும் சனிக்கிழமைகளில் தவறாமல் நல்லெண்ணெய் ( விசேஷமாய் கருவேப்பிலை ,  வெந்தயம், சி . சீரகம், கருஞ் சீரகம் எல்லாம் போட்டு காய்ச்சியது )  தேய்த்து அரை மணித்தியாலம் ஊறிப் பின் முழுகுவது பின் மூன்று உள்ளி தீயில் சுட்டு சாப்பிடுவது வழக்கம் . ....... சமயங்களில் சனி தவறினால் புதன்....... இன்று காலையும் முழுகினானான் ........ இரு வாரங்களுக்கு முன் தமிழ் கடையில் மூன்று நல்லெண்ணெய் போத்தல் குறைந்த விலையில் போட்டிருந்தார்கள் . ....... அதை  வெளியே கொண்டு வரும் போது படியில் தட்டுப்பட்டு ஒண்டு மேல் மூடியுடன் உடைந்து விட்டது .......இனி இது சமையலுக்கு கூடாது  அதை பூவலில் (குப்பையில் )  போட்டுட்டு வாங்கோ என்று மனிசி சொல்லுறாள் ....... நான்விடேல்ல ஒரு வெற்றுத் தண்ணிபோத்தல் எடுத்து அதற்குள் அதை விட்டுக் கொண்டு வந்து வடி தட்டால் வடித்து முழுகிறதுக்கு எண்ணெய் தயாரித்து வைத்திருக்கிறன் ........ இனி இது இரண்டு வருடத்துக்கு போதும் . ........!  💪

சூப்பர் அண்ணா.

நான் இப்போதும் தலைக்கு வைப்பது நல்லெண்ணைதான்.

தொண்டை கரகரப்புக்கு கொஞ்சமாய் எடுத்து தடவினால் பறந்து விடும்.

முன்பு ஊரில் இருக்கும் போது சனிக்கிழமை தோறும் அரையில் ஒரு துண்டை கட்டியபடி நல்லெண்ணையில் மலையாள பட போஸ்டர் மாதிரி நானும் அப்பாவும் மின்னுவோம்🤣.

கொழும்பு, வெளிநாடு வந்தாலும் முழுகும் போது நேரம் இருப்பின் ஒரு அரைமணி நேரம் எண்ணை வைத்து ஊறவிட்டே முழுகுவேன்.

ஒருமுறை இப்படித்தான் மகனுக்கு காது வலி - கொஞ்சம் நல்லெண்ணையை விட்டு சில நிமிடத்தில் கவிழ்த்தால் என்ன என நான் ஐடியா சொன்னேன்.

குழந்தையாக வெளிநாடு வந்து விட்ட மனைவி என்னை what a country brut என்பதாக லுக்கு விட்டு விட்டு, ஆஸ்பத்திரிக்கு போவோம் என்றார்.

அங்கே ஒரு வயதான ஆங்கில வைத்தியர் சோதித்து விட்டு, ஒரு சின்ன இன்பெக்சன் அதனால் வந்த வலிதான் மருத்து ஏதும் தேவையில்லை, வலியை குறைக்க உங்கள் வீடுகளில் பாவிக்கும் seed oil எதையாவது விடலாம் என்றால்…

மனைவியின் முகத்தில் வழிந்தது ஒரு போத்தல் எண்ணை அல்ல, அசடு🤣

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1.பிள்ளை பிடிகாரன் வாரான் என்று பள்ளிக்கூட பின் வேலியை கடந்து போகையில் முட் கம்பி வேலி கீறினது. (வந்தது ஊசி போடுறவங்கள் )

2. சுகாதார படம் காட்ட வருவாங்கள் என்று காத்திருந்து ஏமாந்தது 

3. சிவாஜி மற்றும் பிரபு நடித்த முதல் படம் "சங்கிலி" வீடியோ செட் கொண்டு வந்தவன் கார் பிழைபட்டு வராமல் நின்றது 

இவற்றில் ஏமாந்ததில் ஒரு ஆனந்தமும் இருந்தது. (நீங்களே யோசியுங்கள் )

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, விளங்க நினைப்பவன் said:

சிந்திக்க வைத்திருக்கின்றீர்கள் 👍
துப்பாக்கி சத்தம் கேட்டதும் தலை தெறிக்க வெளிநாடு ஓடி தப்பியவர்கள் இவர்கள்.
கருணாநிதி இலங்கை அரசை வெருட்ட கொழும்புக்கு விமானத்தில் சென்ற காலம் 🤔
கொழும்பு றேயல் கல்லுரி விளையாட்டு மைதானத்திலை விளையாடிக்கொண்டிருந்த கால கட்டமாக இருக்க வேண்டும்.

இலங்கைக்கான இந்திய தூதுவர்கள் அடிக்கடி இவ்வாறு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதனை தவறாக கருணாநிதி என குறிப்பிட்டிருக்கலாம் என நினைத்தேன்.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.