Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேய்பிறையில தலைமயிர்,நகம் வெட்டினால் திருப்பி வளராது எண்டு சொன்னதை இப்பவும் நம்பிக்கொண்டு.....🤣

  • Replies 113
  • Views 5.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Kavi arunasalam
    Kavi arunasalam

    பதுனோராவதாக, சிறீதரனுக்கும் ‘பார்’ சிபாரிசுக்கும் தொடர்பில்லை என்பதையும் சேர்ததுக் கொள்ளலாம். முதல் பத்தும் சின்னவயதிலே நம்பிய பொய்கள். 

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    1)இரட்டை வாழைப்பழம் ஒன்றுடன் ஒன்று ஒட்டியிருக்கும் வாழைப்பழம் சாப்பிட்டால் இரட்டைப் பிள்ளைபிறக்கும் 2)அரிசியைத் தின்றால் நம்மகல்யாணத்தன்று அடை மழைபெய்யும். 3) பொன்வண்ட புடிச்சு தீப்பெட்டியில

  • இதுவும் ஒரு நம்பிக்கைதான்🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

எனக்கு அண்ணன் பென்சில் குதிரைப்பீயில செய்யிறது எண்டு சொன்னதை கனகாலம் நம்பி, பென்சிலின் கூரைத் தொடுவதில்லை.  மாறிக்கீறித் தொட்டாலும் கைகழுவவேண்டும் எண்டு அலாதிப்படுவன்!

உங்களின் அண்ணருக்கு... பென்சில் செய்வதன் மூலப் பொருளையும், 
அதன் செய்முறையையும் யார் சொல்லிக் கொடுத்திருப்பார்கள் என அறிய ஆவல்.  😂

எனக்குத் தெரிந்து.. யாழ்ப்பாணத்திலேயே அப்ப   ஆறு குதிரைகள்தான் நின்றது.
அந்த ஆறு குதிரையும் போடும் சாணியை வைத்து, 
ஒரு பள்ளிக்கூடத்துக்கு கூட பென்சில் தயாரிக்க போதாது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன வயதில் உண்மை என நம்பிய பொய்களில் ஒன்றை உண்மையாக்கி அதில் வெற்றியும் பெறுவதற்கு முயன்ற சம்பவம் ஒன்று சிறித்தம்பியின் வாழ்வில் நடைபெற்றுள்ளது. அதனை அவர் இங்கு உறவுகளுக்குச் சொல்லித்தான் ஆகவேண்டும். தவறினால் நான் சொல்கிறவரை காத்திருக்கத் தயவுடன் வேண்டுகிறேன்.😌

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் நம்பாமல் ஆனால் கடைப்பிடிக்கும் சனி பயம்கள்

1. நல்லெண்ணையை கையில் வாங்கினால் அவர்களின் சனியன் எமக்கு தொத்தி விடும் 🤣

2. காலை கழுவும் போது குதி மேற்பகுதியை கழுவாவிட்டால், நளன் போல எம்மையும் சனியன் பிடிக்கும்

3. ஏழரை, அஷ்டமாத்து காலங்களில் சனிகிழமையில் மச்சம் சாப்பிட்டால் சனி கேமை கேப்பார்

4. பிரட்டாசி மாசம் சனி விரதம் பிடிச்சு எள்ளெண்ணை ஏரிக்காட்டில் சனி கேமை கேப்பார்

5. விரத சோற்றை சனிக்கு படைத்து அதை காகம் தின்ன முதல் நாம் தின்றால் சனி கேமை கேப்பார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Aalif Ali !!: June 2018

அணிலின் முதுகில் முன்பு கோடுகள் இருக்கவில்லை.
ராமர் பாலம் கட்டும் போது... அணிலும் உதவி செய்ததை பார்த்து,
ராமர் அந்த அணிலை அன்புடன் முதுகில்  தடவிக்  கொடுக்கும் போது.
ராமரின்  மூன்று விரல்கள் அந்த அணிலின் முதுகில் பதிந்து விட்டது.  

இப்போ நீங்கள் பார்க்கும் அணில்கள் எல்லாம், 
ராமர் தடவிய அணிலின் வாரிசுகளே. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

அணிலின் முதுகில் முன்பு கோடுகள் இருக்கவில்லை.
ராமர் பாலம் கட்டும் போது... அணிலும் உதவி செய்ததை பார்த்து,
ராமர் அந்த அணிலை அன்புடன் முதுகில்  தடவிக்  கொடுக்கும் போது.
ராமரின்  மூன்று விரல்கள் அந்த அணிலின் முதுகில் பதிந்து விட்டது.  

ஆண்டுநிறைவில் ராமபக்தர்கள் கூடிக் கும்மியடிக்கும் பலன் உள்ளதுபோல் தெரிகிறது.

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி   

  • கருத்துக்கள உறவுகள்

 வயது வந்தவர்களுக்கு மட்டும் 

1- கண்ணும் கண்ணும் பார்த்தால் கற்பம் தரிக்கும் 

2- உடுப்பு மற்றும் மலசல கூடத்தின் ஊடாக பிள்ளை உருவாகும்

3- பெண்களுக்கு மாதம் 31 நாளும் பிள்ளை தரிக்கும் 

4- உடலுறவு என்பது நாய்க்கொழுவலில் தான் முடியும்

5- ஒரு பெண்ணை தொட்டால் கட்டிக்க வேண்டும். 

(இவற்றை நம்பி தொலைச்சவை அதிகம்)

இனி சிறு குழந்தைகளுக்கானது தொடரும்....🤪

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்

சுய இன்பம் கண்டால் கண்கள் உள்ளே போய், கன்னங்கள் ஒட்டிபோய் மெலிந்து,உள்ளங்கயில் மயிர் வளர்ந்துவிடும் என நமபினேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

இன்றும் நம்பாமல் ஆனால் கடைப்பிடிக்கும் சனி பயம்கள்

1. நல்லெண்ணையை கையில் வாங்கினால் அவர்களின் சனியன் எமக்கு தொத்தி விடும் 🤣

2. காலை கழுவும் போது குதி மேற்பகுதியை கழுவாவிட்டால், நளன் போல எம்மையும் சனியன் பிடிக்கும்

3. ஏழரை, அஷ்டமாத்து காலங்களில் சனிகிழமையில் மச்சம் சாப்பிட்டால் சனி கேமை கேப்பார்

4. பிரட்டாசி மாசம் சனி விரதம் பிடிச்சு எள்ளெண்ணை ஏரிக்காட்டில் சனி கேமை கேப்பார்

5. விரத சோற்றை சனிக்கு படைத்து அதை காகம் தின்ன முதல் நாம் தின்றால் சனி கேமை கேப்பார்

__  நான் நம்பி கடைபிடிக்கும் பழக்கம் ....... இன்றும் நான் கழிவறைக்கு சென்றால் (1 என்றாலும், 2 என்றாலும் )  கடமை முடிந்தபின் குதிகால்கள் கழுவும் பழக்கம் உண்டு . ....... இங்கு பயணங்களின் நடுவில் வீதித் தரிப்பிடங்களில் , நண்பர்கள் வீடுகளிலும் கூட அது சாத்தியமில்லை . ...... ஆனாலும் நான் கையில் சிறிது நீர் எடுத்து சுற்றுமுற்றும் பார்த்து பின் முன்  கால்களுக்கும் காய் உதறுவதுபோல் தெளித்துவிடுவேன் .......இல்லாவிட்டால் அடுத்து கால்கழுவும் வரை பத்தியப்படாமல் இருக்கும் . .....!

__   நான் இப்பவும் சனிக்கிழமைகளில் தவறாமல் நல்லெண்ணெய் ( விசேஷமாய் கருவேப்பிலை ,  வெந்தயம், சி . சீரகம், கருஞ் சீரகம் எல்லாம் போட்டு காய்ச்சியது )  தேய்த்து அரை மணித்தியாலம் ஊறிப் பின் முழுகுவது பின் மூன்று உள்ளி தீயில் சுட்டு சாப்பிடுவது வழக்கம் . ....... சமயங்களில் சனி தவறினால் புதன்....... இன்று காலையும் முழுகினானான் ........ இரு வாரங்களுக்கு முன் தமிழ் கடையில் மூன்று நல்லெண்ணெய் போத்தல் குறைந்த விலையில் போட்டிருந்தார்கள் . ....... அதை  வெளியே கொண்டு வரும் போது படியில் தட்டுப்பட்டு ஒண்டு மேல் மூடியுடன் உடைந்து விட்டது .......இனி இது சமையலுக்கு கூடாது  அதை பூவலில் (குப்பையில் )  போட்டுட்டு வாங்கோ என்று மனிசி சொல்லுறாள் ....... நான்விடேல்ல ஒரு வெற்றுத் தண்ணிபோத்தல் எடுத்து அதற்குள் அதை விட்டுக் கொண்டு வந்து வடி தட்டால் வடித்து முழுகிறதுக்கு எண்ணெய் தயாரித்து வைத்திருக்கிறன் ........ இனி இது இரண்டு வருடத்துக்கு போதும் . ........!  💪

1 hour ago, suvy said:

__   நான் இப்பவும் சனிக்கிழமைகளில் தவறாமல் நல்லெண்ணெய் ( விசேஷமாய் கருவேப்பிலை ,  வெந்தயம், சி . சீரகம், கருஞ் சீரகம் எல்லாம் போட்டு காய்ச்சியது )  தேய்த்து அரை மணித்தியாலம் ஊறிப் பின் முழுகுவது பின் மூன்று உள்ளி தீயில் சுட்டு சாப்பிடுவது வழக்கம் . ....... சமயங்களில் சனி தவறினால் புதன்....... இன்று காலையும் முழுகினானான் ....... . ........!  💪

உங்கள் தலையில் உள்ள நீண்ட, கடும் கறுப்பு நிற முடியின் ரகசியம் இது தானா அண்ணா?😄

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

Aalif Ali !!: June 2018

அணிலின் முதுகில் முன்பு கோடுகள் இருக்கவில்லை.
ராமர் பாலம் கட்டும் போது... அணிலும் உதவி செய்ததை பார்த்து,
ராமர் அந்த அணிலை அன்புடன் முதுகில்  தடவிக்  கொடுக்கும் போது.
ராமரின்  மூன்று விரல்கள் அந்த அணிலின் முதுகில் பதிந்து விட்டது.  

இப்போ நீங்கள் பார்க்கும் அணில்கள் எல்லாம், 
ராமர் தடவிய அணிலின் வாரிசுகளே. 🤣

சீதையின் முதுகில் கோடுகள் இல்லையா?

அல்லது சீதையை ஶ்ரீராமன் தொடவே இல்லையா?

-பெரியார் திரைப்படப்பாடல்-

1 hour ago, colomban said:

சுய இன்பம் கண்டால் கண்கள் உள்ளே போய், கன்னங்கள் ஒட்டிபோய் மெலிந்து,உள்ளங்கயில் மயிர் வளர்ந்துவிடும் என நமபினேன்.

நெஞ்சு கூடு கட்டும்.

தொய்வு வரும்.

கண்பார்வை மங்கும்.

இதெல்லாம் கூட ஓக்கே…

கைரேகை அழிந்து விடும் எண்டு ஒருத்தன் மிரட்டிட்டான் பாஸ்….🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

__  நான் நம்பி கடைபிடிக்கும் பழக்கம் ....... இன்றும் நான் கழிவறைக்கு சென்றால் (1 என்றாலும், 2 என்றாலும் )  கடமை முடிந்தபின் குதிகால்கள் கழுவும் பழக்கம் உண்டு . ....... இங்கு பயணங்களின் நடுவில் வீதித் தரிப்பிடங்களில் , நண்பர்கள் வீடுகளிலும் கூட அது சாத்தியமில்லை . ...... ஆனாலும் நான் கையில் சிறிது நீர் எடுத்து சுற்றுமுற்றும் பார்த்து பின் முன்  கால்களுக்கும் காய் உதறுவதுபோல் தெளித்துவிடுவேன் .......இல்லாவிட்டால் அடுத்து கால்கழுவும் வரை பத்தியப்படாமல் இருக்கும் . .....!

__   நான் இப்பவும் சனிக்கிழமைகளில் தவறாமல் நல்லெண்ணெய் ( விசேஷமாய் கருவேப்பிலை ,  வெந்தயம், சி . சீரகம், கருஞ் சீரகம் எல்லாம் போட்டு காய்ச்சியது )  தேய்த்து அரை மணித்தியாலம் ஊறிப் பின் முழுகுவது பின் மூன்று உள்ளி தீயில் சுட்டு சாப்பிடுவது வழக்கம் . ....... சமயங்களில் சனி தவறினால் புதன்....... இன்று காலையும் முழுகினானான் ........ இரு வாரங்களுக்கு முன் தமிழ் கடையில் மூன்று நல்லெண்ணெய் போத்தல் குறைந்த விலையில் போட்டிருந்தார்கள் . ....... அதை  வெளியே கொண்டு வரும் போது படியில் தட்டுப்பட்டு ஒண்டு மேல் மூடியுடன் உடைந்து விட்டது .......இனி இது சமையலுக்கு கூடாது  அதை பூவலில் (குப்பையில் )  போட்டுட்டு வாங்கோ என்று மனிசி சொல்லுறாள் ....... நான்விடேல்ல ஒரு வெற்றுத் தண்ணிபோத்தல் எடுத்து அதற்குள் அதை விட்டுக் கொண்டு வந்து வடி தட்டால் வடித்து முழுகிறதுக்கு எண்ணெய் தயாரித்து வைத்திருக்கிறன் ........ இனி இது இரண்டு வருடத்துக்கு போதும் . ........!  💪

சூப்பர் அண்ணா.

நான் இப்போதும் தலைக்கு வைப்பது நல்லெண்ணைதான்.

தொண்டை கரகரப்புக்கு கொஞ்சமாய் எடுத்து தடவினால் பறந்து விடும்.

முன்பு ஊரில் இருக்கும் போது சனிக்கிழமை தோறும் அரையில் ஒரு துண்டை கட்டியபடி நல்லெண்ணையில் மலையாள பட போஸ்டர் மாதிரி நானும் அப்பாவும் மின்னுவோம்🤣.

கொழும்பு, வெளிநாடு வந்தாலும் முழுகும் போது நேரம் இருப்பின் ஒரு அரைமணி நேரம் எண்ணை வைத்து ஊறவிட்டே முழுகுவேன்.

ஒருமுறை இப்படித்தான் மகனுக்கு காது வலி - கொஞ்சம் நல்லெண்ணையை விட்டு சில நிமிடத்தில் கவிழ்த்தால் என்ன என நான் ஐடியா சொன்னேன்.

குழந்தையாக வெளிநாடு வந்து விட்ட மனைவி என்னை what a country brut என்பதாக லுக்கு விட்டு விட்டு, ஆஸ்பத்திரிக்கு போவோம் என்றார்.

அங்கே ஒரு வயதான ஆங்கில வைத்தியர் சோதித்து விட்டு, ஒரு சின்ன இன்பெக்சன் அதனால் வந்த வலிதான் மருத்து ஏதும் தேவையில்லை, வலியை குறைக்க உங்கள் வீடுகளில் பாவிக்கும் seed oil எதையாவது விடலாம் என்றால்…

மனைவியின் முகத்தில் வழிந்தது ஒரு போத்தல் எண்ணை அல்ல, அசடு🤣

  • கருத்துக்கள உறவுகள்

1.பிள்ளை பிடிகாரன் வாரான் என்று பள்ளிக்கூட பின் வேலியை கடந்து போகையில் முட் கம்பி வேலி கீறினது. (வந்தது ஊசி போடுறவங்கள் )

2. சுகாதார படம் காட்ட வருவாங்கள் என்று காத்திருந்து ஏமாந்தது 

3. சிவாஜி மற்றும் பிரபு நடித்த முதல் படம் "சங்கிலி" வீடியோ செட் கொண்டு வந்தவன் கார் பிழைபட்டு வராமல் நின்றது 

இவற்றில் ஏமாந்ததில் ஒரு ஆனந்தமும் இருந்தது. (நீங்களே யோசியுங்கள் )

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, விளங்க நினைப்பவன் said:

சிந்திக்க வைத்திருக்கின்றீர்கள் 👍
துப்பாக்கி சத்தம் கேட்டதும் தலை தெறிக்க வெளிநாடு ஓடி தப்பியவர்கள் இவர்கள்.
கருணாநிதி இலங்கை அரசை வெருட்ட கொழும்புக்கு விமானத்தில் சென்ற காலம் 🤔
கொழும்பு றேயல் கல்லுரி விளையாட்டு மைதானத்திலை விளையாடிக்கொண்டிருந்த கால கட்டமாக இருக்க வேண்டும்.

இலங்கைக்கான இந்திய தூதுவர்கள் அடிக்கடி இவ்வாறு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதனை தவறாக கருணாநிதி என குறிப்பிட்டிருக்கலாம் என நினைத்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, vasee said:

இலங்கைக்கான இந்திய தூதுவர்கள் அடிக்கடி இவ்வாறு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதனை தவறாக கருணாநிதி என குறிப்பிட்டிருக்கலாம் என நினைத்தேன்.

சும்மா அடிச்சுவிடலாம் என்பதை கொள்கையாக வைத்திருப்பதை வேடிக்கை பார்த்திருக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இடிஓசை கேட்கும்போது “அர்ச்சுனா அபயம்” என்று சொன்னால் இடி விழாதாம். அம்மா சொல்லி சிறுவயதில் கத்துவேன், இப்போ மனதுக்குள் சொல்லிக்கொள்கிறேன்.😳

  • கருத்துக்கள உறவுகள்

சுடலையில் பிரேதம் எரிகையில் ..அதைநோக்கி கைகாட்டினால்  விரல் அழுகும்..

  • கருத்துக்கள உறவுகள்

அரச மரத்தில் முனி குடி கொண்டிருக்கும்...மாலைப்பாட்டாப் பின்பு  அவ்வழியால் சென்றால்  முனி அடிக்கும்.. முனி அடித்தால் இரத்தம் கக்கிச் சாவர்......குறிப்பு காட் அட்டாக் வந்து செத்தவர்கள் ..இந்த கட்ட கரிக்குள்  அடக்கம்....சந்தேகம் ..புத்தர்தான் முனியோ ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, vasee said:

இலங்கைக்கான இந்திய தூதுவர்கள் அடிக்கடி இவ்வாறு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதனை தவறாக கருணாநிதி என குறிப்பிட்டிருக்கலாம் என நினைத்தேன்.

நான் முதலில் சொல்லிய விடயம் 80களுக்கு முதல் நடந்த விடயம்.இலங்கை தமிழர் பிரச்சனை 70 வருட பழைய பிரச்சனை என்பது உங்களுக்கு தெரிந்திருந்தும் 80களுக்கு பின்னர் தான் பிரச்சனை என கதையை கொண்டு போகின்றீர்கள். அன்றும் தமிழ்நாட்டு அரசியல் மட்டத்தில் இலங்கைத்தமிழர் பிரச்சனை பேசப்பட்டது. 😎

எனது கருத்தை அரைகுறையாக விளங்கிவிட்டு பதில் கருத்து எழுத வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். ஜால்ரா சொம்புகளுக்கும் சேர்த்து...😁

  • கருத்துக்கள உறவுகள்

1- இரவில் சாப்பிட்டை வெளியே எடுத்து செல்லும் போது பேய்கள் எம்முடன் வந்து விடும்

2- கறுப்பு பூனை கூட்டுமாறு மற்றும் கறுப்பு பொருட்களை காலையில் எழுந்தவுடன் காணக்கூடாது 

3-  வெளியே போகும் போது பின்னால் கூப்பிடக்கூடாது

4- வீட்டில் இருந்து வெளியே போக முயலும் போது ஏதாவது தடக்கினால் கொஞ்ச நேரம் கழித்து போகவேண்டும் 

5- வீட்டில் கண்ணாடிப் பொருட்கள் ஏதாவது உடைந்தால் அன்று ஏதாவது கெட்டது நடக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
On 28/12/2024 at 11:48, தமிழ் சிறி said:

Aalif Ali !!: June 2018

அணிலின் முதுகில் முன்பு கோடுகள் இருக்கவில்லை.
ராமர் பாலம் கட்டும் போது... அணிலும் உதவி செய்ததை பார்த்து,
ராமர் அந்த அணிலை அன்புடன் முதுகில்  தடவிக்  கொடுக்கும் போது.
ராமரின்  மூன்று விரல்கள் அந்த அணிலின் முதுகில் பதிந்து விட்டது.  

இப்போ நீங்கள் பார்க்கும் அணில்கள் எல்லாம், 
ராமர் தடவிய அணிலின் வாரிசுகளே. 🤣

அப்ப இந்த வரிக் குதிரையை யார், என்ன தடவு தடவி இருப்பார்கள்? 😧

  • கருத்துக்கள உறவுகள்
On 28/12/2024 at 18:08, goshan_che said:

இன்றும் நம்பாமல் ஆனால் கடைப்பிடிக்கும் சனி பயம்கள்

1. நல்லெண்ணையை கையில் வாங்கினால் அவர்களின் சனியன் எமக்கு தொத்தி விடும் 🤣

2. காலை கழுவும் போது குதி மேற்பகுதியை கழுவாவிட்டால், நளன் போல எம்மையும் சனியன் பிடிக்கும்

3. ஏழரை, அஷ்டமாத்து காலங்களில் சனிகிழமையில் மச்சம் சாப்பிட்டால் சனி கேமை கேப்பார்

4. பிரட்டாசி மாசம் சனி விரதம் பிடிச்சு எள்ளெண்ணை ஏரிக்காட்டில் சனி கேமை கேப்பார்

5. விரத சோற்றை சனிக்கு படைத்து அதை காகம் தின்ன முதல் நாம் தின்றால் சனி கேமை கேப்பார்

ஆம் இந்த சனி லேசுப்பட்ட சாமனல்ல இல்லவா யூரிப்பில் பின்வரும் தலைங்களில் பட்டையை கிள‌ப்புவார்.

கெத்து காட்டும் சனி
வைச்சு செய்யும் சனி 
கொட்டி கொடுக்கும் சனி
சுக்கிரனுடன் சேரும் சனி, 100% நிச்சயமாக திருமணத்திற்கு அப்பால் இன்னொரு உறவுக்கு வழி வகுப்பார்.
சனியும் குருவும் வக்கிரம் மறுமணம் நிச்சயம்
குருவும் சனியும் இணைவு வெளிநாட்டு யோகம் கதவருகில் 
சனி/செவ்வயும் தோசம், தலைகீழாக நின்றாலும் காலம் பூரவும் கையில்தான் கதை
சுக்கிரதசை ஆரம்பம்  அந்தப்புரம் போக தயராகும் மிதுனராசியினர்
சனி பெயர்சி ஜக்போட் அள்ளப்ப்கும் ராசிகள்

வாசகர் அனுபவத்தில் இன்னும் யூரிப் தலையங்கள் வரவேற்கப்டுகின்றது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

திடீர் கோடீஸ்வர யோகம் தரும் சனி.
அள்ளி  கொடுக்கும் சனி.
சுழற்றி அடிக்கப் போகும் சனி.
முதல் சனியால் மாற்றம் முன்னேற்றம்.
ஜென்ம சனியால் ஏற்படப்போகும் மிகப்பெரிய மாற்றம்.
விஸ்வரூபம் எடுக்கும் சனி.

😂

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு எவருக்குமே பயப்படாதவர்கள் சனிக்கு ரொம்ப பயப்படுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/1/2025 at 10:42, colomban said:

ஆம் இந்த சனி லேசுப்பட்ட சாமனல்ல இல்லவா யூரிப்பில் பின்வரும் தலைங்களில் பட்டையை கிள‌ப்புவார்.

கெத்து காட்டும் சனி
வைச்சு செய்யும் சனி 
கொட்டி கொடுக்கும் சனி
சுக்கிரனுடன் சேரும் சனி, 100% நிச்சயமாக திருமணத்திற்கு அப்பால் இன்னொரு உறவுக்கு வழி வகுப்பார்.
சனியும் குருவும் வக்கிரம் மறுமணம் நிச்சயம்
குருவும் சனியும் இணைவு வெளிநாட்டு யோகம் கதவருகில் 
சனி/செவ்வயும் தோசம், தலைகீழாக நின்றாலும் காலம் பூரவும் கையில்தான் கதை
சுக்கிரதசை ஆரம்பம்  அந்தப்புரம் போக தயராகும் மிதுனராசியினர்
சனி பெயர்சி ஜக்போட் அள்ளப்ப்கும் ராசிகள்

வாசகர் அனுபவத்தில் இன்னும் யூரிப் தலையங்கள் வரவேற்கப்டுகின்றது

2025 இல் யாருக்கு ஏழரை ஆரம்பம்? 

கால்தடம் போடும் கண்டகச்சனி !

அடிக்கடி தொல்லைதரும் அர்ஷடாமத்த சனி !

அலைச்சல் தரப்போகும் அஷ்டமத்துச்சனி!

இப்படி அநேக பகீர் தலையங்கள் இருந்தாலும்….

ஏழரை முடிவு - கூரையை பிய்ய்து கொண்டு கொடுக்கப்போகும் சனிபகவான் போன்றனவும் உள்ளன.

On 3/1/2025 at 13:35, தமிழ் சிறி said:

திடீர் கோடீஸ்வர யோகம் தரும் சனி.
அள்ளி  கொடுக்கும் சனி.
சுழற்றி அடிக்கப் போகும் சனி.
முதல் சனியால் மாற்றம் முன்னேற்றம்.
ஜென்ம சனியால் ஏற்படப்போகும் மிகப்பெரிய மாற்றம்.
விஸ்வரூபம் எடுக்கும் சனி.

😂

On 3/1/2025 at 15:06, ஈழப்பிரியன் said:

இங்கு எவருக்குமே பயப்படாதவர்கள் சனிக்கு ரொம்ப பயப்படுகிறார்கள்.

Conditioning ….

யாழில் சிலருக்கு சாதி….சிலருக்கு சனி🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.