Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Pickering வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் பலி

January 22, 20250
acc-3-960x595.jpg
Pickering நகரில் நிகழ்ந்த வாகன விபத்தில் இரண்டு தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.
 
செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் சிக்கி வாகனத்திலிருந்து வெளியேறிய தந்தையும் அவரது மூன்று வயது மகளும் மற்றொரு வாகனத்தில் மோதி உயிரிழந்தனர்.
 
படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
 
பலியானவர்கள் Pickering நகரை சேர்ந்த 40 வயதான பகீரதன் புஸ்பராசா, அவரது புதல்வியான 4 வயதான ரியானா பகீரதன் என குடும்பத்தினர் அடையாளப் படுத்தியுள்ளனர்.
 
இதில் பலியான பகீரதன் புஸ்பராசா, தாயகத்தில் நீர்வேலியைச் சேர்ந்தவர என தெரியவருகிறது.
 
முதலில் இவர்கள் பயணித்த Honda வாகனம் Nissan வாகனத்துடன் விபத்துக்குள்ளானது.
 
இந்த விபத்துக்கு Honda வாகனம் காரணமாக இருக்கலாம் என ஆரம்ப விசாரணைகள் தெரிவிக்கின்றன.
 
இந்நிலையில் சம்பவ இடத்தை விட்டு Honda வாகனம் 350 metre பயணத்தை தொடர்ந்தது.
 
அங்கு ஒரு வீதி தடுப்பில் மோதிய Honda வாகனம் சாலையை விட்டு விலகி ஒரு பள்ளத்தில் விழுந்துள்ளது.
 
இதில் வாகனத்தை விட்டு இறங்கிய தந்தை, மகளை தூக்கிக் கொண்டு விதியின் மறுமுனைக்கு செல்ல முயற்சித்த போது, அவர்கள் இருவரும் BMW வாகனத்தால் மோதப்பட்டாதாக தெரிவிக்கப்படுகிறது.
 
Honda வாகன ஓட்டுநர் முதலாவது விபத்தின் பின்னர் சம்பவ இடத்தில் தரித்து நிற்காததால், இது ஓர் hit-and-run என்ற வகையில் விசாரிக்கப்படுகிறது.
 
இரண்டாவது விபத்து நிகழ்ந்த சாலை மங்கலான வெளிச்சம் கொண்டது எனவும் இது இந்த விபத்துக்கான காரணியாக இருக்கலாம் எனவும் காவல்துறையினரின் ஆரம்ப விசாரணைகளில் தெரிவித்தனர்.
 
இதில் Nissan வாகன சாரதிக்கு சிறு காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
 
BMW வாகன சாரதிக்கும் சிறு காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவர் சம்பவ இடத்தில் அவசர உதவி பிரிவினரால் மதிப்பீடு செய்யப்பட்டார்.
 
இந்த விபத்துகள் குறித்த விசாரணைகள் தொடரும் நிலையில் குற்றச்சாட்டுக்கள் எதுவும் காவல்துறையினரால் பதிவு செய்யப்படவில்லை.
 
  • கருத்துக்கள உறவுகள்

Honda  Nissan போன்றவை உள்ளூர் வீதிகளில் பாதுகாப்பாய் ஒடுவதுக்கு கூட வக்கில்லாத கார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

Honda  Nissan போன்றவை உள்ளூர் வீதிகளில் பாதுகாப்பாய் ஒடுவதுக்கு கூட வக்கில்லாத கார்கள் .

ஏனையா வாகனத்தில் பிழை சொல்கிறீர்கள்? வாகனங்களை சாரதிகளே ஓட்டுகிறார்கள். வாகனங்கள் தானியங்கிகள் அல்ல. 

கடந்த 15 வருடங்களாக இந்த விபத்து நடைபெற்ற வீதியைப் பாவித்து வந்திருக்கிறேன்… கிழமைக்கு குறைந்தது இரண்டு விபத்துக்களையாவது ஒரு 25 KM இடைவெளிக்குள் காணலாம். 

விபத்துகளுக்கு பிரதான காரணம் சாரதிகளின் poor judgment தான். இந்த வீதி Taunton  70-90KM வேக அலகைக் கொண்டவை. இந்த வீதியைச் சந்திக்கும் மற்றைய வீதிகள் அனைத்தும் 60Km கொண்டவை. 60Km  ல் இருந்து பிரதான வீதி Taunton Road க்கு வந்து சேரும்போது அந்த வீதி பல இடங்களில்  70, 80, 90 Km  ஆக மாறுகிறது. ஆனால் வாகனங்கள் அதற்கும் அதிக வேகத்தில் செலுத்துகிறார்கள். 

Taunton road ல் வந்து சேரும்போது வாகன சாரதிகள் Taunton Road ல் வரும் வாகனங்களின் வேகத்தை சரியாகக் கணிப்பிடத் தவறுகிறார்கள். அங்கேதான் தவறு ஆரம்பமாகிறது. 

இறந்தவர்களின் ஆன்மா  இறைவனில் இளைப்பாறட்டும்  🙏

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 
474495161_2643098275889623_6406385186593
 
 
474018904_2643098315889619_7450458761039
 
 
474228827_2643098365889614_8666899966285
 
 
474876892_2643153029217481_2266207156890
 
 
 
👉அழகிய குடும்பம் ஒன்று கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிதைந்தது யாழ்ப்பாணம்
நீர் வேலியைச் சேர்ந்த தந்தையும் மூன்று வயது மகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
👉எந்த கணம் நாம் இல்லாமல் போவோம் என்று நமக்கே தெரியாது.
👉கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் பிக்கரிங் பகுதியில் வாழ்ந்த அழகிய குடும்பம் இது.
👉மகிழ்ச்சிக்கு அளவில்லாத குடும்பம். இளம் குடும்பம் ஆயிரம் ஆயிரம் கனவுகளை தம்முள் சுமந்த குடும்பம்.
👉இதில் உள்ள தகப்பனும் மகளும் காரில் தம் வீடு நோக்கி இரவு 7.30 மணியளவில் பயணப்பட்டு கொண்டிருக்கிறார்கள் கனடாவில் கடும் பனிப்பொழிவும் பனியால் வீதிகள் வழுக்குவதுமாக இருக்கிறது.
👉ஏதோ ஒரு காலப்பிழையால் அவர் ஓட்டி சென்ற கார் ஓரிடத்தில் அடித்து விழுந்து ஓர் தெருவோர பள்ளத்தில் பாய்ந்துவிட்டது கார்.
👉கார் பாய்ந்துவிட்டதும் ஏதோ விபத்துக்குள்ளாகிவிட்டோம் என எண்ணி பதறி தன் மூன்று வயதே ஆண பெண் பிள்ளைக்கு என்ன நடந்ததோ என எண்ணி தகப்பன் காரிலிருந்து வெளியேறி தன் செல்ல மகளை தூக்கி கொண்டு என்ன ஆனதோ ஏது ஆனதோ என பதறி எல்லா புலனும் இழந்தவனாக அவளை இரு கைகளில் தூக்கி ஏந்தியவாறு பதறி போய் அவளை காப்பாற்றி ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் ஐந்தும் கெட்டவனாய் வீதியின் மறுவோறம் ஓடுகிறார் அப்போது தான் சாடார் என்று வேகமாய் வந்த மற்றைய வாகனம் அவர்களை மோதி தள்ளுகிறது.
👉இருவரும் இப்போது பிணமாக.
கனடா வாழ் தமிழ் மக்களை பனி உறைவுக்குள்ளும் இன்னும் உறைய வைத்த செய்த சேதி இது.
👉ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்போம்.
👉அடுத்த நொடி ஏது நடக்கும் என நிச்சயமில்லா இந்த புதிரான வாழ்கையை இருக்கும் வரை வாழ்வை ரசித்து வாழ்வோம்.💔😥
  • கருத்துக்கள உறவுகள்

May their souls rest in peace.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
இறந்த பின் யாரைப் பற்றியும் எதுவும் பேசுவதில் ஆர்வமில்லாதவள் நான்.பெற்றோர், பிள்ளைகளின் வாழ்க்கையை பாழாக்கிக் கொள்ளாது வாழப் பழகி கொண்டால் நன்று.இருவருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.🙏🙏
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் 🙏
 

  • கருத்துக்கள உறவுகள்
On 23/1/2025 at 19:14, nunavilan said:

 

 
474495161_2643098275889623_6406385186593
 
 
474018904_2643098315889619_7450458761039
 
 
474228827_2643098365889614_8666899966285
 
 
474876892_2643153029217481_2266207156890
 
 
 
👉அழகிய குடும்பம் ஒன்று கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிதைந்தது யாழ்ப்பாணம்
நீர் வேலியைச் சேர்ந்த தந்தையும் மூன்று வயது மகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
👉எந்த கணம் நாம் இல்லாமல் போவோம் என்று நமக்கே தெரியாது.
👉கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் பிக்கரிங் பகுதியில் வாழ்ந்த அழகிய குடும்பம் இது.
👉மகிழ்ச்சிக்கு அளவில்லாத குடும்பம். இளம் குடும்பம் ஆயிரம் ஆயிரம் கனவுகளை தம்முள் சுமந்த குடும்பம்.
👉இதில் உள்ள தகப்பனும் மகளும் காரில் தம் வீடு நோக்கி இரவு 7.30 மணியளவில் பயணப்பட்டு கொண்டிருக்கிறார்கள் கனடாவில் கடும் பனிப்பொழிவும் பனியால் வீதிகள் வழுக்குவதுமாக இருக்கிறது.
👉ஏதோ ஒரு காலப்பிழையால் அவர் ஓட்டி சென்ற கார் ஓரிடத்தில் அடித்து விழுந்து ஓர் தெருவோர பள்ளத்தில் பாய்ந்துவிட்டது கார்.
👉கார் பாய்ந்துவிட்டதும் ஏதோ விபத்துக்குள்ளாகிவிட்டோம் என எண்ணி பதறி தன் மூன்று வயதே ஆண பெண் பிள்ளைக்கு என்ன நடந்ததோ என எண்ணி தகப்பன் காரிலிருந்து வெளியேறி தன் செல்ல மகளை தூக்கி கொண்டு என்ன ஆனதோ ஏது ஆனதோ என பதறி எல்லா புலனும் இழந்தவனாக அவளை இரு கைகளில் தூக்கி ஏந்தியவாறு பதறி போய் அவளை காப்பாற்றி ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் ஐந்தும் கெட்டவனாய் வீதியின் மறுவோறம் ஓடுகிறார் அப்போது தான் சாடார் என்று வேகமாய் வந்த மற்றைய வாகனம் அவர்களை மோதி தள்ளுகிறது.
👉இருவரும் இப்போது பிணமாக.
கனடா வாழ் தமிழ் மக்களை பனி உறைவுக்குள்ளும் இன்னும் உறைய வைத்த செய்த சேதி இது.
👉ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்போம்.
👉அடுத்த நொடி ஏது நடக்கும் என நிச்சயமில்லா இந்த புதிரான வாழ்கையை இருக்கும் வரை வாழ்வை ரசித்து வாழ்வோம்.💔😥

உண்மையின் குரலில் அரைவாசி உண்மை இல்லை.

இறந்தவர்களுக்கு ஆழ்த்த அனுதாபங்கள்.

100% தவிர்க்கப்பட்டிருக்கக்கூடிய இரண்டாவது விபத்தும் இழப்பும்.

Edited by Sabesh

17 minutes ago, Sabesh said:

உண்மையின் குரலில் அரைவாசி உண்மை இல்லை.

இறந்தவர்களுக்கு ஆழ்த்த அனுதாபங்கள்.

100% தவிர்க்கப்பட்டிருக்கக்கூடிய இரண்டாவது விபத்தும் இழப்பு.

உண்மை.

விபத்து ஒன்று நிகழ்ந்து விட்ட அடுத்த கணம், பலர் மிகவும் பதட்டமடைந்து விடுகின்றனர். அடுத்தது என்ன செய்வது என தடுமாறி விடுகின்றனர். அதுவே அவர்களை தவறிழைக்கவும் செய்து விடுகின்றது.

முதல் விபத்து இவரால் ஏற்படுத்தப்பட்டதாக பொலிசார் கூறுகின்றனர். விபத்து ஏற்பட்டவுடன், அந்த இடத்தினை விட்டு தப்பி ஓடாமல், நிற்க வேண்டும். ஆனால் இவர் அவ்வாறு நிற்காமல், அந்த இடத்தை விட்டு வேகமாக ஓடியிருக்கின்றார். அதுவே இரண்டம் விபத்தை தோற்றுவித்து இருக்கு என நினைக்கின்றேன் அவ்வாறு வேகமாக ஓடியதால் வீதியின் தடுப்பு சிவரில் மோதி இவரது வாகனம்,  Ditch இற்குள் சென்று இருக்கின்றது. அதில் இருந்து மகளையும் தூக்கிக் கொண்டு வீதியை சடுதியாக கடக்கும் போதுதான் மூன்றாவது விபத்து நிகழ்ந்து இந்த பெருந்துயரம் நடந்து இருக்கின்றது.

இதில் இறந்த குழந்தையின் வீடியோக்கள் பல இச் சம்பவத்தின் பின்னர் வெளியாகியுள்ளன. பார்க்கும் போது மனசு பதறுகின்றது. 

நான் அடிக்கடி பயன்படுத்தும் வீதி இது. பல தமிழர்களின் உயிர்களை விபத்தில் காவு கொண்ட வீதியும் இது. கொஞ்சம் விசாலமாக இருப்பதால், பலர் கடும் வேகத்தில் தான் இதில் பயணிப்பர். பனிக்காலத்தில் சில இடங்கள் மிகவும் இருளாக இருக்கும். இதில் குளிர் காலத்தில் இரவில் அவதானமாக வாகத்தை செலுத்த வேண்டியது அவசியம். முன்னர் 80/KM வேக வீதியாக இருந்து, பின்னர் பல இடங்களில் 70 ஆக்கி இன்னும் சில இடங்களில் 60 ஆக்கியுள்ளனர். ஆனால் பலர் இன்னமும் 80 KM இல் இருந்து 120 வரைக்கும் செல்கின்றனர்.

 

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் துயரமான இந்த செய்தியில் என்ன எழுதுவது என்று கடந்து போய்க் கொண்டிருந்தேன், நிழலியின் கருத்தைப் பார்த்ததும் எழுத வேண்டுமென்று நினைக்கிறேன்.

முதலில், ஏன் நிர்ணயித்த வேகத்தை விட அதிகமாக ஓட வேண்டிய தேவை எழுகிறதென எனக்குப் புரிவதில்லை. விஞ்ஞான முறைப்படி, இன்ன வேகத்தில் போகும் வாகனம், பிறேக் போட்டால் இவ்வளவு தூரத்தில் ஓய்வுக்கு வரும் என்று கணக்கிட்டுத் தான் வேகக் கட்டுப் பாடுகளை நிர்ணயிக்கிறார்கள். பொலிசைக் கண்டு பிடிக்கும் றேடாரை அமேசனில் வாங்கிப் பொருத்திக் கொண்டு, பொலிஸ் இல்லாத இடங்களில் மிகவேகமாக ஓடும் சாரதிகள் புத்திசாலிகள் என்று தான் தங்களை நினைத்துக் கொள்கிறார்கள். இவர்களைப் போன்ற மூளை கெட்ட முட்டாள்கள் இல்லையென்று நான் நினைத்துக் கொள்வேன்.

இரண்டாவது, இறந்த ஒருவரின் உடலின் படத்தை, காணொளியை இணையத்தில் பரப்புவது அவமரியாதையான செயல். எதிர்காலத்தில், அந்தக் குடும்பத்தின் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கக் கூடிய ஒரு இழி செயல். யார் இதைச் செய்கிறார்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். உதயத்தில் அஸ்தமனம் உண்மையில் துயரம் ஐயா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லா அவசரங்களும் ஆபத்தில் தான் முடிகின்றன.

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

விபத்து ஏற்பட்ட பின்னர் விமர்சனங்கள் வைப்பது சுலபம். ஆனால் நாம் எல்லோரும் இது போன்ற சம்பவங்கள் மற்றும் சூழ்நிலைகளை கடந்தே வந்திருப்போம். அவர்களது சூழ்நிலை மற்றும் இறுதிக்கணங்களில் எடுத்த முடிவுகள் இறப்பில் முடிந்திருக்கிறது. அவரும் ஒரு தகப்பனாக இறுதிவரை பிள்ளையை காக்க போராடிய தை பார்க்கும்போது மிகுந்த வேதனை அளிக்கிறது. இதில் நாம் வீரம் பேச எதுவுமில்லை.

ஆழ்ந்த இரங்கல்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.