Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் தவறி விழுந்த நிலையில் மாவை , வைத்தியசாலையில்!

adminJanuary 28, 2025
Mavai.jpg

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீட்டில் தவறி விழுந்த நிலையில் தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
https://globaltamilnews.net/2025/210421/

  • கருத்துக்கள உறவுகள்

மாவை சேனாதிராஜா அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி!

மாவை சேனாதிராஜா அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீட்டில் தவறி விழுந்த நிலையில் தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2025/1418524

  • கருத்துக்கள உறவுகள்

தானாக விலகி இருக்கலாம் ...

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

தானாக விலகி இருக்கலாம் ...

அவருக்கு,  தமிழரசு கட்சியாலை  பிரஷர் கூடி விட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனுக்கு பாதுகாப்பு படை வந்த செய்தியை அறிந்த அதிர்ச்சியினால் அறிவிழந்திருக்கலாம்.🤔

  • கருத்துக்கள உறவுகள்
திரு மாவை சேனாதிராஜா அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் தற்போதும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இன்று காலை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் CT scan பரிசோதனையில் வைத்திய நிபுணர்கள் தலையில் கணிசமான அளவில் இரத்தப் பெருக்கு இருப்பதை கண்டறிந்தனர்.
அவருக்கு மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக ஆபத்தான நிலையில் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சையில் உள்ளார்
நன்றி
யாழ் போதனா வைத்தியசாலை.
All re
  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் இறப்பில் யாழில் அவருக்கு சில உறுப்பினர்களே வசவுகளால் கிரியை செய்தார்கள்.

அதே நிலைதான மாவைக்கும் என பார்க்க ஆவலாய் உள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மாவை சேனாதிராஜா குணமடைய பிரார்த்திக்கிறேன் - நாமல் ராஜபக்ஷ

Published By: VISHNU   28 JAN, 2025 | 08:30 PM

image
 
தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து மிகுந்த கவலையடைந்துள்ளதாகவும் அவர் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய மனதார பிரார்த்திக்கிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது டுவீட்டரில் பதிவிட்டுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வீட்டில் தவறி விழுந்த நிலையில் தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டதால் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக இன்று செவ்வாய்க்கிழமை (28) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/205165

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

சம்பந்தன் இறப்பில் யாழில் அவருக்கு சில உறுப்பினர்களே வசவுகளால் கிரியை செய்தார்கள்.

அதே நிலைதான மாவைக்கும் என பார்க்க ஆவலாய் உள்ளேன்.

இதை தானே ஆவலாக எதிர்பார்த்தீர்கள்  இதோ 👇

3 hours ago, ஏராளன் said:

வாய்ப்புகள் இல்லை கோசான்  ....இலங்கையின் வரும் கால. ஐனதிபதி    இறைவனை வேண்டி. உள்ளார் ...எனவே…  மாவை சேனதிராசா   மீண்டும்  சுகமடைந்து   

தமிழரசு கட்சியின் இளைஞர் அணி தலைவராக பதவியேற்ப்பார். 

தொடர்ந்து தமிழரசு கட்சியின்   தலைவர் ஆவார்   

தமிழரசு கட்சி புதுப்பொலிவுடன் மீண்டும் இயங்கும்   

சுமத்திரன். மாவையின். பின்னால்   அவரது பைல்களை. தூக்கி திரிவார்

தமிழர்கள் இனி இலங்கை பாராளுமன்றதில்.  கோழி சண்டை பிடிப்பார்கள்.  

இந்த நிலையில் சிங்களவர்கள்.  இலங்கையில் 90 % ஆகவும்   தமிழர்கள்   10 % உள்.  வருவார்கள்’’   

எனவே… உங்கள் ஆசை   இந்த ஜென்மத்திலும் நிறைவேறாமல் போகும்  🤣😂

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Kandiah57 said:

இந்த நிலையில் சிங்களவர்கள்.  இலங்கையில் 90 % ஆகவும்   தமிழர்கள்   10 % உள்.  வருவார்கள்’’

இது 12 மணத்தியால கணக்கு மாரியோ அண்ணை.

🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா.. ஒரு மனுசன் விழுந்து முறிஞ்சு போய் கிடக்குறான்.. ஆள் தப்புமா தப்பாதா எண்டு பெட் கட்டி பாக்குரானுவள்.. கல் நெஞ்சக்காரனுவள்..😂😂

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, goshan_che said:

மாரியோ

யார் இவர் ???   இத்தாலியன்.     ?? 😂😂😂😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூளையில் இரத்தக்கசிவு… மிகமிக ஆபத்தான கட்டத்தில் மாவை-நள்ளிரவில் மாவை வீட்டில் நடந்தது என்ன?

Vhg ஜனவரி 28, 2025
1000429960.jpg
 
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராசா தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வெண்டிலேட்டரின் உதவியுடன் செயற்கைச்சுவாசம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு அவருக்கு செயற்கைச் சுவாசம் வழங்கப்படும், அவரது உடல் நிலையில் ஏதாவது முன்னேற்றம் நிகழ்ந்தால் அடுத்த கட்டத்தை பற்றி சிந்திக்கலமென யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மாவை சேனாதிராசாவின் நிலைமை கவலைக்கிடமான நிலைமையில் உள்ளதையும் மருத்துவத்துறை வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.

மருத்துவர்களால் சரி செய்ய முடியாதளவில் அவரது மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதால், அவரது உடல் இந்த அசாதாரண நிலைமையிலிருந்து மீண்டு வருகிறதா என்பதற்காக காத்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

என்ன நடந்தது?

இன்று அதிகாலை 4 மணியளவில் மாவை சேனாதிராசா வீட்டு குளியலறைக்கு செல்லும் போது கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

முன்னதாக, இன்று அதிகாலை 1 மணியளவில் இருந்தே அவரில் அசாதாரண மாற்றங்கள் தென்பட்டதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, இலங்கை தமிழ் அரசு கட்சியின் உட்கட்சி மோதல் வலுத்தது, கட்சிக்குள் தான் ஒதுக்கப்பட்ட விவகாரங்களினால் அவர் அதிக மனஅழுத்தத்தில் இருந்ததையும் குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.

கட்சி மோதல் விவகாரங்கள் மற்றும் அவரை ஒதுக்கும் நடவடிக்கைகள் உச்சகட்டமடையும் சந்தர்ப்பங்களில் அவர் அதிக இரத்தஅழுத்தத்திற்கு உட்பட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

முன்னதாக, அவர் சில மாதங்களின் முன்னரும் சிறியளவிலான மாரடைப்பினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போதும் கட்சிப் பிரச்சினை தீவிரமடைந்திருந்தது.

தற்போது, கட்சித் தலைமை பதவியிலிருந்தும் அவர் ஒதுக்கப்பட்ட பின்னர் அதிக மனஅழுத்தத்தில் இருந்துள்ளார். தனக்கு நெருக்கமானவர்களிடம் இது பற்றி தொடர்ந்து பேசியும் வந்துள்ளார். தனது நீண்ட போராட்ட, அரசியல் வாழ்க்கையில் இது போன்ற ஒரு சம்பவத்தை தான் சந்தித்ததேயில்லையென்றும் குறைபட்டு வந்துள்ளார்.

அவரது உடல் நிலைமையை கருத்தில் கொண்டு, இந்தியாவில் உள்ள மகளும், பிரித்தானியாவிலுள்ள மகனும் விடுமுறையில் இலங்கை வந்து, தந்தையுடன் ஒன்றாக சில நாட்கள் இருந்துள்ளனர். மூன்று பிள்ளைகளும் அருகிலிருந்த சமயத்தில், கட்சி முரண்களும் அடங்கியிருந்த பின்னணியில், மாவை சேனாதிராசா மகிழ்ச்சியாக இருந்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் இருவரும் கடந்த 20ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்டு சென்றனர்.

சில நாட்களின் முன்னர், கட்சியின் பதில் தலைவரும், பதில் பொதுச்செயலாளரும் மாவை சேனாதிராசாவின் வீட்டுக்கு சென்று, கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்கள் என பட்டியல்படுத்தப்பட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கவுள்ள விடயத்தை விவாதித்ததாகவும், ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கக்கூடாது என மாவை சேனாதிராசா கடுமையாக தர்க்கப்பட்டதாகவும், எனினும், ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கவுள்ளதாக பின்னர் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் மனச்சஞ்சலத்தில் இருந்ததாகவும் குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை தொடர்ந்து அவரது உடல்நிலை படிப்படியாக பாதிக்கப்பட்டதாகவும், இன்று அதிகாலையளவில் அது மோசமடைந்ததாகவும் தெரிய வருகிறது.

மாவை சேனாதிராசா முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது, அவரது வாகனச்சாரதியாக இருந்தவரின் பெயரைச் சொல்லி அழைத்து, குறிப்பிட்ட கோப்புக்களை வாகனத்தில் ஏற்றுமாறும், கட்சி வழக்கு நாளை வருவதால் உடனடியாக யாழ்ப்பாணம் செல்ல வேண்டுமென அதிகாலை 1 மணியளவில் தெரிவித்துள்ளார். அந்த சமயத்தில் அவர் தன்னை நாடாளுமன்ற உறுப்பினராகவே கருதியுள்ளார்.

இதனை தொடர்ந்தே, அதிகாலையில் தவறி விழுந்துள்ளார். திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, மூளை நரம்புகள் வெடித்ததை தொடர்ந்து அவர் விழுந்தாரா அல்லது விழுந்த பின் மாரடைப்பு ஏற்பட்டதா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

எனினும், தற்போதைய நிலைமையில், அவரது உயிருக்கு ஆபத்தானளவில் மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு, சுயநினைவிழந்த நிலையில், செயற்கைச்சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது.

வைத்தியசாலைக்குள் எதிர்ப்பு

மாவை சேனாதிராசாவின் நிலைமையறிந்து கட்சிப் பிரமுகர்கள் பலர் வைத்தியசாலைக்கு சென்று அவரை பார்வையிட்டு வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் நேரில் சென்று மாவையை பார்வையிட்டார். பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், நிர்வாகச் செயலாளர் குலநாயகம் ஆகியோரும் மாவையை நேரில் சென்று பார்வையிட்டனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனும் நேரில் சென்று பார்வையிட்டார்.

நிர்வாகச் செயலாளர் குலநாயகம், மாவைக்கு எதிரான அணியில் தன்னை அடையாளப்படுத்தியவர். அவர் வைத்தியசாலைக்கு சென்ற போது, அவருடன் மாவையின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் முரண்பட்டனர். பதவியாசை பிடித்தவர் என நேரடியாக திட்டியதகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் மிக இளம் வயது தொடக்கம் பங்காளனாக பயணித்த மாவை சேனாதிராசா, கட்சிக்குள் அண்மையில் நுழைந்தவர்களால் மனவேதனையுடன் ஒதுக்கப்படும் நிலைமைக்குள்ளானதே அவரது உடல்நிலை வீழ்ச்சிக்கு காரணமென சொல்லப்படுகிறது.

https://www.battinatham.com/2025/01/blog-post_540.html

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் போல் கொழும்பு வீட்டுக்கு ஆசைப்பட்டு கிண்ணியா வெந்நீர் ஊற்றுக்களை தாரை வார்த்தது போல் இவர் அப்படி ஒன்றும் தமிழர்களுக்கு எதிராக செய்யவில்லை சுகமாகி வரனும் சுமத்திரன் எனும் துரோகி அரசியலை விட்டு போகுமட்டும் இவர் உயிர் உடன் இருக்கணும் ஆண்டவனை வேண்டுகிறேன் .

  • கருத்துக்கள உறவுகள்

வயதானவர்களது இறுதிக் காலத்தில் அவர்கள் பாதிப்படைவதற்கான பிரதான காரணிகளுள் ஒன்று கீழே விழுதல். 

15 hours ago, தமிழ் சிறி said:

அவருக்கு,  தமிழரசு கட்சியாலை  பிரஷர் கூடி விட்டது. 

தமிழர் அழியும்போது வராத பிரசர் கட்சி அழியும்போது வருகிறதா? 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

வயதானவர்களது இறுதிக் காலத்தில் அவர்கள் பாதிப்படைவதற்கான பிரதான காரணிகளுள் ஒன்று கீழே விழுதல்

உண்மை தான்,...கனடாவில் 75 வயதுடைய.   ஒருவர்   தடக்கி  விழுந்து    மரணம் அடைந்து விட்டார்   புத்துரை சேர்நதவர்.  எனது தம்பியின் சகலன்.     முந்தநாள்.  நடந்தது     

அவரது மனைவி கைதடி      ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

சம்பந்தன் இறப்பில் யாழில் அவருக்கு சில உறுப்பினர்களே வசவுகளால் கிரியை செய்தார்கள்.

அதே நிலைதான மாவைக்கும் என பார்க்க ஆவலாய் உள்ளேன்.

மாவை சம்பந்தரப் போலன்றவர் அல்ல. இளம் வயதில்பல பேராட்டங்களை நடத்தி சிறை சென்றவர்.பின்னாளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தாலும் அனைவரையும் அரவணைத்துச் செல்லக்கூடியவர்.அவர்தலைவராக இருந்தபொழுது சுமத்திரனை அடக்கிவைக்கத் தவறியதன் விளைவையே அவர் அனுபவித்துள்ளார். அதற்கு சம்பந்தரும் ஒரு காரணம். மாவை சம்பந்தரை மேவிப் போகமாட்டார். சம்பந்தரின் மரணத்திற்காக யாரும் அழவில்லை. ஆனால் அதே நிலை மாவைக்கு வராது. அவருக்கு ஓரளவு  அனுதாபம் இருக்கும். அவர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நடந்த சம்பவங்களைப் பார்க்கும் பொழுது hemorrhagic stroke போன்று தெரிகிறது. இவருக்கு ஏற்கனவே அதிக இரத்த அழுத்தம் இருப்பதாக செய்திகள் வந்தது. 

Stroke வந்து கீழே விழுந்து இருக்கலாம் என்றே நினைக்கின்றேன்.

4 மணி நேரத்தில் CT scan எடுத்து treatment ஆரம்பிக்க வேண்டும். மூளையில் எங்கே கசிவு ஏற்பட்டது என்பதைப் பொறுத்து சம்பவத்தின் விபரீதம் மாறுபடும்.

சுவாசப் பிரச்சனை ஏற்பட்டதுக்கு மூளையில் இரத்தக் கசிவு காரணமாக ஏற்பட்ட வீக்கம் (swelling) மற்றும் pressure காரணமாக இருக்கலாம்.

தப்பினாலும் இனி முன்னர் போல செயல் பட இயலாது என்றே நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

இருவருமே ஒரே அணியில் ஒன்றாக ஒரே அரசியல் செய்தவர்தான்.

சம், சும் மின் அத்தனை செயலிலும் மாவைக்கும் பங்கு, பொறுப்புகூறல் உண்டு.

2009 இல் சம்பந்தன் போனை நூத்து விட்டு குப்புறபடுத்தவர் எண்டால், மாவை போனை நூத்து விட்டு ஒருக்களித்து படுத்தவர். அவ்வளவுதான் வித்தியாசம்.

ஆனால் மாவை விடயத்தில் மட்டும் அனுதாபம் வருகிறது எனில் அது யாழ்பாணம்/சாதி/மதம் சார்ந்த இரெட்டை நிலை என்பதே என் கருத்து.

மற்றும்படி சாவு திரியில் கிரியை செய்வது அநாகரிகமானது என்பதில் எனக்கு முழு உடன்பாடே.

3 hours ago, பகிடி said:

நடந்த சம்பவங்களைப் பார்க்கும் பொழுது hemorrhagic stroke போன்று தெரிகிறது. இவருக்கு ஏற்கனவே அதிக இரத்த அழுத்தம் இருப்பதாக செய்திகள் வந்தது. 

Stroke வந்து கீழே விழுந்து இருக்கலாம் என்றே நினைக்கின்றேன்.

4 மணி நேரத்தில் CT scan எடுத்து treatment ஆரம்பிக்க வேண்டும். மூளையில் எங்கே கசிவு ஏற்பட்டது என்பதைப் பொறுத்து சம்பவத்தின் விபரீதம் மாறுபடும்.

சுவாசப் பிரச்சனை ஏற்பட்டதுக்கு மூளையில் இரத்தக் கசிவு காரணமாக ஏற்பட்ட வீக்கம் (swelling) மற்றும் pressure காரணமாக இருக்கலாம்.

தப்பினாலும் இனி முன்னர் போல செயல் பட இயலாது என்றே நினைக்கின்றேன்.

வயசு, மூளையில் இரத்த கசிவு - மீண்டு வந்தால் அபூர்வம் என நினைகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணன் மாவை நலம் பெற வேண்டுகின்றேன். :cool:

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nunavilan said:

ஆழ்ந்த அனுதாபங்கள்.

நுணா??

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

நுணா??

காலமாகி விட்டார் என செய்தி வாசித்தேன் ஜஸ்டின்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.