Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்:

large.IMG_1211.jpeg

தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்!

இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது இடத்தில் நகர்ந்த @புலவர் ஐயாவுக்கும், நான்காவது இடத்திற்குச் சென்ற @செம்பாட்டான் க்கும், ஐந்தாவது இடத்தை இறுதி நாளில் எட்டிப் பிடித்த @கந்தப்பு வுக்கும் வாழ்த்துக்கள்!

தொடர்ந்தும் பல நாட்களாக முன்னணியில் நின்ற @suvy ஐயா, @செம்பாட்டான் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்!

தொடர்ச்சியாக பல நாட்களாக இறுதி நிலையில் நின்ற @goshan_che க்கும், பின்னர் இறுதி நிலையை பிறருக்கு பலநாட்கள் விட்டுக்கொடுக்காமல் நிற்கும் @Ahasthiyan க்கும் நன்றிகள்!

clapping-hands_1f44f.pngclapping-hands_1f44f.pngclapping-hands_1f44f.png

யாழ்களப் போட்டி வெற்றியாளர் @நந்தன் க்கான £5 காசோலையை ஐபில் 2025 இல் இறுதி நிலையில் நிற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் இரசிகர் @வீரப் பையன்26  ரொக்கெட்டில் சென்று கையளிப்பார்!

spacer.png

spacer.pngspacer.png

போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், கிரிக்கெட் ஜாம்பாவன்கள் @கந்தப்பு , @Eppothum Thamizhan , @vasee , @செம்பாட்டான் , @வீரப் பையன்26 போன்றோருக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய @suvy ஐயா,@ஈழப்பிரியன் ஐயா, @alvayan , @வாத்தியார் க்கும் மற்றும் அனைவருக்கும் நன்றிகள்.

spacer.png

Edited by கிருபன்

  • Replies 3.3k
  • Views 94.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்

புதிய இரண்டு அணிகள் முதல் இரண்டு இடங்களை பெற்றது மகிழ்ச்சி. கோழியின் தொடரில் 7/8 அரை சதங்கள் மேல் அடித்து தனது திறமையை தொடர்ந்து காண்பித்துள்ளார்.

@கிருபன் ஜின் போட்டி முடிவுகளை அவ்வப்போது பார்ப்பது ஆட்டநிலவரத்தை இணைய தளத்தில் பார்ப்பதை விட சுவாரசியத்தை கொடுத்தது.

சாய் சுதர்சன் போல @நந்தன் கடைசிவரை மற்றைய ஆட்டக்காரர்களால் ஓட்ட எண்ணிக்கையில் எட்டிப்பிடிக்க முடியாத நிலையை ஏற்படுத்தினார். இதன் பின்னால் உள்ள சூட்சுமம் யாது என அறிய ஆவல்.

சட்ஜீபிடி/செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் போட்டியில் பங்குபற்றலாமா என பார்த்தேன். கேள்விக்கொத்து மிக பெரிதாக காணப்பட்டதால் நேரம் போதவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நியாயம் said:

@நந்தன் கூகிள் ஷீற்றில் பதில்களை தெரிவு செய்ய முக்காலமும் தெரிந்த முனிவர் ஒருவரின் சிஷ்யை உதவியதாகத் தகவல்😜

நீங்களும் சட்ஜீபிடியை விட்டுவிட்டு கூகிள் ஷீற்றைப் பாவித்திருக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்:

large.IMG_1211.jpeg

தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்!

இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது இடத்தில் நகர்ந்த @புலவர் ஐயாவுக்கும், நான்காவது இடத்திற்குச் சென்ற @செம்பாட்டான் க்கும், ஐந்தாவது இடத்தை இறுதி நாளில் எட்டிப் பிடித்த @கந்தப்பு வுக்கும் வாழ்த்துக்கள்!

தொடர்ந்தும் பல நாட்களாக முன்னணியில் நின்ற @suvy ஐயா, @செம்பாட்டான் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்!

தொடர்ச்சியாக பல நாட்களாக இறுதி நிலையில் நின்ற @goshan_che க்கும், பின்னர் இறுதி நிலையை பிறருக்கு பலநாட்கள் விட்டுக்கொடுக்காமல் நிற்கும் @Ahasthiyan க்கும் நன்றிகள்!

clapping-hands_1f44f.pngclapping-hands_1f44f.pngclapping-hands_1f44f.png

யாழ்களப் போட்டி வெற்றியாளர் @நந்தன் க்கான £5 காசோலையை ஐபில் 2025 இல் இறுதி நிலையில் நிற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் இரசிகர் @வீரப் பையன்26  ரொக்கெட்டில் சென்று கையளிப்பார்!

spacer.png

spacer.pngspacer.png

போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், கிரிக்கெட் ஜாம்பாவன்கள் @கந்தப்பு , @Eppothum Thamizhan , @vasee , @செம்பாட்டான் , @வீரப் பையன்26 போன்றோருக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய @suvy ஐயா,@ஈழப்பிரியன் ஐயா, @alvayan , @வாத்தியார் க்கும் மற்றும் அனைவருக்கும் நன்றிகள்.

spacer.png

நன்றி கிருபன். பங்குனி 7ம் திகதி இந்தத் திரியைத் திறந்ததில் இருந்து, இன்றுவரை சிறப்பாக வழிநடத்திச் சென்று, சிறப்புற முடித்து வைத்தமைக்கு மிக்க நன்றி. மூன்று மாதங்கள் கிருபன். எப்படித்தான் பொறுமையாக இருந்தீர்களோ தெரியவில்லை.

roses.jpgroses.jpgroses.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரணமாக நன்றி என்று சொல்லிவிட்டு கடந்து போக முடியாதுள்ளது, @கிருபன் . எவ்வளவு ஒரு பெரிய காரியத்தை தனி ஆளாக செய்துள்ளீர்கள்................🙏🙏.

சக போட்டியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

@நந்தன் எப்பவோ எங்களை எல்லாம் முந்திக் கொண்டு போய்விட்டார். அவர் திரும்பிப் பார்க்கவேயில்லை. அதிகமான நாட்கள் இரண்டாம் இடத்தில் இருந்தவர் @புலவர் என்றே நினைக்கின்றேன்...............👍.

அடுத்த போட்டி எப்ப....................❤️.

  • கருத்துக்கள உறவுகள்

நிரந்தர முதல்வர் நந்தனுக்கு வாழ்த்துக்கள்.

கிருபனுக்கு எவ்வளவு பாராட்டுக்களை சொன்னாலும் தகாது.

வேலைப்பழுக்களின் மத்தியிலும் போட்டியை திறமையாக நடாத்தி முடித்த கிருபனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

போட்டியில் பங்கு கொண்டவர்களுக்கும் போட்டியை கலகலப்பாக வைத்திருந்தவர்களுக்கும் பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் நந்தனுக்கும், இரண்டாம் மூன்றாம் இடங்களை பிடித்த ரசோதரன், புலவருக்கும் வாழ்த்துக்கள்!👏💐

போட்டியை மிக சிறப்பாக நடத்திய கிருபனுக்கும், இந்த திரியை கலகலப்பாக வைத்திருந்த செம்பாட்டான், வசீ, கந்தப்பு, பையன், ரசோதரன், ஈழப்பிரியன், வாத்தியார் ஆகியோருக்கும், மற்றும் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகள்!! 🙏

மீண்டும் கோஷானின் போட்டியில் சந்திப்போம்❤️

  • கருத்துக்கள உறவுகள்

முதலிடம் பெற்ற @நந்தன்அண்ணைக்கும் இரண்டாமிடம் பெற்ற @ரசோதரன்அண்ணைக்கும் மூன்றாமிடம் பெற்ற @புலவர்அண்ணைக்கும் வாழ்த்துகள்.

போட்டியை திறம்பட நடத்திய @கிருபன்அண்ணைக்கு வாழ்த்துகள்.

போட்டியில் பங்குபற்றிய 23 உறவுகளுக்கும் வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

முதல் மூவர் உட்பட பங்குபற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள் . .........!

கிருபனின் உழைப்பை நன்றி என்னும் ஒரு சொல்லில் சொல்லிட முடியாது ....... மிக மிக நன்றி கிருபன் . ....... !

இந்தத் திரியை கலகலப்பாக வைத்திருந்த உறவுகள் அனைவருக்கும் பாராட்டுக்கள் . ....... !

இந்தக் கொண்டாட்டத்துக்கு களம் அமைத்துத் தந்த நிர்வாகத்துக்கும் மிக நன்றி . .........!

501046364_122131591088746585_29057010259

அனைவருக்கும் இனிய காலை வணக்கம் ........... !

இப்படிக்கு : பிரீத்தி ஜிந்தா & அவரின் குடும்பம் ........! 😂

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை திறம்பட நடாத்திய கிருபனுக்கும் , போட்டியில் வெற்றி பெற்ற நந்தனுக்கும், போட்டியில் முன்னிலை பெற்ற ரசோதரன் , புலவர், செம்பாட்டன் ஆகியோருக்கு பாராட்டுகள்.

சென்ற வருடம் கிருபன் நடாத்திய ஐபிஎல், T20 உலகக்கோப்பை போட்டி இரண்டிலும் 3 ம் இடம் பெற்றேன். இந்த வருடம் சாம்பியன் கிண்ணம், ஐபிஎல் இரண்டிலும் 5 ம் இடம் பெற்றேன். அடுத்த வருடம் நடைபெற்றவுள்ள T20 உலக கிண்ணப் போட்டி, ஐபிஎல் இரண்டிலும் 7 ம் இடம் கிடைக்கும் போல. 🤔

நேற்றைய போட்டியில் பஞ்சாப் வென்று இருந்தால் நான் 3 இடத்தை பெற்று இருப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்

503818570_1024899149759737_6794551477127

  • கருத்துக்கள உறவுகள்

2025 ஐபிஎல் தொடரில் இலங்கை வீரருக்கு கிடைத்த பெரும் அங்கீகாரம்!

ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று ஆர்சிபி அணி கிண்ணத்தை வென்றுள்ளது.

அதனைதொடர்ந்து, நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

அதில், மிகசிறந்த பிடியெடுப்புக்கான விருதை சன்ரைஸஸ் ஐதராபாத் அணியில் விளையாடிய இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் பெற்றுள்ளார்.

விருது 

ஐபிஎலில் இலங்கை வீரர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டிவால்ட் பிரேவிஸ் அடித்த பந்தை அந்தரத்தில் பறந்து கமிந்து மெண்டிஸ் பிடித்தமை பாராட்டுக்களுடன் பாரிய பேசுபொருளாக மாறியிருந்தது.

அதன்படி, ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் மிக சிறந்த பிடியெடுப்பு என பேசப்பட்டு வருகின்றதுடன், அதற்கு இறுதி விருது வழங்கும் விழாவின் போது அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

விருது வென்றவர்களின் முழு பட்டியல்:

  • சீசனின் மிகவும் மதிப்புமிக்க வீரர்: சூர்யகுமார் யாதவ்

  • செம்மஞ்சள் தொப்பி வென்றவர்(Orange Cap): சாய் சுதர்சன் (759 ஓட்டங்கள்)

  • தொடரின் சிறந்த பிடிப்பு (கேட்ச்) : கமிந்து மெண்டிஸ்

  • ஊதா தொப்பி வென்றவர்(Purple Cap): பிரசித் கிருஷ்ணா (25 விக்கெட்டுகள்)

  • ஃபேர்பிளே விருது(Fairplay Award): சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)

  • தொடரின் வளர்ந்து வரும் வீரர்: சாய் சுதர்சன் 

https://ibctamil.com/article/catch-of-the-season-ipl-2025-kamindu-mendis-1749020194#google_vignette

@கிருபன்அண்ணை இன்னும் இரு கேள்விகளை அடுத்த ஆண்டு சேர்க்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் விளையாட்டுப்போட்டி என்றால் அதில் கிருபன் பெயர் தான் முன்னிலையில் வரும். சளைக்காமல் வருடாவருடம் போட்டியை நடத்திவரும் கிருபனுக்கு நன்றி எனும் ஒற்றைச்சொல் போதாது . விளையாடடை கலகலப்பாக்கும் உறவுகளுக்கும் , முதல்வர் நந்தனுக்கு முன்னிலையில் நிற்கும் ரசோதரன், புலவர் ,செம்பாட டன் ஆகியோருக்கும் எல்லோ ருக்கும் அழைப்பு விடுக்கும் வீரப்பையனுக்கும் வாழ்த்துக்களும் என் நன்றிகளும்.

( கடைசியாக கிடந்து மிதிப்படாமல் ஒருவாறு 18 ம் இடத்துக்கு வந்து விட்டேன்.)😃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

@கிருபன்அண்ணை இன்னும் இரு கேள்விகளை அடுத்த ஆண்டு சேர்க்கலாமா?

பார்க்கலாம்.. வளர்ந்து வரும் வீரர் யார் என்று கணிப்பது சிரமம். அதேபோல சிறந்த கட்ச் யார் பிடிப்பார்கள் என்பதும் ஊகிக்கமுடியாது!

அடுத்தமுறை (யாழில் போட்டி நடந்தால்) Play-off, final புள்ளிகளை அதிகரிக்கலாம். இது வெற்றியாளரை மாற்றி போட்டியை சுவாரசியமாக்க உதவும்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கிருபன். பங்குனி 7ம் திகதி இந்தத் திரியைத் திறந்ததில் இருந்து, இன்றுவரை சிறப்பாக வழிநடத்திச் சென்று, சிறப்புற கிருபனின் உழைப்பை நன்றி என்னும் ஒரு சொல்லில் சொல்லிட முடியாது ....... மிக மிக நன்றி கிருபன்முடித்து வைத்தமைக்கு மிக்க நன்றி. மூன்று மாதங்கள் கிருபன். எப்படித்தான் பொறுமையாக இருந்தீர்களோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, கிருபன் said:

பார்க்கலாம்.. வளர்ந்து வரும் வீரர் யார் என்று கணிப்பது சிரமம். அதேபோல சிறந்த கட்ச் யார் பிடிப்பார்கள் என்பதும் ஊகிக்கமுடியாது!

அடுத்தமுறை (யாழில் போட்டி நடந்தால்) Play-off, final புள்ளிகளை அதிகரிக்கலாம். இது வெற்றியாளரை மாற்றி போட்டியை சுவாரசியமாக்க உதவும்

அண்ணை, பெரும்பாலான போட்டிகளை முன்னர் போல கணிக்க முடியவில்லை தானே? இம்முறை சில பரிசுகளை புதிதாக சேர்த்துள்ளார்களோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஏராளன் said:

அண்ணை, பெரும்பாலான போட்டிகளை முன்னர் போல கணிக்க முடியவில்லை தானே? இம்முறை சில பரிசுகளை புதிதாக சேர்த்துள்ளார்களோ?

அணியின் விபரங்கள், மைதானங்கள் போன்ற தரவுகள் இருப்பதால் கணிப்புகள் சிலவேளை வேலை செய்யும். ஆனால் இறுதிக்கேள்விகள் @வீரப் பையன்26 சொல்வது போல “குண்டக்க மண்டக்க” கேள்விகள்தான்🤣

  • கருத்துக்கள உறவுகள்

503346126_1097437185748150_2385804781646

பஞ்சாப் கடைசி ஓவர் ......! 👍

  • கருத்துக்கள உறவுகள்

பார்ரா கடைசி இடத்தைக் கூட தக்க வைத்து கிருபன் வாயால் ஒரு பாராட்டு வாங்க முடியாத பாவியாகிட்டேன்.☹️அடுத்த முறை அது மகளாக இருந்தாலும் கூட்டனி கிடையாது தனத்தவில் தான்.😂மற்றும் நிரந்தர முதல்வர் நந்தனுக்கு வாழ்த்துக்கள்.

கிருபனுக்கு எவ்வளவு பாராட்டுக்களை சொன்னாலும் தகாது.

வேலைப்பழுக்களின் மத்தியிலும் போட்டியை திறமையாக நடாத்தி முடித்த கிருபனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

போட்டியில் பங்கு கொண்டவர்களுக்கும் போட்டியை கலகலப்பாக வைத்திருந்தவர்களுக்கும் பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமாதிரி அகஸ்தியனின் புண்ணியத்தில் கடைசிக்கு முதல் இடம்.நிறையக் கேள்வி மற்றதுநிறைய புது வீரர்கள் என்பதால் பையனைக்கொப்பி பண்ணி சில மாற்றங்கள் செய்து போட்டேன் ஈயடிச்சான் கொப்பியென்று வரக்கூடாதென்று. ஆனால் என்னே ஆச்சரியம் மாற்றியதில் 90 வீதமானவை தப்பாத்தான் வந்திருக்கு. அண்மைக்காலமாக ஐபிஎல் சுவாரசியம் குறைந்ததால் எந்தப்போட்டியும் பார்ப்பதில்லை. வெற்றி பெற்றவர்களுக்கும் பங்குபற்றியவர்களுக்கும் போட்டியை திறம்படநடாத்திய கிருபன் அண்ணாவுக்கும்நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

15 புகைப்படங்களில் வெற்றிக் கொண்டாட்டம்: விராட்டின் ஆனந்த கண்ணீர் முதல் ரசிகர்களின் மகிழ்ச்சி தருணம் வரை

ஐபிஎல் வெற்றிக் கோப்பைக்கு முத்தமிடும் விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஐபிஎல் வெற்றிக் கோப்பைக்கு முத்தமிடும் விராட் கோலி

3 ஜூன் 2025, 19:06 GMT

புதுப்பிக்கப்பட்டது 3 ஜூன் 2025, 19:35 GMT

இன்று (ஜூன் 3) ஆமதாபாத்தின் நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையேயான ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

இதன் மூலம், ஆர்சிபி அணியின் 18 வருட கனவு நிறைவேறியுள்ளது. தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது ஆர்சிபி. ஐபிஎல் தொடங்கியது முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்ற ஒரே அணியில் விளையாடிவரும், விராட் கோலிக்கு இது மறக்கமுடியாத ஒரு வெற்றியாகும். இந்த போட்டியின் முக்கிய தருணங்களை புகைப்படங்களாகக் காணலாம்.

விராட்டின் கையில் வெற்றிக்கோப்பை - அணியினரின் முகத்தில் மகிழ்ச்சி வெள்ளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,விராட்டின் கையில் வெற்றிக்கோப்பை - அணியினரின் முகத்தில் மகிழ்ச்சி வெள்ளம்

வெற்றிக் கோப்பையுடன் ஆர்சிபி அணியினர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வெற்றிக் கோப்பையுடன் ஆர்சிபி அணியினர்

ஆர்சிபி, விராட் கோலி , ipl final, ஐபிஎல் சாம்பியன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வெற்றியை எட்டியதும் உணர்ச்சிவசப்பட்டு மைதானத்தில் அமர்ந்து கண்ணீர் விட்ட விராட் கோலி

மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் விராட்டின் வெற்றிக் கொண்டாட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் விராட்டின் வெற்றிக் கொண்டாட்டம்

ஆர்சிபி, விராட் கோலி , ipl final, ஐபிஎல் சாம்பியன்  மனைவி அனுஷ்கா ஷர்மாவை அணைத்து வெற்றியின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார் விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆர்சிபி முன்னாள் வீரரான ஏ.பி.டிவில்லியர்ஸ் போட்டியைக் காண நேரில் வந்திருந்தார் விராட் கோலியுடன் அவர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்

ஆர்சிபி, விராட் கோலி , ipl final, ஐபிஎல் சாம்பியன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பஞ்சாப் அணிக்காக தலைப்பாகை மற்றும ஆர்சிபிக்காக ஜெர்சியுடன் வந்திருந்த மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்ல்

வெற்றியைக் கொண்டாடும் ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வெற்றியைக் கொண்டாடும் ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார்

ஆர்சிபி, விராட் கோலி , ipl final, ஐபிஎல் சாம்பியன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆட்ட நாயகன் விருது பெற்ற க்ருனால் பாண்டியா

ஆர்சிபி, விராட் கோலி , ipl final, ஐபிஎல் சாம்பியன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பில் சால்ட் பிடித்த அபாரமான கேட்ச் பஞ்சாப் அணியின் விக்கெட் சரிவை தொடக்கி வைத்தது. அவரை சகவீரர்கள் பாராட்டுகின்றனர்

ஆர்சிபி, விராட் கோலி , ipl final, ஐபிஎல் சாம்பியன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,முதலில் கண்ணீர் பின் கொண்டாட்டம்- ஆர்சிபி அணியின் சக வீரர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் விராட் கோலி

ஆர்சிபி, விராட் கோலி , ipl final, ஐபிஎல் சாம்பியன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மைதானத்தில் ஆர்சிபி அணியின் ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்புகின்றனர்

ஆர்சிபி, விராட் கோலி , ipl final, ஐபிஎல் சாம்பியன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,போட்டியை நேரில் பார்ப்பதற்காக வந்திருந்த பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், ஆர்சிபி அணிக்கு ஆதரவு தெரிவித்தார்

ஆர்சிபி, விராட் கோலி , ipl final, ஐபிஎல் சாம்பியன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,போட்டி தொடங்கும் முன்னதாக நடைபெற்ற இன்னிசை கலை நிகழ்ச்சிகள்

ஆர்சிபி, விராட் கோலி , ipl final, ஐபிஎல் சாம்பியன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆமதாபாத்தில் போட்டியைக் காண்பதற்காக திரண்டிருந்த ஆர்சிபி ரசிகர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cql27kzykygo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆர்சிபி வெற்றி… ஒருபக்கம் கொண்டாட்டம்… மற்றொரு பக்கம் சோகம்!

4 Jun 2025, 6:11 PM

rcb fans stampede 11 feared dead

18 வருட காத்திருப்புக்கு பின், முதல்முறையாக ஐபில் கோப்பையை கைப்பற்றியுள்ளது பெங்களூரு அணி. இதனால், நேற்று (ஜூன் 3) இரவு முதல் பெங்களூருவில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது.

இன்று (ஜூன் 4) மாலை கர்நாடகா சட்டமன்ற வளாகம் மற்றும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி வீரர்களுக்கு வெற்றி விழா கொண்டாட்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதனையடுத்து, ஆர்சிபி ரசிகர்கள் மதியம் முதல் சட்டமன்றம் மற்றும் கிரிக்கெட் ஸ்டேடியம் முன்பாக குவியத்தொடங்கினர். கடும் கூட்ட நெரிசலால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். மேலும், 25 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில், கர்நாடகா சட்டமன்றத்தில் ஆர்சிபி வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் தவார் சந்த் கெக்லாட், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் கலந்துகொண்டு வீரர்களை பாராட்டினர்.

ஆர்.சி.பி-யின் வெற்றி கொண்டாட்டத்திற்கு மத்தியில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

https://minnambalam.com/rcb-fans-stampede-11-feared-dead/

போட்டியில் பங்குபற்றியவர்களுக்கும் போட்டியைச் சிறப்பாக நடத்தி முடித்த கிருபனுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்.

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் வெற்றியீட்டிய முதல் மூவர்களான நந்தன், ரசோதரன், புலவருக்கு வாழ்த்துக்கள்.

போட்டியை இனிதுற நடாத்திய கிருபனுக்கு மிக்க நன்றி.

போட்டியை சுவாரசியமாக்க கருத்துக்களை வழங்கியவர்களுக்கும், மற்றும் பங்கு பற்றியவர்களுக்கும் நன்றி.

மீண்டுமொரு போட்டியில் சந்திக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

493310039_602004912923846_38890224788353

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.