Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

4-7.jpg?resize=750%2C375&ssl=1

தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது!

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(17) பெய்த கனமழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது.

யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

அந்தக் கட்டடம் உடைந்து விழும் நிலையில் காணப்பட்ட நிலையில் அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நடப்பட்டிருந்தன. அந்த கம்பிகள் அண்மையில் திருட்டு போன நிலையில் , குறித்த பகுதி இடிந்து விழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று பெய்த மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது.

0.jpg?resize=600%2C400&ssl=1 4-5.jpg?resize=600%2C450&ssl=1 4-8.jpg?resize=600%2C450&ssl=1

https://athavannews.com/2025/1447545

யாழ்ப்பாணத்தில் கோயில்களுக்குக் கோடிக் கணக்கில் செலவிடும் தமிழர்கள் இந்த வரலாற்றுச் சின்னத்தைக் கம்பிகளால் முட்டுக் கொடுத்து வைத்துளனர். மீதியாக இருக்கும் பகுதிகளாவது உரிய முறையில் பாதுகாக்கப்பட வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது எமது அடையாளம். அரசாங்கம் இதில் அக்கறை செலுத்தப் போவதில்லை. அரசுக்கு... இது அழிவதில் உள்ளூர சந்தோசம். நாம்தான் இதனை வருங்கால சந்ததிக்காக பாதுகாத்து கொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்மாநகரசபை ஆரியகுளத்துக்கு காசு செலவளிக்கும்.ஆனால் புராதன வரலாற்று சின்னங்களை எட்டியும் பார்க்காது.

நல்லூர் திருவிழாவுற்கு வரும் பக்தர்களிடம் ஆளுக்கு ஒரு ரூபாய் நிதியுதவி சேகரித்தாலே ஒரு பெரிய தொகை வந்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

இடிந்து விழுந்தது நல்லூர் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை

adminSeptember 17, 2025

4-7.jpg?fit=768%2C576&ssl=1

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பெய்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.
அந்தக் கட்டடம் உடைந்து விழும் நிலையில் காணப்பட்டதனால் அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நடப்பட்டு   மந்திரி மனையை புனரமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையிலையே இன்றைய தினம் புதன்கிழமை மந்திரிமனையின் ஒரு பாகம் இடிந்து விழுந்துள்ளது.

யாழ்ப்பாண இராசதானி காலத்திற்குரியதாக கருதப்படும் மந்திரி மனை, பாதுகாக்கப்பட வேண்டிய தொல்பொருள் சின்னமாக 2011 ஆம் ஆண்டு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

4-2.jpg?resize=800%2C533&ssl=14-4.jpg?resize=768%2C576&ssl=14-6.jpg?resize=768%2C576&ssl=14-8.jpg?resize=768%2C576&ssl=14-1-1.jpg?resize=800%2C533&ssl=14-3.jpg?resize=768%2C576&ssl=14-5.jpg?resize=768%2C576&ssl=1

https://globaltamilnews.net/2025/220439/

  • கருத்துக்கள உறவுகள்

மந்திரிமனையை பாதுகாக்க முடியாமைக்கு தனி நபரே காரணம் என தொல்லியல் திணைக்களம் தெரிவிப்பு

புதன், 17 செப்டம்பர் 2025 03:48 AM

யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனையை கடந்த 14 வருடங்களுக்கு மேலாக பாதுகாக்க நடவடிக்கை எடுத்தும் பயனளிக்கவில்லை என தொல்லியல் திணைக்களம் கைவிரித்துள்ளது. 

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பெய்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது.

அது தொடர்பில் தொல்லியல் திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய உதவிப்பணிப்பாளர் U.A.பந்துல ஜீவ வை தொடர்பு கொண்டு கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

யாழ்ப்பாண இராசதானி காலத்திற்குரியதாக கருதப்படும் மந்திரி மனை, பாதுகாக்கப்பட வேண்டிய தொல்பொருள் சின்னமாக 2011 ஆம் ஆண்டு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதனை தொடர்ந்து மந்திரி மனையை பாதுகாக்கவும் , அதனை புனரமைக்கவும் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனாலும் அவை எதனையும் செய்ய முடியவில்லை. 

மந்திரி மனை அமைந்துள்ள காணியானது தனிநபருக்கு உரியது. அவருக்கு சொந்தமாதாகவே மந்திரி மனை காணப்படுகிறது. அதனால் அவரின் அனுமதியின்றி தொல்லியல் திணைக்களத்தால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது. 

மந்திரி மனையை புனர்நிர்மாணம் செய்து பாதுகாப்பதற்காக 2011ஆம் ஆண்டு முதல் , வடமாகாண ஆளுநர்கள் , மாவட்ட செயலர்கள் , தொல்லியல் பணிப்பாளர்கள் என மாறி மாறி வந்த அத்தனை பேரும் காணி உரிமையாளருடன் பல்வேறு கட்ட கலந்துரையாடல்களை முன்னெடுத்த போதிலும் , அவர் எதற்கும் சம்மதம் தெரிவிக்கவில்லை. 

இந்நிலையில் குறித்த காணியை கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டது. அதற்கும் அவர் சம்மதிக்கவில்லை. 

மந்திரி மனையை புனரமைக்க பல்வேறு தன்னார்வ கொடையாளிகள் , உலக வங்கி என பல்வேறு பட்ட தரப்பினரும், நிதியுதவிகளை வழங்க முன் வந்தார்கள். ஒரு கொடையாளி 50 இலட்ச ரூபாயை வழங்கியும் இருந்தார். அவர் நிதி வழங்கி இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் , காணி உரிமையாளரின் சம்மதம் இல்லாதமையால் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியாது போனமையால் , அந்த கொடையாளி தனது பணத்தினையும் மீள பெற்றுக்கொண்டார். 

இவ்வாறான நிலையில் மந்திரி மனை பல்வேறு சேதங்களை அடைந்திருப்பதால் , அது இடிந்து விழாமல் இருக்கும் வகையில் , எமது தற்துணிவின் அடிப்படையில் ,  இடிந்து விழ கூடிய நிலைமையில் காணப்பட்ட பகுதிகளுக்கு 19 இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டு அவற்றை பாதுகாத்தோம். 

அந்த கம்பிகளை திருடர்கள் திருடி சென்றுள்ளார்கள். இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தோம். பொலிஸார் அதனை ஒரு முறைப்பாடாக மாத்திரமே ஏற்றுக்கொண்டார்களே தவிர , விசாரணைகளை முன்னெடுத்து திருடர்களை கைது செய்யவில்லை. 

இவ்வாறான நிலையில் தான் இன்றைய தினம் பெய்த மழை காரணமாக ஏற்கனவே இடிந்து விழ கூடும் என எதிர்பார்த்து இரும்பு கம்பிகள் பொருத்தி இருந்த பகுதி , இரும்பு கம்பிகள் திருடப்பட்டமையால் இடிந்து விழுந்துள்ளது. 

தொல்லியல் சின்னமாக 2011ஆம் ஆண்டு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட மந்திரி மனை தனியார் ஒருவரின் சொத்தாக காணப்படுவதால் , இது வரை காலமும் குறித்த தனியாருடன் தொல்லியல் திணைக்களம் கலந்துரையாடல்களை நடாத்தி வந்தது. அவை எதற்கும் அவர் தனது சம்மதத்தினை தெரிவிக்கவில்லை. 

இவ்வாறான நிலையில், மந்திரி மனையின் ஒரு பாகம் இடிந்து விழுந்துள்ளது. அதனால் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் இது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் பேசி அவர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம் என தெரிவித்தார் 

https://jaffnazone.com/news/50592

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

அந்த கம்பிகள் அண்மையில் திருட்டு போன நிலையில்

hqdefault.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, கிருபன் said:

இதுவே ஒரு சிங்கள அரசன் சம்பந்தப் பட்ட தொல்லியல் பகுதியாக இருந்திருந்தால்... சிங்கள அரசு அந்தத் தனியாரிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு இருக்குமா? மாறாக அவரை அதி உச்ச சட்டத்தை பாவித்து அந்த கட்டிடத்தை தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கும்.

தமிழ் அரசன் சம்பந்தப் பட்ட கட்டிடம் என்றபடியால்... சிங்கள அரசு எமக்கு "அம்புலிமாமா" கதை எல்லாம் சொல்லிக் கொண்டு உள்ளது. அதை நம்பவும் நம்மில் பலர் இருக்கின்றார்கள்.

அந்தக் கட்டிடத்தின் முக்கியத்துவத்தையும், நிலைமையையும் கருதி அரசும், தமிழ் அரசியல்வாதிகளும் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தவறி விட்டார்கள். இவர்களை காலம் மன்னிக்காது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

இதுவே ஒரு சிங்கள அரசன் சம்பந்தப் பட்ட தொல்லியல் பகுதியாக இருந்திருந்தால்... சிங்கள அரசு அந்தத் தனியாரிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு இருக்குமா? மாறாக அவரை அதி உச்ச சட்டத்தை பாவித்து அந்த கட்டிடத்தை தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கும்.

இப்படிக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தால், பிளேட்டை அப்படியெ எ மாத்திப் போட்டு "சிங்கள தொல்லியல் திணைக்களம் தமிழர்களின் காணியைப் பிடிக்குது, சிங்களப் பகுதிகளில் இப்படி செய்வார்களா?" என்று ஒரு "பொங்கல்" வைத்திருப்பீர்களே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

549909593_1207109261452446_1781497207417

யாழில் கடும் மழை.. இடிந்து விழுந்த சங்கிலியனின் மந்திரிமனை; புனரமைக்க விடாமல் தடுத்த தனிநபர்.!

யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனையை கடந்த 14 வருடங்களுக்கு மேலாக பாதுகாக்க நடவடிக்கை எடுத்தும் பயனளிக்கவில்லை என தொல்லியல் திணைக்களம் கைவிரித்துள்ளது.

யாழ்ப்பாணம்.com

  • கருத்துக்கள உறவுகள்

இடிந்து விழுந்த மந்திரிமனையின் ஏனைய பகுதிகளுக்கு முட்டு

adminSeptember 18, 2025

01-4-3-1.jpg?fit=801%2C1200&ssl=1

நல்லூர் மந்திரிமனை மேலும் இடிந்து விழாது பாதுகாப்பும் வகையில் தொல்லியல் திணைக்களம் இரும்பு கம்பிகள் மூலம் முட்டுக்கொடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை பெய்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பாகம் இடிந்து விழுந்துள்ளது.

யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. குறித்த மந்திரிமனையானது கடந்த 2011ஆம் ஆண்டு தொல்பொருள் சின்னமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் , அது தனியார் காணிக்குள் அமைந்துள்ள தனியார் சொத்தாக காணப்படுவதால் , அதனை  புனரமைக்கவோ பாதுகாக்கவோ முடியாத நிலையில் தொல்லியல் திணைக்களம் இருந்துள்ளது.

அந்நிலையில் மந்திரிமனையின் ஒரு பாகம் சேதமடைந்து , உடைந்து விழும் நிலையில் காணப்பட்ட வேளை , அவற்றை பாதுகாப்புக்கும் வகையில் இரும்பு கம்பிகளை முட்டுக்கொடுத்து வைத்திருந்தனர்.  அந்த கம்பிகளை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திருடர்கள் திருடி சென்ற நிலையில் , நேற்றைய தினம் புதன்கிழமை பெய்த மழை காரணமாக அப்பகுதி இடிந்து விழுந்துள்ளது.

அதனை அடுத்து , கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் , நாடாளுமன்ற உறுப்பினர்களான க. இளங்குமரன் மற்றும் சி. சிறிதரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு , மிகுதியுள்ள மந்திரிமனை பகுதிகளை பாதுகாப்பது தொடர்பில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடி இருந்தனர்.

அந்நிலையில் , இடிந்து விழுந்த பகுதியில் உள்ள ஏனைய பகுதிகளை பாதுகாக்கும் நோக்குடன் தொல்லியல் திணைக்களம் இன்றைய தினம் வியாழக்கிழமை இரும்பு கம்பிகளை கொண்டு முட்டு கொடுத்து வைத்துள்ளனர்.

01-3-3-1.jpg?resize=800%2C533&ssl=101-5-3-1.jpg?resize=800%2C533&ssl=101-1-1.jpg?resize=534%2C800&ssl=1

https://globaltamilnews.net/2025/220525/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

550514052_1409391857853457_7124077320488

நம் மரபுரிமைகளைக் காப்போம்.

Oorukaai

  • கருத்துக்கள உறவுகள்
On 17/9/2025 at 19:12, கிருபன் said:

மந்திரிமனையை பாதுகாக்க முடியாமைக்கு தனி நபரே காரணம் என தொல்லியல் திணைக்களம் தெரிவிப்பு

புதன், 17 செப்டம்பர் 2025 03:48 AM

மந்திரிமனையை பாதுகாக்க முடியாமைக்கு தனி நபரே காரணம் என தொல்லியல் திணைக்களம் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனையை கடந்த 14 வருடங்களுக்கு மேலாக பாதுகாக்க நடவடிக்கை எடுத்தும் பயனளிக்கவில்லை என தொல்லியல் திணைக்களம் கைவிரித்துள்ளது. 

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பெய்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது.

அது தொடர்பில் தொல்லியல் திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய உதவிப்பணிப்பாளர் U.A.பந்துல ஜீவ வை தொடர்பு கொண்டு கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

யாழ்ப்பாண இராசதானி காலத்திற்குரியதாக கருதப்படும் மந்திரி மனை, பாதுகாக்கப்பட வேண்டிய தொல்பொருள் சின்னமாக 2011 ஆம் ஆண்டு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதனை தொடர்ந்து மந்திரி மனையை பாதுகாக்கவும் , அதனை புனரமைக்கவும் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனாலும் அவை எதனையும் செய்ய முடியவில்லை. 

மந்திரி மனை அமைந்துள்ள காணியானது தனிநபருக்கு உரியது. அவருக்கு சொந்தமாதாகவே மந்திரி மனை காணப்படுகிறது. அதனால் அவரின் அனுமதியின்றி தொல்லியல் திணைக்களத்தால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது. 

மந்திரி மனையை புனர்நிர்மாணம் செய்து பாதுகாப்பதற்காக 2011ஆம் ஆண்டு முதல் , வடமாகாண ஆளுநர்கள் , மாவட்ட செயலர்கள் , தொல்லியல் பணிப்பாளர்கள் என மாறி மாறி வந்த அத்தனை பேரும் காணி உரிமையாளருடன் பல்வேறு கட்ட கலந்துரையாடல்களை முன்னெடுத்த போதிலும் , அவர் எதற்கும் சம்மதம் தெரிவிக்கவில்லை. 

இந்நிலையில் குறித்த காணியை கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டது. அதற்கும் அவர் சம்மதிக்கவில்லை. 

மந்திரி மனையை புனரமைக்க பல்வேறு தன்னார்வ கொடையாளிகள் , உலக வங்கி என பல்வேறு பட்ட தரப்பினரும், நிதியுதவிகளை வழங்க முன் வந்தார்கள். ஒரு கொடையாளி 50 இலட்ச ரூபாயை வழங்கியும் இருந்தார். அவர் நிதி வழங்கி இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் , காணி உரிமையாளரின் சம்மதம் இல்லாதமையால் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியாது போனமையால் , அந்த கொடையாளி தனது பணத்தினையும் மீள பெற்றுக்கொண்டார். 

இவ்வாறான நிலையில் மந்திரி மனை பல்வேறு சேதங்களை அடைந்திருப்பதால் , அது இடிந்து விழாமல் இருக்கும் வகையில் , எமது தற்துணிவின் அடிப்படையில் ,  இடிந்து விழ கூடிய நிலைமையில் காணப்பட்ட பகுதிகளுக்கு 19 இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டு அவற்றை பாதுகாத்தோம். 

அந்த கம்பிகளை திருடர்கள் திருடி சென்றுள்ளார்கள். இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தோம். பொலிஸார் அதனை ஒரு முறைப்பாடாக மாத்திரமே ஏற்றுக்கொண்டார்களே தவிர , விசாரணைகளை முன்னெடுத்து திருடர்களை கைது செய்யவில்லை. 

இவ்வாறான நிலையில் தான் இன்றைய தினம் பெய்த மழை காரணமாக ஏற்கனவே இடிந்து விழ கூடும் என எதிர்பார்த்து இரும்பு கம்பிகள் பொருத்தி இருந்த பகுதி , இரும்பு கம்பிகள் திருடப்பட்டமையால் இடிந்து விழுந்துள்ளது. 

தொல்லியல் சின்னமாக 2011ஆம் ஆண்டு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட மந்திரி மனை தனியார் ஒருவரின் சொத்தாக காணப்படுவதால் , இது வரை காலமும் குறித்த தனியாருடன் தொல்லியல் திணைக்களம் கலந்துரையாடல்களை நடாத்தி வந்தது. அவை எதற்கும் அவர் தனது சம்மதத்தினை தெரிவிக்கவில்லை. 

இவ்வாறான நிலையில், மந்திரி மனையின் ஒரு பாகம் இடிந்து விழுந்துள்ளது. அதனால் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் இது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் பேசி அவர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம் என தெரிவித்தார் 

https://jaffnazone.com/news/50592

இதுவே ஒரு புத்த கோவில் எனில் compulsory purchase order மூலம் உரிய நட்ட ஈட்டை கொடுத்து எப்பவோ காணியை வாங்கி இருப்பார்கள்.

இடிந்து விழும்மட்டும் காத்கிருப்பதே சிங்களத்தின் அணுகுமுறை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

இதுவே ஒரு புத்த கோவில் எனில் compulsory purchase order மூலம் உரிய நட்ட ஈட்டை கொடுத்து எப்பவோ காணியை வாங்கி இருப்பார்கள்.

இடிந்து விழும்மட்டும் காத்கிருப்பதே சிங்களத்தின் அணுகுமுறை.

எதற்கெடுத்தாலும் சிங்களத்தை நொந்து கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை.

யாதும் ஊரே யாவரும் கேளீர் என நாம் மட்டும் தான் சொல்லிக்கொண்டு எம்மை நாமே அழித்துக்கொண்டிருக்கின்றோம். உலகில் வேறு எந்த இனமும் இந்த உலகம் எல்லோருக்கும் பொதுவானது என சொல்வதில்லை. இனியும் சொல்லப்போவதில்லை.

முன்னர் தமிழர்கள் இந்து கலாச்சார அமைச்சர்களாக இருந்துள்ளார்கள்.பல தமிழர்கள் வேறு அமைச்சர்களாகவும் இருந்துள்ளார்கள். அவர்கள் இதனை செய்திருக்க வேண்டும் .செய்யவில்லை. மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் பாராளமன்ற உறுப்பினர்கள் பலர் இருந்துள்ளார்கள்.இருக்கின்றார்கள். ஏன் தமிழர்களின் புராதன அழிவுகளை புனரமைக்க முன் வரவில்லை?

ஊருக்கு ஊர்,மூலைக்கு மூலை உள்ள கோவில்களுக்கு ராஜகோபுரம் கட்டி பந்தா காட்டும் புலன்பெயர் தமிழன்களுக்கு சங்கிலியன் பற்றி ஏதாவது தெரியுமா என கேட்டுப்பாருங்கள். முகநூலில் தடவித்தடவி தேடிக்கொண்டிருப்பான்.🤣

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

மாற்று கருத்து இல்லை.

இதில் தமிழர் தரப்பில் பிழை இல்லாமல் இல்லை.

ஆனால் ஒரு அரசாக அவர்கள் தரப்பில்தான் பிழை அதிகம்.

தெற்கில் ஒரு புராதன சின்னம் - ஒரு சிங்களவர் தனிசொத்தாக இருந்திருப்பின் - தகுந்த சட்ட, நட்ட ஈடு மூலம் அதை மீட்டிருப்பர்.

யாழில் வீதிகள் போடும் போது கூட இப்படித்தான் செய்தனர்.

வீதி அவர்களுக்குதேவை. இதை அழிய விட்டால் அவர்களுக்கு நல்லது.

உண்மையில் இதை 2010 போய் சுத்தி சுத்தி படம் எடுத்த போது, கொஞ்சம் அருகில் இருந்தோரிடம் பேச்சு கொடுத்தேன். பின்னால் ஒரு கிணறு இருந்தது அதை ஒட்டி வேலிகள் போட்டு மக்கள் தம் இடங்கள் என அடையாளபடுத்தி இருந்தனர்.

ஆனால் கட்டிடம் காதலர் பெயர் கிறுக்கல்களால் நிரம்பி இருந்தது.

ஆனால் கட்டிடம் இருந்த நிலம் வெளிபார்வைக்கு யாரும் உரிமை கோராது இருந்தது. தெற்கு லொரி டிரைவர்கள் தங்கி இருந்தனர். அதன் பின் சில வருடம் போகும் போது போய் பார்க்கவில்லை.

2012 அல்லது 14 இல் கடந்து போகும் போது தொல்பொருள் ஆராய்சி பலகை மாட்டி இருந்தது.

2024 இல் போன போது சில முட்டு கொடுப்புகள் இருந்தன.

சில அவதானிப்புகள்

  1. பல கட்டுமானங்கள், பூங்காக்களை இதன் அருகிலேயே எழுப்பிய இயக்கம் கூட இதை அப்படியே விட்டார்கள். ஏன் என தெரியவில்லை.

  2. இது உண்மையில் சங்கிலியன் கால கட்டிடமா என்பது பலத்த சந்தேகத்துக்குரியது. ஏன் எண்டால் இதில் நான் கண்டது பலது ஐரோப்பிய கட்டிட முறை போல இருந்தது. ஆனால் தெற்காசிய கூறுகளும் இணைந்திருந்தன. முகப்பில் ஒரு பெரிய கல்வெட்டு இருந்தது - இதில் யாரோ சில கிறீஸ்தவ தமிழர்கள் பெயரே பொறிக்க பட்டிருந்தது. ஒரு திருமணம் பற்றிய கிரயம் என்பதாக நினைவு.

  3. எனது ஊகம் - இவ்விடத்தில் சங்கிலியன் அரண்மனை இருந்திருக்கலாம். பழைய நல்லூர் கோவிலும் இந்த இடத்தில்தான் இருந்தாக (முத்திரை சந்தையடி) சொல்வார்கள். அதன் அழிவின் பின், இந்த இடத்தை மதம் மாறிய ஒரு உள்ளூர் போர்த்துகேசருக்கு உதவிய, மதம் மாறி அவர்களின் உள்ளூர் ஏஜெண்ட் போல் ஆகிவிட்ட ஒருவருக்கு கொடுத்திருக்கலாம். அவர் அல்லது அவர் வழிவந்தோரே இதை எழுப்பி இருக்கலாம்.

  4. எனது பார்வையில் இந்த கட்டிடம் 250 வருடத்துக்கு மேற்பட்டதாக தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

23-6419aba96d47f.jpg?resize=579%2C375&ss

மந்திரி மனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது! -பிமல் ரத்நாயக்க.

இலங்கையில் காணப்படும் பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான மந்திரி மனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

யாழ் நல்லூரில் அமைந்துள்ள மந்திரி மனையை நேற்று பார்வையிட்டதன் பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது ”இலங்கையில் காணப்படும் பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான மந்திரி மனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது. எனவே இதனை பாதுகாப்பதற்கான  நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது என   அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதி அழித்தார்.

நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள மந்திரிமனை இடிந்து விழுந்து பகுதியளவில் சேதம் அடைந்திருந்தது.

இதனை அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க ராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கருணை நாதன் இளங்குமரன்  ஆகியோர் பார்வையிட்டனர்.

அவர்களுடன் தொல்லியல் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் யு.ஏ பத்துல ஜீவ மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் புனர்நிர்மாண உத்தியோகத்தர் கபிலன் ஆகியோரும் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1447731

  • கருத்துக்கள உறவுகள்
On 17/9/2025 at 23:16, தமிழ் சிறி said:

இது எமது அடையாளம். அரசாங்கம் இதில் அக்கறை செலுத்தப் போவதில்லை. அரசுக்கு... இது அழிவதில் உள்ளூர சந்தோசம். நாம்தான் இதனை வருங்கால சந்ததிக்காக பாதுகாத்து கொடுக்க வேண்டும்.

இலங்கையில் காணப்படும் பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான யாழ்ப்பாணம் நல்லூர் மந்திரிமனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இடிந்த யாழ் மந்திரிமனையை பார்வையிட்டார் அமைச்சர் பிமல் ரத்நாயக்க - ஜே.வி.பி நியூஸ்

  • கருத்துக்கள உறவுகள்
On 17/9/2025 at 12:48, தமிழ் சிறி said:
On 17/9/2025 at 13:01, இணையவன் said:

யாழ்ப்பாணத்தில் கோயில்களுக்குக் கோடிக் கணக்கில் செலவிடும் தமிழர்கள் இந்த வரலாற்றுச் சின்னத்தைக் கம்பிகளால் முட்டுக் கொடுத்து வைத்துளனர். மீதியாக இருக்கும் பகுதிகளாவது உரிய முறையில் பாதுகாக்கப்பட வேண்டும்.

அந்தக் கட்டடம் உடைந்து விழும் நிலையில் காணப்பட்ட நிலையில் அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நடப்பட்டிருந்தன. அந்த கம்பிகள் அண்மையில் திருட்டு போன நிலையில் , குறித்த பகுதி இடிந்து விழுந்துள்ளது.

கம்பித் திருடர்களைக் கண்டுபிடித்து மின்சாரக் கம்பத்தில் கட்டித் தூக்கவேண்டும். இலங்கையில் பாரம்பரியங்களை பாதுகாக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சை அரசு உருவாக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

மின்சாரக் கம்பத்தில் கட்டித் தூக்கவேண்டும்.

வாளையில் ஆடியவள், வயது போன பின்னும் காலை, காலை ஆட்டுவாளாம்🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, goshan_che said:

வாளையில் ஆடியவள், வயது போன பின்னும் காலை, காலை ஆட்டுவாளாம்🤣

அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித் தரள நீர்வடிய கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா?

கயவனை காலால் மிதித்து இறையும் ஆடியது நல்லோர் இடரின்றி வாழ்வதற்கே.🙏

  • கருத்துக்கள உறவுகள்

மந்திரிமனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது! - அமைச்சர் பிமல் கருத்து!

இலங்கையில் உள்ள பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான நல்லூர் மந்திரிமனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.  

யாழ்ப்பாணத்தில் பெய்த மழை காரணமாக நல்லூர் இராசதானி காலத்து மந்திரிமனையின் ஒரு பாகம் இடிந்து விழுந்துள்ளது. 

இந்நிலையில், மந்திரிமனையினை நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர், நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் உள்ளிட்டோர் நேற்று (18) இரவு  நேரில் சென்று பார்வையிட்டனர்.  

அதன்போது, தொல்லியல் திணைக்களத்தின் யாழ். பிராந்திய உதவி பணிப்பாளர் யு.ஏ பத்துலஜீவ மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் புனர்நிர்மாண உத்தியோகத்தர் கபிலன் ஆகியோருடன் அமைச்சர்கள் கலந்துரையாடி , மந்திரிமனையை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தெரிவித்தனர். 

மந்திரிமனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது! - அமைச்சர் பிமல் கருத்து!

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ( தமிழர்கள்) எம்மு வரலாறுகளை பாதுகாக்கமுடியாத முழு முட்டாள்கள். எவ்வளவு வரலாற்று சின்னங்கள்…. அந்த காலத்திருந்நு இந்தகாலம் வரை இது தொடருகிறது…. அல்லது சோழனின் கோட்டை, பாண்டியனின் கோட்டை மாளிகைகள் எல்லாம் இருந்திருக்கு்ம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, goshan_che said:

மாற்று கருத்து இல்லை.

இதில் தமிழர் தரப்பில் பிழை இல்லாமல் இல்லை.

ஆனால் ஒரு அரசாக அவர்கள் தரப்பில்தான் பிழை அதிகம்.

தெற்கில் ஒரு புராதன சின்னம் - ஒரு சிங்களவர் தனிசொத்தாக இருந்திருப்பின் - தகுந்த சட்ட, நட்ட ஈடு மூலம் அதை மீட்டிருப்பர்.

யாழில் வீதிகள் போடும் போது கூட இப்படித்தான் செய்தனர்.

வீதி அவர்களுக்குதேவை. இதை அழிய விட்டால் அவர்களுக்கு நல்லது.

கோஷான்! அவனவன் தன் குடும்பம் பற்றியே சிந்திப்பான்.அது போல் இனம் என்று வந்தாலும் தன் இனம் பற்றியே சிந்திப்பான். எம் அரசியல் தலைவர்கள் விடும் /விட்ட தவறுகளுக்கு கேள்வி கேட்டால் அதற்கும் ஏதாவது பதில் வைத்திருப்பார்கள்.

ஆரம்ப அரசியல் காலம் தொடக்கம் இன்றுவரைக்கும் ஈழத்தமிழினம் வந்த நல்ல நல்ல சந்தர்ப்பங்களை தவற விட்ட இனமாகவே எனக்கு தென்படுகின்றது.

அடுத்தது எம் மக்களின் நிலைப்பாட்டிற்கு வருவோம்...

பழைய சோறு சாப்பிட்டாலே கேவலமாக பார்க்கும் எம் சமூகம் பழைய வரலாற்று அடையாளங்களை பாதுகாப்பது பற்றி சிந்திக்கும் என நினைக்கின்றீர்களா? 😂

  • கருத்துக்கள உறவுகள்

செப்டம்பர் 24 ல் ஒருநாள் மந்திரி மனைக்கு மாலை நேரம் போனன் ..திடீரென ஒருவர் சயிக்கிளில் வந்து...விட்டார் சயிக்கிளை ..நிலத்தை கூட்டினார் ..படுக்கையை போட்டார் ...சுற்ற்ப்பார்த்த எங்களை ஏளனம் செய்தபடி தன்னுடையகாணீ ....வீடு என்று அட்டகாசம் செய்தார் ...கூடவந்தவை கனடாவில் பிறந்த பிள்ளைகள் ....அதுகள் ..இவர்தான் சங்கிலிய மன்னனின் மந்திரி எனகேட்கமுன்...ஆட்டோவில் ஏறி ... ரியோ கிறீம் கவுசுக்குப் போய்விட்டோம்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.