Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
42 minutes ago, ரசோதரன் said:

யாழ்ப்பாண மக்கள் வறட்டுத்தனமான கௌரவம் மிகவும் அதிகமாக உள்ள சமூகங்களில் ஒன்று. இதை நான் ஊரில் இருந்த நாட்களில் என் வீட்டிலேயே பார்த்திருக்கின்றேன். யாழ்ப்பாண மக்கள் வேறு எவரையும் ஏற்றுக் கொள்வதில்லை.

"பிரதேசவாதம்"

இது உலகில் உள்ள அனைத்து சமூகத்தினரிடமும் உண்டு.

ஆகையால் எம்மை நாமே தாழ்த்திக்கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மலையக தமிழ் மக்களை வடக்கு / கிழக்கு இக்கு குடியமர்த்துவது நல்ல ஒரு முடிவு. இதன் முலாம் தமிழரது எண்ணிக்கையை நாங்கள் உயர்த்தலாம் மற்றும் சிங்கள குடியேற்றங்களை குறைக்கலாம்.

எங்கள் வீட்டிலும் அயல் தோடடங்களிலும் நிறைய மலையக தமிழர்கள் வாழ்ந்தார்கள். நாங்கள் அவர்களிடம் மற்றவர்கள் போல்தான் பழகினோம். மிக நல்ல மனிதர்கள். ஆனால் அவர்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் மோசமாகவே இருந்தது.

சில தமிழ் மக்கள் தமது வறட்டு கெளரவத்தை விடதான் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்று இனக்கலவரத்தினால் அடியுண்டு சிதறுண்ட மக்களை காந்தீயம் என்கிற அமைப்பு வரவேற்று அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து குடியமர்த்தினர். ஆனாலும் கணிசமான மக்கள் மீண்டும் தமது பழைய இடங்களுக்கு சென்றனர். ஒரு இடத்தில வாழ்ந்து பழக்கப்பட்டவர்களை திடீரென வேறொரு இடத்திற்கு மாற்றுவது அவர்களின் இயல்பான வாழ்வை பாதிக்கும், அதோடு ஆண்டாண்டு காலமாக நாட்டுக்காக உழைத்து ஓடாகிப்போன அவர்களுக்கு வேண்டிய நிவாரணத்தை கொடுத்து வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வேண்டியது அரசின் கடமை. இவர்களை நாம் வரவேற்பது பிரச்சனையல்ல, அவர்கள் எமது தயவில் வாழ வேண்டிய நிலையிலும் சங்கடத்திலும் வாழ்வதிலும் பார்க்க அவர்களுக்குரிய நஷ்ட ஈடு கொடுக்கப்படவேண்டும், வாழ்வாதாரம் உயர்த்தப்படவேண்டும், அதற்கு அவர்கள் உரித்துடையவர்கள். அவர்களுக்கு சேரவேண்டிய உரிமைகளை தடுத்து, தடங்கல்களை ஏற்படுத்தி அரசின் கடமைப்பாட்டிலிருந்து வலிய விலக்கிக்கொள்வதாக அமையும். அவர்கள் பெற வேண்டிய நிவாரணங்களை நஷ்ட ஈட்டைப்பெற முழு உரித்துமுடையவர்கள் அது அவர்களது உரிமை. அதை தடுத்து பரோபஹாரம் செய்கிறோம் எனும் பெயரில் ஏதிலிகளாக்காமல் இருந்தால் சரி. அதன் பின் அரசும் தனது கடமையிலிருந்து அவர்களை கைகழுவி விடும். பிறகு அவர்களுக்கு எந்த ஆதரவுமில்லாமல் போய்விடும். தமிழரசியல் வாதிகள் தமது மக்களையே அவர்களின் தேவைகளையே கவனிப்பதில்லை இதில் இவர்களை அழைத்து வாழ வைத்து விடுவார்கள். மனோ கணேசன் தனது கடமையிலிருந்து இலகுவாக தப்பித்துக்கொள்ள முயற்சிக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

மலையகத்துக்குள்ளேயே அவர்களின் வாழ்வியலை உறுதிபடுத்த வடக்கு கிழக்கு மலையகமாக ஒன்றுபடுவோம் - அருட்தந்தை சத்திவேல்.

மலையகத்துக்குள்ளேயே அவர்களின் வாழ்வியலை உறுதிபடுத்த வடக்கு கிழக்கு மலையகமாக ஒன்றுபடுவோம். மலையகமே மலையக மக்களின் தாயகம். அங்கு சலுகைகளோடு மட்டுமல்ல மண்ணுரிமையோடு வாழ்வதே அரசியல் கௌரவம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான  அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

இவரால் கடந்த வெள்ளிக்கிழமை (05)  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எல்லா கோயில் காணிகளிலும், எல்லா சிதம்பரத்து காணிகளிலும், எல்லா தர்ம காணிகளிலும் மலையக மக்களை குடியேற்றி அவர்களை காப்பாற்ற வேண்டும். அவர்கள் இங்கு வந்தால் விவசாயத்தில் செழிப்பாகும் என இயற்கை பேரிடருக்கு முகம் கொடுத்து நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள மலையக மக்கள் விடயத்தில் அவசர உணர்வு பூர்வமான கருத்தினை வெளியிட்டு இருக்கிறார் சிவ பூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி. ஆறு. திருமுகம் திருமுருகன். 

ஐயாவின் உணர்வு பூர்வமான உளவெளிபாட்டுக்கு மலையக சமூக ஆய்வு மையம் நன்றி கூறுகின்றது. இவ்வாறான உணர்வுபூர்வமான கருத்தினை தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் வெளிப்படுத்தி இருந்தார். மலையக மக்களின் நிலையினை இன சுத்திகரிப்பு மற்றும் இன அழிப்பிற்கு உள்ளாகி வரும் மக்களின் நீண்டகால பாதுகாப்பு கருதி அரசியல் அறவியலில் நின்று கூட்டாக முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதே எமது கருத்து நிலைப்பாடு.

மலையக மக்களும் 1948க்கு பின்னர் திட்டமிட்ட இன அழிப்பிற்க்கும், இன சுத்திகரிப்பிற்கும் உள்ளாகி நாளாந்தம் சிதைவுகளையே சந்தித்தவரும் ஒரு தேசிய இனமாகும். தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், தற்போதைய ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்க  மலையகத்தில் வீடற்றிருக்கும் 1,50,000 பேருக்கு கொடுப்பதற்கு போதுமான காணி மலையகத்தில் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் கூறத் தொடங்கி இருக்கின்றார்.

இது அவர்களின் நீண்ட கால அரசியல் சித்தாந்தம். அதுவே சிங்கள பௌத்த கருத்தியலுமாகும். தற்போது அவர்கள் பேரிடர் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மலையக மக்களை சிதைக்க முயல்வதை இன அழிப்பிற்கும் இன படுகொலைக்குப் முகம் கொடுக்கும் சமூகமாக அதனை தடுத்து நிறுத்துவதற்கும் அவர்களின் எதிர்கால அரசியல் பாதுகாப்பினையும் கருதி கலந்துரையாடல்களை மேற்கொள்ளல் வேண்டும்.

மலையக மக்கள் நாட்டின் சனத்தொகையில் இரண்டாம் இடத்தில் இருந்த போது அவர்களின் அரசியல் எழுச்சிக்கு பயந்து 1948 ஆம் சமூகத்தின் வாக்குகளை பறித்ததோடு மட்டும் நின்று விடாது இந்தியாவின் அயல் நாடுகளுடன் அரசியல் உறவில் ஏற்பட்டிருந்த விரிசலை தனக்கு அதனை சாதகமாக்கி 1964 ல் பல லட்சம் மலையகத்தவர்களை நாட்டை விட்டே வெளியேற்றும் ஒப்பந்தத்தை (சிரிமா-சாஸ்திரி) சிறிமாவோ பண்டாரநாயக்கா மேற்கொண்டார். இது இரு நாடுகளும் இணைந்து நடாத்திய முதலாவது இனப்படுகொலை என்றே அடையாளப்படுத்தல்.

அதே சிறிமாவோ பண்டார நாயக்க தமது 1970- 77 ஆட்சி காலகட்டத்தில் தோட்டங்களை அரசுடைமையாக்குவதாக கூறி சிங்களமயமாக்கி பல தோட்டங்களில் சிங்கள குடியேற்றங்களை உருவாக்கி; உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தை அவர்களின் வாழ்விடத்தில் இருந்து சிங்கள காடையர்களைக் கொண்டு அடித்து துரத்த இடமளித்த வரலாறும் உண்டு.

மேலும் நாட்டின் பொருளாதார சீர்திருத்த செயல் திட்டத்தினை முன்னெடுத்து மலையத்தவர்களை பட்டிணி சாவிற்குள் தள்ளி கொலை செய்ததையும் மறக்க முடியாது.இதனால் பல ஆயிரம் குடும்பங்கள் உயிர் பாதுகாப்பு தேடி சுயமாகவும், காந்திய வழிகாட்டலோடும் வடக்கு மற்றும் கிழக்கு சென்று குடியேறினர். இதனையே சிங்கள பௌத்தமும் விரும்பியது.

அடுத்து வந்த ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலத்தில் திறந்த பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி எனும் பேரில் மலையகத்தவர் வாழுடங்கள் சூறையாடப்பட்டு அவ் அவ்விடங்களில் இருந்து மலையக மக்கள் வெளியேற்றப்பட்டனர். 

அவர்கள் காலத்தில் நடந்த திட்டமிட்ட இனவாத வன் செயலின் காரணமாக பாதிக்கப்பட்டோர் வடக்கு கிழக்கிற்கும், இந்தியாவிற்கும் சென்றனர். மலையகத்தை அபிவிருத்தி திட்டத்திற்குள் கொண்டுவராது, பெருந்தோட்டத் தொழிலுக்கு அப்பால் தொழில் வாய்ப்பினை உருவாக்காது, கல்வி, சுகாதாரத் துறைகளை மேம்படுத்தாது கைவிட்டதால் ஆயிரக்கணக்கானோர் மலையகத்தை விட்டு தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் தினமும் வெளியேறிவருகின்றனர். இதிலே மௌன மகிழ்வு காண்பது சிங்கள பௌத்த பேரினவாதமே. 

அதுமட்டுமல்ல கடந்த காலங்களில் மலையக மக்களுக்கு காணி கொடுப்பதாக கூறிய எந்த பேரினவாத ஆட்சியாளர்களும் அதனை கொடுப்பதற்கு துணியவில்லை. அரசியலுக்காக வீடுகளைக் கட்டி சலுகை மாயைக்குள் அவர்களை தள்ளி தேர்தல் அரசியலையே முன்னெடுத்தனர். வீட்டுக்குரிய உரிமை முழுமையாக இதுவரை கொடுக்காது இருப்பதும் காணி உரிமை நிரந்தரமாக அவர்களுக்கு கிடைக்கக் கூடாது எனும் மனநிலையிலாகும்.

மலையக மக்கள் தமக்கே உரிய இன அடையாளங்களை பாதுகாப்பு தேசிய இனமாக வளர்ந்து நிற்கும் சூழ்நிலையில் அவர்கள் தங்களது கடும் உழைப்பாலும் உயிர்த்தியாகத்தாலும் உருவாக்கிய மலையகம் எனும் தேசத்தில் வாழ்வதே அவர்களுக்கான அரசியல் பாதுகாப்பாகும்.

தற்போது நிகழ்ந்திருக்கும் இயற்கை பேரிடர் இக்கட்டான சூழலை பயன்படுத்தி மலையக மக்களின் நில உரிமையை தட்டி பறிக்கும் செயல்பாட்டுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ எவரும் துணை போகக்கூடாது.

நாட்டில் வடகிழக்கு தமிழர்களும், மலையகத் தமிழர்களும் இந்துக்கள் அல்லது சைவர்கள் என்பதற்காக இதுவரை ஒடுக்கப்படவுமில்லை படுகொலை செய்யப்பட்டவுமில்லை. தமிழர்கள் என்பதற்காகவே நாம் தொடர்ந்து ஒடுக்கப்படுகின்றோம். அழிக்கப்படுகின்றோம்.நில பறிப்பிற்கு உள்ளாகின்றோம். இதற்கு எதிராக கூட்டு அரசியல் செயல்பாடு என்பது அவரவர் நிலத்தில் அவரவரது அடையாளங்களோடு அரசியல் கௌரவத்தோடு வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதாகும்.

இயற்கை அனர்த்தத்தை பயன்படுத்தி ஆட்சியாளர்கள் மலையக மக்களை வேறு இடங்களில் குடியமர்த்துக்கு எடுக்கும் முயற்சிக்கு எந்த வகையிலும் எவரும் இடமளிக்காத இருப்பதோடு அவர்களின் அரசியல் பாதுகாப்பு மிகு எதிர்காலம் கருதி மலையகத்துக்குள்ளேயே அவர்களின் வாழ்வியலை உறுதிபடுத்த வடக்கு கிழக்கு மலையகமாக ஒன்றுபடுவோம். மலையகமே மலையக மக்களின் தாயகம். அங்கு சலுகைகளோடு மட்டுமல்ல மண்ணுரிமையோடு வாழ்வதே அரசியல் கௌரவம் என்று தெரிவித்துள்ளார். 

மலையகத்துக்குள்ளேயே அவர்களின் வாழ்வியலை உறுதிபடுத்த வடக்கு கிழக்கு மலையகமாக ஒன்றுபடுவோம் - அருட்தந்தை சத்திவேல் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு மலையக மக்கள் என்றுதானே கூறியுள்ளார் அப்படியானால் மலையகத்தில் வாழும் நாங்கள் முஸ்லீம்களும் வந்து குடியேரலாமா?. மாவனல்லய், கம்பொல, ஹேம்மாத்தகம, அக்குரனை, மடவளை போன்ற பகுதிகளும் மலைகம்தானே? செல்வசன்ந்திதி முருகன் கோயிலுக்கு பக்கத்தில் சவுதி உதவியுடன் செந்னிற பள்ளி, மதரசாக்களுடன் கட்ட அனுமதிப்பார்களா? மாலை 6 மணிக்கு பின், பாபத் கறி, பீஃப் கொத்து, தலைக்கறி,ஆட்டுக்கள் சூப், கத்தான்குடி ஸ்பெசல் புரியானி, கோல்பேசில் அல்லது மாளிகாவத்தையில் போல் நானாமார்களின் கடைகளை நல்லுர் கோவில் வளாகத்தை சுற்றி அமைக்க அனுமதிப்பார்களே? நாங்களும் மலையகம்தானே?

  • கருத்துக்கள உறவுகள்
On 11/12/2025 at 02:32, கிருபன் said:

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

பாசத்தோடு அவர்களை அழைத்தால் மட்டும் போதாது, எந்தவித பொருளாதார கல்வி வேலைவாய்ப்பு வதிவிடங்கள் இல்லாத மக்களுக்கு இதெல்லாம் ஏற்படுத்தி தர சுமந்திரன் ஐயா தயாராவும் இருக்கணும்.

இலங்கையின் பொருளாதாரத்தின் உயிர்நாடியே தேயிலை ஏற்றுமதிதான், தேயிலை தோட்ட தொழிலை மலையக தமிழரை தவிர இலங்கயில் வேறு எந்த பிரிவினரும் தேடி சென்று செய்யபோவதில்லை தேடி போனாலும் அவர்களால் அரைவயிறு கஞ்சியுடன் அடுத்து மாற்று துணியும், நாள்முழுக்க உழைத்துவிட்டு வீட்டுக்கு போனால் கால்நீட்டிக்கூட படுக்க முடியாத அளவிற்கு லயன் வீட்டு வாழ்க்கையுடனுமோ வாழ முடியாது.

அப்படி எவரும் இலகுவாக செய்யமுடியாத ஆனால் இலங்கைக்கு காசை கொட்டும் ஒரு தொழிலை செய்யும் மக்கள் கூட்டத்தை வேறு இடங்களில் குடியேற விட்டுவிட்டு முதுகில் கூடையை கட்டிக்கொண்டு தேயிலை கொழுந்து பறிக்க சிங்களவன் தயாரா இருப்பான்னா நினைக்கிறீங்க? எக்காரணம் கொண்டும் அந்த மக்களை அந்த நிலத்தைவிட்டும் நகர தொழிலை விட்டும் சிங்களவன் ஒருபோதும் அனுமதிக்கமாட்டான். வேண்டுமென்றால் ஒரு சில குடும்பங்கள் இடம் பெயரலாம்.

நிலசரிவில் பாதிக்கப்பட்டு வசிப்பிடம் இல்லாமல் நிப்பது மலையக தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர் முஸ்லீம்களும் அடங்கும். மலையக மக்கள் ஏறக்குறைய இருநூறு வருடங்களாய் வாழ்ந்த புவிசார்பை விட்டு நீங்கமறுத்தால், அங்கு பாதிக்கப்பட்ட சிங்களவரும் முஸ்லீம்களும் மலையக மக்கள் தமிழர்பகுதியில் குடியேறலாம் என்றால் நாங்கள் மட்டும் ஏன் அங்கு குடியேற கூடாது என்று கேள்வி எழுப்புவார்கள்,

அவர்களுக்கு சிங்கள அரசுகளும் எதிர்கட்சி அமைப்புகளும் முடிந்தவரை உதவி செய்தே ஆவார்கள், ஆனால் தமிழர்களுக்கு அதனை எதிர்பார்க்க முடியாது.

அப்போது நிலமை சும்மாபோன தேரை சுமந்திரன் சொரிஞ்சுவிட்டு நடு ரோட்டில இழுத்து விட்டமாதிரி ஆகும் நிலமை.சுமந்திரன் கற்றறிவில் மேலானவரா இருக்கலாம், ஆனால் பட்டறிவில் சுத்த ஞான சூனியம்.

அதற்கப்பால் வடகிழக்கு மண்ணில் அவர்கள் குடியேறுவதில் எந்த தவறும் இல்லை, ஆனால் குடியேறவிட்டுவிட்டு இவங்கள் ஏசி காரில் தங்கட அலுவல்களை பாத்துக்கொண்டு திரிவார்கள், வாக்களித்த தமிழர்களைபற்றியே நினைக்காத இந்த தத்தி தலைவர்கள் வாழ்வோடு தினமும் போராடும் அந்த மக்கள் தம் காலில் நிக்கும்வரை துணையாக நிப்பார்கள் என்றா நினைக்கிறோம்?

அடுத்து பார்க்கவேண்டிய விடயம், ஏற்கனவே கிளிநொச்சி வன்னி, யாழ்ப்பாணத்தில் மலையக மக்கள் வாழ்ந்தார்கள்தான், அவர்களை வடகிழக்கு சமூகம், தோட்ட வேலைக்கும், தேத்தண்ணி கடையில் கிளாஸ் கழுவுற வேலைக்கும், பண்ணைகளை கவனிக்கவும், மேலே ரசோதரன் குறிப்பிட்டதுபோல் மனித மல வண்டிகளை தள்ளுற வேலைகளுக்கும், லொறியில் இருந்து சாமான் இறக்குற வேலைக்கும் அமர்த்தி இன்று மலையக மக்கள் அரசிடம் இருந்து பெறும் மாத வருவாயில் பாதிகூட வருஷ வருவாயாக கொடுக்காது,

ஒரு வேட்டி சேலை, ஒரு சில ஆயிரம் அவர்களின் இரத்தத்தை உறிஞ்சியதுக்கு கூலியாக கொடுத்து போதாக்குறைக்கு வீட்டுக்கு வெளியே நிக்க வைத்தும் , வயசு முதிர்ந்தவர்கள் பெண்களாக அவர்கள் இருந்தாலும் மரியாதையே துளியும் கொடுக்காமல் ஒருமையில் வாடா போடி என்று அழைத்தும் அவமானபடுத்தியும் மனித குலத்தில் என்னமோ அவர்கள் இவர்களுக்கு சேவகம் செய்ய பிறந்தவர்கள் போல் நடத்தும் அடிமைதன வாழ்வை வடக்கு கிழக்கில் பெறுவதைவிட சொந்த நிலத்தில் தமக்கு தெரிந்த தொழிலை செய்து வாழ்வதே அவர்களுக்கு சுய கெளரவம்.

வடக்கு கிழக்கில் குடியேறிய மலையக மக்கள் இன்றுவரை தமது சொந்த உழைப்பில் கல்வி பொருளாதாரத்தில் முன்னேறி வெற்றிபெற்ற தமிழர்களாக வாழ்ந்த ஒரு குடும்பத்தை கண்டதுண்டா? அதற்கு பிளடி வடகிழக்கு தமிழன் அவர்களை அனுமதித்ததுண்டா?

மலையமக்கள் தொழிலை பார்க்கும் இடத்திற்கு செல்லகூடிய வகையில் பாதுகாப்பான இடங்களில் குடியேறுவதே சிறப்பானதாக இருக்கும். மறுபார்வையில் மலையக எம் தமிழ்மக்கள் தமது இடத்தைவிட்டு லட்சங்களில் வெளியேறினால் தமிழர்கள் வாழ்ந்த அப்பிரதேசம் முற்றுமுழுதாக சிங்கள முஸ்லீம்களால் நிரப்பபட்டுவிடும், வடக்க்கு கிழக்கில் எம் நிலங்களை பறிகொடுத்தது போதாதென்று இலங்கை முழுவதும் தமிழர் இருப்பை முற்றுமுழுதாய் கைவிட்டு போகவேண்டுமா?

நாலு நல்ல வார்த்தையா பேசி பழகு சுமந்து.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

"பிரதேசவாதம்"

இது உலகில் உள்ள அனைத்து சமூகத்தினரிடமும் உண்டு.

ஆகையால் எம்மை நாமே தாழ்த்திக்கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை.

அண்ணா,

பிரதேசவாதமும், பிரதேச மேட்டிமைவாதமும் வேறுபட்டவை.

உலகெங்கும் பெரும்பாலான மனிதர்கள் தங்களுக்கென்ற சில அடையாளங்களுடனேயே வாழ்கின்றார்கள். அது இனம், மொழி,மதம், பிரதேசம் என்று பல வகைகளில் இருக்கலாம். குலம், கோத்திரம் என்று கூட இந்த அடையாளங்கள் இருப்பதுண்டு. தங்களின் அடையாளங்களுக்கு விசுவாசமாகவும், தங்களின் அடையாளங்களை முன்னிறுத்தியும் மனிதர்கள் வாழத் தலைப்படுகின்றார்கள்.

ஆனால் தங்களை நிகர்த்த அடையாளங்கள் இல்லாதவர்கள் கீழானவர்கள், இழிவானவர்கள், திறமையற்றவர்கள், வீரம் அற்றவர்கள் என்பது போன்ற ஒப்பீடுகளும், கணிப்புகளும் மேட்டிமைவாதம் என்னும் வகையிலேயே வருகின்றது. பிறப்பினாலேயே தங்களை மேலானவர்கள் என்று நினைத்துக் கொள்வது மட்டும் இல்லாமல், அப்படியே நடந்து கொள்வதும் மேட்டுமைவாதமே.

இந்த பிரதேச மேட்டுமைவாதமே இலங்கையில் சில பிரதேச மக்களிடம் இருக்கின்றன என்று தான் நான் சொல்ல முயன்றிருந்தேன். உதாரணம்: யாழ்ப்பாண தமிழ் மக்கள், கண்டி சிங்கள மக்கள். இவர்கள் இருவரும் இந்த விடயத்தில் வெளிப்படுத்தும் மேட்டுமைவாதத்தை இலங்கையில் வேறு எவரும் வெளிப்படுத்துவதில்லை என்பதே என் அனுபவம்.

பிறப்பினாலேயே ஒருவர் சிறந்தவர் ஆகி விடுகின்றார் என்றால், இங்கே எதற்குமே பொருள் இல்லை என்று ஆகிவிடுகின்றது அல்லவா.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

சிங்களவர்களும் வடக்கு கிழக்கில் குடியேற்றங்களை அமைக்க ஆசைப்படுகின்றார்கள். சுமந்திரனும் அதே போல் ஆசைப்படுகின்றார்.

சிங்கள மாகாணங்களில் இப்படியான தமிழர் குடியேற்ற நிலங்களை அமைக்க முடியாதா?

அவர்களும் தமிழர்கள்தானே. அவர்களுக்கு நேர்ந்த அனர்த்தங்களைப் பார்த்து நாங்கள் வாருங்கள் என்றழைப்பதுதானே முறை. வருவதும் வராமல் இருப்பதும் அவர்களது விருப்பம். அது தவிர சிங்களவர்கள் தங்கள் இடங்களில் அவர்களை குடியேற அழைப்பது அவர்களது பிரச்சினை.

நான் கொழும்பில் இருந்த போது அவதானித்தேன், மலையகத்தில் இருந்த தமிழர்கள் பஸ் ஓட்டுனர்களாக, வியாபாரிகளாக, பல தொழில்கள் செய்பவர்களாக, மூன்று மொழி பேசும் ஆற்றலுடையவர்களாக இருந்தார்கள். கொழும்பும் சிங்களப் பகுதிதான்.

இன்னுமொன்று ஊரில் பார்த்தேன் பல வீடுகள் இடிந்து பாழடைந்து, காணிகள், காடுகள் போல் இருந்தன. சமீபத்தில் கூட சாவகச்சேரி உபய பாராளுமன்ற உறுப்பினர் சபையில் உரையாற்றும் போது சொன்னார், “ யாழ்ப்பாணத்துக்கு நிதி ஒண்டும் வேண்டாம். உங்களுக்குத் தேவை எண்டால் நாங்கள் தருகிறோம்என்று. இன்று மீனவர்கள் போராட்டத்தில் கூட,” உங்களுக்கு நாங்கள் அரிசி, பருப்பெல்லாம் தாறம்என்று, நீங்கள் என்னவென்றால் அங்கே வாழ்வாதாரப் பிரச்சினை என்று சொல்கிறீர்கள். புரியவில்லை.

ஒரு தடவை நான் பயணித்த வாகனத்தை ஓட்டி வந்தவர்  அப்புத்தளையைச் சேர்ந்தவர். அவர் என்னிடம் கேட்டார், “ நாகர்கோவில் திருவிழாவுக்கு, வெளிநாட்டில் இருந்து வந்த ஆக்களைக் கூட்டிக் கொண்டு போனன். நல்ல சனம். சனங்கள் போறதுக்கு ஒரு பாதை திரும்ப வாறதுக்கு ஒரு பாதை எண்டு பிரிச்சு , பொலீஸ் ரேப் கட்டி தடுப்புகள் போட்டிருந்தார்கள். கொஞ்ச நேரம்தான் இரண்டு பக்கங்களாலேயும் சனம் போக வரத் தொடங்கிட்டிது. பொலீஸும் எவ்வளவோ சொல்லிப் பாத்தும் அவையள் தங்கட இஸ்டத்துக்கு போய் வந்து கொண்டிருந்திச்சினம். ஏன் அப்பிடி?” பதில் நான் சொல்லவில்லை. ஆக நாங்கள் வருந்தி அழைத்தாலும்….

அந்த நாள் முதல் இந்த நாள்வரை நாங்கள் மாறவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Kavi arunasalam said:

அவர்களும் தமிழர்கள்தானே. அவர்களுக்கு நேர்ந்த அனர்த்தங்களைப் பார்த்து நாங்கள் வாருங்கள் என்றழைப்பதுதானே முறை. வருவதும் வராமல் இருப்பதும் அவர்களது விருப்பம். அது தவிர சிங்களவர்கள் தங்கள் இடங்களில் அவர்களை குடியேற அழைப்பது அவர்களது பிரச்சினை.

நான் கொழும்பில் இருந்த போது அவதானித்தேன், மலையகத்தில் இருந்த தமிழர்கள் பஸ் ஓட்டுனர்களாக, வியாபாரிகளாக, பல தொழில்கள் செய்பவர்களாக, மூன்று மொழி பேசும் ஆற்றலுடையவர்களாக இருந்தார்கள். கொழும்பும் சிங்களப் பகுதிதான்.

இன்னுமொன்று ஊரில் பார்த்தேன் பல வீடுகள் இடிந்து பாழடைந்து, காணிகள், காடுகள் போல் இருந்தன. சமீபத்தில் கூட சாவகச்சேரி உபய பாராளுமன்ற உறுப்பினர் சபையில் உரையாற்றும் போது சொன்னார், “ யாழ்ப்பாணத்துக்கு நிதி ஒண்டும் வேண்டாம். உங்களுக்குத் தேவை எண்டால் நாங்கள் தருகிறோம்என்று. இன்று மீனவர்கள் போராட்டத்தில் கூட,” உங்களுக்கு நாங்கள் அரிசி, பருப்பெல்லாம் தாறம்என்று, நீங்கள் என்னவென்றால் அங்கே வாழ்வாதாரப் பிரச்சினை என்று சொல்கிறீர்கள். புரியவில்லை.

ஒரு தடவை நான் பயணித்த வாகனத்தை ஓட்டி வந்தவர்  அப்புத்தளையைச் சேர்ந்தவர். அவர் என்னிடம் கேட்டார், “ நாகர்கோவில் திருவிழாவுக்கு, வெளிநாட்டில் இருந்து வந்த ஆக்களைக் கூட்டிக் கொண்டு போனன். நல்ல சனம். சனங்கள் போறதுக்கு ஒரு பாதை திரும்ப வாறதுக்கு ஒரு பாதை எண்டு பிரிச்சு , பொலீஸ் ரேப் கட்டி தடுப்புகள் போட்டிருந்தார்கள். கொஞ்ச நேரம்தான் இரண்டு பக்கங்களாலேயும் சனம் போக வரத் தொடங்கிட்டிது. பொலீஸும் எவ்வளவோ சொல்லிப் பாத்தும் அவையள் தங்கட இஸ்டத்துக்கு போய் வந்து கொண்டிருந்திச்சினம். ஏன் அப்பிடி?” பதில் நான் சொல்லவில்லை. ஆக நாங்கள் வருந்தி அழைத்தாலும்….

அந்த நாள் முதல் இந்த நாள்வரை நாங்கள் மாறவில்லை.

கொழும்பு சிங்களப் பகுதி அல்ல. அது தலைநகரம். அநேகமாக தலைநகரங்கள் அந்த நாடுகளின் இனத்தை பிரதிபலிப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் ஒன்றுமே எனக்கு புரியும்படியாக இல்லை ..........

எதோ யாழ்களத்தில் இருப்பவர்கள் சுமந்திரனின் புள்ளிகளை மறைக்க பெயிண்ட் அடிக்க போகிறார்கள் என்று எண்ணுகிறேன் நல்ல விஷயம் வரவேற்பிற்கு உரியது

சுமந்திரனின் பரம்பரை காணி இரண்டு பருத்தித்துறையில் சும்மா கிடக்கிறது கோடைகாலம் போனபோதும் பார்த்து வந்தேன். மலையக தமிழர்களில் திடீரென காதல் மிகுந்து பொங்கி வழிந்து அடக்கமுடியாது சஞ்சல படுபவர்கள் நான்கு மலையக குடும்பங்களை அழைத்து வந்து அங்கு முதற்கட்ட்மாக குடியமர்த்தி காதலை கட்டுக்குள் கொண்டுவரலாம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.