Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலில் வண பிதா கருணாரட்ணம் அடிகளார் பலி.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலில் வண பிதா கருணாரட்ணம் அடிகளார் பலி.

இன்று மதியம் 12.30 மணியளவில் வன்னியில் மல்லாவி - வவுனிக்குளம் வீதியில் இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் பிரிவினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் வடக்கு - கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் பணிப்பாளர் வண பிதா கருணாரட்ணம் அடிகளார் பலியாகியுள்ளார்.

தமிழ் நெட்.

Edited by அருண்

  • கருத்துக்கள உறவுகள்

ஆ... மீண்டும் ஒரு பெரியவரா.

வண பிதா கருணாரட்ணம் அடிகளார் அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் மடு மாதா உண்மை நிலை என்ன என நிலவரம் நிகழ்வில் அவர் தெரிவித்த கருத்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

:( தமிழ்த் தேசியத்தையும், ஈழ விடுதலையையும் நேசிப்பவர்களை சிங்களப் பேரினவாதம் அழிப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது. இப்படுகொலைகளின் மூலம் தமிழ்த் தேசிய எழுச்சியை நசுக்கிவிடலாம் என்று அது நினைக்கிறது.

மரணித்த வண பிதா கருணாரட்ணம் அடிகளாருக்கு கண்ணீர் வணக்கங்கள்!

இந்த படுகொலையை செய்த இலங்கை அரசாங்கம்

சர்வதேச கவனத்தை திசை திருப்புவதற்காக சிங்கள

பிரதேசங்களில் பெரிய குண்டுத்தாக்குதலை மேற்கொள்ளலாம்...

அடிகளாருக்கு அஞ்சலிகள்!

ஈழவிடுதலை போராட்டத்தில் முக்கிய பொறுப்பு வகிப்போர் தங்கள் பாதுகாப்பில் கூடுதல் கவன்ம் எடுப்பார்களாக!

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயராஜ் பென்ரோண்டோபுள்ளேக்காக போல.

மாறி மாறி ஆக்களைக் கொன்று ஒருவரை ஒருவர் யார் திறமைசாலிகள் என்று பரீட்சிக்கினம் போல..! :lol::(

வன்னியின் பாதுகாப்புக் கட்டமைப்புக்கள் பலவீனமாக உள்ளமை மீண்டும் வெளிப்பட்டிருக்கிறது..! :D

Edited by nedukkalapoovan

கருணாரட்ணம் அடிகளாருக்கு அஞ்சலிகளும் வணக்கங்களும். :(

வடக்கு கிழக்கு மனித உரிமைகள் அமைப்பை (NESoHR http://www.nesohr.org ) கட்டியெழுப்பியதில் முக்கிய பங்கு வகித்தவர்.

பல்வேறு பட்ட நெருக்கடிகள் வளத்தட்டுப்பாடுகள் மத்தியில் NESoHR காத்திரமாக இயங்குகிறது. மனிதஉரிமை அறிக்கைகளை வருடாந்த மற்றும் மதாந்த அடிப்படையில் வடக்கு கிழக்கு தகவல் சேகரிக்கும் அமைப்பினூடாக சேகரித்து ஆங்கிலத்தில் உலகிற்கு அறிக்கை வழங்கும் முக்கிய பணியைச் செய்கிறார்கள். போர்ச்சூழலில் இவர்களது கடின உழைப்புகளை சர்வதேச அளவில் பயன்படுத்தும் முக்கிய பணி புலம்பெயர்ந்தவர்களின் அமைப்புகளிலும் ஊடகங்களிலும் தான் தங்கியுள்ளது.

NESoHR அய் பலப்படுத்தி அவர்களிற்கு சர்வதேச அளவில் உரிய அங்கீகாரத்தை பெற்றுக் கொடுப்பது தான் கருணாரட்ணம் அடிகளாருக்கு செய்யக் கூடிய பொருத்தமான அஞ்சலியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிளி பாதர் என பலராலும் அன்பாக அழைக்கப்பட்ட அருட்பணியாளர் கருணாரட்ணம் அவர்கள் யாழ். மறைமாவட்டத்தில் தமிழீழ விடுதலைக்காக துணிந்து வெளிப்படையாக தமது ஆதரவை வழங்கிய குருக்களுள் ஒருவர். இவரின் இழப்பு உண்மைக்கு சாட்சியம் பகரும் ஈழத் திருச்சபைக்கும் முக்கியமாக மனித உரிமை மீறல்களால் பாதிப்படைந்துள்ள மக்களுக்கும் பேரிழப்பாகும். இவரது மறைவால் துயருறும் யாழ். மறைமாவட்டத்திற்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் சகோதர சகோதரிகளுக்கும் எமது கண்ணீர் அஞ்சலிகள். அவர் மறைந்தாலும் அவரது கொள்கைகள் என்றும் மறையாது. இவரது இழப்பால் துயருறும் அவரது சகோதரர் அருட்பணி. ஞானரட்ணம் அவர்களுடன் எமது துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.

வடக்கு கிழக்கு மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் கிளைமோர் தாக்குதலில் பலி

Sunday, 20 April 2008

வடக்கு கிழக்கு மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் வணக்கத்திற்குரிய பிதா கருணாரத்னம் க்ளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

வன்னி அம்பாள்குளம் பிரதேசத்தில் வைத்து இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.

இன்று நண்பகல் 12.30 அளவில் வணக்கத்திற்குரிய பிதா கருணாரத்னம் மீது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

http://www.ajeevan.ch/

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்கர்,

நியாயமான கருத்து.

புலிகேசி,

தயவுசெய்து பெயர்களைத் தவிருங்கள். உங்கள் அநுதாபம் உண்மையாக இருந்தாலும் கூட அது அந்த நபருக்கு எதிரானதாக மாறலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு,

இதுவொன்றும் உங்களுக்குக் கூறும் அறிவுரையல்ல, எனது தாழ்வான கருத்து மட்டுமே.

சுமார் 200,000 முப்படையினரையும் பொலீசாரையும் கொண்ட அரசாங்கத்தாலேயே தனது எல்லைகளைப் பாதுகாப்பது கடிணமாக இருக்கும்போது, வெறும் 10,000 பேரை மட்டுமே கொண்ட ஒரு போராளி அமைப்பினால் தனது எல்லைகளை நூற்றுக்கு நூறு வீதம் பாதுகாப்பதென்பது நடைமுறைச் சாத்தியமான விடயமில்லை.

இதற்காக நாம் இழப்புகளைக் கண்டும் பேசாமல் இருக்க வேண்டும் என்று சொல்ல வரவில்லை. தம்மாலான சகல பாதுகாப்பு ஏற்பாடுகளையும் புலிகள் மேற்கொண்டுதான் இருப்பார்கள். வன்னியில் இருக்கும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பாதுகாப்புக் கொடுக்கக்கூடிய வசதி புலிகளுக்கு இல்லை. எல்லாவற்றிற்கும் புலிகளின் பாதுகாப்பில் உள்ள குறை என்று சொல்லாது சகலரும் தத்தமது பாதுகாப்பில் கவனமாக இருந்தால் தேவையற்ற இழப்புகளைக் குறைக்கலாம்.

இழப்புகளைப் புலிகள் விரும்பப்போவதுமில்லை, அவற்றைத் தடுக்க தம்மாலான நடவடிக்கைகளை எடுக்காமல் விடப்போவதுமில்லை.

இதைவிட சொல்ல வேறில்லை.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

வண பிதா கருணாரட்ணம் அடிகளாருக்கு கண்ணீர் அஞ்சலி. அன்னாரின் இழப்பு தமிழ்மக்களுக்கு பேரிழப்பாகும்.

561044vftgmurpyv.gif

aj_kar.JPG

வண பிதாவுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்

இன்னுமொரு நாட்டு பற்றாள்னின் மறைவு

உங்கள் ஆண்மா இறைவனிடம் சேர எல்லாற்றுக்கும் பொதுவான இறவனை வேண்டுகிறேன்.

அன்னாருக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்..!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மக்களின் மனித உரிமைப் பிரச்சனைகளை உலகிற்கு எடுத்துரைத்த அடிகளாருக்குக் கண்ணீர் அஞ்சலிகள்

தமிழ்மக்கள் மீதான அடக்குமுறைகளை பன்னாட்டுச் சமூகத்திற்கு எடுத்துச் செல்வதற்காக அல்லும் பகலும் அயராது உழைத்து கொடியவர்களின் கோரத் தாக்குதலில் சாவினை அணைத்துக்கொண்ட அருட்தந்தை மதிப்பிற்குரிய கருணாரட்ணம் அடிகளாருக்கு கண்ணீர் வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் அவலங்களை உலகுக்கு எடுத்துச்சொல்ல அயராது பாடுபட்ட வண பிதா கருணாரட்ணம் அடிகாளருக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

இத்தகைய படுகொலைகள் மூலம் தமிழ் மக்களின் தாயகம் நோக்கிய பயணத்தை தடுத்து நிறுத்தமுடியாது என்பதைப் பேரினவாத சிங்களவர்கள் புரிந்துகொள்ளும் காலம் தொலைவிலில்லை..

எமது தமிழ்மக்கள் மீதான அடக்குமுறைகளை பன்னாட்டுச் சமூகத்திற்கு எடுத்துச் செல்வதற்காக அல்லும் பகலும் அயராது உழைத்து கொடியவர்களின் கோரத் தாக்குதலில் சாவினை அணைத்துக்கொண்ட அருட்தந்தை மதிப்பிற்குரிய கருணாரட்ணம் அடிகளாருக்கு கண்ணீர் வணக்கங்கள்.

இவரது பிரிவாழ் வாடும் எம் இன மக்கள் இவ் சாவை கண்டு துவண்டு விடாது இவரது பிரிவால் அவர் விட்டு சென்ற சேவையை எமது கத்தோலிக்க சமூகம் மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடர வேண்டடும் என்று கேட்டுக்கொண்டு இவரது மரணத்திலும் எமது தமிழ் மக்களுக்கு நன்மை கிடைக்க எதிரி தலை குணிந்து வெருண்N;டாட அடிகளாரின் ஆண்மா சாந்தி அடைய இறைவனைப் பிராத்தித்து கொண்டு துயரில் விடை பெறும் அன்பன்

நாதன் தோமஸ்

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் கிளேமோர் தாக்குதல் கருணாரட்னம் அடிகளார் பலி

வீரகேசரி நாளேடு - வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் தலைவர் மரியாம்பிள்ளை சேவியர் கருணாரட்ணம் அடிகளார் வன்னியில் நேற்று இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் பலியானார். மாங்குளத்தில் நேற்று முற்பகல் திருப்பலி ஒப்புக்கொடுத்து விட்டு வவுனிக்குளம் நோக்கி இவர் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது மல்லாவி மாங்குளம் வீதியில் அம்பாள்குளம் குழந்தையேசு கோவிலடிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று பிற்பகல் 12.30

மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் கருணாரட்ணம் அடிகளார் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவித்தன.

2002ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தினை ஆரம்பித்து அதன் தலைவராக பணியாற்றி வந்தார்.

வடக்கு கிழக்கில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை இந்த செயலகம் அறிக்கையிட்டு வந்ததுடன் சர்வதேசத்துக்கும் தெரியப்படுத்தி வந்தது. இந்த செயலகத்தின் உறுப்பினர்களாக சுட்டுக் கொல்லப்பட்ட மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், முன்னாள் அம்பாறை மாவட்ட எம்.பி. சந்திரநேரு உட்பட பலரும் அங்கம் வகித்திருந்தனர். ஆழ ஊடுருவும் படையணியினரின் கிளேமோர் தாக்குதலிலேயே கருணாரட்ணம் அடிகளார் கொல்லப்பட்டுள்ளதாக வன்னியில் புலிகள் அறிவித்துள்ளனர்.

கருணாரட்ணம் அடிகளார் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் கிளிநொச்சியிலிருந்து தனது வாகனத்தில் புறப்பட்டு திருப்பலி பூஜை ஒன்றுக்காக மல்லாவி நோக்கி சென்று கொண்டிருக்கையிலேயே வீதி ஓரத்தில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த கிளேமோர் குண்டு வெடித்துள்ளது. கிளேமோர் தாக்குதலில் கருணாரட்ணம் அடிகளார் பயணம் செய்த வாகனம் பெரும் சேதமடைந்துள்ளது.

வடக்கு கிழக்கு மக்களிற்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த அருட்தந்தை கருணாரட்ணம் அடிகளார் இடம்பெயர்ந்த மக்களுக்கு சேவை புரிவதில் தம்மை முழுமையாக அர்ப்பணித்திருந்தார்.

அருட்தந்தை கருணாரட்ணம் அடிகளார் துறவறம் பூண்டு குருவாவதற்கு முன்னர் வங்கி அதிகாரியாக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

1951ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் திகதி யாழ்ப்பாணம் கரவெட்டியில் பிறந்த அருட்தந்தை கருணாரட்ணம் அடிகளார், தனது ஆரம்பக் கல்வியை கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியிலும் பின்னர் உயர் கல்வியை யாழ். பத்திரீசியார் கல்லூரியிலும் மேற்கொண்டார். கல்லூரிப் படிப்பின் பின்னர் வங்கியொன்றில் அதிகாரியாக பணியாற்றினார். பின்னர் குருத்துவ கல்லூரியில் சேர்ந்து 1989ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.

இவர் குருத்துவத்தில் நுழைவதற்கு முன்பு 1977ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல் பிரசாரங்களில் தமிழர் விடுதலை கூட்டணியின் பிரதான பேச்சாளராக திகழ்ந்தார்.

கூட்டமைப்பு கண்டனம்

கருணாரட்ணம் அடிகளாரின் மறைவு குறித்து கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி. அரியநேத்திரன்,

மனித உரிமைகளைப் பாதுகாப்பதாக நாடகமாடிக் கொண்டிருக்கும் மஹிந்த அரசாங்கம் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவரையே தனது கொலைக் கலாசாரத்திற்கு இரையாக்கியுள்ளது. வடகிழக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஸ்தாபகத் தலைவரான அருட்திரு கருணாரட்ணம் அடிகளார் தமிழர்களுக்காக சர்வதேச ரீதியில் குரல் கொடுத்து வந்தவராவார்.

அவரது படுகொலைக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்பதுடன் அரசாங்கத்தின் இவ்வாறான சூழ்ச்சி நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது. கடந்த 2002ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சமாதான ஒப்பந்த காலத்தின்போது அருட்திரு கருணாரட்ணம் அடிகளார் வடகிழக்கு மாகாணத்துக்கான மனித உரிமை ஆணைக்குழுவை ஸ்தாபித்து அதன் தலைவராக செற்பட்டு வந்தார்.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை வெளியுலகுக்கு எடுத்துக்காட்டி தமிழர்களுக்காகவே தம்மை அர்ப்பணித்து சேவையாற்றியவர். இவ்வாணைக்குழுவில் முன்னாள் எம்.பி.க்களான சந்திரநேரு மற்றும் ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோரும் அங்கம் வகித்திருந்தனர்.

கடந்த 2005ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் சந்திரநேரு எம்.பி.யும் அதே ஆண்டு டிசெம்பர் மாதம் ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி.யும் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இறுதியாக அதன் தலைவரையும் நேற்று அரசாங்கம் தனது சதிவலைக்குள் சிக்க வைத்துவிட்டது.

கருணாரட்ணம் அடிகளார் தமிழர்கள் எதிர்நோக்கும் அடிப்படை உரிமை மீறல் விடயங்கள் தொடர்பாகவும் மற்றும் பல்வேறு விடயங்கள் குறித்தும் சர்வதேசத்துக்கு எடுத்துரைத்து வந்தவர். அருட்திரு கருணாரட்ணத்தின் படுகொலையானது தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பாகி விட்டுள்ளது. இதற்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும்.

இந் நாட்டில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை சர்வதேச மட்டத்திற்கு மறைப்பதற்கான செயற்பாடுகளே இவ்வாறான படுகொலைகள் என்பதை சர்வதேசமும் நன்றாக புரிந்து கொள்ளவேண்டும்.

தமிழர் விரோத பேரினவாதம் தமிழர் ஆதரவாளர்களை தமது கொலைக் கலாசாரத்திற்கு இரையாக்கிக் கொண்டிருப்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது என்றார்.

சிறிலங்காப் படையினரின் கிளைமோர்த் தாக்குதலில் வடக்கு - கிழக்கு மனித உரிமைகள் செயலகப் பணிப்பாளர் அருட்திரு எம்.எக்ஸ்.கருணாரட்ணம் அடிகளார் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

செய்தியை பார்க்க மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. வணபிதாவுக்கு கண்ணீர் அஞ்சலிகள். ஆழ்ந்த இரங்கல்கள். வணபிதாவின் பல நேர்முகங்களை ரீவிஐ தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன். கருணாரட்னம் அடிகளாரின் இழப்பு தாயக மக்களிற்கு ஒரு பேரிழப்பு.. கண்ணீர் அஞ்சலிகள்.. !

  • கருத்துக்கள உறவுகள்

மிக வேதனையான சம்பவம். அருட்திரு எம்.எக்ஸ்.கருணாரட்ணம் அடிகளாருக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

கரவெட்டி க்கு குறிப்பிட்ட சில நாட்களில் பெரிய 2வது அடி இது....

கண்ணீர் அஞ்சலி .............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.