Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தங்கம்மா அப்பாக்குட்டி காலமானார்

Featured Replies

தங்கம்மா அப்பாக்குட்டி காலமானார்

[ஞாயிற்றுக்கிழமை, 15 யூன் 2008, 05:52 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]

சைவத்துக்கும் சமூகத்துக்கும் பெரும் தொண்டாற்றிய "சிவத்தமிழ்ச் செல்வி" தங்கம்மா அப்பாக்குட்டி இன்று காலமானார்.

அண்மைக்காலமாக நோய் வாய்ப்பட்டு யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 83.

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகியாக இருந்து சைவத்துக்கும் தமிழுக்கும் பெரும் தொண்டாற்றிய செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள், ஏழை மக்களுக்கும் அநாதைப் பிள்ளைகளுக்கும் ஆதரவு இல்லங்கள் அமைத்து சேவையாற்றி வந்தார்.

பல நாடுகளுக்கும் சென்று சைவ சொற்பொழிவுகள் ஆற்றியும் தனது ஆதரவு இல்லங்களுக்கு நிதி திரட்டியும் இறக்கும் வரை தனது பணியைச் செவ்வனே செய்து வந்தார்.

தெல்லிப்பழையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னாரது உடல் நாளை தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலய அறங்காவலர் சபையிடம் கையளிக்கப்பட்டு அங்குள்ள யாத்திரிகர் மடத்தில் வணக்கத்துக்கு வைக்கப்படும்.

பின்னர் மாலை இறுதி நிகழ்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்

நாங்கள் முன்பு ஒருமுறை ஒரு நாடகவிழா ஒண்டு வச்சம். அதில பிரதம விருந்தினர்களில ஒருவராக கலந்துகொள்ளுறதுக்கு சிவத்தமிழ்செல்வியை அழைச்சு இருந்தம். அந்த விழாவுக்கு ஆக்கள் அணியுற பட்ச (பொக்கற்றில் குத்துவீனமே.. அது) நான்தான் வடிவமைச்சு செய்து இருந்தன். அப்ப... அவவிட்ட நான் அதை ஒரு வெள்ளித்தட்டில்வச்சு கொண்டுபோய் குடுத்து அணியுமாறு சொன்னன். அவவும் அதன் கலையம்சம்சத்தை பார்த்து ரசித்துவிட்டு அதனை மகிழ்ச்சியுடன் அணிந்துகொண்டா. இது சிவத்தமிச்செல்வியை முதலாவதாகவும், கடைசியாகவும் கண்ட ஒரு சம்பவம். அநாதைக் குழந்தைகளிற்கு அவர் வாழ்வு அமைத்துக்கொடுத்த பணியை என்றும் மறக்கமுடியாது. சிவத்தமிழ்ச்செல்விக்கு இதய அஞ்சலிகள்.. அவரது பிரிவால் துயரில் இருக்கின்ற குழந்தைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

appakuddy.jpg

இவரின் சொற்பொழிவை பலதடைவைகள் பார்த்தும் கேட்டுமிருக்கின்றேன்.நான் படித்த பாடசாலையிலும் நேரடியாக பார்த்திருக்கின்றேன்.

இவரின் ஆத்மா சாந்தியடைய அந்த துர்க்கை அம்மனை வேண்டுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுகநாவலருக்கு பின் ஈழத்தில் சைவத்துக்கு பெரும் தொண்டாற்றிய பெரும் மூதாட்டி அவர் என்றால் மிகையாகாது.

ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இவ்வளவு பெரிய தொண்டு நிறுவனங்களை கொண்டு நடாத்தியது என்னை ஆச்சரியப்படுத்தியது.

ஒரு சிறு உதவியை செய்து விட்டு விளம்பரம் தேடும் இந்த உலகத்தில் , அமைதியாக அவர் ஆற்றிய சேவை மறக்க முடியாதது.

சிவத் தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி பரிபூரண சிவலோக பதவிகிடைக்க எல்லாம் வல்ல துர்க்கை அம்மனை வேண்டுகின்றேன் .

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி இணையம் - அண்மைக்காலமாக நோய் வாய்ப்பட்டு யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 83.

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகியாக இருந்து சைவத்துக்கும் தமிழுக்கும் பெரும் தொண்டாற்றிய செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள், ஏழை மக்களுக்கும் அநாதைப் பிள்ளைகளுக்கும் ஆதரவு இல்லங்கள் அமைத்து சேவையாற்றி வந்தார்.

பல நாடுகளுக்கும் சென்று சைவ சொற்பொழிவுகள் ஆற்றியும் தனது ஆதரவு இல்லங்களுக்கு நிதி திரட்டியும் இறக்கும் வரை தனது பணியைச் செவ்வனே செய்து வந்தார்.

தெல்லிப்பழையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னாரது உடல் நாளை தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலய அறங்காவலர் சபையிடம் கையளிக்கப்பட்டு அங்குள்ள யாத்திரிகர் மடத்தில் வணக்கத்துக்கு வைக்கப்படும்.

பின்னர் மாலை இறுதி நிகழ்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்பாணத்தில் சிறந்த சமூகசேவையாளராக செயற்பட்டு வந்தவர். தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவராகச் செயற்பட்டு வந்தவர்.

இவரின் சேவையைப் பாராட்டிய யாழ் பல்கலைக்கழகத்தினால் கௌரவ முனைவர் (காலநிதி) பட்டம் கொடுத்து மதிப்பளித்தது. அமெரிக்கா ஹாவாய் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆச்சிரமம் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த இந்துப்பணி விருதை அம்மையாருக்கு வழங்கியது. அகில இலங்கை இந்து மாமன்றம் 2005 ஜூலை மாதத்தில் யாழ் மண்ணில் பொன் விழாவையொட்டி இந்து மாநாடு நடத்தியபோது அன்னைக்கு தெய்வத் திருமகள் என்ற பட்டம் வழங்கி மதிப்பளித்தது.

1925 ஆம் ஆண்டு யூலை 07ம் நாள் பிறந்த இவர் தனது 83வது அகவையில் இறைபதம் அடைந்தார். தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தான தலைவியும் ஆதரவற்ற குழந்தைகளின் காப்பகப் பொறுப்பாளருமான சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் செயற்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ-மைல் டொ அ fரிஎன்ட்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் இறைவனடி சேர்ந்த செய்தி கேட்டதும் ஓர் அதிர்ச்சி அலை என்னை வந்து தாக்கியது. அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன். அதேவேளை செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் 75 வது பிறந்தநாள் கவியரங்கம் 08.01.00 அன்று இலண்டன் ரூட்டிங் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்றபோது நான் படித்த கவிதை ஒன்றினையும் இங்கே இணைக்கிறேன். பொருத்தமாக இருக்கும் என்றும் எண்ணுகிறேன்.

தமிழீழ தெல்லியூரில் பிறந்து வந்தார், தன்னலமே எண்ணாமல் வளர்ந்துவந்தார்

செந்தமிழ் இலக்கியம் இலக்கணமும், தோத்திர சாஸ்திர நூல்களையும்

கண்போலக் கசடறக் கற்றுவந்தார், கற்றவை யாவற்றிலும் தெளிந்துநின்றார்

எண்ணிலா பட்டங்கள் பெற்றுவந்தார், மண்ணிலே தெய்வமாய் வாழுகின்றார்.

சிவத்தமிழ்ச்செல்வி, துர்க்காதுரந்தரி, திருவாசகக்கொண்டல் செஞ்சொற்செம்மணி

சிவஞான வித்தகர், பண்டிதர் சைவப்புலவர், கலாநிதியென பட்டங்கள் பெற்றுவிட்டார்

அகவை வருங்காலை ஆடம்பரம் வேண்டாம், அவநெறி வேண்டாம், முகமன் வேண்டாம்

வறுமை நிலைபோக்கி, முதுபெரும் அறிஞர் போற்றி, நன்னூல் போற்றுக என்றார்.

‘அன்பே சிவம்’ என்ற வாக்கினையே, அன்றாடம் வாழ்வில் கடைப்பிடித்து

அன்னை தந்தையற்ற பாலகற்கு, அன்னையாய் தந்தையாய் ஆகுகின்றார்

அன்போடு ஆறுதலும் அடைக்கமும், பண்புகளும் பேணி வளர்க்கின்றார்

அன்னையவர் சேவைக்காய் அகிலத்தோர் ஆயிரமாய் அள்ளிஅள்ளிக் கொடுக்கின்றார்.

வாய்திறந்தால் எளிதாக வரும்பேச்சு, அஞ்ஞான இருளகற்றும் அருட்கூற்று

தேசமெங்கும் சென்றிடுவார் அழைப்பேற்று, தேனாகச் செய்திடுவார் தமிழ் சேர்த்து

பாயிரங்கள் பாடிடுவார் இசை சேர்த்து, ஆரவாரம் செய்திடுவர் செவிசாய்த்து

ஆயிரமாய் கூடிடுவார் தலைசாய்த்து, ஆனந்தம் கொண்டிடுவர் அதைக்கேட்டு.

குருவாய், உதவி அதிபராய், பெற்ற அன்னையாய், அறநெறி பரப்பி

விரலிடை கொண்டு வடிக்கும் விழுமிய வாசக வித்தகராய்

குரலிடை ஓசைகொண்டு செய்யும் பெருவுரையாளராய்

பரமனடி பரவும் பக்தையாய் பாரினிலே, பணிபல ஆற்றுகின்றார்.

அழிவினைக் கொடுக்கும் போரின், கொடுமைகள் நடுவே நின்று

இளையவர் இல்லம் காத்து, மகளிர் தம் மனையும் காத்து

முதுபெரும் கோவில் காத்து, முத்தமிழுடன் மதமும் காத்து

பொதுநலத் தொண்டராக பொலிகின்றார் பெண் மணிவிளக்காக.

தொல்லைகள் இல்லாவேளை நல்லையூர் ஆறுமுக நாவலர்

தொண்டராய் பணிகள் ஆர்த்தார் தமிழுடன் சைவம் வளர்த்தார்.

எல்லைகள் மீறி இங்கு இருப்போமோ நாளையென்று

அஞ்சிடும்வேளை செல்வி புரிகின்றார் பணிகள் கோடி.

சத்தியம் சமரசம் தூய்மை, அத்தனையும் அன்னைபால் உண்டு

மக்களின் சேவையே மகேசனின் சேவை என்று, நித்தமும் வாழும் நங்கை

புத்தாயிரத் தாண்டிலின்று பவளவிழாக் காணும் பக்தை

எக்காலமும் இனிதாய் வாழ இறைவனை வேண்டுகின்றேன்.

கலைமகள் வதியும் நாவும் களவிலா இனிய நெஞ்சும்

அளவிலா பணிகள் நாளும் ஆற்றிடும் அன்னை என்றும்

தளர்விலா வாழ்வு பெற்று வளமுடன் நீடு வாழ

இருகரம் கூப்பி நாமும் இறையடி தொழுவோம் நாமே.

அன்னையின் சந்நிதியில் அவைகூட்டி, அன்புடன் என்னையும் இங்கழைத்து

தன்னலம் கருதாது தொண்டாற்றும், ஒரு செந்தமிழ்ச் செல்வியின் புகழ்பாட

பனனெடும் காலமாய்ப் பணியாற்றும், ஓர் அம்பிகை பக்தயைப் பாராட்ட

சின்னவன் என்னையும் சபையேறிச் செய்திட வைத்தவர்க்கு என்நன்றி!

Edited by Selvamuthu

  • கருத்துக்கள உறவுகள்

இதய அஞ்சலி. அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன வகுப்பில் சமய பாடத்தில் தேவாரம் பாடம் வரல்லையென்றால்.. யார் இந்தப் புத்தகத்தை தயாரிச்சவை எண்டு பார்த்தா.. இவாவின்ர பெயர்தான் முதலில இருக்கும். மனசுக்க திட்டிக் கொண்டு.. தேவாரம் பாடமாக்கிறது.

இருந்தாலும் வளர்ந்து ஓரளவு அறிவு வந்தபின் தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையார் மீது ஒரு பற்றுதல். பல தடவை பாடசாலை விழாக்களில் இவரைக் கண்டிருக்கிறேன்.

ஒரு தடவை தெல்லிப்பழை அம்மன் ஆலயத்துக் போன போது இவரின் ஆச்சிரமங்களைப் பார்த்திருக்கிறேன்.

அம்மையாரின் சைவத்துக்கும் தமிழுக்கும் தமிழ் சமூகத்துக்குமான பணி நிச்சயம் எல்லோராலும் எப்போதும் நினைவு கூறப்படும். பல இடர்களின் மத்தியில் பல இடம்பெயர்வுகளின் மத்தியிலும் அம்மையார் மன உறுதி குலையாது தாயக மண்ணோடே ஒட்டி இருந்து மக்களுக்கு சேவை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மையாரின் இழப்பால் தம் தாயை இழந்து தவிக்கும் அவரின் பராமரிப்புக் குழந்தைகளின் ஆழ்ந்த துயரத்தில் நாமும் பங்கெடுத்துக் கொள்கின்றோம். யாழ் களத்தின் நேசக்கரம் இக்குழந்தைகளுக்கு ஏதேனும் உதவி செய்ய முற்பட்டால் எமது பங்களிப்பை நல்குவோம்.

அம்மையாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போமாக. :wub:

Edited by nedukkalapoovan

அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவிற்கு அஞ்சலிகள். தங்கம்மா அம்மாபற்றி பற்றி எழுதுவதென்றால் நிறையவே எழுதலாம்.அவருக்கும் எனக்கும் நிறையவே பழக்கம் தொடர்புகள் இருந்தது. 80 களின் காலத்தில் செவ்வாய் கிழைமை துர்க்கையம்மன் கோயில் பூசைகளிற்காய் பேருந்து வண்டிகளில் செல்கின்ற பெண்கள் கூட்டத்தை துவிச்சக்கர வண்டியில் கலைத்து செல்கின்ற வயதுகாலங்களில் அறிமுகமானவர் .ஆனாலும் அவருடன் வேறு பல விடயங்கிற்காக தொடர்புகள் இருந்ததுபின்னர் 80 களின் இறுதியில் என்னுடைய சிந்தனைகள் என்னுடைய கடவுள்பக்தி எல்லாமே தலைகீழாக மாறிப்போய் இருந்த 87 ஆண்டளவில் மீண்டும் அதே தெல்லிப்பளையம்மன் கோயில் வீதியில் ஒரு மரத்தடியிலல் நடக்க முடியாத நிலையில் நான் கைத்தடிகளுடன் இருக்கிறேன். அப்போது அங்கு வந்த அம்மா என்னைப் பார்த்து அடையாளம் கண்டவுன் தம்பி என்ன நடந்தது என்று அக்கறையாய் விசாரித்துடன் சாப்பிட்டியா என்று கேட்டார்.நான் என்ரை நண்பன் அன்ன தானம் நடக்கின்ற இடத்திற்கு சாப்பாடு எடுக்கப்போயிருக்கிறான் அவன் கொண்டு வருவான் என்று பதில் சொன்னவுடன் . அங்கு நின்ற ஒரு கோயில் தொண்டரை அம்மா கூப்பிட்டு போய் இந்தத் தம்பிக்கு சாப்பாடு வாங்கிக் கொண்டுவந்து குடு என்று சொல்லிவிட்டு அவரது கையில் இருந்த விபூதியை தொட்டு ன்னுடைய நெத்தியல் பூசிவிட்டு இப்ப இதெல்லாம் உனக்கு பிடிக்காது எண்டாலும் அம்பாள் காப்பாத்துவா எண்டு சொல்லிப்போட்டு போனார்.இவரைப்பற்றி விளக்கமாக பிறகு எழுதுகிறேன்.

தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றியவர் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள். ஆதரவற்ற பல குழந்தைகளுக்கு உதவிசெய்த அம்மையாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக.

அன்பும் பண்பும் நிறைந்த ஓர் உயர்ந்த ஆத்மாவை இழந்து விட்டோம். இதய அஞ்சலிகள்.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

சைவத்தையும் தமிழையும் தன் இரு கண்களாகக் கொண்டு தன் வாழ்வை அர்ப்பணமாக்கிய இத் தமிழ்ச் செல்விக்கு என் இதய அஞ்சலிகள்.

மனிதநேயத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்..! என் கண்ணீர் அஞ்சலிகள்..

  • கருத்துக்கள உறவுகள்

துர்க்கை அம்மன் கோயிலில் அடிக்கடி இவரை கண்டிருக்கின்றேன்....இவர் பராமரித்த பிள்ளைகளை வரிசையாக கோவிலுக்கு வரும்போது இவரும் அசவர்களுடன் பின்னால் வருவார்.....

என்னுடை அஞ்ஞலிகளும்....

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

எனது ஆழ்ந்த இரங்கல்கள்.!

  • கருத்துக்கள உறவுகள்

அன்னையின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. எனது ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இறைத் தொண்டுகளுடன் பல மனித நேயப் பணிகளையும் ஆற்றிய

அன்னையின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திப்போம்

வாத்தியார்

..........................

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் வருத்தமான செய்தி என்றாலும் வயதானவர்

அவரது தொண்டுகளால் நிச்சயம் இறைவனடி சேரும் பாக்கியம் பெற்றவர்

ஆத்ம சாந்திக்காய் பிரார்த்திப்போம்

எமது ஊருக்கு வரும்போதெல்லாம் எனது தகப்பனாருடன் சேர்ந்து பாடாமல்விடமாட்டார்.

எல்லோராலும் விரும்பப்பட்டவர்.

Edited by விசுகு

2வது ஆண்டு நினைவஞ்சலி தினத்தில் அன்னாரின் பணிகளை மீட்டிப் பார்ப்பதுடன், அவரது ஆன்ம வழிகாட்டுதல்படி மக்கள் நலப் பணியில் மேலும் பலர் இணைய பிரார்த்திப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

.

தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் ஒலி, ஓளிப்பதிவுகளை யாராவது இணைத்து விடுவீர்களா.......

உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்.

.

  • கருத்துக்கள உறவுகள்

இது தோழர் தமிழ்சிறிக்காக..

  • கருத்துக்கள உறவுகள்

இது தோழர் தமிழ்சிறிக்காக..

மிக, மிக நன்றி புரட்சி. :wub:

தங்கம்மா அப்பாக்குட்டி! ... தமிழ்ப்பகுதிகளில் சிங்கள பவுத்தர்களால் திட்டமிட்டு இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டபோது, அதனை முன் நின்று கண்டிதவர்? அதனை உலகிற்கு கொண்டு வந்தவர்? யாழ் மக்கள் 95ல் எல்லா அவலங்களையும் சந்தித்து, சிங்கள இராணுவ முன்னேற்றத்தில் இருந்து தப்பியோடி வன்னி வர, சைவம் காக்கப்பட வேண்டும் என யாழிலேயே குந்தி இருந்தவர்???? .... அடுக்கிக் கொண்டே போகலாம் ... :wub:

Edited by Nellaiyan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.