Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நீங்கள் தயாரா?

41 members have voted

  1. 1. சுதந்திர தமிழீழத்தில் வாழத் தயாரா?

    • நிச்சையமாக, அடுத்த முதல் விமானத்தில் ஏறத் தயார்.
      16
    • நிச்சையமாக, சில காலம் களித்து.
      14
    • அங்குள்ள நிலமையைப் பொறுத்து, சில காலம் களித்து.
      7
    • அங்குள்ள நிலமையைப் பொறுத்து, பார்க்கலாம் ....
      1
    • இல்லை. (காரணம்?)
      3

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் தயாரா?

இதென்ன கேள்வி என்று நீங்கள் நினைக்கக் கூடும், ஆனாலும் கேட்கிறேன். இங்கு ஆனேகமானவர்கள் எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவானவர்கள், தமிழீழம் அமைவதை விரும்புபவர்கள். தமிழீழத்திற்காக குரல் கொடுப்பவர்கள், போராடுபவர்கள்.

எமது இலட்சியத்தை நாம் அடையும்போது, அதாவது சுதந்திர தமிழீழம் மலரும்போது, நீங்கள் அங்கு சென்று வாழத் தயாரா? உங்களில் எத்தனை பேர் இதில் உறுதியாக உள்ளீர்கள்? அங்குள்ள நிலமையைப் பொறுத்து காலம் களித்து செல்வீர்களா, அல்லது சுதந்திரம் கிடைத்ததும், அடுத்த முதல் விமானத்திலேயே ஏறத் தயாரா? சிலர் தத்தமது வெவ்வேறு காரணங்களிற்காக இங்கேயே வாழக்கூடும்.

உங்கள் அனைவரினதும் உண்மையான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

தயவுசெய்து ஒருவர் ஒருமுறை மட்டுமே வாக்களிக்கவும். நன்றி.

Edited by Tigerblade

  • Replies 77
  • Views 8.8k
  • Created
  • Last Reply

ம்ம்..நல்லதொரு விடயம் "டைகர் பிளேட்" அண்ணா :lol: ..என்னுடைய வாக்கும் "இல்லை" என்பதே ஆகும்..(ஏன் எனில் நான் எப்பவுமே உண்மையை தான் சொல்லுவன்)..பிறகு என்னை அரிசந்திரனின்ட சொந்தகாரண் எண்டு நினைக்க கூடாது சொல்லிட்டன்.. :lol:

சரி எனி விசயதிற்குள் வருகிறேன்..

காரணம் என்னவெண்டால் தனிநாடு கிடைத்தவுடனும் பொருளார ரீதியில் உடனடியா முன்னுக்கு வர முடியாது அத்தகைய சூழ்நிலையில் எல்லாருமே அங்கு சென்றால் :unsure: ..நிலை என்ன எண்டு சிந்தித்தீர்களா..??..அப்படி பார்குமிடத்தில் நான் நிதானமாக தான் போவேன் அதை விட.. :unsure: .

நீங்கள் இருக்கும் நாட்டில் நல்ல துறையில் வேலை பார்த்து நல்ல ஊதியம் பெற்றீர்கள் எண்டால்..உங்கள் வருவாயை அங்கு கொண்டு சென்று நீங்கள் முதலிடுவதன் மூலம் எங்கள் தாய் நாட்டை கட்டி எழுப்பலாம்..அதை விடுத்து எல்லாருமே முதல் பிளேனில ஏறினால் நிலை என்னாவது.. :lol:

அது சரி தங்களின் பதில் என்னவெண்டு கூறவில்லையே..?? :rolleyes:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில தயாராக முன்னமும் தாயாக முன்னம் யோசிக்கனும்" :wub:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

என் பதில்: அங்குள்ள நிலமையைப் பொறுத்து, சில காலம் கழித்து...

காரணங்கள் பிறகு... :rolleyes:

நான் அங்குள்ள நிலைமைகளைப் பொறுத்து என்றே வாக்களித்திருக்கின்றேன். எத்தனை பேர் உண்மையான கருத்தைத் தெரிவிப்பார்கள்.??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிச்சயமாக முதல் விமானத்தில் தயார். என் அடுத்த தலைமுறையை வெளிநாட்டு;க கலாச்சாரம் என்ற போர்வையில் சீரழிக்க விரும்பவில்லை.

தவிரவும் தமிழீழம் கிடைக்கின்றபோது நிச்சயம் பல தொழில்வாய்ப்புக்கள் உருவாகும். நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டிய அதிகபட்ச உழைப்பு அவசியப்படும். எனவே நான் போவதாகவே தீர்மானித்திருக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக தமிழீழத்தில் வாழத்தான் ஆசைப்படுகிறேன்.

இருந்தாலும் சிறிது காலம் பிந்தித் தான் போவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் 20 வருடங்களுக்கு மேலாக தேசியத்தின் பின்புல சேவையில் இணைந்திருப்பவன். ஏற்கனவே பல தொழில் நுட்ப சிக்கல்களைத் தீர்ப்பதில் நாட்டுக்கு உதவியுள்ளேன். நாடு கிடைத்ததும் விரைந்து செல்வேன் ஆனால் இப்போதைக்கு அதை எவ்வளவு சீக்கிரமாக என்று கூறமுடியாது. எங்கிருந்தால் தாய்நாட்டுக்கு உதவ அதிக வாய்ப்புள்ளது என்பதையும் பரிசீலித்து எனது முடிவை எடுப்பேன். எனது கல்வியையும் தொழிலையும் நாட்டின் முன்னேற்றத்துக்கு உடனடியாகவே பயன்படுத்த முடியும். அது குறித்த ஆய்வுகளைப் பலதடவைகள் வன்னிக்கு அனுப்பிவைத்துமிருக்கிறேன். அதுவுமின்று பல உயர் தொழில்நுட்பம் கொண்ட நிறுவனங்களுடன் தொடர்புகளை வைத்திருப்பதால் முதலீட்டுக்காக அவற்றை அழைத்து வரவும் முடியும். இன்றைய நிலையில் சுமார் 1 மில்லியன் ஈரோவை எனது சொந்த முதலீடாக்கமுடியும். மொத்தத்தில் நான் நாடு திரும்ப தயார், அந்த இனிய நாளுக்காக ஆவலோடு பார்த்திருக்கிறேன் என்பதுதான் உண்மை.

நிச்சயமாக - சிலகாலம் கழித்து என்பதற்கு எனது வாக்களிப்பை வழங்கியிருக்கிறேன்.

Edited by vanangaamudi

இல்லை என்று வாக்களித்திருக்கிறன்.

காரணம் வெளிநாடுகள் (ஏன் சிறீலங்காவில) இருக்கிற வசதிகள் சொளகரியங்கள் அங்கு இல்லை.

உணவு மருந்து மின்சாரம் எரிபொருள் என்று அடிப்படைத் தேவைகளிற்கே தட்டுப்பாடு. இறக்குமதி செய்ய வரி போடுவினம் (உதாரணம் ஏ9 திறந்திருக்கும் போது போட்ட வரிகள்).

சிறீலங்கா முழுப்பகுதியையும் விடுவித்தா போவன் சுற்றுலா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நியாயம் தான் குறுக்காலபோவன். முதலில் மலசலகூடத்திற்குப் பேப்பர் தாரளமாக வாற வசதியும், குளிக்கும்போது சுடுதண்ணி, பச்சைத் தண்ணி வாற வசதியும் முதலில் வந்தால் தான் நீங்கள் அங்கே போகணும்

அதுவும் மிகவும் மென்மையான மலசலகூட பேப்பராக இருக்க வேணும்.. 1-9 மாதிரி ஆனால் வெளிநாட்டு தரத்தில ஒரு 5...10 திறக்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இல்லையெண்டு வாக்களித்திருக்கிறன் ஏனெண்டால் நாங்கள் இப்பிடித்தான் இஞ்சையிருந்து தமிழீழம் தேசியம் எண்டு கத்துவம். கொடி பிடிப்பம் கோசம் போடுவம் படம் எடுப்பம். வாய்கிழிய கதைப்பம் மற்றபடி வேணுமெண்டால் ஊருக்கு சுற்றுலா போய் படம் எடுக்கலாம் அதுவும் கண்ணிவெடியள் எல்லாம் எடுத்தால் பிறகுதான். மற்றபடி அங்கை போய் இருக்கிறதா?? என்ன கேள்வி இது?? நாங்கள் வெளிநாட்டு சிற்றிசனாக்கும்.

எனக்கு தமிழீழமே வேண்டாம் ஐயா...!! கூழோ கஞ்சியோ(தமிழீழத்திலை இருந்து சாமானை எடுத்து) அதை லண்டனிலை வைச்சு குடிச்சாத்தான் பெருமை...!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிச்சயமாக முதல் விமானத்தில் தயார். என் அடுத்த தலைமுறையை வெளிநாட்டு;க கலாச்சாரம் என்ற போர்வையில் சீரழிக்க விரும்பவில்லை.

தவிரவும் தமிழீழம் கிடைக்கின்றபோது நிச்சயம் பல தொழில்வாய்ப்புக்கள் உருவாகும். நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டிய அதிகபட்ச உழைப்பு அவசியப்படும். எனவே நான் போவதாகவே தீர்மானித்திருக்கின்றேன்

ஏன் பொன்னையா அண்ணை?உந்த நல்ல கொள்கையோடை இருக்கிறனீங்கள் இப்பவும் போகலாந்தானே???கோவிக்காதேங்கோ சும்மா கேட்டனான் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் பொன்னையா அண்ணை?உந்த நல்ல கொள்கையோடை இருக்கிறனீங்கள் இப்பவும் போகலாந்தானே???கோவிக்காதேங்கோ சும்மா கேட்டனான் :D

சாக இயலாது என்று ஏஎன்சிக்காரனுக்கு 30 இலட்சம் கட்டி வந்திட்டு, இப்போது போறதோ?

இரண்டாவது...

:lol: ஸ்ரீலங்காவுக்கு போகாமல் தமிழீழத்துக்கு நேராக விமானம் பறக்குமானால் இறங்க தயாராக இருப்பார்கள் என நினைச்சேன். ஆனால் இவர்கள் எல்லோரும் என்னமோ எல்லாம் சொல்லுறாங்கப்பா. :D
  • கருத்துக்கள உறவுகள்

சில சிங்கன்கள் ரொயிலட் பேப்பருடன் பிறந்ததை நினைக்கும் போது புல்லரிக்குது. :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

அங்குள்ள நிலமையைப் பொறுத்து, சில காலம் களித்து , என்று வாக்களித்துள்ளேன் .

என்னுடை காலத்தில் சில பகுதிகளை தமிழீழத்தில் உள்ள ஒரு அழகிய , வாகனச்சத்தம் கேட்காத கிராமத்தில் வாழவே ஆசைப்படுகின்றேன் .

நுளம்புக்கடியை நினைக்கத்தான் கொஞ்சம் யோசனையாக உள்ளது . சமாளிக்கலாம் என்று நினைக்கின்றேன் .

தாராளமாக தண்ணீர் இருக்குதுங்கோ

நுளம்புக்கடிக்கு நுளம்புத்திரியும் இருக்கு

என்ன என்ன தேவையோ அதுக்கு மாற்றீட்டு பொருட்கள் இருக்கின்றன என நம்புகின்றேன் :D

  • கருத்துக்கள உறவுகள்

தாராளமாக தண்ணீர் இருக்குதுங்கோ

நுளம்புக்கடிக்கு நுளம்புத்திரியும் இருக்கு

என்ன என்ன தேவையோ அதுக்கு மாற்றீட்டு பொருட்கள் இருக்கின்றன என நம்புகின்றேன் :D

தண்ணீரை குறுக்காலபோவானுக்கு குடுங்கோ வெண்ணிலா , வடிவாய் உரஞ்சி கழுவட்டும் . :lol:

நுளம்பு திரிக்கு சொல்வழி கேக்கின்ற நுளம்புகளாக இல்லையே .......... எல்லா நுளம்பும் கொழுத்துப்போய் சின்ன குருவி மாதிரி எல்லோ இருக்கு . :D

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக, சில காலம் கழித்து என்று வாக்களித்துள்ளேன்.

தமிழீழம் பிறக்கப் போகிறதென்றோ அல்லது தமிழீழத்தை அங்கீகரிக்கப் போகிறார்கள் என அறிந்தால் உடனடியாகச் செல்லும் எண்ணம் உள்ளது. அந்த மக்களின் மகிழ்ச்சியில் பங்கு கொண்டு அந்தச் சுதந்திரத்தைப் கண்குளிரப் பார்க்க.

நிரந்தரமாகப் போக சில காலம் பிடிக்கும்.

Edited by பிரபா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தமிழீழமே வேண்டாம் ஐயா...!! கூழோ கஞ்சியோ(தமிழீழத்திலை இருந்து சாமானை எடுத்து) அதை லண்டனிலை வைச்சு குடிச்சாத்தான் பெருமை...!!
:lol::lol::lol::lol:

கடிடிடிடிடிடிடிடிடிடிடிடி

இரண்டாவது!!

தாயகத்தில் இருந்து விட்டு பழக்கமே இல்லாத இந்த குளிர்நாட்டில் வாழ பழகிக்கொண்டோம். இங்கு வசதிகள் கூட தான்.பழக அது சுலபமாக இருந்ததோ என்னவோ. ஆனால் மீண்டும் நம் நாட்டில் அதுவும் சுதந்திர நாட்டில் குடத்தோடு வாய்க்காலில நடந்து வர நான் ரெடி. என்ன வாழ்க்கையில் சிலதை இங்கு தொடங்கி விட்டோம். அவற்றை இங்கேயே முடித்து விட்டு அங்கு சென்றால் வாழ்க்கைக்கு நல்லதென்று நினைக்கிறேன். :lol:

எனக்கு தமிழீழமே வேண்டாம் ஐயா...!! கூழோ கஞ்சியோ(தமிழீழத்திலை இருந்து சாமானை எடுத்து) அதை லண்டனிலை வைச்சு குடிச்சாத்தான் பெருமை...!!

:lol::lol::lol::lol:

ஆமால அங்கு சுலபமாக கிடைப்பதை இங்கு தேடி கஷ்டப்பட்டு காசு அங்கைய விட கூட கொடுத்து வாங்கி இது ஊர் சாப்பாடு எண்டு குடிச்சா தான் சந்தோசம் என்ன :lol:

இரண்டாவது!!

தாயகத்தில் இருந்து விட்டு பழக்கமே இல்லாத இந்த குளிர்நாட்டில் வாழ பழகிக்கொண்டோம். இங்கு வசதிகள் கூட தான்.பழக அது சுலபமாக இருந்ததோ என்னவோ. ஆனால் மீண்டும் நம் நாட்டில் அதுவும் சுதந்திர நாட்டில் குடத்தோடு வாய்க்காலில நடந்து வர நான் ரெடி. என்ன வாழ்க்கையில் சிலதை இங்கு தொடங்கி விட்டோம். அவற்றை இங்கேயே முடித்து விட்டு அங்கு சென்றால் வாழ்க்கைக்கு நல்லதென்று நினைக்கிறேன். :lol:

:lol::lol::lol::lol:

ஆமால அங்கு சுலபமாக கிடைப்பதை இங்கு தேடி கஷ்டப்பட்டு காசு அங்கைய விட கூட கொடுத்து வாங்கி இது ஊர் சாப்பாடு எண்டு குடிச்சா தான் சந்தோசம் என்ன :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் தமிழீழம் கிடைக்குதோ இல்லையோ என் தாய் மண்ணுக்குப் போகவே விரும்புகிறேன். எனக்கு இந்த அடிமை வாழ்வு பிடிக்கல்ல..!

என் தாயகம் இலவசமா கல்வி தந்து எனக்கு அரிவரி ஊட்ட.. இவங்கள் என்னட்டையே ஆயிரக்கணக்கில பறிச்சு.. தங்க வரி வட்டிகளை கணக்குப் பார்த்துக்கிறாங்க..! ஏன்னா நான் பெனிபிட்டோ.. கிரடிட் காட்டோ.. கள்ளக் காட்டோ.. பிசினஸ் லோனோ இன்னும் எடுக்கல்ல..! ஒருவேளை எடுத்தன் என்றால்.. மனம் மாறி தங்கிடுவன். உந்த வசதிகளை விட்டிட்டு அங்க பனங்கூடலுக்க போய்...???! எங்கட குதிகால் பெருத்த சொருப்போட மணலுக்க நடக்க முடியுமே..! :lol::lol:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.