Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலைஞரின் முடிவு நியாயமா?

Featured Replies

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை ராஜினமாச் செய்வதற்கான கெடுவிற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கிறது. ஆனால் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாத நிலையில், தற்பொழுது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை ராஜினமாச் செய்ய மாட்டார்கள் என்பது போன்ற செய்திகள் வருகின்றன. இது பல ஈழத் தமிழர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால் தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையை சற்றுக் கவனித்துப் பார்த்தால், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை ராஜினமாச் செய்வது நல்லது அல்ல என்பதை உணர்ந்து கொள்ள முடியும். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமமு பதவிகளை ராஜினமா செய்தால், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான பரப்புரைகளை ஒரு குறிப்பிட்டளவிற்கு அனுமதித்துள்ள கலைஞரின் ஆட்சி இல்லாமல் போவதோடு, கலைஞரையும் இந்தத் தள்ளாத வயதில் சிறையில்தான் நாம் பார்க்க வேண்டி ஏற்படும்.

இதை நாம் சற்று விளக்கமாகப் பார்க்க வேண்டும். முதலில் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகுவார்கள் என்று அனைத்துக் கட்சி மாநாட்டில் தீர்மானம் எடுத்தார்கள். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று வருகின்ற பொழுது, திமுக, தமிழ்நாடு காங்கிரஸ், பாமக, இரண்டு கம்யூனிசக் கட்சிகள், மதிமுக என்று அனைத்துக் கட்சிகளிலும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணக்கில் வருவார்கள்.

ஆனால் இரண்டு நாட்களிலேயே காங்கிரஸ் கட்சி மாற்றிப் பேச ஆரம்பித்து விட்டது. டெல்லியைக் கேட்டுத்தான் முடிவு சொல்ல வேண்டும் என்று கூறி விட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அனைத்துக் கட்சி மாநாட்டில் எடுத்த முடிவிற்கு ஏற்றபடி தொடர்ந்தும் இருந்திருக்குமாயின் நிலைமை வேறு மாதிரி போயிருக்கும். உண்மையில் தமிழ்நாடு காங்கிரஸ் கலைஞரின் முதுகில் குத்தி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

காங்கிரஸ் கட்சியை எதிர்த்துக் கொண்டு, கலைஞரால் தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆட்சி நடத்த முடியாது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி, காங்கிரஸின் மத்திய அரசுக்கு நெருக்கடியை கொடுத்தால், தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்களும் கலைஞரின் அரசுக்கு கொடுக்கும் ஆதரவை திரும்பப் பெற்று, கலைஞரின் ஆட்சியைக் கவிழ்ப்பார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியால் கலைஞரின் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது போனாலும் கூட, மத்திய அரசு மீண்டும் விடுதலைப் புலிகளைச் சாட்டியே கலைஞரின் அரசை கலைத்து விடும்.

இந்திய அரசின் ஆயுட்காலம் இன்னும் ஆறு மாதங்கள்தான். அது கவிழ்ந்தாலும் கூட காங்கிரஸ் கட்சி பெரிதாக கவலைப்படப் போவது இல்லை. ஆனால் தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் 2011இல்தான் வருகிறது. இன்னும் மூன்று ஆண்டுகள் கலைஞரின் ஆட்சி தமிழ்நாட்டில் இடம்பெற இருக்கிறது. தமிழ்நாடு அரசு கலைக்கப்பட்டால், அது கலைஞருக்கு பெரும் இழப்பாக இருக்கும். விரும்பத்தாகத பல விளைவுகளும் ஏற்படும்.

தமிழ்நாடு அரசு கலைக்கப்பட்டால், மீண்டும் கலைஞரால் ஆட்சிக்கு வரமுடியாதா என்ற கேள்வி சிலருக்கு எழுலாம். அதனுடைய பதில் இன்றைய நிலையில் இல்லை என்பதே.

தமிழ்நாடு மக்கள் ஒரு போதும் ஈழத் தமிழர் விவகாரத்தின் அடிப்படையில் தேர்தலில் வாக்களிப்பது இல்லை. தமிழீழ மக்களுக்கு ஆதரவு கொடுத்தாலும், தமிழ்நாட்டை ஆள்வதற்கு யார் பொருத்தமானவர்கள் என்ற விடயத்திற்கே முன்னுரிமை கொடுப்பார்கள். தமிழீழத்தையும் தமிழ்நாட்டு அரசியலையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ள மாட்டார்கள்.

இப்பொழுது தமிழ்நாட்டு மக்கள் கலைஞரின் தலைமையில் நடக்கும் ஆட்சி பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் திமுக அரசு மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்பதை திமுகவை சேர்ந்தவர்களே ஒத்துக் கொள்கிறார்கள். மக்கள் திமுக அரசு மீது கோபத்தில் இருப்பதற்கு மின்வெட்டும், விலைவாசி உயர்வும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

தமிழ்நாடு முழுவதும் தினமும் பல மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது. பல இடங்களில் 12 மணி நேரம் மின்வெட்டு இருப்பதாக சொல்கின்றார்கள். திடீர் திடீரென்று மின்சாரம் இல்லாமல் போகின்றது. எப்பொழுது மீண்டும் மின்சாரம் வரும் என்று தெரியாத நிலை. இதனால் தமிழ்நாட்டு மக்கள் பல விதமான அசவுகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். இது மக்களை அரசின் மீது கடும் கோபம் கொள்ளச் செய்திருக்கின்றது.

மின்வெட்டுக்கு திமுக அரசு மட்டும் காரணம் அல்ல. இதே நிலை கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் இருக்கின்றது. அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் ஏற்றபடி மின்உற்பத்தி அதிகரிக்கப்படுவதற்கு முன்னைய மத்திய மாநில அரசுகள் சரியான நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணம். முன்பு இருந்த அதிமுக ஆட்சி மின்சாரத்தை சேமித்து வைத்திருந்திருக்க வேண்டும். அதே போன்று திமுகவும் ஆட்சிக்கு வந்தவுடன் மின்சாரத்தை சேமிக்க தொடங்கியிருக்க வேண்டும். யாரும் பெரிதாக அக்கறை செலுத்தியதாக தெரியவில்லை. தவறு அனைவர் மீதும்தான்.

ஆனால் தமிழ்நாட்டில் தற்பொழுது திமுக ஆட்சியில் இருப்பதால், அவர்கள் மீதே மக்களின் கோபம் திரும்புகின்றது.

கலைஞர் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்குவது பற்றியும் இன்றைக்கு எதிர்மறையான விமர்சனங்களே இருக்கின்றன. அனைவரும் தொலைக்காட்சி பார்ப்பதால்தான் மின்சாரம் போதவில்லை என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள். அத்துடன் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்குவதில் பல குளறுபடிகள் நடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் வருகின்றன.

விலைவாசி உயர்வும் மக்களைப் பாடாய்ப்படுத்துகிறது. ஒரு ருபாய்க்கு அரிசி வழங்கியும், காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து போய் நிற்கின்றது. இவைகள் எல்லாம் திமுக அரசு மீது மக்களை கடும் அதிருப்தி கொள்ளத் செய்திருக்கிறது.

இந்த நிலையில் திமுக அரசு கவிழ்ந்தோ, அல்லது கலைக்கப்பட்டோ தமிழ்நாட்டிற்கு தேர்தல் வந்தால், ஜெயலலிதாவின் அதிமுகவே அதிக இடங்களைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்கின்ற நிலைமை இருக்கிறது. ஜெயலலிதா முதல்வரானதும் அவர் செய்கின்ற முதல் வேலையாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்தார் என்ற குற்றச்சாட்டில் கலைஞரை கைது செய்து உள்ளே தள்ளுவதாகவே இருக்கும். அப்படியே திருமாவளவன், பாரதிராஜா, ராமநாராயணன் என்று எல்லோரும் உள்ளுக்குப் போக வேண்டியதுதான். ஈழத் தமிழருக்கு ஆதரவாக ஒரு மூச்சு விடக் கூட முடியாத நிலை தமிழ்நாட்டில் தோன்றும்.

(இப்படி ஒரு நிலை தோன்றினால் அதை எதிர்த்து உறுதியோடு போராடுவதற்கு திமுக போன்ற பெரிய கட்சிகள் தயாராக இல்லை என்பது இதில் ஒரு வேதனையான விடயம். ஈழத் தமிழர்களின் பொருட்டு சிறை செல்வதற்கு வெகு குறைவானவர்களே தயாராக இருப்பார்கள். அதுவும் "தேசிய பாதுகாப்புச் சட்டம்" பாயும் என்றால், சிறை செல்வதற்கு யார்தான் தயாராக இருப்பார்கள்?)

தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகள் அனைத்தும் அரசியல் கணக்குப் போடுவதில்தான் இன்றைக்கு மும்மரமாக நிற்கின்றன. அது தேவையானதும் கூட. இன்னும் ஆறு மாதத்தில் வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அரசின் மீது மக்கள் மத்தியில் உள்ள அதிருப்தியை எப்படிச் சமாளிப்பது என்று திமுகவும் காங்கிரசும், மக்களின் அதிருப்தியை எப்படி வாக்குகள் ஆக்குவது என்று அதிமுக போன்ற எதிர்க்கட்சிகளும் கணக்கப் போட்டுக் கொண்டிருக்கின்றன.

இன்றைக்கு தமிழ்நாட்டின் கட்சிகள் பல வினோதமாதன நிலைப்பாடுகளை எடுப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம். காங்கிரஸ் முதுகில் குத்தியும் கலைஞர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தொடரும் என்கிறார். ஜெயலலிதாவின் அறிக்கையால் வைகோ சிறைக்கு செல்லவேண்டி வந்ததன் பின்பும், அதிமுகவுடன்தான் கூட்டணி என்று மதிமுக சொல்கிறது. அனைத்தும் தேர்தல் படுத்தும் பாடு.

ஜெயலலிதா முதலில் ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்து விட்டு, திடீரென்று தன்னுடைய நிலையை மாற்றிக் கொண்டதற்கும் இதுதான் காரணம். கலைஞர் பேசாது இருந்த பொழுது, சிங்கள அரசையும் இந்திய அரசையும் கண்டித்து அறிக்கை விட்டார். கலைஞரும் ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுக்கத் தொடங்கியதும், அவருடைய மூளை வேறு கணக்குப் போடத் தொடங்கி விட்டது.

தமிழ்நாட்டு மக்களின் திமுக அரசு மீதான அதிருப்தியால் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அதிக இடங்களைப் பெறக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது. மத்தியில் அமையப் போகின்ற ஆட்சிக்கு அதிமுகவின் தயவு தேவைப்படும் நிலை ஏற்படலாம். அப்பொழுது அதைப் பயன்படுத்திக் கொண்டு கலைஞரின் அரசைக் கலைக்கச் சொல்லி மிரட்டலாம். விடுதலைப் புலிகள் நடமாட்டம் தமிழ்நாட்டில் அதிகரித்து விட்டது என்று மீண்டும் மத்திய அரசை நச்சரிக்கலாம் என்றெல்லாம் கணக்குப் போட்டு விட்டு, தன்னுடைய சுதியை மாற்றிக் கொண்டார்.

திமுக மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதால்தான் வைகோவும் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இருப்பது நல்லது என்று நினைக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா மதிமுகவிற்கு ஒதுக்கும் நான்கு ஐந்து இடங்களில் வெற்றி பெற்று விடலாம் என்று கணக்குப் போடுகிறார். கலைஞரும் இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியை பகைத்தால் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் எதுவும் கிடைக்காமல் அல்லாட வேண்டியிருக்கும் என்று விட்டுக் கொடுத்துப் போகத் தொடங்கியிருக்கிறார்.

கலைஞர் காங்கிரஸ் கட்சியைப் பகைத்து, அதனால் ஆட்சி கவிழ்ந்து, அவரும் சிறைக்கு செல்வதை யாரும் இன்றைய நிலையில் விரும்ப மாட்டார்கள். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருப்பதால்தான் ஓரளவு என்றாலும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான பரப்புரைகளை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கிறது. இன்னும் மூன்று ஆண்டுகள் இந்தப் பரப்புரையை தொடர்வதற்கு வாய்ப்பும் இருக்கின்றது. இது மிக முக்கியமானது.

இதுவரை நடந்த போராட்டங்களினால் கலைஞருக்கும் தமிழீழ மக்களிற்கும் சில நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன. விலகிச் சென்ற பாட்டாளி மக்கள் கட்சி திமுகவுடன் சற்று நெருங்கி வரத் தொடங்கியிருக்கிறது. அத்துடன் இரண்டு வாரங்கள் மின்வெட்டுப் பற்றி தமிழ்நாட்டு மக்கள் அதிகம் பேசவில்லை. தமிழீழ மக்களுக்கும் தமிழ்நாட்டு மக்களின் தார்மீக ஆதரவு கிடைத்திருக்கிறது. சிங்கள அரசையும் சற்று எரிச்சல்படுத்த முடிந்திருக்கிறது.

தமிழ்நாட்டு மக்களின் தார்மீக ஆதரவை பெறுவதற்கான பரப்புரைகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியதுதான் தற்போது உள்ள அவசியமான ஒரு செயற்பாடு. இன்று இல்லாவிட்டாலும் நாளை இதனால் பல நன்மைகள் ஏற்படலாம். ஆகவே கலைஞரை வெறுமனே திட்டித் தீர்ப்பதை நிறுத்தி விட்டு, உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியை தொடர்ந்தும் முன்னெடுப்போம்.

Edited by சபேசன்

நிதானமான பார்வை ஆய்வு. மனமார்ந்த வாழ்த்துக்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை ராஜினமாச் செய்வதற்கான கெடுவிற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கிறது. இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை ராஜினமாச் செய்ய மாட்டார்கள் என்பது போன்ற செய்திகள் வருகின்றன. இது பல ஈழத் தமிழர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

உங்கள் கட்டுரையை தவறான அடிப்படையில் இருந்து ஆரம்பித்திருக்கிறீர்கள். ஈழத்தமிழர்கள்.. தமிழக அரசோ அல்லது தமிழக எம்பிக்களோ பதவிவிலக வேண்டும் என்பதை எதிர்பார்க்கவில்லை.

ஈழத்தமிழர்களின் இன்றைய அவல நிலையைப் புரிந்து கொண்டு அவர்களின் தார்மீகக் கோரிக்கையின் நியாயத்தன்மையை அங்கீகரித்து அதனை மத்திய அரசிடம் ஆணித்தரமாக வலியுறுத்தவே சொல்கின்றனர்.

இந்திய அரசிடம்.. ஒருவார நிவாரணம் வாங்கித் தாருங்கள் என்றோ அல்லது நான்கு வைத்தியர்களை அனுப்பி வையுங்கள் என்றோ கேட்கவில்லை. மாறாக.. சர்வதேச தொண்டு நிறுவனங்களை விரட்டி அடித்துவிட்டு.. மக்களின் இயல்பு வாழ்க்கையை குண்டு போட்டுச் சீரழிக்கும் சிறீலங்கா அரசின் நடவடிக்கைகளை நிறுத்தவே கோருகின்றனர். உடனடியாக மக்கள் அவல வாழ்வு வாழ்வதை நிறுத்தி.. நிரந்தரச் சமாதானம் ஏற்படும் வகையில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை இந்தியா மத்தியஸ்செய்து தீர்த்து வைக்க வேண்டும் என்றே கோருகின்றனர். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான நியாயத்தை இந்திய மத்திய அரசு அங்கீகரிக்க வலியுறுத்தவே கேட்கின்றனர். ஈழத்தில் நிரந்தர அரசியல் தீர்வு உருவாவதே தமிழக மீனவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பை அளிக்கும் என்கின்றனர்.

ஆக.. அடிப்படையில் ஈழத்தமிழர்கள்.. கலைஞர் பதவியை தூக்கி எறியவோ.. மத்திய அரசைக் கலைக்கவோ கோரவில்லை என்பதை முதலில் தெளிவுபடுத்துங்கள். நீங்களும் அவை தொடர்பில் தெளிவுறுங்கள்.

கலைஞர் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முன் வைத்த முக்கிய விடயங்கள்..

1. உடனடிப் போர் நிறுத்தம்..!

2. சிறீலங்காவுக்கான ஆயுத மற்றும் இராணுவ உதவிகளை நிறுத்தல்.

3. ஈழத்தில் அல்லறும் மக்களுக்கு நிவாரணம் கிடைக்க வழி செய்தல்.

4. தமிழக மீனவர் பிரச்சனைக்கு முடிவு தேடல்.

இதில் எதுவுமே நிறைவேற்றப்படாத நிலையில்.. அவர் சப்பைக் கட்டுக் கட்டுவதுதான்.. ஈழத்தமிழர்களுக்கு வேதனை அளித்திருக்கிறதே தவிர.. அவர் தனது எம்பி மாரின் பதவியை தாரவார்க்கவில்லை என்பதல்ல என்பதை தெளிவாக முன்னுறித்திச் சொல்வது இவ்வேளையில் அவசியம்.

அவர் வெறும் சப்பைக்கட்டுக் கட்டாமல்.. அனைத்துக்கட்சி தீர்மானங்களை நிறைவேற்ற இன்னும் இன்னும் இராஜதந்திர அழுத்தங்களை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டுமே தவிர.. 800 தொன் அரசியோடு.. சில மருத்துவர்களோடும்.. ஈழத்தமிழர்களுக்கு ஐநாவாலேயே வழங்க முடியாத நிவாரண பணியை பூர்த்தி செய்ய முடியும் என்று சொல்வதும்.. அதற்காக ஆயுத மற்றும் இராணுவ உதவிகள் கொடுப்பதை ஏற்பதும்.. நியாயமான நடவடிக்கைகள் அல்ல.

அவர் இன்று இப்படிச் செயற்படுவது.. அனைத்துக் கட்சி தீர்மானங்கள் என்று சொல்லி மக்கள் முன் வைத்த தீர்மானங்களின் அடிப்படையில் அவர் செயற்படாமையையே எடுத்துக்காட்டுகிறது. அது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் ஏமாற்றும் செயலாக அமைகிறது. அதுவே கண்டிக்கப்படுகிறது. மாறாக.. பதவி விலகல் அல்ல. பதவி விலகலை யாரும் விரும்பவில்லை. அதை ஒரு இராஜதந்திர துரும்புச்சீட்டாக பாவிக்கவே கோருகின்றனர். அதன் பாவனைக்கான தேவை இன்னும் பூர்த்தியாகிடவில்லை என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஈரக்குலை பிழிய உயிர் இன்னும் துடிக்கிறது

காரணம் பலவுண்டு கடந்த காலம் நகைக்கிறது

பூரணப் பிரசவமே வேண்டும் எங்கள் வலிகளுக்கு

புன்னகையைக் கடனாக புதுப்பிக்க முடியாது.

தேமதுரம், பால், பழமும் தெவிட்டாத தெள்ளமுதும்

நாவுக்கு வாழ்வு தரும், நலத்திற்கு மீள்வு தரும்.

பாவியர் ஏவும் சாவுக்கு மாள்வு தர

பனிக்கும் உறவுகளே! பாரினில் வழி செய்க.

காலப் பெரு வெளியில் கடந்தவைகள் எத்தனையோ

கண்ணில் நீர் வழிய, இழந்தவைகள் எத்தனையோ

விழி கசியும் உறவுகளே! வாழக் கேட்கின்றோம்

வழி மறிக்கா நிலை ஒன்றை வனைந்து தருக.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் தனது எம்பி மாரின் பதவியை தாரவார்க்கவில்லை என்பதல்ல என்பதை தெளிவாக முன்னுறித்திச் சொல்வது இவ்வேளையில் அவசியம்.

அது மிகச் சரியானது. அவர் ராஜினிமா செய்யவில்லையென்பதற்கான கோபம் இல்லை இது.

  • தொடங்கியவர்

நான் எழுதியதன் பொருள் பெரும்பாலானவர்களுக்கு புரியும் என்று நம்புகின்றேன். ஒவ்வொன்று விளக்கமாக சொல்லப்படவில்லை என்பதற்காக புதிய அர்த்தங்கள் கற்பிக்கத் தேவை இல்லை.

கலைஞரால் இன்றைக்கு "ராஜினமா" என்கின்ற துருப்புச் சீட்டை பயன்படுத்த முடியாத ஒரு நெருக்கடி நிலையில் இருக்கின்றார் என்கின்ற உண்மையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்திய அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாது என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். அப்படி ஏற்காத பட்சத்தில் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பார்கள் என்பதுதான் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

இன்றைக்கு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக மாட்டார்கள் என்றவுடன் எம்மில் பலர் கலைஞர் மீது பாய்கிறார்கள். இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று உள்ள நிலைமை பற்றி கூறியிருக்கிறேன்.

பதவி விலகாததன் காரணத்தை கலைஞரால் வெளிப்படையாக சொல்ல முடியாது. ஏதாவது சப்பைக் கட்டுதான் கட்ட முடியும்.

இதற்காக நாம் கலைஞரோடு மோதுவதை விட்டு விட்டு, அவருடைய நிலையை புரிந்து கொண்டு, தமிழ்நாட்டில் எமது போராட்டத்திற்கு ஆதரவான தார்மீக ஆதரவை வலுப்படுத்துவதற்கு என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

சர்வகட்சி மகானாட்டின் தீர்மானங்கள் நிறைவேற்றப்படாமலே தமிழக அரசியல் மீண்டும்

முருங்கை மரத்தில் ஏற வைத்துள்ளார் அரசியலில் ஆட்டிப்படைக்கும் பெருச்சாளி...

ஒரே நோக்கம் பதவி,பதவி பதவி மூலம் பணம் சுருட்டல், இதற்காக எதுவும் பேசி எவரையும்

பழிவாங்கும் நபர் நான் சொல்லி தெரியத்தேவை இல்லை..இவரின் பேச்சை நம்பி இலங்கைத்தமிழரின் விடையத்தில் களம் இறங்கி பின்னர் தமிழர் ஒற்றுமை கண்டு மிரண்ட பெருச்சாளி தொப்பியை அப்படியே பிரட்ட மிரண்ட கடைசியில் உள்ளதும் போக இருந்து தலைதப்பினால் காணும் என்று மத்திய அரசிற்கு வேதனை கொடுக்க விருப்பமில்லை என்று ஒரு அறிக்கையுடன் எல்லாம் முடிந்துவிட்டது...இது தான்டா தமிழக அரசியல்...

எனவே தமிழக மக்கள் தான் மாறத உள்ளம் உள்ளவர்கள்...

பெரும் ஆதரவைக்கண்டு மிரண்டு அதற்குமேல் பெரும் ஆதரவு உண்டாக்குவதாக சொல்லி தொடகத்தை இல்லமல் செய்யும் தந்திரம்..அதாவது ஒரு சிறிய வட்டத்திற்கு பக்கத்தில் பெரிய வட்டம் போட்டு சிறிய வட்டத்தின் பெறுமதியிலாமல் செய்வது... கடைசியில் இலங்கை இனவாததிற்கு பச்சைக்கொடி காட்டியகிவிட்டது. உணவிற்காக இப்போரட்டம்? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணாநிதி என்னும் அரசியல் தலைவரின் முடிவு நியாயமானது. சரியானது.

சபேனன் நீங்கள் ஆராய்ந்த விடயம் தெளிவாக இருக்கின்றது.

என்னுடைய கருத்து இது

இந்த 2 வாரகால பகுதியில் குறைந்தபட்ச உதவி கூட அவர்களால் செய்யமுடியவில்லை.800 உணவாவது வரும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?

இந்திய வைத்தியர்கள் இவர்களை எப்படி நம்பி புலிகள் இவர்களை அனுமதிப்பார்கள் ராணுவ தளபாடங்கள் வழங்கவில்லை என்று சொல்லி விட்டு இறுதியில் பார்த்தால் இந்திய மனிதவலுவே நேரடியாக பயன்படுத்தப்பட்டுள்ளது.இதற்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு அரசியல் அலசல்.உண்மையும் அதுதான் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை பொறுத்தவரையில் பெரும்பாலானோர் கலைஞரும் மற்றவர்களும் பதவி விலக வேண்டும் என்று எதிற்பார்க்கவில்லை மாறாக அவர்கள் பதவி விலகப்போகிறார்கள் போன்ற ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தி மத்திய அரசை ஒரு நெருக்கடி நிலைக்குள் தள்ளி தமிழர்களுக்கு ஏதாவது ஒன்றை செய்யவேண்டும் என்றே நாமும் விரும்பினோம் அவர்களும் அதை தான் விரும்பியிருக்கலாம். எல்லோருக்கும் அவர்கள் பதவி விலகமாட்டார்கள் என்பதும் தெரியும் பதவி விலகினால் என்ன நடக்கும் என்பதும் நன்றாகவே தெரியும் ஆகவே நாம் எப்பொழுதும் தெளிவாகவே இருக்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழருக்கான தமிழக உறவுகளின் பனிக்கும் விழிகளும், ஒலிக்கும் குரல்களும் பொய்யானவை அல்ல. அங்கு ஒலிக்கும் குரல்கள் உணர்வுகளை மட்டும் கருத்தில் கொண்டதாக இல்லாமல் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளையும் கருத்தில் கொள்ளவேண்டிய அவசியம் இருக்கிறது.

நல்ல ஆராய்வு. நன்றி சபேசன்

இன்று தேவை தமிழக மக்களின் பேராதரவும் அன்பும் ஈழத்தமிழர்களின் போராட்ட ஆதரவிற்கான குறைந்த பட்ச இயங்குதளமும் ஆகும். கலைஞர் ஆட்சி அந்த குறைந்த பட்ச இயங்குதளத்தை பொறுத்துக் கொள்ள கூடியவாறே இருக்கின்றது. தமிழக மக்களின் ஆதரவு அதிகரிக்க அதிகரிக்க, அரசியல் கட்சிகள் அவற்றிற்கு செவி மடுக்க வேண்டியே வரும். அந்த அதிகரிப்பு, தி.மு.க அல்லாத பிரதான கட்சி ஆட்சி செய்யும் போது கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் இல்லை.

எனக்கு ஒரு கேள்வி. சர்வ கட்சி மாநாட்டில் வைக்கப்பட்ட முதலாவது கோரிக்கையான 'உடனடி போர்நிறுத்தம்' என்பதை தமிழ் தரப்பு, முக்கியமாக புலிகள் எந்த வித நிபந்தனையும் இன்றி ஏற்றுக் கொள்வார்களா? புலிகள் ஒரு போதும், தாம் பலகீனமாக இருக்கின்றோம் என உலகும், சிறி லங்கா அரசும் நம்பும் வேளைகளில் நிபந்தனை அற்ற யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு சம்மதிப்பது இல்லை

http://www.yarl.com/forum3/index.php?showtopic=46016

இந்த கட்டுரையிலும் இந்தியா பற்றி சில பார்வைகள் உள்ளது. வாசிக்க சுவரர்சியமாக உள்ளது.

உண்ணாவிரத்தை ஆரம்பித்து வைத்த கம்னியுஸ்ட் கட்சி, அதற்கு ஆதரவு தெரிவித்த அம்மா, அதற்கு பிறகு தொடர்ந்த ஒரு புயல் மாதிரியான எழுச்சி. பின்னர் அமைதி.

கொள்கைரீதியாக உணர்வுடன் தமிழீழத்தை ஆதரித்த முக்கியமான மூவர் இந்த காலத்துள் சிறையில் உள்ளனர். இது ஈழத்தமிழர் மேல் அக்கறை கொண்டு திரண்டு எழுந்த தமிழக உறவுகளுக்கு அவர்களின் எல்லையை சொல்லியுள்ளது.

ஈழத்தமிழர் பிரச்சனை அன்று தொடக்கம் இன்றுவரை இந்திய அரசியலில் எவ்வாறு பயன்படுகின்றதோ அந்த போக்கில் மாற்றம் அரசியல் வாதிகள் மத்தியில் இல்லை. மக்கள் மத்தியில் அரசியலுக்கு அப்பால் ஒரு எழுச்சி ஏற்பட்டது இந்த சம்பவத்தில் நல்ல விசயம்.

சபேசன்,

சீமான் மற்றும் அமீர் அண்ணன்மாருக்கு கருணை காட்டுவாரா கலைஞர்?

அவையை எப்ப வெளியால விடுவார்?

Edited by சாணக்கியன்

குறைந்த பட்சம், தமிழக எம்.பி. க்கள் அடங்கிய ஒரு உண்மைநிலை அறி குழுவை வன்னிக்கு அனுப்ப கலைஞர் வற்புறுத்தி இருக்கலாம்.

தமிழர் தலைகளுக்கு குண்டு!

அது தவறி காலில் விழுந்தால் கட்டுமருந்து கட்டிவிட்டு கஞ்சிக்கு கொஞ்சம் அரிசி தருவார்களாம்!!

Edited by vettri-vel

சபேசன்,

சீமான் மற்றும் அமீர் அண்ணன்மாருக்கு கருணை காட்டுவாரா கலைஞர்?

அவையை எப்ப வெளியால விடுவார்?

நீங்க போங்க சாணக்கியன், அவையள வெளியில விட்டுப்போட்டு கலைஞரை உள்ளுக்க போகச்சொல்லுறீங்களா? எல்லாம் எழுதுறதுக்கு நன்னாத்தான் இருக்கும். ஆனால் நடைமுறை வாழ்க்கையில இப்பிடி ஒரு நிலமையில இருந்து பாத்தால் தான் தெரியும் அதிண்ட வலி. இஞ்ச எங்களாலையே துணிவா ஒரு காரியம் செய்ய ஏலாது. உள்மனதுக்க எப்பவும் ஒரு பயம் இருக்கும். அரசாங்கம் புலிகள தடை செய்து இருக்கிது. கனக்க கதைச்சால் என்ன நடக்குமோ எண்டு ஒருவருக்கும் தெரியாது. ஆனால் வேற யாரும் எண்டால் பிரச்சனை இல்லை தானே? அவர் அப்பிடி செய்யலாம் இப்பிடி செய்து இருக்கலாம் எண்டு சொல்லுவார்கள். கடைசியில தலையில துண்டப்போடப்போறது நாங்கள் இல்லைதானே? புதுசு புதுசா எதிரிகளை உருவாக்காமல் இருக்கிறது நல்லது. ஆனால் இஞ்ச ஒவ்வொரு நாளும் யாரையாவது பிழை செய்துபோட்டாங்கள் எண்டு குறை பிடிச்சுக்கொண்டு இருக்கிறீனம் எங்கட ஆக்கள்.

நெடுக்ஸ் கூறியது போல தமிழ் நாட்டு ஆதரவை வேண்டி நிற்கும் தாயகத்தில் வாழும் ஈழத்தமிழ் மக்கள் தமிழக எம்பிகள் பதவிவிலக வேண்டும் என்பதையே தமிழக அரசோ மத்திய அரசோ கவிழ வேண்டும் என்பதையே எதிர்பார்க்கவில்லை. இந்திய அரசியல் மற்றும் தமிழ் தேசியத்தின் தற்போதைய தேவைகளை உணர்ந்த புலம்பெயர் நாடுகளில் வாசிக்கும் எந்த ஈழத்தமிழனும் அதை எதிர்பார்த்திருக்கமாட்டான். அது எங்களுக்கு அவசியம் இல்லை.

அவர்கள் வேண்டியவை

1. அப்பாவி தமிழ்மக்கள் மீதான மிலேச்சதனமான தாக்குதலை நிறுத்தல்

2. சிறீலங்காவுக்கான ஆயுத மற்றும் இராணுவ உதவிகளை நிறுத்தல்

3. ஈழத்தில் அல்லறும் மக்களுக்கு நிவாரணம் சர்வதேச நிறுவனங்கள் மூலம் கிடைக்க வழி செய்தல்.

4. சர்வதேசத்திற்கு ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைத்தல்.

ஆனால் கலைஞர் செய்தது என்ன.

அனைத்துக்கட்சி கட்சியை கூட்டி தீர்மானங்களை எடுத்து அவற்றை இரு கிழமையில் மத்திய அரசு நிறைவேற்றாவிடின் பதவி விலகுவதாக அறிவித்தார். இதில் வேடிக்கையான விடயம் என்னவெனில் 'உடனடிப் போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை' ஆகும். இப்போதைய களநிலையில் 14 நாட்களுக்குள் உடனடிப் போர் நிறுத்தம் என்பது சாத்தியமாற்று என்பது கலைஞருக்கு தெரியாதா?

எங்களுடைய கோபம்

பிரணாப் முகர்ஜி வந்து கதைத்தவுடன் மத்திய அரசு எல்லாவற்றையும் நிறைவேற்ற ஒப்புதல் அளித்துவிட்டது சிங்கள அரசும் உடண்பட்டுவிட்டது இனி ஈழத்தமிழர் பிரச்சிணை தீர்ந்துவிட்ட மாதிரி அறிக்கைவிட்டதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டின் எழுச்சியை இரண்டு வாரங்களால் தள்ளிப்போடும் முயற்சியே அனைத்துக்கட்சிக் கூட்டம் என்று எழுதின ஞாபகம்..! :lol:

எல்லாம் எப்பவோ முடிந்த காரியம்.

:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படி இவரால் மட்டும் ஈழ தமிழனுக்கும் , இந'திய தமிழனுக்கும் இவரால் ஒருசமயம் நாமம் போட முடித்து என்று !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த பத்தாண்டுகளாக காணாமல் போயிருந்த கலைஞர் இரு வாரங்களுக்கு முன் கிடைத்துவிட்டதாக பத்திரிக்கைகளில் செய்தி படித்தேன். ஆனால் இப்போது வரும் செய்திகள் கண்டுபிடிக்கப்பட்டது கலைஞர் அல்ல என்றும் அது கலைஞரின் போலி என்றும் கூறுகின்றன. இனி கலைஞர் கண்டுபிடிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அறவே இல்லை எனவும் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ம்ஹ்ம்ம்..துக்கம் தொண்டையை அடைப்பதால் இனி காமெடி கை கொடுக்காது. விஷயம் இதுதான். போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்துவது என்ற முக்கிய தீர்மானம் பற்றி எதுவும் குறிப்பிடாத ப்ரனாப்-பாசில் கூட்டறிக்கை எண்ணூறு டன் உதவிப்பொருள் பற்றி மட்டுமே பேசுகிறது. இந்தியாவின் இலங்கை வெளியுறவுக்கொள்கையில் எவ்வித மாற்றமோ இன்றி பிரச்சினையை எளிதாக முடித்துக்கொண்டது காங்கிரஸ். வந்த வேலை வெற்றிகரமாக முடிந்த சந்தோஷத்தில் பாசில் பக்ஷே எண்ணூறு டன் பரிசுப்பொருளுடன் கிளம்புகிறார்.

ஒக்கேனக்கல் திட்டத்தில் கலைஞர் அடித்த பல்டியால் மானம் மட்டும்தான் போனது. இப்போது அடிக்கும் பல்டி ஊசலாடும் தமிழனின் உயிரை துச்சமென மதிப்பதாகிறது. நாற்பது ஆண்டுகால போர் நான்கு நாட்களில் நிறுத்த முடியாது என்னும் விஷயத்தை அனைத்து கட்சி கூட்டத்திற்கு முன் இந்த குழந்தைக்கு எவரும் எடுத்துச்சொல்லாமல் விட்டுவிட்டனர் போலிருக்கு.

தமிழ்தேசிய கலைஞர்தான் கோட்டை விட்டுவிட்டார். இந்திய தேசிய கலைஞர் என்ன ஆனார். கட்சத்தீவை சுற்றி மீன் பிடிக்கும் உரிமை குறித்தும் குள்ள புஷ்கா ப்ரனாப்ஜி அல்வா கொடுத்து விட்டு போயிருக்கிறாரே! 1974 முதல் சமீபகாலம் வரை கட்சத்தீவை சுற்றி மீன் பிடிக்கும் உரிமை இருக்கிறது என்று தானே நினைத்து வந்தோம். கேள்வி ஏதுமின்றி இலங்கைக்காரன் சுட்டு பிணங்களை அனுப்பிவைக்கும்போது வாய் மூடி இருந்த மத்திய அரசு சொல்லாமல் சொல்லியது நமக்கு அங்கே உரிமை இல்லை என்று. இதற்காகவே மத்திய அரசை நொங்கு எடுத்திருக்க வேண்டும். வாய்மையின் மொத்த உருவமான இலங்கையின் சிறப்பு தூதர் தந்த உறுதிமொழியை பிரனாப்ஜி நா தழுதழுக்க உங்களுக்கு ஒப்பிக்க நீங்களும் கண்ணீர் மல்க ஏற்றுக்கொண்டீரோ!

சரி, முக்கியமானததைத்தான் விட்டுவிட்டீர்கள். சாதித்த ஒரே காரியத்தையும் ஒழுங்காய் செய்தீரா? உணவுப்பொருட்களை செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைத்திருக்க வேண்டாமா? இலங்கை இராணுவம் விநியோகிக்கும் உணவுப்பொருள் வண்டியில் ஆயுதத்தை ஏற்றி அனுப்ப, புலிகள் தங்கள் வழமைபோல அதை வழியிலேயே தகர்க்க, போன வாரமே சாகாமல் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்த தமிழன் உணவுப்பொருளை கண்ணில் பார்த்து விட்டு இந்த வாரம் சாகப்போகிறான்.

ஆமாம், நான் தெரியாமல் தான் கேட்கிறேன். எதை மனதில் வைத்துக்கொண்டு இப்படியெல்லாம் ராஜதந்திர கோமாளித்தனம் செய்கிறீர்கள். தேர்தலுக்கு பிறகு மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும், நீங்களும் பெருவாரியாக வெற்றிபெறுவீர்கள் என்றா? அதீத கற்பனை அய்யா உமக்கு!

நினைவிருக்கிறதா உங்களுக்கு? ஒரு முறை கூலி உயர்வு கேட்டு போராடிய கோவை பஞ்சாலைத் தொழிலாளிகளுக்கு எதிராக லாக் அவுட் செய்த முதலாளிகளிடம் எவ்வாறு நடந்து கொண்டீர்கள் என்று! "நான் இப்போது ஊட்டி செல்கிறேன், மாலையில் கோவை வரும்போது மாலை இதழ்களில் கூலி உயர்வு பற்றி செய்தி ஏதும் இல்லை என்றால் நாளை காலை இதழ்களில் செய்தி வரும், 'அரசுடமையாக்கப்பட்ட ஆலைகளில் தொழிலாளிகளுக்கு கூலி உயர்வு' -என்று சொன்னீர்களே!". இந்த நேர்மையும் நெஞ்சுரமும் எங்கே போனது அய்யனே!

நீங்கள் நினைக்கும்போது 'சுவிட்ச் ஆன்', 'சுவிட்ச் ஆப்' செய்ய இன உணர்வு என்ன திரைச்சீலையா? தீர்மானத்தில் கையெழுத்துப்போட்ட கட்சிகள் உம்மை சும்மா விடுவார்கள் என நினைத்தீரா? டி. ராஜாவின் பேட்டியை கேட்டீரா? நீர் டாராய் கிழிபடப்போவது உறுதி.

மிஸ்டர் ஞானி! ப்ளீஸ் கண்டின்யூ!

http://mohankandasami.blogspot.com/2008/10/blog-post_27.html

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய ஆதங்கம் எல்லாம் தன்னால் முடியாததை

அதாவது ராஐpனாமா செய்யமுடியாது என்று தெரிந்தும்.................

கலைஞர் ஏன் சொல்லவேண்டும்

அறிக்கை விடவேண்டும்

காலக்கெடு விதிக்கவேண்டும்

அப்படியாயின் கலைஞர் அரசியல் சாணக்கியன் என்பது.............????

உலகத்தமிழர்களின் தலைவர் என்பது..............????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசனின் கட்டுரை காலத்தேவை அறிந்த கட்டுரை. இப்படி உபயோகமான பாதையில் உங்கள் திறமைகள் பயணிப்பது போராட்டதிற்க்கு எவளவு உறுதுணையாக இருக்கும் நண்பர்களே!

மூலக்கருத்து நீக்கப்பட்டதால் மேற்கோள் நீக்கப்பட்டுள்ளது. -யாழ்பாடி

Edited by yarlpaadi

  • கருத்துக்கள உறவுகள்

:lol: பொங்கிப் பிரவாகித்து வந்த எழுச்சியும் உணர்ச்சியும் காற்றுப்போன பலூன் போலாகி விட்டது அந்தச் செய்தியைப் படித்த போது. இந்தா அந்தா மத்திய அரசுக்கு சவால் விட்டிருக்கிறோம், சரியான முடிவு வராவிட்டால் ஆட்சி கவிழும், பாரதீய ஜனதா வரும். வந்தால் ஓரளவுக்காவது நிலமை சரிவரும் எண்டு நான் உற்பட பலர் எண்ணியிருந்தோம்.

அதெல்லாம் இப்போது இல்லை என்றாகிவிட்டது.

வருத்தமெல்லாம், கலைஞ்ஞர் இருக்கிறார், அவரெல்லாம் பார்த்துக்கொள்வார் என்று எண்ணி தமது உணர்ச்சியெல்லாம் பேசிப் பேசியே கொட்டித் தீர்த்த அந்த சீமானும் அமீரும் இன்று சிறைக்குள்ளிருந்து தாம் தனியே நட்டாற்றில் விடப்பட்டதை எண்ணி ஒடிந்து போயிருப்பர்.

திரண்டுவந்த தமிழக் எழுச்சியை எல்லாம் தனது போர்வைக்குள் இழுத்து முடக்கி, யாரோ தொடக்கிய பேரலையை தனது அணைக்குள் திருப்பி, இடையிலே கடத்தி, இன்று தலமையும் தாங்கி, இறுதியில் உணர்வாளர் எல்லாம் சிறைக்குள் சென்றபின்னர் மத்திய அரசுடன் சந்தோசமாகச் சமரசம் அல்லவா செய்துகொண்டார். இப்போது யார் பேசப் போகிறார்? யார் கூடப் போகிறார்? ஒருவருமில்லையே???

அவ்வளவுதானா? இந்த எழுச்சிக்கெல்லாம் இதுதான் முடிவா??! கூடாது...கூடவே கூடாது !

ஒட்டுமொத்த தமிழகத்தின் எழுச்சியும் வெறும் அரசிய சதுரங்கத்துக்காகப் பலியிடப்பட முடியாது !

எல்லாம் உண்மைதான். கலைஞ்ஞர் ராஜினாமச் செய்தால் அவரின் ஆட்சி கவிழும், ஜெயலலிதா என்கிற பேயாட்சி வரும், தமிழின உணர்வாளர், மனித நேய உணர்வாளர் என்ற பேதமின்றி எல்லோருமே வருடக்கணக்கில் சிறையில் போடப்படுவார்கள். பிறகு ஒரு பூச்சி கூட ஈழத்தமிழர் பற்றி ரகசியம் கூடக் கதைக்க முடியாது. பழையபடி 1991 ஆட்சிக்குப் போய்விடுவோம்.

ஆனால் இப்போது மட்டும் என்ன வித்தியாசம்? ஆதரவாகக் கதைத்த எல்லோரையும் தான் சிறையில் அடைத்தாயிற்றே ? சிங்களவனுக்கு ஆயுதம் துக்கிக் கொடுக்கும் காங்கிரஸுடந்தான் சமரசம் செய்தாயிற்றே?

ஈழத்தமிழரான எமக்கு என்ன நண்மை கிடைத்தது அதனால்? தமிழக பேரெழுச்சி என்பது கலைஞ்ஞரோ அல்லது வேறு எவருமோ தூண்டாமல் தானாக சுடர் விட்ட வெளிச்சமல்லவா? கலைஞ்ஞர் செய்ததெல்லாம் அதைத் தனது என்று உரிமை கொண்டாடியது மட்டுந்தானே??!

இதெல்லவற்றிலுமிருந்து எமக்கு வரும் செய்தி ஒன்றுதான். தமிழக அரசியல் வாதிகளையோ அல்லது அரசியல் ராஜதந்திரத்தையோ நம்பி நாம் போராடக் கூடாது. எமது வெற்றி எமது பலத்தில்த்தான் தங்கியிருக்கிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் தமிழகத்து ஆதரவு எழுச்சியை வரவேற்றுக் கொண்டு எமது பயணத்தைத் தொடர்வதுதான்....இவ்வளவு காலமும் செய்துவருவதுபோல !!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.