Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒப்பரேஷன் "வணங்கா மண்" பிரித்தானியாவில் இருந்து உணவுக்கப்பல் முல்லைத்தீவை நோக்கி பயணம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இது ஒரு பரப்புரை யுத்தத்தையும் சிங்கள இலங்கை அரசுக்கு அழுத்தத்தையும் கொடுக்கும்.இந்தியாவில் இருந்து கப்பல் அனுப்ப முடியாது அரசு அனுப்ப அனுமதிக்காது ஆனல் இங்கிலாந்தில் இருந்து அனுப்புவது மிக்க நல்லது.இந்த முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்
  • Replies 102
  • Views 9.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன் எனினும் இத்திட்டத்தின் அடித்தளம் பலமில்லை என்பதே என் கருத்து.

சர்வதேச ஒத்துழைப்பின்றி கப்பல் மார்க்கமாக சிறிலங்கா கடல்பரப்பைக் கடந்து முல்லைத்தீவை அடைவது "?"-

  • கருத்துக்கள உறவுகள்

ஆமையும் வெல்லும்......

முயலும் வெல்லும்......

முயாலாமை ஒரு போதும் வெல்லாது!

  • கருத்துக்கள உறவுகள்

முயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன் எனினும் இத்திட்டத்தின் அடித்தளம் பலமில்லை என்பதே என் கருத்து.

சர்வதேச ஒத்துழைப்பின்றி கப்பல் மார்க்கமாக சிறிலங்கா கடல்பரப்பைக் கடந்து முல்லைத்தீவை அடைவது "?"-

ஏற்பாட்டாளர்கள் இதை யோசிக்காமல் முன்னெடுக்கிறார்கள் என நான் நம்பவில்லை. கப்பல் சர்வ தேச கடல் பரப்பில் தான் பயணிக்கப் போகுது (இது எந்த நாட்டுக்கும் உரிய பகுதியல்ல!). கப்பலை ஒரு மனிதாபிமான நடவடிக்கையாக கருதி தரிக்க அனுமதிக்கக் கூடிய ஒரு நாட்டில் தங்கி வரக் கூடும். அப்படி ஒரு நாட்டை இனம் காண்பது கடினமல்ல. பிரச்சினை சிறி லங்கா கடற்பரப்பினுள் பிரவேசிக்கையில் தான் ஏற்படும். இதை எதிர் பார்த்துத் தான் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சர்வதேச அமைப்புகளின் பிரசன்னம் கப்பலில் எதிர்பார்க்கப் படுகிறது.கப்பலை சிறிலங்கா தடுத்தால், காசா நிலைமை போல அது வெளியே தெரிய வரும். ஒரு இழுபறி நிலைமை வரும். உயிருக்கு ஆபத்து இருக்கும், இதை ஏற்பாடு செய்வோர் இதையெல்லாம் தெரிந்து, இயன்றளவு குறைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளோடு தான் செய்கிறார்கள் என நான் நம்புகிறேன். ஆட்களையும் நிதியையும் ஏற்பாட்டாளர்கள் ஆபத்தில் வைத்து ஒரு முக்கியமான வேலையைச் செய்கிறார்கள். ஆனால் சிலர் இங்கு (நீங்கள் இல்லை!) தாங்கள் கொடுக்கப் போகும் சில பத்து அல்லது நூறு பவுண்ஸ்கள் கடலுக்கடியில் போய் விடுமோ என அங்கலாய்க்க ஆரம்பித்திருப்பது இன்னும் எங்கள் புலம் பெயர் மக்கள் எங்கள் சகோதரங்களின் உயிரை எந்தளவுக்கு குறைந்த விலையில் வைத்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.ஒபாமா அடிக்கடி சொல்லும் , "எதிர்பாராத நிலைமகள் எதிர் பாராத பதில் நடவடிக்கைகளால் எதிர் கொள்ளப் படவேணும்" என்ற சொற்றொடர் இங்கே பொருந்தும். தயை கூர்ந்து இத்திட்டத்தின் குறைகளை பகிரங்கமாக மக்களிடையே கதைத்து அவர்களின் ஆதரவைக் குறைக்காமல் நாம் ஏன் ஏற்பாட்டாளர்களிடம் அந்தரங்கமாக குறைகளையும் அவற்றிற்கான தீர்வுகளையும் எடுத்துச் செல்லக் கூடாது? இது எங்கள் ஒவ்வொருவரதும் வீட்டு அலுவல் என்று தான் நான் நினைக்கிறேன்.

முயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன் எனினும் இத்திட்டத்தின் அடித்தளம் பலமில்லை என்பதே என் கருத்து.

சர்வதேச ஒத்துழைப்பின்றி கப்பல் மார்க்கமாக சிறிலங்கா கடல்பரப்பைக் கடந்து முல்லைத்தீவை அடைவது "?"-

வணங்காமுடி.. இப்படி எழுதியிருக்கே... :unsure:

சட்டச் சிக்கல்கள், கடல் வழிப்பயண அனுமதி, பயணிப்பவர்கள், மாலுமிகள் மற்றும் சர்வதேச அங்கிகாரத்துடனான பாதுகாப்பு என்பன பூர்த்தியாகியுள்ள நிலையில் இக்கப்பலில் கொண்டு செல்ல உலர் உணவுப் பொருட்களை ஏற்பாட்டாளர்கள் புலம் பெயர் பிரித்தானியர்களிடம் கோரி நிற்கின்றனர்.

Edited by வசி_சுதா

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முயற்சியும் செயற்பாடுமாகும். இயலுமானவரை பாதுகாப்பினைப் பூர்த்தி செய்து, பயணங்களை மேற்கொள்ள வாழ்த்துக்கள்.

நண்பர் ஜஸ்ரினுக்கு,

இங்கே யாரும் தடை சொல்லவில்லையே. கப்பலில் போகின்றவர்களின் பாதுகாப்பில் இவர்களும் தங்களின் அக்கறையை வெளிப்படுத்தி நிற்கின்றார்கள். அதைப் போய், 10, 15 பவுண்சுக்காக என்று குதர்க்கமாக எழுதுவது சரியாகத் தோன்றவில்லை.

அவர்களுக்குத் தோன்றுகின்ற சந்தேகங்கள், பயங்கள் எல்லோர் மனதிலும் இருக்கலாம். ஆனால் பயண ஏற்பாட்டாரகள் நிச்சயம் அதை ஒன்றும் கணக்கில் எடுக்காம் செய்திருக்கமாட்டார்கள் என்பதையும் பயம் கொள்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்குள்ள சர்வதேச தொண்டர் நிறுவனங்களுடன் பேசிப்பார்த்தால் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முயற்சியும் செயற்பாடுமாகும். இயலுமானவரை பாதுகாப்பினைப் பூர்த்தி செய்து, பயணங்களை மேற்கொள்ள வாழ்த்துக்கள்.

நண்பர் ஜஸ்ரினுக்கு,

இங்கே யாரும் தடை சொல்லவில்லையே. கப்பலில் போகின்றவர்களின் பாதுகாப்பில் இவர்களும் தங்களின் அக்கறையை வெளிப்படுத்தி நிற்கின்றார்கள். அதைப் போய், 10, 15 பவுண்சுக்காக என்று குதர்க்கமாக எழுதுவது சரியாகத் தோன்றவில்லை.

இல்லை தூய்ஸ், குதர்க்கமில்லை,முதல் பக்கத்தில் ஒருவர் கொட்டிக் கொடுப்பதைப் பற்றி எழுதியிருக்கிறார். களத்துக்கு வெளியேயும் இதைப் பற்றின விவாதம் நாங்கள் நம்பிக் குடுக்கலாமா என்று தான் நடக்குது. அதையெல்லாம் சேர்த்தே சொன்னேன். மற்ற படி வணங்காமுடி பாதுகாப்பைப் பற்றித் தான் சொல்லியிருக்கிறார். ஆனால் இதையே உதவ விரும்பாதவர்கள் ஒரு காரணமாக எடுத்துக் கொள்வார்கள் என்று தான் இந்தப் பயங்களை பகிரங்கமாக விபரிக்க வேண்டாம் என்றேன். நன்றி. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசும் இந்தியாவும் சர்வதேச கடற்பரப்பில் வைத்து இதற்குமுன் எத்தனையோ கப்பல்களை அழித்திருக்கிறது. சர்வதேச கடற்பரப்பு என்ன எதிரியின் நாட்டுக்குள் அத்துமீறிச் சென்று சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகளை தட்டிக்கேட்க இப்போதைய உலக நடைமுறை அனுமதியளிக்கிறது.

எப்படியோ எங்கேயிருந்தாவது இந்த முயற்சியை செய்யலாம் . இதை கண்டிப்பாக செய்துதான் ஆக வேண்டும் . மனிதாபிமானம் மட்டும் அல்ல . இது நம் பலத்தை காண்பிக்கவும் உதவும் . முயற்சி திருவினையாக்கும் . வெற்றி நமதே . தொடரலாம் . மேலும் இது உலக தொடர்புள்ள செய்தி . இதில் ஏதும் பாதிப்பு ஏற்பட்டாலும் வெற்றி நமதே . ஏனெனில் இந்த முயற்சி தடை செய்யப்பட்டால் அல்லது இடையூறு யாரேனும் விளைவித்தால் அவர்களின் சுய ரூபம் வெளிவரும் . இது இது வரை செய்த முயற்சியில் மிக முக்கியமான மைல் கல் ஆகும் . தயவு செய்து இதில் யாரேனும் எதிர்பாட்டு பாடி கெடுக்க வேண்டாம் . இதை நாம் முடித்தால் நாம் எதையும் முடிப்போம் என துணிவு நம் இனத்தவருக்கு வரும் . உலகம் கொஞ்சம் மாற்றி யோசிக்க ஆரம்பிக்கும் . ஆனாலும் எங்களை போன்றவர்களும் என்ன செய்ய வேண்டும் என தெளிவாக கூறுங்கள் . அதற்காக மொத்த திட்டத்தையும் போட்டு உடைக்க வேண்டாம் . இந்த அடங்கா மண் புதிய மற்றும் நல்ல முயற்சி . அடங்கா மண் ஒரு கப்பலோடு அடங்காது . இங்கிலாந்திலிருந்து கப்பல் வந்தால் நாளை இன்னொரு அடங்கா மண் இந்தியாவிலிருந்து புறப்பட ஏதுவாகும் . மேலும் மேலும் மேலும் . நாம் வெல்வோம் . வெல்ல வேண்டும் . வென்று காமிப்போம் . அழுதுகொண்டே உழு என்பது பழமொழி . அதுபோல பல போராட்டங்களுக்கு இடையே இது போன்ற முயற்சிகளின் கட்டாயம் தேவை

உலகத் தமிழர்கள் அனைவரும் உங்கள் ஆதரவையும் பொருள் உதவியையும் வழங்குங்கள்.இனி நாங்கள் தான் சர்வதேசம் என்பதை எல்லா நாடுகளுக்கும் விளங்க்கப்படுத்த வேண்டிய காலம் வந்து விட்டது.இதன் அடிப்படையிலயே இந்த செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.லண்ட

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில்

நாம் கொடுக்கப்போகும் பொருட்களின் தொகையைப்பார்த்து உலகம் அதிசயப்படணும்

இது எம்மீது உள்ள தடையை மட்டும் எடுத்து விடுங்கோ மற்றவை எல்லாவற்றையும் நாங்களே பார்த்துக்கொள்கின்றோம் என்பதற்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும்

குவியணும் எல்லாம்

கப்பல்கள் காணதவிடத்து 2இ3 கப்பல்களில் அனுப்பமுயற்சிக்கவேணும்

3 மாதத்துக்கு முன் காசாவுக்கு பிரான்சில் இருந்த அனுப்பிய கப்பல் நேற்றுத்தான் (10.03.2009) செசன்றடைந்ததாம்.... :rolleyes:

ஈழம் சென்றடைய 3 மாதத்தில் அங்கு எல்லாமே முடிந்து விடும் அய்யா... இருக்கும் சனமும் நோய்வாய் பட்டு அதன்பின் சாப்பாடு மருந்து... போயும் பலநில்லாமல் போகலாம்.... அப்படியே அன்று ஒருநாள் சோமாலிய மக்களை உயிருடன் தாட்ட நாள்தான் நமக்கும் நடக்கபோகுதோ யாம் அறியோம்.. :lol::(:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

வணங்கா மண் கப்பல் புறப்படுவற்கு வேண்டிய சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்த நிலையிலேயே பொருட்கள் சேகரிப்பதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கின்றது. அதே நேரம் சர்வதேச உதவி நிறுவனங்களின் ஆலோசனைகளும் ஆதரவும் பெறப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் முதலாவதாக மருந்துப் பொருட்களும் அத்துடன் ஒரு மருத்துவர்கள் அடங்கிய குழுவும் பயணம் செய்யவுள்ளனர்.மக்களிடம் என்னென்ன பொருட்களை எற்பாட்டாளர்கள் எதிர் பார்க்கின்றார்கள் என்கிற விபரம்.இலண்டனில் வெளியிடப்பட்டுள்ளது. விபரங்கள் கிடைக்காதவர்கள் வெண்புறா அலவலகத்துடன் தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக் கொள்ளலாம். சேகரிக்கப் படும் பொருட்களின் விபரங்கள் பற்றிய பட்டியல் எனக்கு கிடைத்ததும் இங்கும் இணைக்கிறேன். கப்பல் இலங்கையை நோக்கி பறப்படும் என்பது தீர்மானமாகி விட்டது.. ஆனால் இலங்கையரசு இலங்கை கடல் எல்லைக்குள் அனுமதிக்குமா?? இல்லையா?? அல்லது தாக்குமா??என்பதனை காலமும் சர்தர்ப சூழ்நிலைகளும் முடிவு செய்யட்டும்...நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

Diaspora prepares to send relief to forsaken civilians in Vanni

[TamilNet, Tuesday, 10 March 2009, 23:47 GMT]

The Tamil diaspora in Britain is organising a direct 'mercy mission' taking food and medicine to the civilians of Vanni, forsaken by the conscience of the International Community, said Dr. V. Arudkumar from London, on Tuesday. Prominent humanitarian personalities are expected to participate in this mission. The expedition will be supported and participated by diaspora Tamil professionals in the medical field.

Dr. V. ArudkumarPoliticians and legal experts are already engaged in deliberations in materialising the mission, Dr. Arudkumar said. Further details of the mission would be released at the end of this week, he further said.

The move by the Tamil diaspora in Britain comes as heavy rains and min-cyclone destroyed the tents of the displaced people causing more than 20,000 families stranded without shelters. Indiscriminate shelling by the Sri Lanka Army, using internationally banned cluster munitions and fire-bombs continued to target civilian settlements inside the 'safe zone'.

An ICRC worker was killed last week inside the civilian zone. Another humanitarian worker was wounded on Tuesday. Details are yet to emerge.

Relief initiatives and offers of voluntary services were also reported from the diaspora medical professionals of Australia and Norway.

The Tamil diaspora is seriously considering a 'mercy mission' as Sri Lanka is yet to provide safe passage to the requests extended by the charity organisations in Australia and Norway where doctors had urged their foreign ministries, United Nations Secretary General and the ICRC to secure urgent permission from Sri Lankan authorities to facilitate safe passage of their convoy of doctors and medical supplies to Vanni.

Dr. Panchakulasingam Kandiah, Senior Consultant Radiologist of Haukeland University Hospital in Bergen, Norway, said on 27 February that the medical team of the Norwegian Tamils Health Organisation (NTHO) was prepared to work inside the 'safe zone' without any safety assurances from the Government of Sri Lanka. "However, the NTHO requires necessary guarantees for our safe passage through Colombo and government's permission to reach the conflict zone with ICRC escort," he had said in a press conference to the Norwegian media in Oslo.

The latest British move is a pure humanitarian effort, Dr. Arudkumar said. "We will send an open appeal to all concerned, but are prepared to proceed with our mission as we need to act fast." All necessary judicial and humanitarian precautions would be taken care of, he said adding that a team of experts were dealing with the preparatory measures.

இதன் பலவீனங்களை இங்கு எழுதுங்கள் அறிவுரைகளை சம்பந்தப்பட்டவர்களுடன் பகிருங்கள் அல்லாவிட்டால் நாமே எமது தலையில் மண் அள்ளிப்போடுவது போல் ஆகும்

வணங்கா மண் கப்பல் புறப்படுவற்கு வேண்டிய சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்த நிலையிலேயே பொருட்கள் சேகரிப்பதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கின்றது. அதே நேரம் சர்வதேச உதவி நிறுவனங்களின் ஆலோசனைகளும் ஆதரவும் பெறப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் முதலாவதாக மருந்துப் பொருட்களும் அத்துடன் ஒரு மருத்துவர்கள் அடங்கிய குழுவும் பயணம் செய்யவுள்ளனர்.மக்களிடம் என்னென்ன பொருட்களை எற்பாட்டாளர்கள் எதிர் பார்க்கின்றார்கள் என்கிற விபரம்.இலண்டனில் வெளியிடப்பட்டுள்ளது. விபரங்கள் கிடைக்காதவர்கள் வெண்புறா அலவலகத்துடன் தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக் கொள்ளலாம். சேகரிக்கப் படும் பொருட்களின் விபரங்கள் பற்றிய பட்டியல் எனக்கு கிடைத்ததும் இங்கும் இணைக்கிறேன். கப்பல் இலங்கையை நோக்கி பறப்படும் என்பது தீர்மானமாகி விட்டது.. ஆனால் இலங்கையரசு இலங்கை கடல் எல்லைக்குள் அனுமதிக்குமா?? இல்லையா?? அல்லது தாக்குமா??என்பதனை காலமும் சர்தர்ப சூழ்நிலைகளும் முடிவு செய்யட்டும்...நன்றி.

பிரித்தானியாவில் மட்டும்தான் சேகரிக்கிறார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் மட்டும்தான் சேகரிக்கிறார்களா?

வசி பிரித்தானியா மட்டும் என்றில்லை ஜரோப்பா எங்குமிருந்து விரும்பியவர்கள் கொடுக்கலாம். புதிய உடுப்புக்கள் மற்றும் பழுதாகாத உணவுப்பொருட்கள். பால் பவுடர். மருந்துவகை என்று சேகரிக்கினம் ஆனால் அவை பிரித்தானியாவிற்கு அனுப்பி வைக்கவேண்டும். அவற்றை மற்றைய நாடுகளில் பெற்றுக் கொள்ள ஏதாவது ஏற்பாடுகள் செய்வார்கள். விபரங்கள் கிடைத்ததும் அறியத் தருகிறேன்.

மிக நல்ல முயற்சி. இன்றைய நிலைமையில் நிச்சயமாக மேட்கொள்ளப்படவேண்டிய ஒன்று. வாழ்த்துக்கள். உலக நாடுகள் உள்ள தமிழ் மக்கள் எல்லோருமே இதற்கு நிச்சயமாக உதவி செய்ய விரும்புவார்கள். அவர்களுக்கு வழி காட்டும் வகையில் ஒரு முகவரியை இணைய தளங்களில் கொடுத்து உதவினால் மிக நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாத் துறைமுகத்தில் இருந்து சகல சோதனைகளையும் முடித்துத்தான் கப்பல் புறப்படும். எனவே உதவிப் பொருட்களுடன் செல்லும் கப்;பலைத் தாக்கினால் விடயம் சர்வதேசத்திற்கு தெரியவரும்.பிரித்தானியாவிலி

  • கருத்துக்கள உறவுகள்

சுமார் 3 இலட்சம் மக்களுக்கு வேண்டிய மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல் நேரடியாக பொருட்களை வன்னியில் கொண்டு சென்று இறக்குவது சாத்தியமா?

தமிழ்நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட பொருட்களையே சிங்கள அரசு தானே பொறுப்பேற்று அரைகுறையாக வினியோகித்தது, அதுபோல இப்போதும் கட்டாயப்படுத்தப்பட்டால் இல்லை நாங்கள் தான் வினியோகிப்போம் என்று சொல்லமுடியுமா?. இதே சட்ட வல்லுனர்களை பயன்படுத்தி ஒரு சுயாதீன குழுவை அனுப்பி வன்னிக்குள் அரங்கேறும் இன அழிப்பு நிகழ்வுகளை வெளிக்கொண்டுவந்து சர்வதேசத்துக்கு பகிரங்கப்படுத்தினாலேயே எமது மக்களின் பல பிரச்சினைகளைத் தீர்க்கலாம். வணங்கா மண் திட்டம் சரிவராது போனால் சேகரிக்கப்படும் பொருட்களை என்ன செய்வது என்பதற்கு மாற்றுத் திட்டம் தயாரா?. உறவுகளுக்கு உதவவேண்டும் என்று ஆதங்கத்துடனும் ஆவலுடனும் பலபேர் இத் திட்டத்துக்கு உதவ முன்வந்தும் திட்டம் சரியாக செயற்படவில்லையென்றால் அவர்கள் மீண்டும் வேறொரு முக்கியமான உதவித் திட்டமொன்றுக்கு உதவ முன்வருவார்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முயற்சி வெற்றி பெற வேண்டுவோம். சர்வதேசத் தொண்டு நிறுவனங்களினதும், ஐநா அரசு சார்பற்ற நிறுவனங்களினதும் ஒத்துழைப்பும் ஆசியும் மிக அவசியம். இது போய்ச்சேருங்காலம் இந்தியப் பொதுத் தேர்தலின் பின்னரே. எல்லாம் வெற்றியை நோக்கிய பயணம்.

இதை அனுப்பாட்டா 3 மாசத்துக்குப்பிறகு இதுகூட போகாதே அய்யா!

வன்னில சனம் சாகுதுதான் ஆனா அனுப்பினால் சுணங்குமென்ரிருப்பது கையாலாகாத்தனமில்லையா?

துரிதமாக போக என்ன செய்யலாம்? அதையோசிங்கையா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை பார்த்ததும் பதறி அடித்தது ஓடிவந்து திட்டத்தை நொட்டை நொள்ளை சொல்வதிலேயே குறியாக உள்ளனரே? இதை பார்த்துமா புரியவில்லை!!!

Edited by pepsi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.