Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" நியாயமான ஒரு கேள்வி!

"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா. :lol:

நானும் விவரிக்க ஆரம்பிதேன்.

"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்."

"அது சரி, பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".

"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, 'நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்கன்னு கேப்பாங்க' - இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்"

"சரி"

இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants....". இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க. காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்? ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா? அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை."

"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?

"MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."

"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?" அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது. "சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?"

"அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்"

"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?"

"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான். ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது. இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.

"அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.

"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.

"CR-னா?"

"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."

அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது. "இதுக்கு அவன் ஒத்துபானா?"

"ஒத்துகிட்டு தான் ஆகணும்.. முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"

"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"

"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை. 'ப்ராஜெக்ட்' சக்சஸ் ஆனாலும், 'பெயிலியர் ' ஆனாலும் இவரு தான் பொறுப்பு."

"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு."

"அதான் கிடையாது. இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது."

"அப்போ இவருக்கு என்னதான் வேலை?" அப்பா குழம்பினார்.

"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு 'டென்ஷன்' ஆகி, 'டயர்ட்' ஆகி, 'டென்ஷன்' ஆகுறது தான் இவரு வேலை.."

"பாவம்பா"

"ஆனா இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."

"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"

"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."

"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றத மாதிரி?!" :D

"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க."

"இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"

"வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."

"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?"

"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை. புடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி."

"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?"

"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"

"கிளையன்ட், சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"

"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டீமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."

"எப்படி?"

"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை." இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம். அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".

"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?"

"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்."

"அப்புறம்?"

"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."

"அப்புறம்?"

"அவனே பயந்து போய், "எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு" புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க. இதுக்கு பேரு "Maintenance and Support". இந்த வேலை வருஷ கணக்கா போகும். ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி. தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்".

"எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா."

:lol::D:D

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்

உதுக்குத்தானோ எங்களை மாதிரி சாதாரண தொழிலாளி இடம் இருந்து பணத்தை எடுத்து உங்களுக்கு தாராங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உதுக்குத்தானோ எங்களை மாதிரி சாதாரண தொழிலாளி இடம் இருந்து பணத்தை எடுத்து உங்களுக்கு தாராங்கள்

இதுக்குத்தான் தொழில் நுணுக்கங்களையும், வியாபார யுக்திகளையும் வெளியே சொல்லக் கூடாதென்பது! :lol::D

குறைந்தபட்ச எதிர்பார்த்த முடிவு வரவில்லையெனில், அப்பொழுது பல கோணங்களில் வரும் அழுத்தமும், மூளைக்கு சவாலும் இருக்கே.... நொந்துபோயிடுவீங்க! :lol:

இந்த வேலை வருஷ கணக்கா போகும். ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி. தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்".

"எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா."

ராஜவன்னியன் என்னதான் இருந்தாலும் கிடைக்கிற

கேப்பில பெண்கள வம்புக்கு இழுக்கிறதில நாமெல்லாம்

கெட்டிக்காரர்தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன் என்னதான் இருந்தாலும் கிடைக்கிற கேப்பில பெண்கள வம்புக்கு இழுக்கிறதில நாமெல்லாம் கெட்டிக்காரர்தான்

:lol:

பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திலும் துணை நின்று, வாழ்வின் அச்சாணியாய் இருப்போரை, ஒரே மாதிரியாகக் கொள்ளாமல், அவ்வப்போது சீண்டவில்லையெனில் வாழ்க்கையில் சுவையேது?

  • கருத்துக்கள உறவுகள்

"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"

உதுக்குத்தான் உந்த கம்புயூட்டர் படிச்சவனெல்லாம் ......... ஒரு தினுசா அலையுறான்களோ ....... :):D:lol:

  • கருத்துக்கள உறவுகள்
:)
  • கருத்துக்கள உறவுகள்

இராஜவன்னியன், ஒத்தவரியில் சொல்லனும்னா..... அசத்திட்டிங்க போங்க. இனிமேல் இந்தப் புரோக்கிறாம் செய்கிறவர்களை எல்லோரும் ஒரு திணுசாத்தான் பார்ப்பார்கள். அகா இவரும் ஈராஜவன்னியன் சொன்ன ஆளோவென.

ராஜவன்னியன் சிக்கலான பல விசயங்களை எல்லோருக்கும் விளங்கிறமாதிரி நன்றாக எழுதி இருக்கிறீர். தொடர்பாடல், கணணிவியலில மாத்திரம் இல்லை.. வைத்தியத்துறை - வைத்தியசாலை முதற்கொண்டு சவச்சாலைவரை எல்லாமே சுத்துமாத்துத்தான். எல்லாரும் எப்போதும் சுத்துமாத்துக்கள் என்றும் சொல்வதற்கு இல்லை, பகுதிநேர சுத்துமாத்துக்கள், முழுநேர சுத்துமாத்துக்கள், ஓர் தடவை, இரு தடவை சுத்துமாத்துக்கள் இப்படி பலவகைகள் இருக்கிது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி..

என்னுடை மனைவி செய்யிர வேலையை சொன்னதுக்கு...4 வருடமா சேர்ந்து குப்பை கொட்டியும் புரியாததை 5 நிமிடத்தில் அசத்திட்டீங்கள் போங்கோ..

இராஜவன்னியனா? கொக்கா?

ஒரு டவுட்..இதில யார் யார் எல்லாம் கென்சல்ரன்?..எங்கட ஊரில டொக்ரரை தான் கென்சல்ரன் என்று சொல்லுறவை..நம்மாள் தானும் அதுதான் என்று புலம்புற..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முந்தநாள் முருக்கங்காய் வாங்க கடைக்கு போனனான்.

கடைக்காரன் சொன்னான் அண்ணை எங்கடை மரக்கறியள் இண்டைக்கு வராதாம்.

ஏனெண்டால் ஏதோ கொம்பியூட்டர் பிரச்சனையாம் அதாலை ஆகாயக்கப்பல் எல்லாம் ஒரு நாள் லேற்ராம்.

நாசமறுப்பு இப்ப எதுக்கெடுத்தாலும் கொம்பியூட்டரும் கோதாரியும்.

உதாலை சனத்துக்கு வேலையுமில்லை.

ஊர்பேர் தெரியாத வருத்தங்களும் கூடிக்கோண்டு போகுதெல்லே.

இதுக்குள்ளை கொம்பியூட்டர் எஞ்சினியர்மாரின்ரை கோட்டும் சூட்டும் அவையின்ரை நெளிப்பும் :)

யாரங்கே.... என் புனிதமான தொழிலை கிண்டல் பண்ணிய ராஜவன்னியனை வைரஸ் பிடித்த hard drive இனுள் போட்டு printer இனூடு வெளியே எடுக்கவும்

உண்மையில் வாசிக்கும் போது வாய் விட்டு சிரித்தே விட்டேன்.... அதுவும் புரொஜெக்ட் மானேஜர் பற்றி சொல்லியிருந்தது உண்மையிலும் உண்மை..... வீட்டில பருப்பு சரியாக வேகாட்டியும் என் பிரொஜெக்ட் மானேஜரைத்தான் குற்றம் சொல்லுவன் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து உறவுகளின் பதிவுகளுக்கும் நன்றி. :rolleyes:

இந்த கணனி வல்லுநர்கள், சிறுவயதில் வெள்ளையும் சொள்ளையுமாக, பர்சில் பணம் பிதுங்க, நுனிநாக்கில் தஸ் புஸ்னெ தமிங்லிஷ் பேசி, பட்லிகளுடன் பீச், சினிமா, டேட்டிங்கென திரியாதீர்களப்பா, பிஞ்சில் பழுத்து வெம்பி, மற்றவர்களின் கண்பட்டு, எரிச்சலுடன் கல்லடிபட ஏதுவாகிவிடுமென சொன்னால் கேட்டால்தானே? :)

ஒரு டவுட்..இதில யார் யார் எல்லாம் கென்சல்ரன்?..எங்கட ஊரில டொக்ரரை தான் கென்சல்ரன் என்று சொல்லுறவை..நம்மாள் தானும் அதுதான் என்று புலம்புற..

தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வியாபார நோக்கில் அமல்செய்ய ஆலோசனை தரும் அனைவருமே "கென்சல்ரன்" தான். டாக்டர் அவருடைய நுட்பத்தை, நம்மில் தெளிக்கிறார். கணனி வல்லுநர், நுட்பத்தை எண்ணில் தெளிக்கிறார். ஆகையால் இருவரும் ஒன்றே!

யாரங்கே.... என் புனிதமான தொழிலை கிண்டல் பண்ணிய ராஜவன்னியனை வைரஸ் பிடித்த hard drive இனுள் போட்டு printer இனூடு வெளியே எடுக்கவும்

அப்படியே HDDல் உள்ளேபோட்டு உலுக்கினாலும், QUARANTINE அல்லது SYSVOL என்ற பகுதிகள் இருக்குமே அதில் ஒளிந்துகொண்டால் போச்சு! சாதாரண பாவனையாளர்களுக்கு தெரியவா போகுது? அப்படியும் printer க்கு எம்மைத் தள்ளினால், அந்த APIயை செயலிழக்கச் செய்துவிடவேண்டியதுதான். :rolleyes:

சரி, ரொம்பதூரம் வந்துட்டீங்க... இந்த இணைப்பிலுள்ள விந்தையை பாருங்கள்... அசைபட வல்லுநரின் கற்பனை மற்றும் படைக்கும் திறமையை நிச்சயம் மெச்சுவீர்கள்!

அசை கலையின் இசை

.

Edited by ராஜவன்னியன்

சரி, ரொம்பதூரம் வந்துட்டீங்க... இந்த இணைப்பிலுள்ள விந்தையை பாருங்கள்... அசைபட வல்லுநரின் கற்பனை மற்றும் படைக்கும் திறமையை நிச்சயம் மெச்சுவீர்கள்!

அசை கலையின் இசை

இந்த அருமையான ஆக்கத்தினை ஏற்கனவே டுபாயில் இருக்கையிலும் பார்த்திருக்கின்றேன்... உண்மையில் இயற்கை படைத்த மனிதன் அந்த இயற்கையையே அழிக்கின்றான் என்பதை போன்ற ஒரு illustration இதில் இருக்கு.... மிக நல்ல கற்பனை... நீண்ட நாட்களின் பின் மீண்டும் பார்க்க உதவியமைக்கு நன்றிகள் ராஜவன்னியன்

எல்லாம் கற்பனைகள், மினக்கட்டு குந்தி இருந்து செய்து இருக்கிறீனம்

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நகைச்சுவையாக இருந்தாலும் உண்மை நிலை இதுதான். ஆனாலும் நிறையப் பணம் வைத்திருக்கும் பெரிய நிறுவனங்களுக்கு இப்படி நடப்பது நன்றாகவே தெரியும். எனவே ஒரே வேலையை ஒன்றுக்கு மேற்பட்ட ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைப்பார்கள். ஒப்பந்தக்காரர்களும் பெரிய நிறுவனங்கள் என்றால் நீண்டகால வருமானம் கருதி பல முதலீடுகளைச் செய்வார்கள். வேலையின் தரத்தையும் ஒப்பந்தக்காரர்களின் மீதான நம்பிக்கையையும் சரிபார்க்கவே பலர் இருப்பார்கள். எனவே குறுகிய காலத்தில் கொஞ்சப் பணத்தை உழைக்க முயல்பவர்கள் நீண்டகாலத்திற்கு இந்த உத்தியைத் தொடர்ந்து பாவிக்கமுடியாது.

எனக்குத் தெரிந்த நிறுவனம் ஒன்று ஒரு பெரிய ப்ராஜக்கிற்குப் வேலை செய்த ஒப்பந்தக்காரருக்கு 2 வருடத்திற்கு பணமே கொடுக்கவில்லை! அவர்களும் நீண்ட கால லாபம் காரணமாக பொறுத்திருந்தார்கள்!

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

முந்தநாள் முருக்கங்காய் வாங்க கடைக்கு போனனான்.

கடைக்காரன் சொன்னான் அண்ணை எங்கடை மரக்கறியள் இண்டைக்கு வராதாம்.

ஏனெண்டால் ஏதோ கொம்பியூட்டர் பிரச்சனையாம் அதாலை ஆகாயக்கப்பல் எல்லாம் ஒரு நாள் லேற்ராம்.

நாசமறுப்பு இப்ப எதுக்கெடுத்தாலும் கொம்பியூட்டரும் கோதாரியும்.

உதாலை சனத்துக்கு வேலையுமில்லை.

ஊர்பேர் தெரியாத வருத்தங்களும் கூடிக்கோண்டு போகுதெல்லே.

இதுக்குள்ளை கொம்பியூட்டர் எஞ்சினியர்மாரின்ரை கோட்டும் சூட்டும் அவையின்ரை நெளிப்பும்

Spoiler

அது சரி இந்த வயதில எதுக்கு முருங்கைக்காய் வாங்கப் போனியள். இஞ்ச கிடைக்கிற மரக்கறிகளைச் சாப்பிடலாம் தானே?

அது சரி இந்த வயதில எதுக்கு முருங்கைக்காய் வாங்கப் போனியள். இஞ்ச கிடைக்கிற மரக்கறிகளைச் சாப்பிடலாம் தானே?

ஏழாவத தவளவிடத்தான் :D

  • கருத்துக்கள உறவுகள்

சிரிக்கவும் சிந்திக்கவும் வேண்டியது

ஆனால்

இதைப்பற்றி சிந்திக்க தொடங்கினால்......

எந்த பொருளையும் வாங்க மனம் வராது

இந்த வேலை வருஷ கணக்கா போகும். ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி. தாலி கட்டினா மட்டும் போதாது. வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்".

ஆனால் இதில் தமிழர்கள் முன் யாக்கரதையானவர்கள்

(வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு)

அதனால்தான் முற்பணமாக மொத்தமாக(சீதனமாக) வாங்கி விடுகிறார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெப் டிசைனிங் செய்பவர்களும் அநியாயத்துக்கு நாட்களை கடத்துவார்கள். கவனமாக இருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வெப் டிசைனிங் செய்பவர்களும் அநியாயத்துக்கு நாட்களை கடத்துவார்கள். கவனமாக இருங்கள்.

சரியா நொந்து போன வலி எழுத்தில் மிளிர்கிறது. :)

  • 4 years later...
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான... இப்பதிவை, இன்றைய தெரிவாக தேர்ந்தெடுத்து...

யாழ்களத்தின் முதல் பக்கத்தில் பிரசுரித்த நியானிக்கு நன்றி.thanks.gif 

இதனை இன்னும் வாசிக்காதவர்கள், முதல் பக்கத்தில் இருந்து வாசித்தால், பல அனுபவங்களை பெறுவீர்கள் என்பதற்கு உத்தரவாதம் அளிக்கின்றேன். :)

Edited by தமிழ் சிறி

  • 3 weeks later...

தற்போது எனது நிறுவனத்தில் நடப்பதை படம்பிடித்து எழுதியுள்ளீர்கள்.

வாசிக்கும்போது சிரிப்பை கட்டுப்படுத்த நான்பட்ட பாடு.

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.