Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்களத்தில் களேபரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிறுத்தவில்லை, நிதானிக்கிறார் இல்லையா டன்! :lol:

  • Replies 282
  • Views 32.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன நிறுத்திட்டிங்கள்?

நிறுத்தவில்லை, நிதானிக்கிறார் இல்லையா டன்! :lol:

நிறுத்த இல்லை.. போன வாரவிடுமுறையில் ரொரோண்டோ போய்ட்டன்..! அதான். :lol:

நிறுத்த இல்லை.. போன வாரவிடுமுறையில் ரொரோண்டோ போய்ட்டன்..! அதான். :lol:

நீங்கள் போய் வந்தாப்பிறகுதான் நில நடுக்கம் வந்ததோ...?? என்ன குண்டை அங்கை போய் போட்டனீங்கள்...?? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் நீட்ட நாட்களாக யாழுக்கு வரவில்லை.சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாயிட்டுது.வர வர லொள்ளு கூடிக் கொண்டே போகுது.தொடரட்டும்.பாராட்டுக்கள். கொலைஞன் மன்னிக்கவும் இசைக்கலைஞன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காட்சி 11:

விடிந்தாலும் பொழுதுபட்டாலும் அந்தக் கணினித்திரையில் ஒரே ஒரு திரிதான் தலையை நீட்டிக்கொண்டிருந்தது.

போர் அடிக்குது.. என்ன செய்யலாம் எண்டு ஒரு ஐடியா தாங்களேன்..! - உறுப்பினர் ரதிதேவி ஆரம்பித்த திரிதான் அது. :(

"ச்சே.. இவ்வளவு நாளும் கடலைக்கு இந்த விடலை எண்டு தெம்பா இருந்தன். திடீரெண்டு இதுக்குள்ள வந்து சிலம்பாட்டம் ஆடி என்ர அடி மடியிலயே கை வைக்கிறாங்களே..!" நொந்துகொண்டார் உறுப்பினர் கடலை. :lol: உறுப்பினர் ஒருவர் அந்தத் திரிக்குள் இரசாயன மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டிருந்ததுதான் உறுப்பினர் கடலையின் கவலைக்குக் காரணம். அடிவயிறுவேறு கலங்குவது போல இருந்தது உறுப்பினர் கடலைக்கு.

"ஆகா.. எத்தினை பேரையா இப்பிடிக் கிளம்பியிருக்கிறீங்கள்? அவ இவருக்கு நல்ல தோழியாமில்லே..! இவர் பரிதாபப் படுறாராம். ஐயோ.. இந்த ஆளை இவ்வளவு நாளும் நம்பி ஏமாந்துட்டன்யா..! பிரம்மச்சாரி எண்டு நினைச்சு விட்டுவச்சது தப்பாப் போச்சு..!" புலம்பினார் கடலை. mad0003.gif

"ஆ.. இதபார்றா.. பிறசில் அணி தங்கள் ரெண்டுபேருக்கும் பிடிக்குமாம்.. அப்பூ.. விடாதிங்கப்பூ நூலு.. அப்புறம் ஒட்ட அறுந்திடும் வாலு..! ஆ..!" ஆற்றாக்கொடுமையில் அரற்றியவர் கதவு தட்டப்படும் ஓசை கேட்டு திரியை சிறிதாக்கிவிட்டு வாசலுக்குச் சென்றார். :D

கதவைத் திறந்தவருக்கு ஆச்சரியம். லண்டனில் கோடைக்காலத்துக்கு ஏற்றமாதிரி காற்றோட்டமாக வேட்டி, துண்டு, நெற்றியில் பட்டை, உருத்திராட்சக் கொட்டை எண்டு ஒரு சிவப்பழம் நின்று கொண்டிருந்தது. மேல் சட்டையை வேறு காணவில்லை. sad0012.gif

"சிவ சிவ.. சித்தாந்த பண்டித பூஷணம்.. சுலோகபஞ்சகவிஷயம்.. சிவபரத்துவ நிச்சயம்.. தெய்வப் பிரஸ்தாபம்.." வாசலில் நின்ற சிவப்பழம் ஆரம்பித்தது. :lol:

'ஆகா.. இந்த ஆளை பக்கத்து வீட்டில பார்த்திருக்கிறனே.. இருக்கிற பிரச்சினை பத்தாதெண்டு இதென்னப்பா புதுப் பிரச்சினை?' மனதுக்குள் நொந்த கடலை சமாளித்தார்.

"ஐ ஆம் சாரி. ஐ நோ இங்கிலீஸ் தமில். நத்திங் எல்ஸ்" :(

சிவப்பழம் காதில் எதையும் வாங்கிக்கொள்ளவில்லை.

"தென்றமிழ் நாடு செய்தவப் பயனென

வந்திடு நெல்லை வளம்பதிக் கணித்தாம்

பேட்டை யென்னும் பெருநக ரதனுள்

தாவில் பரம்பரைச் சைவ வேளாண்

மரபில் வந்தோன் மதிநலம் வாய்ந்தோன்"

முணுமுணுத்தபடியே கடலையை இடித்துத்தள்ளிக்கொண்டு உள்ளே வந்த சிவப்பழம் நேராக கணினி முன் தரையில் உட்கார்ந்து விசைப்பலகையை எடுத்து தன்முன்னால் வைத்துக்கொண்டது..! scared0006.gif

கடலைக்கு வயிற்றுக்கலக்கத்துடன் இப்போது தலைச்சுற்றலும் வந்துவிட்டதுபோல் தோன்றியது.

கணினியில் புதிய விண்டோவைத்திறந்த உருவம் யாழ்களத்துக்குச் சென்று தனது பாவனைபெயரைப் பதிந்தது.

"ஆறுமுக நாவல்பழம்" happy0002.gif

"அடப்பாவி.. அந்த ஆளா நீர்?" அதிர்ச்சியடைந்த கடலை கெஞ்ச ஆரம்பித்தார்.

"சாமி.. சாமி.. ரொம்ப நாளா பிராக்கட் போட்டது.. இடையில ஒருத்தன் லவட்டிக்கொண்டு போயிடுவான் போல இருக்கு..! இதுக்குள்ள நீங்கள் வேற ஏன் சாமி உயிரை வாங்கிறீங்கள்?" :lol:

காதில் போட்டுக்கொள்ளாமல் தட்டச்சு செய்தது சிவப்பழம்.

ஈசுர மூர்த்தி யெனும்பெய ருடையோன்

செய்சிவ பரத்துவ நிச்சயச் செழுநூல்

எவரும் பொருளை யெளிதிற் கண்டு

"ஆகா.. இந்தாளுக்குத்தான் காதில எதுவுமே விழாதே..! இப்ப என்ன செய்வேன்?!" கடலைக்கு தலைச்சுற்றல் அதிகமாகியது. sick0023.gif

சாவகாசமாக தட்டச்சை முடித்த சிவப்பழம் தனது தனிமடலைத் திறந்தது. எல்லாமே உறுப்பினர் மாரசாமி :D தூய தமிழில் அர்ச்சனை செய்து எழுதிய தனிமடல்களாக இருந்தன. அதையெல்லாம் கண்டும் காணாமல் விட்டுவிட்டு உறுப்பினர் ரதிதேவிக்கு தனிமடல் ஒன்றை சுருக்கமாக வரைந்தார் சிவப்பழம்.

"ஐ லவ் யூ"

"ஆ..ஆ.. சாமீ.. நீங்களுமா?" கடலைக்கு கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. :lol:

"தம்பி.. எங்களுக்கும் காமத்துப்பால் தெரியுமில்லே.. சிவசிவ.." வேட்டியை மடித்துக்கொண்டு வாசலை நோக்கி அட்டகாசமாக நடந்துபோனார் சிவப்பழம். :lol:

தரையில் மல்லாந்து கிடந்தார் உறுப்பினர் கடலை. happy0007.gif

(தொடரும்.) :D

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா.........ஏற்கனவே இரண்டு திரியைப் பார்த்துப் பார்த்து கண் பூத்துப் போச்சுது யாயினிக்கு...யாயினி பெண் விஸ்வாமித்திரர் ஆகிறதுக்கு முதல் நல்லவேளை நீங்கள் வந்து காப்பாத்திட்டீங்கள் இசை அண்ணா..அது சரி எப்ப கூடி நாவல் பழத்தை பின் தொடர்ந்தனீங்கள்?முருகா...முருகா..என்ன கொடுமை சரவணா.. :D:(

காட்சி 9:

ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார் யாழின் பெரும்புள்ளி. :D அடிக்கடி மின்னஞ்சலை நோட்டமிடுவதும் வில்லங்க மின்னஞ்சல்கள் வராததையிட்டு நிம்மதிப்பெருமூச்சு விடுவதுமாக இருந்தார். நாம் தமிழர் கெம்புகுமாரின் ஈமெயில்கள் மட்டும் சர் சர் என்று வந்து வேண்டாத புளியை வயிற்றில் கரைத்துக் கொண்டிருந்தது. :D

'இந்த கீ நியூஸ் காரன்களின் தொல்லை தாங்கலை. எவனோ எழுதிறதுக்கெல்லாம் நம்ம பதில்சொல்லவேண்டியதா இருக்கு..!', மனதுக்குள் அலுத்துக்கொண்டவர் மட்டுறுத்துனர்கள் எந்த அளவுக்கு வேலை செய்கிறார்கள் என்பதை நோட்டம் விட்டார். கலவரமடைந்தவராக உடனே தொலைபேசியை கையிலெடுத்தார். free-rolleye-smileys-326.gif

"ஹலோ நான் மேகன் கதைக்கிறன். யார் இது விழலியா?" :lol:

"யெழ்ஸ் சாழ்ர்..!" குழறலான ஒரு குரல் மறுமுனையில் கேட்டது. free-party-smileys-771.gif

"ம்ம்ம்.. இப்பவே கச்சேரியை தொடங்கியாச்சா? சரி சரி.. ஏக வசனத்தில திட்டி கருத்தெல்லாம் வந்திருக்கே.. கவனிக்கிறேல்லயா?" mad0003.gif

"யெழ்ஸ் சார்.. நோ சார்.. இதோ கவனிக்கிறன் சாழ்ர்..!" free-party-smileys-774.gif

"டொக்"

மறுமுனையில் இணைப்பு துண்டிக்கப்பட்டதையிட்டு கடுப்பானார் விழலி. களத்தை உடனடியாக நோட்டமிட்டவருக்கு கொதிவதனம் எழுதியிருந்த நான்கு கருத்துக்கள் பன்னிரண்டு கருத்துக்களாகத் தெரிந்தன.

அரிவாளை எடுத்து எழுத்துக்களின்மீது வீசினார். சிறிது யோசித்தவர் கொதிவதனத்தின் கழுத்திலும் வீசிவிட்டார். இவ்வாறு கொதிவதனத்துக்கு அன்றுடன் சங்கு ஊதப்பட்டது. :lol:

மறுபக்கத்தில் தொலைபேசியைத் துண்டித்த பெரும்புள்ளி யாழ்முரசத்தைப் பார்வையிட்டார். மட்டுறுத்தினர் கொலைஞனின் எச்சரிக்கைகளே கண்ணுக்குத் தெரிந்தன.

'ம்ம்ம்.. என்னத்தை எச்சரிக்கை பண்ணி என்ன.. ஒரு பயபுள்ள கேக்கிறானா..?! பேசாமல் இன்னொரு மூண்டு மாசம் ஓய்வெடுக்கப் போகலாம் போலை..!' அலுத்துக்கொண்டார் பெரும்புள்ளி.

அறையில் இருந்த கணினிகளை நோட்டமிட்டவருக்கு ஏதோ ஒன்று குறைவது போல் தென்பட்டது. :(

'ஆகா.. இங்கேயிருந்த ஒரு கணினியைக் காணமே..!' confused0006.gif

யோசனையுடன் மறுபடியும் தொலைபேசியை எடுத்தார்.

"ஹலோ நான் மேகன் கதைக்கிறன். யார் இது இலைஞனா?" :(

(தொடரும்.) :lol:

அடப் பாவி மனிசா..... நான் இன்றுதான் இதனைப் பார்த்தன்...இந்த தொடர் லண்டன் வாலாக்களை மட்டும் பதம் பார்க்கும் என்று நினைத்தன்..இப்ப அது நாடு, எல்லை எல்லாம் தாண்டி என் வீட்டு கோடிவரைக்கும் வந்துட்டுது...

'விழலி ' என்ற பெயர் அம்சமகாகவும் ஒரு விதத்தில் அர்த்தமுள்ளதாகவும் இருக்கு....

அத்தோட வல்வை வயாக்ரா என்ற பெயர் அவாவுக்கு நல்லா பொருந்தும் (அவவுக்கு இதுவரைக்கும் 5 பிள்ளைகள் என்பதே நல்ல சான்று :lol: )

இப்படி நகைச்சுவையாக எழுதுவதற்குத்தான் அதிக திறமை வேண்டும்.. கன நாளின் பின் வாசிக்கின்றன்... நல்லா இருக்கு

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

காட்சி 11:

விடிந்தாலும் பொழுதுபட்டாலும் அந்தக் கணினித்திரையில் ஒரே ஒரு திரிதான் தலையை நீட்டிக்கொண்டிருந்தது.

போர் அடிக்குது.. என்ன செய்யலாம் எண்டு ஒரு ஐடியா தாங்களேன்..! - உறுப்பினர் ரதிதேவி ஆரம்பித்த திரிதான் அது. :(

"ச்சே.. இவ்வளவு நாளும் கடலைக்கு இந்த விடலை எண்டு தெம்பா இருந்தன். திடீரெண்டு இதுக்குள்ள வந்து சிலம்பாட்டம் ஆடி என்ர அடி மடியிலயே கை வைக்கிறாங்களே..!" நொந்துகொண்டார் உறுப்பினர் கடலை. :lol: உறுப்பினர் ஒருவர் அந்தத் திரிக்குள் இரசாயன மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டிருந்ததுதான் உறுப்பினர் கடலையின் கவலைக்குக் காரணம். அடிவயிறுவேறு கலங்குவது போல இருந்தது உறுப்பினர் கடலைக்கு.

"ஆகா.. எத்தினை பேரையா இப்பிடிக் கிளம்பியிருக்கிறீங்கள்? அவ இவருக்கு நல்ல தோழியாமில்லே..! இவர் பரிதாபப் படுறாராம். ஐயோ.. இந்த ஆளை இவ்வளவு நாளும் நம்பி ஏமாந்துட்டன்யா..! பிரம்மச்சாரி எண்டு நினைச்சு விட்டுவச்சது தப்பாப் போச்சு..!" புலம்பினார் கடலை. mad0003.gif

"ஆ.. இதபார்றா.. பிறசில் அணி தங்கள் ரெண்டுபேருக்கும் பிடிக்குமாம்.. அப்பூ.. விடாதிங்கப்பூ நூலு.. அப்புறம் ஒட்ட அறுந்திடும் வாலு..! ஆ..!" ஆற்றாக்கொடுமையில் அரற்றியவர் கதவு தட்டப்படும் ஓசை கேட்டு திரியை சிறிதாக்கிவிட்டு வாசலுக்குச் சென்றார். :D

கதவைத் திறந்தவருக்கு ஆச்சரியம். லண்டனில் கோடைக்காலத்துக்கு ஏற்றமாதிரி காற்றோட்டமாக வேட்டி, துண்டு, நெற்றியில் பட்டை, உருத்திராட்சக் கொட்டை எண்டு ஒரு சிவப்பழம் நின்று கொண்டிருந்தது. மேல் சட்டையை வேறு காணவில்லை. sad0012.gif

"சிவ சிவ.. சித்தாந்த பண்டித பூஷணம்.. சுலோகபஞ்சகவிஷயம்.. சிவபரத்துவ நிச்சயம்.. தெய்வப் பிரஸ்தாபம்.." வாசலில் நின்ற சிவப்பழம் ஆரம்பித்தது. :D

'ஆகா.. இந்த ஆளை பக்கத்து வீட்டில பார்த்திருக்கிறனே.. இருக்கிற பிரச்சினை பத்தாதெண்டு இதென்னப்பா புதுப் பிரச்சினை?' மனதுக்குள் நொந்த கடலை சமாளித்தார்.

"ஐ ஆம் சாரி. ஐ நோ இங்கிலீஸ் தமில். நத்திங் எல்ஸ்"

சிவப்பழம் காதில் எதையும் வாங்கிக்கொள்ளவில்லை.

"தென்றமிழ் நாடு செய்தவப் பயனென

வந்திடு நெல்லை வளம்பதிக் கணித்தாம்

பேட்டை யென்னும் பெருநக ரதனுள்

தாவில் பரம்பரைச் சைவ வேளாண்

மரபில் வந்தோன் மதிநலம் வாய்ந்தோன்"

முணுமுணுத்தபடியே கடலையை இடித்துத்தள்ளிக்கொண்டு உள்ளே வந்த சிவப்பழம் நேராக கணினி முன் தரையில் உட்கார்ந்து விசைப்பலகையை எடுத்து தன்முன்னால் வைத்துக்கொண்டது..! scared0006.gif

கடலைக்கு வயிற்றுக்கலக்கத்துடன் இப்போது தலைச்சுற்றலும் வந்துவிட்டதுபோல் தோன்றியது.

கணினியில் புதிய விண்டோவைத்திறந்த உருவம் யாழ்களத்துக்குச் சென்று தனது பாவனைபெயரைப் பதிந்தது.

"ஆறுமுக நாவல்பழம்" happy0002.gif

"அடப்பாவி.. அந்த ஆளா நீர்?" அதிர்ச்சியடைந்த கடலை கெஞ்ச ஆரம்பித்தார்.

"சாமி.. சாமி.. ரொம்ப நாளா பிராக்கட் போட்டது.. இடையில ஒருத்தன் லவட்டிக்கொண்டு போயிடுவான் போல இருக்கு..! இதுக்குள்ள நீங்கள் வேற ஏன் சாமி உயிரை வாங்கிறீங்கள்?" :lol:

காதில் போட்டுக்கொள்ளாமல் தட்டச்சு செய்தது சிவப்பழம்.

ஈசுர மூர்த்தி யெனும்பெய ருடையோன்

செய்சிவ பரத்துவ நிச்சயச் செழுநூல்

எவரும் பொருளை யெளிதிற் கண்டு

"ஆகா.. இந்தாளுக்குத்தான் காதில எதுவுமே விழாதே..! இப்ப என்ன செய்வேன்?!" கடலைக்கு தலைச்சுற்றல் அதிகமாகியது. sick0023.gif

சாவகாசமாக தட்டச்சை முடித்த சிவப்பழம் தனது தனிமடலைத் திறந்தது. எல்லாமே உறுப்பினர் மாரசாமி :( தூய தமிழில் அர்ச்சனை செய்து எழுதிய தனிமடல்களாக இருந்தன. அதையெல்லாம் கண்டும் காணாமல் விட்டுவிட்டு உறுப்பினர் ரதிதேவிக்கு தனிமடல் ஒன்றை சுருக்கமாக வரைந்தார் சிவப்பழம்.

"ஐ லவ் யூ"

"ஆ..ஆ.. சாமீ.. நீங்களுமா?" கடலைக்கு கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது.

"தம்பி.. எங்களுக்கும் காமத்துப்பால் தெரியுமில்லே.. சிவசிவ.." வேட்டியை மடித்துக்கொண்டு வாசலை நோக்கி அட்டகாசமாக நடந்துபோனார் சிவப்பழம். :lol:

தரையில் மல்லாந்து கிடந்தார் உறுப்பினர் கடலை. happy0007.gif

(தொடரும்.)

சிரிச்சு சிரிச்சு... வாய்.. வயிறு எல்லாம் நோகுது. வீட்டில இருக்கிறவங்க பைத்தியம் முத்திட்டு கணணியை பார்த்து சிரிக்கிறானே என்று முழியை பிதுக்கிறாங்கப்பா..! :lol:

பாவம் விடலை.. கடலை போட்ட குற்றத்திற்காக இப்படியா..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கோடைக்காலத்துக்கு ஏற்றமாதிரி காற்றோட்டமாக வேட்டி, துண்டு, நெற்றியில் பட்டை, உருத்திராட்சக் கொட்டை எண்டு ஒரு சிவப்பழம் நின்று கொண்டிருந்தது. மேல் சட்டையை வேறு காணவில்லை.

யாழ் கள உறுப்பினர் தான் யாரோ உருவிக் கொண்டு போயிருக்கினம். :(:(

அது கூடத் தெரியாமல் இந்தாள் தனி மடல் எழுத ஓடி வந்திருக்குது. :D:lol:

கலக்கிட்டீங்க காலத்துக்கு ஏற்றமாதிரி :D

வாத்தியார்

...........................

  • கருத்துக்கள உறவுகள்

:D:(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காட்சி 11:

கடலைக்கு வயிற்றுக்கலக்கத்துடன் இப்போது தலைச்சுற்றலும் வந்துவிட்டதுபோல் தோன்றியது.

கணினியில் புதிய விண்டோவைத்திறந்த உருவம் யாழ்களத்துக்குச் சென்று தனது பாவனைபெயரைப் பதிந்தது.

"ஆறுமுக நாவல்பழம்" happy0002.gif

"அடப்பாவி.. அந்த ஆளா நீர்?" அதிர்ச்சியடைந்த கடலை கெஞ்ச ஆரம்பித்தார்.

"சாமி.. சாமி.. ரொம்ப நாளா பிராக்கட் போட்டது.. இடையில ஒருத்தன் லவட்டிக்கொண்டு போயிடுவான் போல இருக்கு..! இதுக்குள்ள நீங்கள் வேற ஏன் சாமி உயிரை வாங்கிறீங்கள்?" :lol:

காதில் போட்டுக்கொள்ளாமல் தட்டச்சு செய்தது சிவப்பழம்.

ஈசுர மூர்த்தி யெனும்பெய ருடையோன்

செய்சிவ பரத்துவ நிச்சயச் செழுநூல்

எவரும் பொருளை யெளிதிற் கண்டு

"ஆகா.. இந்தாளுக்குத்தான் காதில எதுவுமே விழாதே..! இப்ப என்ன செய்வேன்?!" கடலைக்கு தலைச்சுற்றல் அதிகமாகியது. sick0023.gif

சாவகாசமாக தட்டச்சை முடித்த சிவப்பழம் தனது தனிமடலைத் திறந்தது. எல்லாமே உறுப்பினர் மாரசாமி :D தூய தமிழில் அர்ச்சனை செய்து எழுதிய தனிமடல்களாக இருந்தன. அதையெல்லாம் கண்டும் காணாமல் விட்டுவிட்டு உறுப்பினர் ரதிதேவிக்கு தனிமடல் ஒன்றை சுருக்கமாக வரைந்தார் சிவப்பழம்.

"ஐ லவ் யூ"

"ஆ..ஆ.. சாமீ.. நீங்களுமா?" கடலைக்கு கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. :lol:

"தம்பி.. எங்களுக்கும் காமத்துப்பால் தெரியுமில்லே.. சிவசிவ.." வேட்டியை மடித்துக்கொண்டு வாசலை நோக்கி அட்டகாசமாக நடந்துபோனார் சிவப்பழம். :(

தரையில் மல்லாந்து கிடந்தார் உறுப்பினர் கடலை. happy0007.gif

(தொடரும்.) :lol:

மாரசாமிக்கு ஏன் உந்த வேலை? அந்த ஆள் தனக்கு தெரிஞ்சதை எழுதுறார், பிடிக்காவிட்டால் பேசாமல் போவதுதானே, அது என்ன கெட்ட வார்த்தையில் தனிமடல் :(:D:lol:

சூப்பர் தொடரவும். :lol::D

சாவகாசமாக தட்டச்சை முடித்த சிவப்பழம் தனது தனிமடலைத் திறந்தது. எல்லாமே உறுப்பினர் மாரசாமி :D தூய தமிழில் அர்ச்சனை செய்து எழுதிய தனிமடல்களாக இருந்தன. அதையெல்லாம் கண்டும் காணாமல் விட்டுவிட்டு உறுப்பினர் ரதிதேவிக்கு தனிமடல் ஒன்றை சுருக்கமாக வரைந்தார் சிவப்பழம்.

"ஐ லவ் யூ"

இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்க இல்லை... :(:(:D

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இ.கலைஞன் எதுக்காக என்னையே திருப்பி திருப்பி இழுக்கிறீங்கள்...உங்கள் மீது மான நஸ்ட வழக்குப் போடப் போகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அடப் பாவி மனிசா..... நான் இன்றுதான் இதனைப் பார்த்தன்...இந்த தொடர் லண்டன் வாலாக்களை மட்டும் பதம் பார்க்கும் என்று நினைத்தன்..இப்ப அது நாடு, எல்லை எல்லாம் தாண்டி என் வீட்டு கோடிவரைக்கும் வந்துட்டுது...

'விழலி ' என்ற பெயர் அம்சமகாகவும் ஒரு விதத்தில் அர்த்தமுள்ளதாகவும் இருக்கு....

அத்தோட வல்வை வயாக்ரா என்ற பெயர் அவாவுக்கு நல்லா பொருந்தும் (அவவுக்கு இதுவரைக்கும் 5 பிள்ளைகள் என்பதே நல்ல சான்று :D )

இப்படி நகைச்சுவையாக எழுதுவதற்குத்தான் அதிக திறமை வேண்டும்.. கன நாளின் பின் வாசிக்கின்றன்... நல்லா இருக்கு

பேரீச்சைப் பொறுக்கி இவ்வளவு அழல் கூடாது முடிந்தால் என்னுடைய சாதனையை முறியடித்துக் காட்டவும். :D:( :(

  • கருத்துக்கள உறவுகள்

இசை என்னப்பா இப்படி எல்லாரையும் வாங்கு வாங்குவதாக எங்காவது பிரார்த்தனையா? சிரிப்புத் தாங்கமுடியவில்லை. இன்னும் யார் யார் இந்த இசையின் சுருதிக்குள் அகப்படப்போகிறார்களோ? அவர்களை ஆண்டவர்தான் காப்பாற்ற வேண்டும். :D:( :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இ.கலைஞன் எதுக்காக என்னையே திருப்பி திருப்பி இழுக்கிறீங்கள்...உங்கள் மீது மான நஸ்ட வழக்குப் போடப் போகிறேன்.

ரதி.. நான் உங்களைச் சொல்லுவனா? இது முழுக்க முழுக்க கற்பனைக் கதையல்லோ..! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் மேலான கருத்துக்களைப் பதிந்து உற்சாகமூட்டிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த காட்சியை எழுதுங்கப்பா!!!!!!!!!!கணணியைப் பார்த்துச் சிரிச்சுக் கொண்டிருக்க எல்;லோரும் என்னை ஒரு மாதிரிப் பாக்குறாங்கள்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

இசை அண்ணா உங்க கற்பனை ....பிரமாதம். பாராடுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

காட்டாறு கரை புரண்டு ஓடும்போது பச்சைமரம், பட்டமரம் பார்த்தா புரட்டிக் கொண்டு போகுது!

நடக்கட்டும், நடக்கட்டும்!!! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

காட்டாறு கரை புரண்டு ஓடும்போது பச்சைமரம், பட்டமரம் பார்த்தா புரட்டிக் கொண்டு போகுது!

நடக்கட்டும், நடக்கட்டும்!!! :lol:

உண்மை தான்.... இதிலை பாராட்டு எழுதிறது கிட்டத்தட்ட்ட பொல்லு குடுத்து அடி வாங்கிற மாதிரி எண்டு நினைச்சு தான் வாசிச்சு சிரிச்சிட்டு போறது. நானும் இருக்கிறேன் எண்டு டங்கு க்கு நினைவு படுத்த விருப்பம் இல்லை :rolleyes:

அதுக்காக பாராட்டாமலும் இருக்க முடிய இல்லை. காட்டாறு தொடர்ந்து ஓடட்டும் :o

Edited by Sabesh

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடவுளே கடவுளே...... :rolleyes:

எனக்கு அப்ப வந்த நெஞ்சுவலிதான்..! இன்னும் போகேல்ல..!! :o

சிரிப்பு தாங்க முடியவில்லை. பாவம் கடலை. தயவு யாராவது செய்து இந்த திரியின் இணைப்பை ஆறுமுக நாவல்பழம் அண்ணைக்கு அனுப்பி விடவும். :rolleyes:

Edited by thappili

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.