Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகாத்மா காந்தியும் ஒரு நித்தியானந்தா தான்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

newgandhi_347910t.jpg

காந்தியின் உறவுக்காறப் பெண்களுடனான சல்லாபம்.

(No sex please: Gandhi, above, 'tested' himself by sleeping with naked grand-nieces Manu, left, and Abha, right - .independent.co.uk)

இந்தியாவின் தேச பிதா... அகிம்சையின் முதல்வன்.. மகாத்மா என்றெல்லாம் போற்றப்படும் இந்திய தேசத்தின் குஜராத்தைச் சேர்ந்த காந்தி.. பல மிக இளம் பெண்களோடு (குறிப்பாக உறவுக்காறப் பெண்களோடு) நிர்வாணமாக இருந்து பாலியல் பரிசோதனை என்று வாழ்க்கையை ஓட்டி இருப்பது தற்போதுதான் வெளிப்பட்டிருக்கிறது.

மேலதிக செய்தி மற்றும் செய்தி ஆதார இணைப்பு இங்கு: http://kundumani.blogspot.com/

Edited by nedukkalapoovan

  • Replies 71
  • Views 8.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகாத்மா காந்தியும் ஒரு நித்தியானந்தா தான்

இந்தியாவின் தேச பிதா... அகிம்சையின் முதல்வன்.. மகாத்மா என்றெல்லாம் போற்றப்படும் இந்திய தேசத்தின் குஜராத்தைச் சேர்ந்த காந்தி.. பல மிக இளம் பெண்களோடு (குறிப்பாக உறவுக்காறப் பெண்களோடு) நிர்வாணமாக இருந்து பாலியல் பரிசோதனை என்று வாழ்க்கையை ஓட்டி இருப்பது தற்போதுதான் வெளிப்பட்டிருக்கிறது.

ஆட்டைகடிச்சு மாட்டைக்கடிச்சு கடைசியிலை அடிமடியிலையே கையை வைச்சிட்டாங்கள். :unsure:

newgandhi_347910t.jpg

காந்தியின் உறவுக்காறப் பெண்களுடனான சல்லாபம்.

(No sex please: Gandhi, above, 'tested' himself by sleeping with naked grand-nieces Manu, left, and Abha, right - .independent.co.uk)

இந்தப்படத்திலை தவறானதாய் ஏதும் இல்லையே. மகாத்மா காந்தி அகிம்சை மூலம் இந்தியாவில சுதந்திர போராட்டத்தில ஈடுபட்டதால் மதிப்பு கொடுக்கப்பட்டார் ஒழிய பாலியல் ஆராய்ச்சிக்காக அவருக்கு ஒரு பட்டமும் கொடுக்கப்பட இல்லையே. ஊடகங்கள் என்றால் எப்பவும் உறிஞ்சாங்குண்டியை பிரபலப்படுத்துவதையே தர்மமாக கொண்டு இருக்க வேணுமோ..?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்படத்திலை தவறானதாய் ஏதும் இல்லையே. மகாத்மா காந்தி அகிம்சை மூலம் இந்தியாவில சுதந்திர போராட்டத்தில ஈடுபட்டதால் மதிப்பு கொடுக்கப்பட்டார் ஒழிய பாலியல் ஆராய்ச்சிக்காக அவருக்கு ஒரு பட்டமும் கொடுக்கப்பட இல்லையே. ஊடகங்கள் என்றால் எப்பவும் உறிஞ்சாங்குண்டியை பிரபலப்படுத்துவதையே தர்மமாக கொண்டு இருக்க வேணுமோ..?

நீங்கள் இப்படிக் கேட்கும் போது ஊடகங்கள் மற்றும் என்னைப் போன்றோர் கேட்பார்கள்.. சாதாரணமா உரிஞ்சாங்குண்டியா இருந்தவரை ஏய்யா மகாத்மா என்று தேவையில்லாத அடைமொழி கொடுத்து வைச்சிருக்கீங்க. அவர் ஒரு சாதாரண ஆன்மா என்பதை சொல்லுங்கள் என்று கேட்கவும் உரிமை இருக்கிறது மச்சான்.

சாதாரண மனிதனாகக் கூட இல்லாமல் இயற்கைக்கு மாறாக காந்தி நடந்து கொண்டிருக்கிறார். இது தண்டனைக்குரிய குற்றமும் கூட. இயற்கைக்கு மாறான பாலியல் செயற்பாடுகள் தண்டனைக்குரிய குற்றம்.

நித்தியானந்தாவும் இதைத்தான் செய்தார். அவரை சிறையில் வைத்திருக்கும் இந்திய சமூகம்.. காந்தியை மட்டும் மகாத்மா என்ற அடைமொழி கொடுத்து வைத்திருப்பது சரியா..??! :unsure:

உங்களுக்கு விருப்பம் என்றால் காந்தி என்று கூப்பிடலாம். இல்லாட்டி வேற எப்பிடியாவது கூப்பிடலாம். யார் யார் எப்படி எப்படி ஆக்களுக்கு மரியாதை கொடுக்க வேணும் என்பது அவரவர் விருப்பம், ஈடுபாடு. இப்பவும் நித்தியானந்தா அவர்கள் மீது மதிப்பு வைத்து இருக்கும் பலர் இருக்கிறார்கள். ஆக்களை நிர்வாணப்படுத்தி பார்க்கும் கோணங்கிப்புத்தி தற்கால ஊடகங்களின் போக்கிற்கு நல்லதொரு சாட்சியாக இருக்கிது. ஒருத்தன் குற்றம் செய்யமாட்டானா.. உரிஞ்சாகுண்டியோட நிக்கமாட்டானா என்று ஏங்கி அலையும் நிலையிலேயே இன்று ஊடகங்கள் காணப்படுகிது. ஏதோ மகாத்மா காந்திக்கு பக்கத்தில நின்று பார்த்தமாதிரி கதை சொல்லுறீங்கள்.. மகாத்மா காந்தி ஒவ்வொரு நாளும் எத்தனை தடவை கக்கூசுக்கு போவார், எத்தனை மணிக்கு கக்கூசுக்கு போவார், அவருக்கு கக்கூசு என்ன நிறத்தில போகும் என்பவற்றையும் முடியுமானால் ஆராய்ஞ்சு சொல்லுங்கோ. :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு விருப்பம் என்றால் காந்தி என்று கூப்பிடலாம். இல்லாட்டி வேற எப்பிடியாவது கூப்பிடலாம். யார் யார் எப்படி எப்படி ஆக்களுக்கு மரியாதை கொடுக்க வேணும் என்பது அவரவர் விருப்பம், ஈடுபாடு. இப்பவும் நித்தியானந்தா அவர்கள் மீது மதிப்பு வைத்து இருக்கும் பலர் இருக்கிறார்கள். ஆக்களை நிர்வாணப்படுத்தி பார்க்கும் கோணங்கிப்புத்தி தற்கால ஊடகங்களின் போக்கிற்கு நல்லதொரு சாட்சியாக இருக்கிது. ஒருத்தன் குற்றம் செய்யமாட்டானா.. உரிஞ்சாகுண்டியோட நிக்கமாட்டானா என்று ஏங்கி அலையும் நிலையிலேயே இன்று ஊடகங்கள் காணப்படுகிது. ஏதோ மகாத்மா காந்திக்கு பக்கத்தில நின்று பார்த்தமாதிரி கதை சொல்லுறீங்கள்.. மகாத்மா காந்தி ஒவ்வொரு நாளும் எத்தனை தடவை கக்கூசுக்கு போவார், எத்தனை மணிக்கு கக்கூசுக்கு போவார், அவருக்கு கக்கூசு என்ன நிறத்தில போகும் என்பவற்றையும் முடியுமானால் ஆராய்ஞ்சு சொல்லுங்கோ. :unsure:

ஊடகங்களை நீங்கள் தவறான விளங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் உரிஞ்சாங்குண்டிகளை வெளிப்படுத்துவதை அல்ல நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஒருவரை அநாவசியமாக மகாத்மா ஆக்கும் சமூகம் அவரின் இன்னொரு பக்கத்தை காட்டாது மறைக்கும் (காந்தி சாதாரண மனிதன் என்பதையும் கடந்து இயற்கைக்கு மாறாக பாலியல் பித்துப் பிடித்து வாழ்ந்திருக்கிறார்..!) சமூகத்திற்குத்தான் இதைக் காட்டுகிறார்களே அன்றி உரிஞ்சாங்குண்டிகளை வைத்து எல்லா ஊடகங்களும் வியாபாரம் செய்வதில்லை. அதற்கென்றும் தனி ஊடகங்கள் இருக்கின்றன. நிர்வாணம் விரும்பிகளை திருப்திப்படுத்த என்று இயங்கும் ஊடகங்களும் பத்திரிகைகளும் இருக்கின்றன.

ஒரு சாதாரண மனிதன் இயற்கை விதிக்குள் செய்வதை எல்லாம் செய்திகளாக்குவதில்லை மச்சான். காந்தி இயற்கை விதிகளை கடந்து பாலியல் வெறித்தனமாக நடந்து கொண்டிருக்கிறார். அதுதான் நித்தியானந்தாவின் நிலையும். அவை கண்டிக்கத்தக்கவை மட்டுமன்றி சட்டபூர்வமான குற்றங்களாகும். அவற்றை ஊடகங்கள் வெளிப்படுத்துவது தவறல்ல..! நித்தியானந்தா ரஞ்சிதாவோடு அவரின் விருப்போடு எப்படியும் வாழ்ந்திருப்பின் அது பற்றி எவரும் பேச முடியாது. ஆனால் சாமியார் என்ற வேடத்தோடு பாலியல் ஆராய்ச்சி என்று ரஞ்சிதா மட்டுமன்றி பல பெண்களோடு உறவாடி வாழ்ந்ததுதான் செய்தியாக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள வேறுபாடுகளை மக்கள் விளங்கிக் கொண்டு விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதே ஊடகங்களின் நோக்கம்.

மிக மிக கேவலமான ஒரு இனமாக நாங்கள் மாறிக்கொண்டிருகின்றோம்.இப்போது நான் இங்கு இருக்கும் ஒரு வானொலி (சீ.டீ.ஆர்)கேட்டுக்கொண்டிருக்கின்றேன்.மூன்றாந்தர தமிழ்நாட்டு ஆய்வாளரைக் கொண்டுவந்து மக்கள் மனதில் விசம் விதைக்கின்றார்கள்.இப்படியே போனால் நாங்கள் எதுவும் சாதிக்க மாட்டோம்.மேலும் மேலும் எதிரிகளைத்தான் சம்பாதிப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் அனைவருக்கும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஒரு மகாத்மா என்று மிகைப்படுத்தியே அறிமுகப்படுத்தப்படுகின்றார். ஆனால் மகாத்மா என்று அழைப்பதற்கு அவர் எள்ளளவும் தகுதியற்றவர். தமது தந்தையார் இறந்து கிடத்தப்பட்டு இருக்கையில் அடுத்த அறையில் தான் மனைவியுடன் கலவியில் இருந்ததாக 'சத்திய சோதனை' என்ற நூலில் காந்தியே வாக்குமூலம் கொடுத்திருக்கின்றார். அதுமட்டுமன்றி இவர் தன்னுடைய மனைவியான கஸ்தூரிபாவை அடிக்கும் பழக்கமுடையவர் என்ற செய்தி மூடிமறைக்கப்பட்டு வருகின்றது. ஒருமுறை இங்கிலாந்து நாட்டின் பிரதமர் சேர். வின்ஸ்ட்டன் சேர்ச்சில் அவர்கள் இவரை Half-naked Fakir (அரைநிர்வாணப் பக்கிரி) என கேலியாக குறிப்பிட்டுள்ளார். ஏதோ இந்தியாவுக்கு இவர்தான் சுதந்திரம் வாங்கித்தந்தவர் என்ற ஒரு மாயையை இந்திய ஆளும் பார்ப்பனிய வர்க்கம் உருவாக்கி வைத்திருக்கின்றது. இந்த கருத்தையே நாமும் எமது அடுத்த சந்ததிக்கு சொல்லிக் கொடுக்கப் போகின்றோமா? அல்லது மகாத்மா என்ற போர்வைக்குள் வாழும் துராத்துமாவின் உண்மை நிலையினை சொல்லிக் கொடுக்கப் போகின்றோமா?

Edited by காவாலி

நாங்கள் மற்றவர்களை கிண்டல் செய்வது இலகு. ஆனால், அதேநிலையில் எங்களை வைத்து சுயபரிசோதனை செய்தால் எங்களுக்குள் எத்தனை ஓட்டைகள் இருக்கிது என்று தெரியும். அயல் நாட்டு காந்தியை தூக்கி எறிந்து கதைப்பது இலகு என்றால் நம்மநாட்டு ஆளையும் இதேநிலமையில் வைத்து ஒப்பீடு செய்து பார்கிறது தவறு இல்லை. நாங்கள் மகாத்மா காந்தியை விமர்சனம் செய்த அதேபாணியில் நம்மட ஆளை அயல்நாட்டுக்காரன் சுயபரிசோதனை செய்தால் இப்படியும் சொல்லலாம்.

“தேசியத் தலைவர் என்று கூறப்படுவதற்கு பிரபாகரனுக்கு அருகதை இருக்கிறதா? ஓர் சாதாரண மனிதனை ஏன் தேசியத்தலைவர் என்று சொல்லி மாயை ஏற்படுத்தப்பட்டது? ***

என்ன வாசிச்சீங்களோ? நிலமை இதுதானுங்கோ. இப்ப பலருக்கு பீபீ இருநூறுக்கு ஏறி இருக்கும். படக்கு படக்கு எண்டு இதயத்துடிப்பு நூற்று நாப்பதில அடிக்கும். தேசியத்தலைவர் பற்றி விமர்சனம் செய்கிறதுக்கு எந்தக்கொம்பனுக்கும் உரிமை இல்லை என்று பதில் எழுதுறதுக்கு கைகள் துடிக்கும். இப்பிடித்தான் அயலநாட்டுகாரனும் சொல்வான்.

நடுவுநிலமை இல்லாமல் யாரும் எதையும் தூக்கி எறிஞ்சு பேசலாம். ஆனால், சுயபரிசோதனை என்று ஆரம்பிச்சால் நாங்கள் எவ்வளவு கேவலம் கெட்டவர்கள் என்பதை உணர்ந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். எப்பவும் ஒருத்தனிண்ட நல்ல பகுதிகளை பார்த்துக்கொண்டு, நல்ல விசயங்களை எடுத்துக்கொண்டு வாழ்க்கையை ஓர் சாதகமாக வகையில உற்று நோக்கி செயற்படுவதே சிறப்பானது. அவன் அவளுடன் படுக்கையில கிடந்தான். இவன் இப்பிடி தன்னை காட்டிக்கொண்டு அப்பிடி அந்தமாதிரி அத்தனை பெண்டுகளுக்கு கேம் குடுத்தான் என்று பரபரப்பை கிளப்புவதன் மூலம் உருப்படியாக ஏதும் நடைபெறப்போவது இல்லை.

Edited by இளைஞன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

இது பாகிஸ்தான் புலனாய்வுத்துறையினரின் சதி :unsure::o

காந்தித் தாத்தா மக்களுக்குச் சுதந்திரத்தையே வாங்கித் தந்தவர்.

அவர் சுதந்திரமாக இருந்தால் தப்பா? :unsure:

வாத்தியார்

................

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் உங்களுடைய கருத்துக்களை முற்றாக நிராகரிக்கின்றேன். காந்தியை மகாத்மா என்று எங்களுக்கு பாடபுத்தகங்கள் வாயிலாகவும் இதர ஊடகங்கள் வாயிலாகவும் திணிக்கப்பட்டு இருக்கின்றது. மற்றும்படி காந்தியிற்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நாங்கள் போய் அயல்நாட்டுக்காரரை திரு. பிரபாகரன் அவர்களை தேசியத்தலைவர் என்று சொல்லச் சொல்லவில்லை. அவர்களுடைய பாடப்புத்தகங்களில் தேசியத்தலைவர் என்று சொல்லச் சொல்லவில்லை. அவர் எப்போதும் எங்களுக்குத் தேசியத்தலைவர்தான். அவரைப்பற்றி அயல்நாட்டுக்காரர் என்ன சொன்னாலும் அதுபற்றி எங்களுக்குக் கவலையில்லை. திரு. பிரபாகரன் பற்றிய உங்கள் கருத்து எதுவாகவும் இருக்கலாம், அதுவும் பிரச்சினை இல்லை ஆனால் காந்தி ஒரு மகாத்மா இல்லை என்பது வெளிப்படையானது. இதில் நடுவு நிலைமை என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

காந்தித்தாத்தாவை விமர்சிப்பதற்கு ஏற்ற நேரமா இது என்று தெரியவில்லை.

ஆனால் காந்தித்தாத்தா

தன்னால் முடிந்ததுக்கும் மேலாக தனது மக்களுக்காக பாடுபட்டார் என்கின்றரீதியில் எனக்கு அவர்மீது மதிப்பு உண்டு. அதேநேரம் அவர்களது குறைகளையும் அறிந்திருக்கின்றேனே தவிர பார்த்ததில்லை. எனவே அது கேள்விப்பட்டது மட்டுமே. எனவே எனது மதிப்பு இருந்துகொண்டேயிருக்கும்.

ஆனால் மச்சானின் செருகலை கண்டிக்கின்றேன்.

பிரபாகரன் என்னோடு வாழ்ந்தவர். அவரை எனக்கு தெரியும். எனவே தங்களது வார்த்தைகளை எடுத்துவிடுங்கள். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் மகாத்மா காந்தியை முழு இந்தியர்களூமே கடவுளாக கும்பிடுகிறார்கள்...நல் வழி போதித்தவர்களீல் அல்லா,புத்தர்,யேசு,காந்தி என சொல்வார்கள் அப்படிப்பட்டவர் 100% அப்பழுக்கில்லாது இருந்திருக்க வேண்டும்...ஆனால் தமிழர்களீலேயே தலைவரை வெறூத்த்வர்கள் உள்ளார்கள்...அவர்கள் சொந்தக் காரணங்களூக்காகவே தலைவரை வெறூத்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத்தான் நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக் கூடாது! :unsure:

மோகன் அவர்கள் நேற்று இணைச்ச ஓர் பேட்டியில ஊடகவியலாளர் வித்தியாதரன் நல்லதொரு பதிலை வழங்கி இருக்கிறார். குறிப்பிட்ட கேள்வியையும், பதிலையும் இதில இணைக்கிறன் வாசிச்சு பாருங்கோ. இது இந்த தலைப்புக்கும் நன்றாக பொருந்தும்.

http://karumpu.com/wp-content/uploads/2010/Vithyatharan.mp3

கேட்கமுடியாவிட்டால் இந்த தொடுப்பை அழுத்துங்கோ:

  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன் மச்சான் அவர்கட்கு மகாத்மா? காந்தியைப் பற்றித்தான் இங்க விவாதமே தவிர தேசியத்தலைவரைப்பற்றியதுpல்லை தேவையில்லாது தாங்கள் சில விடையங்களைக் குறிப்பிட்டுள்ளீர்கள். உங்கள் விவாதத்தைத் தொடருங்கள் ஆனால் தேசியத்தலைரைப்பற்றிய கருத்தினை திரும்பப்பெற்றுவிட்டு. யாழ இணையத்தள மட்டுறுப்பினர் எனது கருத்தினைச் செவிமடிப்பாராக. அன்பான உறவுகளே நீங்கள் யாரைப்பற்றியும் கருத்தெழுதுங்கள் விருப்பமெனில், ஆனால் தனது இனத்திற்காக கண்துஞசாது போராடி வீரமரணமடைந்த எனது தலைவனைப் பற்றிமட்டும் கருத்தெழுத இங்கு யாருக்கும் யோக்கியதையில்லை. மச்சான் அவர்கள் தனது கருத்தைத் திரும்பப் பெறல் வேண்டும். யாழ் இணையம் இக்கருத்துக்க கண்டனம் தெரிவித்தல் வேண்டும் இல்லையேல் இப்படியான கீழத்தரமான கருத்துக்களை எழுதும் நபர்களை ஊக்குவிக்கும் தளமாக யாழ் இணையம் கருதப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் உறவுகளே

இந்தத் திரி தவறான பாதையில் செல்லாமல் இருந்தால் நல்லது.

மல்லாந்து படுத்திருந்து எச்சில் உமிழ்ந்தால்...

வாத்தியார்

..............

உங்களுக்கு தேசியத்தலைவர் என்று சொல்லி எதையாவது எழுதும்போது எப்படி ஆத்திரம் பீற்றிக்கொண்டு வருமோ இதுபோலவே காந்தியத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு இவ்வாறான அவதூறுகள், மகாத்மா காந்தியை மலினப்படுத்தும் கருத்துக்கள் எரிச்சலையூட்டும். இந்தக்கருத்தாடலின் நோக்கம் நிச்சயம் இந்தியாவை, இந்தியர்களை கிண்டல் செய்வதாகவே எனக்கு படுகின்றது. நாங்கள் சில இலட்சங்கள், அவர்கள் பலப்பல கோடிகள். அவர்கள் எங்களை கிண்டல் செய்யத்தொடங்கினால் நிலமை எப்படி இருக்கும் என்று சற்று சிந்தித்து பாருங்கள். எங்களுக்கையே நாங்கள் ஆக்களை கிண்டல் செய்து மகிழ்ந்து ஒன்றும் நடக்கப்போவது இல்லை. மேலே பேட்டியில் வித்தியாதரன் அவர்கள் இதை நன்றாக சொல்லி இருக்கிறார். காகத்திற்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு..!

யாரோ வீட்டு விடுப்பு கதைப்பதில் தான் எங்களுக்கு திறில்.எங்கட வீட்டு கோடியில் நடப்பது தெரியாமல்.உண்மைகளை எழுதினால் இங்கு ஒருவருக்கும் தாங்க கூடிய சக்தியும் இல்லை ஏற்பார்களுமோ தெரியவில்லை.

கலைஞன் மகாத்மா காந்தியை முழு இந்தியர்களூமே கடவுளாக கும்பிடுகிறார்கள்...நல் வழி போதித்தவர்களீல் அல்லா,புத்தர்,யேசு,காந்தி என சொல்வார்கள் அப்படிப்பட்டவர் 100% அப்பழுக்கில்லாது இருந்திருக்க வேண்டும்... ஆனால் தமிழர்களீலேயே தலைவரை வெறுத்தவர்கள் உள்ளார்கள்...அவர்கள் சொந்தக் காரணங்களூக்காகவே தலைவரை வெறுத்திருப்பார்கள்.

இதே கருத்துக்களத்தில யேசு கிறிஸ்துவை ஓரினச்சேர்க்கையாளர் (Gay) என்று எழுதினார்கள். ஓரினச்சேர்க்கை எண்டுறது இயற்கைக்கு முரணான உறவோ? இதுக்கு தண்டனை இருக்கிதோ? அப்பிடியென்றால் யேசு கிறிஸ்து சிலுவை சுமந்தார், பாவங்களை கழுவினார் என்று சொல்லிறது எல்லாம் சுத்த பம்மாத்தோ? யேசுகிறிஸ்துவை கடவுளின் தூதுவராக கும்பிடலாமோ? எது உண்மை? எது பொய்? எது தேவையானது? எது தேவை இல்லாதது?

  • கருத்துக்கள உறவுகள்

இதே கருத்துக்களத்தில யேசு கிறிஸ்துவை ஓரினச்சேர்க்கையாளர் (Gay) என்று எழுதினார்கள். ஓரினச்சேர்க்கை எண்டுறது இயற்கைக்கு முரணான உறவோ? இதுக்கு தண்டனை இருக்கிதோ? அப்பிடியென்றால் யேசு கிறிஸ்து சிலுவை சுமந்தார், பாவங்களை கழுவினார் என்று சொல்லிறது எல்லாம் சுத்த பம்மாத்தோ? யேசுகிறிஸ்துவை கடவுளின் தூதுவராக கும்பிடலாமோ? எது உண்மை? எது பொய்? எது தேவையானது? எது தேவை இல்லாதது?

ஜேசு ஒரு போராளி..........

அன்பால் எதையும் சாதிக்கலாம் வன்முறை மென்மேலும் வன்முறையையே கட்டவிழ்த்துவிடும் என்று முழுமையாக நம்பியவர். ஆக வன்முறைகளிடம் தன்னை முழுமையாக அர்பணித்தார். எனது மரணமும் எனது கொள்கைக்கு சாட்டசியாகட்டும் என்று எண்ணினார் அதற்காவே சித்திரவதைகளின் உச்சத்திற்கும் பணிவோடு தனது உடலை கொடுத்தார்.... சிலுவையை சுமந்தார். மற்றையபடி அவருடைய தனிபட்ட வாழ்கை பற்றியவையில் எவ்வளவு உண்மைகள் இருக்கினற்து என்பது சந்தேகமானதே. சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு நடந்தைவைகளை எவ்வளவு துல்லியமாக மாசுபடாமல் அடுத்தடுத்த சந்ததிகளிடம் ஒப்படைக்கலாம் என்பது கேள்விகுறியானது.

தவிர ஜேசு கடவுளின் தூதுவரா என்றால்? அவரை தூதுவராக அனுப்புவதற்கு முதலில் ஒரு கடவுள் இருந்தாக வேண்டும். கடவுளே மனிதனை படைத்தான் என்றார்கள். குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்பது நிருபணமாக நிருபிக்கபட்டாலும் அதை கடவுளின் பீதியால் ஏற்றுகொள்ள மறுக்கின்றார்கள். ஒரு வேளை கடவுள் ஒரு உயிரினத்தை படைத்தார் பின்பு அந்த உயிரினத்தில் இருந்து எல்லாம் விருட்சமடையட்டும் என்று எண்ணினார் என்ற கருத்தோடாவது கடவுளைபற்றி ஆய்வு செய்யவதற்கு என்றாலும் முயற்சி செய்யலாம்.

ஆனால் சைவசமயம் கல்லாய்.... மண்ணாய்.... பேயாய்... மரங்களாய்..... கனங்களாய்..... மனிதனாய். என்று சொன்னாலும் தங்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினரை கடவுள் உயர்ஜாதியாக படைத்தாராம் பின்பு இவர்களுக்கு அடிமைகளாகவும் கீழ்ஜாதிகரராகவும் சிலரைபடைத்தாராம் என்கின்றார்கள்.

நான் இன்னமும் விடை தேடிகொண்டிருக்கும் கேள்வி.... " எல்லாவற்றையும் கடவுள் படைக்கு முன்பு.... கடவுள் எவ்வாறு தோன்றினார்?" ஆக கடவுள் தோன்றுவதற்கு ஒரு உயிர்ப்பி இருந்திருக்கிறது என்று ஏற்றுகொள்ளும் பலரால் ஆதேபோல் இன்னமும் ஒன்று தோன்றுவதற்கான சாத்தியத்தை ஏற்றுகொள்ள முடியவில்லை.

ஆக பனை மரம் இல்லாத இடங்களில் தென்னை மட்டுமே உள்ளது உலகில் என்கிறார்கள். தென்னையில்லாத இடங்களில் பனைமட்டமே உள்ளமு என்கிறார்கள். இரண்டும் உள்ள இடத்திற்கு வாருங்கள் என்றால்....??? வரவும்மாட்டார்கள்.

ஆக ஜேசு கடவுளாகவும் புனிதராகவும் மனிதனால்தான் தோற்றுவிக்கபட்டார் என்பதே எனது நிலைபாடு. ஆனால் ஜேசு ஒரு போராளி என்பதில் எனக்கு அவரிடம் மிகுந்த அன்பும் பணிவும் எப்போதும் உண்டு. ஜேசுவை வணங்குவதில் எனக்கு சம்மதமே ஆனால் அவர் கடவுள் என்பதில் எனக்கு சந்தேகம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகளோடு பொய்யை கலப்பது....

நாங்கள் மற்றவர்களை கிண்டல் செய்வது இலகு. ஆனால், அதேநிலையில் எங்களை வைத்து சுயபரிசோதனை செய்தால் எங்களுக்குள் எத்தனை ஓட்டைகள் இருக்கிது என்று தெரியும். அயல் நாட்டு காந்தியை தூக்கி எறிந்து கதைப்பது இலகு என்றால் நம்மநாட்டு ஆளையும் இதேநிலமையில் வைத்து ஒப்பீடு செய்து பார்கிறது தவறு இல்லை. நாங்கள் மகாத்மா காந்தியை விமர்சனம் செய்த அதேபாணியில் நம்மட ஆளை அயல்நாட்டுக்காரன் சுயபரிசோதனை செய்தால் இப்படியும் சொல்லலாம்.

“தேசியத் தலைவர் என்று கூறப்படுவதற்கு பிரபாகரனுக்கு அருகதை இருக்கிறதா? ஓர் சாதாரண மனிதனை ஏன் தேசியத்தலைவர் என்று சொல்லி மாயை ஏற்படுத்தப்பட்டது? ***”

என்ன வாசிச்சீங்களோ? நிலமை இதுதானுங்கோ. இப்ப பலருக்கு பீபீ இருநூறுக்கு ஏறி இருக்கும். படக்கு படக்கு எண்டு இதயத்துடிப்பு நூற்று நாப்பதில அடிக்கும். தேசியத்தலைவர் பற்றி விமர்சனம் செய்கிறதுக்கு எந்தக்கொம்பனுக்கும் உரிமை இல்லை என்று பதில் எழுதுறதுக்கு கைகள் துடிக்கும். இப்பிடித்தான் அயலநாட்டுகாரனும் சொல்வான்.

நடுவுநிலமை இல்லாமல் யாரும் எதையும் தூக்கி எறிஞ்சு பேசலாம். ஆனால், சுயபரிசோதனை என்று ஆரம்பிச்சால் நாங்கள் எவ்வளவு கேவலம் கெட்டவர்கள் என்பதை உணர்ந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். எப்பவும் ஒருத்தனிண்ட நல்ல பகுதிகளை பார்த்துக்கொண்டு, நல்ல விசயங்களை எடுத்துக்கொண்டு வாழ்க்கையை ஓர் சாதகமாக வகையில உற்று நோக்கி செயற்படுவதே சிறப்பானது. அவன் அவளுடன் படுக்கையில கிடந்தான். இவன் இப்பிடி தன்னை காட்டிக்கொண்டு அப்பிடி அந்தமாதிரி அத்தனை பெண்டுகளுக்கு கேம் குடுத்தான் என்று பரபரப்பை கிளப்புவதன் மூலம் உருப்படியாக ஏதும் நடைபெறப்போவது இல்லை.

உண்மைகளுக்குள் இருக்கும் பொய்களை மூடிமறைப்பது......

இரண்டும் வேறுவேறானவை. இதில் ஒன்றோடு ஒன்றை ஒப்புவிப்பது பாறங்கல்லுடன் உப்புகல்லை ஒப்புவிப்பதாகும்.

இந்திய சுதந்திர போராட்டம் என்பது 100 வருடங்கள் தொடர்ந்தபோர். இதில் மகாத்மா காந்தியின் காலம் ஒரு சிறியது. ஆனால் சுதந்திரம் அடைந்தபோது அவரின்காலமே கனிந்தது.

மகாத்மா காந்தியின் போராட்டத்தால் இந்தியா சுதந்திரம் அடைந்தது.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மகத்மாகாந்தி சுதந்திரத்திற்காக போராடிகொண்டிருந்தார்.

மேல் உள்ள இரண்டு வசனங்களும் வேறு வேறு அர்த்தம் உடையவை. ஆனால் விவாதத்திற்கு உட்படுத்த வேண்டியவை இந்த அர்த்தங்களே.

"மகாத்மா"

இது ஒரு சாதாரண ஆத்மாவிலும் இருந்து மேன்மையானது. மகாத்தானது. புனிதமானது.

சாதாரண ஆத்மாக்களில் இருந்து காந்தி மேன்மையானவரா? மகாத்தானவரா? புனிதமானவரா? என்பதே விவாதத்திற்கு உட்படுத்த வேண்டியது.

ஆம் காந்தி ஒரு மகாத்மா என்று ஏற்று கொள்பவர்களுக்கு இது ஒரு அரிய சந்தர்ப்பம் ஏனெனில் பலர் அவர் ஒரு சாதாரண ஆத்மாவிலும் கீழானவர் என்று கூட சொல்கின்றார்கள். ஆகையால் அவர் எவ்வாறு மேன்மையானவர்......... எவ்வவாறு மகத்தானவர் எவ்வாறு புனிதமானவர் என்று நிருபணமாக எழுதிவிடுவதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம்.

ஆனால் மகாத்மா காந்தி பிழை என்று எழுதும் உங்களால்.............. பிரபாகரன் பிழை என்று எழுதினால் எற்றுகொள்ள முடியுமா?

என்றால் இது மிரட்டல். இது ஒரு கருத்தாடல் இல்லை. பிரபாகரன் ஒரு இனத்திற்கு ஒரு தேசியத்திற்கு தலவைராக இருந்தாரா என்பது பற்றி விவாதிப்பதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. இனி புலிகள் போராடவே இல்லை.... என்றும் சில ஒட்டுகுழுக்கள் தமது "பத்திரிகை" என்ற பெயரில் தாங்களே எழுதி தாங்களே வாசிக்கும் இடங்களில் எழுதுகிறார்கள். அப்ப யாழ் கருத்து களத்தில் புலிகள் போராடினார்களா? என்றும் ஒரு விவாத்தை வைப்பதில் எந்த தவறும் இல்லைதான். ஆனால் நாம் அந்தளவு புத்திசாலிகளா? என்ற இன்னொரு கேள்வியும் உடன்வருகிறதல்லவா?

Edited by இளைஞன்
மேற்கோளில் தணிக்கை செய்யப்பட்டுள்ளது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் தங்களின் தேசிய தலைவருடனான ஒப்பீடு மிகத்தவறானது. பிரபாகரன் தேசிய தலைவரானது அவர் ஒரு தேசிய இனத்தினை அடையாளப்படுத்தி அதன் விடிவுக்காக தனது தலைமையில் போராடிய படியால் தான். காந்தி இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர் என்பதை நாம் நிராகரிக்கவில்லை. ஆனால் காந்தி மகாத்மா.. என்ற நிலைக்குரிய ஒருவரல்ல.

மகாத்மா என்பது ஒரு உன்னதமான பதம். அதற்கென்று சில பண்புகள் வரையறுக்கப்பட்டிருப்பதால் தான் அப்பதத்தை சாதாரணமாக எல்லோரும் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. காந்தி இந்திய விடுதலைக்காக போராடியதோடு மட்டும் மகாத்மா ஆக முடியாது. அப்படிப் பார்த்தால் பல விடுதலைப் போராளிகளும் மகாத்மாக்களாக இனங்காட்டப்பட வேண்டும்.

காந்தி ஒரு தேச விடுதலைப் போராளி என்ற நிலைக்கு அப்பால் தனிமனித ஒழுக்கங்களை பேணத்தவறி இருக்கிறார். அப்படியான ஒருவருக்கு மகாத்மா என்ற தகுதி அவசியம் தானா...???!

தேசிய தலைவர் ஒரு போராளி மட்டுமல்ல.. அவர் ஒரு கட்டுக்கோப்பான உலகமே வியந்து பாராட்டும் அளவிற்கும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்த ஒரு விடுதலை இயக்கத்தை தலைமை தாங்கி நடத்திய மாவீரன். அவரோடு தனிமனித ஒழுக்கமற்ற காந்தியை ஒப்பீடு செய்ய முடியாது. காந்தி கஸ்தூரி பாயோடு எப்படி வாழ்ந்தார் என்பதைப் பற்றி அல்ல நாம் இங்கு பேசிக் கொண்டிருக்கிறோம். காந்தி அவரையும் தாண்டி பல பெண்களோடு இயற்கைக்கு மாறான உறவு நிலைகளைப் பேணி இருப்பது தனிமனித ஒழுக்கத்தில் அவர் மிகவும் பிந்தங்கி இருந்திருக்கிறார் என்பதையே காட்டுகிறது. அப்படியான ஒரு மனிதனை எப்படி மகாத்மா என்றழைக்கலாம் என்பதே கேள்வி.

தேசிய தலைவரை வட இந்தியர்கள் பயங்கரவாதி என்று அழைத்ததும் இன்றி அவரை கொலை செய்ய படைகளையும் ஆயுதங்களையும் படைத்துறை ஆலோசனைகளையும் வழங்கி இருக்கின்றனர். ஆனால் நாங்கள் காந்தியை கொல்லவல்ல இதை எழுதுகிறோம். காந்திக்கு இந்திய பேரரசுக்குரிய சமூகம் வழங்கி இருக்கும் மகாத்மா என்ற நிலை சரியானதா.. காந்தி அதற்கு தகுதியுடையவரா என்பதுதான் கேள்வி.

நாம் கொள்கையிலும் தனி மனித ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கிய தேசிய தலைவரை மகாத்மா என்று அழைக்கவில்லை. அவர் எமது தேசிய இனத்தின் விடுதலைக்காக அதன் அடையாளத்திற்காக போராடிய பெரு வீரன் என்ற அடிப்படையில் தான் அவருக்கு தேசிய தலைவர் என்ற அந்த அந்தஸ்தை அளித்திருக்கிறோம். இதனை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

மற்றும்படி தேசிய தலைவரை விட காந்தி தனி மனித ஒழுக்கத்தில் மிகக் கீழ்மட்டத்தில் இருந்திருக்கிறார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அந்த வகையில் தேசிய தலைவர் பிரபாகரன் ஒப்பீட்டளவில் காந்தியை விட சிறந்தவர் என்பதை நிரூபிக்க முடியும். ஆனால் அதை இந்திய சமூகம் ஏற்காது. அது அவரை பயங்கரவாதி என்றே சொல்லும். காந்தி விடுதலை என்று சொல்லி எத்தனையோ இந்திய மக்களை வெள்ளையர்களின் குண்டுக்கு இரையாக்கி இருக்கிறார். ஆனால் அதற்காக அவரை எவரும் பயங்கரவாதி என்று சொன்னதில்லை. விடுதலைப் போராளி என்றே இனங்காண்கின்றனர். ஆனால் தேசிய தலைவர் அப்படியன்று. அவர் ஒரு இராணுவ வழிப் புரட்சியின் முதல்வனாக இருந்து கொண்ட கொள்கையோடு தனி மனித ஒழுக்கத்தையும் காத்து போராடியவர். அவரை சதி செய்து வீழ்த்தியது இதே காந்தி தேசமாகும். அது காந்தியைப் போல இரட்டை நிலை வாழ்வையே பிரதிபலித்து நிற்கிறது.

தேசிய தலைவர் அப்படிப்பட்ட ஒருவரல்ல என்பதையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

Edited by nedukkalapoovan

எனக்கு ஒரு சந்தேகம் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தது காந்தியா...?? அல்லது வெள்ளைக்காறன் சுதந்திரத்தை காந்தியிடம் குடுத்து போட்டு போனவனோ....??

சந்தேகத்துக்கு முக்கிய காரணம் பிரித்தானியர்களுக்கு மிகவும் தலையிடியாக இருந்த நேதாஜி இன் இராணுவம் காந்திய வாதிகளால் மறைக்கப்பட்டு வருகிறது...

காந்தி பெற்றுக் கொடுத்த சுதந்திரம், இந்திய சிறுபான்மை தேசிய இனங்கள் அனைத்தின் சுதந்திரத்தையும் பார்ப்பனியத்திடம் அடகு வைத்த சுதந்திரம்

பிரபாகரன் கண்டது: சாதிகள் அற்ற, பெண் சுதந்திரம் மிக்க ஒரு சுதந்திர தமிழ் ஈழத்தை

ஒருவரை மகாத்மாவாக்கி இந்த உலகம் தன் அடக்குமுறையை தொடர்கின்றது

ஒருவரை பயங்கரவாதியாக்கி தன் மேலாதிக்கத்தை ஒடுக்கப் பட்ட தேசிய இனங்கள் மீது தொடர்ந்து செலுத்துகின்றது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.