Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமான் ஓராண்டு சிறை!....தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது...

Featured Replies

மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது... ஓராண்டு சிறை!

சென்னை, ஜூலை. 17, 2010: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய குற்றத்துக்காக, நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.

இதனால், அவர் இன்னும் ஓராண்டுக்கு ஜாமீனில் வெளிவர முடியாது.

இலங்கையின் போர்க்குற்றம் குறித்து விசாரிக்க ஐ.நா. நியமித்துள்ள குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளைக் கண்டித்தும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்வதைக் கண்டித்தும் நாம் தமிழர் அமைப்பு சார்பி்ல், சென்னையில் கடந்த 10 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அதில் பேசிய சீமான், இரு பிரிவினருக்கு இடையே வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சீமான் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, சீமானின் ஜாமீன் மனுவை சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது...

இந்நிலையில்,இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய குற்றத்துக்காக சீமானை தேசிய பாதுகாப்பு சட்டப்படி கைது செய்து, ஓராண்டு காலம் சிறையில் அடைப்பதற்கான உத்தரவில் சென்னை காவல்துறை ஆணையர் (பொறுப்பு) சஞ்சய் அரோரா நேற்றிரவு கையெழுத்திட்டார்.

அந்த உத்தரவை, சென்னை வடக்கு கடற்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வேலூர் சென்று சிறை சூப்பிரண்டிடம் கொடுத்தார். அதை, வேலூர் சிறையில் இருக்கும் சீமான் கையெழுத்திட்டு பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து, தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி சீமான் கைதாகியுள்ளார். எனவே, அவர் இன்னும் ஓராண்டு காலத்துக்கு ஜாமீனில் வெளிவர முடியாது.

vikatan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டுத் தமிழர் சிந்திக்க வேண்டிய காலமிது. தனது அடக்குமுறையை ஒரு தமிழ் வேடமிட்ட தெலுங்கனால் இந்தியப் பயங்கரவாத அரசு நிறைவேற்றி வருகிறது. இன்று நிமிர்ந்தால் ஒழிய இனி தமிழனுக்கு இந்தியாவில் வாழ்வில்லை, அதன் முதல்ப்படியாக தமிழனல்லாத முத்துவேல் கருணாநிதி, கன்னட ஜெயலலிதா...போன்ற கூலிகளைத் துறத்த வேண்டும். தமிழனை தமிழன் ஒருவனே ஆள வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலவசம் கொடுத்தால் நாங்கள் எங்கள் கோமணத்தை கூட அவிழ்த்து கொடுத்துவிட்டு அம்மணமாக திரிவோமே ஒழிய, இப்படி இவர்களை நம்புவதை என்றும் விட்டு விட மாட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டுத் தமிழர் சிந்திக்க வேண்டிய காலமிது.

சிந்திக்க எங்கேயப்பா நேரமிருக்கு? இருபத்துநாலு மணி நேரமும் இலவச டிவி மூலம் அம்மணிகளின் மனங்களைப் பார்க்கவே நேரம் பத்தாதபோது.. :lol:

கலைஞரின் தமிழ் பற்று வெளிப்பட்ட இடம் இது...

பார்வதி அம்மாவுக்கு செய்த கொடுமையை போல இதையும் கலைஞரின் அவமதிக்கப்பட்ட தோல்வியாக்க ஊடகங்கள் முயலுமானால் சிறப்பாக இருக்கும்...

பார்வதி அம்மாவை திருப்பி அனுப்பினது மத்திய அரசு என்பது போல இதையும் மத்திய அரசுதான் எண்டு கலைஞர் சொல்வார் எண்டால் செருப்பாலை அடிக்க வேணும்..

Edited by தயா

கொடியவன் ஆண்டால்....

பயங்கரவாதிகள் மத்தியில் சீமான் சமயோசிதமாக செயற்பட்டிருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் பேசியது குற்றமாகாது: வைகோ

தமிழர்களைக் கொன்றால் சிங்களவர்க்கு எதிராக தமிழர்களின் கோபம் திரும்பும் என்று சீமான் பேசியது குற்றமாகாது என்றும், தி.மு.க. அரசு சீமான் மீது பாதுகாப்புச் சட்டத்தை ஏவியதற்கு பலத்த கண்டனத்தைத் தெரிவிக்கிறேன் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை தமிழ்நாட்டில் அடக்குமுறை தி.மு.க அரசால் ஏற்பட்டு உள்ளது. லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த கொடியவன் ராஜபக்சேவின் சிங்கள இனவெறி அரசுக்குக் கண்டனமும் எச்சரிக்கையும் செய்ய வேண்டிய தமிதுக முதல்வர் கருணாநிதி அதற்கு மாறாக, தமிழர் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு இலங்கை அரசு தந்துவிட்டது என்று சிங்கள அரசுக்கு வக்காளத்து வாங்கினார்.

நெஞ்சை நடுங்க வைக்கும் வகையில் ஈழத்தமிழர்கள் படுகொலைகள் செய்யப்பட்டதால் நியாயமாக தமிழர்கள் மனதில் எழுகின்ற ஆவேச உணர்ச்சி, முத்துக்குமார் உள்ளிட்ட 17 வீரத்தமிழர்கள் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்யக் காரணமாயிற்று. அதே உணர்ச்சி வேகத்தில் தான் சிங்கள அரசுக்கு எச்சரிக்கை செய்யும் நோக்கத்தில், ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் தலைவர், இயக்குநர் சீமான் உரை நிகழ்த்தினார்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் குரல் எழுவதையேத் தடுக்கவும் தமிழ் ஈழ ஆதரவாளர்களை மிரட்டி ஒடுக்கவும் திட்டமிட்டு இயக்குநர் சீமான் மீது தேசப் பாதுகாப்புச் சட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி ஏவி உள்ளார்.

ஈழத்தில் தமிழ் மக்களை படுகொலை செய்ய ஆயுதங்களைத்தந்த இந்திய அரசு தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி ஆகும். அங்கே தமிழர்களைக் கொன்றால் சிங்களவர்க்கு எதிராக தமிழர்களின் கோபம் திரும்பும் என்று சீமான் பேசியது குற்றமாகாது.

சென்னையிலே ஒரு தலித் இளைஞனைச் சுட்டுக்கொன்ற கொலைகாரன் டக்ளஸ் தேவானந்தா பிரதமரோடு கரம் குலுக்கி மத்திய அரசின் விருந்தாளியாக உலா வரமுடிகிறது. ஆனால், ஈழத்தமிழர்களுக்காக பேசினால் கருணாநிதி பாதுகாப்புச் சட்டத்தை வீசுகிறார். கடந்த ஆண்டு ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் வீரத்தியாகிகள் தீக்குளித்தபோது, அதனைக் கொச்சைப் படுத்தி குடும்பச் சண்டையால் தீக்குளித்தனர் என்று காவல்துறையை அறிக்கைவிடச் செய்தவர்தான் தமிழக முதல்வர் ஆவார்.

ஈழத்தமிழர் படுகொலையைத் தடுக்க முனையாமல் அதற்குக் காரணமான இந்திய அரசுக்கு உடந்தையாக செயல்பட்ட துரோகி என்ற குற்றச்சாட்டில் இருந்து தமிழக முதல்வர் விடுபடவே முடியாது. அவர் தற்போது எடுத்து வருகிற இந்த அடக்குமுறை நடவடிக்கைகள் அந்தக் குற்றச்சாட்டை மேலும் கூர்மைப்படுத்தவே செய்கின்றன.

சர்வாதிகாரப் போக்கில் பாசிச ஆட்சி நடத்தும் தி.மு.க. அரசு சீமான் மீது பாதுகாப்புச் சட்டத்தை ஏவியதற்கு பலத்த கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், இத்தகைய அடக்குமுறையின் மூலம் எங்கள் ஈழ ஆதரவுக் குரலை ஒருபோதும் அடக்க முடியாது அது மேலும் மேலும் வீறுகொண்டு எழும் என எச்சரிக்கிறேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=35924

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சமாட்டோம் அடிபணியவும் மாட்டோம்: நாம் தமிழர் இயக்கம்.

நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து நாம் தமிழர் இயக்கம் சார்பில் அதன் செய்தி தொடர்பாளர் கூத்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழினத்தின் மேன்மைக்கும் எழுச்சிக்காகவும் பாடுபட்டு வரும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது தமிழக முதல்வர் கருணாநிதி தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஏவி கைது செய்துள்ளார். சிங்கள பேரினவாத இலங்கை அரசு அன்றாடம் எமது மீனவர்களைச் சுட்டுக் கொல்கிறது. எண்பதுகளில் தொடங்கி இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இறையாண்மையுள்ள ஒரு தேசத்தின் சட்டமும் போலீசும் இந்த மீனவர்களைக் காப்பாற்ற வேண்டாமா? இலங்கை ஒரு அண்டை நாடு என்றால் அண்டை நாட்டுக்காரன் அடுத்த வீட்டுக்காரனை அன்றாடம் கொல்கிறானே ஏன்? இலங்கை அரசு தமிழர்கள் என்றாலே அவர்களை அழித்தொழிக்கும் தீர்மானத்தோடு இருக்கிறது. அவன் இலங்கையில் இருந்தாலும் சரி இந்தியாவில் இருந்தாலும் சரி. தமிழனை வெட்டினால், கொன்றால் கூட கேட்க நாதியில்லை என்பது சிங்களனுக்குத் தெரிந்து விட்டது.

தட்டிக் கேட்பது மட்டுமல்ல கொலைகாரப் பாவிகளை விமர்சனம் செய்து பேசக்கூட இங்குள்ள ஆட்சியாளர்கள் அனுமதிப்பது இல்லை. தமிழ் மீனவர்களின் உயிரை விட சிங்கள மாணவர்கள் மீது இங்குள்ள அரசுகள் கரிசனையுடன் இருக்கின்றது. இங்குள்ள அரசுகள் தமிழக மீனவனைக் கொன்றவனைப் பாதுகாக்கின்றது, அதற்கு எதிராக குரல் கொடுத்தவனை தனிமைச் சிறையில் அடைக்கின்றது. தமிழினத்தை அழித்து விட்டு தமிழர்களுக்கு உரிமையைத் தருவோம் என்று சொல்லும் ராஜபக்‌சேவுக்கும் கருணாநிதிக்கும் என்ன வேறுபாடு?

உள்ளூரில் தமிழர்கள் கஞ்சிக்கு வழியில்லாமல், வேலை வாய்ப்

பில்லாமல், பாதிக்கப்பட்டு அன்றாட வாழ்வுக்கே அல்லாடிக் கொண்டிருக்கின்றார்கள். கடுமையான மின்வெட்டால் தமிழகம் முழுவதும் சிறு தொழில்கள் நசிந்து விட்டன, விலைவாசி விண்ணை முட்டி என்ன செய்வதென்று அறியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள் ஏழை மக்கள். ஆனால் கருணாநிதியோ அது குறித்து கவலைப்படாமல் புகழ் பாடும் பாராட்டு விழாக்களில் கலந்து கொண்டு பொழுதைக் கழிக்கின்றார். போர் வெறியர்களான சிங்கள ராஜபட்சே, மற்றும் சோனியாவின் மனம் புண்பட்டு விடக் கூடாது என்று கவலைப்படுகிறார்.

உலகமே ராஜபக்‌சேவை போர்க்குற்றவாளி என்று அறிவிக்கத் தயாராகிக் கொண்டு இருக்கின்றது. ஆனால் தமிழக முதல்வர் கருணாநிதியும் அவரது அரசும் சிங்களனையும் ராஜபக்‌சேவையும் பாதுகாக்க சட்டம் கொண்டு வருகின்றார்கள்? உண்மையில் இது யாருக்கான அரசு?

ராஜபட்சேவின் சொல்படி கேட்டு நடக்கும் தேவை சோனியாவுக்கு இருக்கலாம் கருணாநிதிக்கு இருக்கலாம் ஆனால் நாம் தமிழர் இயக்கத்திற்கோ அதன் தலைவர் சீமானுக்கோ இல்லை. எம் மண்ணின் மைந்தர்களான மீனவ மக்களைக் காக்கவும், திமுகவின் அராஜக ஆட்சியில் சிக்கி வதைபடும் தமிழக மக்களிடம் இருந்து காங்கிரஸ், கருணாநிதி கும்பலை வேரறுக்கும் பணியை நாம் தமிழர் இயக்கம் தொடர்ந்து செய்யும். அடக்கு முறைகளைக் கண்டு ஒரு போதும் அஞ்சப்போவதில்லை. ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் பெரு நெருப்பு கனன்று கொண்டிருக்கின்றது. அதனைத் தூண்டிவிட்டுத்தான் நீங்கள் இயக்கம் வளர்த்தீர்கள், அந்த நெருப்பு உங்களைச் சுட்டுப் பொசுக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=35923

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்களுக்காக போராடிய சீமான் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது.

சென்னை: தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை தொடர்ந்து தாக்குவதைக் கண்டித்து நடந்த போராட்டத்தின்போது ஆவேசமாக பேசியதற்காக கைது செய்யப்பட்ட நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பிரயோகித்துள்ளது தமிழக அரசு.

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை வெறியர்கள் தொடர்ந்து தாக்கி வருவதைக் கண்டித்தும், இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதைக் கண்டித்தும், ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்தும் நாம் தமிழர் இயக்கம் சார்பில் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது சீமான் ஆவேசமாக பேசினார். இதையடுத்து அவர் மீது வன்முறை, பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியதாக கூறி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் தற்போது சீமான் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் அறிவுறுத்தலின் பேரில் சென்னை மாநகர காவல்துறை பிறப்பித்துள்ளது.

இன்று காலை சீமான் அடைக்கப்பட்டுள்ள வேலூர் சிறைக்குச் சென்ற போலீஸார், அவரிடம் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டது தொடர்பான உத்தரவை வழங்கினர்.

கடந்த ஆண்டும் இதேபோல தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சீமான் அடைக்கப்பட்டார். ஆனால் அது செல்லாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் விடுதைலயானார். இந்த நிலையில் தமிழக மீனவர்களின் அவதி நிலையை குறிப்பிட்டு ஆவேசமாக பேசியதற்காக மீண்டும் அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சீமான் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்திருப்பது தமிழ் உணர்வாளர்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம், இதைக் கண்டித்து யாரேனும் போராட்டம் நடத்தினாலோ அல்லது போஸ்டர்கள் உள்ளிட்டவற்றை ஒட்டினாலோ அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறை தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாழடைந்த சிறை அறையில் சீமான் அடைப்பு

இதற்கிடையே, தன்னை பல வருடங்களாகப் பயன்படுத்தாமல் உள்ள பாழடைந்த சிறை அறையில் அடைத்து வைத்துள்ளதாக நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் புகார் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சீமான் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்த பாழடைந்த தனி அறையில் என்னை சிறை அதிகாரிகள் அடைத்து வைத்துள்ளனர். இது சட்ட விரோதமான செயல். எனவே எனக்கு முதல் வகுப்பு அறை ஒதுக்கும்படி உத்தரவிட வேண்டும். மேலும் தனிமை சிறையை மாற்ற வேண்டும் என்றும் உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் நாகப்பன், கிருபாகரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.

அப்போது அரசு கூடுதல் வக்கீல், சீமான் தனிமைச் சிறையில் வைக்கப்படவில்லை என்றார். இதுகுறித்து செவ்வாய்க்கிழமைக்குள் எழுத்துப் பூர்வமாக அரசு பதிலளிக்குமாறு கூறி நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை அன்றைக்கு ஒத்திவைத்தனர்.

thatstamil.com

  • கருத்துக்கள உறவுகள்

மேல்முறையீட்டு நீதிமன்றில் ஜாமினுக்கு போட முயற்சிக்கின்ற சந்தர்ப்பத்தில் தான், இவ்வாறு நடந்து கொண்டிருப்பதைப் பார்க்ககின்றபோது, வெளிவர விடக்கூடாது என்ற ஒரு முடிவோடு தான் நடத்தப்பட்டிருப்பது தெளிவாகுகின்றது. சீமான் அண்ணன் வெளியால் வரும்போது, நாம் தமிழர் இயக்கத்தை பெரும்வளர்ச்சி பெற்ற அமைக்காக மாற்றவேண்டியது அந்தச் சொந்தங்களின் தேவையாகும். நாம் தமிழர் அமைப்பை முடக்க ஏதாவது செய்யக்கூடும். அதை மனதில் கொண்டு அவதானமாகச் செயற்படுங்கள்...கடந்த ஒரு வருட காலத்தில் அது பெற்ற பெருவளர்ச்சி பலருக்கு கிலியை ஏற்படுத்தி இருப்பது உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கத்தையான் பாகிஸ்தான் காரனைக் கொல்வோம் என்று சொல்லும்போதெல்லாம் பஞ்சராகாத இறையாண்மை சிங்களவனைக் கொல்வோம் என்று சீமான் சொன்னதும் பஞ்சராகி விட்டதாம்..! :lol:

ஆக, சிங்களவனுக்கு இந்தியாவில் உரிமை இருக்கு. தமிழனுக்கு எங்குமே உரிமையில்லை..! நல்லா சொன்னீங்கடா..! இதுக்கு மேலும் நம்ம ஆட்கள் தூங்கிக்கிட்டிருந்தால்... :lol:

பகுத்தறிவு, பார்பானிய எதிர்ப்பு, எல்லா சைவ மக்களையும் வேறு மத்ததிற்கு விலை பேசி விற்று, பிறகு இறுதியில் மகாகவி பாரதியையும் பிராமண வெறியனாக்கிய ஒரு கூட்டத்தில் இருந்து வந்தவன், தமிழரின் வரலார்றை 2000ம் ஆண்டு காலத்து தமிழன் வரலாற்றை மறைத்ட் தமிழன் வழியில் வந்த உலகின் முத்ல் பெரும் சக்கரவர்த்திகளில் ஒருவரான ராஜ ராஜ சோழனின் மாபெரும் தஞ்சை கோயிலை கூட அவமதித்து நடக்கும் இயக்கத்தின் வழி வந்தவன் ஒருவன் இதைச் செய்வதில் எந்தவொரு ஆச்சரியமும் இல்லை. இதைப் பற்றி யாழில் இன்னமும் எழுதலாம் ஆனால் எழுதினால் தூக்கி விடுவார்களே. :lol::lol:^_^

கருணாநிதி எமது தலைவரை அழிக்க துணை போனதற்குக் காரணம் பணமோ அல்லது அரசியலோ இல்லை எங்கே தமிழ் ஈழம் எமது போராட்டத்தின் விழைவாக உருவானால், தன்னை வருங்காலம் ஒரு நாயாகக் கூட மதிக்காது என்று இந்தக் கிழடுக்குத் தெரியும். ஏன் ஒரு தமிழ் நாட்டு பேராசிரியரே உலக்த்திலேயே 4ம் கட்ட ஈழப் போரை தடுக்கும் வல்லமி கருணாநிதிக்கு மட்டும் தான் இருந்தது என் கூறியுள்ளார் :lol::lol::lol::lol:

வடக்கத்தையான் பாகிஸ்தான் காரனைக் கொல்வோம் என்று சொல்லும்போதெல்லாம் பஞ்சராகாத இறையாண்மை சிங்களவனைக் கொல்வோம் என்று சீமான் சொன்னதும் பஞ்சராகி விட்டதாம்..! :lol:

ஆக, சிங்களவனுக்கு இந்தியாவில் உரிமை இருக்கு. தமிழனுக்கு எங்குமே உரிமையில்லை..! நல்லா சொன்னீங்கடா..! இதுக்கு மேலும் நம்ம ஆட்கள் தூங்கிக்கிட்டிருந்தால்... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியை வாசிக்க மனம் கனக்குது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாதிரி சீமானைச் சிறைப் பிடித்து அடுத்த தேர்தலுக்கு கருணா நிதி தான் தயார் என்கின்றார்.

தமிழ் நாட்டு மக்கள் இதை இப்படியே பார்த்துக் கொண்டிருந்தால் இன்னும் இருபது வருடத்திற்கு அடிமைகளாகவே இருக்க வேண்டிவரும்.

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டு மக்கள் இப்படியே சன் தொல்லை காட்சி பார்த்துகிட்டு இருங்க. இருப்பதையும் உருவிகொண்டு போய்விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வேறு வழி? திருடனாப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. மக்களுக்கு இலவச போதை ஏறிப்போச்சுது. தன் வீட்டின் வாசலில் துயரம் தட்டாத வரை தட்டிவிட்டுச் செல்லும் அசிரத்தை அலட்சியம்.அவர்களாக திருந்தினாலே விமோசனம். மிக மோசமான சுயநல இனமாக மாறிக்கொண்டு வருகிறது தமிழினம்.

  • கருத்துக்கள உறவுகள்

2ரூபா அரிசியில் வயிற்றை நிரப்பி சண் ரீவியில் மானாட மயிலாட பார்த்துக்கொண்டு இருக்கும் தமிழக மக்களே எப்பொழுது மயக்கம் தெளிந்து சுயநினைவுக்கு வரப்போகிறீர்கள்?

தமிழ்நாட்டுத் தமிழர் சிந்திக்க வேண்டிய காலமிது. தனது அடக்குமுறையை ஒரு தமிழ் வேடமிட்ட தெலுங்கனால் இந்தியப் பயங்கரவாத அரசு நிறைவேற்றி வருகிறது. இன்று நிமிர்ந்தால் ஒழிய இனி தமிழனுக்கு இந்தியாவில் வாழ்வில்லை, அதன் முதல்ப்படியாக தமிழனல்லாத முத்துவேல் கருணாநிதி, கன்னட ஜெயலலிதா...போன்ற கூலிகளைத் துறத்த வேண்டும். தமிழனை தமிழன் ஒருவனே ஆள வேண்டும்.

இரகுநாதா, நடக்கக்கூடியதை சிந்திப்போம்! ... உது சாத்தியமா? ... எட்டு தலைமுறை சென்றாலும் மாறவே மாறாது!

சீமானது தமிழின உணர்வுக்கு தலை வணங்கும் அதேநேரம் இன்றைய சீமானது நடவடிக்கைகள் உணர்ச்சிவசப்பட்ட/அவசரப்பட்ட/தொலைநோக்கற்ற அரசியலாகவே தென்படுகிறது.

இன்றைய கைது ... சீமான் சாதித்தது என்ன??????? ஒன்றுமில்லை ... சில நாட்களில் இச்செய்தி அமுங்கி விடும்!

விரும்புகிறோமோ, விரும்பவில்லையோ .. தமிழக ஊடகங்களில் 70%களை கைவசம் வைத்திருப்பது கருணாநிதி குடும்பமும்/பினாமிகளுமே! கருணாநிதியை முற்றுமுழுதாக எதிர்த்தோ அல்லது அழுத்தங்களை கொடுப்பதோ ... கருணாநிதியை, எம்மை விட்டு துர தூர கொண்டு செல்லும்! இது எமக்கு உதவுமா?????

எம் அரசியல்கள் இனியாவது உணர்ச்சிவசப்பட்டவைகளுக்கு அப்பால் விவேகமான செயற்பாடுகளாக இருத்தல் வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் அரசியலில் வெற்றி பெற நான் ஒரு எளிய வழி கூறட்டுமா? அரசு ஊழியர்களை கரெக்ட் செய்வதுதான் ஒரே வழி... இவர் எம்.ஜி.ஆர்.. மீனவர் ... ரிக்சாகாரர் என அனைவரையும் பாட்டு பாடி ஆட்டம் ஆடி கரெக்ட் செய்ததை ... கருநாகம் லபக் என்று லகானை பிடித்துவிட்டார்.. காரணம் என்ன? அரசு ஊழியர்களை கவர் செய்ததுதான்... இன்னும் ஒன்றும் கெட்டு விடவில்லை ...அங்கன் வாடி உறுப்பினர்கள் பகுதி நேர அரசு ஊழியர்கள்தான்...ஆனாலும் எலெக்சன் பூத்து ஆபிஸ்ர்கள் அவர்கள்தான்... இன்னும் கருநா அவர்களை நிரந்தர மாக்குவோம் அந்தா இந்தா என போக்கு காட்டி வருகிறார்... அவர்களை நிரந்தரமாக்குவோம் என தோழர் சீமான் அறிவித்தாலே போதுமானது ... எலக்சன் பூத்து வேலைகளை அவர்கள் திறம்பட செய்து முடிப்பார்கள்(அதாவது ஓட்டு குத்தும் வேலையை) .... முள்ளை முள்ளால் எடுக்க வேணும்... இதில் எந்த கூட்டணி பருப்பு வேகாது...:lol: :lol: Unknown-8.gif

எனக்கு என்னவோ 4 எம்பிக்கள் ... நாம் தமிழர்கட்சி சார்பில் சென்றால் ... நாடாளுமன்றத்தினை ஸ்தம்பிக்க செய்வார்கள் என நம்பிக்கை உள்ளது...செஞ்சிகோட்டைக்கு நான் ரெடி.. உள் குத்து வேலையை செய்விக்க ... திமுக/அதிமுக/பாமக... ஐ மீன் ஒட்டை பிரித்து ஜெயிக்க வைக்க... தஞ்சாவூருக்கு அடுத்த நெல் களஞ்சியம் செஞ்சி... இங்கும் விவசாய சிக்கல்கள் பல உள்ளன... தோழர் சீமான் ஈழத்தொழர்கள்... பிரபாகரன்... என செலவிடும் நேரம் தமிழக சிக்கல்களிலும் கவனம் செலுத்துதல் நன்று.... கூடுமானவரை வருமோ வராதோ கருநா அறிவித்த 4 க்கு 40 இலவச திட்டங்களை மனம் கூசாமல் தோழர் சீமான் அள்ளி அள்ளிவிடவேணும்... எல்லாம் 2 ஏக்கர் நிலம் போல வேறகணக்கில் சேர்த்து கொள்ளலாம்... இப்ப வெற்றி ஒன்றே வழி....அப்பொதுதான் இங்கு ஓட்டு வாங்க மிடியும்... :lol:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.