Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேர்மனியில் வளர்ந்து வரும் உதைபந்தாட்ட வீரரான இலங்கைத் தமிழர் ஜெரனுக்கு எதிராக நிறத் துவேசம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் வளர்ந்து வரும் உதைபந்தாட்ட வீரரான இலங்கைத் தமிழர் ஜெரனுக்கு எதிராக நிறத் துவேசம்!

புதன், 20 அக்டோபர் 2010 09:02 . .

ஜேர்மனியில் வளர்ந்து வரும் உதைபந்தாட்ட வீரர்களில் ஒருவரான இலங்கைத் தமிழர் ஜெரன் ஜெயபாலன் (வயது14) கறுப்பர் என்கிற காரணத்தால் நையாண்டி செய்யப்பட்டு வருகின்றார்.

பாடசாலையில் உதைபந்தாட்ட அணி ஒன்றின் தலைவராக ஜெரன் விளங்குகின்றார். வேகமும், விவேகமும் நிறைந்த உதைபந்தாட்ட வீரர். இவர் மைதானத்தில் விளையாடுகின்றார் என்றால் கலகலப்புத்தான்.

அணியின் நம்பிக்கை நட்சத்திரமும் கூட. ஆனால் எதிரணியினர் இவரைப் பலவீனபடுத்தும் வகையில் நிறத் துவேசத்தைக் கக்குகின்றமை வழமையாகி விட்டது. கறுப்பன்.. கறுப்பன் என்று சத்தம் போடுவார்கள்.

விளையாட்டு இடம்பெறுகின்றபோது கத்துவார்கள். ஆனால் நடுவர்கள் கூட இவற்றைப் பெரிதாகப் பொருட்படுத்துகின்றமை கிடையாது. இவரது பயிற்றுவிப்பாளர்களும் காது கேட்காதவர்கள் போல் அந்நேரங்களில் நடந்துகொள்வார்கள்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் மிகுந்த மன வேதனையை அனுபவிக்கின்றார் என்கிறார் ஜெரன். 25 வருடங்களுக்கு முன் ஜெரனின் பெற்றோர் ஜேர்மனிக்கு வந்து குடியேறினார்கள். ஜெரனின் அப்பா ஜெயபாலன் கூட அந்நாட்களில் பாடசாலை மட்டத்தில் சிறந்த உதைபந்தாட்ட வீரராக இருந்தவர்.

ஜெரனின் சகோதரி ஜெனிபர் (வயது 15) பாடசாலையில் மகளிர் உதைபந்தாட்ட அணி வீரங்கனைகளில் ஒருவர். சகோதரன் ஜேசன் (வயது 09) பாடசாலையின் இளையோர் உதைபந்தாட்ட அணி வீரர்.

பிள்ளைகளின் உதைபந்தாட்ட சாதனைகளால் தாய் சாந்தினி மிகவும் மகிழ்சியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=12511:2010-10-20-09-05-17&catid=55:2009-12-16-09-39-06&Itemid=413

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் நிறத்துவேசம் பாடசாலை, வேலை இடம், விளையாட்டு எங்கும் காணப்படுகின்றது.

ஜேர்மன் தேசிய உதை பந்தாட்டக் குழுவில் இருக்கும் துருக்கிய, ஆபிரிக்க விளையாட்டு வீரர்கள் கூட இந்த வேற்றுமையிலிருந்து தப்பவில்லை.

அதிலும் வடக்கு ஜேர்மனியர், தெற்கு ஜேர்மனியர், கிழக்கு ஜேர்மனியர், மேற்கு ஜேர்மனியர் என்று தங்களுக்குள் தாம் தான் திறமானவர் என்று பேசிக் கொண்டு மற்றவர்களை மட்டம் தட்டுவார்கள். ஆனால் பொது விடயத்தில் மற்ற நாடுகளுடன் போட்டி போடும் போது ஒற்றுமையாகி விடுவார்கள்.

உண்மையில் வெளிப்படையாக நிற வேற்றுமை காட்டுவது சட்டப் படி தண்டனைக்குரிய குற்றம்.

ஆனால்.... இதற்கு கோடு, கச்சேரி என்று ஏறினால், அந்தப் பையனின் எதிர்காலம் தான் பாதிக்கும்.

நாங்கள் ஊருக்கு சுற்றுலா வந்த வெள்ளைக்காரனை...... வெள்ளையன் என்று சொன்னனாங்கள் தானே...... அதுவும் நிற வேற்றுமை தானே.... :blink:

அதே.... போலை எடுத்துக் கொண்டு, விட்டுத்தள்ள வேண்டியது தான். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நிறத்துவேசம் எந்த நாட்டில்தான் இல்லை

நாங்கள் மட்டும் சும்மாவா? ஊரில இருந்து வரும் போது சாதியையும் எல்லோ கொண்டு வந்த கேவலமான ஆக்கள்.

சும்மா இந்த களத்தில இனையும் போதும் என்ன சாதி என்றும் போடவேண்டும் என்று நிபந்தனையும் போட்டு பாருங்கள் மோகன் அண்ணாவில் இருந்து இப்ப இனைந்த புதிய உறுப்பினர்வரை என்ன போடுவார்கள் என்று?

ஆனால் வெள்ளைக்காரனை பார்த்து இவர்கள் சொல்கிரார்கள் இனத்துவேசம் என்று கி கி :blink::wub:

நாங்கள் இனத்துவேசம் இல்லாதவன் நல்லவன் என நினைபவர்களே பிரச்சனையென்று வரும் போது இனத்துவேசத்தை பாவிப்பான்.இது உலகம் முழுவது உள்ளது அளவுதான் மாறுபடும்.

இம்ரான்கான் ஆரம்பத்தில் லண்டனில்கிரிக்கெட் விளயாடும் போது பலர் பாக்கி பாக்கி என கத்த தான் நிதானம் இழந்ததாகவும் தனது சீனியேஸ் நீ விளயாட்டில் மட்டும் கவனம் செலுத்து இவர்களே ஒருநாள் உன்னை தூக்கிகொண்டாடுவார்கள் என புத்திமதி சொன்னார்களாம்.அது பின்னர் உண்மையாகித்தான் விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைய காலங்களில் ஒரு சிறந்த விளையாட்டு வீரனைப் ப்லவீனப் படுத்துவதற்காக எதிரணியினர் பயன்படுத்தும் முறைகளில் மிகவும் இழிவான முறை இதுவாகத்தான் இருக்கும்.

இதற்குப் பதிலடியாக அந்த வீரர் தன்னை முளுமையாக விளையாட்டில் ஈடுபடுத்தி எதிரணியினரை தோற்கடிப்பதையே குறியாகக் கொள்ள வேண்டும்.

சக வீரர்களின் ஒத்துழைப்புடன் முடிந்தால் கோல்களைப் போட்டு எதிரணியினரின் இந்த இழிவான தரங்கெட்ட வார்த்தைப் பிரயோகங்களை முறியடிக்க வேண்டும்.

மனம் வருந்துவதால் எந்த முடிவும் வரப்போவதில்லை.

நான் ஒரு முறை நடுவராகச் சென்றபோது தோல்வியடந்த அணியின் பார்வையாளர்கள் என்னை நீ ஒரு கறுப்பன் நீக்றோ என்று திட்டியிருந்தார்கள்.

அதை நான் நடுவர்கள் சங்கத்திற்குத் தெரியப்படுத்தியதால் அந்த விளையாட்டு அணியினருக்கு எதிராகத் தண்டப் பணம் அறவிடப்பட்டது.

நான் நடுவராகக் கடமையாற்றிய போது நிறவெறியைத் தூண்டிப் பேசிய பல வீரர்களை மைதானத்தை விட்டு வெளியேற்றியிருக்கின்றேன்.

திருடனாகப் பார்த்துத் திருந்தா விட்டால் திருடர்களை ஒழிக்க முடியாது என்பது இங்கேயும் பொருத்தமாக இருக்கும்

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாரின் அணுகுமுறைக்கு ஒரு பச்சை..! :blink:

வெள்ளைக்கார நாடுகளில் வெள்ளையருக்கு கிடைக்கும் பணமோ, புகழோ வெள்ளை அல்லாதவருக்கு கிடைக்கின்றது என்றால் அவர் ஒரு வெள்ளைகாரரை விட குறைந்தது இரு மடங்கு கூடுதலாக உழைத்திருக்க வேண்டும்.

இது ஒரு எழுதப்படாத நியதி.

ஆங்கிலபட ரசிகர்கள் நிறத்துவேசத்தை பற்றி அறிய பல்" ஸ்பைக் லீ" யின் படங்களுள்ளன பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்கார நாடுகளில் வெள்ளையருக்கு கிடைக்கும் பணமோ, புகழோ வெள்ளை அல்லாதவருக்கு கிடைக்கின்றது என்றால் அவர் ஒரு வெள்ளைகாரரை விட குறைந்தது இரு மடங்கு கூடுதலாக உழைத்திருக்க வேண்டும்.

இது ஒரு எழுதப்படாத நியதி.

உண்மைதான்

எனக்கு தெரிந்த ஒரு ஆபிரிக்கன் சொல்லுவார்

உனது மக்களுக்கு இரு மடங்கு மூளையை (படிப்பை) கொடு என்று.

அதேநேரம் தீமையிலும் ஒரு நன்மையுண்டு

எமது மண்ணை எம் இளையோர் மறக்காதிருக்க இது உதவும்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட பெரிசுகள் காதை மூடிக்கொன்டு வறுகிறதிதில மட்டும் குறியாக இருக்க எமது வாரிசுகள் தான் யதார்த்தத்தை அனுபவிக்குதுகள்.அது சாதகமோ பாதகமோ :(

  • கருத்துக்கள உறவுகள்

இவ்விடயம் தொடர்பில் உரிய பிள்ளையின் பெற்றோர் கவனம் செலுத்தினால் பிள்ளையை நிறபேதம் பிரித்து அவமதிப்பை நிறுத்தலாம். மாணவர்கள் மட்டத்தில் நிறபேதம் இருந்தாலும் அந்த மாணவனின் பயிற்சியாளர் கேட்காதது போல் பார்க்காதது போலிருக்கிறார் என்பதனை ஏற்க முடியாதுள்ளது.

பிள்ளை தனக்கு நிகழ்கின்ற நிற அவமதிப்பை தன் பெற்றோர் ஊடாக அல்லது இளையோர் சம்மேளனம் ஊடாக தெரிவிக்கலாம். கட்டாயம் மாற்றம் வரும். பெற்றோர் இவ்விடயத்தில் அதிகம் கவனம் செலுத்தினால் இப்பிள்ளைகளின் திறன் நிச்சயம் மதிக்கப்படும்.

சும்மா.... எல்லாரும் கூக்கிடலாமே, ஒழிய.

நிற பேதத்தை ஒழிக்க முடியாது.

நான் .... எவ்வளவோ பாடு படுத்தி செய்து திருத்தினாலூம்...

மூக்கு உள்ள வரை சளி வரும்.

சொந்த நாடு இல்லாதவனுக்கு, பிச்சைகார வாழ்க்கை.

.

சிறிக்கு ஒரு பச்சை

இது இன்னும் வளர்ந்து ஒரு பயங்கர அழிவை இவ்வுலகு சந்திக்கும் வரை தொடரும்...........

அதன் பின்பும் தொடரும்..............

சொந்தநாடு இல்லாத எல்லா இனமும் ஒருவகையான தரப்பிரிப்புடன் தான் வாழ்கிறது. ஆனால் குறித்த மாணவனின் திறமையை நிறபேதத்தால் சகமாணவர்கள் அவமதிப்பதை பெற்றோர் கவனமெடுத்தால் அந்த மாணவனின் திறனை வளர்க்க உதவும். பழசுகளின் மனங்களில் இன்னும் நிறபேதம் ஒட்டியிருக்கிறது. இளையோரிடம் அதிகம் குறைவு. அவர்கள் மாணவர்கள் என்பதனால் திருந்துவார்கள். அதை சரியான முறையில் பெற்றோர் கவனித்தால்.

மூக்குள்ளவரை சளியிருக்கும்

இதயமுள்ள வரை சுவாச்துடிப்பிருக்கும் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் வளர்ந்து வரும் உதைபந்தாட்ட வீரரான இலங்கைத் தமிழர் ஜெரனுக்கு எதிராக நிறத் துவேசம்!

பாடசாலையில் உதைபந்தாட்ட அணி ஒன்றின் தலைவராக ஜெரன் விளங்குகின்றார். வேகமும், விவேகமும் நிறைந்த உதைபந்தாட்ட வீரர். இவர் மைதானத்தில் விளையாடுகின்றார் என்றால் கலகலப்புத்தான்.

அணியின் நம்பிக்கை நட்சத்திரமும் கூட. ஆனால் எதிரணியினர் இவரைப் பலவீனபடுத்தும் வகையில் நிறத் துவேசத்தைக் கக்குகின்றமை வழமையாகி விட்டது. கறுப்பன்.. கறுப்பன் என்று சத்தம் போடுவார்கள்.

விளையாட்டு இடம்பெறுகின்றபோது கத்துவார்கள். ஆனால் நடுவர்கள் கூட இவற்றைப் பெரிதாகப் பொருட்படுத்துகின்றமை கிடையாது. இவரது பயிற்றுவிப்பாளர்களும் காது கேட்காதவர்கள் போல் அந்நேரங்களில் நடந்துகொள்வார்கள்.

http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=12511:2010-10-20-09-05-17&catid=55:2009-12-16-09-39-06&Itemid=413

சிறி,

உதைபந்தாட்ட அணியின் தலைவன் அந்த மாணவன்.

அணியின் நம்பிக்கை நட்சத்திரம். இத்தகைய ஒரு மாணவனை எப்படி பயிற்றுனரோ நடுவர்களோ நிறபேதம் காட்ட முடியும் ?

பயிற்றுனர்களும் நடுவர்களும் இத்தகைய திறன் வாய்ந்த மாணவனை மற்றைய மாணவர்கள் நிறபேதம் காட்டி உளப்பாதிப்பை விளையாட்டில் சிரத்தையை சிதைப்பதை அனுமதிக்கமாட்டார்கள்.

பெற்றோர் இதில் கவனமெடுக்க வேணும்.

இது இன்னும் வளர்ந்து ஒரு பயங்கர அழிவை இவ்வுலகு சந்திக்கும் வரை தொடரும்...........

அதன் பின்பும் தொடரும்..............

எமது பிள்ளைகளுக்கு எமது வேர்களை எங்களது புலம்பெயர்வின் துயரங்களைச் சொல்லி வளர்த்தால் அவர்கள் தங்களது அடையாளத்துடன் வளருவார்கள்.பயங்கரங்கள் வர முதல் தமக்கானதை பெற்றுக் கொள்ளுவார்கள். அப்போ கலப்பினத் திருமணங்களில் பிறந்த குழந்தைகள் எப்படி இந்நாடுகளில் வாழ முடிகிறது ?

  • கருத்துக்கள உறவுகள்

அவன் சுழியன், அவன் உந்த நிற பேத சேட்டைகளை சுழிச்சு உலககிண்ணபோட்டியில் விளையாட வாழ்த்துக்கள் அவன் ஒரு தமிழ் ஜேர்மன்காரன் என்று பெருமை படுவோம் .......

நிற பேதத்தால் டீம்மில் சேர்க்காமல் விடவில்லையே சேர்த்துதானே இருக்கிரார்கள்,

  • கருத்துக்கள உறவுகள்

மூக்கு உள்ள வரை சளி வரும்.

சொந்த நாடு இல்லாதவனுக்கு, பிச்சைகார வாழ்க்கை.

உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தைத் தவிர தமிழனுக்கு பாதுகாப்பான நாடு எதுவும் இருக்க முடியாது.

விளையாட்டு மடடுமல்ல

பாரிய பொருளாதார பிரச்சனை என்று வந்தால் அப்போது தெரியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனியில் வளர்ந்து வரும் உதைபந்தாட்ட வீரரான இலங்கைத் தமிழர் ஜெரனுக்கு எதிராக நிறத் துவேசம்

ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரெலியாவில் பல ஈழத்தமிழர்கள் பல விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைக்கிறார்கள். துடுப்பாட்டத்தில் அகிலன் என்ற விளையாட்டுவீரர் 19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ணப்போட்டியில் அவுஸ்திரெலியா அணிக்காக விளையாடியிருக்கிறார். பொதுநலவாய நாடுகளின் போட்டியில் பிரசாந் செல்லத்துறை சாதனை படைத்திருக்கிறார். அவுஸ்திரெலியா துடுப்பாட்ட அணிக்கு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர் ஒருவர் சேர்க்கப்பட வாய்ப்பிருக்கிறது. இங்கு திறமைகளை ஊக்குவிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஏற்றுக்கொள்ள முடியாதவாறு செய்தி அமைந்துள்ளது. அதனை கவனிக்காமல் நிறபேதம் என்று ஆராட்சியெல்லோ நடக்கிறது. நிறபேதம் பார்த்திருந்தால் அந்தப் பிள்ளை ஒரு அணியின் வெற்றியாளனாக இருக்க முடியாது.

அவுஸ்திரெலியாவில் பல ஈழத்தமிழர்கள் பல விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைக்கிறார்கள். துடுப்பாட்டத்தில் அகிலன் என்ற விளையாட்டுவீரர் 19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ணப்போட்டியில் அவுஸ்திரெலியா அணிக்காக விளையாடியிருக்கிறார். பொதுநலவாய நாடுகளின் போட்டியில் பிரசாந் செல்லத்துறை சாதனை படைத்திருக்கிறார். அவுஸ்திரெலியா துடுப்பாட்ட அணிக்கு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர் ஒருவர் சேர்க்கப்பட வாய்ப்பிருக்கிறது. இங்கு திறமைகளை ஊக்குவிக்கிறார்கள்.

தற்போது எல்லாத்துறைகளிலும் வெளிநாட்டவர்கள் உள்வாங்கப்படுகிறார்கள். திறமைகள் எங்கும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆயிரத்தில் ஒன்று நிறபேதம் இருக்கிறது. அண்மையில் வெளிநாட்டவர்களுக்கான கல்வித்தகைமை பற்றிய சட்மாற்றத்தினால் பலரது கல்வித் தொடர்ச்சிக்கும் கல்விக்கு ஏற்ற தொழில் படிப்புக்கும் ஏதுவாக அமைகிறது. இதையும் நாம் புரிய வேணும்.

அவன் சுழியன், அவன் உந்த நிற பேத சேட்டைகளை சுழிச்சு உலககிண்ணபோட்டியில் விளையாட வாழ்த்துக்கள் அவன் ஒரு தமிழ் ஜேர்மன்காரன் என்று பெருமை படுவோம் .......

நிற பேதத்தால் டீம்மில் சேர்க்காமல் விடவில்லையே சேர்த்துதானே இருக்கிரார்கள்,

புத்தரின் ஞானக்கண் கருத்துக்கு ஒரு பச்சை.

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

அந்த இளைஞன் எதனைப் பற்றியும் கவலைப்படாது தான் இல்லாவிட்டால் அணிக்குத் தோல்விதான் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.எல்லோரும் அவரைத் தேடி வர வேண்டும்

தேவையில்லாமல் இப்பொழுது முறுகினால் நைசாக அணியை விட்டுக் கழட்டி விடுவார்கள்.நேரம் வரும் போது அதனைச் சொல்லலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.