Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு கிடைத்துள்ள முதல் அங்கீகாரம்! தென் சூடானில் அமையவுள்ள புதிய அரசாங்கம் வழங்கியுள்ளது:

Featured Replies

Transnational Government of Tamil Eelam Invited to Southern Sudan After Independence Vote

Sudan Peoples' Liberation Movement (SPLM) has invited Transnational Government of Tamil Eelam (TGTE) to visit Southern Sudan in the immediate aftermath of the vote for an independent state. TGTE is sending a delegation to participate in the celebrations and to discuss possibilities of assisting Southern Sudan in their development efforts through Tamil Diaspora expertise in selected fields. TGTE delegation will be received by the SPLM officials and will stay as guests of SPLM. They will also meet other foreign government leaders.

Sudan Peoples' Liberation Movement (SPLM) has invited Transnational Government of Tamil Eelam (TGTE) to visit Southern Sudan in the immediate aftermath of the vote for an independent state. TGTE is sending a delegation to participate in the celebrations and to discuss possibilities of assisting Southern Sudan in their development efforts through Tamil Diaspora expertise in selected fields. TGTE delegation will be received by the SPLM officials and will stay as guests of SPLM. They will also meet other foreign government leaders.

TGTE Prime Minister, Mr. Visuvanathan Rudrakumaran in his message stated that "The invitation received by us is considered recognition not only of the TGTE but also of the Eelam struggle. TGTE is calling on Eelam Tamils to celebrate the freedom of Southern Sudanese people. Eelam Tamils can clearly understand the joy of Southern Sudanese becoming free people and share their happiness."

The relationship with SPLM and TGTE is nothing new. SPLM sent its Secretary General for the United States, Mr. Domach Wal Ruach, to speak at TGTE's inaugural event held in Philadelphia in May 2009. On that occasion, he spoke of the similarities between the independence struggle of Tamil Eelam and that of Southern Sudan. He also spoke of the challenges facing freedom struggles and expressed their solidarity with Eelam Tamils.

SPLM has been leading the struggle for independence by the people of Southern Sudan from North Sudan. SPLM as the overwhelmingly popular group will form the government of independent Southern Sudan. Years of enormous suffering of the people of Southern Sudan will at last come to an end with the birth of a nation of their own. Around two million people have died during the struggle. Civilians were massacred, and people died of starvation and without medical help. While witnessing the birth of that new nation, Eelam Tamils can reflect on the years of suffering they have undergone in the name of independence and feel confident that Eelam too will be free like South Sudan.

President Obama's op-ed in New York Times on the day of the Referendum stated: "Millions of Sudanese are making their way to the polls to determine their destiny." TGTE is applauding President Obama's statement and calls upon the international community to give an opportunity for Eelam Tamils to determine their destiny the same way.

Eelam Tamils already spoke loud and clear during the Parliamentary elections in 1977, when they overwhelmingly voted for the Tamil Party that ran on the basis of the Vaddukkoddai Resolution which called for the creation of an independent state of Tamil Eelam. This peaceful expression of Eelam Tamils - long before the armed struggle began in Sri Lanka - clearly indicated the preferred position of the Tamils. Recently the Tamil Diaspora took part in referendums in various countries and reaffirmed their political will to establish an independent state in their homeland. It is also emphasized that given the genocide of Tamils seen in the final stages of the war in 2009, the Tamil claim for an independent state gains more justification as a remedy that ensures their very physical survival.

Both for the Sudanese regime and present Sri Lanka regime, China has been the influential international patron. Sudanese President Bashir has been indicted for genocide and the Sri Lankan President Rajapaksa is to be indicted for genocide at some point in time.

Prime Minister Mr. Rudrakumaran further said in his message "TGTE and the people of Tamil Eelam express their heartiest wishes to SPLM and to the people of Southern Sudan on their liberation. We salute you for your sacrifices to become free and admire your courage and determination. We wish you a very successful and prosperous future."

Transnational Government of Tamil Eelam (TGTE) is a democratically elected body of the Tamil diaspora from the island of Sri Lanka. TGTE held elections in 12 countries to elect Members of Parliament. The Parliament drafted and ratified its Constitution, elected a Prime Minister, a Speaker, and 10 member Cabinet.

TGTE <info@tgte-us.org>

நாடுகடந்த தமீழீழ அரசாங்கத்துக்கு உலக நாடுகளில் முதலாவது அங்கீகாரமாக புதிதாக அமையவுள்ள தென்சூடானிய அரசாங்கத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

சூடானுடன் தாம் இணைந்திருக்க விரும்பவில்லை என்பதை புதியதொரு தோ்தலொன்றின் மூலம் வெளிக்காட்டி, தென் சூடானிய மக்கள் தனியாகப் பிரிந்து செல்வதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர்.

அதற்கான போராட்டங்களை முன்னெடுத்து வந்த சூடானிய மக்கள் கிளர்ச்சி இயக்கத்துடன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் கடந்த காலங்களில் பலமான தொடர்புகளைப் பேணி வந்திருந்தனர்.

அதன் காரணமாக தெற்கு சூடான் சுதந்திரம் பெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவென நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் உத்தியோகபூர்வ முறையில் அழைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு இராஜதந்திர அந்தஸ்தும் வழங்கப்படவுள்ளது.

அதன் காரணமாக உலக நாடுகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்த முதலாவது நாடு என்ற பெருமையை தெற்கு சூடான் அரசாங்கம் பெற்றுக் கொள்ளவுள்ளது. அது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளில் ஒரு திருப்பு முனையாகவும், மைல் கல்லாகவும் அமையவுள்ளதாக அரசியல் அவதானிகள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Edited by நெருப்பு நீலமேகம்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஊக்கப்படுத்தும்செய்தி

நன்றி நெருப்பு

.

வரண்ட பாலைவனத்தில் பெய்த முதலாவது மழை.

நாடு கடந்த தமிழீழ அரசு இதை ஆராய்ந்து நாமும் ஒரு சர்வசன வாக்கெடுப்பை நடாத்தும் இலக்கை நோக்கி நகர முயல வேண்டும். முதல் கட்டமாக புலம் பெயர் நாடுகளில் இதை செய்வது பற்றி ஆராயலாம்.

தென் சூடான் மக்களுக்கு வாழ்த்துக்கள், நன்றிகள்.

சிறிலங்கா தென் சூடான் அரசை அங்கீகரிக்கப்போவதில்லை (கோசவாவை கூட இன்னும் அங்கீகரிக்கவில்லை). இன அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட வட சூடான், யுகொசிலேவியா நாடுகளுடன் இணைத்திருப்பது தான் சிங்களத்திற்கு அழகு.

  • கருத்துக்கள உறவுகள்

தென் சூடான்.. கொசவோ பிரதிநிதிகள் தமிழீழம் சார்ந்த தமிழ் மக்களின் நிகழ்வுகளில் கலந்து கொண்டு நல்ல புரிந்துணர்வை வளர்த்துக் கொண்டவர்கள்.

இவர்களுடனான அணுகுமுறையை ஒத்த அணுகுமுறை பலஸ்தீனம் தொடர்பிலும் நமக்கு வர வேண்டும். அண்மையில் இஸ்ரேலுக்கு சென்ற கோத்தபாய பலஸ்தீனர்களுக்கு தனிநாடு அவசியம் இல்லை என்று இஸ்ரேலைக் குசிப்படுத்த எக்காளத்தொனியில் பேசி இருந்தார். அதேவேளை பலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் யூதர்களோடும் நாடு கடந்த அரசு உறவுகளைப் பேணிக்கொள்ள வேண்டும். பலஸ்தீனத்தை ஆதரிப்பதால் தமிழீழம் இஸ்ரேலுக்கு எதிரானது அல்ல என்பதை சொல்ல இவை உதவும்.

மேலும் கிழக்குத் தீமோர் உட்பட பல ஒரே நோக்குள்ள தேசங்களை நாடு கடந்த அரசு நெருங்கி பேச வேண்டும். இராஜீய உறவுகளை வளர்த்துக் கொள்வதும் அவசியம். நேபாளத்தில் ஆட்சியில் உள்ள மாவோயிட்டுக்களோடும் பேச வேண்டும்.

இந்த செய்தி ஜேர்மனியில் கூடின யாழ்ப்பாணிகளுக்கு பிடிக்காதே :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுதலான செய்தி..வாழ்த்துக்கள் முதல்படி ஏறியுள்ள தமிழீழ அரசுக்கு.

இந்த செய்தி ஜேர்மனியில் கூடின யாழ்ப்பாணிகளுக்கு பிடிக்காதே :D

கோத்தபாயிஸ்ட்டுகளான நோர்வே சேரமான் பெருமானும் பாரிஸ் ஊடக வியாபாரி அகத்தியன் பால்குடியும் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

விரைவில் பல ஆய்வலம்பல்கள் வெளிவரவுள்ளதாக தகவல்.

ஏற்கனவே உருத்திர குமாரனை நம்பவேண்டாம் என்று தென் சூடான் விடுதலை முன்னணிக்கு மின்னஞ்சல் பரப்புரை வேலைகள் தொடங்கிவிட்டதாம்.

இதைவிட துரோகங்களின் கருவறுப்பு என்ற பெயரில் கறுப்பு என்ற மலம் துடைக்க கூட பயன்படாத ஒரு இழவு கடந்த சில மாதங்களாக ஐரோப்பா மற்றும் மலேசியாவில் இருந்து வந்தது.இப்போ அது கடந்த இரண்டு மாதமா கறுப்பு கனடா எண்டு பெயரிட்டு வர்ரதா கேள்வி.

இன்டைக்கு கனடாவில் விடுதலைப்புலிகள் ஒருங்கிணைகிறதா எல்லாஊடகங்களிலும் செய்தி வந்திருக்கிறது..

கூட்டிக் கழிச்சு பார்த்திங்கள் எண்டால் இவர்களை இயக்குவது யார் எண்டது புரியும்

நல்ல செய்தி.

இவ்வளவு காலமும் யார் அல்லது எது இப்படியான நிகழ்வுகளுக்கு தடையாக இருந்தது எனவும் யோசிக்க தோன்றுது

  • தொடங்கியவர்
flag_new.jpg
  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி ஜேர்மனியில் கூடின யாழ்ப்பாணிகளுக்கு பிடிக்காதே :D

ஒரு சிறு சந்தோசமான செய்தியைக்கூட ஒரு நிமிடம் அனுபவிப்பது இங்கு பலருக்கு பிடிப்பதில்லை :(

ஏற்கனவே உருத்திர குமாரனை நம்பவேண்டாம் என்று தென் சூடான் விடுதலை முன்னணிக்கு மின்னஞ்சல் பரப்புரை வேலைகள் தொடங்கிவிட்டதாம்.

அப்படி ஒன்றை அவர்கள் செய்தால் ஆப்பிழுத்த குரங்காய் அவர்களே அதில் மாட்டிக்கொள்வர். :(

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி.

இவ்வளவு காலமும் யார் அல்லது எது இப்படியான நிகழ்வுகளுக்கு தடையாக இருந்தது எனவும் யோசிக்க தோன்றுது

இது ஒன்றும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை மகிந்தவிற்காக "சூரியப் பொங்கல்" என்று மாற்றிய டக்கிளஸ்தேவானந்தாவோ.. வரதராஜப்பெருமாளோ.. ஆனந்த சங்கரியோ.. சித்தார்த்தனோ.. சம்பந்தனோ.. எடுத்த நிலைப்பாடுகளால் கிடைக்கப் பெறவில்லை.

ஆயிரம் ஆயிரம் மாவீரர்கள் உயிர்கொடுத்து உயிர்ப்பித்த தமிழ் தேசிய.. தமிழீழக் கொள்கையை போராட்ட வலியை சூடானியர்களுக்கும் உணர்த்திய தேசிய தலைவரின் கடந்த கால செயற்பாடுகளுக்கு கிடைத்த வெற்றியே இது. இது ஒரு ஆரம்பம் மட்டுமே. இன்னும் செய்ய எவ்வளவோ இருக்குது. அதனை நிச்சயம் தேசிய தலைவரின் வழி வந்தவர்கள் செய்வார்கள்... நீங்கள் அங்கும் குறுக்க நிற்காமல்.. அவர்களுக்கு ஒத்தாசையாக இல்லாவிட்டாலும் உபத்திரம் இன்றி இருந்தாலே போதும். ஆனால் அப்போதும் உங்களைப் போன்றவர்கள் சிந்தனைகளை திருத்திக் கொள்ளமாட்டீர்கள்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

எமக்கும் இப்படி ஒரு தீர்வு தேவை

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி.

இவ்வளவு காலமும் யார் அல்லது எது இப்படியான நிகழ்வுகளுக்கு தடையாக இருந்தது எனவும் யோசிக்க தோன்றுது

மனித வடிவில் ஒரு மிருகம் இது.

கஞ்சா அடித்துப்போட்டு இங்கு வருகிறது என்று நினைக்கத்தோன்றுகிறது

ஒவ்வொரு உயிராக கொடுத்து கட்டிய விடுதலைத்தீயை அணைப்பதற்கென்றே அலைகிறது :(

  • கருத்துக்கள உறவுகள்

<_< குகன்,

அவர் தனக்கு போடப்படும் பிச்சைக்கு வேலை செய்கிறார். நீங்கள் கோபப்பட வேண்டாம். அவரின் வேலை அது. நாய் வேஷம் போட்டால் குலைக்கத்தான் வேன்டும், கனைக்க முடியாது. பாவம், இங்கு யாருமே அவரைக் கணக்கிலெடுப்பதில்லை, தனது எழுத்தையும் யாரும் வாசிக்க மாட்டர்களா என்ற அங்கலாய்ப்பில் திரிகிறார்...அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு கிடைத்துள்ள முதல் அங்கீகாரம்! தென் சூடானில் அமையவுள்ள புதிய அரசாங்கம் வழங்கியுள்ளது: இராஜதந்திர தொடர்புகளின் வெற்றி

* Tuesday, January 18, 2011, 16:42

நாடுகடந்த தமீழீழ அரசாங்கத்துக்கு உலக நாடுகளில் முதலாவது அங்கீகாரமாக புதிதாக அமையவுள்ள தென்சூடானிய அரசாங்கத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. சூடானுடன் தாம் இணைந்திருக்க விரும்பவில்லை என்பதை புதியதொரு தோ்தலொன்றின் மூலம் வெளிக்காட்டி, தென் சூடானிய மக்கள் தனியாகப் பிரிந்து செல்வதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர்.

அதற்கான போராட்டங்களை முன்னெடுத்து வந்த சூடானிய மக்கள் கிளர்ச்சி இயக்கத்துடன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் கடந்த காலங்களில் பலமான தொடர்புகளைப் பேணி வந்திருந்தனர்.

அதன் காரணமாக தெற்கு சூடான் சுதந்திரம் பெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவென நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் உத்தியோகபூர்வ முறையில் அழைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு இராஜதந்திர அந்தஸ்தும் வழங்கப்படவுள்ளது.

அதன் காரணமாக உலக நாடுகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்த முதலாவது நாடு என்ற பெருமையை தெற்கு சூடான் அரசாங்கம் பெற்றுக் கொள்ளவுள்ளது. அது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளில் ஒரு திருப்பு முனையாகவும், மைல் கல்லாகவும் அமையவுள்ளதாக அரசியல் அவதானிகள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

tamilthai.com

  • தொடங்கியவர்

பிரதம அமைச்சரின் அலுவலகம்

ஊடக அறிக்கை ஜனவரி 18. 2011

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை தென் சுடான் தமது விடுதலை நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு அழைத்துள்ளது!

தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு முடிவடைந்தவுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை தென்சுடானுக்கு வருமாறு சுடான் மக்கள் விடுதலை இயக்கம் (SPLM) அழைப்பு விடுத்துள்ளது. கொண்டாட்டங்களில் பங்குகொள்ளவும் பொருத்தமான துறைகளில் தென்சுடானின் மேம்பாட்டுக்குத் தமிழர் தரப்பு வல்லுநர்களின் உதவி வழங்கல் பற்றி ஆராய்வதற்காகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரதிநிதிகள் குழுவொன்றை அனுப்புகிறது. சுடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் விருந்தினர்களாக வருகைதரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் குழுவினை சுடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் உயரதிகாரிகள் வரவேற்பார்கள். நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் ஏனைய நாடுகளின் தலைவர்களையும் அங்கு சந்திக்கவுள்ளார்கள்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு விசுவநாதன் ருத்திரகுமாரன் அவர்கள் இது பற்றி வெளியிட்ட செய்தியில் "நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அங்கு அழைக்கப்பட்டிருப்பது இந்த அரசாங்கத்துக்கான அங்கீகாரம் மட்டுமன்றி ஈழ விடுதலைப் போராட்டத்துக்கான அங்கீகாரமும் ஆகும். தென்சுடானியரின் விடுதலையைக் கொண்டாடுமாறு ஈழத்தமிழ் மக்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டிக்கொள்கிறது. விடுதலை பெற்ற தென்சுடானியரின் மகிழ்ச்சியை ஈழத்தமிழ் மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்வதுடன் அந்த மகிழ்வில் இணைந்தும் கொள்கிறார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

சுடான் மக்கள் விடுதலை இயக்கத்துக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்;குமான உறவு புதியதல்ல. மே 2009ல் பிலடெல்பியா நகரத்தில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றுவதற்காக ஐக்கிய அமெரிக்காவிற்கான தமது செயலாளர் நாயகம் திரு டோமாக் வால் றுஆச் அவர்களை சுடான் மக்கள் விடுதலை இயக்கம் அனுப்பி வைத்திருந்தது. தென்சுடானின் விடுதலைப் போராட்டத்துக்கும் தமிழீழ விடுதலைப்போராட்டத்துக்கும் உள்ள ஒற்றுமைகள் பற்றி அவர் பேசினார். மேலும் விடுதலைப்போராட்டங்கள் சந்திக்கும் சவால்கள் பற்றியும் ஈழத்தமிழ் மக்களுடனான தமது திடவொற்றுமையுணர்வினைக் குறிப்பிட்டும் அவர் உரையாற்றினார்.

வடக்கு சுடானிலிருந்து தெற்கு சுடானிய மக்கள் விடுதலை பெறுவதற்கான போராட்டத்தை சுடான் மக்கள் விடுதலை இயக்கம் முன்னின்று நடத்தி வந்துள்ளது. மக்களின் பேராதரவைப் பெற்ற அமைப்பான சுடான் மக்கள் விடுதலை இயக்கம் சுதந்திர தென்சுடான் அரசாங்கத்தினை அமைக்கவுள்ளது. அவர்கட்கென ஒரு தனிநாடு உதயமாவதன் மூலம் தென்சுடானிய மக்கள் நீண்டகாலமாக அனுபவித்த பேரளவிலான துன்பங்கள் தொலைந்து போகும். அவர்களது போராட்டத்தின்போது கிட்டத்தட்ட இருபது இலட்சம் மக்கள் மடிந்துள்ளார்கள். பொதுமக்கள் மருத்துவ உதவியின்றியும் பட்டினியாலும் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டும்; இறந்து போனார்கள். இவர்கட்கெனப் புதிய நாடொன்று பிறப்பதைக் காணும் இவ்வேளையில் ஈழத்தமிழர்கள் தாமும் ஆண்டுக்கணக்காக விடுதலையின் பெயரால் அனுபவித்து வரும் துயரங்களை நினைவுகூர்வதுடன் தென்சுடான் போலவே தமிழீழமும் விரைவில் விடுதலை பெறுமென நம்பிக்கை கொள்கிறார்கள்.

வாக்கெடுப்பு ஆரம்பித்த தினத்தன்று அமெரிக்கா அரசதலைவர் ஒபாமா அவர்கள் நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையில் "இலட்சக்கணக்கான சுடானிய மக்கள் தமது விதியைத் தீர்மானிக்கும் வாக்கெடுப்புக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார். அரசதலைவர் ஒபாமா அவர்களின் இச்செய்தியை வரவேற்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈழத்தமிழர்களும் தமது விதியைத் தாமே தீர்மானித்துக் கொள்ளும் வாய்ப்பினைச் சர்வதேச சமூகம் அதேவகையில் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது.

1977ல் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கமைய இறைமையுள்ள தமிழீழத் தனியரசினை அமைப்போம் என்று வாக்குக்கேட்ட கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மையாக வாக்களித்ததன் மூலம் ஈழத்தமிழர்கள் மிகத்தெளிவாகத் தமது விருப்பை ஏற்கெனவே உரத்துத் தெரிவித்துவிட்டார்கள். ஆயுதப்போராட்டம் சிறீலங்காவில் ஆரம்பமாவதற்கு நீண்டகாலத்துக்கு முன்னரே ஈழத்தமிழர்கள்; தம் நிலைப்பாட்டினை இவ்வாறு அமைதியாகவே வெளிப்படுத்தினார்கள். புலம்பெயர்ந்த மக்கள் அண்மையில் பல்வேறு நாடுகளிலும் நடத்திய வாக்கெடுப்பின் மூலம் தமது தாயகத்தில் இறைமையுள்ள தனிநாடு ஒன்றை அமைப்பதற்கான தமது அரசியல் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். 2009இல் இறுதிப்போரின் போது இடம்பெற்ற தமிழினப் படுகொலை தமிழருக்கெனத் தனியான நாடு உருவாகுவது மட்டுமே அவர்கள் உயிருடன் வாழ்வதை உறுதிசெய்யும் ஒரே தீர்வாகுமென்பதைத் தெளிவாக்கி தமிழரின் தனிநாட்டுக் கோரிக்கையினை மேலும் நியாயப் படுத்துகிறது.

அடக்குமுறை அரசுகளான சுடானின் ஆட்சியாளருக்கும் இன்றைய சிறீலங்காவின் ஆட்சியாளருக்கும் சீனாவே செல்வாக்கு மிக்க சர்வதேசப் பாதுகாவலராகச் செயற்பட்டு வருகிறது. சுடானின் அரசதலைவர் பஷீர் இனப்படுகொலைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அதே வேளை சிறீலங்கா அரசதலைவர் ராஜபக்ச இனப்படுகொலைக் குற்றவாளியாக சில காலத்தில் அறிவிக்கப்படவுள்ளார்.

திரு விசுவநாதன் ருத்திரகுமாரன் அவர்கள் தமது செய்தியில் "விடுதலை பெற்ற தென்சுடானிய மக்களுக்கும் அவர்களது சுடான் மக்கள் விடுதலை இயக்கத்துக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தமிழீழ மக்களும் தமது இதயம்நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். விடுதலை பெறவென நீங்கள் ஆற்றிய தியாகங்களையெண்ணி நாம் சிரம்தாழ்த்துவதுடன் உங்களது துணிவையும் திடசங்கற்பத்தையும் நாம் பாராட்டுகிறோம். உங்களுக்கு மிகவும் வெற்றிகரமானதும் வளமிக்கதுமான எதிர்காலம் அமைய வேண்டுமென வாழ்த்துகிறோம்" என்று மேலும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Edited by நெருப்பு நீலமேகம்

தென் சூடானின் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ள உள்ள உலகம், சோமாலிலான்ட் (http://www.somalilandgov.com/) என்ற தன்னைத்தானே நாடாக அங்கீகரித்த நாடு தன்னை ஒரு முழு நாடாக உலகம் அங்கீகரிக்கும் என எதிர்பார்ப்பு வெளியுட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டு சோமாலிலான்ட், சோமாலி நாட்டில் இருந்து சண்டையின் பின் பிரிந்த நாடாகும் (http://en.wikipedia.org/wiki/Somaliland)

Somaliland Minister Says to Push for Recognition After Sudan Referendum

Somaliland plans to step up efforts for international recognition on expectations that a referendum on independence in Southern Sudan will aid its campaign for statehood, Foreign Minister Mohamed A Omar said.

Somaliland declared independence from Somalia in 1991 when a coup sparked civil war. It has never been recognized abroad because the Organization of African Unity ruled in 1964 that post-colonial borders in Africa were inviolable. The break-up of Sudan, Africa’s largest country by area, would be a rare exception to that rule.

http://www.bloomberg.com/news/2011-01-18/somaliland-to-push-for-recognition-after-sudan-referendum.html

இறுதி முடிவு அடுத்த மாதம் அளவில் அறிவிக்கப்படும்

பதிவு செய்த வாக்காளர்களில் 96 வீதமானோர் வாக்களித்துள்ளனர்

Figures gathered from state and county referendum officials showed 2,224,857 votes for independence had already been returned.

That comfortably exceeded the simple majority of 1.89 million votes needed on the 96 per cent turnout of the 3,932,588 registered voters.

A formal result will be announced next month.

அவுஸ்திரேலியாவில் வாக்களித்த 10000 அளவான மக்களில் 98 வீதமானோர் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் அதிகூடிய புலம்பெயர் தென் சூடான் மக்கள் (ஆபிரிக்க கண்டத்தை தவிர்ந்த) உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

In preliminary results from Australia's polling stations for the independence referendum, more than 98 per cent voted in favour of the north and south splitting.

Nearly 10,000 votes were counted in Australia - the highest of any country outside the African continent.

http://www.abc.net.au/news/stories/2011/01/20/3117320.htm?section=world

  • கருத்துக்கள உறவுகள்

தை பிறந்தால் வழிபிறக்கும் என்பார்கள் அதற்கேற்ப இது ஒரு

நல்ல செய்தி!

தென் சூடான்.. கொசவோ பிரதிநிதிகள் தமிழீழம் சார்ந்த தமிழ் மக்களின் நிகழ்வுகளில் கலந்து கொண்டு நல்ல புரிந்துணர்வை வளர்த்துக் கொண்டவர்கள்.

இவர்களுடனான அணுகுமுறையை ஒத்த அணுகுமுறை பலஸ்தீனம் தொடர்பிலும் நமக்கு வர வேண்டும். அண்மையில் இஸ்ரேலுக்கு சென்ற கோத்தபாய பலஸ்தீனர்களுக்கு தனிநாடு அவசியம் இல்லை என்று இஸ்ரேலைக் குசிப்படுத்த எக்காளத்தொனியில் பேசி இருந்தார். அதேவேளை பலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் யூதர்களோடும் நாடு கடந்த அரசு உறவுகளைப் பேணிக்கொள்ள வேண்டும். பலஸ்தீனத்தை ஆதரிப்பதால் தமிழீழம் இஸ்ரேலுக்கு எதிரானது அல்ல என்பதை சொல்ல இவை உதவும்.

மேலும் கிழக்குத் தீமோர் உட்பட பல ஒரே நோக்குள்ள தேசங்களை நாடு கடந்த அரசு நெருங்கி பேச வேண்டும். இராஜீய உறவுகளை வளர்த்துக் கொள்வதும் அவசியம். நேபாளத்தில் ஆட்சியில் உள்ள மாவோயிட்டுக்களோடும் பேச வேண்டும்.

அது மட்டுமல்ல சமாதான காலத்தில் இப்போதைய சூடான் விடுதலை இயக்க தலைவர் விடுதலைப்புலிகளை நோர்வேயில் வைத்து சந்தித்துள்ளார். SPLM இயக்க செயலாளர் நாயகத்தினை விடுதலைப்புலிகளின் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவன் அத்துடன் றெஜி ஆகியோர்களை நோர்வேயில் வைத்து சந்தித்தனர். தென் சூடானிற்கு விடுதலைப்புலிகள் சார்பாக இவர்களை வரவளைத்திருந்தார்கள்.

உண்மையில் சூடான் விடுதலை இயக்க தலைவர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரையும் , இயக்கத்தின் ஒழுக்க விதிகள், தியாகங்கள் ஆகியவற்றை மதித்து இருந்தார்கள்.

ஆனால் இந்த நம்பிக்கைகளையும் மதிப்பினையும் இப்போது இருக்கும் பொறுப்பாளர்கள் தகர்த்து விடாது செயற்படவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி.. மகிழ்ச்சி..! :D

உலகம் தட்டையானது - சூடான் (தெற்கு) சுதந்திரமாகின்றது!

http://www.ponguthamil.com/thedal/thedalcontent.asp?sectionid=8&contentid={7EA59E1E-99CD-49FC-8C4A-7C2BBD480E17}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.