Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நித்திரை முழித்திருப்பதற்கு என்னென்ன செய்யலாம்?

Featured Replies

வணக்கம் உறவுகளே, எனக்கு பரீட்சைகள் வருகிறது. வீட்டில் குழந்தைகள் இருப்பதால் பகலில் படிப்பது மிகவும் கடினம். இரவில் விழித்திருந்துதான் படிக்க வேண்டும். வேலையிலிருந்து லீவு எடுத்துப் படிக்கவுள்ளேன். இரவு முழுவதும் நித்திரை முழித்திருந்து படிப்பதற்கு என்னென்ன செய்யலாம் எனக் கூறுவீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

பகலில் இயலுமாயின் நித்திரை அல்லது (nap)குட்டித்தூக்கம் போடுங்கள்.இரவில் கோப்பி அல்லது கவீன்(caffene) உள்ள பானம் ஓரிரு தடவை குடியுங்கள்.

வணக்கம் உறவுகளே, எனக்கு பரீட்சைகள் வருகிறது. வீட்டில் குழந்தைகள் இருப்பதால் பகலில் படிப்பது மிகவும் கடினம். இரவில் விழித்திருந்துதான் படிக்க வேண்டும். வேலையிலிருந்து லீவு எடுத்துப் படிக்கவுள்ளேன். இரவு முழுவதும் நித்திரை முழித்திருந்து படிப்பதற்கு என்னென்ன செய்யலாம் எனக் கூறுவீர்களா?

குளுக்கோஸ் கலந்த [lucozade] பானங்கள் பருகுவதால் விழித்திருந்து படிக்கும் போது கொஞ்சமேனும் உடலுக்கு தென்பைக் கொடுக்கும், redbull பானம் உடலுக்குத் தென்பைக் கொடுத்தாலும் இதயத்திற்கு கெடுதலை விளைவிக்கும் என்று எங்கோ வாசித்த ஞாபகம் அதனால் முடிந்தளவு தவிர்கவும். அதிகாலை 2 -4 மணிவரை கண்ணைக் கட்டும். அந்த நேரத்துக்கு நல்ல சூடான தேநீரோ/ கோபியோ பருகினால் நித்திரையை கொஞ்சம் குறைக்கலாம். [பாலோ, கோர்லிக்சோ குடிச்சீங்க என்று வையுங்கோ, நல்ல குறட்டை விட்டு தூங்க வேண்டியது தான்.]

வாசித்து விளங்க வேண்டிய பகுதிகளை அதிகாலையில் செய்யலாம். அதே நேரம் தூக்கம் கண்ணைக் கட்டும் போது வாசிப்பதை விட கேள்விகளுக்குப் பதில்களை எழுதிப் பார்க்கலாம். 2 மணித்தியாலத்திற்கு 15 நிமிடங்கள் என்றாலும் கண்ணுகக்கு ஓய்வு கொடுப்பது நல்லதென நினைக்கிறேன்.

ஒரே பாடத்தை தொடர்ந்து படிப்பதால் bore அடித்துவிட வாய்ப்பிருக்கும், அதனால் ஒவ்வொரு நாளும் என்ன பாடம் படிக்க வேண்டும் என்று முதலே ஒரு அட்டவணை போட்டீர்கள் என்றால் அதன் படி செய்வதற்கு கொஞ்சம் சுலபமாக இருக்கும் என்பது எனது கருத்து.

இரவு முழுதும் விழித்திருப்பதால், நீங்கள் கட்டாயம் பகல் வேளைகளில் நித்திரை கொன்று தான் ஆகவேண்டும். இல்லாவிட்டால் உடல் களைத்து சோர்ந்தது விடும்.

எதையும் ஆரம்பிக்கும் முன்பு நல்லா ப்ளான் பண்ணோணும்! ப்ளான் பண்ணாமல் பண்ணப்படாது. ஓகே?? ^_^:D

ஒழுங்கா படித்து பரீட்சையில் சித்திபெற வாழ்த்துக்கள்!! :)

இரவு முழுவதும் தூங்காமல் இருந்து படிப்பது உங்களுக்கு ஆரோக்கியமானது அல்ல. அது உங்களையும் உங்கள் மூளையையும் சோர்வடையவைத்துவிடும். குறைந்தது 4 மணித்தியாளங்களாவது உறங்கிவிட்டு அதிகாலையில் எழுந்து படித்தால் இலகுவாக மனதில் பதியும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதனுள் பாதங்களை வைத்துக்கொண்டு சிலர் படிப்பதாக கேள்விப்பட்டுள்ளேன் ( நான் செய்து பார்தது இல்லை :D )

மற்றும் படி வழமையாக நாம் அருந்தும் சூடான பானங்கள் உங்களை விழிப்புடன் வைத்திருக்கும் :)

நீங்கள் பரீட்சையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தமிழச்சி...!

1. ஒரு காண்டா மணியை வாங்கி அறையில் மாட்டிவிட்டபின் அதன் முனையை கழுத்தில் கட்டி விடுங்கள், நித்தா வந்து தூங்கி விழும் போது மணி இழுக்கபட்டு 'டாங்' என்று எழும் சத்தத்தில் அடுத்த ஒரு கிழமைக்கு நித்தா வராது (கழுத்தில் கழுத்தில் கயிறு கனக்க இழுபட்டால் பிறகு எழும்ப தேவை வராது என்பது முக்கிய விடயம்)

2. காலில எலிப் பொறியை மாட்டி வைத்தால் பொறியில் கால் அல்லது விரல் மாட்டி விடும் என்ற பயத்தில் நித்திரை வராது

3. அரை மணித்தியாலத்துக்கு ஒரு முறை "நாக்க முத்து" போன்ற பாடல்களுக்கு இசையமைத்த விஜய் ஆண்டனி அல்லது தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோரின் குத்துப் பாட்டு கேளுங்கள்..நித்தா தேவி உங்கள் வீட்டுப் பக்கமே தலை வைத்து படுக்காது

4. உடன் பிறப்புகளுக்கு கருணாநிதி எழுதும் கடிதங்களை இணையத்தில் ஒரு மணிக்கு ஒரு முறை வாசித்தால் வரும் கோபத்தில் நித்திரை கொள்ளாமல் பல்லை நறுமிக் கொண்டு இருக்கலாம் (பல்லு போனால் என்னைக் கோபிக்க கூடாது)

இன்னும் ஐடியா தேவை என்றால் கூச்ச நாச்ச படாமல் கேளுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இரவு முழுவதும் தூங்காமல் இருந்து படிப்பது உங்களுக்கு ஆரோக்கியமானது அல்ல. அது உங்களையும் உங்கள் மூளையையும் சோர்வடையவைத்துவிடும். குறைந்தது 4 மணித்தியாளங்களாவது உறங்கிவிட்டு அதிகாலையில் எழுந்து படித்தால் இலகுவாக மனதில் பதியும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதனுள் பாதங்களை வைத்துக்கொண்டு சிலர் படிப்பதாக கேள்விப்பட்டுள்ளேன் ( நான் செய்து பார்தது இல்லை :D )மற்றும் படி வழமையாக நாம் அருந்தும் சூடான பானங்கள் உங்களை விழிப்புடன் வைத்திருக்கும் :)

நீங்கள் பரீட்சையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தமிழச்சி...!

நானும் இப்படித்தான்எழுத நினைத்தேன். நல்லதொரு விடயத்துக்காக கேட்கும்போது ஆரம்பித்திலேயே அபசகுனமாக எழுதக்கூடாது என்று விட்டுவிட்டேன். உண்மை இதுதான். எனக்கு இப்படி இரவில் நித்திரை முழித்து படிப்பதில் உடன்பாடில்லை. அது இரண்டையும் இழப்பதற்கு வழிவகுக்கும்(இரவையும் பகலையும்).

நானும் ஒரு நண்பனும்சேர்ந்து படித்தோம். நான் தூக்கம் வரும்போது படுத்துவிடுவேன். அவன் ஒரு வாளியில் தண்ணிவைத்து முகம்கழுவியபடியும் இன்னொரு வாழித்தண்ணிக்குள் கால்களை வைத்தபடியும் படித்தான். முடிவு உயர்தரத்தில் நான் பாஸ். அவன்4 பாடமும் 0. :(

தற்போதும் மக்களை 11 மணிக்கு பின்னர் நித்திரை முழித்து படிப்பதற்கு அனுமதியில்லை. அவசரம் என்றால் காலையில் நேரத்துக்கு எழுந்து படிக்கலாம்இது எனது வீட்டு சட்டம்

  • கருத்துக்கள உறவுகள்

பரீட்சையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தமிழச்சி

எப்போதும் நமது சிந்தனை புதிதாக, புத்துணர்வாக உள்ள கணத்திலே பரிட்சைக்காக படிக்க வேண்டும்.

மூளை விடயங்களை உள்வாங்கி தானியங்கியாய் தனக்குள் சேமித்துக்கொள்ளும்.

உங்களை நீங்களே அறிந்து செயற்படுங்கள் தமிழச்சி. வெற்றி நிச்சயம்.

வாழ்த்துக்கள்.

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

பகலில் நித்திரை செய்யனும் அல்லது குறைந்தது ஒரு 3 மணித்தியாலங்களாவது நித்திரை கொண்டுவிட்டு படிப்பது நல்லது. நித்திரை கொள்ளாது விட்டால் படித்தவை பல ஞாபகத்துக்கு வரவும் கஸ்டப்படும்.. பகல் எல்லாம் ஒரே அசதியாகவும் இருக்கும். பரீட்சையை சரிவர செய்ய முடியாமல் போகலாம். எனினும் இது அவரவரின் பழக்கங்களுக்கு ஏற்ப மாறுபடலாம். :)

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே, எனக்கு பரீட்சைகள் வருகிறது. வீட்டில் குழந்தைகள் இருப்பதால் பகலில் படிப்பது மிகவும் கடினம். இரவில் விழித்திருந்துதான் படிக்க வேண்டும். வேலையிலிருந்து லீவு எடுத்துப் படிக்கவுள்ளேன். இரவு முழுவதும் நித்திரை முழித்திருந்து படிப்பதற்கு என்னென்ன செய்யலாம் எனக் கூறுவீர்களா?

பகலில் வீட்டில் இருந்து படிப்பது கடினம் என்றால், நூல் நிலையத்துக்கு சென்று படிக்கலாமே... அங்கை தானே மூலைக்கு மூலை இருக்கிறது. கூடுதலான நூல் நிலையங்களில் quite room இருக்கும். அதை பதிவு செய்து அங்கு இருந்து படிக்கலாம்.

இரவு முழித்து இருந்து தான் படிக்க வேண்டும் என்றால், என்ன பாடம் படிக்கிறிங்கள் எண்டிறதை பொறுத்து. எல்லா பாடமும் அப்பிடி படிக்க முடியாது...கணிதம்,software போன்ற பயிற்ச்சி செய்ய வேண்டிய பாடங்கள் என்றால் இரவில் முழித்து பயிற்ச்சி செய்யலாம். விளங்கி படிக்க வேண்டிய பாடங்களுக்கு கண் முழிச்சு இருந்தால் மட்டும் போதாது... மனமும் முழிச்சு இருக்க வேணும். மனம் முழிச்சு இருந்தால் தான் படிக்கிறது படியும் இல்லையெண்டால் விசுகு அண்ணா சொன்னது போல கடமைக்கு படிக்கிற மாதிரி தான் முடியும். காலுக்கு தண்ணி வைச்சு படிக்கிறது, கழுத்தில காண்டா மணி கட்டி படிக்கிறதெல்லாம் கண்ணை மட்டும் தான் முழிச்சிருக்க வைக்கும்... மனதை அப்பிடி வைத்திருக்க முடியாது.

இல்லாவிடில் இரவில் வெளிய போய் டிம் ஹோர்ட்டன்ஸ் (ஸ்டார் buck / செகண்ட் கப் கூடுதலான அமைதியாக இருக்கும் - wifi வசதியும் இருக்கும்) போன்ற இடங்களில் இருந்து படிக்கலாம் (அதுக்கு உங்கட city அவ்வளவு பாதுகாப்பு இல்லை). அப்பிடி போய் படிக்கும் போது வெளியால பராக்கு பார்த்து கொண்டு படிக்ககலாம் (நான் அப்பிடி போன நேரத்தில படிக்கிறதை விட பராக்கு பார்த்த நேரம் தான் அதிகம் :rolleyes:).

நாங்கள் படிக்கும் போது தம் அடிக்கிறதுக்கு காரணம் சொல்லுறது முழிச்சு இருக்கலாம் எண்டு :wub: பி.கு. 1 - 2 தம் அடிச்ச விழிப்பா இருக்கலாம்...கூட அடிச்சால் mind சோர்ந்து விடும்.

பரீட்சையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் :)

Edited by Sabesh

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள் மற்றும் கருத்துக்கள் கூறிய உறவுகள் அனைவருக்கும் முதலில் எனது நன்றிகள்.

எனக்கு தேர்வுகள் நடப்பதற்கு இன்னும் சில கிழமைகள் இருக்கிறது. தேர்வுகளுக்கு முந்தைய நாட்கள் நான் விழித்திருப்பதில்லை. நன்றாகத் தூங்கி, சோர்வின்றியே தேர்வெழுதச் செல்வது வழமை. தேர்வு நாட்களைப் பற்றிய கவலை இல்லை.

இத்தேர்வுகள் எழுதுவதற்கு நான் திடீரெனத்தான் முவெடுத்தேன். இத்தேர்வுகளுக்குப் படிப்பதற்காக வேலையிலிருந்து லீவெடுத்து அந்த லீவு நாட்களுக்குள் இரவில் படிப்பதற்குத்தான் வழிகளைத் தேடுகிறேன். வேலையிலும் அதிக நாட்கள் லீவு இப்போது எடுக்க முடியாது. என்னோடு வேலை செய்பவர் ஏற்கனவே லீவிற்குப் பதிந்து விட்டதனால் அதிக நாட்கள் லீவு தரமாட்டார்கள். அதனால் குறுகிய காலமே படிப்பதற்கு உள்ளது. இதுவரை காலமும் எனக்கு இரவில் படிக்கவேண்டிய தேவை ஏற்படவில்லை. நிதானமாகப் பகலிலேயே படிக்கக்கூடியதாக இருந்தது. வழமையாக நான் தேர்வுகளுக்குப் பல நாட்களுக்கு முன்பே படித்து முடித்துவிடுவேன். ஆதிகமாக லைப்ரறிக்குச் சென்றுதான் படிப்பது. ஆனால், இப்போது இந்தக் குளிரில் வெளியில் போய்ப் படிப்பதைவிட வீட்டிற்குள்ளிருந்து படிக்க விரும்புகிறேன். வீட்டிலிருந்து படித்தால் இடையிடையே ஓய்வெடுத்து, நிதானமாகப் படிக்க முடியும். அதனால் அதிகமாக மூளையில் ஏறச் சந்தர்ப்பம் உண்டு. அதோடு, இப்போது நான் தினமும் காலை ஏழு மணிக்கு வீட்டை விட்டு வெளியேறி இரவு பத்து மணிக்குத்தான் வீட்டிற்கு வருவேன். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்தான் வெளிவேலைகள் ஏதும் இல்லாதிருந்தால் வீட்டிலிருப்பது. அதனால் இந்த லீவிற்குள் படித்து முடிக்க வேண்டியுள்ளதாலேயே இத்தனை ஆர்ப்பாட்டம்.

எங்கள் வீட்டில் பகலிலும் வீட்டில் ஆட்கள் இருப்பார்கள். அதோடு ரீவி பார்ப்பது, பாட்டுக் கேட்பது என மூட் மாறும் சந்தர்ப்பம் உள்ளது. இரவில் என்றால் மிகவும் நிசப்தமாக இருக்கும். மற்றவர்கள் நித்திரை என்ற காரணத்தினாலேயே இவற்றைப் பாவிக்கமுடியாது. அதோடு, பகலில் நேரம் விரைவாகச் சென்றுவிடும். எதாவது ஒன்றைச் செய்து கொண்டே இருப்போம். இவற்றையெல்லாம் யோசித்தே இரவில் படிப்பதாக முடிவெடுத்தேன்.

குட்டி, தப்பிலி, உங்களின் கருத்துக்கள் எனக்கு உதவியாக இருக்கிறது. ஏற்கனவே ரெட்புல் வாங்கி வைத்து விட்டேன். வேறு ஏதாவது வழிகள் உள்ளதா என அறியவே இங்கு பதிந்தேன். தமிழினியின் பாதங்களை நீரில் வைத்தபடிப் படிப்பதைப் பற்றியும் அறிந்திருக்கிறேன். நான் முயற்சி செய்து பார்த்தால் அது உதவுகிறதா எனக் கூறுகிறேன்.

சபேஸ், ரிம் கோட்டன்சுக்கு உண்மையிலேயே படிக்கும் நோக்கத்துடனா போகிறனீர்கள்??? உண்மையைக் கூறுங்கள்…..

நிழலி, உங்களை நான் பிறகு பார்த்துக் கொள்கிறேன். வாழ்வதற்கு வழிகேட்டால் முடிப்பதற்கா வழி சொல்கிறீர்கள்??? தேர்வுகள் முடியட்டும்….

  • கருத்துக்கள உறவுகள்

மனிதனுக்கு இன்ன நேரம், இன்ன செய்ய வேண்டும் என்று உடம்புக்குள் ஒரு மணிக்கூடு உள்ளது.

இரவு பதினொரு மணிக்கு மேல்... உடம்பிற்கு நித்திரை தேவை.

நீங்கள் வில்லங்கமாக முழித்திருந்து படித்தாலும்.... மனது அதனை கிரகித்துக் கொள்ள சிரமப்படும்.

பகலில் வீட்டில் சிறிய பிள்ளைகளால் இடைஞ்சல் ஏற்பட்டால்.... அருகில் உள்ள நூலகத்திற்கு சென்று படியுங்கள்.

நீங்கள் பரீட்சையில் வெற்றியடைய முற்கூட்டிய வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டும் தமிழிச்சி எனக்கு எப்படி நித்திரை முழிச்சு படிக்கிறது என்டு தெரியாது(தெரிந்திருந்தால் எங்கேயோ அல்லவா இருந்திருப்பேன் :lol: )...சிறப்பாக எழுதி பரிச்சை சித்தி அடைய வாழ்த்துகள்...பரிச்சை எழுதிய பிறகு நேரம் கிடைக்கும் போது யாழில் வந்து உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1. ஒரு காண்டா மணியை வாங்கி அறையில் மாட்டிவிட்டபின் அதன் முனையை கழுத்தில் கட்டி விடுங்கள், நித்தா வந்து தூங்கி விழும் போது மணி இழுக்கபட்டு 'டாங்' என்று எழும் சத்தத்தில் அடுத்த ஒரு கிழமைக்கு நித்தா வராது (கழுத்தில் கழுத்தில் கயிறு கனக்க இழுபட்டால் பிறகு எழும்ப தேவை வராது என்பது முக்கிய விடயம்)

2. காலில எலிப் பொறியை மாட்டி வைத்தால் பொறியில் கால் அல்லது விரல் மாட்டி விடும் என்ற பயத்தில் நித்திரை வராது

3. அரை மணித்தியாலத்துக்கு ஒரு முறை "நாக்க முத்து" போன்ற பாடல்களுக்கு இசையமைத்த விஜய் ஆண்டனி அல்லது தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோரின் குத்துப் பாட்டு கேளுங்கள்..நித்தா தேவி உங்கள் வீட்டுப் பக்கமே தலை வைத்து படுக்காது

4. உடன் பிறப்புகளுக்கு கருணாநிதி எழுதும் கடிதங்களை இணையத்தில் ஒரு மணிக்கு ஒரு முறை வாசித்தால் வரும் கோபத்தில் நித்திரை கொள்ளாமல் பல்லை நறுமிக் கொண்டு இருக்கலாம் (பல்லு போனால் என்னைக் கோபிக்க கூடாது)

இன்னும் ஐடியா தேவை என்றால் கூச்ச நாச்ச படாமல் கேளுங்கள்

எல்லாம் மாறி மாறி தான் புரியுமா அண்ணா!

  • கருத்துக்கள உறவுகள்

-- பகலில் பிள்ளைகளைத் தூங்க வைத்துவிட்டு படியுங்கள்.

-- முக்கியமான தரவுகளை வக்மண்ணில் பதிந்துவிட்டு அதை வேலைசெய்யும் போதும் தன்பாட்டுக்கு கேட்டுக் கொண்டே வேலைகளை செய்யலாம்.

-- நீங்கள் சித்தியடைய வாழ்த்துகள். பரிட்சையில்.

வேறுவிடயங்களில் மனதைபோகவிடாமலும் மனதை ஒருவழிப்படுத்தவும்,நித்திரை வராமலுமிருக்க இப்போது மாத்திரைகள் உள்ளன.யுனிவெசிடி மாணவர்கள் பலர் இப்போ பாவிக்கின்றார்கள்.மருத்துவரின் பிரிஸ்கிரிப்சன் தேவை.

பெயரே என்னவோ "கொன்ஸ்சன்ரேற்றா" என்ற ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியர்கள்(குஜராத்திகள்) பாக்கு மாதிரி ஒன்றை அடிக்கடி போட்டுக்கொள்வார்கள். நித்திரையே வராதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் மாறி மாறி தான் புரியுமா அண்ணா!

நீங்க வேற தீபா...

நான் இந்தாள நம்பி ஒரு ஜீவன் வீட்டில தனிய இருக்கே என்று அழுதுகொண்டிருக்கின்றேன் :lol::D:D

நீங்க வேற தீபா...

நான் இந்தாள நம்பி ஒரு ஜீவன் வீட்டில தனிய இருக்கே என்று அழுதுகொண்டிருக்கின்றேன் :lol::D:D

:Dsmiley-signs115.gif

வேறுவிடயங்களில் மனதைபோகவிடாமலும் மனதை ஒருவழிப்படுத்தவும்,நித்திரை வராமலுமிருக்க இப்போது மாத்திரைகள் உள்ளன.யுனிவெசிடி மாணவர்கள் பலர் இப்போ பாவிக்கின்றார்கள்.மருத்துவரின் பிரிஸ்கிரிப்சன் தேவை.

பெயரே என்னவோ "கொன்ஸ்சன்ரேற்றா" என்ற ஞாபகம்.

தமிழச்சி, தயவு செய்து இரவு விழித்திருந்து படிப்பதற்கு மாத்திரைகளை உபயோகிக்காதீர்கள். பரீட்சை முடிந்த பின்பும் உங்களுக்கு இரவுத் தூக்கம் இல்லாமல் அவதிப் படுவீர்கள்.

எனக்குத் தெரிந்து இந்தியாவில் ஒரு மாணவன் மருந்துக் கடையில் தூக்கத்தை போக்குவதற்கு மாத்திரைகள் வாங்கி போட்டு படித்தவன், பரீட்சை முடிந்த பின்பு அவனால் இரவில் தூக்கத்தை பழக்கிக் கொள்வதற்கு மிகவும் சிரமப்பட்டு தூக்கம் வரவழைக்க தூக்க மாத்திரை எடுத்தான். பரீட்சை முடிவுகள் மிகவும் நல்ல மாதிரி தான் வந்தது. ஆனால் பரீட்சை முடிவுகள் வரமுன்பு துரதிஷ்ரவசமாக அவன் உயிர் பிரிந்து விட்டது. மருத்துவர்கள் அவன் பாவித்த மாத்திரைகளே காரணம் என்று கூறினார்கள்.

முடிந்த அளவு உங்களால் நேரத்தை மிச்சம் பிடித்து படிக்கக் கூடியதை படித்து பரீட்சை எழுதுங்கள். நிச்சயம் சித்தியடைவீர்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழச்சி உங்கள் முயற்சிக்கேற்ற பயன் கிடைக்கக் வாழ்த்துக்கள். கட்டாயம் நான்கு மணி நேர நித்திரை தேவை .

மீதி உங்கள்வச்திபடியும், நேரதுக் கேற்ற மாதிரியும் படித்து வெற்றியடைய வாழ்த்துக்கள்

இது நான் எங்கேயோ படித்தது உங்களுக்கும் பயன் உடையதாக இருக்கும் என்று நினைக்கிறன்..

1. Day’s Schedule: உணவு, படிப்பு, எழுத்து, தூக்கம் அனைத்துக்குமான நேரத்தை பிரித்து வைத்துக்கொண்டு அதை ஃபாலோ செய்வதுதான் இந்த தினசரி அட்டவணை. இத்தனை நாட்கள் படித்ததில் அறிந்தோ... அறியாமலோ ஒரு அஜாக்கிரதை ஒட்டிக் கொண்டிருக்கும். ஆனால், கவுன்ட் டவுன் துவங்கிவிட்ட கடைசி கட்டத்தில், ஒவ்வொரு மணித்துளியையும் இப்படி திட்டமிடலுக்குள் கொண்டுவந்து விடுவது, நேரத்தின் இழுபறியால் ஏற்படும் பதற்றத்தை முளையிலேயே கிள்ளியெறியும்.

2. Time Management: நேர நிர்வாகம் என்பது திட்டமிடுதலை தொடர்ந்ததுதான். எது முக்கியம், எது அவசரம் என்ற அலசலுடன் கூடிய இந்த நேர நிர்வாகம்... அமைதியையும், நிதானத்தையும் தரும்.

3. Material Collection: முந்தைய வருடங்களின் வினாத்தாள்களை சேகரித்து ஆராய்ந்து, அவற்றில் அடிக்கடி கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துப் படிப்பது, நிச்சயம் ஏமாற்றாது.

5. Model Paper: வகுப்பில் நன்றாகப் படிக்கும் மாணவனின் விடைத்தாள், அல்லது ஆசிரியரின் கோப்பிலிருக்கும் முன்னாள் 'டாப்பரி’ன் விடைத்தாள் போன்றவற்றை பார்வையிட்டு, தன்னைத் திருத்திக் கொள்வதும், மெருகேற்றிக் கொள்வதும் நல்லதொரு வழிமுறை.

6. Self Test: வீட்டிலேயே சில வினாத்தாள்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எழுதிப் பார்க்கும் சுயபரிசோதனை, சிறப்பானதொரு பயிற்சி. அந்த வினாத்தாள்கள் மூன்று ஆண்டுகளுக்கு உள்ளானதாக இருப்பது நல்லது.

7. Presentation: உயிரை உருக்கி படித்தவற்றை எல்லாம் கொடுக்கப்பட்ட நேரம், கேள்விகளின் எண்ணிக்கை, அவற்றுக்கான மதிப்பெண்கள் என்ற வரையறைகளுக்குள் தேர்வுத்தாளில் நிரூபிக்கும் தருணம் இது. தேர்வுக்கான 180 நிமிடங்களில் 170 நிமிடங்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு, இந்தந்த பகுதியை இத்தனை நிமிடங்களுக்குள் முடித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். இதில் இரண்டு விஷயங்கள் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும். முதலாவது... போதுமான இடம் விடுவது, அடிக்கோடிடுவது, விடைத்தாள் பக்கங்களை மாற்றி, இறுக்கமாக இணைத்துவிடாமல் சரியாகச் செய்வது... போன்றவை (Physical Presentation). இரண்டாவது... விடைத்தாள் திருத்துபவர் எதிர்பார்ப்பதை கேள்விக்கேற்றவாறு சரியாக அனுமானித்து, அதை விடைத்தாளில் தெளிவாக வெளிப்படுத்துவது (Mental Presentation)

8. Paper Analysis: தன்னுடைய விடைத்தாளை தானே அலசி ஆராய்ந்து பகுத்தறியும் மாணவனுக்கு தனது நிறை, குறைகள் தெளிவாகத் தெரிந்துவிடும். தன்னால் எந்த கேள்விகளுக்கு மதிப்பெண் அள்ள முடிகிறது, வழக்கமாக தான் சொதப்பும் பகுதி எது என்ற இந்த பகுப்பாய்வு, பறிபோகும் மதிப்பெண்களை மீட்க உதவும். உதாரணத்துக்கு, ஒரு சிலர் பெரிய வினாக்களுக்கு பர்ஃபெக்ட்டாக விடையளிப்பார்கள். ஆனால், ஒரு மதிப்பெண் வினாக்களில் தடுமாறுவார்கள். ஆக, தாங்கள் கவனம் செலுத்த வேண்டியது ஒரு மதிப்பெண் வினாக்களில்தான் என்ற உண்மை அவர்களுக்கு புரிபட இந்த 'பேப்பர் அனாலிஸிஸ்’ உதவும்.

9. SWOT: Strength (பலம்), Weakness (பலவீனம்), Opportunities (வாய்ப்புகள்), Threat(அச்சுறுத்தல்) இந்த நான்கு ஆங்கில வார்த்தைகளின் முதல் எழுத்தைச் சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கும் இது, தன்னை உணர்வதற்கான நான்கு படிகளைக் குறிக்கிறது. படம் வரைவது, ஈக்குவேஷன் சால்வ் செய்வது என்று தன் பலத்தைப் பொறுத்து கேள்விகளைத் தேர்வு செய்வது, தன்னுடைய பலவீனங்கள் எந்த வகையிலும் விடைத் தாளில் வெளிப்படாதபடி பார்த்துக்கொள்வது, டியூஷன், ஆசிரியர், நண்பர், கைடு என்று தன்னைச் சுற்றி இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது, கவனச் சிதறலுக்கான வாய்ப்புகள், தனது குறைகள் போன்ற அச்சுறுத்தல்களைத் அறிந்து தவிர்ப்பது.

10. Food And Relaxation: தேர்வு சமீபமாகப் பார்த்து, உடலைத் தேற்றுகிறேன் என்று எசகுபிசகாக சாப்பிட்டு முதலுக்கு மோசம் செய்யக்கூடாது. அசைவம், ஆயிலி அயிட்டங்கள், செரிமானத்துக்குத் தொந்தரவானவை போன்றவற்றை பரீட்சை நாட்களில் தவிர்த்துவிட வேண்டும். தினமும் இரவு போதிய உறக்கம் அவசியம். ஆனால், பகலில் தொடர் படிப்பின் இடையே தூக்கமோ, ஓய்வோ தேவை இல்லை. காலாற நடப்பது, சப்ஜெக்ட்டை மாற்றிப் படிப்பது போன்றவை இறுக்கத்தைத் தவிர்க்கும்.

sorry அக்கா.நீங்கள் கேட்டது நித்திரை முழிக்க..

இது பரீட்சைக்கு எப்பிடி படிப்பது என்பது..

உங்களுக்கு தேவைபடாமலும் இருக்கலாம்... :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் உறவுகளே, எனக்கு பரீட்சைகள் வருகிறது. வீட்டில் குழந்தைகள் இருப்பதால் பகலில் படிப்பது மிகவும் கடினம். இரவில் விழித்திருந்துதான் படிக்க வேண்டும். வேலையிலிருந்து லீவு எடுத்துப் படிக்கவுள்ளேன். இரவு முழுவதும் நித்திரை முழித்திருந்து படிப்பதற்கு என்னென்ன செய்யலாம் எனக் கூறுவீர்களா?

முதலில் நீங்கள் அமைதியாகுங்கள்.

வீட்டில் இருக்கும் பிள்ளைகளும் வளர்ந்து ஆளாகியபின் இதே பிரச்சனை வராமல் பார்த்து பாதுகாத்துக்கொள்ளுங்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

9. SWOT: Strength (பலம்), Weakness (பலவீனம்), Opportunities (வாய்ப்புகள்), Threat(அச்சுறுத்தல்) இந்த நான்கு ஆங்கில வார்த்தைகளின் முதல் எழுத்தைச் சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கும் இது, தன்னை உணர்வதற்கான நான்கு படிகளைக் குறிக்கிறது. படம் வரைவது, ஈக்குவேஷன் சால்வ் செய்வது என்று தன் பலத்தைப் பொறுத்து கேள்விகளைத் தேர்வு செய்வது, தன்னுடைய பலவீனங்கள் எந்த வகையிலும் விடைத் தாளில் வெளிப்படாதபடி பார்த்துக்கொள்வது, டியூஷன், ஆசிரியர், நண்பர், கைடு என்று தன்னைச் சுற்றி இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது, கவனச் சிதறலுக்கான வாய்ப்புகள், தனது குறைகள் போன்ற அச்சுறுத்தல்களைத் அறிந்து தவிர்ப்பது.

இதில் முதல் இரண்டு காரணிகளும் எமக்குள். பின்னைய இரண்டும் எமக்கு வெளியில் எம்மை தீர்மானிப்பவை. எனி இவற்றை அளவிட உள்ள முறைகளும் எல்லோ தெரிஞ்சிருக்கனும். நம்மட பலம் பலவீனம் விளங்கிட்டா இப்படி தலைப்பை திறந்தே இருக்கமாட்டமே... இல்லையா.. தமிழிச்சி. :D:)

ஊரில் என்றால் குதிரை ஒடி பாஸ் பண்ணிப்போடலாம் ....உந்த வெளிநாட்டுக்காரன்களோட பெரிய பிரச்சனை.... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.